நேசம் மறவா நெஞ்சம்-29Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம் -29



கயல் கை உதறவும் கண்ணனுக்கு கடுமையான கோபம் வந்தது....”.ஏய்... என்னடி லூசா புடுச்சிருக்கு.... பேசாம இரு “என்றபடி அவள் கையை இறுக்கினான்.....



“இல்லங்க.... என்னைய விடுங்க....நிச்சயமா என்னால நடந்தோ இல்ல நீச்சல் அடிச்சோ வரமுடியாது...... ப்ளிஸ்.... என்னைய விடுங்க.....நீங்க எப்புடியாச்சும் நீச்சல் அடிச்சு போயிருங்க...... ப்ளிஸ்ங்க.....”



“மூச்..... வாய மூடு.... இப்ப விட்டா உனக்கு என்ன ஆகும்னு தெரியும்ல......”



“தெரியும்ங்க..... காலையில எங்கயாச்சும் கம்மாயில மிதப்பேன்....... அது பரவால்லங்க..... உங்களுக்கு எதுவும் ஆகக் கூடாதுங்க...”என்றபடி மறுகையால் அவனை அணைத்தவள் “எனக்கு என்னையவிட உங்க உயிர்தாங்க முக்கியம்…. நீங்க எப்புடியாச்சும் போயிருங்க.....”



“அப்புடி மட்டும் நடக்குமுன்னு கனவுல கூட நினைக்காத..... சாவு வருதுன்னா... அது எனக்கப்பறம் தான் அது உன்னைய நெருங்கவே செய்யும்..... நீ மட்டும் தண்ணில போனா நான் வீட்டுக்கு போவேன்னு நினைச்சியா..... கண்டிப்பா இல்ல....உன்பின்னாடியே நானும் வந்துருவேன்......அதுனால கிறுக்குத்தனமா யோசிக்காம....எப்புடி வீட்டுக்கு போறதுன்னு யோசி......”



அப்போது அங்கே வேகமாக வந்த ஒரு பெரிய மரக்கம்பு ஒன்று அவள் காலில் சடாரென்று அடித்து அதன் கிளைகள்...கயலின் காலை கிழித்தப்படி சென்றது...... கயல் தடுமாறி கீழே விழ இருந்தாள்......எட்டி... அவள் மறுகையை பிடித்தவன்.....அவள் சேலையின் முந்தானையை கழட்டியவன்..... அவளை மெதுவாக தன் பின்புறம் வரச்செய்து தன் இடுப்போடு சேர்த்து அவளை கட்டினான்....... என்ன... செய்வது... என்ன செய்வது..... யாராவது வருகிறார்களா எனப்பார்க்க ஒருவரையும் காணவில்லை..... கயலின் இரு கையையும் தன் முன்னால் இழுத்து தன் சட்டையை பிடிக்கச் செய்தவன்....



“இந்த பாரு கயலு.... என்ன நடந்தாலும் இந்த கையை மட்டும் எடுக்கவே கூடாது....... வாழ்ந்தா.... ரெண்டுபேரும் ஒன்னா வாழ்வோம்..... செத்தாலும் ரெண்டுபேரும் ஒன்னாவே சாவோம்.......”



கயலுக்கு கண்ணீர் அந்த தண்ணீரோடு சென்று கொண்டே இருந்தது.....கடவுளே இவர காப்பாத்து.......காப்பாத்து என எல்லா தெய்வத்தையும் வேண்டிக் கொண்டே இருந்தாள்.... தண்ணீரின் அளவும் கூடி கயலின் மூக்குக்கு அருகே வந்தது.... அவளும் தன் கால் விரல்களை ஊண்டி எக்கியபடிதான் நின்று கொண்டிருந்தாள்......



கண்ணனுக்கு அப்போதுதான் தன் செல்போனை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு பையில் வைத்த ஞாபகம் வர........... கஷ்டப்பட்டு அதை எடுத்து அதில் டார்ச்சை உயிர்பித்தான்......தங்களை சுற்றி பார்க்க எங்கும் ஒரே வெள்ளக்காடாக தெரிந்தது.....ஒரு அடிகூட முன்னால் போக முடியாது......பின்புறம் பார்த்தவனுக்கு தண்ணிர் தாழ்வான பகுதிக்கு செல்வதை பார்த்ததும் டக்கென ஒரு யோசனை தோன்றியது.......



“கயலு .... இப்ப என்ன ஆனாலும் சரி... பயப்படாம என்னைய நறுக்குன்னு புடுச்சுக்கனும்....சரியா.....”



கயலுக்கு பேச முடியவில்லை தண்ணீரின் அளவுகூடி அவள் மூச்சுக்குழாயிலும் தண்ணீர் ஏறத்துவங்கியது..... கயல் சுயநினைவை இழந்து கொண்டிருந்தாள்....கயலிடம் இருந்து எந்த சத்தம் வராமல் இருக்கவும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவன்..... மெதுவாக தண்ணீர் தாழ்வான பகுதிக்கு போகும் பக்கம் திரும்பியவன்...தன் காலை தூக்க அவனும் நீரின் வேகத்தோடு அடித்து செல்லப்பட்டான்...... ஒரு பத்தடி தூரம் அதன் வேகத்தோடு சென்றவன்........தன் கணக்கிட்ட தூரம் வரவும்.... மெதுவாக சற்று தள்ளி நீச்சல் அடித்துச் சென்றான்.....நீரின் வேகத்தில் அவனால் கயலோடு நீச்சல்கூட அடிக்க முடியவில்லை......அங்கே இருந்த அந்த பெரிய ஆலமரத்தின் பெரிய விழுதுகள் ஆங்காங்கே வேர்விட்டு நின்றிருந்தது. அந்த ஆலமரத்தின் விழுதைப் எட்டிப் பிடித்திருந்தான்..... அதை பிடித்தவாறு மெதுவாக காலை ஊண்டியவன்...... மறுகையால் கயலை தடவிபார்க்க கயல் அவன்மேல் மயங்கி சரிந்திருந்தாள்.......



அந்த விழுதில் இருந்து மெதுவாக தடவிபார்த்து மற்ற விழுதை பிடித்து காலை நறுக்கென ஊண்டியபடி காலை தூக்கி வைக்க முடியாமல் மெதுவாக தன் கால்விரலை வைத்தே... மெதுவாக ஊர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விழுதை பிடித்தபடி அந்த பாலத்தின் மறு பகுதியை அடைந்தான்......அந்த மரத்தின் பெரிய வேர் பகுதியை அடைந்தவன் கயலை அந்த மரத்தின் அடியில்படுக்க வைத்தான்.......

“கயல்...... கயல்....”என்றபடி அவள் கன்னத்தை தட்ட........ முந்தானையை எடுத்து அவன் கட்டியிருந்ததால் சேலை கலைந்து பாதி சேலை தரையில் கிடந்தது.... அவள் மார்பில் தலை வைத்து இதயத்தின் ஓசை கேட்கிறதா... என்பதை காது கொடுத்து கேட்டவன் அதன் ஓசை கேட்கவும்தான் அவனுக்கு பாதி உயிர் வந்தது... அவள் வயிற்றில் தன் கையை வைத்து அமுக்கி நீரை எடுக்க முயற்சி செய்தவன்....அதில் பலன் இல்லாமல் போகவும் தன் வாய் வழியாக அவளுக்கு மூச்சுக்காற்றை செலுத்தினான்.... நீண்ட நேரம் முயற்சிக்கு பின் கயலிடம் லேசாக அசைவு தெரியவும் கண்ணன் அவள் மேலேயே படுத்து விட்டான்....கண்ணனின் கண்ணீர் கயலின் மார்பை நனைத்தது...... கயல் மெதுவாக கண்ணை திறந்து பார்த்தவள்......தன் மார்பில் படுத்திருந்த கண்ணனை பார்த்தவள் தன் மேல் சூடான கண்ணீர்துளி விழுவதை உணர்ந்து.....



“என்னங்க......... ஏங்க.... இங்க பாருங்க....”



கண்ணனால் முடியவில்லை.... இவ்வளவுநேரம் கயலை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறியில் இருந்தவனுக்கு இப்போது தன் மனதை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.... இருவரும் உயிரோடு பிழைத்து விட்டோம் என்பதையே நம்ப முடியாமல் அப்புடியே படுத்து விட்டான்......



கயல் கண்ணனின் மனநிலையை உணர்ந்து மெதுவாக அவன் தலையை தடவி கொடுத்தவள்.......இது எப்புடி நடந்துச்சு.... நாம எப்புடி பிழைச்சோம் என்பதே அவளுக்கு தெரியவில்லை.... அவளுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றுதான் கண்ணனுக்கு ஒன்னும் ஆகலை.....அவரு நல்லாயிருக்காரு.......இருவரும் இந்த உலகத்திலேயே இல்லை.....ஒரு மாதிரி மயக்க நிலையில் இருந்தார்கள்.... இது இருவருக்குமே மறுபிறப்பு மாதிரிதான் .....



சிறிது நேரம் கழித்து கயல் லேசாக அசையவும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் “என்னடா..... என்ன பண்ணுது.....”



“இல்ல.... கால்ல என்னமோ வலிக்குற மாதிரி தெரியுது.....”

அவன் கால் பக்கம் வந்து அவளின சேலையை மேலே ஏற்றி கயலின் காலை பார்க்க அந்த பெரிய மரக்கம்பு கிழித்ததில் அவள் முழங்காலுக்கு கீழே பெரிய காயம் ஏற்பட்டிருந்தது....ரத்தமும் கசியவும் பதறி போன கண்ணன் தன் வேட்டியின் ஒரு ஓரத்தை கிழித்து அவளின் காயத்துக்கு கட்டுப் போட்டு விட்டான்.....



“உன்னால நடக்க முடியுமா....மெதுவா காலை ஊண்டி பாக்குறியா....”தூரத்தில் யாரோ இருவரின் பேச்சுக் குரல் கேட்டது.....மெதுவாக எழுந்த கயல்…..காலை ஊன்ற முடியாமல்

“ஏங்க என்னைய கொஞ்சம் புடிச்சுக்கிறிங்களா....யாரோ வார மாதிரி இருக்கு நான் சேலைய ஒழுங்கா கட்டிக்குறேன்......”



கண்ணன் அவளின் தோளில் கைவைத்து பிடித்துக் கொள்ள….”என்னங்க சேலை இப்புடி கிழிஞ்சு போச்சு....”அவள் சேலையின் முந்தானை பெரிதாக கிழிந்து தொங்கியது.....” இது எங்க தாமரை அக்கா எடுத்து குடுத்த சேலை இப்புடி போச்சேங்க.....”



“ஆமாண்டி... ஊயிரே போக இருந்துச்சு...சேலை ரொம்ப முக்கியம் பாரு....வா நான் உனக்கு நூறு சேலை எடுத்து தாரேன்….”என்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருக்க...



“என்னங்க இப்புடி பாக்குறிங்க......”



“இல்ல.. தண்ணிக்குள்ள நிக்கையில ஏன் கிறுக்குமாதிரி பண்ணுன..... அப்புடி என்னடி என்னோட உசிரு மட்டும் பெருசா போச்சு......”



“ம்ம்ம்......ஆமா நீங்கதானே எனக்கு உசிரு... எனக்கு என்னையவிட உங்களதானே ரொம்ப புடிச்சிருக்கு.......”அவள் எலும்பே நொறுங்கும் அளவுக்கு அவளை அணைத்தவன்...... பேச்சுக்குரல் மிக அருகில் கேட்கவும் கண்ணன் கயலை தூக்கி அந்த மரத்தின் தூருக்கு அருகில் உட்காரவைத்தான்.....
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
“ நீ இங்கனயே இரு நான் இந்தா வாரேன் “என்றபடி அவர்கள் அருகில் வந்தவன்..... “அண்ணே.... வேற பக்கமா போங்கண்ணே தண்ணி அதிகமா வருது..... “அவர்கள் கண்ணன் ஊர்காரர்கள்தான்....

“ஆமா கண்ணா ஊருபுள்ளா ஒரே தண்ணியா இருக்குப்பா...இப்புடி கம்மாய பிளாட் போட்டா தண்ணிபூராவும் எங்கப்பா போகும்...... இங்க பாரு தண்ணி பாலத்துக்கு மேல போகுது.....”



இப்போது தண்ணிர் இன்னும் அதிகரித்து ஒரு ஆள் மட்டத்திற்கு மேலேயே போய் கொண்டிருந்தது.... “அண்ணே ஒரு போன் பண்ணிக்கவா...”.அவனுடைய போன் அவன் டார்சை ஆன்செய்த சில நிமிடத்திலேயே அது அணைந்திருந்தது.. அவர் போனை கொடுக்க ...

.ராமனுக்கு போன் செய்தவன்...”.டேய் ராமு...காரை எடுத்துக்கிட்டு நம்ம ஊரு கடைசியில இருக்குற அந்த தரை பாலத்துக்கிட்ட வா.....”



“அண்ணே..... உங்க ரெண்டுபேரையும் காணாமுன்னு அம்மா ரொம்ப நேரமா புலம்பிக்கிட்டு இருக்காங்க.... உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னுமில்லயே.... வண்டி என்னன்ணே ஆச்சு........அப்பத்தில இருந்து போன் பண்ணிக்கிட்டே இருக்கேன் போன் ஸ்விட்ச் ஆப்னு வருது....”



“டேய் அதெல்லாம் அப்புறம் விவரமா சொல்லுறேன்....நீ அம்மாட்ட ஒன்னும் சொல்லிக்க வேணாம்...கொஞ்சமா வெரசா வா......”



“இன்னும் அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேண்ணே....”



அவர்களிடம் போனை கொடுக்க....” என்னப்பா ஏதாச்சும் பிரச்சனையா.... என்னமாச்சும் உதவி செய்யவா.....”.



“இல்லண்ணே....ந்தா தம்பி இப்ப வந்துருவாண்ணே.... நீங்க கிளம்புங்க....”

“இல்லப்பா... இங்கிட்டு யாரும் போக கூடாதுப்பா” என்றபடி அந்த பாலத்தின் பாதையை பெரிய கல்லை வைத்தும் அங்கு ஒதுங்கிகிடந்த அந்த மரத்தை இழுத்து பாதையின் நடுவில் போட்டு யாரும் போக விடாமல் செய்திருந்தார்கள்.......



கண்ணணின் கார் வரவும் அதை கைகாட்டி நிப்பாட்டியவன்...... தன் பையில் இருந்த வண்டி சாவியை எடுத்து ராமனிடம் கொடுத்து.....” இது.... நம்ம கஸ்டமர் குமார் அண்ணணோட வண்டி நீ எடுத்துக்கிட்டு வா.... கயலுக்கு கால்ல கொஞ்சம் காயம் இருக்கு நான் டாக்டர்கிட்ட காட்டிட்டு வீட்டுக்கு வந்துருரேன்......”



“என்னண்ணே.... அண்ணிக்கு என்ன ஆச்சு....எங்கண்ணே அண்ணி......”

“ஒன்னுமில்லடா ...அந்த மரத்துக்கிட்ட உக்காந்திருக்கா....” அந்த மரத்தின் அருகில் செல்ல கயல் மரத்தின் மேல் சாய்ந்து கண்ணை மூடியிருந்தாள்.......



“அண்ணி.... என்னாச்சு அண்ணி.....”



மெதுவாக கண்ணைதிறந்து அவனை பார்த்தவள்.... “ஒன்னுமில்ல பயப்படாதிங்க.....லேசான காயம்தான்...”

கண்ணன் கயலை கையில் ஏந்தியிருக்க ராமனும் வந்து காரின் கதவை திறந்து விட்டான்.....”அண்ணே பாத்து போங்க பின்னாடியே நானும் டாக்டர் வீட்டுக்கு வாரேன்...”

அவர்கள் ஊரில் ஒரே ஒரு டாக்டர் மட்டும்தான் ஆத்திர அவசரத்துக்கு அவரிடம் தான் செல்லவேண்டும்.....அவர்கள் அங்கு சென்று தூங்கி கொண்டிருந்த அவரை எழுப்பி கயலை பார்க்க வைத்தனர்.....

காயத்தை சுத்தம் செய்தவர் காயம் ஆழமாக இருக்கவும் மூன்று தையல் போட்டார்.... மருந்து மாத்திரையோடு இருவரும் வீட்டிற்கு வந்தனர்......



சாவித்திரி விசயத்தை கேள்விபட்டதிலிருந்து ஒரே அழுகை.....கடவுள் ஏன்தான் இம்புட்டு சோதனைய குடுக்குறாரோ...... தெரியலயே.... அப்போதே ஏகப்பட்ட கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்தவர்….உடனேயே மகனுக்கும் மருமகளுக்கும் திருஷ்டி சுத்திப் போட்டார்.... இருவரும் சாப்பிட்டு விட்டு மாடிக்கு செல்ல....கயலுக்கு பேச்சே குறைந்திருந்தது.... தன் உடையை மாற்றி வந்தவள் கட்டிலில் படுக்க ......



“என்னடி ரொம்ப காலு வலிக்குதா......”

“இல்ல.....”

“அப்ப என்ன ஒன்னும் பேசாம இருக்க.....”என்றபடி அவள் பக்கம் திரும்பி படுக்க....

கண்ணனை கட்டிப்பிடித்தவள் அவன் வெற்று மார்பில் முகம் புதைத்து அழுக ஆரம்பித்திருந்தாள்......கண்ணனுக்குமே மனம் பாரமாக இருந்ததால் அவனும் பேசாமல் இருக்கவும்..... கயலும் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்......



சிறிது நேரம் செல்லவும்......” ஏய் விடுடி.... நடந்ததையே நினைச்சிக்கிட்டு இருக்கக் கூடாது.விடு அதான் ஒன்னும் ஆகலைல்ல அப்புறம் என்ன....விடுடா “என்றபடி அவள் கண்ணை துடைத்து விட்டான்” ந்தா இந்த தலகானிய காலுபக்கம் வச்சுக்க..... நான் பாட்டுக்கு தூக்க கலக்கத்துல உன்னோட காலு மேல கால போட்டுற போறேன்...... “



“பரவால்ல...நீங்க பேசாம படுங்க தூக்கத்துல நான் தள்ளி போனாலும் நீங்க என்னைய விட்டு விலகக்கூடாது “என்றபடி இன்னும் நெருங்கி அணைத்திருந்தாள்... கண்ணனுக்கும் கயலின் ஸ்பரிசம் தேவைபட்டதால் அவள் மேல் கைபோட்டு தன்னை நெருக்கியிருந்தான்...இருவருக்குமே தெரிந்தது....... இனி ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை என்று.......



அங்கு ஷீட்டிங்கும் நிறைவடையும் நிலையில் இருந்தது..... இன்னும் ஒரு வாரம் மட்டுமே அங்கு நடப்பதாக இருந்தது.... வாசுவும் அவர்கள் கொடுத்த காசை வைத்து தன் வீட்டோடு சேர்த்து ஒரு பெரிய ரும் அட்டாச்சுடு பாத்ருமோடு எடுக்கலாம் என்று பிளான் போட்டு அந்த வேலையில் இறங்கியிருந்தான்..... சுதாவுக்கு கால் தரையிலேயே பரவவில்லை.... அவள் ஒரு மயக்கதிலேயே இருந்தாள்....கொஞ்சமா படம் நம்ம எடத்துல எடுத்ததுக்கே இம்புட்டு பணம் குடுக்குறாங்க.... நாம நடிக்க ஆரம்பிச்சா நிறைய பணம் கிடைக்கும்ல...... அவர்களின் வலையில் எளிதாக விழுந்தாள்.....



வினோத்தும் சுதாவிடம்” இந்த படம் முடிஞ்சவுடன வேற படம் எடுக்கப் போறாங்களாம்... உங்கள நிறைய போட்டோ எடுத்து வச்சுக்கிட்டா அத வேற டைரக்டர்கிட்ட குடுக்கலாமுன்னு சொன்னாரு..... அவரோட போட்டோகிராபர் அடுத்தவாரம் இங்க வருவாராம்.... உங்கள நிறைய போட்டோ எடுக்க கூட்டிட்டு வரச்சொன்னாரு.... நீங்க அது வரைக்கும் அண்ணன்கிட்ட சொல்ல வேணாம்..... படம் ஒகே ஆனவுடன சம்பளத்த வாங்கிகிட்டு சொல்லிக்கலாம்.......” சுதாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை..... வாசுவுக்கு மனம் திருப்தியாக இருந்தது.....சுதா தன்னோடு சந்தோசமாக பேசுவதே போதும் என்றிருந்தான்.......



கயலுக்கு மெதுமெதுவாக காயம் ஆற துவங்கியது...... வீட்டில் அவளை அனைவரும் தாங்கினர்.... எந்த வேலையையும் செய்ய விடவில்லை... காலேஜ்க்கும் லீவ் போட்டிருந்தாள்.... பரிட்சை மட்டும் போய் எழுதிக் கொள்ளலாம் என்று எண்ணி ஒய்வு நேரத்தில் வீட்டிலேயே படித்தாள்... காயமும் நன்கு ஆறிவிட்டிருந்தது...... ராமனுக்கு காலேஜில் இருந்து டூரூக்கு அழைத்துச்செல்ல அவன் ஒருவாரம் டூருக்கு சென்றிருந்தான்.....



அன்றும் விட்டு விட்டு மழை பெய்யவும் கயல் கண்ணனுக்கு போன் பண்ணி மாற்று பாதையில் தான் வரவேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்லியிருந்தாள்....
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இரவு எட்டு மணி இருக்கும்...மீண்டும் மழை பெய்யவும் கண்ணன் சீக்கிரமே கடையை அடைத்திருந்தான்...... நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தவன் .... கதவு சாத்தியிருக்கவும் அப்போதுதான் தன் தாயும் தம்பியும் தன்தாய் வீட்டின் குலசாமியை கும்பிட சாவித்திரியின் பிறந்த ஊருக்கு சென்றிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.... கயலுக்கு காலில் அடிபட்டதிலிருந்து சாவித்திரியும் ஒருஒரு கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட்டு வந்து கொண்டிருந்தார்....



வெளியில் மழை பெய்யவும்.... கண்ணன் தன்னிடம் உள்ள சாவியால் கதவை திறக்க...கயல் நடு முற்றத்தில் அந்த தண்ணிர் விழும் தகரத்திற்கு நேராக நின்று கொண்டு மழையில் ஆடிக் கொண்டிருந்தாள்....



“ஏய்... என்னடி பண்ணிகிட்டு இருக்க....”.

“வந்திட்டிங்களா... இங்கன வாங்களேன் தண்ணி சூப்பரா விழுகுதுங்க...”

கண்ணனோ கடுப்புடன்” ஏய் கிறுக்கி..... இப்பதானே காலு காயம் ஆறிக்கிட்டு வருது.. மறுபடியும் தண்ணிக்குள்ள நனைச்சிக்கிட்டு நிக்குற... மரியாதையா வெளிய வா.....”



“ம்ம் நான் வரமாட்டேன் போங்க இப்பதான் சூப்பரா இருக்கு.....”



“ஏய் மரியாதையா வந்துரு... வந்தேன்னா அடி வெளுத்துருவேன் பாத்துக்க....”



கயலோ மனதிற்குள் சிரித்தபடி ஆமா இவுகதான் என்னைய அடிக்க போறாங்களாக்கும் கயலுக்கு கண்ணனின் அன்பு புரிந்ததால் அவள் கண்ணனை கண்டு கொள்ளாமல் அவள் பாட்டுக்கு தண்ணிரில் நிற்கவும்” இவளுக்கு இருக்குற கொழுப்பு மாதிரி யாருக்குமே இல்லை” என்றபடி வேட்டியை மடித்து கட்டியவன் மழையில் நனைந்தபடி சென்று கயலின் கையை பிடித்து இழுத்தான்.....



அவளோ அவன் கையை உதறியவள்.....” ஏங்க இங்க யாருமே இல்லதானே... இப்பதானே குளிக்க முடியும்...... முத்துவோ, ராமனோ இருந்தா சும்மா வேடிக்கைதானே பாக்குறேன்... ப்ளிஸ்ங்க..... ப்ளிஸ்...”.எனக்கெஞ்ச.....



“ஆமா.... இப்புடியே பாவமா மூஞ்சிய வச்சிகிட்டு அப்புடியே மயக்கு... “என்றபடி அவளை இறுக்கி அணைத்திருந்தான்.....மழைத்துளி அவள் முகமெல்லாம் பட்டு பனித்துளி போல இருந்தது.....நைட்டி உடம்போடு உடம்பாக ஒட்டி இருந்தது.... கயல் சாதாரணமாகவே நல்ல வெளுப்பு நிறம்.....இப்போது மழையில் நனைந்து அதிக வெளுப்பாக இருந்தாள்... அவளை அணைத்தவனின் கை இடுப்பில் இருக்க....அவள் முகமெங்கும் இருந்த மழைநீரை தன் உதட்டால் ஒற்றி எடுத்தான்...... அவளும் அவன் முத்தத்தில் ஆழ்ந்து இருந்தாள்.... இருவரும் இந்த உலகத்திலேயே இல்லை.....தன் கையை எடுத்து அவன் கழுத்தில் கோர்த்திருந்தாள்......



மழை சற்று விடவும் வெகுநேரம் தண்ணிரில் நின்றதால் கயலின் உடம்பு குளிரால் நடுங்கத் துவங்கியது.... அவளின் நடுக்கத்தை உணர்ந்தவன் அவளை அப்புடியே தூக்கி வந்து ரூமில் விட்டவன் போ....” போய் குளிச்சிட்டு வா........” என்று குளிக்க போக சொன்னவன் தன் சட்டையை கழட்டிக் கொண்டிருந்தான்.... கயல் குளித்து தலையில் துண்டோடு வர..... கண்ணன் குளிக்கச் சென்றான்....



குளித்து வந்தவன் மாடியில் கயலை காணாமல் கீழே வந்தவன் அவள் அடுப்படியில் நின்று தோசை ஊற்றவும்......அவள் பின்புறமாக அணைத்து அவள் கையை பிடித்து தானும் தோசை ஊற்றினான்......



“வந்திட்டிங்களா....” என்றபடி அவனுக்கு தோசையை வைத்துக் கொடுக்க கண்ணனும் அடுப்படி மேடையில் ஏறி அமர்ந்து கயலுக்கு ஊட்டியபடியே தானும் சாப்பிட்டான்... “கல்யாணம் பண்ணுன இத்தன மாசத்துல இன்னைக்குத்தானே நீயும் நானும் மட்டும் தனியா இங்க இருக்கோம்.....”.



“ஆமாங்க..... காலையில இருந்து ஒரே போரா....... இருந்துச்சு.... அத்தே...... இல்லாட்டா வீடு வீடாவே இல்லங்க....ஒரு மாதிரியாவே இருந்தச்சு.... நீங்க வரவும்தாங்க எனக்கு மனசுக்கு நல்லாயிருக்கு... ஒத்தையில இருக்குறது எவ்வளவு கஷ்டம்....... எப்புடிதான் வீட்லயெல்லாம் ஒரு ஆளா இருக்காங்களோ..... என்னால முடியலங்க.....” தன் தலையின் ஈரத்தை துடைத்து கொண்டிருக்க..... அவள் தலைமுடியை துண்டால் உதறியவன்

“ நீதாண்டி இப்புடி சொல்லுற.... நாட்டுல பாதி பேருக்கு தனியா இருக்கத்தாண்டி புடிச்சிருக்கு.....”



“நமக்கு கொஞ்சம் பால காச்சு... நா போய் கன்னுக்குட்டி .......நனஞ்சுகிட்டு இருந்துச்சு... போய் அவுத்து வேற பக்கம் கட்டிட்டு வாரேன்...”. சென்றவன் வேலையை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வர கயல் அந்த சோபாவில் அமர்ந்து டிவியை பார்த்து கொண்டிருந்தாள்....சோபாவின் மறுபக்கம் அமர்ந்தவன் தன்தலையை கயலின் மடியில் வைக்க...கயல் அவன் தலையை கோதியபடி இருந்தாள்..கயலின் விரலை பிடித்து முத்தமிட்டு கொண்டிருக்க... கண்ணனின் போன் சத்தம் மாடியிலிருந்து கேட்டது..... கண்ணன் கண்டு கொள்ளாமல் கயலோடு மூழ்கி இருக்க... மீண்டும் சத்தம் கேட்டது... “ஏங்க ஒரு வேளை அத்தையா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.... நான் வேணா போய் எடுத்திட்டு வரவா.....”



“வேணாம்... நானே மாடிக்கு போறேன்... நீ பால எடுத்துகிட்டு மாடிக்கு வா.....”



அவனிடம் பாலை கொடுத்துவிட்டு தன் பாலை குடித்தவள் கண்ணன் தன் தாயிடம் பேசிவிட்டு போனை கயலிடம் கொடுக்க......ஆரம்பித்தாள்.... ஆரம்பித்தாள்........ காலையில் எழுந்ததில் இருந்து சமைத்ததுவரை சொல்லிக் கொண்டே இருந்தாள்... கண்ணனும் போனை வைப்பாள் வைப்பாள் என்று நினைத்தவன்.... இவள் வைப்பது போல இல்லை எனவும் அவளை அணைத்தவாறு உச்சந்தலையில் இருந்து முத்தமிட ஆரம்பித்தான்....அவளுக்கு ஒரு மாதிரி இருக்கவும் அவன் வாயை தன் கையால் மூட அவன் கயலின் உள்ளங்கையிலும் முத்தமிட்டான்.... அவள் பாவம் போல முகத்தை வைத்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அவன் தன் வேலையில் மூழ்க... கயலால் போன் பேசமுடியாமல் போக....

“அத்தே இந்த போன்ல சார்ஜ் இல்லத்தே... நான் அப்புறமா பண்ணவா......”



“சரித்தா.... உடம்ப பாத்துக்க.....”



“ம்ம் சரித்தே.....”.போனை வைத்தவள்...” என்னங்க இப்புடி போன் பேசவுடாமா தடுத்தா நான் என்ன பண்ணுவேன்.... பாருங்க உங்களையிட்டி நான் நாளைக்கு என்ன குழம்பு வைக்கிறதுன்னு அத்தகிட்ட கேக்காம விட்டுட்டேன்.....”



“அதுதாண்டி நாட்டுக்கு ரொம்ப முக்கியம்... உன்னையெல்லாம் பேசவுடுறதே தப்பு “ என்றபடி அவள் மேல் படர்ந்தவன் அவள் பேசும் வாயை அடைத்திருந்தான்... அவள் மூச்சுக்கு திணறவும் அவள் உதட்டை விட்டவன் அவள் கழுத்தில் முகத்தை புதைத்தான்.....அவள் கழுத்தில் இருந்து கீழே இறங்க கை அங்குமிங்கும் அலைந்தது ........கயல் கூச்சத்தோடு அவனுக்கு முதுகுகாட்டி படுத்தாள்.... அவள் ஈரகூந்தலில் முகத்தை புதைத்தவன்.... அவள் காதில் ஏதோ சொல்லி கிசுகிசுக்க....” அம்மாடி இப்புடியெல்லாம் பேசக்கூடாது.....”



“ம்ம்ம்... அப்புறம் எப்புடிடி பொண்டாட்டிகிட்ட பேசுறது..... இப்புடித்தான் பேசனும்” என்றபடி அவளை தன்புறம் திருப்பியவன் அவளை தன் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தான்.. கயலுக்கு கூச்சம் வந்து தடுத்தாலும் கண்ணன் முத்தமிட்டு முத்தமிட்டே தன் வழிக்கு கொண்டு வந்தான்... மென்மையாக அவளை கையாண்டவன்... அவளை பூ போல தாங்கினான்.......கண்ணன் மனதால் மட்டுமில்லாமல் உடலாலும் அவளுக்கு உடையவன் என்பதை மெதுமெதுவாக உணர்த்தினான்....

கண்ணனோ... என்னடா இவ இவ்ளோ சாப்டா இருக்கா...அவனின் கை அவளுடைய மென்மையை சோதித்து கொண்டிருந்தது......இவ எனக்குரியவள் எனக்கே எனக்காக மட்டுமே பிறந்தவ.....அவளில் மூழ்க... கயலின் கை மறுப்பையும் கூச்சத்தையும் பேசிபேசியே தன் வழிக்கு கொண்டு வந்தான்....முன்பு கயலுக்கு ஐயனாராக தெரிந்தவன் இப்போது அவனே ஆதி அந்தமாக தெரிந்தான்.....இதுவரை எந்த ஆண்மகனையும் மனதில் கூட நினைக்காத கயலின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு கண்ணன் அமர்ந்தான்.....



அழகான காலை பொழுது மலர.... கண்விழித்த கண்ணன் தன் அருகில் கயல் இல்லாததை கண்டு கடுப்பானவன் அவளை தேடி கீழே இறங்கிச் செல்ல அதுவரை அடுப்படியில் இருந்தவள் கண்ணன் வரும் ஓசை கேட்டு கொல்லைபுறத்தில் சென்று நின்று கொண்டாள்.... இவன் வரும்போதே அவள் கொல்லைபுறம் சென்றதை கண்டவன் வாசல் கதவை அடைத்துவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான்....அவன் ஒன்றும் பேசாமல் அமரவும் கயல் மெதுவாக அவனை நிமிர்ந்து பார்க்க....” என்னடி.... ரொம்ப கஷ்டமா இருந்துச்சா......”



“ச்சு....”அவள் வெட்கப்பட்டுக்கொண்டே அவள் முழங்காலில் முகத்தை பதிக்க...அவள் தலையை தடவிகொடுத்தவன்....” ஏய் .... என்னாச்சு.....”



“சும்மாயிருங்க......... எனக்கு வெக்கமாயிருக்கு” என்றபடி அவன் மடியில் முகம் பதித்தாள்.....

“நல்ல வெக்கம்டி.... உன்கிட்ட கெஞ்சுரதுக்கே நான் எக்ஸ்டிராவா ரெண்டு டம்ளர் பால் குடிக்கனும் போலவே.....”என்றபடி அவளை தூக்கிக் கொண்டு மாடிக்கு செல்ல...”ஏங்க நீங்க டீ குடிக்க வேணாமா....... டிபன் வேற பண்ணனும்...”.



“எல்லாம் பண்ணலாம்..... இனிமே என்னைய கேக்காம காலையில கீழ இறங்கி வரக்கூடாது.... மச்சான நல்லா கவனிச்சிட்டுதான் வரணும் புரியுதா....”



“என்னாலயெல்லாம் முடியாது....விடுங்க.... விடுங்க....”



“மூச்.... நீ பேசவே கூடாது நான் சொல்றமட்டும்தான் கேக்கனும்.... என்னோட கோபத்தை பத்தி தெரியும்ல.......”



கலகலவென சிரித்தபடி....”. தெரியுமே ஆனா நான் அப்ப இருந்த கயல் இல்லயே.......”



அவளின் சிரிப்பை ரசித்தவன்.....” அப்ப ……..உனக்கு பயமில்ல.....”



“எதுக்கு அதான் என்னோட மச்சான் இருக்குறாரே என்னைய பாத்துக்குவாரு...... “அவன் கழுத்தில் கைபோட்டு இறுக்கியவள் அவன் முகத்தை தன்னை நோக்கி இழுத்தாள்................



இனி......................?????..



தொடரும்...................

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ்... அடுத்த அத்தியாயத்தோட வந்திட்டேன்பா.... படிச்சிட்டு உங்களோட கமெண்ட்ஸ மறக்காம சொல்லிருங்க.... போன பதிவுக்கு லைக்ஸ்.... அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி ப்ரண்ட்ஸ்......

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top