நேசம் மறவா நெஞ்சம்-30Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-30



அன்று காலையே அந்த தயாரிப்பாளர் வினோத்திடம் பேசியிருந்தார்..... சூட்டிங் முடிந்து விட்டதால் தான் நாளை ஊருக்கு கிளம்புவதால் இன்றே எப்படியாவது சுதாவை அழைத்து வரச் சொல்ல......அவனுக்கு ஒரு தொகை தருவதோடு தன்னுடனே சென்னைக்கு அழைத்து செல்வதாகவும் சொல்லியிருந்தார்..... வினோத்தும் எப்புடியாவது சுதாவை அழைத்து வந்து விட்டுவிட்டு தெரியாதமாதிரி ஊருக்கு சென்றுவிட்டு நாளை அந்த தயாரிப்பாளரோடு ஊருக்கு சென்று விடலாம் என முடிவு செய்தான்..... காலையில் இருந்து இரண்டு முறை வாசுவின் தோப்பு வழியாக சென்று பார்க்க.... வீட்டில் வாசு இருந்ததால் அவன் வந்த சுவடே தெரியாமல் மீண்டும் வீட்டுக்கே சென்று விட்டான்......



வாசுவுக்கு இப்போது உழைப்பின் மதிப்பு தெரிந்ததில் இருந்து ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவில்லை... சூட்டிங் முடிந்து கண்ணனின் நண்பன் வந்து வாசுவிடம் நன்றாக பேசி நன்றி சொல்லி சென்றிருந்தான்.... கண்ணனை பத்தி பெருமையாக சொல்ல வாசுவுக்கு ஏற்கனவே கண்ணனை பத்தி தெரிந்திருந்ததால்.... இவர்களின் நல்ல நட்பை பற்றியும் தெரிந்து கொண்டான்..... தனக்கு இவ்வளவு நாளில் ஒரு உண்மையான நட்பு கிடைக்காததால் தன்னை பற்றிய ஒரு சுய அலசலில் ஈடுபட்டவன்..... அப்போது தான் தானும் இதுவரை அப்படி யாருடனும் உண்மையான நட்பு கொள்ளவில்லை.... சும்மா ஊர் சுற்றுவதும்... எந்த பெண்களையாவது கேலிசெய்வதும்..... தண்ணியடிப்பதும் என தன்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு உருப்படியான காரியமும் செய்ததாகவே அவனுக்கு ஞாபகம் இல்லை.... இப்போதாவது தனக்கு உழைப்பின் அருமை தெரிந்ததே என நினைத்துக் கொண்டான்.....



அன்று தோப்பிற்கு உரம் வைத்ததால் அவன் வெளியே எங்கும் செல்லாமல் தோப்பிலேயே இருந்தான்..... வேலை முடியவே மாலை நான்கு மணியானதால் அவன் அதற்கு மேலாக கிளம்பி... அடுத்த வாரம் விதைக்க இருப்பதால் விதை நெல்லைவாங்கி வரலாம் என்று எண்ணி கிளம்பியிருந்தான்...வீட்டில் சுதாவிடம் சொல்லிவிட்டு அவளை அவள் தாய் வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.......



வாசு அந்த பக்கம் போகவுமே தோப்பிற்கு வந்த வினோத்... அவளை தயாரிப்பாளர் போட்டோ எடுக்க வரச்சொன்னதாக சொல்ல சுதாவும் சந்தோசமாகவே கிளம்பியிருந்தாள்..... காலையில் இருந்து அவளுக்கு தலைசுற்றலாகவே இருந்தது..... அதையும் பொருட்படுத்தாமல் அவள் கிளம்ப...

“ நீங்க பஸ்ஸுல போயிருங்க நான் வண்டியில வந்துருரேன்,,,, அண்ணகிட்ட ஒன்னும் சொல்லவேணாம்.... இன்னைக்கு அட்வான்ஸா கொஞ்சம் பணம் கேப்போம்.... பணத்தை குடுத்துட்டு அண்ணகிட்ட சொல்லிக்கலாம்.....”



இப்போதெல்லாம் சுதாவும் வாசுவை விரும்ப ஆரம்பித்திருந்தாள்..... இங்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு செயலும் தன் முகம் பார்த்து நடப்பது கண்டு அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.... இந்த ஒரு படம் மட்டும் நடிச்சாலே நானும் அவரும் ரொம்ப சந்தோசமா இருக்கலாம் என மனக்கோட்டை கட்டினாள்.... சிறு வயதில் இருந்தே ஒரு கட்டுப்பாட்டோடு வளர்ந்தவள்.... ஒழுக்கம்தான் முக்கியம் என மாணிக்கம் மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லுவார்...... அப்படி ஒரு குடும்பத்தில் வளர்ந்தவள்... பணத்தின் மீது தனக்கு ஏற்பட்ட ஆசையால் இன்று எந்த செயலையும் செய்யலாம் தானாகவே ஒரு முடிவெடுத்தாள்....





மேலும் வினோத் இதில் ஈடுபட்டிருப்பதால் தனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது என முடிவு செய்தாள்...... ஏன் தன் கணவர் தன் தம்பியிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள கூடாது என சொன்னார் என்பதை யோசிக்க மறந்திருந்தாள்....வினோத் இப்புடி ஒரு வக்கிர புத்தி உடையவன் என்பதை அறியாமல் இருந்தாள்.... வாசுவும் தன் தம்பியே தன்மனைவியை தவறாக பேசினான் என்பதையும் கயல்...மல்லிகாவுக்கு மயக்க மருந்து கொடுத்தான் என்பதை எப்படி சொல்வது.... சொன்னால் தன் குடும்பத்தைபத்தியே தப்பாக நினைப்பாலோ என எண்ணி சுதாவிடம் தன் தம்பியை பற்றி சொல்லவேயில்லை.... சுதா தன்னுடைய பார்வையிலும் அவள் குடும்பத்தோடும் இருப்பதால் வினோத்தை பற்றி கொஞ்சம் யோசிக்காமல் இருந்துவிட்டான்....தான் வினோத்திடம் பேசக்கூடாது என்று சொன்னதால் தன் மனைவி தன் தம்பியிடம் பேசியிருக்க மாட்டாள் என நம்பிக்கையில் இருந்தான்........



சுதா வாசுவிடம் சொல்லாமலேயே பஸ்ஸில் ஏறியிருந்தாள்..... பஸ்ஸைவிட்டு இறங்கியவள் அங்கு நின்று கொண்டிருந்த வினோத்திடம் செல்ல..... வினோத் வண்டியை பஸ்ஸ்டான்டில் விட்டுவிட்டு ஆட்டோவையே பிடித்திருந்தான் ..... யாராவது ஊர்காரர்கள் பார்த்தால் நாளை பிரச்சனையாகும் என எண்ணினான்...... சுதாவை ஊருக்கு வெளியே இருந்த அந்த கெஸ்ட் அவுஸுக்கு கூட்டிச்சென்றான்........



கயல் கண்ணன் அன்பில் மூழ்கி கிடந்தாள்... வீட்டில் இருந்த நேரத்தில் எல்லாம் கண்ணன் கயலைவிட்டு பிரியாமல் அவளை தன் கைவளையத்திலேயே வைத்திருந்தான். சாவித்திரி மேலும் இரண்டுநாட்கள் கழித்துதான் வருவதாக சொல்ல....கயல்தான் சாவித்திரியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்...... “அத்தே...ரெண்டுநாளெல்லாம் வேணாத்தே.... எனக்கு நீங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு சீக்கிரமே வாங்க....”. என கெஞ்ச....



சாவித்திரியோ…..” இல்லத்தா..... நான் என்னோட பொறந்த ஊருக்கு வந்தே ரொம்ப நாளாச்சுத்தா..... சொந்தகாரங்களயெல்லாம் பாத்துட்டு சீக்கிரமா வரப்பாக்குறேன்தா.... போனை கண்ணகிட்ட குடு.....” இவ்வளவு நேரம் தன் தாயிடம் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த கண்ணன்...... கயலை இழுத்து தன் மடியில் உட்காரவைத்து அவள் இடுப்பில் கை போட்டவாறு... போனை வாங்கி தன் தாயிடம் பேச ஆரம்பிக்க.....



“கண்ணா வேலை வேலைன்னு கடையிலயே இருக்காதப்பா... பாவம் புள்ள சும்மாவே பயப்படும்.... இப்ப ஒரு ஆளா இருக்கரதால நீதான்பா கொஞ்சம் கவனமா பாத்துக்கனும்.. காலையில மெதுவாவே கடைக்கு போயிட்டு சாயங்காலம் சீக்கிரமே வரப்பாருப்பா .... நான் வார வரைக்கும் மருமகள பத்திரமா பாத்துக்க.....”



“ம்ம்ம் சரிம்மா....”.என்றவன் சற்று நேரம் பேசிவிட்டு போனை வைக்க....

“ஏண்டி ஒரு மனுசன் வீட்ல இருக்குறது உனக்கு கண்ணுக்கு தெரியலயா...... அம்மாவ வாங்க வாங்கன்னு தொல்லை பண்ணுற.......” என்றவாறு அவள் கழுத்தில் முகத்தை பதிக்க....



“இல்லங்க நீங்க கடைக்கு போனதுக்கு அப்புறம் அத்தே இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்குங்க.......”



“அப்புடிங்குற.... சரி அதுக்கு ஒரு வழிய கண்டுப்பிடிச்சிட்டேன்..... உங்க அத்த ஊருக்கு போனா உனக்கு துணைக்கு ஒரு ஆள ரெடி பண்ணிரலாம்.......”



“ஏங்க சம்பளம் கொடுத்து ஒரு ஆள வைக்க போறிங்களா.... வேணாங்க வேணும்னா போன் பண்ணி எங்க அப்பத்தாவ வரச்சொல்லிக்கலாம்......”



“ஆமாண்டி எங்க உங்க அப்பத்தாவ பத்தி பேசலைன்னு நினைச்சேன்.... நான் ஒன்னு நினைச்சா நீ அதுக்கு ஆப்போசிட்டாவே யோசி......நான் சொன்னது நமக்கு பொறக்கப்போற பொண்ணுடி.... இனிமே அதுதான் உனக்கு துணை...”.



“ச்சு... போங்க... இப்புடியெல்லாம் பேசக்கூடாது....”.



“ஹப்பா.... உன்னோட வெக்கமே ஒரு அழகுடி....அப்புடியே பாத்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கு......அப்புடியே கன்னமெல்லாம் ரோஸ் கலருல மாறிருது.... அப்புடியே உன் உதட்டுகிட்ட இருக்குற மச்சம் என்னைய வாவான்னு சொல்லுது.....”



“போங்க..போங்க இப்புடியெல்லாம் பேசக்கூடாது.” என்றபடி அவன் மார்பில் முகத்தை பதிக்க....

“ இப்பத்தான் உன்னோட முகத்தை பாக்கனும்னு சொன்னேன்.... இப்புடி மொகத்தை மூடுனா நான் எப்புடி பாக்குறது....” அவள் முகத்தை நிமிர்த்தியவன் முத்தத்தை ஆரம்பிக்க கயல் கண்ணனுக்குள்ளேயே கரைய துவங்கினாள்..... இரண்டு நாட்கள் கழித்து சாவித்திரி வீட்டிற்கு வந்திருக்க அன்று மாலையே ராமனும் வந்திருந்தான்... கண்ணனுக்கும் இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.... பகலில் கயல் ஒரு ஆளாக இருப்பதால் கொஞ்சம் கவலையாக இருந்தவனுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது....



கயல் உடல் அளவில் குமரியாக இருந்தாலும் மனதளவில் ஒரு குழந்தையாகவே இருந்தாள்.... அவள் தன்மேல் காட்டும் அன்பில் கண்ணன் அப்புடியே மயங்கி போயிருந்தான்.... ஒரு குழந்தை எப்புடி தன்தாய் தகப்பனிடம் ஒரு நிமிடம்கூட பிரியாமல் இருக்க விரும்புமோ அது போல கண்ணனை தேடினாள்.... வாய் திறந்து வெளியில் சொல்லாவிட்டாலும் அவள் கண்ணே காட்டிக் கொடுத்தது.....தன் குடும்பத்தினர் மீதும் அதே அன்பை செலுத்தினாள்.... தன் தம்பிகளோடு பேசிக்கொண்டிருக்கும் போது கண்ணன் கயலை ரதித்தபடியே இருப்பான்....எப்புடிதான் பேச்சாலயே எல்லாரையும் கவுப்போளோ என்று யோசிப்பான்.... கடையில் வேலை பார்க்கும் பெண்களும் அக்காவை கூட்டிட்டு வாங்கண்ணே என்று ஓயாமல் சொல்வார்கள்.... ஆனால் கண்ணன்தான் இவளை பார்த்தால் அவர்கள் வேலையை மறந்து இவள் பின்னாடியே சுற்றவும் வேலை கெட்டுவிடும் என்பதால் கயலை அழைத்து வரமாட்டான்....
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அன்று மாலை கண்ணன் கடையில் இருக்கும் போது அவனுக்கு அவன் நண்பனிடம் இருந்து போன் வர.......” என்னடா போனே பண்ணல ரொம்ப பிஸியா..... சூட்டிங்கலாம் முடிஞ்சிருச்சா.......”



“முடிஞ்சிருச்சு கண்ணா..... உங்கிட்ட முக்கியமான ஒரு தாக்கல் சொல்லனும்டா....”



“சொல்லுடா.....”



“இப்ப சூட்டிங் நடந்துச்சில அவுக தோப்பு வந்து நம்ம கயலுதங்கச்சியோட அக்காவிட்டு தோப்புதானே.....”



“ஆமா... சொன்னபடி காசெல்லாம் குடுத்திட்டிங்கள்ள....”



“அதெல்லாம் குடுத்துட்டோம்.... இப்ப இது வேறடா இன்னைக்கு சாயங்காலம் நான் அந்த தயாரிப்பாளர் இருக்குற கெஸ்ட் ஹவுசுக்கு போயிட்டு வந்துகிட்டு இருந்தேன் பாரு அப்ப நம்ம தங்கச்சியோட அக்காவும் அப்புறம் சூட்டிங் நடக்கும் போது அவுக வீட்டுக்காரரோட தம்பின்னு ஒருத்தனை அறிமுகப்படுத்தி வச்சாங்க அவனும் ஆட்டோல அந்த கெஸ்ட் ஹவுசுக்கு போறத பாத்தேன்.... அந்த தயாரிப்பாளர் பொம்பள விசயத்துல கொஞ்சம் ஒரு மாதிரிடா...... கூட போனவனும் ஒரு பொம்பள பொறுக்கிடா.... நம்ம சூட்டிங்ல நடிக்குற பொம்பளபுள்ளைக கிட்டயே தப்பா நடக்க முயற்சி செஞ்சிருக்கான்... பாவம் அந்த புள்ளைகளே ஏதோ வயித்து பொழப்புக்கு நடிக்க வருதுக..... நான் அதுகள தங்கச்சிக மாதிரிதான் நடத்துவேன்..... புள்ளைகளெல்லாம் வந்து கம்பிளைன்ட் பண்ணவும் ஒரு தரம் கண்டிச்சு இனிமே சூட்டிங் நடக்குற இடத்துக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டேன்..... ஆனா இவன் ரெண்டு மூனுதரம் அந்த தயாரிப்பாளரோடு சுத்துனத பாத்தேன்..... ஏதோ என் மனசுக்கு தப்பா படுதுடா.... எதுக்கும் அந்த வாசு அண்ணகிட்ட கொஞ்சம் விசாரி அவன் தம்பி எப்படிபட்டவன்னு....”



கண்ணனுமே கயலுக்கு காலில் அடிபட்டதில் வினோத்தை கொஞ்சம் மறந்திருந்தான்..... உடனடியாக வாசுவுக்கு போன் பண்ண....



“கண்ணா.... சொல்லுப்பா... நல்லாயிருக்கியா...”



“ம்ம்ம் இருக்கேண்ணே.... ஆமா நீங்க எங்க வீட்லயா இருக்கிங்க....”



“இல்லப்பா இங்க டவுனுக்குதான் வந்தேன் ....கொஞ்சம் விதைநெல்லு வாங்கலாம்னு வந்தேன்.... உங்க கடைகிட்ட கொஞ்சம் தள்ளிதான் இருக்கேன்...வேலைமுடிய ஒரு பத்து நிமிசம் ஆகும்...முடிச்சிட்டு வரவா....”



“இல்லண்ணே கொஞ்சம் அவசரம் நீங்க உடனே கடைக்கு வாங்க வீட்ல அண்ணி இருக்காங்களான்னு கொஞ்சம் போன் பண்ணி விசாரிங்க.......”

வாசுவோடு நன்கு பழகவுமே கண்ணன் சுதாவை அண்ணன் மனைவி என்ற ஸ்தானத்தில் வைத்தே பார்க்க ஆரம்பித்தான்.... இவர்கள் செய்த காரியத்தால்தான் கயல் தனக்கு மனைவியாக அமைந்ததால் அன்று நடந்ததை அப்படியே மறக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றான்.....



கண்ணன் போன்பண்ணி முடித்த நிமிடத்தில் வாசுவும் அங்கு வந்திருந்தான்.....” என்ன கண்ணா...... என்னப்பா விசயம்.... சுதாவுக்கு போன் பண்ணுறேன் அவ எடுக்க மாட்டேங்குறா.......”



கண்ணன் தன் நண்பன் சொன்ன விசயத்தை சொல்ல.... வாசுவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.....” அடப்பாவி என்ன சொல்லி சுதாவ ஏமாத்துனான்னு தெரியலயே....”



“அண்ணே இப்ப பேச நேரமில்ல வாங்க அந்த கெஸ்ட்ஹவுஸ் அட்ரஸ் வாங்கி வச்சிருக்கேன் நாம ஒரு எட்டு அங்க போயிட்டு வந்திரலாம்.......”



ராமனுக்கு போன் பண்ணி” டேய் நீ அண்ணிய கூட்டிட்டு காரை எடுத்துகிட்டு நான் ஒரு அட்ரஸ் வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணுறேன் அங்க வந்துருங்க.... கொஞ்சம் சீக்கிரமா வாங்க....” சுதா மட்டும் ஒரு பொண்ணாக இருப்பதால் எதற்கும் கயலை வரச்சொல்லலாம் என நினைத்தான்



இருவரும் ஒரு வண்டியில் அந்த அட்ரஸ்க்கு செல்ல.......



ஆட்டோவை விட்டு இறங்கிய சுதாவும் வினோத்தும் உள்ளே நுழைய வாட்மேன் கூட இல்லை.... வினோத் போன் பண்ணி பேச உள்ளே வரச்சொல்லவும் இருவரும் உள்ளே நுழைந்து..... வரவேற்பரையில் அமர்ந்திருந்தார்கள்... உள்ளேயிருந்து அந்த தயாரிப்பாளர் கையில் டிரிஙஸோடு வந்து அவர்களை உள்ளே அழைத்து சென்றார்....



சுதாவுக்கு அந்த இடத்தை பார்க்கையில் ஆள் அரவம் இல்லாமல் அமைதியாக இருக்கவும்” என்ன இம்புட்டு அமைதியா இருக்கு இவ்வளவு பெரிய வீட்ல ஒரு ஆளையுமே காணோம்.......யாரோ போட்டா எடுக்க போறாங்கன்னு சொன்னிங்க அவுகளையும் காணோம்... எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு வாங்க வீட்டுக்கு போயிருவோம்..... போட்டாவும் வேணாம் ஒன்னும் வேணாம்.....”



“என்ன இப்புடி சொல்லுறிக.... இவுகயெல்லாம் ரொம்ப பிஸியா இருப்பாங்க வாங்க பாத்துட்டு போயிரலாம் இவ்வளவு பெரிய வீட்ல அந்த போட்டோ கிராபர் ஏதாவது ஒரு ரூம்ல இருப்பாரு......”



அந்த தயாரிப்பாளர் போனில் பேச தலையை தலையை ஆட்டியவன்” வாங்க உங்கள மேல கூப்புடுறாங்க......” ரூமுக்குள் விட்டவன் கதைவை வெளிபக்கமாக சாத்த உள்ளே பார்த்தவள் அதிர்ந்தே போனாள்..... அந்த ஆள் சட்டையில்லாமல் கட்டிலில் சாய்ந்திருந்தான்..... அவனை பார்க்கவும் அதிர்ச்சி உற்றவள் வேகமாக கதவை தட்டி திறக்க சொல்ல.... வினோத் அந்த ரூம் வாசலிலேயேதான் அமர்ந்திருந்தான்.... அங்கு அமர்ந்து டிரிங்க்ஸ் அருந்திக்கொண்டிருந்தான்....



“என்னமா... இப்புடி கத்துர.... அவன் தெரிஞ்சுதானே உன்னைய இங்க கொண்டுவந்து விட்டுட்டு போறான்.... உனக்காக ரொம்ப காச குடுத்திருக்கேம்மா...... குடும்ப பொண்ணை தொட்டு பாக்கனும்னு ரொம்ப நாளா ஆசை.......”.என்றபடி அவள் பக்கம் எழுந்துவர.....சுதா சுற்றிக்கொண்டு கட்டியின் மறுபக்கம் சென்றாள்.....



“டேய்... படுபாவி... உம்பொண்ணு வயசு இருக்கும் என்கிட்ட போயி தப்பாநடக்கப் பாக்குற.... இதுக்கு அந்த எடுபட்ட பயலும் உடந்தையா...... எம்புருசன் அப்பவே சொன்னாருய்யா..... இவன்கிட்ட பேச்சு வச்சுக்காதன்னு எம்புத்திய செருப்பாலயே அடிக்கனும்...... ஐய்யோ யாராச்சும் வந்து என்னைய காப்பாத்துங்களேன்.......” என்று கத்த ஆரம்பிக்க



“நீ எவ்வளவுதான் கத்துனாலும் இங்க யாரும் வந்து உனக்கு உதவி செய்ய மாட்டாங்க..... அதுனாலதான் வாட்ச் மேனுக்குகூட லீவ் குடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டேன்.....” என்று இளித்தபடி கட்டிலின் மேலேறி எட்டி சுதாவின் கையை பிடிக்க...அவன் கையை உதறியவள் அவனை கட்டிலில் தள்ளிவிட்டு கதவுபக்கம் வந்து கதவை திறக்க சொல்லி கத்த..... வினோத் கண்டுக்கவேயில்லை.......



“ஏம்மா இந்த வயசான காலத்துல என்னைய படுத்துற எப்புடித்தான் கத்துனாலும் நீ வெளிய போக முடியாது ....” என்றபடி அவள் ஓட முடியாதவாறு பாதையை அடைத்தபடி சுதாவின் சேலையில் கையை வைத்தார்.... சுதாவுக்கு எங்கிருந்துதான் வேகம் வந்ததோ .....அவனை தள்ளியவள்” டேய் படுபாவி... இன்னைக்கு உன்னைய கொல்லாம விடமாட்டேன்டா “என்றபடி அங்கு அவன் குடித்துவிட்டு வைத்திருந்த பாட்டிலை எடுத்து அந்த டேபிளில் உடைத்தவள்.... “டேய் வாடா இப்ப தைரியம் இருந்தா கிட்ட வா இன்னைக்கு உன்னோட சாவு என் கையில தாண்டா......”



காளி போல நிற்கும் சுதாவை கண்டவனுக்கு மனதிற்குள் பயம் வந்தது....”. டேய் மரியாதையா கதவை தொறக்கச்சொல்லு.... இல்ல உன்னைய கொண்டுட்டு நான் ஜெயிலுக்கு போககூட அஞ்சமாட்டேன்......”என்றபடி அவன் கிட்டே வர......



“இரும்மா... இரு இரு நீபாட்டுக்கு குத்திப்புடாத......” என்றபடி கதவை திறக்கச்சொல்ல.... அவரின் குரல் கேட்கவும் கதவை திறந்தவன்.... அவரின் பின்னால் சுதா பாட்டிலோடு நிற்கவும் சூழ்நிலையை புரிந்து கொண்டான்..... அடப்பாவி லட்டு மாதிரி ஒரு சான்ஸ் குடுத்தா இவன் இப்புடி கெடுத்துப்புட்டானே.... அவன் அனுபவிக்காட்டா பரவால்ல நாம கண்டிப்பா அனுபவிக்கனும் என்று நினைத்தான்.....



வினோத்தை பார்த்தவள்...”த்தூ.... நீயெல்லாம் மனுச ஜென்மமாடா ........ கூடப்பொறந்த அண்ணனோட பொண்டாட்டியையே இப்புடி ஒருத்தன்கிட்ட கூட்டிட்டு வந்து விட்டுருக்க... இரு எம்புருசன்கிட்ட சொல்லி உன்குடல உறுவி மாலையா போடச் சொல்ல எம்பேரு சுதால்லடா......”



பயந்தது போல நடித்த வினோத் தன் கையிலிருந்த கிளாசை சுதாவின் கையை குறிபார்த்து எறிய.... உடைந்த பாட்டில் கைதவறி கீழே விழவும் தன்முன்னால் நின்றிருந்த அந்த தயாரிப்பாளரை முன்னால் தள்ளிவிட்டவள்.... அவளை தாண்டிக்கொண்டு ஓடினாள்.....வினோத் சுதாவை பிடிக்க வர வேகமாக ஓடவும் சுதாவின் முந்தானைதான் அவன் கைக்கு கிடைத்தது....அதை பிடித்து இழுக்க சுதாவின் சேலை வினோத்தின் கையோடு வந்தது.... மாடியில் இருந்து தடதடவென இறங்கியவள்... கதவிடம் சென்று திறக்க முயற்சிக்க பின்னால் வந்த வினோத் சுதாவின் கையை பின்னால் முறுக்கிப் பிடித்திருந்தான்...... அந்த தயாரிப்பாளரும் தள்ளாடியபடி இறங்கி இவர்களிடம் வர........



கண்ணனும் வாசுவும் அந்த கெஸ்ட்ஹவுசிற்கு வந்தவர்கள் உள்ளே சுதாவின் குரல் கேட்கவும் வாசு வெகுவாக பயந்துவிட்டான்.... கதவை தள்ளி பார்க்க திறக்காமல் இருக்கவும் வீட்டைச் சுற்றி வந்தவர்கள் சரிவாக இருந்த மாடி பால்கனியில் கால் வைத்து ஏறி திறந்திருந்த அந்த கதவின் வழியாக உள்ளே நுழைந்தனர்...... வேகமாக ஓடிவர.... வாசுவின் காலடியில் சுதாவின் சேலை தட்டுப்படவும் அதை வேகமாக எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்....



கையை பின்னால் முறுக்கியிருந்த வினோத் சுதாவை ஓங்கி ஒரு அறைவிட அவள் ஒரு சுற்று சுற்றி கீழே விழுந்தாள். அவளை தூக்கிக்கொண்டுவந்து சோபாவில் போட சுதா கையெடுத்து கும்பிட்டாள்......



“டேய் என்னைய விட்டுடா பாவி.......”



“உன்னைய விடுறதுக்கா இத்தனநாளு பிளான் போட்டு உன்னைய இங்க கூட்டிட்டு வந்தேன்.... அன்னைக்கு என்னமோ லேசா உன் அழகை பத்தி புகழ்ந்ததுக்கே உம்புருசன் என்னமோ அந்த அடி அடிச்சான்..... இன்னைக்கு உன்னைய முழுசா அனுபவிக்க போறேன் இப்ப என்ன பண்ணுவான்னு பாக்குறேன்......”



சுதாவுக்கு ஒன்றுதான் தோன்றியது..... இவன்மட்டும் என்னைய தொட்டுட்டானா நம்ம உயிரு இங்கயே போயிரனும்....... அவளோடு மள்ளுக்கட்ட சுதா தன் நகத்தைவைத்து அவனை கிழித்தாள்..... வலி பொறுக்க முடியாமல் வினோத் மீண்டும் ஒரு அறைவிட சுதா கீழ விழுந்தாள்.... தன்காலடியில் ஒரு கால் தெரியவும் மெதுவாக நிமிர்ந்து பார்த்தவள் வாசு நிற்கவும் அவன் காலை பற்றியவாறு மயங்கி சரிந்தாள்.....சேலையை.சுதாவின் மேல் போர்த்தியவன்...... நிமிர்ந்து பார்க்க வினோத் வெலவெலத்து போயிருந்தான்... அவன் இங்கு கண்ணனையும் வாசுவையும் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.... வீடு பூட்டியிருக்கு இவனுக ரெண்டுபேரும் எப்புடி வீட்டுக்குள்ள வந்தானுக என்று யோசிப்பதற்குள் இருவரும் சாத்த ஆரம்பித்திருந்தார்கள் ..... . வினோத்துக்கும் அந்த தயாரிப்பாளருக்கும் உயிர் மட்டும்தான் மிச்சமிருந்தது... இருவரும் குற்றுயிரும் குலைஉயிருமாக கிடக்க ராமன் போன் பண்ணவும் கண்ணன் கதவை திறந்தான்
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உள்ளே வந்த கயல் இங்கு மயங்கிகிடந்த சுதாவை பார்க்கவும் அவளிடம் பதறியபடி ஓடியவள் அங்கிருந்த தண்ணிரை எடுத்து சுதாவின் முகத்தில் தெளிக்க..... ராமன் அங்கிருந்த சூழ்நிலையை புரிந்தவன் தன் பங்குக்கு வினோத்தை வெளுத்தான்.... அவனுக்கு அன்று மல்லிகா மயங்கியது ஞாபகத்திற்கு வந்தது.......



“இவனுக ரெண்டு பேரையும் போலிஸ்ல புடுச்சுகுடுத்துருவோமா......”



“வேணாம்ணே.... போலிஸ்க்கு போனா நம்ம குடும்ப பொண்ணுக பேரு கெட்டு போயிரும் யாருக்குமே தெரியாம நடந்தத நாமளே வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது மாதிரி ஆகிரும்.... இதுக்கு வேற வழிதான் யோசிக்கனும்” என்று யோசித்தவன்..... ராமனிடம் ஒரு யோசனையை தெரிவிக்க...... அதன்படி வெளியே சென்றுவிட்டு பத்து நிமிடத்தில் வந்த ராமனின் கையில் இருந்த ஸ்டாம்ப் பேப்பரில் தங்களுடைய குடும்பத்துக்கோ... குடும்ப பெண்களுக்கோ எந்த ஒரு சிறு பிரச்சனை வந்தாலும் தானும் இந்த தயாரிப்பாளரும்தான் காரணம் என எழுதி இருவரும் கையெழுத்து போட்டனர்.....



கண்ணன் வினோத்திடம் “உன்னைய இனிமே ஊருபக்கம் பாக்கவே கூடாது அப்புடி ஏதாச்சும் பாத்தா நாங்களே காயத்தை உண்டாக்கிட்டு கூட உன்னைய போலிஸ்ல புடிச்சுக் குடுத்துருவோம் பாத்துக்க......” இருவரும் பல்லை புடிங்கிய பாம்பின் நிலைக்கு வந்தனர்.....



மயக்கம் தெளிந்த சுதா வாசுவிடம் மன்னிப்பு கேட்க....” உம்மேல தப்பு இல்ல நான்தான் முதல்லயே உன்கிட்ட இவன பத்தி சொல்லியிருக்கனும்....தப்பு எம்மேல வச்சுக்கிட்டு உன்னைய குறை சொல்லி என்ன பண்ணுறது.... எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான்..... இவன் உன்கிட்ட பேசுறான்னு என்கிட்ட முதல்லயே சொல்லியிருக்கலாம்.....”



சுதா வாசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள்..... “ஏய் விடு விடு.... எந்திரி நாம முதல்ல கண்ணனுக்குதான் நன்றிய சொல்லனும்..... தம்பி மட்டும் நேரத்துக்கு தகவல் சொல்லைனா.... என்ன ஆகியிருக்குமுன்னு நினைச்சே பாக்க முடியல.....”



கயல் கண்ணனிடம் சென்று” ஏங்க நான் ரெண்டு இவன அடி போட்டுட்டு வரவா.....” .என்று காதுக்குள் கேட்க......



கண்ணன் சிரித்தபடி” ஏண்டி.......”



“அன்னைக்கு மயக்க மருந்து குடுத்தான்ல... அப்ப நானும் மல்லிகாவும் நினைச்சோம் எப்பவாச்சும் மாட்டுனான்னா அன்னைக்கு ஆளுக்கு ரெண்டு கொட்டு வைக்கனும்னு......... இன்னைக்கு கொட்டவா......”



“அப்பா........ எவ்வளவு பெரிய தண்டனை..... குடு.... குடு”



கண்ணனின் கைபிடித்தபடியே வினோத்திடம் சென்றவள்... வினோத்தின் தலையில் நான்கு கொட்டு வைத்தாள்.....



“என்னடி ரெண்டுன்னு சொல்லிட்டு நாலு கொட்டு வைக்குற....”

“அதுவா எனக்கு ரெண்டு மல்லிகாவுக்கு ரெண்டு........”.

“அப்பா..... கணக்குல புலிடி....சரி வாங்க வீட்டுக்கு போவோம்....”வீட்டுக்கு கிளம்ப... சுதா மீண்டும் மயங்கி விழவும்.... அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்ல அவள் தாய்மை அடைந்திருப்பது தெரிந்தது.... வாசுவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.....



கண்ணன் வாசுவையும் சுதாவையும் தங்கள் வீட்டிற்கு வந்து காலையில் செல்லலாம் என்று கயலும் கண்ணனும் மீண்டும் மீண்டும் அழைக்க.... இருவரும் கண்ணன் வீட்டிற்கு வந்தனர்..... சுதாவை மாடிக்கு கூட்டிச் சென்று குளிக்கச் சொல்ல சுதா கயலின் கையை பிடித்து அழுது கொண்டிருந்தாள்.......



“விடுக்கா.... அதுதான் ஒன்னும் நடக்கலைல... மாமாதான் கரெக்ட் டயத்துக்கு வந்து காப்பாத்திட்டாங்கள்ள.....”



“அதுக்கில்லடி நான் உன்குடும்பத்துக்கு பண்ண துரோகத்துக்கு வேற ஒருத்தரா இருந்தா திரும்பிகூட பாத்திருக்க மாட்டாங்க..... ஆனா உங்க வீட்டுக்காரரும் ... மாமியார்... கொழுந்தன்களும் என்கிட்ட பேசுறதே பெருசுடி.......இன்னைக்கு மட்டும் உங்க வீட்டுகாரரு உதவிபண்ணாட்டா என்மானமே போயிருக்கும்....”



“ஏய் விடுக்க நீ என்ன பண்ணுன.....”



“உனக்கு எதுவுமே தெரியாதா... உங்க வீட்ல ஒன்னுமே சொல்லலையா.....”

“ம்கூம்..... என்ன சொல்ல இருக்கு.....”.

அப்போதுதான் சுதாவுக்கு இவர்கள் கயலிடம் ஒன்று சொல்லலையோ என தோன்றியது.... தன் மனசாட்சி கேட்காமல்.... தான் திருமணத்துக்கு முன் வாசுவை காதலித்தது முதல் திருமணத்துக்கு முன் அப்பத்தாவிடம் பேசியது வரை அனைத்தையும் சொன்னாள்......



கயல்.... அப்ப தப்பு பூராவும் அக்காவோடதுதானா.... நாமதான் தேவையில்லாம இவருகிட்ட கிறுக்குத்தனமா பேசி அவரு மனச கஷ்டப்படுத்தியிருக்கோம்... ச்சே...ச்சே.. நமக்கு புத்தி எப்பத்தான் வருமோ.....



“அக்கா.... நீ போய் குளி.... நான் போய் அத்தைக்கு உதவி பண்ணுறேன்.....” மாற்றுடையை கொடுத்துவிட்டு கீழே இறங்க.....



முற்றத்தில் ராமன் முத்துவோடு வாசு பேசிக்கொண்டிருக்க சாவித்திரியிடம் சென்றவள்....” அத்தே என்னத்த பண்ண.....”



“ஒன்னும்மில்லடா இட்லி ஊத்தி சட்னி வச்சிட்டேன்.... வடை தட்டியிருக்கேன் போதும்ல....”

“போதும்த்த...”

“கண்ணன் கொல்லப்புறத்துல குளிக்கப் போனான் அவன் குளிச்சிட்டான்னா கொஞ்சம் இலை வெட்டி வாங்கிட்டு வாத்தா.....”



கயல் கத்தியை எடுத்துக் கொண்டு கொல்லைப்புறத்திற்கு செல்ல அப்போதுதான் பாத்ரூமில் இருந்து கண்ணன் குளித்துவிட்டு வெளியே வர.... வெற்று மார்பில் தலை துவட்டியபடி வந்தவனை கண்டவளுக்கு...... மேலும் காதல் பொங்கியது.... அப்பா........ நாம இவர போய் தப்பா நினைச்சுட்டோம்......ஆனா அக்காவ பத்தி தப்பா ஒரு வார்த்தைகூட சொல்லலையே....



“என்னடி இப்புடி பாத்துக்கிட்டு இருக்குற..... மச்சான கண்ணுவைக்காத...”.

கண்ணனை எட்டி அணைத்தவள்”.....ப்பா.....நல்லா வாசமா இருக்கிங்க” என்றபடி அவனை வாசம் பிடித்தவளை....

சற்று தள்ளி நகர்த்தி இருளுக்குள் கூட்டிச்சென்றவன்.....”என்னடி ஆச்சர்யமா இருக்கு நீயே வந்து என்னைய கட்டிப்புடிச்சிருக்க..... இது கனவு இல்லைல்ல.....” என்றபடி அவள் கன்னத்தை கடித்தவன் அவள் கத்த வாய் திறக்கவும் அவள் உதட்டை சிறை செய்திருந்தான்..... கயல் கண்ணன் முத்தத்தில் மூழ்கி கொண்டிருக்க சாவித்திரியின் குரல் கேட்கவும் அவனை விலக்கினாள்....



“எங்க அக்கா பண்ணுனத எல்லாம் ஏங்க நீங்க என்கிட்ட சொல்லவே இல்லை.... இப்பதான் அக்கா சொன்னா.....” அவன் கழுத்தில் கை கோர்த்தபடி கேட்டு கொண்டிருக்க......

“ அவுக அப்புடி பண்ணுனாலும் எனக்கு உன்னைய புடிச்சுதாண்டி கல்யாணம் பண்ணினேன்.....”



“அப்பத்தா சொன்னாங்க நீங்க ரொம்ப கோபமாத்தான் ஒத்துக்கிட்டிங்கன்னு.....”



“ஆமாடி பறக்கா வெட்டி மாதிரி உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லச் சொல்றியா.... என்னைக்கு முதல்முதலா ராத்திரி வந்து எங்கழுத்த புடிச்சிகிட்டு தொங்குனியோ..... அன்னைக்கே.... மச்சான் ஒம்மேல ஆசை வச்சுட்டேன்டி..... பாவம் சின்ன வயசாயிருக்கியேன்னு நினைச்சேன்..... ஆனா கடவுள் எனக்கே எனக்குன்னு உன்னைய படச்சிருக்குறார்டி..... அப்புறம் நான் யாரப்பாத்தாலும் அது நடக்குமா......”அவன் கயல் இடுப்பை வளைத்து தன் வெற்றுடம்பு அவள்மேல் படுமாறு நன்கு இறுக்கி அணைத்தவன்...... அவள் உச்சியிலிருந்து தன் முத்தத்தை ஆரம்பிக்க.....



“ஏங்க..... இப்புடி பண்ணுனா என்ன அர்த்தம்....”.அவன் முதுகில் கைகோர்த்தபடி.... அவனிடம் மயங்கியபடியே........கண்ணன் காதிற்குள்.....” நான் இலைவெட்டதான் வந்தேன்..... வெட்டித்தாங்க.... அவுகள்ளாம் சாப்புடனும்ல....”



கண்ணன் தன் உணர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவந்தவன் ......”..சரி இப்ப போ ஆனா ராத்திரி மச்சான நல்லா கவனிக்கனும் புரியுதா......”



“ம்கூம்.....நான் இன்னைக்கு அக்காவோட படுத்துக்கிறேன்....... அவ பாவம்ங்க... ரொம்ப பயந்துபோய் இருக்கா.... இன்னைக்கு மட்டும் படுக்குறேன்.....”



“போடி...போடி……” என்று கோவித்துக் கொள்ள கயல் கண்ணன் பாணியில் அவனை கொஞ்சி கொஞ்சி வழிக்கு கொண்டுவந்தாள்.....



இவள் கொஞ்சுவதை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது....” பரவால்லடி வரவர நீயும் நல்லா தேறிட்ட....”



அனைவரும் சாப்பிட கயலை அந்த குடும்பம் தாங்குவதை கண்டு சுதாவுக்கு குற்ற உணர்ச்சி தாங்க முடியவில்லை..... சாவித்திரியாகட்டும்... முத்து ராமனாகட்டும் கயலிடம் அன்போடு பேசுவதை பார்த்தவளுக்கு தான் ஒரு நாள்கூட தன் மாமியாரிடம் இப்புடி நடந்து கொள்ளவில்லை என்பதை புரிந்து கொண்டாள்...... நாம் எதை கொடுக்கிறோமோ அதுவே நமக்கு திரும்பி வரும் என்பதை புரிந்து கொண்டாள்.... சுதா மனதார கண்ணனிடம் மன்னிப்பு கேட்க......

“ விடுங்க யாருக்குள்ள யாரு மன்னிப்பெல்லாம் கேக்குறிங்க.....எல்லாரும் ஒரே சொந்தகாரங்களாயிட்டோம் மன்னிப்பெல்லாம் தேவையில்ல.....”
சாவித்திரியிடம் மன்னிப்பு கேட்க...”.கயலுதான் இந்த வீட்டுக்கு வரனும்னு ஆண்டவன் எழுதிவச்சுட்டான் அதை நாம மாத்தலாம்னு பாத்தா முடியுமாத்தா... எல்லாரும் எங்கயிருந்தாலும் சந்தோசமா இருங்கத்தா...”




.அனைவரும் சாப்பிட்டு முடிக்க கயல் கடைசியாக சாப்பிட்டு கொண்டிருந்தாள்... கண்ணன் அவள் மறுக்கமறுக்க அவளுக்கு எடுத்து வைத்து அவளை கெஞ்சி கொஞ்சி சாப்பிட சொல்லிக் கொண்டிருந்தான்... ராமனும் முத்துவும் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து அடுப்படியில் வைத்து தன் தாய்க்கு உதவி செய்து கொண்டிருக்க... சாவித்திரி பாலை காய்ச்சி அனைவருக்கும் கொடுத்தவர்...... கண்ணனுக்கும் கயலுக்கும் மட்டும் பாதாம் பாலை காய்ச்சி கொடுக்க.....



“அம்மாடி...... இப்பவே வயிறு புல்லா இருக்குத்தே..... இனிமே வயிரு தாங்காது வெடிச்சிரும்...ப்ளிஸ்த்தே.... நான் நாளைக்கு குடிச்சுக்குரேன்.....”



“ம்ம்ம்கூம் இப்பவே இப்புடி மெலிவா இருக்க நாளபின்ன புள்ளக்குட்டிய தாங்குறதுக்கு சக்தி வேணாமா.....”

குழந்தை என்றதும் கண்ணன் கயலை பார்த்தவன்.... கண்ணை சிமிட்டி கண்ணாலேயே மிரட்டினான்.....” ம்ம்ம்... குடி....நீ என்னையும் என் பொண்ணையும் தாங்கனும்ல…..” என்று மெதுவாக கயல் காதுக்குள் கிசுகிசுக்க... அங்கு ஒரு சந்தோசமான காதல் இருவருக்குள்ளும் தோன்றி இருவர் முகத்திலும் தனி ஒளியாய் பிரகாசித்தது..... கயலுக்கு வெட்கமாகவும்.... கண்ணனுக்கு ஒரு பெண்ணின் மனதை வென்ற கர்வம் கம்பீரமாக வெளிப்பட்டது.......





இனி.......................???????.



தொடரும்...................
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த அத்தியாயத்தோட என்னோட நேசம் மறவா நெஞ்சம் – முதல் கதையை நிறைவு செய்கிறேன்...... அடுத்த அத்தியாயத்தை ஒருவாரம் பொறுத்தே கொடுக்கிறேன்...... ப்ளிஸ் கொஞ்சம் பொறுத்துக்கங்க ப்ரண்ட்ஸ்..... போன பதிவுக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்.......



 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top