நேசம் மறவா நெஞ்சம்-18Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்-

அத்தியாயம்-18



கண்ணனும் கயலும் அறையிலிருந்து வெளியே வரவும் அங்கிருந்த உறவினர்கள் அவர்களை நாற்காலியில் அமரவைத்தனர்.......... சுமங்கலிகள் எல்லோரும் சேர்ந்து கண்ணன் வாங்கியிருந்த சங்கிலியில் அந்த மாங்கல்யத்தை கோர்த்து கொண்டிருந்தனர்.



சகுந்தலா கொடுத்த பொட்டு ,மணி,மாங்காய் பவளம் போன்றவற்றையும் சேர்த்து கோர்த்துக் கொண்டிருந்தனர்.



அப்போதுதான் அங்கே வந்த சுதா முத்தத்தில்............ உறவினர்கள் அனைவரும் உட்கார்ந்திருந்ததால் அவள் விறுவிறு வென்று அடுப்படிக்குச் சென்றவள் அங்கிருந்த சகுந்தலாவை” அம்மா....அம்மா..... “என்று கடுப்புடன் அழைக்க.....



நிமிர்ந்து பார்த்த சகுந்தலா” வாடி சுதா........வா......வா.......... எங்கமாப்புள வந்திருக்காங்களா....உள்ளார கூப்புட்டு உக்காரவை... இந்தா காப்பியை கலந்துட்டு வாரேன்......”



“ஏம்மா... இன்னைக்கே இந்த பங்சன வைக்கனுமா.....”



“ஏண்டி...... “

“நான் ஊட்டியிலிருந்து அப்புடியே வேற ஊருக்கு போகலாம்னு நினைச்சா........சும்மா போன போட்டு போனப் போட்டு இன்னைக்கு அவளுக்கு தாலி பிரிச்சு கோக்கனும் வான்னு சொல்றீங்க....”



“ஏன் நான் வந்த உடனே பண்ணக்கூடாதா...இப்ப என்ன இவளுக்கு அவசரம் ....முதல்ல எனக்கு தாலி பிரிச்சி கோத்துட்டு தானே அப்புறம் அவளுக்கு செய்யனும்...வரவர உங்களுக்கு வயசுதான் ஏறுது.....” என்றபடி பொரிந்து கொண்டிருக்க......



“ஏய் சுதா .......மொதல்ல சத்தத்தகுற......... இது என்னப்பழக்கம்....எப்பப்பாத்தாலும் ஓங்கி ஓங்கிப் பேசுறது........எத்தனத்தரம் சொல்லியிருக்கேன்.........இப்புடியெல்லாம் பேசாதன்னு......முதல்ல வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு சொல்லு .....இவ்வளவு சொந்தக் காரங்க உக்காந்து இருக்காங்க அவுகள முதல்ல வாங்கன்னு கூப்புடு....... அப்புறம் கையெடுத்து கும்புடு.....புதுசா......கல்யாணம் ஆனப் பொண்ணுங்க........ முதல்தவணையா பாக்கும்போது அவுகள கையெடுத்து கும்புட்டு கூப்புட்டு பழகு .........



ச்சே...ச்சே.....கயலுகிட்ட ஒருதவணைதான் சொன்னேன்..... அவசின்னப்புள்ளயா இருந்தாலும் புரிஞ்சுக்குறா ………………..(ஆமா நீங்கதான் கயல மெச்சுக்கிரனும் )பாரு உங்க பெரியப்பத்தா,சின்னப்பத்தா,தாத்தா,சித்தப்பான்னு எல்லாருகிட்டயும் அவளும், மாப்புளயும் காலுல விழுந்துகும்புட்டு துன்னூறு பூசிக்கிட்டாங்க அவுக ஆசிர்வாதம் எல்லாம் உங்களுக்கு வேணும்டி அப்பதான் வாழ்க்கை சிறப்பா இருக்கும்.இங்கபாரு நீ முத மாதிரி சின்னப்புள்ள இல்ல....

நீ கல்யாணம் பண்ணி இன்னும் பத்துநாளுகூட ஆகல.... ஆனா உன்னையபத்தி ஏகப்பட்ட புகாரு என்னோடகாதுக்கு வந்துகிட்டே இருக்கு... நான் எதயும் உங்க அப்பாட்ட சொல்லல....உங்க அப்பா பாக்கத்தான் சாது...ஆனா கோபம் வந்தா ..தாங்கமுடியாது

நானே உன்கிட்ட தனியாபேசனும் நினைச்சேன்....இப்ப ஒன்னும் பேச நேரமில்ல...... சொந்தக்காரங்களெல்லாம் போகட்டும்.........அப்புறம் இருக்கு.......



முதமுத ஒரு நல்ல காரியம் நடக்கும் போது ஏண்டி இப்புடி பேசுற.......கயலு மாமியார்தான் இன்னைக்கு நல்ல வளர்பிற........இன்னைக்கு தாலி பிரிச்சு கோக்கனும் சொன்னாங்க ..........நீதான் நான் வருவனா மாட்டேனான்னு தெரியாதுன்னு சொன்னியே.....அப்புறம் எப்புடி உனக்கு தாலி பிரிச்சு கோக்குறது.....அப்புறம் உன்னோட மாமியார்தானே இதபத்தி பேசனும்........ இன்னைக்கு அவுககிட்ட கேக்குரேன் எப்ப செய்யலாம்னு ஆனா இனி தேய்பிறை வந்துருமே.....அப்பனா அடுத்தமாசம்தான் செய்யனும்...அதபத்தி அப்புறம் பேசிக்கலாம்... போ...முதல்ல எல்லாரையும் வாங்கன்னு கூப்புடு ...எப்பபாரு மூஞ்சில முள்ளக்கட்டுன மாதிரி பேசதா........முதல்ல மாப்புளைக்கு இந்த காப்பியை கொண்டு போய் குடு........ஆமா உன்னோட மாமனார் மாமியார் வந்திருக்காங்க தானே.........”

“இல்லம்மா........ அவுக ரெண்டுபேரும் வரல..........”

“ஏண்டி உள்ளுருல இருந்துட்டு வரல......”.



“வரலன்னா........விடும்மா......சும்மா நொய்நொய்ன்னுட்டு.......”( ஆமா இவ கூப்புட்டாத்தானே..... இவ ஊருல இருந்து வந்தவுடனே ஒரு வார்த்தக்கூட சொல்லாமாத்தானே இங்க கிளம்பிவந்தா...........)



அங்கு வாசு வெளியில் மாணிக்கத்திடம் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது............நல்லவேளை....... இவுக போன் பண்ணுனாங்க.......இல்லனா இன்னும் எம்புட்டு காசு காலியாயிருக்குமோ....... இவ என்ன காச காசுன்னு பாக்காம செலவு செய்யுறா......... நம்மளவிட செலவாளியா இருக்காளே.......இதுவே அப்பா உரம் வாங்கக்குடுத்தகாசு....இதுக்கு எப்புடி கணக்கு குடுக்குறதுன்னு தெரியலயே....... என்று மனதுக்குள் கணக்கு போட்டு கொண்டிருந்தான்.........



சுதாவை கல்யாணம் பண்ணியிருந்த வாசுவின் நிலை குரங்காட்டியின் கையிலிருக்கும் குரங்கின் நிலையில் இருந்தது.ஆடுரா ராமா........... ஆடுரா ராமா......... என்று சொன்னால் எத்தனை குட்டிக்கரணம் போடு என்றாலும் போடுவான்.... அந்த நிலைக்கு சுதா அவனை கொண்டு வந்து நிறுத்தியிருந்தாள்...........அவளின் அழகில் மயங்கி அவள் காலடியில் கிடந்தான் .அவளுக்கு தன் அழகின் மேல் அத்தனை கர்வம் இருந்தது



அவன் தாய் பேச்சிக்கே இது தன் மகன்தானா..............இம்புட்டு நாளு அம்மா ...அம்மா என்று கிடந்தவன் .இவ வந்த நாளில் இருந்து குட்டி போட்ட நாய் மாதிரி அவ பின்னாடியே திரியிருறானே.......ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணுன வீட்டுல இருக்கவங்ககிட்டயும் அனுசரித்து போக வேணாமா...........இவ என்ன அவனை மட்டும் கைக்குள்ள போட்டுகிட்டு நம்மள ஒரு மனுசியா கூட மதிக்குறது இல்லயே....... இவருகிட்ட சொன்னா.....உன் மகன் பண்ணுனது தப்புதானே.......வந்தவுடனே உம்மாமியார் தனத்த காமிக்காதேன்னு சொல்லுராரு........நான் ஒரு பொம்பள வீட்டுல எம்புட்டு வேல தான் பாக்குறது.......இவ என்னடான்னா பெரிய இவ மாதிரி டிவிய போட்டுகிட்டு சோபால படுத்துகிறா.........இல்லனா ரூமுக்குள்ள போயி கதவ பூட்டிக்கிறா......



இவனும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புமாதிரி ஒரு மார்க்கமா திரியுறானே........இவன என்ன பண்ணுறது.........எல்லாம் என்நேரம்......நல்ல பணக்கார பொண்ணுக்கு ஆசைப்பட்டேன் ஆனா இந்தபய இப்புடி ஒரு திமிரெடுத்தவள கட்டி கூட்டிக்கிட்டு வந்திருக்கானே....... வரட்டும் என்னோட சின்ன மகன்......இருக்கு........ இவுக ரெண்டு பேருக்கு........ என்று மனதிற்குள் கொதித்து போயிருந்தாள்......

இங்கு சுதா வாசுவுக்கு காப்பியை கொடுத்துவிட்டு............ அங்கிருந்த உறவினர்களை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து......தலையை மட்டும் அசைத்தாள்...... அவளை பார்த்தவர்கள் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருக்க.............

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சாவித்திரியோ........ “ஏத்தா நல்ல நேரம் முடிய போகுது....சீக்கிரம் அந்த தாலி செயினைக் கொடுத்து போடச்சொல்லுங்கத்தா......நேரமாச்சுல....”என்று சொல்ல.......



அங்கிருந்தவர்களில் வயதான சுமங்களிகளில் சிலர் எழுந்து.....கடவுளை நன்றாக வேண்டிக்கொண்டு......... அந்த செயினைக் கண்ணனிடம் கொடுக்க............கண்ணன் கயலை ஆழ்ந்து பார்த்துபடி......... அந்த செயினை அவள் கழுத்தில் போட்டான்............பார்வையை. மாற்றாமல் அங்கிருந்த குங்குமத்தை எடுத்து அந்த தாலியிலும் அவள் நெற்றியின் உச்சியிலும் வைத்து விட்டான்........



கயலோ....என்னடா........ இவரு இப்புடிப் பாக்குறாரு..........அன்னைக்கு தாலி கட்டும் போதும் இப்புடித்தான் பாத்தாரு..........இவரு பாக்குறத பாத்தா........கோபமா பாக்குற மாதிரியும் தெரியல..........என்று அவன் பார்வையை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவள்..... உறவினர்கள் ஒவ்வொருவராக வரவும் அவர்களிடம் நெற்றியில் குங்குமம்.வாங்கிக் கொண்டாள்........... ஒவ்வொருவராக வந்து இருவருக்கும் குங்குமம் வைத்து விட்டு சாப்பிடச் செல்ல......கூட்டம் குறைந்தது..........



காந்திமதி சாவித்திரியிடம்……….” இந்த சங்கிலி நல்லா பெருசா தெரியுதே எத்தன பவுனுத்தா.....”



“தெரியலத்தா............ஏழோ..... ஒம்பதோ........சொன்னான்........ நேத்து ராத்திரிதான் போயி வாங்கிட்டு வந்தான்............நான் எங்க அதெல்லாம் கண்டேன்............”

அப்போது சுதாவும் வாசுவும் வர..............சுதாவை பார்த்ததும் கயல் சந்தோசத்துடன் எழுந்து சென்று.........

” சுதாக்கா......... வா....வா.....நல்ல வேள வந்துட்டியா........ எங்க நீ வராம போயிருவியோன்னு நினச்சேன்............”



“ம்ம்ம் எங்க நான் வல்லைனா அம்மாவிடுமாக்கும்.......... போன போட்டு ஒரே தொல்லை.......வா..வான்னு.........புருசன் பொண்டாட்டியா போயிருக்காங்களேன்னு தெரியவேணாம்.............”





கண்ணனுக்கு மனதிற்குள் கோபம் இருந்தாலும் சபையில் எதுவும் பேசக்கூடாது என்று நினைத்து மௌனமாக நின்றான்..........



கயலோ.........” டூருக்கு எப்புடிக்கா........ வேனுல போனிங்களா.......... இல்ல பஸ்லயா.........”



கண்ணனோ இது இவளுக்கு தேவையா என்று நினைத்து........கயலை முறைத்தபடி நின்றான்..........



“ஏய் லூசு....... கும்பளா....நாங்க ஒன்னும் டூருக்கு போகல...........ஹனிமூனுக்கு நானும் எங்க வீட்டுக்காரரும் மட்டும் தனியா அவுகவுட்டு காருல போனோம்.........நீங்க எங்க போனீங்க.....”என்று கேட்க.........



“நாங்க குலசாமி கோயிலுக்கும்...... அப்புடியே...... பழனிக்கும் போனோம்கா.......”



“கோவிலுக்கா...........”என்று முகத்தை சுழித்தபடி......”.யாரு யாருடி........”

“நான் இவுக.....அத்தே.....அப்புறம்.... இவுக தம்பிக.......எல்லாரும் போனோம்கா........”



“எதுக்கு முருகன் எப்புடி ஆண்டிகோலத்துல இருக்காருன்னு பாக்கவா...........”



“ச்சூ...... அப்புடியெல்லாம் சொல்லாத....முத கன்னத்துல போட்டுக்க......... முருகன் அப்புடியே ராஜ அலங்காரத்துல இருந்தாரு தெரியுமா........... இப்பதான முத மொறையா கோவிலுக்கு போனேன்ல............சூப்பர்கா........”

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை.........கேட்டுக் கொண்டிருந்த காந்திமதியும் சாவித்திரியும்...........கண்ணன் முகம் மாறவும் ஏதும் பிரச்சனை ஏற்படுமோ என்று நினைத்த..........

சாவித்திரி.......” நீங்க குங்குமம் வச்சிட்டீங்கன்னா விலகுங்கத்தா......... இவுக ரெண்டுபேரையும் சாப்பிட கூட்டிட்டு போகனும்........”



ம்ம்ம் என்றவர்கள்..............வாசு..........கண்ணனின் நெற்றியில் குங்குமம் வைக்கவும்......சுதா கயலின் நெற்றியில் குங்குமம் வைத்தவள்......... அப்போதுதான் கயலின் கழுத்தில் இருந்த தாலிச் செயினைப் பார்த்தவள்........இவ என்ன இவ்வளவு பெரிய செயினா போட்டிருக்கா......ஏது நம்ம அப்பா ஏதும் வாங்கி குடுத்துப்பாரோ............



“இந்த செயின் எத்தன பவுனுடி.............”



“தெரியலக்கா...........இவுகதான் வாங்கிக்குடுத்தாங்க.......... ஏங்க இது எத்தன பவுனு.........”



கண்ணன் பதிலே சொல்லவில்லை.......... கயலையே முறைத்தபடி உட்கார்ந்திருந்தான்.........

இவரு ஏன் இப்புடி முறைக்குறாரு......... எத்தன பவுனுன்னு கேட்டது குத்தமா...........

வாசு .........”.என்ன கயலு நல்லாயிருக்கியா............”

ம்ம்ம்....... என்று யோசித்தவள்.......”.நல்லாருக்கேன் மாமா.......”

சுதாவோ........இவ்வளவு பெரிய செயின் எப்புடி............வாங்கியிருப்பான்........அந்த அளவுக்கா இவன்கிட்ட வசதியிருக்கு...........இவுக அம்மாவே ஒரே ஒரு செயின் தானே போட்டிருக்காங்க......... இவனே கையில ஒரு மோதரம் கூட போடல.........ஆனா இந்த செயின் எப்புடியும் 9 பவுனாவது இருக்கும்........அப்பனா நாம இவருகிட்டச் சொல்லி ஒரு 11 பவுனுல தாலிச் செயின வாங்கிரனும்.............யாருகிட்ட..............



காந்திமதி..........” மாப்புள நீங்களும் கயலும் சாப்புட வாங்க......”



“இல்லப்பத்தா நீங்களெல்லாம் போய் சாப்புடுங்க.......நானும் கயலும் அப்புறம் சாப்புடுறோம்..........”.



இவரு வேணும்னா அப்புறம் சாப்புட வேண்டியதுதானே......... நம்மளயும் ஏன் சேத்து சொல்லராரு........... நமக்குதான் அப்பத்திலிருந்து பசிக்குதே........ இந்த பால் பனியாரம் வேற ரொம்பநேரம் பாலுல ஊருனா நல்லாயிருக்காதே........... அப்பவே அம்மாட்டச் சொல்லி கொஞ்சம் தனியா எடுத்து வைக்கச்சொல்ல மறந்துட்டோம்.............. இப்ப என்ன பண்ணுறது இந்த அம்மாவேற உங்க வீட்டுக்காரர் என்ன சொன்னாலும் கேக்கனும்னு சொல்லியிருக்காங்க...........



வாசுவோ..........” கயலு நான் சாப்புட்டுட்டு வாரேன்மா........”



“ம்ம்ம் சரி மாமா........”

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer

எல்லாரும் சாப்பிட செல்லவும் கண்ணன் தங்களை சுற்றிலும் யாருமில்லாததை சுற்றி பார்த்தவன்..........


“யாரு உனக்கு மாமா............ அவனா.........”



“அவுகதான்......... எனக்கும் அவுகள பிடிக்காதுதான்..........ஆனா என்ன கோக்குமாக்கு பண்ணியாவது எங்க அக்காவ கல்யாணம் பண்ணியிருக்காருல.......... நாளப்பின்ன அவுக முகத்துல நாம அடிக்கடி முழிக்கனும்ல..........அதுனால எப்பப்பாத்தாலும் மூஞ்சிய இப்புடி வெறப்பா வச்சிருக்காதிங்க........அவுக கிட்ட கொஞ்சம் பேசி பழகுங்க......... பத்தீங்களா......... அவுக ஹனிமூன்லாம் போயிட்டு வந்திருக்காங்க............”



ஹனிமூனப் பத்தி இவ ஏன் பேசுறா........... ஒருவேள இவளுக்கும் நம்மகூட ஹனிமூன் வரணும்னு ஆசையா இருக்குமோ...........ச்சே......நல்ல சான்ஸ் ஆனா இப்ப போயி கடைபயலுக ரெண்டுபேரு லீவு போட்டுருக்காங்களே...........இப்ப என்ன பண்ணுறது...........கண்ணணுக்கு மனம் ஜிவ்வென்று பறந்தது. பரவால்ல இவ அக்கா வந்ததுலயும் நமக்கு இப்புடி ஒரு சான்ஸ் கிடைக்குமோ.....



“அதுனால சும்மா என்னைய மாமான்னு கூப்புடனும்னு சொல்லாதீங்க.........நீங்களும் பாவம்தான்........கொஞ்சம் கொஞ்சமா எங்க அக்காவ மறக்க பாருங்க........புரியுதா......... அப்புறம் எப்ப பாத்தாலும் வாசு மாமா மேல உள்ள கோபத்துல என்னைய மொறைக்காதீங்க............ பாவம் எங்க அக்காக் கூட இந்தா உங்கள மறந்துட்டு மாமாவோட நல்லா பேசி பழகிட்டா....... நீங்களும் ஒரு வருசமோ....... இல்ல ரெண்டு வருசமோ டயம் எடுத்து கொஞ்சம் கொஞ்சமா மறக்கப் பாருங்க........”( ஆத்தி கயலு உன்னோட அறிவுக்கு நீ இங்க பிறந்திருக்க வேண்டியவளே இல்ல..........)



என்னது நான் இவ அக்காவ மனசுல நினச்சிருக்கனா........நான் என்னமோ இவ அக்காவோடு டூயட் பாடுன மாதிரியே பேசுறாளே......... பொண்ணுபாத்த அன்னைக்கு ஒரு ரெண்டு நிமிசம் பாத்திருப்பமா........... அதுக்கப்பறம் ஒருதவணக்கூட நிமிந்து பாக்கல......... இவ அக்கா பண்ணுனத சொன்னா இந்த லூசு நம்புமா...... மேக்கொண்டு இவ அக்கா மாதிரி. இவளும் நம்மள குறைச்சு மதிச்சுருவாளோ......... வேணாம் கண்ணா......வேணாம் கொஞ்ச கொஞ்சமா இவ மனச மாத்தப்பாரு.......... அவசரமே படாத கண்ணா.....ச்சே........ கொஞ்ச நேரம் நம்மள எப்புடியெல்லாம் நினைக்கவச்சுட்டா..........



“எனக்கு பசிக்குது சாப்புட போவமா.............” என்று முகத்தை பாவம் போல் வைத்து........ கண்ணனை அழைக்க.........



அவளை நிமிர்ந்து பார்த்த கண்ணன் எல்லோரும் நெற்றியில் குங்குமம் வைத்ததால் கயலின் முகத்தில் பெரிய பொட்டு மாதிரி இருந்தது.” இங்க வா…..” என்றவன்.......தன் கர்சீப்பை எடுத்து அவள் முகத்தை துடைத்தான்......... அந்த தாலிகட்டு சேலையில் அவளை பார்க்கையில் கல்யாணத்தன்று பார்த்ததுபோல் இருந்தது.......... நல்ல வெள்ள பிகரா....... இருக்கான்னு பாத்தா......... இப்புடி மக்கு பிகரா........ இருக்காளே............என்று நினைத்தான்......



அவன் நெற்றியிலும் அதிக குங்குமத்தை கண்டவள்........ அவனிடமிருந்து கர்சிப்பை வாங்கி அவன் முகத்தையும் துடைத்துவிட்டாள்.......

கயலின் கையை மெதுவாக பிடித்தவன்.......”.நான் உன்கிட்ட ஒன்னு சொல்லவா........”



“சொல்லுங்க......... ஆனா சீக்கிரம் சொல்லுங்க........எனக்கு பசிக்குது.........”



“நான் ஒன்னும் உங்க அக்கான்னு நினச்சு உங்கிட்ட பழகல............உன்னைய புடிச்சுதான் பழகுறேன்...........புரியுதா........”

“சரி.......”



“என்ன சரி.........”.இவளுக்கு என்ன புரிஞ்சுச்சுன்னு உடனே சரின்னு சொல்லுறா.........



“இல்ல நீங்க.............என்னோட மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு தானே இப்புடி சொல்லுறீங்க......... நீங்க கவலப்படாதீங்க......... நான் உங்க மனச புரிஞ்சு நடந்துக்குவேன்......... எங்க அம்மாக்கூட உங்க மனசு கோணாம நடக்கச் சொன்னாங்க......”.



அதான்னே பாத்தேன்......... இது இனி வேளைக்காகாது....... என்று நினைத்தவன்.......அவளை மெதுவாக இழுத்து அவள் இரு கன்னத்திலும் முத்தமிட்டான்........



“ஏன்...... இப்புடி பண்ணுறீங்க........எங்க காலேஜ்ல இதுமாதிரி பேட்டச் பண்ணுனா சப்புனு அறைய சொல்லியிருக்காங்க........

அன்னைக்கும் இப்புடித்தான் பண்ணுனீங்க.......... இந்த மீச வேற செமையா குத்துது........ இப்ப நானும் அமுதாவும் பேசிக்கிட்டு இருந்தோம்ல...... அப்ப அவ சொன்னா நீங்க இந்த மாதிரி பேட்டச் பண்ணுனா ஒண்ணும் சொல்ல வேணாம்........விடு பாவம்னு சொல்லிட்டு சிரிக்குறா.......”.



கண்ணனோ........ அப்ப அமுதாதான் என்னைய இன்னைக்கு அறையிலிருந்து காப்பாத்துனதா.......ம்ம்ம் சாதாரண முத்தம் அதுவும் கன்னத்துல........ அதுக்கே அறையனும்ங்குறா....... வேற என்னமாச்சும் பண்ணுனா....கத்தி கலாட்டவே பண்ணிருவாளோ...... அந்த அமுதா பொண்ணு நம்மள பத்தி என்ன நினைக்கும்...... இனிமே அது முகத்தப் பாத்து எப்புடி பேசுறது....... ஆனா இவ இன்னும் யாருகிட்டயெல்லாம் சொன்னான்னு தெரியலயே “ஆமா.......நான் முத்தம் குடுத்தத வேற யாருகிட்டயெல்லாம் சொன்ன.......”



“அமுதாதானே என்னோட பெஸ்ட் ப்ரண்ட்........ அதுனால நானும் அவளும் எதயும் மறச்சு பேசமாட்டோம்..........வேற யாருகிட்டயும் சொல்லல. அவளும் இனிமே நீங்க இதுமாதிரி செஞ்சா யாருகிட்டயும் சொல்ல வேணாம் ........என்கிட்டயும் சொல்லாதன்னு சொல்லிட்டா........ அப்புறம் எனக்கு ஆளு வளந்த அளவுக்கு அறிவு வளரலயாம்......... என்ன திமிரு...... நான் ஒரு பாடத்துல கூட அரியர் வைக்கல....... ஆனா எத்தன அரியர் அவ வச்சிருக்கா தெரியுமா......... நல்லா மண்டைல நாலு கொட்டு வச்சேன்........ அப்புறம்....புருசன்தான் முத்தம் குடுப்பாருன்னும் தெரியும்........ ஆனா நீங்க எங்க அக்காவ நினச்சுகிட்டு எனக்கு முத்தம் குடுக்கக் கூடாது......சரியா....(..நல்லவேள அமுதா சொன்னமாதிரி சொல்லிட்டோம்....... இவருபாட்டுக்கு நம்மள மக்குன்னு நினைச்சிராம......) (இனிமேயா..... நினைக்கனும்.....) அப்புறம் இந்த மீசை பயங்கரமா குத்துது........”



“அதுக்கு என்னோட மீசைய எடுக்கச்சொல்லுறியா........”



“ச்சே.....ச்சே...... உங்க முகத்துக்கே..... இந்த மீசைதான் அழகு.......அதுனால மீசைய எடுக்கவேணாம்....”(அப்புறம் நான் எப்புடி உங்கள ஐயனாருன்னு கூப்புடுறது)

“அப்புறம்....”

“இனிமே முத்தமே குடுக்காதீங்க.....சரியா.......”. கண்ணன் ஙே........... என்று விழிக்க.......”ஐயோ..... அம்மா எனக்கு பசி உயிர் போகுது........வாங்க” என்று அவன் கையை இழுத்தபடி சாப்பிட கூட்டிச் சென்றாள்.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அனைவரும் சாப்பிட்டுவிட்டு...... அங்கே உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்க........ ராமன் மல்லிகாவிடம் பேச முடியாமல் சைட் அடித்துக் கொண்டிருந்தான்......



சாவித்திரி கண்ணனிடம் வந்து” கண்ணா 3 மணிபோல ஊருக்கு கிளம்புவோமாப்பா........”.



“சரிம்மா....... கயலயும் எல்லாம் எடுத்துவைக்கச் சொல்லுங்க.......”

“இல்லப்பா..... அவ உன்கிட்ட என்னமோ சொல்லனுமா........”.



“என்னவாம்......”.



“தெரியலப்பா...... கயல வரச்சொல்லுறேன் நீயே கேட்டுக்க........”

ம்ம்ம்.........



ஐந்து நிமிடங்கள் கழித்து கயல் வந்து……” உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்........”



“அதுக்குத்தானே.........வரச்சொன்னேன்..........சொல்லு.......”



“அது .....ஒன்னுமில்ல......தாமர அக்காவீடும் .......சுதாக்காவும் வந்திருக்காங்கள்ள........”.



“அதுக்கு.......இப்ப என்ன.......”



“இல்ல எனக்கு இன்னும் நாளுநாள் கழிச்சுதான் காலேஜ் திறக்குறாங்க.......... நான் இன்னும் நாளு நாளைக்கு இங்க இருந்துட்டு வரவா..........சுதாக்கா......அவுக வீட்டுக்கும் கூப்புட்டுறுக்கா......ப்ளிஸ்.....ப்ளிஸ்......”



“ஒன்னும் தேவையில்ல...........இத்தனநாளு இங்கன இருந்தது.....போதும் ஊருக்கு கிளம்புற வேலையபாரு.........என்னோட கண்ணுக்குமுன்னாடி நிக்காத போ.......” என்று கோபத்துடன் சொல்ல.........



இவருக்கு என்னாச்சு.......ஏன் இப்புடி பேசுறாரு....நல்லாத்தானே இருந்தாரு......



கண்ணனுக்கு தலைவலி மண்டையை பிளந்தது...... ச்சே எவ்வளவு சந்தோசமா..... இவகூட சாப்புட போனோம்........இவளோட அக்காவுக்கு இருக்குறது நாக்கா இல்ல தேள் கொடுக்கா..... என்ன நக்கலு நையாண்டி அடுத்தவங்க மனசு கஷ்டப்படுமேன்னு யோசிக்கமாட்டாங்களா......... நல்லவேளை நாம தப்புச்சிட்டோம்......... ஆனா இவுக குடும்பத்துல இருக்கவங்க எல்லாரும் இப்புடி இல்லயே.......... இந்த மாமாக்கூட இன்னைக்கு எம்புட்டு பணிவா பேசுறாக....... இவ அக்கா என்னமோ....... எங்க வீட்டுல அது இருக்கு இது இருக்குன்னு என்னா......... பில்டப்...... மேக்கொண்டு இவ அங்க ரெண்டுதரம் அவுக வீட்டுக்கு போயிட்டு வந்தா......... இந்த குணம் அவளுக்கு ஒட்டுனாலும் ஒட்டும்..



நம்ம அம்மா இப்புடியெல்லாம் பேசுனா தாங்குவாங்களா....... கடவுள் காப்பாத்திட்டாரு....... நமக்கு............இவளே போதும்பா........(ஆமா கண்ணா உனக்கு இந்த பெட்ரமாஸ் லைட்டே போதும்பா......) இந்த வாசு பயல நான்கூட என்னமோ புத்திசாலின்னு நினைச்சேன்......... இவன் என்ன......இப்புடி ஒரு மங்குனியா இருக்கான்.........நாமகூட இவன பெரிய வில்லன் ரேஜ்சுல நினைச்சுட்டோம்........இவன் ஒரு எடுப்பார் கைப்புள்ளயாவுள இருக்கான்.................. இவன் பண்ணுன ஒரே நல்ல காரியம்.......இந்த பொண்ண கல்யாணம் பண்ணுனது......... அதுனாலதான நாம தப்புச்சோம்......... இதுக்கான்டியே இவன ..........போனா போதுன்னு மன்னிச்சு இவன்கூட பேசலாம்...........கொஞ்சநேரம் இவுகரெண்டுபேரும் பேசுனத கேட்டதுக்கே........நமக்கு இப்புடி தலைய வலிக்குதே.....ஆனா காலம்பூரா.....................கேட்டா...........இந்த ஊரு கண்ணாத்தாதான் என்னைய இந்த பெரிய கண்டத்துல இருந்து காப்பாத்தி குடுத்திருக்கு...........



இதுல இந்த மேடம்வேற அவுக வீட்டுக்கு போயிட்டு வாராங்களாம்.......கண்ணா ஒம்பொண்டாட்டி இப்ப இருக்குற மாதிரியே வேணும்னா....... இவள இங்கன விடாம ஊருக்கு கூட்டிட்டு போயிரு........ அவ இப்ப நீ கோபமா இருக்குறதா நினைச்சிருக்கா......... அதயே மெயின்டேன் பண்ணிரு...... கொஞ்சம் பாவம் பாத்தாக்கூட.......நம்ம கதை கந்தல்தான்........... சும்மாவே நாம இவ கிட்ட போன்லகூட பேசமுடியல........இப்பவே பத்துநாளு இவள பாக்கவும் முடியாம.....இவகிட்ட பேசவும் முடியாம........என்ன பாடு பட்டோம்...... இன்னைக்கு ........இவள ஊருக்கு கூட்டிட்டு போய்தான் மறுவேலை பாக்கனும்.........



அங்கு கயலோ.......” அம்மா அவுக இன்னைக்கே........... என்னையும் கிளம்ப சொல்றாங்க.........”



“ஏண்டி அவுககிட்ட இங்க இருக்க கேக்க போறேன்னு சொன்ன......”.



“இல்லம்மா....... என்னையும் கிளம்பச் சொன்னாங்க..........”



பரவால்ல நம்ம மாப்புளைக்கு கயலவிட்டு பிரிஞ்சிருக்க முடியல போல......” சரிடி.......நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல.........உன்னோட மாமியாரும் உம் புருசனும் எந்த குறையும் உன்னைய பத்தி சொல்லக்கூடாது............ சரியா....”



“596.....தரம் சரிம்மா.......”

“அதென்னடி 596......”.



“ம்ம்ம்........நீங்க சொன்ன அட்வைஸ்........”



“உன்னைய.........இரு இந்தா.....வாரேன்........”.என்றபடி அவளை விரட்ட......... இந்த பொண்ணு எப்ப இந்த சின்னபுள்ளத்தனத்துல இருந்து வளரும்னு தெரியலயே.............இவ இப்புடி இருக்கா.........

ஆனா சுதா..... என்னன்னா இப்புடி எல்லாரயும் எடுத்தெருஞ்சு பேசுரா........பெத்த தாய்கிட்டயே இப்படி பேசுனா......அங்க அவ மாமியார்கிட்ட எப்புடி பேசுவா....... கடவுளே....நான் எல்லாப்புள்ளயையும் ஒரே மாதிரிதானே வளத்தேன்........... அதுக அஞ்சும் ஒன்னா இருந்தா......இவமட்டும் தனியாதானே........... இருப்பா.....ஏதோ சின்னப்புள்ளன்னு விட்டது தப்பா போச்சோ.........இவ மனசுல இம்புட்டு பேராசையும் கோபமும் எடுத்தெறிஞ்சுபேசுற குணமும் யாருகிட்ட இருந்து வந்துச்சு........ இன்னைக்கு எத்தனதரம் கயலோட செயினபத்தி..........கேட்டுட்டா...........இவரு எப்புடி வாங்குனாருன்னு............ .கேள்வியா கேட்டு தொலைச்செடுத்துட்டாளே.....................நம்ம தங்கச்சிதானே.....நல்லாயிருக்கனுமுன்னு தோனலையே....... கடவுளே இவளுக்கு நல்ல புத்திய குடுப்பா.....



கண்ணனும் கயலும் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.....சாவித்திரியும் இரு மகன்களும் ஏற்கனவே காரில் அமர்ந்திருக்க.........கயல் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே காரில் வந்து ஏறவும்......கண்ணன் காரை கிளப்பினான்...........



இன்னும் எண்ணி நாளேநாளுதானே........இருந்துட்டு வாரேன்னு சொன்னேன்........அதுக்கு பெரிய இவருமாதிரி கோவிச்சுக்குறாரு........... போய்யா போ....... என்னமாச்சும் கேளு.......அப்புறம் இருக்கு உனக்கு....... என்று விரைப்புடன் ஜன்னல் பக்கம் பார்த்து அமர்ந்திருந்தாள்.........



வீட்டுக்கு வந்தவள்........... அங்கிருந்த கன்றுகுட்டியோடு விளையாடிக்கொண்டும்.முத்து ராமனோடும் அரட்டை அடித்தவள்........மறந்தும் மாடிக்குச் செல்லவில்லை...... கண்ணனுக்கு அவள் மனம் புரிந்தாலும்.......எப்புடியும் படுக்க மாடிக்குத்தானே வருவ...........அப்ப பேசிக்கலாம்.....என்று பேசாமல் இருந்துவிட்டான்........



இரவு பத்து மணிக்கு அறைக்குள் வந்தவள்............அந்த அறையை ஆச்சர்யமாக பார்த்தவள்........பின் ஒன்றும் சொல்லாமல்.....விறுவிறுவென்று வெளியே சென்றவள் அங்கிருந்த நான்கைந்து தலகாணிகளை எடுத்து தன்னைச்சுற்றிலும் போட்டு பேசாமல் படுத்துக் கொண்டாள்.............



இனி............................?

தொடரும்.....





ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த அத்தியாயம் பதிவு செய்து விட்டேன்..........போன அத்தியாயத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ்......போட்ட எல்லாருக்கும் நன்றிப்பா.........இப்ப கதைய படிச்சுட்டு உங்களோட கருத்தை பதிவு செய்ங்க.........ப்ளிஸ்.....



 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top