நேசம் மறவா நெஞ்சம் - 3 nesam marava nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்


அத்தியாயம் - 3(அ)

"ஏண்டி அமுதா, பரீட்சை ஈஸியா..? எப்படி எழுதியிருக்க..?"
"ஆமா, படிச்சாவுல ஈஸியா எழுதமுடியும் நைட்டு சாமிபாத்துட்டு நாட்டுப்புறப்பாட்டு பட்டி மன்றம் நடந்துச்சு அத பாத்துட்டு வந்து படுக்கவே மணி 12 ஆச்சு அப்புறம் எங்குட்டு படிக்க.... ஆமா நீ ஏண்டி சாமி கும்பிட்டுட்டு உடனே வந்துட்ட..? "

" இந்த இம்சை அப்பத்தாவ கூட்டிட்டு போனா எங்குட்டு பட்டி மன்றம் பாக்க...!. இருஅப்பத்தான்னு சொன்னா 'போங்கடி தூக்கம் வருது, கை வலிக்குது, கால் வலிக்குதுன்னு ஒரே புலம்பல்' , பத்தாததுக்கு இந்த 500ரூபாய் செல்போன கையில வச்சுக்கிட்டு அது படுத்துற பாடு தாங்க முடியல...!. நீ வீட்டுக்குப்போன்னு சொன்னா உடனே போன போட்டு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சொல்லி திட்டு வாங்கி குடுத்துகிட்டே இருக்குடி".
" ஆமாடி, நம்மள கூட காலேஜில செல்போன் யூஸ்பண்ணக் கூடாதுன்னு சொல்றாங்க. உங்க அப்பத்தா வயசு 75 ஆச்சு எதுக்குடி ரெண்டு போன் வச்சுக்கிட்டு ரொம்ப அலப்பர பன்னுது அதை எங்கிட்டாச்சும் தூக்கி எறிய வேண்டியது தானடி...?"

" போடி, நீ வேற அது என்னவோ பெரிய ID card மாதிரி சுருக்குபைக்குள்ள போனப்போட்டு கழுத்துல கட்டி தொங்க விட்டுட்டு திரியுது.... கேட்டா வயசான காலத்துல எங்கையாவது கை தவறி போட்றுவேன்னு சொல்லுது... ஒன்ன எடுத்து பீரோவுல வச்சு பூட்டி வச்சுருக்கு, கேட்டா ஜார்ஜ் போடும் போது போன் வந்தா அத எடுத்து பேச கூடாதுன்னு அந்த போன யூஸ் பண்றதா சொல்லுதடி ஈஸியா சிம்கிடைச்சதனால 2 போன யூஸ் பண்ணுது..... பால் கறக்கிற கந்தன் அண்ணன் லேட்டா வந்தாகூட கூட்பிட உடனே ஒரு போன், பாவம் அந்த அண்ணன் இந்த அப்பத்தாகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறார்டி"

" சரி வா பஸ் வந்துருச்சு. திருவிழா நடக்கிறதால பஸ்சை முன்னாடியே நிப்பாட்டி கீழே இறக்கி விட்டருவான். நாம நடந்து தான் வீட்டுக்கு போகனும்".
பஸ்சை விட்டு கீழே இறங்கியவர்கள் அங்கு நின்றிருந்த அப்பத்தாவை பார்த்தவுடன் கலகலவென சிரித்தார்கள்.

" ஏண்டி, என்ன என்னைய பாத்தா உங்களுக்கு சிரிப்பா வருது, ஏண்டி அமுதா என்ன நக்கலா, இரு உங்க வீட்டு கிழவிகிட்ட வந்து சொல்றேன்".


" ஆத்தி, கயலு உங்க அப்பத்தாவாச்சும் ஒரு மனோரமா தாண்டி, ஆனா அது பத்து மனோரமா மாதிரி இருக்குடி".

" அது யாருடி மனோரமா "
" அதாண்டி, 'பாட்டி சொல்லை தட்டாதே' படத்துல வருமே அந்த ஆச்சி மனோரமா மாதிரி தான் உங்க அப்பத்தா இருக்கு". (போனவாரம் டீவில பாத்தேன்...)

" ஏய் என் பேரு காந்திமதி, மனோரமா இல்லடி".
"அப்பா.., பாம்பு காதுடி உங்க அப்பத்தாவுக்கு எவ்வளவு மெதுவா பேசுறோம். இதுக்கு எப்படிடி கேட்டுச்சு"
....ஹிஹிஹி என அசடு வழிந்தபடி
" ஆமா அப்பத்தா கழுத்துல தான் ஒரு போன தொங்க விட்டுறிக்கியே அப்புறம் எதுக்கு கைல ஒரு போன் ".
" அதுவா இவளுகளுக்கு திருவிழாவுக்கு தலையில வைக்க பூ வாங்கலாமுன்னு வந்தேன் "

." நீந்தான் கடைக்கெல்லாம் வரமாட்டியே அப்பத்தா...? "

"சும்மா உட்காந்தே இருந்தா கை, காலெல்லாம் வலிக்குதடி. அதான் சும்மா அப்படியே நடந்து வந்தேன். அப்பத்தான் நீங்க வருவீங்கனு நினைப்பு வந்துச்சு. வர லேட்டான்னா போன்பண்ணி கேக்கலாம்ன்னு போன்ல சிக்னல் இல்லைன்னா என்ன பண்றது. அதான் பீரோவ திறந்து அந்த போனையும் எடுத்திட்டு வந்தேன்... "

" அது சரி நாங்கதான் காலேஜிக்கு போனே கொண்டு போகமாட்டோமே..? அப்புறம் எதுக்கு போன்.. "
" ஹிஹிஹி..... அதுடி.... "
" போதும் அப்பத்தா வழியுது......... சரி வா வீட்டுக்கு போய் கோவிலுக்கு கிளம்ப நேரமாச்சு ".

நீங்க முன்னாடி போங்கடி அந்த முனை வீட்டு பூவாத்த அவ மருமக கூட சண்டையாம். மருமக பேசுற அளவுக்கு அவளுக்கு பேச தெரியலையாம், அதான் அவளுக்கு சில பாய்ண்டை போன்ல சொல்லிட்டு வற்றேன்".

"அப்படிச் சொல்லு பின்ன என்னமோ என்னைய கூப்பிட்போக காத்துகிட்டு இருக்கிற மாதிரி என்ன பில்டப்".

" ஆத்தா கயலு ".
" என்னப்பத்தா"
" உன் அம்மாகிட்ட போய் அப்பத்தா போன்ல பேசுறத எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காத. வீட்டுக்கு நிறைய விருந்தாளி திருவிழாவுக்கு வந்திருக்காக அவுக முன்னாடி என் பிரஸ்டீசு போயிரும்..."
"என்னது பிரஸ்டீசா.....?"
" ஆமாடி அதான் கௌரவம்...."

"சூப்பர் அப்பத்தா உன் பிரஸ்டீஜ்க்கு நாங்க கியாரண்டி. நீ இங்கிலீசு எல்லாம் சூப்பரா பேசுற அசத்து".

அப்பத்தாவின் போன் ரிங் அடித்தவுடன் காந்திமதி பேத்திகளை மறந்து சின்னக்கவுண்டர் மனோரமா மாதிரி பூவாத்தகிட்ட பாயிண்ட அள்ளி வீச ஆரம்பிக்க,

"சரி வாடி அப்பத்தா இப்போதைக்கு பேச்ச முடிக்காது.. ".
" கயலு உங்க அப்பத்தாவ பாத்தியா கோயிலுக்கு போக ரெடியாகி வந்துருச்சு 'அப்பொழுது தான் கயலு தன் அப்பத்தாவை திரும்பி நன்கு பார்த்தாள் மேட்சுக்கு மேட்சாக கண்டாங்கி சேலை கட்டி, தலையை அள்ளி முடிந்து (கிராமங்களில் கொண்டை போடாமல் மொத்தமாக சீவி அள்ளி முடிவார்கள்) திருநீறு பட்டை போட்டு, பெரிய வெள்ளைக் கல்லு தோடு போட்டு , 5வட கல்லு முகப்பு சங்கிலி போட்டு, அந்த மயில் கலர் சேலைக்கு பட்ரோஸ் கலர் பார்டர் எடுப்பாக இருந்தது. அதில் சிறிய தங்க கரையிட்ட மயில் புட்டா போட்டிருந்தது அந்த சேலைக்கு எடுப்பாக இருந்தது. அப்பத்தா போனில் புன்னகையுடன் பேசுவதை கண்ட கயலுக்கு அப்பத்தாவின் மேல் பாசம் பொங்கி வழிந்தது.


"என்னடி அப்பத்தாவ இப்படி பாக்குற....?"
"இல்லடி வீட்ல அப்பத்தா போன்ல பேசுனாலும் அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அதுக்கு நல்லா தெரியும்.. பஸ் இன்னைக்கு தள்ளிநிக்கும்ன்னு அதான் இங்க வந்து நிக்குது. நம்மள பாத்தவுடன தான் அது போன் பேசவே ஆரம்பிக்குது. அதுக்கு முன்னாடி போன் வந்திருந்தாலும் அது போன எடுத்து பேச ஆரம்பக்காதுடி. அதுக்கு எங்க மேல எப்பவுமே தனி பிரியம்டி எங்க அத்த பிள்ளைகளை விட, எங்க மேல தான் தனிப் பாசம்டி. எனக்கும் அப்பத்தாவை ரொம்ப பிடிக்கும்.... சரி வர்றேன்டி".
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 3(ஆ)



வீட்டுக்கு வந்தவுடன் வீட்டிற்கு வந்துள்ள சொந்தகாரர்கள் அனைவரையும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் தனித்தனியாக விசாரித்தாள். களைத்துப் போய் காலேஜில் இருந்து வந்திருந்தாலும் எல்லோருடனும் நன்கு சிரித்து பேசி பழகும் தன் மகளை கண்டவுடன் சகுந்தலாவுக்கு மனம் நிறைந்தது.

"என்னம்மா, இப்படி பாக்குறீங்க"
"ஒன்னமில்லடி இந்தா இந்த காப்பியை குடிச்சிட்டு போய் மாமா வீட்டுக்கும், சித்தப்பா வீட்டுக்கும் இந்த காப்பி, பலகாரத்தை குடுத்திரு"
"ஆமா என்னம்மா பலகாரம் அன்னம்மா அக்கா...... என்ன பண்ணுறீங்க நான் சொன்ன பலகாரத்த நீங்க பண்ணுநீங்களா, இல்லையா..?"
" ஆத்தா, தங்கம் வெள்ளைப் பனியாரம் தானே சூப்பரா பண்ணியிருக்கேன்... "
" சட்னி.....? "
" நீங்க கேட்ட காரசட்னியே பண்ணியிருக்கேன். கூடவே கந்தரப்பமும், ரவைப் பனியாரமும், மசாலா சீயமும்... "
" சூப்பரக்கா.....! அம்மா எங்க சுதாக்கவ காணோம்...? எல்லோர்க்கும் அவள்கிட்டயே பலகாரத்தை குடுத்துருக்களாம்ல.....? "

" போடி நீ வேற மத்தியானம் சாப்பிட்டு முடிச்சதும் ரூம்முகுள்ள போனவ அலங்காரம் பண்ணுறா, பண்ணுறா பண்ணிக்கிட்டே இருக்கா. உங்க சித்தப்பா வீடு இப்பத்தான் வந்தாங்க. வந்தவங்கள ஒரு வார்த்தை வாங்கன்னு கூப்பிடல. உங்க அப்பத்தாவும் கதவ தட்டி கத்தி பாத்துட்டு பூ வாங்க கடைக்கு போறோம்னு சொல்லீட்டு போய்டாங்க... மல்லிகாவும், அருணாவும் என்ன பண்றாங்கன்னு பாரு..? "


" சரிம்மா, டென்சன் ஆகாதிங்க நான் போய் எல்லார்க்கும் காப்பியை குடுத்திட்டு அவங்களையும் பாக்குறேன்"." அப்படியே நீயும் நல்லா மூஞ்சியை கழுவி சுத்தம் ஆகிட்டு தாமரை பிள்ளைகளையும் கிளப்பி விடு ".

" பெரிய அக்கா எங்கம்மா....? "

" இப்பத்தாண்டி எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறி, மாப்பிள்ளை லேட்டாதான் வந்தாரு அவருக்கும் சாப்பாடு போட்டுட்டு குளிக்கப் போனா. "
" அக்கா பாவம்மா, அங்கேயும் வேலை, இங்க வந்தாலும் வேலை வாங்குறீங்க....? "
" என்னடி பண்ணுறது நம்ம வீட்டுக்கு வந்தவங்கள நாமதான் கவனிச்சுக்கனும் எத்தனை வேலைக்காரங்க இருந்தாலும் நாம போய் பேசுனாத்தான் அவுக மனசு சந்தோசப்படுவாங்க. இன்னைக்கும், நாளைக்கும் மட்டுந்தாண்டி வேலை அதிகம் இருக்கும். அப்புறம் விருந்தாளி எல்லாம் ஊருக்கு போவுடன் நிம்மதியா அக்காவ இங்க பத்து நாளைக்கு வச்சுக்கணும்ன்னு உங்க மாமாகிட்ட கேக்கனும் பிள்ளைகளுக்கு பரிட்சை லீவுதான இருக்கட்டுமே".

" சரிம்மா, காப்பி ஆறப் போகுது குடுங்க".
கயலும் அனைவருக்கும் காப்பி பலகாரங்களை கொடுத்து மல்லிகாவிற்கும் அருணாவிற்கும் தலை பின்னி விட்டு குழந்தைகளை கிளப்பினாள். பின் முகம் கழுவி தலை சீவீ பின்னல் போட்டு லேசாக பவுடர் பூசி சிறிய மச்சம் போல கருப்பு பொட்டிட்டாள். அதன் மேல் திறுநீறு கீற்றும், கீழே சிறிது குங்குமமும் வைக்கும் நேரத்தில் கதவு தட்டப்பட்டது.
"கயலு, ஏய் கயலு கதவை திறடி".
"என்னப்பத்தா எதுக்கு கதவை உடைக்கிற".
"இந்தாடி, பூவு நீயும், தங்கச்சிகளும் தலைக்கு வச்சுக்கிட்டு எல்லாருக்கும் குடு".
"அப்பத்தா பூவு இவ்வளவுதானா இன்னும் நிறைய வாங்கியிருக்கலாம்ல சுதாவுக்குக்கூட மல்லிகைப்பூவுன்னா ரொம்ப பிடிக்கும்ல".




"ஏய், கடுப்ப கிளப்பாதடி போகும் போது அவ்வளவு நேரம் கதவ தட்டறேன் திறக்கல நான் வந்தது எப்படித்தான் தெரியுமோ படக்குன்னு கதவ திறந்து வாங்கின பூவுலகால்வாசிய அவ பிடிங்கிகிட்டா. பூவ எப்போதும் எல்லா சுமங்கலிகளுக்கும் பிரிச்சுக்குடுக்கனும்னு தெரியாது. ஏண்டி அவ இப்படி இருக்கா, நான் கத்துறேன். கத்து உன்னோட, காரியம் என்னோடன்னு இருக்கா. (பழமொழியாம்).
"சரிசரி விடு அப்பத்தா அவள பத்தி உனக்கு தெரியாதா. விருந்தாளி முன்னாடி கொஞ்சம் அடக்கிவாசி. உன் வெத்தல பெட்டிய அந்த வாசுப்பையன்(அத்தைப் பேரன்) கைல வச்சு விளையாண்டான் போய் பாரு"

"ஐய்யய்யோ, அதுக்குள்ள பாக்குரலும், காசும் வச்சிருந்தேனே போச்சு இந்த பயபுள்ள எங்கிட்டு தூக்கி போட்டானோ தெரியலயே ஏய் வாசு அய்யா தங்கம் "என கத்தி கொண்டேகொள்ளுப்பேரனைக்கானச் சென்றாள்.
சிரித்தபடி கயல் அனைவருக்கும்பூவைபிரித்த்க்கொடுத்துதனக்கும் தன் நீண்ட பின்னலில் சூடிக்கொண்டாள். வீட்டில் சாமி அறையில் அனைத்து கடவுளுக்கும் பூப் போட்டு விளக்கேற்றி சாமி கும்பிட்டு அனைவரும் கிளம்பினர்.

"ஏய், கயலு நில்லுடி," சுதாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு இன்னைக்கு என்ன ஏழரையோ...? என்று திரும்பினாள்.
சுதா ஆரஞ்சு வண்ணப்பட்டு உடுத்தி அதற்கு மேட்சாக இன்றைய நாளில் உள்ள டிசைன் போட்ட பிளவுஸ் போட்டு பின்னால் இரண்டு கயற்றில் மணி தொங்கியது. தலையை மாடலாக தலைப்பிண்னி தலை நிறைய பூ வைத்திருந்தாள் (இல்ல பூ நிறைய தலைய வைத்திருந்தாள் சூ அக்கா திட்டு வா) நெற்றியில் கல் வைத்தப் பொட்டு, அழகாக பட்டுப் புடவை விளம்பரத்திற்கு வரும் மாடல் அழகியை போல் நின்றிருந்தாள்(பின்னே 3 மணி நேரம் மேக்கப்).

"இந்த டிரஸ் ஏதுடி. உனக்கு திருவிழாவுக்கு சுடிதார் தான எடுத்தோம்" என கடுப்புடன் கேட்டாள்.
பின்னே 3மணி நேரம் மேக்கப் போட்டு தான் செய்த அலங்காரத்தை விட கயல் மிகவும் அழகாக தோன்றியது காண பிடிக்காமல் அந்த அழகுக்கு காரணம் அவள் போட்டிருந்த உடை என்று நினைத்தாள்.

" அம்மா தாக்கா திருவிழாவுக்கு எடுத்து குடுத்துச்சு". (அம்மாவ சீன்ல கொண்டுவந்தாதான் நாம தப்பிக்க முடியும்).
"ஏய், சுதா எதுக்கு இப்படி கத்துற, வந்தவங்கள வாங்கன்னு கேக்கல உன்னைய விட 3வருசம் சின்னப்பிள்ள அவகிட்ட போய் என்ன கேட்டுகிட்டு இருக்குற". "அம்மா இந்த டிரஸ் ஏது. அன்னைக்கு டவுன்ல நாம இந்த டிரஸ் வாங்கலயே....?".

"இல்லடி நீதான் அந்த 3 பட்டுப்புடவை எடுக்குறதுக்கு 3 மணி நேரம் செலவு செஞ்சியே... அதுக்குள்ள நாங்க குடும்பத்துக்கே எடுத்துட்டு உன்னையவே ஒருமணி நேரம் பார்த்திட்டு உட்காந்திருந்தமே அப்ப எடுத்தோம் "
" அப்ப ஏன் எங்கிட்ட காண்பிக்கவே இல்ல....? "
" இல்லடி வரவும் அந்த டைலர் சுமதிகிட்ட தைக்க குடுத்துட்டேன் அவ இன்னைக்கு தான் குடுத்தா அதான் காண்பிக்கவே இல்லை.. ".

" எனக்கு அந்த டிரஸ்தான் வேணும்... அதோட விலை என்ன...? "

" சரிடி கயலு அந்த டிரஸ்ச இவகிட்ட குடுத்துட்டு அவ எடுத்த அந்தபச்சை பட்டுச் சேலைய எடுத்துக்கோ.... ஏய் சுதா அந்த சேலைய எடுத்து குடுடி.. ".

" என்னது அந்த சேலையவா..? "(15000 விலை) திடுக்கிட்டாள் சுதா. "இந்த பட்டு பாவாடை என்ன விலை...? "." இது வெறும் 5000 தான்டி பரவாயில்ல(பொய் 10000ரூபாய்)குடு அக்கா விரும்புறா.."."இல்ல, இல்ல வேணாம்... எனக்கு மைஊதா என்னைக்குமே எடுக்காது அவளுக்கே எடுக்கல, ஏதோ பரவாயில்ல (பின்ன எப்படி 15000 பெரிசா 5000 பெரிசா... ?, ஆமா இவ முதல்ல பாவாடை தாவனி நல்லாயிருக்குன்னா, இப்ப இல்லைங்குறா, எதிர்காலத்துல பெரிய அரசியல்வாதியாதான் வரப்போரா. அவங்க மாதிரி மாத்தி மாத்தி பேசுரா ஏய் மைண்டு வாய்ஸ குறை அவளுக்கு கேட்டுற போகுது).

சரி வாங்க கோவிலுக்கு போகலாம் நேரமாச்சு".".... ஸ்ஸ்... அப்பா...! கிரேட் எஸ்கேப்"(எங்க மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்மோன்னு நினைச்சேன்).

கயல்க்கு ஆடை அலங்காரத்தில் பிரியம் அதிகம் இல்லை. காலேஜ்க்கே ஏனோ, தானோ வென்று தான் அணிவாள்(அதனால் தான் சுதாவிடம் அந்த டிரஸ்கள் தப்புத்தது)

" அம்மா,... அம்மா.... "

" என்னடி அம்மா அம்மா ன்னு ஏலம் போடுற"...
"அது... வந்து அமுதா இன்னைக்கு நைட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு கூப்பிடுறா போறேன்மா.."
"சரி சரி சாமி பாத்துட்டு வந்து சாப்பிட்டு மல்லிகாவையும், அருணாவையும் துணைக்கு கூட்டிட்டுட்டு போயிட்டுவா... ".

கிராமம் என்பதால் பெண்களுக்கு எந்த பயமும் இல்லை. மேலும் கயலின் நல்ல குணம் தெரியுமாதலால் அனைவரும் அவளுடன் இனிமையாக பழகுவார்கள். கயலுக்கும் எந்த பயமும் இல்லை. அவளுக்கு பேயென்றால் தான் பயம்.......


" கயல் பயந்தது பேய்க்கா.....? இல்ல கண்ணனுக்கா.......?

........ தொடரு‌ம்...!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top