நேசம் மறவா நெஞ்சம்-17Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்-

அத்தியாயம்-17



கண்ணன் மனநிறைவோடு வண்டியை எடுக்க.......... எங்க கயலை சமாதானப்படுத்த ரொம்ப கஷ்டப்பட வேண்டுமோ என்று நினைத்தவனுக்கு அவளின் இந்த குணம் மிகவும் பிடித்தது............... அம்மா சொன்னது போல இவ தங்கம்தான்......... ஆனா இவகிட்ட நம்ம மனசு எப்புடி புரிய வைக்குறது.......என்று யோசித்தபடி....வண்டியை ஓட்டியவன்.......அங்கிருந்த வேகத்தடையை கவனிக்காமல் வண்டியை ஏற்றி இறக்க...... கயலின் இருகைகளிலும் பை இருந்ததால் பிடிமாணம் எதுவும் இல்லாமல் அவன் மீது மோதினாள்......... கண்ணனுக்கு மனம் ஜிவ்வென்று பறந்தது...............



“வண்டிய மெதுவா ஓட்டுங்க..............அப்புடியே வழுக்குது............”

“இங்கன ஒரே மேடும் பள்ளமுமா இருக்கு.......... அந்த ஐஸ்கிரிம் பைய என்கிட்ட குடுத்துட்டு அப்புடியே என்னய புடிச்சிக்க.........”(.பரவால்ல கண்ணா......தேறிட்ட.............).என்ற படி அவளிடமிருந்து அந்த பைகளை வாங்கியவன் வண்டியை வேகமாக ஓட்ட ஆரம்பிக்க........கயலோ பயந்து அவன் இடுப்பை இருகையால் பிடித்து முகத்தை அவன் முதுகில் பதித்தாள்............கண்ணனுக்கு மனதில் உற்சாகம் பிறந்தது.........சீட்டியடித்தபடி வண்டியை கிளப்ப ஆரம்பித்தான்.........



அவர்கள் கயல் வீட்டிற்கு வரவும் எல்லோரும் அவர்களை அன்போடு வரவேற்றனர்..... சகுந்தலாவுக்கும் காந்திமதிக்கும் அழுகையே வந்தது. மல்லிகாவும் அருணாவும் அருணும் கயலை கட்டிக்கொண்டு சுற்ற.............அந்த இடமே ஒரே சந்தோசமாக இருந்தது மாணிக்கத்திற்கும் மனது நெகிழ..........துண்டால் தன் கண்ணீரை துடைத்தபடி....... .கண்ணனை வரவேற்றார்............

“வாங்க.......மாப்புள..........வாங்க..........வாங்க...”



“சகுந்தலா...... உன்னோட பொண்ண அப்புறம் கொஞ்சலாம்...........முதல்ல மாப்புள கவனி......” என்றபடி உள்ளே வர...........

காந்திமதி.....”..கயலு நல்லாயிருக்கியாத்தா........”.என்றபடி அவள் கன்னத்தை பிடித்து முத்தமிட.............



“நல்லாயிருக்கேன்....... அப்பத்தா.........”கயலுக்கும் கண் கலங்கியது.........

எல்லாரும் சற்று நேரம் அரட்டைஅடித்தபடி இருக்க.....கண்ணன் கயலை ரசித்தபடி..... .அருணோடு பேசிக்கொண்டிருந்தான்....... சிறிது நேரம் செல்லவும் ,

மாணிக்கம் “ஆத்தா கயலு மாப்புளய ரூமுக்கு கூட்டிட்டு போத்தா......”என்று சொல்லவும்........



ரூமுக்கு சென்றவுடன்.......”.நீங்க செத்தநேரம் இங்கன படுங்க...... நா போயி ஒரு போன் பண்ணிட்டு வாரேன்.......”

“.ஏய் இரு ........இரு .......அப்ப ஒனக்கு எம்மேல கோபம் இல்லயா….. என்கூட பேசுவியா...........”



“இப்ப பேசிக்கிட்டுதானே இருக்கேன்........”.



ஆமால்ல.........வர வர......நானும் இவள மாதிரி பேச ஆரம்புச்சுட்டனே........ஆனா இவ நம்மகிட்ட பேசாட்டா நமக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு.....என்ன இவ நம்ம வீட்டுக்கு வந்து இப்பதான் பத்துநாளு இருக்குமா....... அதுக்குள்ள அவளை இங்க விட்டுட்டு போறதுக்கு இவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கு........என்று நினைத்தவன் .........



“.போன் பேசத்தானே.........அதுக்கெதுக்கு வெளிய போற...... இந்தா என்னோட போன்ல பேசு........ஊருக்கு போன உடன உனக்கு மொதல்ல ஒரு போன் வாங்கித்தாரேன்.......”



“எனக்கெதுக்கு போனு........” என்றபடி தன் அலமாரியில் இருந்த போனை எடுக்க.....

“.இந்தாதான் என்னோட போன் இருக்கே.....”.



“அப்பயேன் அத ஊருக்கு கொண்டே வரல.....”.



“இங்கபாருங்க....எனக்கு போன்னுனாலே அலர்ஜி........ சும்மா ஒரு ஆத்தர அவசரத்துக்கு மட்டும்தான் யூஸ் பண்ணுவேன்.......”

என்னது இவளுக்கு போன் அலர்ஜியா........ இவ அப்பத்தா என்னன்னா நாம வந்த இந்த கொஞ்ச நேரத்துல.....ஒரு பத்து போனாச்சும் பண்ணியிருக்கும்.........நமக்கு கூட இந்த அளவுக்கு போன்வரல............என்று நினைத்தவன் அவளுடைய போனை வாங்கி அதிலிருந்து தனக்கொரு மிஸ்டுகால் கொடுத்தவன்

“ இந்தா இது என்னோட நம்பர்..... இத சேவ் பண்ணிக்க........”



“நான் போயி அமுதாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு....... அப்புடியே சுதாக்கவ பத்தி எங்க அம்மாட்ட கேட்டுட்டு வாரேன்.....”



சுதாயென்ற பெயரைக் கேட்டவனுக்கு கோபம் சுறுசுறுவென்று ஏறத்தொடங்கியது.......”.தேவையில்லாதவங்கள பத்தி இப்ப..... என்ன பேச்சு..........”



“அவ எங்க அக்காதானே.......அப்புறம் எப்புடி தேவையில்லாதவங்க ஆனாங்க........ யாரோ பண்ணினதுக்கு எங்க அக்காவ திட்டாதிங்க.......போகவா........ப்ளிஸ்........போகவா........” என்று கண்ணைச்சுருக்கி பாவம் போல கேட்கவும்..............



“போ.........போயிட்டு சீக்கரமே வரணும்........... என்ன.........நான் மதியத்துக்கு மேல ஊருக்குப் போறேன்.........”



“சரி........இந்தா......வாரேன்.......”.என்றபடி ஓடியவளை...... இவ அங்க இருந்தாலும் ரூமுக்கு வெளியிலதான் சுத்துறா........இங்கன வந்தாலும்....... இந்தா வெளியில ஓடிட்டா.......... நாம இவகிட்ட எப்பதான் பேசி பழகுறது....... என்று யோசித்தப்படி படுத்திருந்தான்....

.

கயல் போன் செய்த பத்து. நிமிடங்களில் அமுதா அவளை பார்க்க வந்திருந்தாள் வீட்டிற்குள் நுழைந்த அமுதாவை கண்ட கயல் அவளிடம் ஒட இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தவர்கள்............



அமுதாவோ.....”.ஏண்டி எப்ப பாத்தாலும் ஒண்ணாத்தானே சுத்திக்கிட்டு திரிவோம்..........நான் ஒரே ஒருநாளு அரியர் எக்ஸாம் எழுதலாமுன்னு போனேன்........ அதுக்குள்ள இப்புடி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்குற........விட்டா இன்னும் பத்து நாள் போனா புள்ளக்குட்டியோட வந்து நின்னாலும் நிப்ப.........



எனக்குத்தான் படிப்பு வரல.........படிப்ப நிப்பாட்டி கல்யாணம்.பண்ணுவாங்கன்னு பாத்தா..... உனக்கு இப்புடி பொசுக்குன்னு கல்யாணத்த பண்ணி வச்சுட்டாங்க...........”

“அதுக்கு அன்னைக்கு நீ கல்யாணத்துக்கு வந்துருக்கனும்........ வந்திருந்தா ஒன்னைய கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க.........”



“ச்சி.......ச்சி..... உன்னைய கல்யாணம் பண்ணுனவரு எனக்கு அண்ணன்டி...... ஆமா எங்க உன்னோட ஐ..........” என்று ஆரம்பித்தவள்.....உள்ளிருந்து வந்த கண்ணனை கண்டதும் திருதிருவென்று விழித்து.............

“.ஐ...ஐ...அண்ணே.....நீங்களும் வந்திருக்கீங்களா” என்றபடி அசடு வழிய...........



நம்மள பாத்த உடனே இந்த பொண்ணு ஏன் இந்த முழி முழிக்குது..........நம்மள பத்தி இதுக ரெண்டும் ஏதும் பேசிக்கிட்டு இருந்துச்சுகளோ........ஏற்கனவே கோயிலில் பார்த்திருந்ததால் அமுதாவை கண்ணனுக்கு அடையாளம் தெரிந்தது.....



“வாம்மா.......நல்லாயிருக்கியா..........”



“ம்ம்.......நல்லாயிருக்கண்ணே........”



“நீ...... வாடி.....”.என்றபடி அவளை கொல்லைப்புறத்திற்கு கூட்டிச்செல்ல........



அதான பாத்தேன் இவளாவது நம்மள கண்டுக்கறாதவது...........இவள.......இவதான் சீக்கிரமா வரவளா..........



அமுதா… “ ஏண்டி..... அன்னைக்கு அப்புடி என்னதான்டி நடந்துச்சு............,இந்த வாரம் பூரா நம்ம தெருவுக்கு கிடச்ச அவல் நீனும் உங்க அக்காவும் தாண்டி.......... என்ன………. உன்னோட அப்பத்தாவுக்கு பயந்து ஒரு புள்ளயும் மூஞ்சிக்கு நேரா பேசல..............”



“எனக்கே அங்க என்ன நடந்துச்சுன்னு தெரியலடி........ அந்த வாசு பயதான் ஏதோ பண்ணி எங்க அக்காவ கல்யாணம் பண்ணுனதா........ எங்க அம்மா சொன்னாங்க........... அப்புறம் இவுக சொந்தகாரங்க முன்னாடி அசிங்கமா போயிரும்னு...... எனக்கு படக்குன்னு தாலி கட்டிட்டாறாம்....... இவரும் பாவம்தானடி........கல்யாணம் நின்னுருந்தா ...........எவ்வளவு அசிங்கம்......... எங்க அப்பத்தா சொன்னுச்சுடி....... இவருதான் எங்க குடும்பத்துக்கு..... மாப்புள்ளயா .........வருவாருன்னு எங்க குலசாமி கோயிலுள்ள குறி சொன்னாங்களாம்........ அதுனால இவரு எனக்கு தாலி கட்டுனதும்...... எங்க கருப்பரு கொடுத்த குறிதானாம்டி........”( ஓஓஓ..... உங்க அப்புத்தா உன்கிட்ட இப்புடியெல்லாம் சொல்லி.........வச்சிருக்கா.........)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
“ஆமா உங்க அக்கா இங்க......ஆடிக்கு வரலயா............”



“இல்லடி.....அவுக ஊட்டி......கொடைக்கானல்னு .....டூரு போயிருக்காங்களாம்......ஆடி 18 அன்னைக்குதான் வருவாங்களாம்.............”



“அப்ப இவரு உன்னைய எங்கயும் கூட்டிட்டு போகலயா..........”



“ஏண்டி இவரே பாவம்........... அந்த கட்டைல போற வாசுபய.......எங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டானேன்னு கடுப்புல இருக்காரு .........என்ன செய்யுறோம்....ஏது செய்யுறோம்னு தெரியாம........... சின்ன சின்ன விசயத்துக்கு கூட கோபப்பட்டு அவுக தம்பிய போட்டு அடிச்சுட்டு அப்புறம் உக்காந்து வருத்தப்படுறாரு......( நீ ஏம்மா மொட்டதலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுற......).இவரு சும்மாவே கோபக்காரருதானே.ஆனா இப்ப ரொம்ப கோபம் வருதுடி........ஒருவேள...... இவரு எங்க அக்காவ விரும்பியிருப்பாரோ......... அவளும் இவரத்தானே கட்டிக்க போரேன்னு கனவு கண்டுருப்பா.......”



“அடச்சி......நிப்பாட்டு....... உங்க அக்காவ பத்தி ஊருக்குள்ள வேற மாதிரி பேசுறாங்க....... அவ விருப்பபட்டுதான் வாசுவ கல்யாணம் பண்ணியிருக்கான்னு........ அதுனாலதான் அவரோட ..........டூருக்கெல்லாம் போக முடியுது..........ஆனா அவ வீட்டுல ஒரு வேலையும் பாக்குறது இல்லையாம்டி......... எப்ப பாத்தாலும் ரூமுக்குள்ள போய் கதவடைச்சிக்கிறாளாம்......... அந்த வாசுபய அம்மா வந்து எங்க அம்மாட்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்களாம்........”.



“அப்புடியா........சொல்லுற....ஆனா அவ எல்லா வேலையுமே என்னைய விட நல்லா பாப்பாளேடி.........”



“சரி அத விடு......... உன்னைய அங்கன எல்லாரும் நல்லா பாத்துக்குறாங்களா..........”



“அவுக ஏன் என்னைய நல்லாப்பாத்துக்கனும்........நானே என்னைய நல்லா பாத்துக்குவனே.........”

“அடச்சீ........ எல்லாரும் உன்னைய நல்லா கவனிச்சுக்குறாங்களா.........”



“அவுக வீட்டுல எல்லாரும் நல்லாப் கவனிச்சுக்குறாங்க........அப்புறம் அவுக வீட்டுல ஒரு மாடு கன்னு போட்டுறுக்குடி........”



“ஏ.......நிப்பாட்டு...நிப்பாட்டு,,,,இந்த மாடு கன்னுப் போட்டது ....ஆடு குட்டிப் போட்டது எல்லாம் வேணாம்......உங்க வீட்டுக்காரர பத்தி சொல்லு.......”



“அவர பத்தி சொல்ல என்ன இருக்கு.......”



“ஏண்டி....... அவர பத்தி சொல்ல ஒன்னுமே இல்லயா......”



“என்ன....இந்த ஐயனாரு..... ஒரு நேரம் நல்லா பேசுறாரு....... மறுநேரம்......மொறைக்குறாரு...... இங்க வரும்போது தாண்டி... அவரு சிரிச்சதயே பாத்தேன்...... ஆனா இவரு சிரிச்சா........ நல்லாருக்குடி........ஆனா இவருக்கிட்ட பேசுறத நினைச்சா...... நம்ம கம்யூட்டர் மேம் வருமே அதுக்கிட்ட பேசுறமாதிரி......இருக்கு......”



இவர்கள் கல்லூரியில் அந்த மேம்தான் ரொம்ப ஸ்டிக்ட்.....யாருமே பேச பயப்படுவார்கள். இவர்கள் இருவரும் இரண்டுமுறை.....அவரிடம் தத்துபித்தென்று உளறி செம டோஸ் வாங்கியிருந்ததால்.... அவரை பார்த்தாலே கப்சிப் என்று ஆகிவிடுவார்கள்.....

“ஏண்டி அந்த மேம பாத்தாதான் நம்ம ரெண்டுபேருமே......ஊமைசாமி ஆகிருவமே......... அவரு ஏதாச்சும் கேட்டாத்தானே...பதிலே சொல்லுவோம்......”



“அதுமாதிரி தாண்டி அவரு கேட்டாத்தான் பதிலே சொல்லுவேன்... அவரு வீட்டுல இருந்தாருன்னா.......நம்ம மேம் கிளாஸ்ரூம்ல இருக்குறமாதிரியே இருக்குடி........”

மேலும் அரை மணிநேரம் பேசியவர்கள்.......”சரிடி மணி 1 ஆச்சு நான் கிளம்புறேன்.......நீ எத்தன நாளைக்கு இங்க இருப்ப......காலேஜ்க்கு வருவியா.......”



“அதெல்லாம் எங்க அப்பா.....கேட்டுட்டாங்களாம்......அவரும் ஓகே ...சொல்லிட்டாராம்..... நான் இன்னும் 10 நாளைக்கு இருப்பேன்.......ஆடி 18 அன்னைக்கு தாலிபிரிச்சு கோக்குறாங்களாம்........ அப்புறமா என்னைய ஊருக்கு கூட்டுட்டு போயிருவாங்களாம்டி... நீ என்ன பண்ணுற தினமும் இங்க ஆஜர் ஆகிரு........ஓகே.....”

“சரிடி நான் கிளம்புறேன்.........”

சகுந்தலா.........” ஏ.....கயலு மணி 1 ஆச்சு மாப்புள்ளய சாப்புட கூப்புடு........”



அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க.......கயல் ஐஸ்கிரிமோடு வந்தாள்........



மல்லிகா.... “அக்கா……. ஏது இவ்வளவு ஐஸ்கிரிம்.......”



“இவுகதான் வாங்கி குடுத்தாங்க.......”.



காந்திமதி ......” உனக்கு ஒன்னு வேணும்னா...... அங்கயே வாங்கி சாப்பிடுறத விட்டுட்டு..... ஏண்டி இம்புட்டு செலவு இழுத்து வைக்குற.........”



“பரவால்ல அப்பத்தா......நான்தான் வாங்கிக்கொடுத்தேன்.......”

“அதுக்கில்ல மாப்புள இவகிட்ட ஒரு பழக்கம்..... எந்த ஒரு பொருளையும் தனியாவே சாப்புடமாட்டா....... யாராச்சும் ஒன்னு குடுத்தா.அத வீட்டுக்கு கொண்டு வந்து எல்லாருகிட்டயும் குடுத்துட்டுதான் சாப்புடுவா...........”பரவால்ல நிறைய நல்லபழக்கமெல்லாம் கத்து வச்சுருக்கா........

கண்ணன் சாப்பிட்டு விட்டு ......”.மாமா…….. நான் 3 மணி போல ஊருக்கு கிளம்புறேன் மாமா...”

“ஏன் மாப்புள………. இங்கன ரெண்டு நாளைக்கு தங்கிட்டு போலாம்ல.........”



“இல்ல மாமா.......சாயங்காலம் 5 மணிக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு இன்னொரு நாளைக்கு தங்குறேன் மாமா...........”.என்றபடி உள்ளே செல்ல.........



கயல் தன் தங்கைகளோடு அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.........

கண்ணன் ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்க........ காந்திமதியோ........

“கயலு போத்தா போயி அவுகள பயணம் அனுப்பிட்டு வா.........”

பயணம் அனுப்புறதா........ எப்புடி நாம போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணிக் குடுக்கனுமா..... நமக்குதான் வண்டியே ஓட்டத் தெரியாதே.......என்று யோசித்தபடி அவன் பின்னால் சென்றவள்.......மீண்டும் வீட்டிற்குள் ஓடி கையில் இரு ஐஸ்கிரிம் டப்பாவோடு வந்தாள்........



“இந்தாங்க இத முத்துவுக்கும் ராமனுக்கும் குடுத்துடுங்க....... சும்மா அவனுகளை போட்டு அடிக்காதிங்க..........சரியா.....”



“சரிங்க மேடம் ...”.என்னோட தம்பி அடிச்சதுக்கு இவ நம்மள இந்த மிரட்டு மிரட்டுறா......என்று அவளையே பார்த்தவன்.......”

“ இங்கவா.....”என்று தன்கட்டை விரலால் ஒரு கன்னத்தையும் மற்ற நான்கு விரலால் மறுகன்னத்தையும் பிடித்து தன் அருகில் இழுத்தவன்.இரு கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டு .........

“.மாமாவ மறந்துறாத.......என்றவன்... கையை படித்து இழுத்து அவளிடம் பணம் கொடுத்து இத செலவுக்கு வச்சுக்க........நான் போயி போன் பண்ணுறேன்........”என்றபடி வண்டியை கிளப்பிச் சென்றான்........




என்னது........ மாமாவா......அக்கா வீட்டுக்காரதானே மாமான்னு கூப்புடுவோம்...... இவரு என்ன மாமான்னு சொல்லுறாரு....... போயா போ..... நீ எனக்கு எப்பவும் ஐயனாருதான்..... ஆமா என்ன இப்புடி படக்குன்னு முத்தம் குடுத்துட்டாரு..... அப்ப அதுக்குள்ளயுமா சுதாவ மறந்துட்டாரு....... இல்ல சுதான்னு நினச்சு நமக்கு குடுத்துட்டாரா...... அப்புடித்தான் குடுத்துருந்தாருன்னா........ அவ இனிமே வேறாருத்தர் பொண்டாட்டின்னு ஞாபகப்படுத்தனும்...... அது எதுக்கு இவ்வளவு பெரிய மீசை....... அப்புடியே குத்துது...... அவரு இனிமே கிட்ட வரட்டும்......இருக்கு அவருக்கு.......(ஏய் அவரு முத்தம் குடுத்தது தெரியல மீசை குத்துதா....நீ தேறிட்ட கயலு......). பின்புதான் தன் கையில் இருந்த காசைப் பார்த்தவள்.... எதுக்கு இம்புட்டு காசு குடுத்துருக்காரு.......அப்புடி என்ன இங்கன செலவு வரும்.......

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒரு 200 பணம் வேணும்னாக்கூட..... அம்மாட்டத்தானே கேப்போம்...... இவரு இப்புடி பொசுக்குன்னு 5000 ரூபாய குடுத்துருக்காரு..... ஆனா இவுக தம்பிக ரெண்டுபேரும் அண்ணன் சரியான கஞ்சம்.......காசே குடுக்கமாட்டாருன்னு சொன்னாங்க..... ஒரு வேள நம்மளக்கு டெஸ்ட் வைக்குறாரோ....... இருக்கும் அன்னைக்கு ராத்திரியே....எங்கிட்ட ஒன்னும் எதிர் பார்க்க கூடாதுன்னுதானே சொன்னாரு.....அப்ப இது நமக்கு கண்டிப்பா டெஸ்ட்டா தான் இருக்கும்........... என்று நினைத்தபடி...... காசை பீரோவிற்குள் வைக்கச் சென்றவள்..... வேணாம் அம்மாட்டயே குடுத்துருவோம்...... ஒரு கவரில் அந்த காசையும் அவளுடைய போனையும் ஒரு கவரில் போட்டு அவளுடைய அம்மாவிடம் கொடுத்தவள்.......



“அம்மா இத வச்சுக்கங்க...... நான் ஊருக்கு போகையில வாங்கிக்குறேன்..........”



“ஏதுடி………. இவ்வளவு காசு...........”



“அது அவுகதாம்மா.....என்னோட செலவுக்கு குடுத்துருக்காங்க...........”என்று கூறிச் சென்றாள்

காந்திமதியும் சகுந்தலாவும்..... ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள்.......” பரவால்லத்தே..... மாப்புள்ள செலவுக்கெல்லாம் பணம் கொடுக்குறாருன்னா நம்மக்கிட்ட காசு கேக்க கூடாதுன்னு தானே ......கொடுக்குறாரு.....அப்ப நம்ம கயலையும் நல்லா பாத்துக்குவாருன்னு நினைக்கிறேன்......”



“எனக்கு தெரியும் சகுந்தலா....... நம்ம கயலோட ......சின்னப்புள்ள குணத்துக்கு இந்த பையன்தான் பொருத்தமா இருப்பான்னு....... அவுக குடும்பத்தையே இந்தபுள்ளதான் வழி நடத்துது........நல்ல பொருப்பான்னா புள்ளதாத்தா.......நம்மபுள்ள ஏதாவது தத்துபித்துன்னு உளறாம இருக்கனும்...... ஊருக்கு போறதுக்குள்ள நல்ல புத்திமதியா.....நம்மபுள்ளைக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுத்தா.....”.

“சரித்தே......”



அங்கு கயல் ஊருக்கு செல்லவும்........ வீட்டில் ஏதோ ஒன்று குறைவது போலவே இருந்தது....சாவித்திரிக்கு .வீட்டில் இருந்த நாட்களில் கயல் அவர் பின்னாலேயே.....சுற்றிக் கொண்டிருப்பாள்....... அவர் என்ன வேலை செய்தாலும் அதை பிடிங்கி அவள் செய்வாள்.... வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் மாற்றி வைத்து வீட்டையே அழகாக்கி இருந்தாள்.......சமையலிலும் வகைவகையாக சமைத்து அசத்துவாள்........ தன்கூடவே ஏதாவது ........பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும்...... இருப்பாள்....... அவள் வந்தபிறகுதான் வீட்டிற்கு தனி அழகே வந்ததுபோல இருந்தது..............



அப்போதுதான் வீட்டுக்குள் வந்த கண்ணன்.....”.என்னம்மா....... இப்புடி வந்து வாசல்ல உட்காந்துருக்கீங்க.........”



“அது ஒன்னுமில்லப்பா......... என் மருமக......... ஊருக்கு போனவுடனே ........வீடு என்னமோ மாதிரி இருக்குப்பா.......அந்த பொண்ணுவந்து பத்து நாளு இருக்குமா......மான்குட்டி மாதுரி துள்ளிக்கிட்டு இந்த வீட்டுக்கும் கொல்லைப்புறத்துள்ள இருக்குற அந்த கன்னுக்குட்டிக்கிட்டயும் ஒரு நாளைக்கு நூறு தவணையாவது.......போவா வருவா....... ம்ம்ம்.......... இப்ப வீடே கப்புசுப்புன்னு இருக்குப்பா........ என்ன இருந்தாலும் வீட்டுக்கு ஒரு பொம்பளப் புள்ள...... வேணும்பா........அப்பதான் அந்த வீடு மகாலெட்சுமி குடிகொண்ட வீடு மாதிரி இருக்கும்........ எனக்குத்தான் அந்த குடுப்பினை இல்லப்பா........ ஆனா........ உனக்காச்சும் ஒரு மக பொறக்கனும்........அந்த புள்ள இந்த வீடு பூராவும் துள்ளி ஒடுறத.. என்கண்ணோட பாத்துட்டன்னா..............அப்புறம்.........நான் செத்தாலும் மோட்சம்பா.........”



“ஏம்மா........ இப்புடியெல்லாம்.....பேசுறீங்க.......... நீங்க இன்னும் நூறு வருசம் நல்லா இருப்பீங்கம்மா....... முத்துவோட...... புள்ளயையும் தூக்கி கொஞ்சுவீங்க பாருங்க......”



“எனக்கு அம்புட்டு பேராசையெல்லாம் கிடையாதுப்பா........உன்னோட புள்ளய கண்ணார பாத்தாலே போதும்பா............”

தனக்கு ஒரு பெண்பிள்ளயா.............நினச்சுப்பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு........... அதுவும் கயலுமாதிரி இருந்தா நல்லாயிருக்குமுள்ள.......ம்ம்ம் இவ எப்ப என்னைய மனசார ஏத்துக்குவா............ அம்மாவாச்சும் மனசுல நினைச்சத வெளியில சொல்லிட்டாங்க... நாம போயி யாருகிட்ட சொல்லுறது......... என்று நினைத்தவன் அவளிடம் போனாவது பேசுவோம்........ போன் முழு ரிங்....... போய் கட்டானது..........கயல்தான் போனை சைலன்டில் போட்டு தன் அம்மாவிடம் கொடுத்து விட்டாளே..........



அடுத்தடுத்த நாட்களில் கயல் கண்ணனை மறந்து தன் குடும்பத்தாரோடும் அமுதாவோடும் பொழுதைப் போக்க......கண்ணனோ போன் செய்து போன் செய்து வெறுத்துப் போயிருந்தான்...........தினமும் காந்திமதி சாவித்திரிக்கு போன் செய்து விசாரிக்கும் போது கயலும் அப்பத்தாவின் போனிலேயே மாமியாருக்கும் முத்து ராமுவுக்கும் பேசியிருந்தாள்........தினமும் இரவு கண்ணன் வீட்டிற்கு வந்து சாப்பிடும்போது......கயலை பற்றி ஏதாவது பேசுவார்......முத்துவும் ராமனுமே........ அண்ணி.........இப்புடி சொன்னாங்க.... அப்புடி சொன்னாங்க........ என்று போனில் பேசியதை பற்றி .........சொல்வார்கள்.........

கண்ணனுக்கு ......ச்சே என்று வெறுப்பாக இருந்தது............ அப்ப இவ நம்ம நம்பர் வந்தா மட்டும் எடுக்கமாட்டாபோல.... ஆனா மத்தவங்ககிட்ட மட்டும் பேசுறா........ என்னைய வச்சுதானே.....அத்தே.......கொழுந்தனுங்க....... எல்லாம்........நான் வேணாமாம்..... ஆனா இவுக மட்டும் வேணுமாம்.............இருக்கு அவளுக்கு........இன்னும் ரெண்டு குடுக்கனும்...... (என்னப்பா......கண்ணா....அடியா......இல்ல ........முத்தமா......)எப்புடியும் நாளைக்கு நீ இங்க வந்து தானே ஆகனும்........பாவம் படிக்குற புள்ளன்னு பாத்தா........இருக்குடி உனக்கு.......என்று கயல் போன் எடுக்காததால் .....மனதுக்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தான்.........



.ஆடி 18 ம் தேதியும் வர....கண்ணன் குடும்பத்தினரோடு வந்திருந்தான்..... வந்ததிலிருந்து கண்ணன் ஒரு வார்த்தைக்கூட கயலிடம் பேசவில்லை.......சகுந்தலா காப்பியை கயலிடம் குடுத்துவிட.......கண்ணனோ காப்பியை வாங்காமல்..........அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்..............

“அன்னைக்கு ஊருக்கு போகயில உன்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன்............”



கயல் ஒருநிமிடம் யோசித்தவள்

“நீங்க என்ன சொன்னீங்க........முத்தம்தானே குடுத்துட்டு போனிங்க..........”



இவர்களையே கவனித்துக் கொண்டிருந்த ........தாமரையும் மல்லிகாவும் சிரிக்க ஆரம்பிக்க..........



கடுப்பில் இருந்த கண்ணன்........போச்சு.... என் மானமே போச்சு........என்று நினைத்து.... அவளை அங்கிருந்த ரூமுக்குள் அழைத்துச் சென்றவன்.... கோபத்துடன் “ஏண்டி.....நான் ஊருக்கு போனவுடனே போன் பண்ணுறேன்னு சொன்னேன்ல........”.



“ஆமா.....சொன்னீங்க.......ஆனா நீங்கதான் போனே பேசலயே..........”

“உன்னோட போன் எங்க.......அத எடு...........”.

போனா.......அது அம்மாட்டல்ல இருக்கு....... என்று சென்று வாங்கிவந்தவள்......அதை ஆன்பண்ணி பார்க்க.......150 மிஸ்டுகால்கள்......வந்திருந்தன..........

“ஏங்க உங்க போன்ல பேலன்ஸ்..... இல்லயா......வெறும் மிஸ்டுகாலா குடுத்திருக்கீங்க...........”

.” ம்ம்ம்ம் என்தலை எழுத்து......நீயெல்லாம் காலேஜ்க்கு போறேன்னு வெளியில சொல்லிராத.........போன் ரிங்முழுசா போய் கட்டானாலும் மிஸ்டு காலுன்னு தானே வரும்........”



“அதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க......... என்னோட போன் எடுக்கலனா....... எங்க வீட்டுல வேற யாருக்காச்சும் போன் பேச வேண்டியதுதானே.........இதுக்கெல்லாம் கோபமா......... ஆனா,இது வேற........உங்களுக்கு ஏன்மேல என்ன கோபம்னு நான் கண்டுப்புடிச்சுட்டேன்.........”



“இந்தாங்க......”.

“இது என்ன.......”.



“நீங்க என்னோட செலவுக்கு குடுத்த காசு........”.



“அத உன்னோட செலவுக்கு தானே குடுத்தேன்...........”

“இத எப்புடி செலவழிக்காம வச்சிருக்கேன் டெஸ்ட் பண்ணத்தானே...........குடுத்தீங்க........ எப்புடி...............நான் டெஸ்டில பாஸ்பண்ணிட்டேனா................”



இவளை என்னதான் செய்யுறது..........................அப்போது அருணா வந்து “அக்கா…… மாமா……. உங்கள எல்லாரும் கூப்புடுறாங்க........... அப்புறம் வந்து தனியா பேசிக்குங்குவீங்களாம்.......”என்று சொல்லிவிட்டு ஒட...........



இருவரும் வெளியே வந்தபோது.........சுதாவும் கடுப்புடன் உள்ளே வந்து கொண்டிருந்தாள்................



இனி...............................................?
தொடரும்.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ்........ அடுத்த பதிவு...... போட்டுட்டேன்பா...... போன பதிவுக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி...... இது என்னோட முதல் கதைங்குறதால படிக்கிறவங்க ஏதாவது கருத்து பதிவு செய்ங்க ப்ளீஸ்..... .நீங்க கமெண்ட்ஸ் போட்டாத்தான் நான் கதை நல்லா எழுதுறேனா இல்லையான்னு...எனக்கே.....தெரியவரும்......கமெண்ட்ஸ் போட மறக்காதீங்க.......ப்ரண்ட்ஸ்.

....

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top