நேசம் மறவா நெஞ்சம்-23Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-23

கண்ணன் கயலுக்கு தலை தீபாவளி கோலாகலமாக விடிய....... ஊருக்கு முதல் நாளே வரச்சொல்லி பலமுறை போன் பண்ணியிருந்தும்....கயல் இங்கு சாமிகும்பிட்டு விட்டு பின் வருவதாக..... சொல்லியிருந்தாள்..... .அதிகாலை 3 மணியிலிருந்து தன் அத்தையோடு சேர்ந்து பலகாரங்கள் செய்தவள்.....சூரியன் உதிப்பதற்குள் தலையில் எண்ணெய் வைத்து குளித்திருந்தாள்..... கண்ணனும் ராமனும் விடியற்காலையில் தான் தங்கள் கடையில் இருந்து வந்தனர்.... தீபாவளி வியாபாரம் கண்ணனுக்கு நல்ல லாபத்தை கொடுத்திருந்தது..... அதோடு சேர்த்து இந்த வருடம் வெடிக்கடையும் போட்டிருந்தான்..... விடிய விடிய வியாபாரத்தில் சகோதரர்கள் மூன்று பேரும் சேர்ந்து வேலை பார்த்ததில் இரு மடங்கு லாபம் கிடைத்தது....முத்துவை இரவு 1 மணி போல வீட்டிற்கு அனுப்பியவர்கள்..... இருவரும் விடியற்காலையில் வரும் போதே.... மட்டன்...சிக்கன்...என்று அனைத்தையும் வாங்கி வர....கயலும் சாவித்திரியும் சமைக்க துவங்கிவிட்டார்கள்.....

தான் குளித்து முடித்தவள்..... கண்ணனை ஆறு மணியிலிருந்து எழுப்பிக் கொண்டிருந்தாள்...... கண்ணன் அசைய கூட இல்லை......

“ஏங்க எந்திரிங்க..... இப்ப குளிச்சு கிளம்புனாதானே....மத்தியானமாவது ஊருக்கு போக முடியும்.....நானாச்சும் நேத்தே ஊருக்கு போயிருப்பேன்.... முத்துவையும் ராமனையும் சேத்து ஊருக்கு கூட்டிட்டு போக நினைச்சதால இங்க இருந்தேன்....பாவம் அத்தையும் ஒத்த கையாலி எம்புட்டு வேலைதான் பாப்பாங்கன்னு நினைச்சு இருந்தேன்...பாருங்க என்னைய சொல்லனும்.....”என்று இவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க...

.படக்கென்று எழுந்த கண்ணன் அவளை இழுத்து கட்டிலில் உட்கார வைத்தவன்…..தன் தலையை எடுத்து அவள் மடியில் வைத்து அவள் ஒரு கையை பிடித்து தன் தலையை கோத சொல்லி மறு கையால் தன் காதை அடைத்திருந்தான்........ தலையை கோதியவள்....

“ஏங்க காதை அடைக்கிறீங்க.....”

“அதுவா...... அப்பத்திலிருந்து ஒரு எலி என்னோட காதுக்குள்ள கீச் கீச்ன்னு கத்துது..... அதான்.....”

“என்னது .... எலியா.....” என்றபடி தன் காலை படக்கென்று மேலே தூக்கியவள்....

“ எங்க.... எலி...கட்டிலுக்கு கீழயா இருக்கு.....”

“இல்ல.... அந்த எலிமேல தான் நான் தலைவச்சு படுத்துருக்கேன்.....”

“என்னையவா ..... எலின்னு சொன்னிங்க.... உங்கள இப்ப என்ன பண்ணுறேன் பாருங்க.....” என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் ஒன்றும் இல்லாததால் அப்போதுதான் குளித்துவிட்டு தன் தலையில் இருந்து வடிந்த தண்ணிரை அவன் முகத்தில் உதறி விட்டாள்....

“ஸ்ஸ்ஸ்........ எம்மேலயா தண்ணிய தெளிச்ச இப்ப நான் உன்னைய என்ன பண்ணுறேன்னு பாரு” என்றபடி அவள் கழுத்தில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுத்து முத்தம் கொடுக்க வர.....அவன் வாயை மூடியவள்.......

“போங்க.....போங்க....தீபாவளி அதுவுமா....... குளிக்க கூட இல்லாம..... ச்சு...ச்சு...போய் முதல்ல குளிங்க..... “அவனை விட்டு ஒட நினைத்தவளை..... எட்டி பின் புறமாக அணைத்தவன்.....

“. குளிச்சதுக்கு அப்புறமா.....தீபாவளி ஸ்பெசலா...... வாங்கிக்குறேன்..... இப்ப அதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு வாங்கிட்டு போ.....”அப்புடியே அவள் ஈர கூந்தலில் முகத்தை புதைக்க...... மெதுவாக அவனிடமிருந்து நழுவியவள்.......

“ அதெல்லாம் அப்புறம்...... அத்தே உங்கள கீழ வரச்சொன்னாங்க.....” என்றபடி கீழே ஓடினாள்...... அங்கு முத்துவும் ராமனும் கொல்லைபுறத்தில் அமர்ந்து தன் தாயிடம் எண்ணெய் தேய்த்து கொண்டவர்கள் குளிக்கப் போக.......கண்ணன் துண்டு மட்டும் கட்டி கீழே வந்தான்....... அவனை பார்த்து பே... என்று விழித்தவள்...”.என்னங்க நடு வீட்டுக்குள்ள இப்புடி வாறிங்க...... யாராச்சும் வந்தா..... என்னாகும்......”

“வந்தா...வரட்டும் நான் என் வீட்டுல இப்புடித்தான் இருப்பேன்......” என்றபடி கொல்லைபுறத்திற்கு செல்ல.....

சாவித்திரி “கயலு..... ஆத்தா...கயலு.... இங்கன கொஞ்சம்வாடா....”.

“என்னத்தே........”

“இந்தா... இந்த எண்ணெய்ய உம்புருசனுக்கு தேய்ச்சு விடு..... வாத்தா.....”

“நான் தேய்ச்சு விடவா....வேணாத்தே..... எனக்கெல்லாம் தேய்க்க தெரியாது....நீங்களே தேய்ச்சு விட்டுருங்க.......”

“இல்லத்தா.... அவனுக்கு இனி நீதான் தேய்ச்சு விடனும் ...வா” என்றபடி அவள் கையில் எண்ணெய் கிண்ணத்தை கொடுக்க...... கயலுக்கு கண்ணனை பார்க்கவே கூச்சமாக இருந்தது.....

மெதுவாக அவன் அருகில் வந்தவள்.....” அத்தே உள்ள போனவுடனே நீங்களா....தேய்ச்சுக்கிறீங்களா..... எனக்கு கூச்சமாயிருக்கு.....”

“அப்புடியா..... இந்தா அம்மாவ கூப்புட்டு சொல்லுறேன்.....” என்று வாயை திறக்க போக.......” வேணா...வேணா....”.என்றபடி அவன் முன் நின்றிருந்தாள்......

பச்சப் புள்ள இவரு...நாம இவருக்கு எண்ணெய் தேச்சு விடனுமா.....கொஞ்சம்கூட கூச்சம் இல்லாம....நம்ம முன்னாடி உட்காந்திருக்குறத பாரு...... மெதுவாக அவன் தலையில் எண்ணெய் தேய்த்தவள்...... பின் கண்ணை மூடிக்கொண்டு அவன் மார்பில் கை வைக்க.....கண்ணன் உடம்பே....புல்லரித்தது.......கயலுக்கு உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.........சொல்லத் தெரியாத உணர்வு ஒன்று தோன்றியது...........கயல் கண்ணை மூடியபடி தேய்ப்பதை கண்ணன் கண்திறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.......மார்பில் தேய்த்து முடித்தவள் .......பின் கை....முதுகெல்லாம் தேய்த்து விட்டவள்......அவனை கண்திறந்து பார்க்க.... அவளுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.....”. ஏய் என்ன அப்புடி....சிரிப்பு.......”

“உங்கள பாத்தா ஒரு படத்துல வடிவேலு உடம்புல எண்ணெய தடவிட்டு ஒரு பொண்ணை கடத்த போவாருல அது மாதிரி இருக்கு.....”

“உன்னைய..... இந்தா வாரேன்....கொஞ்சமா தடவ சொன்னா.... அப்புடியே ஊத்திவச்சுட்டு ......சிரிச்சுக்கிட்டு இருக்கியா....” என்றபடி அவள் காதை திருக........

“ப்ளிஸ்....ப்ளிஸ்....நான் சும்மா சொன்னேன்....”என்றபடி உள்ளே ஓடியவள்....எல்லாருடைய புது துணிக்கும் மஞ்சள் வைத்து அதை ஒரு சுலகில் வைத்து சாமி அறையில் வைக்க.....எல்லா பலகாரங்களையும் தட்டில் எடுத்து வைக்க...... எல்லாரும் வந்து சாமி கும்பிட்டு சாவித்திரி கையால் புது துணிவாங்கி உடுத்தி வந்து.... அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினர்....... முத்து வெடியை கொளுத்திக்கொன்டிருந்தான்.....

அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க முத்து......”. எங்கண்ணி...... இவ்வளவு பலகாரம் இருக்கு....மைசூர்பாகு செய்ய போறேன் சொன்னிங்க...... அத மட்டும் காணோம்.....”

சாவித்திரி நமுட்டு சிரிப்பு சிரிக்க....”. கயலோ..அந்த கொடுமைய ஏன் கேக்குற முத்து நான் எல்லாம் கரெக்டாதான் போட்டேன்....... என்னாச்சுன்னு தெரியல..... அது கெட்டி ஆகாம....அப்புடியே கூலாவே... இருக்கு....நானும் என்னன்னமோ செஞ்சு பாத்துட்டேன்..... ம்ம்ம்..... ஒன்னும் வேலைக்கு ஆகல.....வெயில்ல கூட வச்சுப் பாத்துட்டேன்.... ரெண்டு நாளு வச்சுட்டு நேத்து வெளிய கொண்டு போறேன்...... நம்ம வீட்டுக்கு எப்பவும் ஒரு காக்கா வரும் பாரு அது என்னைய பாத்தவுடனே.....ஒரே ஓட்டமா பறந்துறுச்சு.... இன்னைக்கு காலையில இருந்து நானும் அத்தையும் மாத்தி மாத்தி கத்துறோம்.... அது நம்ம வீட்டு காம்பவுண்டலதான் இருக்கு.... ஆனா திரும்பி கூட மாட்டேங்குது....... முத்து.... ஒரு வேளை மைசூர் பாகு டேஸ்ட் பாத்திருக்குமோ...... அதுனால தான் எதுக்கு வம்புன்னு அத கொண்டுவரல..... வேணும்னா....கடையில வாங்கிக்குவோம்......சரியா....”

“வேணாம்....வேணவே....வேணாம்... எனக்கு மைசூர் பாகு ஆசையே விட்டுருச்சு அண்ணி.... ஆள விட்டுருங்க.....”னு சொல்ல எல்லோரும் சிரித்தபடி. சாப்பிட்டனர்..அனைவரும் சாப்பிட்டு ஊருக்கு கிளம்ப....கயலை மட்டும் ஆளையே காணவில்லை....

“என்னடா...நேரமாச்சு... நேரமாச்சுன்னு காலையில இருந்து குதிச்சா இப்ப இவள ஆளக் காணோம்....டேய்... நீங்க ரெண்டுபேரும் காரை எடுத்து வெளிய வைங்க நான் உங்க அண்ணிய கூட்டிட்டு வாரேன்....” என்றபடி மாடிக்கு வர... கயல் அங்கு பட்டு சேலைக்கு மடிப்பு வைக்க முடியாமல் திணறி கொண்டிருந்தாள்........

“ஏய்... என்ன பண்ணிகிட்டு இருக்க.....”

கயல் அவனை பார்த்து பரிதாபமாக விழிக்கவும்.....” என்ன இப்புடி முழிக்குற......”

“இல்லை இம்புட்டு நாளும் ஏழெட்டு பின்ன குத்தி... எப்புடியோ...சேலைய கட்டியிருந்தேன்... இப்ப கீழ் மடிப்பு வரவே மாட்டேங்குது.......”

“அவ்வளவுதானே... இதுக்கு ஏன் கஷ்டப்படுற....”என்றபடி வேட்டியை மடித்து கட்டிய கண்ணன் கீழே குனிந்து அவள் சேலையை அழகாக சரி செய்தான்.... அலை அலையான கேசம் அவள் கண்ணுக்கு பட புது வெள்ளை வேட்டி சட்டையில் கம்பிரமாக இருந்தவன்....... இவரு என்ன படக்குன்னு நம்ம சேலைக்கு இப்புடி மடிப்பெடுத்து விடுறாரு..... ஆம்பளகளெல்லாம்....இப்புடி வேலையெல்லாம் செய்யக்கூடாதுதானே.... என்று யோசித்தபடி இருக்க.....

“ம்ம்ம்....... இந்தா சரி பண்ணிட்டேன்....” என்று நிமிர்ந்தவன் அவளை கண்ணாடி பக்கம் திருப்பி காட்ட....கயல் விழியெடுக்காமல் கண்ணனையே பார்த்திருந்தாள்..... கண்ணனும் கயலையே பார்த்தான்..... அந்த கரும் அரக்கு சேலையில் நல்ல மஞ்சள் பார்டர் வைத்த அந்த பட்டு சேலை அவள் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது......

“எப்புடி என்னோட செலக்சன்...... “என்றவன் பீரோவை திறந்து அன்று வாங்கிய நகையை எடுத்தவன்...”..ம்ம்ம்...போடு.....”.

“வேணாங்க.....உள்ளதே போதும்........”.

“ஏய் போடுடி நான் வாங்குனது எப்புடி இருக்குன்னு பாக்கவேணாமா.....” என்றபடி அவளுக்கு நெக்லஸ் போட்டு விட்டவன் அவள் கழுத்தில் முத்தமிட்டு.... அவள் கையில் வளையலை மாட்ட அவள் இரு கைக்கு முத்தமிட்டவன்....ச்சே....ச்சே... இவளுக்கு லிப்ஸ்டிக் வாங்கி குடுத்திருக்கலாம்.... அப்புடியே அத போட்டுவிட்டு முத்தமாச்சும் குடுத்துருக்கலாம் நாம இப்ப குடுத்த இவகேள்வி கேட்டே நம்மள சாகடிச்சுருவாளே.... என்று நினைத்தவனை.....

“ஏங்க......மறந்தே போயிட்டேன்.... உங்கள ஒரு போட்டோ எடுத்துக்கவா......”

“எதுக்கு....”

“இல்ல என்னோட காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் உங்கள பாக்கனும்னு சொன்னாங்க....” என்றபடி தன் செல்லை எடுத்து அவனை போட்டோ எடுக்க போக.....

“ஏய்... இரு வா ரெண்டுபேரும் சேந்து எடுத்துக்குவோம்”….. என்றபடி அவளை தன் தோள் வளைவிற்குள் கொண்டு வந்தவன்..... இருவரையும் வைத்து விதவிதமாக எடுத்து கொண்டிருந்தான்.....

“ஏங்க போதும் இப்புடியே விட்டா அடுத்த தீபாவளி வந்துரும் வாங்க …..”என்றபடி அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கீழே வந்தாள்....

“அத்தே....நீங்களும் வரலாம்ல....”

“இல்லத்தா.....மாடு... கன்னுல்லாம் இருக்கு கொஞ்சம் வேலையிருக்கு....அதான் முத்துவையும் ராமனையும் வம்புபண்ணி கூட்டிக்கிட்டு போறியேத்தா.... பத்தரமா போய்ட்டு வாங்கத்தா.... கண்ணா பாத்துப்பா.....”

“ம்ம் சரிம்மா.......”
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அனைவரும் கயல் வீட்டுக்கு செல்ல வாசலில் அருண் வெடி போட்டுக் கொண்டிருக்க முத்து ஓடிச் சென்று தான் கொண்டுவந்த வெடியோடு..... வெடிபோட சென்று விட்டான்....

இங்கு இவர்களை எல்லோரும் அன்போடு வரவேற்க...... கயலும் தன் குடும்ப உறுப்பினர்களோடு அமர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்......

“எங்க மல்லிகா....சுதாக்காவ காணோம்...... வந்துட்டாங்கள்ள.....”

“வந்துட்டுட்டாங்க..... வந்துட்டாங்க...... வரும்போதே ஒரு இம்சைய கூட்டிட்டு வந்திருக்காங்க......”

“அது யாருடி.... அந்த இம்சை..... ஏண்டி நீ அவ வீட்டுகாரர சொல்றியா.....”

“அந்த இம்சைய விட பெரிய இம்சை அவரோட தம்பி..... இன்னைக்குதான் ஊருல இருந்து வந்தாராம்.... வந்தவுடனே ரெஸ்ட் எடுக்காம இவ கூப்புடான்னு உடனே கிளம்பி வந்துட்டாரு.....”

“ஏண்டி இப்புடி சொல்ற....நான் கூட முத்துவையும் ராமனையும் கூட்டிட்டு வந்திருக்கேன்....... அப்ப என்னையும் அப்புடித்தான் சொல்லுவியா.....”

“ச்சே ச்சே....யாரக் கொண்டு போய் யாரோட ஒப்பிடுற.... இவுக ரெண்டு பேரும் நம்ம குடும்பம் மாறிக்கா.....” என்றபடி ராமனை திரும்பி பார்க்க.....

அங்கு கண்ணன் தன் மாமனாரோடு பேசிக் கொண்டிருக்க அருகில் அமர்ந்து ராமன் இவளையே சைட் அடித்து கொண்டிருந்தவன்...... இவள் திரும்பி பார்க்கவும்.... என்ன என்று புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க.......அவனிடம் உதட்டை சுழித்தவள்.....மீண்டும் கயலிடம் பேச துவங்க.....

இவளுக்கு இருக்க கொழுப்ப பாரு..... என்கிட்டயா உதட்ட சுழிக்குற..... இரு தனியா மாட்டாமளா....போவ அப்ப ஒன்னைய கவனிச்சுக்கிறேன்.....

“அக்கா..... அவனோட பார்வையே சரியில்லக்கா..... என்னையும் அருணாவையும் பாத்துக்கிட்டே இருந்தாம்பாரு.... அதுக்கு அப்பத்தா அவன மண்டைல ரெண்டு கொட்டு வைக்காம...... எங்க ரெண்டு பேரு மண்டைல கொட்டி உள்ள போக சொல்லுது.... தீபாவளி அன்னைக்கு கூட எனக்கு அடி வாங்கி குடுத்தான்ல பாரு அவன என்ன பண்ணேறேன்னு..... ஆனா இவன் சிங்கப்பூர்ல இருந்தான்னு சொன்னாங்க அங்க எம்புட்டு பொம்பளக இருந்திருக்கும்..... அதுகள பாக்காமலா.......இருந்திருப்பான்......

ஆனா நம்ம சுதாக்கா பண்ணுற அளும்புதாக்கா தாங்க முடியல.....என்னமோ....புதுசா வெளிநாட்டுல இருந்து இப்பத்தான் இங்கன வந்த மாதிரி இங்கன உக்காருங்க.... அங்கன உக்காருங்கன்னு பில்டப் வேற.....தண்ணி கொண்டு வந்து அம்மா குடுக்குறாங்க..... அவரு இந்த தண்ணியெல்லாம் குடிக்க மாட்டாரு .... ஒன்லி கேன் வாட்டர் மட்டும்தான்னு உடனே கடையில போய் வாங்கிட்டு வரச் சொல்லி குடுக்குறா..... இந்த ஆளு இங்க பொறந்து வளந்தவரு தானே......இப்ப ஒரு 3....4....வருசம் போய் வெளிநாட்டுல இருந்தா.... இப்புடியெல்லாம் பேச சொல்லுமா.....நம்ம அம்மாவே இப்பதான் பயந்துகிட்டு சாப்பாடு போட போச்சு....” அப்போது தாமரை குடும்பம் உள்ளே வர.......

ஹேய்..... என்று கத்தியபடி கயலும் மல்லிகாவும் அவர்களின் பிள்ளைகளை தூக்கியிருந்தார்கள்....

“வாங்க மாமா.... வாக்கா....” என்று அழைத்தவர்கள்..... மல்லிகா தன் அம்மாவிடம் சொல்ல உள்ளே போக.... கோவிந்தனும் கண்ணனும் சிநேகமாக பேச ஆரம்பித்தார்கள்.....

அப்போது உள்ளேயிருந்து சுதா தன் கணவரோடும் கொழுந்தனோடும் வெளியே வந்தாள்.... சுதா தன் சகோதரிகளை நோக்கிச் செல்ல மற்ற இருவரும் மாணிக்கத்திடம் சென்று அமர்ந்தார்கள்.....கயலை பார்த்த சுதா ஒரு நிமிடம் திகைத்து நின்று விட்டாள்..... இவ என்ன இம்புட்டு நகை போட்டிருக்கா....தங்கமா....ஒரு வேள கவரிங்கா... இருக்குமோ...பட்டு சேலை வேற கட்டியிருக்கா.....

கயல்” வாக்கா....நல்லாயிருக்கியா.....”

“ம்ம்ம் ........ நீ...”

“நான் நல்லாயிருக்கேன்கா....”

தாமரை …..”சேலை நல்லாயிருக்கேடி.... எவ்வளவு......சூப்பரா எடுத்துருக்க உன்னோட கலருக்கு நல்லா எடுப்பா.... இருக்கு....”

கயல் விலையை சொல்லி “அவருதாக்கா எடுத்து குடுத்தாரு....”என்றபடி கண்ணனை பார்க்க...கோவிந்தனோடு பேசிக் கொண்டிருந்தாலும் கண்ணை தன் மனைவி மேல் பார்வையை வைத்திருந்தவன்........ அவள் தன்னை பார்க்கவும் இவ ஏன் நம்மள பாக்குறா.... இப்பத்தான் இவ மனச கொஞ்ச கொஞ்சமா நம்ம பக்கம் திருப்ப முயற்சி பண்ணுறோம்.... இவ அக்கா.... ஏதாவது பேசி மனச குழப்பிவிட்டுறாம இருக்கனுமே........

சுதாவுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது...நாம எடுத்தது அத விட விலைகூட.....ஸ்ஸ்ஸ் அப்பா....

“ஏன் சுதா எங்கடி உன்னோட தீபாவளி சேலை.... வரவும் வேற மாத்திட்டியா......”

“இல்ல..... இதுதான்.....”

இதுவா..... அப்புடியே.....ஜிகுஜிகுவென்று நிறைய கல் ஒட்டி.....பார்க்கவே கண்றாவியாக இருந்தது...... அதை மனதிற்குள் மறைத்தபடி.......” அப்புடியா... ரொம்ப நல்லாயிருக்கு......”

சுதா...”.ஏதுடி நெக்லஸ்....”

“அவருதாக்கா வாங்கிக் குடுத்தாரு நல்லாயிருக்கா....”.

“ஏன் வேற மாடலே கிடைக்கலையா.... உங்க வீட்டுகாரர் டேஸ்டும் உன் டேஸ்ட் மாதிரி மட்டமாதான் இருக்குடி.....”

“இங்க பாருக்கா...நீ என்னைய பத்தி மட்டும் பேசு..... அவர பத்தி பேசாத...... இந்த டிசைனுக்கு என்ன குறைச்சல்.... எங்க அத்தே.... அம்மா.. அப்பத்தா...இந்தா..அக்கா எல்லாரும் நல்லாயிருக்குன்னு தானே சொல்றாங்க.....”

ம்கும்... என்று தோளில் இடித்தபடி அவள் உள்ளே செல்ல....

தாமரை….” இவ ஏண்டி இப்புடி இருக்கா..... இவளுக்கு இவ போட்டுருக்குறத தவிர மத்தவுக எல்லாரும் போட்டுருக்குறது கேவலாமாதானிருக்கும். .....பரவால்லடி உன் வீட்டுக்காரரு உனக்கான்டி பாத்து பாத்து வாங்கிகுடுத்துருக்காரு.....”

மாணிக்கம் வாசுவின் தம்பி வினோத்தை கண்ணனுக்கும் கோவிந்தனுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்... இருவரிடமும் பேச வினோத் ஆர்வம் காட்டாததால் இவர்கள் இருவரும் அவனை கண்டு கொள்ளாமல் தங்கள் வியாபாரத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.........

வினோத்தும் வாசுவை போலவே இருந்தான்..... வெளிநாட்டில் இந்த ஐந்து வருடங்களில்.... தன் இஷ்டத்திற்கு இருந்தான்...... மது...மாது... என்று இருந்தவன்..... இன்று அதிகாலை ஊரிலிருந்து வந்தவன் சுதாவை பார்த்தவுடன் ....இவனுக்கு இம்புட்டு அழகா ஒரு பொண்டாட்டியா நம்ம காசுல ஊரை சுத்திக்கிட்டு வாரான்....வெட்டி பய..... எப்போதுமே...அண்ணன் மேல் அவனுக்கு பாசம் இருந்ததில்லை.....சுதாவை பார்க்க.. ..வழுவழுவென்று உள்ளே போட்டிருப்பது வரி வடிவமாக வெளியே தெரிவது போல ஒரு கையில்லாத நைட்டி.... முன் கழுத்து இறக்கமாக இருந்தது..... பார்க்கும் போதே....அவனுக்கு அவள் தன் அண்ணி என்ற எண்ணம் தோன்ற மறுத்தது.... அண்ணி என்பவள் தன் தாய்க்கு சமமானவள் என்ற சமுதாயத்தில் ஊறிவளர்ந்தவன் ..... சுதாவை பார்த்தவுடன்....அதை மறந்து போயிருந்தான்...எதுவும் நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது.... தன் மனைவியை தவிர அனைவரும் சகோதரிகள் என்று.... அந்த அளவுக்கு இவன் மனம் கெட்டு போயிருந்தது....... சுதாவுக்கு கொஞ்சம்கூட உறைக்கவில்லை....தான் போட்டிருக்கும் உடையே தன்னை பற்றிய தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் என்று........ அவளுக்கு இந்த கட்டு பாடற்ற வாழ்க்கைமேல் ஒரு போதை ஏற்பட்டிருந்தது....... தன் தாய் வீட்டில் இருக்கும்போது....அதிக கட்டுப்பாட்டில் வளர்ந்தவள்தான்.... இங்கு தான் சொல்வதை கேட்க ஒரு ஆள் இருந்தவுடன்.... அவள் இஷ்டத்திற்கு இருக்க ஆரம்பித்தாள்..பெண்கள் உடுத்தும் ஆடை மிகவும் கண்ணியமாக இருக்கவேண்டும் என்றில்லாமல் விலையையும் விளம்பரத்தையும் பார்த்து வாங்கியிருந்தாள்.... அது தனக்கு பொருந்துமா... என்பதை பார்க்க தவறியிருந்தாள்.....

தன் நண்பர்கள் சொன்னதை கேட்டு தன் அண்ணன் மேல் கோபமாக வந்தவன்....சுதாவை பார்த்தவுடன் சற்று பின்வாங்கினான்...... மறுநாள் வாசுவும் சுதாவும் அவள் வீட்டிற்கு கிளம்ப...தானும் வருவதாக அவனாகவே சொன்னான்.... இங்கு வந்ததிலிருந்து மல்லிகாவையும் அருணாவையும் பார்த்தவன் நாம இந்த ஊருல தானே இருந்தோம்..... எப்புடி இவுக வீட்டு பொண்ணுகள கவனிக்காம விட்டோம்.... எப்புடியாச்சும் இவுக வீட்டுல நாம ஒரு பொண்ணை கட்டியிருந்திருக்கலாம்.... இந்த பொண்ணு சின்ன வயசாவுல இருக்கு என்று மல்லிகாவை பார்த்தவன்.... கயலை பார்த்தவன் சே.... தேவையில்லாம ஊருல இருந்துட்டோம்.... நாம அனுபவிச்ச பொண்ணுங்க இவ கால் தூசிக்கு கூட வராது.... அவ அக்கா ஒரு அழகுன்னா.... இவ குடும்ப குத்துவிளக்கு மாதிரி இருக்காளே.....

ராமன்…….. வினோத் வந்ததிலிருந்து அவனையே கவனித்து கொண்டிருந்தான்..... அவன் பார்வை கயலிடம் செல்லவும் ம்ம்ம் இவனோட பார்வையே சரியில்லயே..... நம்ம அண்ணியை இப்புடி பாக்குறான்.... என்று நினைத்தவன்....” அண்ணி கொஞ்சம் தண்ணி தாரிங்களா” என்று கயலிடம் கேட்க....

“இந்தா கொண்டு வாரேன்” என்று கயல் உள்ளே செல்லவும்.... அடுத்து அவன் மல்லிகாவை பார்வையிடவும் அடப்பாவி.... என்று நினைத்தவன் வராத தலைவலி வந்த மாதிரி மல்லிகாவிடம் மாத்திரை கேட்க.....

கயல் வந்து” பாவம் நீங்க ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சு வேலைபாத்திங்கள்ள..... அதான் தலை வலிக்குது.... அம்மா எல்லாரையும் சாப்புட வரச்சொன்னாங்க.... சாப்புட்டு படுங்க....” என்றபடி அனைவரையும் சாப்பிட அழைத்துச் செல்ல...... சுதா குடும்பத்தை தவிர அனைவரும் சாப்பிட்டனர்....
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கண்ணன் உள்ளே படுக்கச் செல்ல..... கயல் மெத்தை உறையை ஒழுங்காக விரித்தவள்.....

“ஸ்ஸ்ஸ்..... அம்மா..... இப்புடி உரைக்குதே....ஏன்தான் அம்மா குழம்புல இவ்வளவு உரப்பு போட்டாங்கன்னு தெரியலயே......” என்றபடி ஒரு மாவு உருண்டையை வாயில் போட்டவள்..... “உங்களுக்கும் உரைக்குதா...... இருங்க போய் வேற எடுத்துட்டு வாரேன்” என்றபடி திரும்ப......

அவளை திரும்பவிடாமல் செய்தவன்..... அவள் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டு......சில நிமிடங்கள் கழித்து நிமிர்ந்த போது.... அவன் வாயில் பாதி மாவு உருண்டை இருந்தது..... கயல் அதிர்ச்சியில் இருந்ததை பார்த்தவன்......” என்ன பாக்குற.... எனக்கும் உரப்பு தாங்க முடியல..... நீ போய்ட்டு வர லேட்டாகும்ல..... அதுனாலதான் பாதி எடுத்துக்கிட்டேன்...... அப்பா..... ஓவர் இனிப்புடி.....” என்று அவள் உதட்டை பார்த்து சொன்னவன்...... அந்த பக்கம் திரும்பி படுத்து சிரித்துக் கொண்டிருந்தான்..... இவகிட்ட கிஸ் வாங்க எப்புடி டிசைன் டிசைனா யோசிக்க வேண்டியது இருக்கு......லேசாக திரும்பி பார்க்க ஐய்யோ.... இவள யோசிக்க விடக்கூடாதே.... என்று நினைத்தவன் அவளை இழுத்து தன் பக்கத்தில் படுக்க வைத்தவன்

“ நீதான் காலையில வெள்ளன முழிச்சிட்டீல...பேசாம கொஞ்சநேரம் படு “என்று படுக்கவைத்தான்......

ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து பட்டுச் சேலையில் படுக்கமுடியாமல் எழுந்தவள்..... அவன் முகத்திற்கு நேராக தன் கையை ஆட்டிப் பார்த்தவள்.... அவன் தூங்கிவிட்டான் என்று நினைத்து எழுந்தவள்.... ஒரு நைட்டியையும் சேலையையும் எடுத்தாள்.... இதுல எதை போடுறது என்று நினைத்தவள் சரி ஆளுங்க நிறைய பேரு இருக்காங்க.... நைட்டி வேணாம் சேலையே கட்டுவோம் என்று நினைத்தவள்..... நைட்டியை வைத்துவிட்டு சேலையை எடுத்தவள்....கண்ணனை பார்க்கவும் கண்ணன் படக்கென்று கண்ணை மூடினான்.... இவள் கண்ணன் தூங்குகிறானா என்று கை ஆட்டி பார்க்கும் போதே அவன் விழித்து விட்டான்.... எதுக்கு இவ நம்ம மூஞ்சிக்கு இப்ப டாட்டா காட்டிக்கிட்டு இருக்கா என்று நினைத்தவன்.... தூங்குவது போல படுத்திருக்கவும்..... இவள் தன் பட்டு சேலையை கழட்டிவிட்டு வெறும் பாவாடை சட்டையுடன் நின்றவளை கண்டவனுக்கு அப்படியே.... மூச்சடைத்தது......... அவள் தன் பிளவுசில் கை வைக்கவும் டேய் கண்ணா ஒழுங்கா....கண்ண மூடு.... நீ தாங்க மாட்டா..... அப்புறம் என்னாமாச்சும் நடந்தா.... இந்த புள்ள கோவிச்சுகிட்டு இங்க இருந்தாலும் இருந்துக்கும்.... என்று நினைத்தவன் லேசாக அசையவும் கயல் படக்கென்று தன் சேலையால் தன்னை மூடியவள் அந்த சேலையை எடுக்காமலே... சட்டையை மாற்றி சேலையை கட்டி இருந்தாள்...... அடப்பாவி இப்புடி லட்டு போல ஒரு சான்ஸ் கிடைச்சா... அத அனுபவிப்பியா.... இப்புடி கெடுத்துப்புட்டியே.... என்ற மனசாட்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தவன்..... கயல் தன் அருகில் வந்து படுக்கவும் சிறிது நேரத்தில் அவள் இடுப்பில் கையை போட்டான்.... கயல் அவன் கையை எடுத்து எடுத்து பார்த்து முடியாமல் போக....ப்பா....தூங்கும் போது கூட ரொம்ப அழுத்தமா இருக்காரே என்று நினைத்தவள்.... அவன் வெற்று மார்பில் தன் முகத்தை பதித்த வாறே தூங்கியிருந்தாள்.....கண்ணனுக்கு தன் மனைவியாக இருந்தாலும் அவள் சம்மதத்துடன்........ அவள் முழு மனதோடு தன்னை சேர வேண்டும் என்று விரும்பினான்..... கயலை சிறிது நேரம் பார்த்தவன் தன்னை மறந்து தூங்கியிருந்தான்........

அங்கு ராமனுக்கு மல்லிகா.... மாத்திரை கொண்டு வந்து கொடுத்தவள்.....” ரொம்ப தலைவலிக்குதா....” என்றபடி தண்ணீரை கொடுக்க......

அம்மாடி வயிறு நிறைய சாப்பாடும் போட்டு.... வராத தலைவலிக்கு மாத்திரையும் கொடுக்குறாளே..... கண்ட மாத்திரையும் போட்டா நம்ம உடம்பு என்னாகிறது.... என்று நினைத்தவன்.....

“எனக்கு வாந்தி வர மாதிரி இருக்கு அதுனால மாத்திரை வேணாம் இங்க வை வேணும்னா.... எடுத்து போட்டுக்கிறேன்......”

“ம்ம்ம் .... “என்றவள் வெளியே செல்ல...... அடிப்பாவி இப்புடி ரெண்டு வார்த்தை கூட பேசாம வெளிய போறாளே.......

சிறிது நேரத்தில் உள்ளே வந்தவள் அவன் கண்மூடி படுத்திருக்கவும்.... மெதுவாக மருந்தை எடுத்து அவன் நெற்றியில் தடவினாள்.....

திடிரென தன் நெற்றியில் ஒரு தளிர் கரம் தட்டுப் படவும் கண் விழிக்க.....” நீங்க அப்புடியே கண்ண மூடுங்க....இந்த மருந்தை தேச்சா....அஞ்சே நிமிசத்துல தலைவலி போயிறும்....” என்றபடி தேய்க்க....... மல்லிகா....ராமனின் மனதில் ஆழமாக பதிந்து போனாள்...... அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்....... சிறிது நேரம் கழித்து....

“ அந்த வினோத்கிட்ட ரொம்ப பேச்சு வச்சுக்காத..... அவன் பார்வையே...சரியில்ல.....”

மல்லிகா சட்டென்று கை எடுத்தவள்..... எல்லாரும் ஏன் அவன் பார்வை சரியில்லன்னு சொல்லுதுக..... இன்னைக்கு தீபாவளி அதுவுமா....அவனால ரெண்டு கொட்டு வேற வாங்கியிருக்கேன்...... மறுபடியும் அவன பத்தி என்ன பேச்சு…..என்று நினைத்தவள்..

“.ஏன் அவனும் உங்கள மாதிரி எங்க அக்காவோட கொழுந்தன்தானே..... அப்புறம் எப்புடி அவன்கிட்ட பேசாம இருக்க முடியும்.....”

“ஏய் நானும் அவனும் ஒன்னா.....”

“இல்ல.... உங்கள நாலஞ்சு தரம் பாத்துருக்கேன்..... அவர இன்னைக்குதான் பாக்குறேன்......”

ராமன் அவளை முறைத்தபடி இருக்க........

“நாங்களும் அடுத்த வருசம் காலேஜ் போறோம்ல...... எனக்கும் எல்லாம் தெரியும்....”.என்றபடி வெளியே செல்ல.....

இவ அவன பத்தி தெரியும்னு சொல்றாலா... இல்லைன்னு சொல்றாலா ஒன்னும் புரியலயே....ஏற்கனவே ரெண்டு மூனு முறை மாமன் இருக்குன்னு சொன்னா இப்ப இவன் வேற..... உண்மையிலேயே நமக்கு தலைவலி வந்துரும் போலவே......

அன்று மாலை அனைவரும் கோவிலுக்கு கிளம்ப காந்திமதி……” எல்லாரும் ஒன்னா போகாமா....... நாளுநாளு பேரா போங்க...... ஊரு கண்ணு பூராவும் உங்க மேல விழுந்துராம........”

கண்ணன் கயலோடு.... மல்லிகாவும் ராமனும் வர நான்கு பேரும் ஒன்றாக கோவிலுக்கு சென்று வந்தனர்..... ராமன் மல்லிகாவோடு பேச முயல அவன் அவனை கண்டுக் கொள்ளவேயில்லை......இது நமக்கு தேவையா....நாம பேசாம வாயவச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்.......ம்ம்ம்...... கயலும் மல்லிகாவும் கலகலவென்று பேசி கொண்டுவர கண்ணன் கயலை ரசித்தபடி வந்தான்.......
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கயலை பார்த்ததிலிருந்து வாசுவின் நிலைமைதான் கவலை கிடமாக இருந்தது.....சுதா அவனை வறுத்தெடுத்து கொண்டிருந்தாள்.......அவள் பொறாமையால் வெம்பி வெதும்பி போய் இருந்தாள்....... அவளுக்கு மனசே ஆறவில்லை..... வெறும் பயனு நெனைச்சா...பொண்டாட்டிக்கு....பட்டு சேலை நகை எல்லாம் வாங்கி குடுத்திருக்கானே..... அவள் சாமி கும்பிட்டதை விட கண்ணன் கயலை அர்ச்சனை செய்ததுதான் அதிகம்.........

காந்திமதி.....அனைவரும் வரவும் திருஷ்டி சுற்றி போட்டார்......

ஆண்கள் வெளியே உட்கார்ந்திருக்க முத்து விட்ட ராக்கெட் வெடி நேராக வினோத் காலுக்கு கீழ் செல்லவும்.... அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது..... சிறிது நேரம் கழித்து கொல்லைபுறத்திற்கு வந்த முத்துவை சுதா....” ஏய் உனக்கெல்லாம் அறிவு இல்லை... எருமைமாடு மாதிரி வளந்திருக்க....வெடி எங்க போடனும்னு தெரியாது.....” கயலின் மேல் உள்ள பொறாமையை எப்படி கொட்டுவது என்று தெரியாமல்.....முத்துவை வாய்க்கு வந்தபடி பேச..... அங்கு வந்த கயல்.... சுதாவிடம் ஒங்கி.” அக்கா...முதல்ல நீ பேச்ச.... நிப்பாட்டுறியா.........சின்ன பையன் ஏதோ தெரியாம பண்ணுனா..... ஏன் இப்புடி பேசுர....முத்து நீ உள்ள போ......”

“அண்ணி நான் வேணும்னே செய்யல.....”

“அது எல்லாருக்கும் தெரியும் முத்து.....நீ போ......” முத்து உள்ளே செல்ல...

“..அக்கா உனக்கு இப்ப என்ன பிரச்சனை.... எதுக்கு இப்ப தேவையில்லாம பேசுற.... இது ஒரு சாதாரண விசயம் யாருக்கும் என்ன காயமா பட்டுச்சு.... போன வருசம்கூட நம்ம அருண்விட்ட ராக்கெட் தென்னை மரத்துல பட்டு எறிஞ்சு அப்புறம் மரத்துல ஏறி....அந்த தீய அணைச்சோம்..... அதுக்கே அப்பா திட்டல..... நீ ஏன் இப்புடி குதிக்குற.....நீ தேவையில்லாம முத்துவ திட்டுறத விடு....”

“திட்டுனா....... திட்டுனா என்ன பண்ணுவ..... ஏன் புகுந்த வீட்டு பாசம் பொங்குதோ. நான் அப்புடிதான் பேசுவேன் என்ன பண்ணுவ....”

“நீ என்னைய என்ன வேணும்னாலும் பேசு ஆனா எங்க வீட்டு ஆளுங்கள பேசாத......”

“ஏண்டி நான் வேணாமுன்னு விட்டுகுடுத்த மாப்புள்ள உன்னைய வம்படியா கல்யாணம் பண்ணியிருக்கான்...........நீ கொஞ்சம்கூட வெக்கமே இல்லாம அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற.....”

“அவரு விரும்பி பண்ணுனாறோ.....இல்ல விரும்பாம பண்ணுனாறோ.... என்னையதானே கல்யாணம் பண்ணியிருக்காரு.....இதுக்கும் மேல நீ எங்க வீட்டுக்காரர பத்தியோ.... எங்க வீட்டு ஆளுங்கள பத்தியோ பேசுனா...நான் எப்பவும் போல கேட்டுட்டு போவேன்னு நினைக்காத........ நான் ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்கமாட்டேன்..... அப்புறம் அப்பாட்ட சொல்லவேண்டியிருக்கும்......பாத்துக்க.....” என்றபடி உள்ளேவர.....

வாசல்படியில் நின்றிருந்த கண்ணன்.....” ஊருக்கு போவமா........”

இவரு அக்கா பேசுனத கேட்டுருப்பாரோ.....அவுக தம்பிகள கூட்டிட்டு போக வேணாமுன்னு சொன்னாரு.... நாமதான் இப்ப முத்து திட்டு வாங்க காரணம்.... நம்மள கோவிச்சுக்குவாரோ......

“.நாளைக்கு போகலாம்னு சொன்னிங்க......”

“இல்லை கிளம்பு..... எனக்கு வேலை இருக்கு.....”.

மாணிக்கமும் சகுந்தலாவும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கண்ணன் ஊருக்கு கிளம்புவதிலேயே குறியாக இருந்தான்...... கண்ணனுக்கும் கயலுக்கும் தீபாவளி முறையை கொடுக்க...... காந்திமதி ஒன்றும் சொல்லாமல் இருந்தார்.....வந்ததிலிருந்து கயல் சந்தோசமாக இருந்ததை பார்த்து மகிழ்ந்தவர்.... இப்போதுதான் மல்லிகா வந்து சுதா பேசியதை சொல்லவும் அதனால் தான் கண்ணன் கிளம்புகிறான் என்று நினைத்தார்....... இதை இப்புடியே விடக்கூடாது..... நாம ஒன்னும் சொல்லக்கூடாதுன்னு நினைச்சா....சுதாவோட ஆட்டம் ஒரு எல்லைய மீறி போகுது....... நம்ம மகன்கிட்ட சொல்ல வேண்டியதுதான்......நாளபின்ன பெரிய பிரச்சனைய கொண்டுவந்து இவ கயல இங்க வரவிடாம கூட பண்ணிறுவா......

ராமன் காரை கிளப்ப....கண்ணனும் கயலும் பின்னால் உட்கார்ந்திருந்தனர்..... கயலுக்கு மனதிற்குள் மிகவும் பயமாக இருந்தது...... இவரு நம்ம சுதாக்கா……. முத்துவை திட்டுனதை கேட்டுட்டாரு போல..... இந்த லூசு அக்கா ஏன் இப்புடி பேசுது.... முத்துவும் நம்ம தம்பி மாதிரி தானே..... பாவம் முத்து மூஞ்சியே மாறி போச்சு..... நாளைக்கு முத்துகிட்ட நாம சாரி கேட்டுரனும்..... இவரு திட்டுனாலும் வாங்கிக்கனும்......என்று யோசித்தபடி வர.....

கண்ணனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது....... இவன் கயலிடம் சார்ஜர் பின் கேட்க வந்தவன்..... சுதா...கயல் இருவரும் பேசியதை கேட்டவன்....பேச்சு முத்துவிடமிருந்து தன்னை பற்றியும் தன் குடும்பத்தையும் மாறி போவதை கண்டவன்...... சுதாவுக்கு.... கயலின் இருந்த பொறாமையால் தான்..... இப்புடி பேசுவதை எளிதாக கண்டுகொண்டான்...... தன் தம்பியை விட்டுக்கொடுக்காமலும் தன்னையும் தன் குடும்பத்தை விட்டுக் கொடுக்காமலும் கயல் பேசியதை கேட்டவனுக்கு ..... பரவால்ல நம்ம தம்பிகளையும் நம்ம குடும்பத்தையும்.... இவ என்ன சூழ்நிலையிலும் யார் கிட்டயும் விட்டுக்குடுத்துர மாட்டா....... இவ மனசு சின்ன புள்ள மாதிரி இருந்தாலும் என்னோட குடும்பத்தை இவ தன்னோட குடும்பமா...... நினைக்க ஆரம்பிச்சுட்டா...... இங்க இருந்தா.... இவ அக்கா இன்னும் ஏதாச்சும் பேசி இவ மனச கஷ்டபட வச்சாலும் வச்சுருவா......என்று நினைத்துதான்.... ஊருக்கு கிளம்பச் சொன்னான்.....

கயல் காரில் ஏறியவுடன் தூங்கியிருக்க மெதுவாக அவளை தன் தோளில் சாய்த்தவன்........ அரைமணி நேரத்தில் வீடு வரவும்....”.நீங்க ரெண்டுபேரும் உள்ள போங்க.... நான் உங்க அண்ணிய எழுப்பிட்டு வாரேன்.......”

“ம்ம் சரிண்ணே.....”

இருவரும் உள்ளே செல்லவும் ..... ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து சிறுபிள்ளை போல் தூங்கும் அவளை எழுப்ப மனமில்லாமல் தூக்கிக் கொண்டு சென்றான்.......

சாவித்திரி....” என்னப்பா... என்னாச்சு.... தூக்கிகிட்டு வார....”

“ஒன்னுமில்லமா.... எழுப்பி எழுப்பி பாத்தேன் அவ எழுந்துக்கல... அதான்....”

“பாத்து பத்தரமா.... தூக்கிட்டு போப்பா....” என்றபடி கதவை சாத்த.....

தன் கையில் ஒரு தேவதை போல தூங்கும் அவளை....சுமந்த படி மாடியேறினான்.....

இனி.........................??

தொடரும்........................

ஹாய் ப்ரண்ட்ஸ் கண்ணன் கயலோட தலைதீபாவளி பத்தி எழுதியிருக்கேன்... .படிச்சிட்டு உங்களோட கமெண்ட்ஸ் மறக்காம போட்ருங்க.....போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி ப்ரண்ட்ஸ்...
 
Last edited:
அனைவரும் கயல் வீட்டுக்கு செல்ல வாசலில் அருண் வெடி போட்டுக் கொண்டிருக்க முத்து ஓடிச் சென்று தான் கொண்டுவந்த வெடியோடு..... வெடிபோட சென்று விட்டான்....

இங்கு இவர்களை எல்லோரும் அன்போடு வரவேற்க...... கயலும் தன் குடும்ப உறுப்பினர்களோடு அமர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்......

“எங்க மல்லிகா....சுதாக்காவ காணோம்...... வந்துட்டாங்கள்ள.....”

“வந்துட்டுட்டாங்க..... வந்துட்டாங்க...... வரும்போதே ஒரு இம்சைய கூட்டிட்டு வந்திருக்காங்க......”

“அது யாருடி.... அந்த இம்சை..... ஏண்டி நீ அவ வீட்டுகாரர சொல்றியா.....”

“அந்த இம்சைய விட பெரிய இம்சை அவரோட தம்பி..... இன்னைக்குதான் ஊருல இருந்து வந்தாராம்.... வந்தவுடனே ரெஸ்ட் எடுக்காம இவ கூப்புடான்னு உடனே கிளம்பி வந்துட்டாரு.....”

“ஏண்டி இப்புடி சொல்ற....நான் கூட முத்துவையும் ராமனையும் கூட்டிட்டு வந்திருக்கேன்....... அப்ப என்னையும் அப்புடித்தான் சொல்லுவியா.....”

“ச்சே ச்சே....யாரக் கொண்டு போய் யாரோட ஒப்பிடுற.... இவுக ரெண்டு பேரும் நம்ம குடும்பம் மாறிக்கா.....” என்றபடி ராமனை திரும்பி பார்க்க.....

அங்கு கண்ணன் தன் மாமனாரோடு பேசிக் கொண்டிருக்க அருகில் அமர்ந்து ராமன் இவளையே சைட் அடித்து கொண்டிருந்தவன்...... இவள் திரும்பி பார்க்கவும்.... என்ன என்று புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க.......அவனிடம் உதட்டை சுழித்தவள்.....மீண்டும் கயலிடம் பேச துவங்க.....

இவளுக்கு இருக்க கொழுப்ப பாரு..... என்கிட்டயா உதட்ட சுழிக்குற..... இரு தனியா மாட்டாமளா....போவ அப்ப ஒன்னைய கவனிச்சுக்கிறேன்.....

“அக்கா..... அவனோட பார்வையே சரியில்லக்கா..... என்னையும் அருணாவையும் பாத்துக்கிட்டே இருந்தாம்பாரு.... அதுக்கு அப்பத்தா அவன மண்டைல ரெண்டு கொட்டு வைக்காம...... எங்க ரெண்டு பேரு மண்டைல கொட்டி உள்ள போக சொல்லுது.... தீபாவளி அன்னைக்கு கூட எனக்கு அடி வாங்கி குடுத்தான்ல பாரு அவன என்ன பண்ணேறேன்னு..... ஆனா இவன் சிங்கப்பூர்ல இருந்தான்னு சொன்னாங்க அங்க எம்புட்டு பொம்பளக இருந்திருக்கும்..... அதுகள பாக்காமலா.......இருந்திருப்பான்......

ஆனா நம்ம சுதாக்கா பண்ணுற அளும்புதாக்கா தாங்க முடியல.....என்னமோ....புதுசா வெளிநாட்டுல இருந்து இப்பத்தான் இங்கன வந்த மாதிரி இங்கன உக்காருங்க.... அங்கன உக்காருங்கன்னு பில்டப் வேற.....தண்ணி கொண்டு வந்து அம்மா குடுக்குறாங்க..... அவரு இந்த தண்ணியெல்லாம் குடிக்க மாட்டாரு .... ஒன்லி கேன் வாட்டர் மட்டும்தான்னு உடனே கடையில போய் வாங்கிட்டு வரச் சொல்லி குடுக்குறா..... இந்த ஆளு இங்க பொறந்து வளந்தவரு தானே......இப்ப ஒரு 3....4....வருசம் போய் வெளிநாட்டுல இருந்தா.... இப்புடியெல்லாம் பேச சொல்லுமா.....நம்ம அம்மாவே இப்பதான் பயந்துகிட்டு சாப்பாடு போட போச்சு....” அப்போது தாமரை குடும்பம் உள்ளே வர.......

ஹேய்..... என்று கத்தியபடி கயலும் மல்லிகாவும் அவர்களின் பிள்ளைகளை தூக்கியிருந்தார்கள்....

“வாங்க மாமா.... வாக்கா....” என்று அழைத்தவர்கள்..... மல்லிகா தன் அம்மாவிடம் சொல்ல உள்ளே போக.... கோவிந்தனும் கண்ணனும் சிநேகமாக பேச ஆரம்பித்தார்கள்.....

அப்போது உள்ளேயிருந்து சுதா தன் கணவரோடும் கொழுந்தனோடும் வெளியே வந்தாள்.... சுதா தன் சகோதரிகளை நோக்கிச் செல்ல மற்ற இருவரும் மாணிக்கத்திடம் சென்று அமர்ந்தார்கள்.....கயலை பார்த்த சுதா ஒரு நிமிடம் திகைத்து நின்று விட்டாள்..... இவ என்ன இம்புட்டு நகை போட்டிருக்கா....தங்கமா....ஒரு வேள கவரிங்கா... இருக்குமோ...பட்டு சேலை வேற கட்டியிருக்கா.....

கயல்” வாக்கா....நல்லாயிருக்கியா.....”

“ம்ம்ம் ........ நீ...”

“நான் நல்லாயிருக்கேன்கா....”

தாமரை …..”சேலை நல்லாயிருக்கேடி.... எவ்வளவு......சூப்பரா எடுத்துருக்க உன்னோட கலருக்கு நல்லா எடுப்பா.... இருக்கு....”

கயல் விலையை சொல்லி “அவருதாக்கா எடுத்து குடுத்தாரு....”என்றபடி கண்ணனை பார்க்க...கோவிந்தனோடு பேசிக் கொண்டிருந்தாலும் கண்ணை தன் மனைவி மேல் பார்வையை வைத்திருந்தவன்........ அவள் தன்னை பார்க்கவும் இவ ஏன் நம்மள பாக்குறா.... இப்பத்தான் இவ மனச கொஞ்ச கொஞ்சமா நம்ம பக்கம் திருப்ப முயற்சி பண்ணுறோம்.... இவ அக்கா.... ஏதாவது பேசி மனச குழப்பிவிட்டுறாம இருக்கனுமே........

சுதாவுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது...நாம எடுத்தது அத விட விலைகூட.....ஸ்ஸ்ஸ் அப்பா....

“ஏன் சுதா எங்கடி உன்னோட தீபாவளி சேலை.... வரவும் வேற மாத்திட்டியா......”

“இல்ல..... இதுதான்.....”

இதுவா..... அப்புடியே.....ஜிகுஜிகுவென்று நிறைய கல் ஒட்டி.....பார்க்கவே கண்றாவியாக இருந்தது...... அதை மனதிற்குள் மறைத்தபடி.......” அப்புடியா... ரொம்ப நல்லாயிருக்கு......”

சுதா...”.ஏதுடி நெக்லஸ்....”

“அவருதாக்கா வாங்கிக் குடுத்தாரு நல்லாயிருக்கா....”.

“ஏன் வேற மாடலே கிடைக்கலையா.... உங்க வீட்டுகாரர் டேஸ்டும் உன் டேஸ்ட் மாதிரி மட்டமாதான் இருக்குடி.....”

“இங்க பாருக்கா...நீ என்னைய பத்தி மட்டும் பேசு..... அவர பத்தி பேசாத...... இந்த டிசைனுக்கு என்ன குறைச்சல்.... எங்க அத்தே.... அம்மா.. அப்பத்தா...இந்தா..அக்கா எல்லாரும் நல்லாயிருக்குன்னு தானே சொல்றாங்க.....”

ம்கும்... என்று தோளில் இடித்தபடி அவள் உள்ளே செல்ல....

தாமரை….” இவ ஏண்டி இப்புடி இருக்கா..... இவளுக்கு இவ போட்டுருக்குறத தவிர மத்தவுக எல்லாரும் போட்டுருக்குறது கேவலாமாதானிருக்கும்......பரவால்லடி உன் வீட்டுக்காரரு உனக்கான்டி பாத்து பாத்து வாங்கிகுடுத்துருக்காரு.....”

மாணிக்கம் வாசுவின் தம்பி வினோத்தை கண்ணனுக்கும் கோவிந்தனுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்... இருவரிடமும் பேச வினோத் ஆர்வம் காட்டாததால் இவர்கள் இருவரும் அவனை கண்டு கொள்ளாமல் தங்கள் வியாபாரத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.........

வினோத்தும் வாசுவை போலவே இருந்தான்..... வெளிநாட்டில் இந்த ஐந்து வருடங்களில்.... தன் இஷ்டத்திற்கு இருந்தான்...... மது...மாது... என்று இருந்தவன்..... இன்று அதிகாலை ஊரிலிருந்து வந்தவன் சுதாவை பார்த்தவுடன் ....இவனுக்கு இம்புட்டு அழகா ஒரு பொண்டாட்டியா நம்ம காசுல ஊரை சுத்திக்கிட்டு வாரான்....வெட்டி பய..... எப்போதுமே...அண்ணன் மேல் அவனுக்கு பாசம் இருந்ததில்லை.....சுதாவை பார்க்க....வழுவழுவென்று உள்ளே போட்டிருப்பது வரி வடிவமாக வெளியே தெரிவது போல ஒரு கையில்லாத நைட்டி.... முன் கழுத்து இறக்கமாக இருந்தது..... பார்க்கும் போதே....அவனுக்கு அவள் தன் அண்ணி என்ற எண்ணம் தோன்ற மறுத்தது.... அண்ணி என்பவள் தன் தாய்க்கு சமமானவள் என்ற சமுதாயத்தில் ஊறிவளர்ந்தவன் ..... சுதாவை பார்த்தவுடன்....அதை மறந்து போயிருந்தான்...எதுவும் நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது.... தன் மனைவியை தவிர அனைவரும் சகோதரிகள் என்று.... அந்த அளவுக்கு இவன் மனம் கெட்டு போயிருந்தது....... சுதாவுக்கு கொஞ்சம்கூட உறைக்கவில்லை....தான் போட்டிருக்கும் உடையே தன்னை பற்றிய தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் என்று........ அவளுக்கு இந்த கட்டு பாடற்ற வாழ்க்கைமேல் ஒரு போதை ஏற்பட்டிருந்தது....... தன் தாய் வீட்டில் இருக்கும்போது....அதிக கட்டுப்பாட்டில் வளர்ந்தவள்தான்.... இங்கு தான் சொல்வதை கேட்க ஒரு ஆள் இருந்தவுடன்.... அவள் இஷ்டத்திற்கு இருக்க ஆரம்பித்தாள்..பெண்கள் உடுத்தும் ஆடை மிகவும் கண்ணியமாக இருக்கவேண்டும் என்றில்லாமல் விலையையும் விளம்பரத்தையும் பார்த்து வாங்கியிருந்தாள்.... அது தனக்கு பொருந்துமா... என்பதை பார்க்க தவறியிருந்தாள்.....

தன் நண்பர்கள் சொன்னதை கேட்டு தன் அண்ணன் மேல் கோபமாக வந்தவன்....சுதாவை பார்த்தவுடன் சற்று பின்வாங்கினான்...... மறுநாள் வாசுவும் சுதாவும் அவள் வீட்டிற்கு கிளம்ப...தானும் வருவதாக அவனாகவே சொன்னான்.... இங்கு வந்ததிலிருந்து மல்லிகாவையும் அருணாவையும் பார்த்தவன் நாம இந்த ஊருல தானே இருந்தோம்..... எப்புடி இவுக வீட்டு பொண்ணுகள கவனிக்காம விட்டோம்.... எப்புடியாச்சும் இவுக வீட்டுல நாம ஒரு பொண்ணை கட்டியிருந்திருக்கலாம்.... இந்த பொண்ணு சின்ன வயசாவுல இருக்கு என்று மல்லிகாவை பார்த்தவன்.... கயலை பார்த்தவன் சே.... தேவையில்லாம ஊருல இருந்துட்டோம்.... நாம அனுபவிச்ச பொண்ணுங்க இவ கால் தூசிக்கு கூட வராது.... அவ அக்கா ஒரு அழகுன்னா.... இவ குடும்ப குத்துவிளக்கு மாதிரி இருக்காளே.....

ராமன்…….. வினோத் வந்ததிலிருந்து அவனையே கவனித்து கொண்டிருந்தான்..... அவன் பார்வை கயலிடம் செல்லவும் ம்ம்ம் இவனோட பார்வையே சரியில்லயே..... நம்ம அண்ணியை இப்புடி பாக்குறான்.... என்று நினைத்தவன்....” அண்ணி கொஞ்சம் தண்ணி தாரிங்களா” என்று கயலிடம் கேட்க....

“இந்தா கொண்டு வாரேன்” என்று கயல் உள்ளே செல்லவும்.... அடுத்து அவன் மல்லிகாவை பார்வையிடவும் அடப்பாவி.... என்று நினைத்தவன் வராத தலைவலி வந்த மாதிரி மல்லிகாவிடம் மாத்திரை கேட்க.....

கயல் வந்து” பாவம் நீங்க ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சு வேலைபாத்திங்கள்ள..... அதான் தலை வலிக்குது.... அம்மா எல்லாரையும் சாப்புட வரச்சொன்னாங்க.... சாப்புட்டு படுங்க....” என்றபடி அனைவரையும் சாப்பிட அழைத்துச் செல்ல...... சுதா குடும்பத்தை தவிர அனைவரும் சாப்பிட்டனர்....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top