நேசம் மறவா நெஞ்சம்-19Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்-

அத்தியாயம்-19



கயல் வீட்டுக்கு வரும் வழியெல்லாம் நான் இவருகிட்ட என்ன கேட்டேன்னு இப்புடி மூஞ்சிய வச்சிருக்காரு...........எங்க அக்கா சுதாமாதிரியே இவரு எப்ப நல்லா பேசுவாரு எப்பகோபமா பேசுராருன்னே தெரியமாட்டேங்குது..........



இவுக வீட்ல எல்லாரும் நல்லா குணமாத்தானே தெரியுறாங்க..............ஆனா இவருமட்டும் ஏன் இப்படி இருக்காரு ஒரு வேள நம்ம மாமா இப்புடி இருந்துருப்பாங்களோ........அத்தைக்கிட்ட மறக்காம கேக்கனும்....அப்புடித்தான் சொன்னாங்கன்னா மாமாட்ட சொல்லி கொஞ்ச ரெக்கமன்டேஷன் பண்ணச் சொல்லனும் ..... மாமா நீங்க மேல இருந்து பாத்துக்கிட்டுதானே இருக்கீங்க........ உங்க புள்ளய என்னமாமா………. இப்புடி வளத்துருக்கீங்க.....ஆமா அது.......என்ன பொண்ணுங்க கல்யாணம் ஆனவுடனே அவுக அம்மா வீட்ல இருக்குறதுக்கு கூட இவுகள இப்புடி கெஞ்சவேண்டியது இருக்கு...ஆனாஇவுக வந்தாமட்டும் அவுக அம்மா வீட்டுக்கு உடனே போகனும் வேலையிருக்கு………,வேலையிருக்கு……….. சொல்லிட்டு ஓடுறது..........



இந்த ரூல்ஸ்யெல்லாம் யாரு போட்டது ......எல்லா ரூல்சயும் ஒருதல பட்சமா போட்டிருக்காங்க...........கண்டிப்பா இவுகள மாதிரி ஒரு ஆம்பளதான் இந்த ரூல்ஸ் போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.........



கயலும் கண்ணனும் போசாமல் வரவும் சாவத்திரி கயல் தன் அம்மா வீட்டிலிருந்து வருவதால் மனசு கஷ்டப்படுறாளோ......என்னமாச்சும் பேசி அவமனச மாத்தனுமே.....

“ஆமா கயலு உங்க அம்மாவீட்ல பாத்ரூம் கதவு ஏன் இப்புடி ஆடிக்கிட்டே.... இருந்துச்சு.....போன தவண வரும்போது புதுக்கதவாதானே இருந்துச்சு......”



கயல் தன் கோபத்தை மறந்து பின் புறம் திரும்பி... “அது ஒன்னும் இல்லத்த.......எங்க அப்பத்தா பாத்ரூம்ல குளிக்கப்போனவுடனே இந்த அருண்பய அது தொல்லை பொருக்க முடியலைன்னு கதவு வெளிப்பக்கமா ஒரு பெரியகல்லைத் தூக்கி வச்சு கதவை திறக்கவிடாம பண்ணிட்டான்...... இந்த அப்பத்தா கதவை தட்டிதட்டி பாத்துட்டு கதவை திறக்கலைன்னு கையோட கழட்டி தூக்கிக்கிட்டே வெளிய வந்துருச்சு.......இது நேத்து ராத்திரிதான் நடந்துச்சா...... அதான் கதவை அப்பா சும்மாலேசா மாட்டிவச்சிருந்தாங்க..... இனிமேதான் ஆசாரிய கூப்புட்டு சரிசெய்யனும்னு சொன்னாங்க.......”.



இவர்கள் அனைவரும் காந்திமதி கதவை கையோடு தூக்கிவந்ததை கற்பனை செய்து பார்த்து சிரித்தவர்கள்.......



முத்துவோ.....”ஆமா அண்ணி அப்புடி என்ன அருணுக்கு அப்பத்தாமேல காண்டு...........”



“அதயேன் கேக்குற முத்து .......அருணோட ப்ரண்ட்ஸ் எல்லாம் வீட்டுக்கு வாராங்கள்ள........ அவன்கிட்ட போய் இந்த அப்பத்தா சும்மாயில்லாம...... உங்க அப்பா பேரு என்ன..... அவருக்கு எம்புட்டு சம்பளம்......சொந்தவீடா....வாடகைவீடான்னு கேள்விமேல கேள்விகேட்டுருக்கு அவனுங்களும் போனாபோதுன்னு பதில சொன்னா....... அவன்கள எத்தனதரம் பாத்தாலும் இதே கேள்விய....ஓயாம கேட்டுருக்கு அவனுகயெல்லாம் கடுப்பாகி......டேய் நாங்கயெல்லாம் உங்க வீட்டுக்கு வரனும்னா....... ஒழுங்கா இந்த கிழவிய தூக்கி கொல்லப்புறத்துல போடு இல்லயா........ உங்க அப்பத்தா போட்டாவ போட்டு நாய்கள் ஜாக்கிரதை மாதிரி காந்திமதி ஜாக்கிரதைன்னு எழுதி வாசல்லமாட்டி வச்சு இன் அவுட்னு போட்டு வை....... அவுட்டுன்னு இருந்தாமட்டும் நாங்க உள்ள வாரோம்....... இல்லயா.... அப்புடியோ ஓடிருறோம்னு சொல்லியிருக்கானுங்க........ இத அப்பத்தா கேட்டுகிட்டு இருந்து அவன்களை போட்டு அடிச்சிருச்சு போல....... அதுனால அவனுக யாரும் இப்ப அருணோட பேசுறது இல்லயாம்.........அதுனால இந்த அருண் கோபமாகி...... அப்பத்தாவ.....இப்புடி கதவ திறக்கவிடாம……… பண்ணிட்டான்.......”.



கேட்ட சாவித்திரியும் முத்துவும் ராமனும் விழுந்து விழுந்து சிரித்தனர்.......கண்ணனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி வெளிபக்கமாக பார்த்தவன்........



இவ வீட்டுல இவ ரெண்டாவது அக்காவ தவிர அம்புட்டும் இப்புடித்தான் இருக்கும் போல...... இந்த மாமாவும் அத்தையும்தான் பாவம்........ இதுக ஒவ்வொன்னும் நவக்கிரகம் மாதிரி இருக்குதுக........ என்று நினைத்தான்........



இவர்கள் அனைவரும் வீட்டிற்கு வரவும் கண்ணன் கிளம்பி கடைக்குச் சென்றுவிட்டான்....... இவள் கன்றுகுட்டியோடு விளையாடியவள்.......இரவு சாப்பாட்டிற்கு தேவையானதை செய்தவள்......முத்துவோடும் ராமனோடும் உட்கார்ந்து அரட்டை அடித்தவள்.......



முத்து……” அண்ணி......நான் உங்ககிட்டயே கணக்குபாடம் கத்துக்கவா........ அருண் சொன்னான்...... நீங்க கணக்கு சூப்பரா போடுவீங்களாமே.......”



“சரி முத்து....ஆமா...எங்க காலேஜ் இருக்குற ஊர்லதானே...... உங்க ஸ்கூலும் இருக்கு....”



“ஆமா அண்ணி.......”



“அப்பன்னா...... இங்கயிருந்து எங்க காலேஜ்க்கு பொம்பளபுள்ளங்க யாராச்சும் போறாங்களா.....”



“காலேஜ்க்கு யாரும் போறமாதிரி தெரியலண்ணி....ஆனா கேள்ஸ் ஸ்கூலுக்கு ஒருபத்து இருபது புள்ளங்க..... போவுதுங்க......”



“பத்தியா........நீ சைட் அடிக்கிற புள்ளங்கமட்டும் போறது தெரியுது........ ஆனா எனக்கு பஸ் தோதா இருக்குமா.........நீயும் பஸ்லதானே.....போவ.....



முத்து வெட்கப்பட்டுக்கொண்டே......” நான் சைக்கிள்ள போயிருவேன் அண்ணி....... உங்களுக்கு பஸ் .இருக்கு அண்ணி.....காலையில எட்டு மணிக்கு......சாயங்காலம் நாலரைக்கு திரும்பிவர தோதா இருக்கும் அண்ணி.......”.



“அப்புடியா.....ம்ம்ம்”’……. இம்புட்டுநாளும் அமுதாவோட....போனோம்........சரி எப்புடியும் பஸ்ல வார ஸ்கூல் பிள்ளைகளை ப்ரண்ட்ஸ் ஆக்கிரமாட்டோம்........

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இரவு கண்ணன் வந்து சாப்பிட்டுவிட்டு படுக்கச் செல்லவும்.....கயலும் அடுப்படிவேலைகளை முடித்துக் கொண்டிருக்க.........



சாவித்திரி......”.போதும் கயலு.....நீ போத்தா நான்பாத்துக்க மாட்டனா.......கண்ணன் போய் ரொம்ப நேரமாச்சு......நீ போ......”



“அவ்வளவுதான்த..... எல்லா வேலையும் முடிச்சுட்டேன்...... இந்த அடுப்ப மட்டும் தொடச்சிட்டா.... வேலை முடிஞ்சுரும்....நீங்க போய் படுங்கத்த.........”



சாவித்திரிக்கு.....தனக்கு ஒரு மக இருந்தா இப்புடித்தானே அனுசரனையா...... இருந்திருக்கும்..... அக்கம் பக்கத்துல புதுசா கல்யாணம் ஆனா......உடனே அந்த பையன்கள கைக்குள்ள போட்டுட்டு என்ன ஆட்டம் போடுதுக........ எனக்கு வந்த மருமக என்னன்னா......புருசன விட்டுட்டு எப்பபாத்தாலும் மாமியார்.....கொழுந்தன்களோட.....அரட்டை அடிச்சிட்டு இருக்கு..... நம்ம கண்ணன் பயலும் பொண்டாட்டிக்கு கொஞ்சம் பூவாச்சும் வாங்கி கொடுப்போம்..... இல்ல எங்கயாச்சும் வெளிய கூட்டிட்டு போவோம்னு இருக்கானா.....எப்பபாத்தாலும் கடை.....வயல்......தோப்புன்னு.... திரியுறான்.....கூறு கெட்ட பய.........(இன்னும் கொஞ்சம் நல்லா திட்டுங்க.... எனக்கு கொஞ்சம் வாய் வலிக்குது)....

“. இந்தாத்தா.....இந்த பூவ கொஞ்சம் வச்சுக்க.....”



“இப்ப எதுக்குத்த......நான் தூங்கத்தானே போறேன்,,,,,,”



“இப்பதான் வச்சுக்கனும்.....சுமங்கலிக எப்பவும் பூவ வேணாமுன்னு சொல்லக்கூடாதுத்தா.......”



இவள் மாடிக்கு படுக்கப்போக……..கண்ணன் படுக்கையில் படுத்து கயலுக்காக காத்திருந்தான்........



அறைக்குள் நுழைந்த கயல் அங்கு புதிதாக அந்த அறையின் ஒரு மூலையில் அட்டாச்சுடு பாத்ரூம் இருந்ததை பார்த்தவள்....... ஒரு பெருமூச்சுடன் அறைக்கு வெளியே வந்து அங்கிருந்த தலகாணிகளை எடுத்து தன்னைச்சுற்றி போட்டு பேசாமல் படுத்துக் கொண்டாள்....



என்னடா இவ..... இவளுக்காக நாம பத்துநாளுக்குள்ள...... அவசரமா இத கட்டிவச்சா ம்ம்ம் ஒருவார்த்தை சொல்லாம......பேசாம படுத்துட்டா.......



கயல் ஊருக்கு சென்றிருந்த போது சாவித்திரி தன் மகனிடம் வந்து..”..கண்ணா ....... எம் மருமக..... ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவளா.... இருக்குப்பா.....ராத்திரியில எழுந்து வெளியில போகரொம்ப பயப்படுதுப்பா......நான் முழிச்சிட்டு இருந்தா கூட்டிட்டு போவேன்.......சில சமயங்களுள...நான் தூங்கிட்டா இந்த பொண்ணு என்னைய எழுப்ப சங்கடப்பட்டு..... கண்ண மூடிக்கிட்டு ஓடிப் போய்ட்டு ஓடிவரும் போல...... ரெண்டுமூனு தரம் கண்ணைமூடிக்கிட்டு ஓடிவரேன்னு அந்த வாசப்படியில தடுக்கி கீழே விழுந்துருச்சுப்பா..... நான்தான் சத்தம்கேட்டு ஒடிப் போய் தூக்கிவிட்டேன்......... அதுவும் இப்ப காலுல அடிப்பட்டுருந்துச்சுள்ள........அப்ப அந்த மாதவிலக்கு நாளு வேற போல......பாவம்பா...ரொம்ப கஷ்டப்பட்டுருச்சு...... ஆனா சங்கடப்பட்டு ஒரு வார்த்தை சொல்லனும்மே எந்தங்கம்பா.......இம்புட்டு நாளும் நீங்கயெல்லாம் ஆம்பளபுள்ளங்க......அதுநாள இதுநமக்கு தெரியல..... உங்க ரூம் மாடியில பெருசாதானே இருக்கு.....அதுல ஒரு மூலையில கட்டி குடுப்பா....”.



கண்ணனோ....இவ ஏன் மனசுல உள்ளத நம்மகிட்டதான் சொல்லமாட்டுறான்னா....அம்மாட்ட நல்லாதானே பேசுறா........ அவுககிட்டயாச்சும் சொல்லியிருக்கலாம்ல......நாம பொம்பளபுள்ளங்களோடு பிறந்திருந்தாலும் நமக்கு இந்த கஷ்டம் எல்லாம் தெரிஞ்சிருக்கும் மூனுபேரும் தடித்தாண்டவராயன்களா........ வளந்தா நமக்கு எப்புடித் தெரியும்.......என்று நினைத்தவன்..........மறுநாளே அதற்கு ஏற்பாடு செய்தவன் கயல் வருவதற்குள் வேலையையும் முடித்திருந்தான்......... கயல் அதைபார்த்து ஏதாவது சொல்வாள் என்று நினைத்தவன்......அவள் உள்ளே வந்தவுடன் ஒரு ஆச்சர்ய பார்வையோடு ஒன்றும் சொல்லாமல் படுக்கவும்.......அவன் மனம் சே....வென்றானது.....



ஆமா..... இவளுக்கு ஏது இம்புட்டு தலகாணி......இந்த அம்மாவேற இவபோய் கேட்டவுடன...... பரணியில இருந்து எடுத்துக்குடுத்துட்டாங்களா........... நாம என்ன இப்ப இந்த தலகாணியவா கட்டிப்புடுச்சிக்கிட்டு தூங்குறது.......ச்சே.........ச்சே.....கண்ணா.....இவதான் சதி பண்ணுறாங்கன்னு பாத்தா....... நம்ம அம்மாவும் இதுக்கு உதவி பண்ணுறாங்களே...........



க்கும்.........என்று தொண்டையை கனைத்தவன்.....”...என்ன...பாத்ரூம் பாத்தியா.......நல்லா வசதியா இருக்கா....”.



“பாத்தேன்......ஆனா ஏன் இத இங்கன கட்டுனீங்க......”



“ஏன் உனக்கு போகவர சிரமமா இருக்குள்ள......அதுதான்..........”



“இல்ல இங்கன கட்டாம கீழேயே அந்த அடுப்படிஓரமா கட்டியிருந்தா ........அத்தைக்கும் .......மத்தவங்களுக்கும் போக ஈஸியா இருந்துருக்குமுள்ள...... நாளப்பின்ன......ராமனுக்கும் முத்துவுக்கும் கல்யாணம் ஆனா........ உதவும்ல...........”



அட ஆமால்ல நமக்கு ஏன் இந்த யோசனை முன்னமே தோனலை...........ஆனா இவ சின்னப்புள்ளன்னு நினைச்சா........பெரியமனுசிமாதிரி யோசிக்குறா......... என்று நினைத்து அவன் அருகில் கிடந்த தலகாணியை கடுப்புடன் பார்த்தவன்.......... கயல் சற்று நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லவும்........இந்த இரண்டு தலகாணியை எடுத்து தன்காலில் போட்டு நன்கு இரண்டுமிதி மிதித்தவன்......... நீ எப்புடி எம்பொண்டாட்டிக்கிட்ட வரலாம் என்றவன்.......அவள் அருகில் நெருங்கிப் படுக்க.......அவள் தூக்கக் கலக்கத்தில் அவன்புறம் திரும்பி படுத்தவள்............ தலகாணி என்று நினைத்து அவன் கழுத்தின் மேல் ஒரு கையும் அவன் கால் மேல் ஒரு காலும் போட்டுத்தூங்க.......... கண்ணன் மெதுவாக அவள்புறம் திரும்பி படுத்தான்.........அவளின் மூச்சுக்காற்று அவன்மேல் பட்டது..........அவளின் தலைமுடி லேசாக கலைந்திருக்க.......அவன் முன் நெற்றி முடியை லேசாக ஊதினான்........ அவள் நெற்றியில் முத்தமிட்டவன்........ அவளின் இரு கன்னத்திலும் முத்தமிட இவமுழிச்சிருந்தா...... முத்தம் குடுக்குறது ....பேட்டச்னு சொல்லுவா..... .அப்போது அவள்அவன் கையை எடுத்து அவள் கன்னத்தில் வைக்க....... அவளின் கையை எடுத்து ஒருஒரு விரலுக்கும் முத்தமிட அவள் தூக்க கலக்கத்தில்........லேசாக....சிரித்தாள்............ சின்னக்குழந்தைங்கதான்..........கடவுள கனவுள பாத்தா......சிரிக்கும்னு சொல்வாங்க...... இவ கனவுல யாரப் பாத்தான்னு தெரியலயே........ இரு.....கூடிய சீக்கிரமே......நீ என்னையவே நினைக்குறமாதிரி செய்றேன்........ அப்புறம் நீ முழிச்சிருக்கும் போது.......போதும் போதும் சொல்லுற அளவுக்கு முத்தம் குடுக்குறேன்........ ஆனா இவ குட்டி பேபி மாதிரியில இருக்கா........ என்று நினைத்தவனுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது........

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடுத்து வந்த நாட்களில்....... கயலுக்கு கல்லூரியும் திறக்க......கண்ணனும் கயலும் காலையில் சந்திக்க முடியாமலே....... போயிற்று...... அன்று....கண்ணனுக்கு கொஞ்சம் பணம் தேவைபட்டதால் அதை வீட்டிற்கு எடுக்கச் சென்றவன்.......கயல் முத்தவிடம்....... “ முத்து உன்னைய ....எம்புட்டு நேரமா கூப்புடுறேன்....... ப்ளிஸ் துணைக்கு மட்டும் வா....முத்து.......”



“இந்தா ஒரே ஒரு கணக்கு தான் அண்ணி........ சிட்டைய குடுங்க நான் போய் வாங்கிட்டு வாரேன் சொன்னாலும் கேக்க மாட்டேங்குறீங்க........”



“இல்ல முத்து நீ வந்து கடைய மட்டும் காமி......நான் வாங்கிக்குறேன்..........ஆமா ஒரு கணக்கையா இம்புட்டு நேரமா போடுறே...........”



“அது என்னண்ணி........ அனுமார் வாலு மாதிரி நீண்டகிட்டே போகுது....... இந்தா முடிச்சிட்டேன்....சரி வாங்க.........”.



அப்போது ......உள்ளே வந்த கண்ணன்....”. எங்க ரெண்டுபேரும் வெளியகிளம்பிட்டீங்க.......அம்மா...... எங்க........”



“அது வந்தண்ணே......அம்மா...இந்த செல்வி அக்காவுக்கு...... பேரன் பிறந்திருக்கானாம்...... அத பாக்க போயிட்டாங்க..... அண்ணிக்கு என்னமோ வாங்கனும்மாம்..... சிட்டைய குடுங்க நான் வாங்கிட்டு வாரேன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாங்க........”



அப்புடியென்ன வாங்கப் போறா........” சரி நீ உள்ள போ...... நான் உங்க அண்ணிய கூட்டிட்டு போறேன்....,.....”



“சரிண்ணே........முத்து உள்ளே போகவும்......... அந்த சிட்டய கொண்டா......”.



“வேணாம்....வேணாம்........நான் கடைகாரர்கிட்டயே குடுக்குறேன்......”

“குடு நானும் கடைதானே வச்சுருக்கேன்....... “என்று வாங்கிப் பார்த்தவன்....... அதில் பெண்களுக்கு மாத விலக்கின் போது தேவைப்படும் அந்த பேடின் பெயர் இருக்கவும்...... கயலை நிமிர்ந்து பார்த்தவன் அவள் முகம் சோர்ந்து போய் இருக்கவும்........

“. சரி நீ உள்ள போ....நான் போய் வாங்கிட்டு வாரேன்......”



“நீங்களா....... நீங்க எப்புடி........வேணாம் குடுங்க........”



“போ..... நீ ரொம்ப சோந்து போய் இருக்க...... நீ கொஞ்சநேரம் படு நான் போய் வாங்கிட்டு வாரேன்....”

“ஐய்யோ.......வேணாம்ங்க.....நீங்க ஆம்பள.......அதுனால தானே......முத்துக்கிட்டயே நான் வாங்க சொல்லல.........”



“ஏய்...நான் உன்னோட புருஷன்டி........ நான் வாங்கிக்குடுக்கலாம்.......” என்றவன் வேகமாக வண்டியை எடுத்துச் சென்றவனுக்கு....நாமக்கூட மளிகை கடைதானே வச்சிருக்கோம்....... அதுல பொம்பளபுள்ளங்களுக்குன்னு எம்புட்டு மேக்கப் பொருள் விக்கிறோம்....... ஆனா நம்ம வீட்லயே ஒரு பொண்ணு இருக்கு அதுக்கும் இந்த மாதிரி பொருள் எல்லாம் தேவைப்படும்னு ஏன் நமக்கு தோனவே இல்லை......ரூம்ல எந்த ஒரு மேக்கப் பொருளையும் காணோம்......... பாவம் இவ இத வாங்க எம்புட்டு நேரமா அவஸ்த்தை படுறான்னு தெரியலயே.....பாவம்புள்ள சோந்து போச்சு.. ஆனா இவ எப்புடி வெறும் பவுடர் மட்டும் போட்டு இம்புட்டு அழகாயிருக்கா.....இவ மாதிரி ரெண்டு மூனு பேரு இருந்தா நாம கடையை எப்புடி நடத்துறது........ நாமக்கூட இவ போடுற பவுடரதான் போடுறோம்,....... ஆனாகிட்டவந்தா கும்முன்னு ஒருவாசம் வருதே......



ஆனால் கயலோ....... கண்ணனை எண்ணி ஆச்சர்யத்தில் இருந்தாள்.....இவள் வீட்டில் இந்த மாதிரி தேவைக்கெல்லாம் அப்பாவிடமோ...தம்பியிடமோ....உதவி கேட்டக்கூடாது என்பது எழுதபடாத சட்டமாகவே இருந்தது.......கண்ணன் இன்று கடைக்கு செல்லவும்......... உன் புருசன்தான் என்று சொன்ன வார்த்தையும்...... கயலுக்கு அவன் மேல் தனி அன்பே தோன்றியது.........



இரவு அனைவரும் படுக்க கண்ணன் கயலிடம்” ஒரு நாலு அஞ்சு நாளு போனவுடன நம்ம கடைக்கு வந்து உனக்கு தேவையான பொருள எடுத்துக்கோ.......”



“நமக்கு என்ன பொருள் தேவைப்படும்......... ஓரு வேள.......... எல்லாம் சுத்தமாதானே இருக்கும்”



“ஆமா...... எல்லாத்தையும் பாக்கெட்லயோ...... இல்ல டப்பாவுலயோ போட்டுத்தானே இருக்கும்......”.



“இல்ல யெல்லாமே......சுத்தமான ஆயில்தானே.......”.



ஒருவேள தலைக்கு தேய்க்க தேங்காயெண்ணெய கேக்குறாளோ........



“ஆமா எல்லாம் சுத்தமான செக்கு எண்ணெய்.........”

“நல்லவேளை..... அப்புறம் எனக்கு வாந்தி ஏதும் வந்துராம.......”

“தலைக்கு தேங்கா எண்ணெய் தேச்சா........ எதுக்கு வாந்தி வருது..........”



“என்னது ......... தேங்காயெண்ணெய்யா......... நீங்க என்ன வாங்கித்தாரேன்னு சொன்னிங்க......”



“ஆமா..... நீ என்ன கேட்ட....... அத முதல்ல சொல்லு.......”



“நான் கேட்டது ......ஸ்நாக்ஸ்........”



அடிப்பாவி.......... “ம்ம்ம் நான் சொன்னது....... உனக்கு தேவையான சோப்பு....பவுடர்.....மத்த பொருளெல்லாம்..........”

இவள் ஙே......என்று விழிக்கவும்........

“சரி...சரி....ரொம்ப முழிக்காத....... உன்னைய வெளியில கூட்டிட்டு போகும்போது.....நீ கேக்குறது எல்லாம் வாங்கித் தாரேன்.......”
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மறுநாள் காலை.........லேசாக மழை தூறவும்...... கண்ணன் வயலுக்குச் செல்லாமல்....வீட்டிலேயே இருந்தான்.........



காலை எட்டுமணி போல்....... கயல் சாப்பிட்டுவிட்டு பஸ்க்கு நேரமாகிவிட்டதால்......தன் பேகை எடுக்க மாடிக்கு வந்தவள்....... கண்ணன் அப்போதுதான் குளித்துவிட்டு.......துண்டைமட்டும் கட்டிக்கொண்டு தலைதுவட்டிக் கொண்டிருந்தான்…….



இவள் படக்கென்று கதவை திறந்து உள்ளே வந்தவள்........கண்ணனை பார்த்தவுடன்......” ஐயோ..... அம்மா....” என்று கத்தினாள்......

இவள் கத்துவதை கண்டவன்.........வேகமாக போய் கதவை சாத்தியவன்..... “ஏன் இப்புடி கத்துற.... கீழே அம்மா தம்பிங்கயெல்லாம் இருக்காங்கள்ள....”

கண்ணை இரு கையால் மூடியவள் “ நீங்க ஏன் இப்புடி இருக்கீங்க......”

“குளிச்சவுடனே இப்புடி இல்லாம.....வேற எப்புடி இருப்பேன்......”

“சரி.... என்னமோ பண்ணுங்க.....என்னோட காலேஜ் பேக்கை மட்டும் எடுத்துக்கிறேனே...... அப்புறம் உங்ககிட்ட ஒன்ன சொல்லனுமே......”

“சொல்லு....” என்ற படி கட்டிலில் உட்கார்ந்தவன்..... என்னடா நம்ம பொண்டாட்டி நம்மகிட்ட என்னமோ..... பேசனும்குறா.....

“நீங்க டிரஸ் போட்டுடீங்களா......”



“நீ....... என்னோட பொண்டாட்டி தானே........”



“ஆமா.......”

“அப்புடின்னா..... என்னைய இப்புடி பாத்தா ஒன்னும் தப்பில்ல......”

“ஆனா ..... எனக்கு கூச்சமாயிருக்கே....... நீங்க என்னைய இப்புடி அரைகுறை டிரஸ்ல பாத்தா கூச்சமா இருக்காது.......”



ம்ம்ம்....நல்ல சான்ஸ்..... எனக்கு எங்க அந்த மாதிரியெல்லாம்.....பாக்க குடுத்து வைக்குது....என்று முனுமுனுத்தவன்...........

“என்ன சொன்னீங்க........”

“இல்ல இல்ல.....வேணும்னா.... ஒரு கண்ண மட்டும் மூடிக்க....சரியா....”

“சரி என்று ஒரு கண்ணைமட்டும் திறந்தவள்...... போங்க....போங்க.... இப்பவும் தெரியிரிங்க......”.

ஹாஹாஹா...... என்று வாய்விட்டு சிரித்தவன்.....”. ஏய் எத்தன படத்துல........ ஹீரோல்லாம்... இப்புடி வரத பாக்கல.......”



“ஆமால்ல..... ஆனா....... அப்பல்லாம் எனக்கு கூச்சமாயில்லயே......உங்கள பாத்தா....போனவாரம் ஒரு படத்துல விஜய் இப்புடித்தான் சட்டையில்லாம வருவாருல்ல..... அவர பாத்த மாதிரி இருக்கு...ஆனா அமுதா சொல்லுரா.....நீங்க கடைகுட்டிசிங்கம் கார்த்தி மாதிரி இருக்கீங்களாம்....”



அப்ப இவ என்னைய ரசிக்கிறாளா..... முகத்தை மாற்றி வைத்து...... “அப்ப நீயும் அமுதாவும் என்னைய பத்தி தேவையில்லாம பேசியிருக்கீங்க.......அப்புடித்தானே.........”

“ஐயோ.......ப்ராமிசா.....அப்புடியெல்லாம் பேசல......” என்று முகத்தை அழுகை வருவதுபோல் வைத்திருக்க.......

“சரி விடு.......... ஆனா உனக்கு ஒரு தண்டனை உண்டு........”



“தண்டனையா............. இன்னைக்கும் பெல்டால அடிக்கப்போறிங்களா............”



“ச்சி.....ச்சி..... இது வேற.......இங்க வா....”

எனக்கு பஸ் போயிருமே......நேரமாச்சு.........

“பரவால்ல.....நான் இன்னைக்கு உன்னைய..... வண்டியில கொண்டுபோய் விடுறேன்..........நீ முதல்ல இங்க வா......”



“என்ன......”

“இன்னும் ....கிட்டவா......அன்னைக்கு உங்க வீட்டுல புருசன்தான் முத்தம் குடுக்கனும்..... உங்க அக்காவ மறந்தா....... என்னைய புருசனா ஏத்துக்கிருவன்னு சொன்னீல......”

“ஆமா சொன்னேன்.....ஆனா...... அதுக்குதான் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ டயம் குடுத்தனே”

கிழிச்ச...... “அந்த டயம் இருக்குறபடி இருக்கட்டும்........ இன்னைக்கு நீமட்டும் தான் தெரியிற .........என்று அவள் அருகில் வந்தவன்...... அவள் இரு கன்னத்திலும் முத்தம் கொடுக்க......

அவள் அவன் வெற்று மார்பில் கைவைத்து பின்னால் தள்ள.......

குளிர்ச்சியான அவன் உடம்பில் அவளின் சூடான கைபடவும்...... அவளுக்கு என்னவோ போல் இருந்த்து........



“போங்க.....போங்க...... இப்புடியெல்லாம் செய்யக்கூடாது.......”



“செய்யக்கூடாது........... அது மத்தவங்க.......நான்மட்டும் குடுக்கலாம்....... ஏன்னா நான் உன்னோட புருசன்......”



சாவித்திரியின் குரல் கீழே கேட்கவும்......”. சரி நீ கீழே போ........ நான் இன்னும் அஞ்சு நிமிசத்துல வாரேன்........”

கண்ணனும் கயலும் வண்டியில் கல்லூரிக்கு செல்ல......” நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்.......”

“நீ எப்ப வேணாலும் என்ன வேணும்னாலும் கேக்கலாம்...... அதுக்கு ஒவ்வொரு தரமும் பர்மிசன் வாங்கனும்னு அவசியம் இல்ல சரியா..........”



“ம்ம்ம்...... முத்து என்கிட்ட கணக்கு பாடம் கத்துக்குறான்ல........ அதப்பாத்துட்டு...... அவன் ப்ரண்ட்ஸ் எங்கிட்ட வந்து பாடம் கத்துக்குறாங்களாம்....... கத்துக்குடுக்கவா.........”



“ம்ம்ம எத்தனை பேரு.....” அவள் ஒரு கையை அவன் முன் காட்டி அஞ்சுவிரலையும் மூடித்திறக்க....

கண்ணனோ...... அஞ்சு பேருதான் போல...... என்று நினைத்தவன்.......” சரி கத்துக்குடு......ரொம்ப கஷ்டப்படாத...... வீட்டுலயும் வேலைபாக்குற....அப்புறம் காலேஜ்க்கும் போய்ட்டு வந்து... உன்னால முடியுமா.......”

“என்னால முடியும்ங்க.......”.

“சரி அப்ப உன்னிஷ்டம்........”



ஒரு வாரம் கழித்து கண்ணன் வீட்டுக்கு போய் கயல கூட்டிட்டு வந்து...... அவளுக்கு தேவையானத ...எடுத்துக்கச் சொல்வோம்..... என்று நினைத்தவன்....... அவளுக்கு போன் செய்ய ரிங் முழுவதும் போய் கட்டானது...... சரி வீட்டுக்கே போயிருவோம் என்று வீட்டுக்கு வர....... வீட்டு வாசலில் நிறைய செருப்புகள்....... நம்ம வீட்டுக்கு யாரு வந்திருப்பா..... அதுவும் நிறைய....... இந்த செருப்புக்கு வேலையில்லயே.......உள்ளே வந்தவன்

சாவித்திரி......” என்ன கண்ணா சீக்கிரமா வந்துட்ட......”



“ஒண்ணுமில்லமா....கயல நம்ம கடைக்கு கூட்டிட்டு போகலாமுன்னு நினைச்சேன்........”



“சரிப்பா..... அத முதல்லயே மருமககிட்ட சொல்லலையா....புள்ளங்கயெல்லாம் டியூசன் படிக்குதுங்க...... இப்பதாம்பா வீடு நல்லா கலகலன்னு இருக்கு...... அம்புட்டும் இப்பதான் கீழ படிச்சுட்டு மாடிக்கு போச்சுக........”

சரி நான் போய் பாக்குறேம்மா.....என்றபடி மாடிக்கு போக.....அங்கு இருபது முப்பது பிள்ளைகள்........கட்டிலிலும் தரையிலும் நின்று ஆடிக்கொண்டிருக்க.......நடுவில் நின்று கயல் தன் நைட்டியை கைலிமாதிரி மடித்துக்கட்டி....ஒரு துண்டை எடுத்து தலையில் ஒரு முண்டாசு மாதிரி கட்டியிருக்க..... அவள் செல்லில் இருந்து பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது........











எஹ் எஹ் எஹ் எஹ்……


சின்ன மச்சான்……


என்ன புள்ள……..


செவத்த மச்சான்…..


சொல்லு புள்ள………


என் செவத்த மச்சான்……..


என்ன சொல்லு புள்ள………


ஊருக்குள்ள
உங்கள யேசுராக
தினம் ஒன்னா ரெண்டா
சொல்லி பேசுறாக
நம்ம ஊருக்குள்ள
உங்கள யேசுராக
ஒன்னா ரெண்டா
சொல்லி பேசுறாக……….



எஹ்எஹ்எஹ்எஹ்…………


கயல் ஆண் போல நடுவில் நின்று ஆட....... மற்ற பெண் பிள்ளைகள் இவளை சுற்றி ஆடிக்கொண்டிருந்தனர்...........




இனி.......................?.

தொடரும்..........










 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த அத்தியாயம் பதிவு செய்து விட்டேன்..........போன அத்தியாயத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ்......போட்ட எல்லாருக்கும் நன்றிப்பா.........இப்ப கதைய படிச்சுட்டு உங்களோட கருத்தை பதிவு செய்ங்க.........ப்ளிஸ்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top