நேசம் மறவா நெஞ்சம் -26Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்- 26



வாசுவும் சுதாவும் அந்த இரவு நேரத்தில் தோப்பிற்கு போக.... அங்கு தெருவிளக்குகூட இல்லாமல்..... இருட்டு கரும்கும்மென்று இருந்தது.... சுதாவிற்கு மனதிற்குள் பயம் எழுந்தது.....” என்னங்க இது ஆள் நடமாட்டமே இல்லாம ஊருக்கு கடைசியில இருக்கு....”



“அப்புறம்... ஊருக்கு நடுவுலயா தோப்பு... இருக்கும்.... கொஞ்சநேரம் நைநைன்னு பேசாம வாயமூடிக்கிட்டு வா....”



சுதாவுக்கு கடுப்பு தாங்கமுடியவில்லை.... இவரு தேவையில்லாம பேசாம இருந்திருந்தா நல்ல ஏசி ரூம்ல படுத்து தூங்கியிருக்கலாம்.... இப்ப என்னனா பேய் இருக்குற எடத்துக்கு போறமாதிரி இருக்கு.......



தோப்புக்குள் வந்தவன் வண்டியை நிப்பாட்ட வீட்டை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.... வாழ்க்கையின் முதல் முறையாக......எதிலோ தவறிய உணர்வு தோன்றியது.....



வாசு கதவை திறந்து லைட்டை போட....ஒரு அடுப்படி... ஒரு ஹால் மட்டுமே இருந்தது..சுதாவுக்கு மயக்கம் மட்டும்தான் வரவில்லை.... பிரம்மை பிடித்தபடி அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்......... நம்ம அம்மா வீட்ல அடுப்படி கூட இதைவிட பெருசா இருக்குமே...... அந்த வீடு தோப்பில் வேலை பார்ப்பவர்களுக்காக கட்டப் பட்டது...... இப்போது யாரும் இல்லை...



“பாத்ரூம்லாம் இருக்கா.... இல்லையா....”



“அந்தா....” என்று சற்று தொலைவில் காட்டினான்....

“என்னால.... இந்த வீட்ல ஒரு நிமிசம்கூட இருக்கமுடியாது.... ஒழுங்கா வேற வீட்டை பாருங்க.....”

“என்கிட்ட அந்த அளவுக்கு வருமானம் இல்ல... இங்க இருக்கறதாயிருந்தா இரு... இல்லையா உங்க அம்மா வீட்டுக்கு போ....”



“நான் வேணா.... காலையில உங்க தம்பிக்கிட்ட பேசவா...அவரு எங்கிட்ட நல்லாதானே பேசுறாரு.....”



“ச்சீ...தம்பியாம் தம்பி... இனிமேல் அவன் எனக்கு தம்பியே இல்லை.... இனிமேல் எக்காரணம் கொண்டும் அவன்கிட்ட பேசுறத பாத்தேன்.... அப்புறம் நீ புது வாசுவ பாக்கவேண்டியது இருக்கும்.... அத எப்பவும் ஞாபகத்துல வச்சுக்க..... போ போய் வீட்டை கூட்டு... நாளைக்கு போய் உன்னோட சாமான்கள ஆளுவிட்டு எடுத்துவரச் சொல்லுவோம்... .நாளையில இருந்து தோப்புல வேலையிருக்கு நீயும் கூடமாட வேலை பாக்குறது மாதிரி இருக்கும்.....”



அந்த வீட்டை கூட்டிவிட்டு ஒரு கிழிந்த பாயை விரித்து படுத்த சுதாவுக்கு அழுகை நிற்கவே இல்லை.... அவள் தாய் வீட்டில் அவள் மட்டும் தனிஅறையில்தான் படுப்பாள்...... மற்ற மூவரும்தான் ஒன்றாக படுப்பார்கள்..... இங்கு இந்த பேன் ஏதோ பேருக்கு ஓடுது...... கொசுவேற கடிக்குது..... அவள் எழுந்து உட்கார்ந்திருக்க... வாசு தூங்கிகொண்டிருந்தான்... இனிமே என்னோட வாழ்க்கையும் இப்புடி வெறுமையாதான் போக போகுதா.....



அங்கு கண்ணன் வீட்டில் கண்ணனும் கயலும் மாடியில் இருந்து இறங்கிவர.... காந்திமதி...மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தவர்... இவர்களை பார்க்கவும் “கயலு நீயும் எங்களோட கிளம்புறியாத்தா.... அங்க நம்ம மாரியாத்தா கோவிலுக்கு காப்பு கட்டுறாங்க...... பாரி போட போறோம்....மொளக்கொட்டு (கும்மியடித்தல்... )வேற இருக்குல…..”



கண்ணனோ... கயலை பார்த்தவன் இவ நம்மள கண்டிப்பா ஊருக்கு போகவான்னு கேப்பா... நாம வேணாமுன்னு சொல்லிருவோம்....கயலு என்னைய பாரு..... பாரு என மனதிற்குள் உருப்போட.... அவள் கண்ணனை நிமிர்ந்துகூட பார்க்காமல்…………….. “ஐய்...... காப்பு கட்டப்போறாங்களா... .. சரி அப்பத்தா..... நானும் கண்டிப்பா வாரேன்..... காலேஜ் வேணா அங்கிட்டு இருந்து போயிக்கலாம்ல..... சூப்பர்...... இன்னைக்கு...மத்தியானமாவா இல்ல..... இப்பவே கிளம்ப வா...” மல்லிகாவிடம் அந்த எட்டு நாளும் என்ன டிரஸ் போடுவது என்று ஆலோசனையில் இறங்கினாள்......



“ஏத்தா...... உங்க வீட்டுக்காரர்கிட்டயும் ...மாமியாகிட்டயும் கேக்கவேணாம்....”



சாவித்திரியோ....” ஆத்தாடி சாமி காரியம் நாங்க ஏன் வேணாமுன்னு சொல்லப் போறோம்.... எத்தன நாளுத்தா....”.



“எட்டு நாளுத்தே...... எட்டாம் நாளு நல்லா சிறப்பா இருக்கும்த்தே..... நீங்க எல்லாரும் கண்டிப்பா வந்திருங்க....”



“அக்கா அதுக்கு மறுநாளு தானே உனக்கு பிறந்தநாளு வேற வருது.....”

“ஹேய்........ ஆமாடி.... “என்றபடி அவள் தங்கைகளோடு அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.....



கண்ணனோ...... நான் ஒரு மனுசன் இங்கன குத்துக்கல்லு மாதிரி நிக்குறேன்..... இவளுக்கு தாலி வேற கட்டியிருக்கேன்....நாமள ஒரு மனுசனா மதிக்குறாளா....... இவ கேக்க வந்தாகூட நம்ம அம்மா...... வரவர அம்மாவும் இவ மாதிரியே மாறிட்டாங்க.... முன்னாடியெல்லாம் எல்லா விசயத்தையும் நம்மகிட்ட கேக்காம முடிவெடுக்க மாட்டாங்க.... இப்ப என்னான்னா.......ம்ம்ம் கண்ணா இப்புடியே போன உன்னோட நிலைமை...... இவள எப்புடி ஊருக்கு போக விடாம பண்ணுறது..... என்று யோசித்தபடி இருக்க .......

கயலோ...”..நான் போய் டிரஸ்ஸ எடுத்து வைக்கிறேன்......” என்றபடி மாடிக்கு ஓடினாள்.....



பின்னாடியே போவோம் என்று எழுந்தவனை..... அந்த தாத்தாக்கள் ஒன்னு மாத்தி ஒன்னு கேட்டு பேச்சை வளர்க்க..... கண்ணனோ....தாத்தா... ப்ளிஸ் அஞ்சு நிமிசம் விடுங்களேன் என மனசுக்குள் கெஞ்சிக் கொண்டிருந்தான்......



அப்போது சாவித்திரி வந்து காப்பி கொடுக்க...... கண்ணன் மெதுவாக நழுவி மாடிக்குச் சென்றான்......



கயல் ஒரு வாரத்துக்கு தேவையான துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க... .மாடிக்கு வந்த கண்ணன்.... அந்த துணிகளை கீழே தள்ளிவிட்டவன் அவளை நெருங்கி அணைத்திருந்தான்.........



“ஏங்க துணியெல்லாம் கீழ தள்ளிவிட்டீங்க.... இது நல்லாயில்லயா...... அப்ப நீங்க சொல்லுங்க.... எத எடுத்து வைக்க.......????”



“நீ என்னதான்டி மனசுல நினைச்சிருக்க..... நீ ஊருக்கு போ நான் மாலை ஒன்ன வாங்கி போட்டுகிட்டு கோயில் கோயிலா..... போறேன்....”



“சூப்பர்ங்க....... கோயிலுக்கு மாலை போட போறிங்களா..... எந்த கோவிலுக்கு முருகனுக்கா.... இல்ல ஐயப்பனுக்கா.......”



கண்ணன் முறைத்தபடி நிற்க......



“எத்தனை நாள்னு சொல்லுங்க..... ஏன்னா ஐயப்பனுக்கு மாலை போட்டா விரதம் கடுமையா இருக்கனுமாம்........ எங்க தாமரை அக்கா சொல்லும்....”

“ம்ம்ம..... வருசம் பூராவும்....”

“என்னது வருசம் பூராவுமா..... உங்க பக்கட்டு அப்புடி ஒரு கோயில் இருக்கா... அத்தை சொல்லவேயில்லை..... இருங்க நான் போயி அத்தகிட்ட எப்புடி விரதம் இருக்கனும்னு கேட்டுட்டு வாரேன்.......”.என்றபடி திரும்பி போக பார்க்க.......



“ஆமாடி நீ ஊருக்கு போயிட்டு வா... நான் சாமியாரா போறேன்...” கோபத்துடன் போய் கட்டிலில் உட்கார....



“ஏங்க நீங்க எம்மேல கோபமாவா இருக்கிங்க....” என்று ஆச்சர்யத்துடன் கேட்க....

“ஏன் அது உனக்கு தெரியலயா....?”



“இல்ல... முன்னாடியெல்லாம் கோபப்பட்டா கண்ணெல்லாம் செவந்து பாக்கவே பயமாயிருக்கும்..... ஆனா இன்னைக்கு கோபமாயிருக்கிங்கன்னு நீங்க சொல்லித்தாங்க தெரியுது....”



கயலை பிடித்து தன்மேல் சாய்த்தவன்.....” உனக்கு என்னைய பாத்தா... காமெடிபீசா இருக்கா......பயம் விட்டுப் போச்சு” என்றபடி ஒரு முறை முறைக்க...

கயலுக்கு கண்ணில் நீர்கோர்த்தது....” இனிமே இப்புடியெல்லாம் பேசமாட்டேன்......”



கயலை கட்டிலில் சாய்த்தவன்..... அவள் மேல் படர்ந்தான்..... அவள் கன்னத்தை கடித்து... “ஏய் பயந்துட்டியா.... சும்மாதான் மிரட்டுனேன்.....”.

“போங்க கன்னமெல்லாம் எச்சி....”.

“அப்புடிங்கிற……” என்றபடி மறுகன்னத்தையும் கடித்தவன்...”.இப்ப என்ன பண்ணுவ......”

“ஐய ரெண்டு பக்கமும் எச்சி....” தன் கன்னத்தை துடைக்க...

.”நீ. இப்ப என்ன பண்ணுற கீழ போயி ஊருக்கு வரலைன்னு சொல்லிட்டு வார...... போ.....”.

“இல்ல அந்த சாமி ரொம்ப சக்தியான சாமி ப்ளிஸ்ங்க இந்த ஒருவாரம் மட்டும் போய் விரதம் இருந்துட்டு வந்திருரேனே..... ப்ளிஸ்ங்க........ப்ளிஸ்....” என்றபடி கண்களை சுருக்க....

“ம்ம்ம் இப்புடி பாவமா பாத்தே மனுசன கொல்லுடி..... நீ வேணா இங்கயே விரதமா இரு கடைசி நாள்ல நான் உன்னைய ஊருக்கு கூட்டிட்டு போறேன்...... சரியா....”



“இல்லங்க... அது சரிவராது.....நான் இங்கயிருந்தா...நீங்க கைய வச்சுகிட்டு சும்மாயிருக்க மாட்டிங்க.......”

கண்ணனின் ஒரு கை அவள் வெற்றிடையை வருடியபடி இருக்க...மற்றொரு கையோ அவள் கன்னத்தை தடவிக் கொண்டிருந்தது.....” நான் என்னடி பண்றேன்.....”

“இப்புடியெல்லாம் பண்ணா விரதம் தப்பாயிரும் அப்புறம் சாமி கண்ணை குத்தும்.. நான் ஊருக்கே போறேன்.....”

“ம்ம்ம் அப்புடிங்குற சரி..... போ...நான் கேக்குறத குடுத்திட்டு போ.....”

“என்கிட்ட என்னயிருக்கு......”

அவள் ஏதோ சொல்லிக்கொண்டேயிருக்க...”.எல்லாம் உன்கிட்டதான்டி இருக்கு உன்னைய பேசவே விடக்கூடாதுடி……..” என்றபடி அவள் இதழில் தன் இதழை புதைத்தான்........கயல் அவன் முத்தத்தில் ஆழ்ந்து அவன் முதுகில் கை கொடுத்து இறுக்க.....கதவு தட்டும் சத்தம் கேட்டது........

சுயநினைவுக்கு வந்த கயல்” யாரோ கதவை தட்டுறாங்க........”. அவனை விலக்க பார்க்க....” ஏய்... கொஞ்சம் பேசாம இருடி.....”என்றபடி கயலின் கழுத்தில் முகத்தை பதித்தான்.....

கயவு ஓங்கி தட்டப் படவும்...”.ச்சை.... அம்புட்டும் இம்சைங்க... “என்று சலித்தபடி வந்து கதவை திறந்தவன்........” முத்து .... அண்ணே... அண்ணிய கீழவரச் சொல்றாங்க.....”

“ம்ம்ம்.... “சற்று நேரத்தில் கயலும் கிளம்பிவர அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.......
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இரண்டு நாட்கள் கழித்து கண்ணனுக்கு ஒரு புது எண்ணிலிருந்து போன் வர.....

“ஹலோ..... ஹலோ...”

“ஏங்க நாந்தான்......”

“கயலு......”

“நாந்தான்ங்க….”

“என்னடா.... ஆச்சரியம்.....என்ன மேடம் என்னோட ஞாபகம்லாம் இருக்கா.... ஒரு அப்பாவி புருசனவிட்டுட்டு போனமேன்னு அக்கரையிருக்காடி.....”

“ஞாபகம் இல்லாமலா போன் பண்ணினேன்....”

“அது உண்மைதான்டி.... எம் பொண்டாட்டி கல்யாணம் பண்ணி இத்தன மாசத்துல இன்னைக்குதான் போன் பண்ணுறா...... ஆமா.... எங்க உன்னோட போன்..... ரிங் முழுசா போய் கட்டாகுது.... சைலன்டில போட்டு வச்சிருக்கியா......”

“ஆமா சைலன்ட்ல தான் போட்டேன்..... ஆனா அத ஊர்லயே போட்டுட்டு வந்துட்டேன்.. இது அப்பத்தாவோட இன்னொரு நம்பர்..... இந்த நம்பர்க்கு இனி போன் பண்ணுங்க.... அத்த சொன்னாங்க நீங்க என்னைய கூப்புட வரமாட்டிங்களா........”

“ஆமாடி... அன்னைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு ராமன அனுப்புறேன்.... நீ வந்துரு...... என்ன...”

“ம்ம்...”

“என்ன சத்தம் உள்ள போகுது......”

“நீங்களே வாங்களேன் எனக்கு உங்கள பாக்கனும் போல இருக்கு......”

“அடிப்பாவி..... இங்க இருன்னு சொன்னதுக்கு ஊருக்கு ஓடிட்டு இப்ப இப்புடி சொல்லு....பாப்போம்.... ஆனா என்னால முடியாதுன்னுதான் நினைக்கிறேன்.... இந்த போனையாவது கைலயே வச்சுக்க....புரியுதா....”.

வாசு இந்த தோப்புக்கு வந்த நாளில் இருந்து அங்கிருந்த வேலையை பார்க்க துவங்கிவிட்டான்.... இதுவரை சரிவர பராமரிக்கபடாமல் கிடந்த தோப்பை ஆள் வைத்து சுத்தம் செய்து தண்ணீர் பாய்ச்சி.....உரம் வைத்து என முழுமூச்சில் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.... அவனுக்கு தன் தம்பி பேசியதே..... ஓடிக் கொண்டே இருந்தது... மீண்டும் அவன் காலடிக்கு செல்லக்கூடாது என்ற முடிவில் இருந்தான்.....



சுதாவுக்கு விக்கவும் முடியவில்லை...விழுங்கவும் முடியவில்லை....... தான் பணத்திற்காகதான் வாசுவை கல்யாணம் செய்தது அவனுக்கு தெரியாது தன்னை விரும்பிதான் திருமணம் செய்ததாக எண்ணியிருந்தான்.... அம்மா வீட்டிற்கும் போக முடியாது.... என்ன செய்வது..... எந்த வசதியும் இல்லாமல்...... இவனோடு எப்படி குடும்பம் நடத்துவது என மனம் வெதும்பி போய் இருந்தாள்....



திருவிழாவும் வர தினமும் இரவில் ....பதினோரு மணி வரை மல்லிகாவும் கயலும் மொளைக் கொட்டுவார்கள்(.கும்மி அடித்தல்...) பத்து மணிக்கே... அருணாவுக்கு தூக்கம் வந்துவிடும்... அவள் அம்மாவோடு வீட்டுக்கு வந்து விடுவாள்.... சகோதரிகள் இருவரும் பேசியபடி வந்து படுக்க இரவு 12 மணி ஆகிவிடும்........ அந்த சந்தில் திரும்பும் போதெல்லாம் கண்ணன் வந்து மோதியதே கயலுக்கு ஞாபகம் வரும்....ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது இப்போதெல்லாம் போன் பேசிவிடுவாள்..... கண்ணன் சிறகில்லாமல் வானில் பறந்தான்.... எப்படா ஒரு வாரம் முடியும் என்றிருந்தான்..... சுதாவும் வாசுவோடு கோவிலுக்கு வருவாள்..... ஆனால் வாசு அவளை சீக்கிரமே வீட்டுக்கு கூட்டிச் சென்று விடுவான்.....



வாசு பொழுதெல்லாம் வேலை பார்ப்பதால் களைப்பினால் அவனால் ரொம்ப நேரம் இருக்கமுடியாது.... இப்போதெல்லாம் சுதாவே தன் தங்கைகளோடு வலிய சென்று பேசுவாள்.... இவர்கள் இருவருக்கும் நடந்தது எதுவும் தெரியாததால் அவளை வீட்டுக்கு வரச் சொல்லி நச்சரிப்பார்கள்.... சகுந்தலாவுக்கும் சுதா வீட்டை விட்டு அவர்கள் தோப்பில் இருப்பது தெரியும்......இப்போது சுதா அங்கு வெயிலில் வேலை பார்த்து பார்க்கவே சற்று கருத்து மெலிந்து போயிருந்தாள்.... சகுந்தலாவுக்கு மகளை பார்க்கவே பரிதாபமாக இருக்கும் வீட்டிற்கு கூப்பிட்டால் மாணிக்கம் திட்டுவாரே என்று பயந்து போயிருந்தாள்..... இப்போது சுதாவுக்கு தன் தங்கைகளோடு இருப்பது சற்று தனிமை குறைந்தது போல இருக்கும்.... வாசுவும் தன்னால் முடிந்த அளவு சுதாவை நன்கு கவனித்துக் கொண்டான்....



வினோத் தினமும் கரெக்டாக கோவிலில் ஆஜர் ஆகிவிடுவான்...... சகோதரிகள் மூவரையும் நோட்டமிட்டு கொண்டே இருந்தான்.... இதில் சுதா வாசுவோடு சென்றுவிட மல்லிகாவும் கயலும் மட்டும் தனியாக செல்வதை கண்டவன்.... எப்படியாவது இது ரெண்டையும் மடக்கனுமே.... இவர்களுக்கு வாசுவீட்டின் பிரச்சனை தெரியாததால் வினோத்தை பார்க்கும்போது லேசாக சிரிப்பார்கள்..... இன்று எட்டாம் திருவிழா...இன்று இரவோடு திருவிழா முடிந்துவிடும்.....



காலையில் இருந்து கயல் கண்ணனுக்கு போன் செய்து கொண்டிருந்தாள்... அவன் போனை எடுக்கவில்லை.... சாவித்திரிக்கு போன் செய்து பேச கண்ணன் வேலை விசயமாக சென்னை சென்றிருப்பதாக சொன்னார்.... கயலுக்கு அழுகையாக வந்தது... வந்ததில் இருந்து அவளுக்கு பாதி நேரம் கண்ணன் நினைவுதான்......



மல்லிகா...”. அக்கா உனக்கு நாளைக்கு பிறந்தநாளு தானே.... மாமா இன்னைக்கு வருவாங்கள்ல........”

“ம்பச்....... தெரியலடி... அவரு ஊருக்கு போயிருக்காராம்..... எப்ப வருவாருன்னு தெரியலையாம்.....”



“அதுக்கு ஏன் முஞ்சிய இப்புடி வச்சிருக்குற.....”

“ஒன்னுமில்லடி....... அவுக தம்பி மட்டும் வந்து என்னைய கூட்டிட்டு போவாங்களாம்.....”

“சரி... விடு......”

ராமனுக்கு போன் செய்ய....”. அண்ணி நான் கடையை மூடுனவுடன வந்திருவேன்.... எப்படிவும் வர பத்து மணியாச்சும் ஆகும்னு நினைக்கிறேன்......அண்ணி”



“ம்ம்ம் ...... அப்புடியா...சீக்கிரமே வரப்பாருங்க..... லேட்டானா....வார வழியிலதானே கோயில் நீங்க கோவிலுக்கு வந்திருங்க நாம சேந்து போயிரலாம்......”



“சரி... அண்ணி....”




 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அன்று இரவு அனைவரும் கோவிலுக்கு போனவர்கள்..... அது பெரிய கோவிலாகவெல்லாம் இருக்காது.... ஒரு சிறு திண்டுமாதிரி கட்டி ஒவ்வொரு பெரிய வீதிக்கும் ஒவ்வொன்று இருக்கும்...... அந்தந்த வீதியில் இருப்பவர்கள் அந்த மேடையில் சிறு அம்மன் சிலையை வைத்து பாரி வளர்த்து சாமி கும்பிடுவார்கள்... இரவெல்லாம் ஆண்களும் பெண்களும் கும்மியடிப்பார்கள்..... சிறு வயதில் இருந்தே.... இந்த ஐந்து சகோதரிகளும் நன்றாக.கும்மியடிப்பார்கள்.... அந்த திண்டை சுற்றி பெண்கள் ஒரு வட்டமாகவும்... அவர்களை சுற்றினாற் போல் ஆண்கள் ஒரு வட்டமாகவும் சுற்றுவார்கள்....ஏதாவது ஒரு பாட்டி வந்து மாரியம்மன் மேல் பாட்டுச் சொல்வார்கள்..... ஏதாவது கிராமத்து மெட்டில் இருக்கும் .... சினிமா பாட்டெல்லாம் பாட மாட்டார்கள்.... அந்த பாட்டுக்கு அவர்கள் கும்மி கொட்டுவது பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருக்கும்.......



நேரம் ஆக ஆக வேகமாக கொட்ட ஆரம்பிப்பார்கள்.... கையும் கைலும் மாற்றி மாற்றி தாளத்துக்கு ஏற்றவாறு ஆடவும் செய்வார்கள்..... இடையிடையே சற்று மூச்சு வாங்கும் போது பானாக்கமோ.... தண்ணீரோ... ஜீஸோ கொடுப்பார்கள் அதை குடிக்க மட்டும் ரெஸ்ட் எடுத்துக் கொள்வார்கள்....



இன்று கயல் நல்ல பெப்சி ப்லுகலர் சேலைகட்டியிருந்தாள் தலைக்கு குளித்து இருந்ததால்..... தளர பின்னி பூ வைத்திருந்தாள்.....மல்லிகா பாவாடை தாவனி அணிந்திருந்தாள்.... முதலில் ஆரம்பிக்கும் போது பிள்ளையார் பாட்டோடுதான் ஆரம்பிப்பார்கள்......பின் ஒவ்வொரு தெய்வமாக பாட ஆரம்பிக்க..... நேரமானதும் அருணாவை கூட்டிக்கொண்டு சகுந்தலா மல்லிகாவையும் கயலையும் கூப்பிட....



மல்லிகா...” அம்மா நீங்க போங்க... இன்னைக்குத் தானே கடைசி... இனிமேல் அடுத்த வருசம்தானே... ப்ளிஸ் நீங்க போங்க நம்ம தெரு அப்பத்தா யாராச்சும் வருங்க... நாங்க சேந்து வந்துருறோம்.... இன்னும் ஒரு மூனு பாட்டுத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்... நீங்க போங்கம்மா...”



“ம்ம்ம் பாத்து வாங்க.....” மேலும் ஒரு அரைமணி நேரம் கழித்து அனைவருக்கும் மூச்சு வாங்க உட்கார்ந்தவர்களுக்கு ஜீஸ் கொடுக்கப்பட மல்லிகாவுக்கும் கயலுக்கும் வினோத் ஜீஸ் கொடுக்க...... இருவரும் வாங்கி குடித்தார்கள்.....

அப்போதுதான் ராமனும் வந்து சேர்ந்தான்.... வண்டியை விட்டு இறங்கியவன் கூட்டத்தில் இவர்களை தேடியவன்....... இருவரையும் பார்த்து விட்டான்.... இவர்கள் இருவரும் மொளைக் கொட்டவும் மல்லிகாவை பார்த்தவன்.... இங்க பாருடா இந்த குலோப்ஜாமூன.... என்ன ஆட்டம் போடுறா... என்று மல்லிகாவின் ஆட்டத்தை ரசித்து கொண்டிருந்தான்....



மல்லிகாவுக்கு ஒரு மாதிரி மயக்கம் வருவதுபோல இருந்தது...... கயலை பார்க்க அவள் சற்று தள்ளி நிற்கவும் இவள் சற்று ஓய்வெடுக்க கொஞ்சம் தள்ளிச் செல்ல.... ராமன் இவ ஏன் இருட்டுக்குள்ள போறா என்றபடி அவள் பின்னால் சென்றவன்....



“ஏய் ....ஜாமூன் இங்க என்ன பண்ணுற.....”

“நீங்களா..... அக்கா அங்க இருக்கா..... எனக்கு என்னன்னு தெரியல லேசா தலைய சுத்துது....”

“ஆமா... இந்த ஆட்டம் போட்டா.... கும்மிங்குறது அமைதியா கொட்டுவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்.... நீங்க இப்புடி குதிச்சு குதிச்சு ஆடுனா.... ஏன் மயக்கம் வராது....”



“இதவிட வேகமா கூட ஆடியிருக்கேன்....” என்றபடி கீழே உட்கார......

“ஏய் என்ன கீழ உட்காந்திட்ட..... ரொம்ப மயக்கமா வருதா....” என்றவன் அவள் கீழே விழபார்க்கவும் சட்டென தாங்கி பிடித்தான்......

வினோத் மல்லிகாவின் பின் வந்தவன்..... அவள் இருட்டுக்குள் போகவும் வேகமாக வந்தவன்...ராமனை பார்க்கவும் சற்று பின் தங்கினான்.... இவனை அன்னைக்கு அவுக வீட்ல பாத்தோம்ல...... ச்சை ....நம்ம பிளான கெடுத்துட்டானே..... என்றபடி கயலை நோக்கி வந்தவன்.... அவள் எதிர் திசையில் செல்லவும் சுற்றிக் கொண்டு கயலுக்கு நேராக வந்தவன்..... கயல் சிரித்து கொண்டு வரவும் பரவால்ல வினோத் நாம போட்ட மயக்க மருந்து வேலை செய்யுது போலவே... என்று சந்தோசத்துடன் அவளை நோக்கி வேகமாக வந்தவன் கயலின் கையை பிடிக்க நீட்டியவனின் கை பின்னால் முறுக்கப் பட மறுகை கயலை அணைத்திருந்தது.....

வலியால் முகத்தை சுளித்தவன்.... திரும்பி பார்க்க கண்ணன் ருத்ர மூர்த்தியாக கயலை அணைத்தப் படி நின்றிருந்தான்.....



“இவ என்னோட பொண்டாட்டி.....”.

இந்த பய எப்போ வந்தான்...... நாம நல்லா சுத்திபாத்துட்டுதானே மயக்க மருந்தை இதுக ரெண்டுக்கும் குடுத்தோம்.... அண்ணன் ...தம்பி ரெண்டுபேரும் கரெக்டா வந்திருக்காங்க....”அது...வந்து இவுக கீழ விழுகுறமாதிரி இருந்துச்சு.... அதான் கைய புடிச்சு நிப்பாட்டலாம்னு வந்தேன்......”அவனுக்கு கைவலி உயிர் போயிற்று.....



“இந்த சமூக சேவையெல்லாம் வேற எங்கயாவது போய் வச்சிக்க.... எங்க குடும்பத்து பொண்ணுக்கிட்ட வாலாட்டுறத பாத்தேன்.... அப்புறம் நடக்குறதே வேறயா இருக்கும் ... சொந்தகாரனா இருக்குறதால கொஞ்சம் நிதானமா பேசுறேன் ....போ...”என்றபடி கையை விட....



வினோத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியிருந்தான்.... கயல் கண்ணன் மார்பில் சாய்ந்திருந்தவள்..... மயக்கத்தில் கண்ணனை நிமிர்ந்து பார்த்தவள்......



“ஐ.... ஐயனாரு வந்திட்டிங்களா..... வரமாட்டேன்னு சொன்னிங்க....” என்று உளர ஆரம்பிக்க...

“என்னது ஐயனாரா.... யாரு ஐயனாரு......”

அவன் மார்பில் சாய்ந்தபடி.... அவன் மார்பில் விரலால் தொட்டவள்....” நீங்கதான் ஐயனாரு... அது அப்போ.... ஆனா... இப்ப மச்சான்..... ஏன்னா என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கள்ள..... அப்ப மச்சான்தான்....” என்றபடி அவன் மார்பில் மீண்டும் சாய்ந்தாள்....



இவளுக்கு என்னாச்சு.... ஒருமாதிரி பேசுறா.... என்று நினைத்தவன் அவளை தன் காருக்கு தூக்கிச் சென்றவன்......அவளை பின்சீட்டில் படுக்க வைக்க...அவனை தன்னை நோக்கி இழுத்தவள்..... அவன் இரு கன்னத்திலும் முத்தமிட்டாள்....



அடிப்பாவி... இன்னைக்கு இவளுக்கு என்னாச்சு... அதிர்ச்சி மேல அதிர்ச்சியா குடுக்குறா...போன் ஒலிக்க அதை எடுத்தவன்....

“.ஏண்டா...கோவிலுக்கு போறேன்னு சொன்ன.... வரலையா....

இல்லண்ணே.. .வந்திட்டேன்.. . இங்க அண்ணியோட தங்கச்சி மயக்கமா இருக்காங்க... அதான் என்ன பண்ணுறதுன்னு தெரியாம நின்னுகிட்டு இருக்கேன்....”



இப்போதுதான் கண்ணனுக்கு யாரோ இருவருக்கும் மயக்கமருந்து கொடுத்திருப்பார்களோ என்ற எண்ணம் தோன்றியவுடன்....வினோத்தான் அவன் கண்முன் வந்தான்... இது அவனோட வேலைதான்.....” நீ எங்க நிக்குற...”

“கோயிலுக்கு பின்னாடிண்ணே...”.

“சரி நீ அங்கயே நில்லு.... நான் காருலதான் வந்தேன்.... பின்னாடி வாரேன்...”

மல்லிகாவை ஏற்றியவன்....”.இதுக ரெண்டுபேருக்கும் யாரோ மயக்க மருந்து குடுத்துருக்காங்கன்னு நினைக்கிறேன்....”

“என்னண்ணே.... சொல்றிங்க.... மயக்க மருந்தா.....”

“ஆமாடா.... அநேகமா அந்த வாசுவோட தம்பின்னு நினைக்கிறேன்...”.

“அவனா.... அவன் அன்னைக்கு அண்ணிய பாத்த பார்வையே சரியில்லண்ணே......”

“சரி.... நாளைக்கு கயலுக்கிட்ட கேட்டுட்டு அப்புறம் முடிவெடுப்போம்... நீ வண்டியில வீட்டுக்கு வா... நான் போறேன்....”

இருவரும் வீட்டிற்கு வர கண்ணன் கையில் ஏந்தியிருந்தான்....” ஏ.... ஐயனாரு என்னைய எங்கயா தூக்கிட்டு போற......”

“ஏய் வாயமூடுடி...சும்மா கத்தாம... எல்லாரும் எந்திரிக்க போறாங்க.”

..கதவை திறந்த சகுந்தலா...” என்னாச்சு மாப்புள்ள... கயல தூக்கிட்டு வாரிங்க...”

“நீங்க ஏன் இதுக ரெண்டை மட்டும் விட்டுட்டு வந்திக.....போங்க காருல மல்லிகா படுத்திருக்கு போய் கூட்டிட்டு வாங்க....”

“ஐய்யய்யோ.....மல்லிகாவுக்கு என்னாச்சு....”

“சத்தம் போடாதிங்க..... காலையில பேசிக்கலாம்...”.

மல்லிகாவை படுக்க வைத்தவர் இருவரையும் சாப்பிட அழைக்க.....கண்ணன் தனக்கு பசியில்லை என்று சொன்னதால் ராமனுக்கு மட்டும் சாப்பாடு போட்டார்....

அறையில் கயலை கட்டிலில் படுக்கவைத்தவன் தன் உடையை மாற்ற....” ஏய் என்னையா எனக்கு முன்னாடி டிரஸ மாத்துற.....”.

“ஆமாடி..... இப்புடிதான் புருசன மரியாதையா பேசனும்....நீ டிரஸ மாத்துரியா...”

“போய்யா...போ... நான் என்னோட மச்சான் முன்னாடியே மாத்த மாட்டேன்.... ஐயனாரு முன்னாடி மாத்திருவனா ...... நீ இப்ப என்னோட மச்சானா... இல்ல ஐயனாரா.....”

“ம்ம்ம் நீயே கண்டுபிடி....”

கயல் எழுந்து அவன் கழுத்தில் மாலையாக கோர்த்தவள் அவன் மீசையை முறுக்கியவள்” இப்ப ஐயனாரு...”..சாதாரணமாக வைத்தவள்

“இப்ப மச்சான்.......”.அவன் கன்னத்தில் முத்தமிட்டு....” நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கவா......”

“ம்ம்ம்…..” என்று அவள் முகத்தில் முத்தமிட்டு கொண்டே வந்தவன்......

“அது நானும் ஒரு பொண்ணுதானே...... நீங்க அன்னைக்கு எங்கிட்ட ஒரு வார்த்தைகூட கேக்காம... ஏன் தாலிய கட்டுனீங்க.... நான் பாவம் தானே.......”என்றபடி பாவமாக அவனை பார்த்தாள்.......

இனி....................????..

தொடரும்....................
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த அத்தியாயத்தோட வந்திட்டேன்....படிச்சுட்டு மறந்திறாம கமெண்ட்ஸ் போடுங்க....... போன பதிவுக்கு லைக்ஸ் .... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி ப்ரண்ட்ஸ்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top