நேசம் மறவா நெஞ்சம்-16Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்



அத்தியாயம்-16



மாடியில் இருந்து இறங்கியவன் போனை ராமனிடம் கொடுத்து கயலிடம் கொடுக்கச் சொன்னவன் அங்கிருந்த அந்த கயற்று கட்டுலில் படுத்தான்..........



போனை வாங்கிப் பார்த்தவள்........ அதில் தன் அப்பத்தாவின் எண் வரவும் மீண்டும் போனை அவனிடமே கொடுத்து

“பேசிக்கிட்டு இரு இந்தா வாரேன்” என்று கொல்லைப் புறம் சென்றவள் தன்முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி தண்ணீர் குடித்து தண்ணீரோடு அழுகையையும் முழுங்கினாள்............பின் போனை வாங்கியவள்......




“சொல்லுப்பத்தா..........”



“என்னத்தா......... நல்லாயிருக்கியா............”



“ம்ம்ம்........நான் நல்லாயிருக்கேன்ப்பத்தா.............”.



“என்னத்தா ஒன் குரலே ஒருமாதிரி இருக்கு.........”..



“ஒண்ணுமில்லப்பத்தா.............”என்று மீண்டும் பொங்கிவந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தவள்.....சிரிப்பை வரவழைத்தபடி............



“.ஒண்ணுமில்ல....... இங்கன தண்ணி புதுசா இருக்கா......அதுதான் எனக்கு ஒத்துக்கல............”.

“அப்புடியாத்தா.......... வேற ஒன்னும் பிரச்சனை இல்லயே........... அங்க ஒன்னைய எல்லாரும் நல்லா பாத்துக்குறாங்களா............”



“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல............ எல்லாரும் என்னைய நல்லா பாத்துக்குறாங்க........... அதவிடு எங்க வேற யாரு குரலையும் காணோம்............”



“அது ஒன்னுமில்லத்தா...........சாயங்காலத்துல இருந்து ஒன் நினப்பாவே இருந்துச்சா...... அதான் நம்ம மாரியாத்தா கோவிலுக்கு வந்தேன்............ ஒன்னோட குரலை கேட்டுட்டு தான் வீட்டுக்கு போகனும்னு இங்கயே உக்காந்துட்டேன்தா..........நான் வேணா நாளைக்கு உன்னைய பாக்க அங்கன ஒருஎட்டு வரவா........... நீ மறுவீட்டுக்கும் வரலை இந்தா ஆடியும் பொறந்துருச்சு அதுக்கும் வரமாட்டேங்குற........உங்க வீட்டுக்காரரு என்னமாச்சும் சாக்குபோக்கு சொல்லுறாரு..............வரவாத்தா..........”



“இல்ல....... இல்ல.......... இந்தவாரம் அவுகளுக்கு கொஞ்சம் வேலை இருக்காம்........... .நாங்களும் கோயில் அங்க இங்கன்னு போறோம் .......கண்டிப்பா அடுத்த வாரம் வாறோம்........... அப்புடி நாங்க வல்லைனா நீவா........... சரியாப்பத்தா..........”.என்று மேலும் பத்து நிமிடங்கள் பேசியவள்.........போனை ராமனிடம் கொடுக்க............. அங்குதான் எல்லோரும் உட்கார்ந்திருந்தனர்.........



சாவித்திரி “ஏத்தா அப்பத்தாவ வரவேணாமுன்னு சொன்ன........”.



“இல்லத்தே..........அது இங்கவந்து இதெல்லாம் பாத்தா.............ஊரையே ரெண்டாக்கிரும்...” என்றபடி தன் கையிலும் காலிலும் ஏற்பட்ட காயத்தை காட்ட அப்போதுதான் கண்ணன் கயலின் காயத்தையே...........பார்த்தான்...........



அவளின் சிவந்த நிறத்துக்கும் அந்த காயத்துக்கும் அந்த இடமே கருஞ்சிவப்பாக மாறி இருந்தது.............தலையெல்லாம் கலைந்து அழுதுஅழுது முகமெல்லாம் சிவந்து பாக்க பாக்க கண்ணனுக்கு தன் மேலே வெறுப்பு வந்தது.........

ச்சி......ச்சி.....நானெல்லாம் மனுசன்தானா......அவனாவது..........நம்ம தம்பி........இவ இங்க வந்து பத்துநாளு இருக்குமா......... சும்மா படிச்சுக்கிட்டு இருந்த புள்ளய வம்புடியா கல்யாணம் பண்ணி இப்புடி போட்டு அடிச்சிருக்கமே........... அவுக வீட்டுல பாத்தா என்னைய பத்தி என்ன நினைப்பாங்க......இந்த மாதிரி குணம் தெரிஞ்சதாலத்தான் அந்த பொண்ணு என்னைய வேணாமுன்னு சொன்னுச்சுன்னு நினைக்கமாட்டாங்க.... இம்புட்டு காயம் இருக்கும்போதும் நம்மள இந்தபுள்ள காட்டிக்குடுக்கலயே................. .ச்சி....ச்சி.....எனக்கு ஏந்தான் புத்தி இப்புடி போச்சோ........ எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இந்த புள்ளக்கிட்ட பேசுறது............சும்மாவே இந்த புள்ள நம்மகிட்ட பேச யோசிக்கும்.... என்று பலவாறு யோசித்து தன்னையே மனதிற்குள் திட்டிக்கொண்டிருந்தான்............ அன்று இரவு ஒருவருமே சாப்பிடவில்லை..............



முத்து தன் தாயின் மடியில் தலைவைத்து படுத்திருக்க கயலோ அவரின் அருகில் படுத்தபடி உறங்கியிருந்தாள்............



“கண்ணா அந்த முத்துத்துல பாய விரிப்பா.......... பாய விரிச்சு இந்த புள்ளைய தூக்கி அதுல படுக்கப் போடு............. காலுல அடிபட்டதால மாடி ஏற இறங்க செரம்மா இருக்கும்...........”.



“ம்ம்ம் சரிம்மா.......”



என்றவன் பாயை விரித்து கயலை மெதுவாக தூக்கினான்....கை தவறுதலாக அவள் இடுப்பில் பட....ஸ்ஸ்ஸ்ஸ் என்று வேதனையில் முகத்தை சுருக்க.....மெதுவாக அவளை பாயில் கிடத்தியவன்.......... அவளின் காயங்களை வருடிக் கொடுக்க ஆரம்பித்தான்........... சிறுபிள்ளை போல தூக்கத்திலும் தேம்பிக் கொண்டிருந்தாள்........



தன் தாயிடம் வந்தவன்” அம்மா என்னைய மன்னிச்சுருங்க......... கோபத்துல என்ன பண்ணுறோம்முன்னு தெரியாம பண்ணிட்டேன்...... அப்பா இருந்திருந்தா இம்புட்டு கோபம் வந்துருக்குமான்னா தெரியல..........ஆனா இப்ப அப்பா இல்லாதவன்....... இந்த அண்ணன்காரனும் கல்யாணம்பண்ணவும் தம்பிகள கவனிக்காம தருதலையா விட்டுட்டான்னு ஊருக்குள்ள பேசுவாங்கன்னுதாம்மா.......என்ன பண்ணுறேன்னு தெரியாம பண்ணிட்டேன்.........” என்றபடி தன் தம்பியின் காயத்தை வருடிவிட...............



“அண்ணே.......... நான் பண்ணுனது தப்புதானே..............நீங்க என்னைய அடிச்சது ஒன்னும் தப்பு இல்லண்னே..............”



சாவித்திரியும்” விடு கண்ணா மனச போட்டுக் கொழப்பிக்காத..............அவனும் தப்பு செஞ்சான்ல......புறவு...... ஆனா மருமக தாம்பா.........பாவம்....... நான்கூட குறுக்க வர யோசிச்சேன்......ஆனா இந்தபுள்ள தாம்மேல விழுந்த அடியக்கூட தாங்கிக்கிட்டு நம்ம முத்துவ பிடிச்சுருக்கான்னா எம்புட்டு நல்ல பிள்ளயா இருக்கனும்.......அது மத்தவங்க மாதிரி சூதுவாது தெரியாம வளந்திருக்குப்பா பச்ச மண்ணா இருக்குப்பா......கடவுள் ஒனக்கு தங்கம் மாதிரி ஒரு பொண்டாட்டிய குடுத்திருக்கு.......... அத தொலைச்சிப்புடாம வச்சுக்கப்பா..........இனிமே யாரையும் கைநீட்டுற வேலை வச்சுக்காத.......”என்று தொடர்ந்து அறிவுரைகளை கூற...........முத்துவும் கண்ணனும் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்க ராமனும் வந்து தன் தாயின் மறுபுறம் அமர...........



“நீங்க எப்பவும் என்ன பிரச்சனை வந்தாலும் ஒத்துமையா இருக்கனும்பா..... .அண்ணன் ஒன்னு சொன்னாக்கா அதுல நல்லது மட்டும்தான் இருக்குமுன்னு புரிஞ்சு நடந்துக்கனும் புரியுதா............ சரி சரி........... போய் படுங்க..........” என்றவர் கயலின் மறுபுறம் வந்து படுத்தார்............
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அங்கிருந்த அடுத்த ஒரு வாரத்திலும் கயல் கண்ணனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.......மாடியிலும் சென்று படுக்கவும் இல்லை .......பகலில் மாடியேறி தன் பேக்கில் சில பொருட்களை எடுத்தாலும் இரவில் மறந்தும் மாடி ஏறவில்லை............ கண்ண்னும் அவள் மாடிக்கு சென்று வருவதை பார்த்தாலும் எதையும் கேட்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் அவள் அவனை கண்டுக்கொள்ளவில்லை...அவன் வலியபோய் பேச வரும்போதும் அவள் குடுகுடுவென்று ஓடி சாவித்திரியிடம் சென்று அமர்ந்துக் கொண்டாள்........



அந்த ஒருவாரத்தில் கயலின் காயம் ஆறவும் “ஆத்தா கயலு இன்னைக்கு ஊருக்கு கிளம்புங்கத்தா......... இன்னைக்கு நீங்க போகாட்டா........ அப்பத்தா நாளைக்கு இங்க வந்துருவேன்னு சொன்னாங்க............. அது மொறையா இருக்காதுத்தா..........நீங்கதான் போகனும்............ அதுதான் மொறையும் கூட............”

அடுத்த அரைமணி நேரத்தில் கயல் சுடிதார் போட்டு இறங்கிவர..........



“என்னத்தா ஒரு சீலய கட்டிக்கட்டு போகக்கூடாது.”



“இல்லத்த........ இடுப்புல லேசா இன்னும் அந்த சிவப்புமாறல.......... அதான்த்த.........”.



காரை தவிர்த்து கண்ணன் தன் வண்டியில் அவளை அழைத்துச் செல்ல........அவனின் பின் புறம் அமர்ந்திருந்த கயல் அவனை விட்டு எவ்வளவு தள்ளி உக்கார முடியமோ அவ்வளவு தள்ளி உட்கார்ந்து அங்கிருந்த கம்பியை பிடித்திருந்தாள்......



கண்ணனோ காரில் சென்றால் சீக்கிரமாகவே சென்றுவிடலாம் என்பதால்தான் அதை தவிர்த்து.........வண்டியை எடுத்திருந்தான்........வண்டியை ஓட்ட ஆரம்பித்ததிலிருந்து எப்புடி இவகிட்ட பேச்சை ஆரம்பிப்பது........... என்று யோசித்துக் கொண்டிருந்தான்.......இவ வீட்டுக்கு போயிட்டா...... அப்புறம் பேச முடியுமோ என்னமோன்னு தெரியலயே..........எப்புடியாச்சும் எங்கயாவது வண்டிய நிப்பாட்டி இவகிட்ட ஒரு வார்த்தையாவது பேசிரனும்..........



கயலோ................ இந்த முத்துபயலுக்கு அறிவே இல்லை.........நாமெல்லாம் அப்பாத்தாகிட்ட அடிவாங்கும் போது எப்படி குதிச்சு அடி மேலயே விழுகாம எஸ்கேப் ஆகி அடி வாங்குனமாதிரியே அழுது ஊரக் கூட்டுவோம்.............ஆனா இவரு போட்டு இப்புடி மாங்கு மாங்குன்னு அடிக்குறாரு இந்த பய குத்துக்கல்லு மாதிரி அசையாம நிக்குறான்...........ஆனாலும் இவனுக்கு ரொம்ப அழுத்தம்பா........நாம தான் தேவை இல்லாம குறுக்கப் புகுந்துட்டோம்..........முத்துவுக்கு இன்னும் டிரைனிங் பத்தல........ நாம ஊருக்கு போயிட்டு வரவும் அவனுக்கு கொஞ்சம் டிரைனிங். குடுக்கனும்............



எத்தன தரம் மல்லிகாவ இப்புடி புகுந்து அப்பத்தாகிட்ட இருந்து காப்பாத்தி இருக்கோம்....... அப்பத்தா மாதிரி இவரும் லேசா அடிப்பாருன்னு பாத்தா............. அம்மா........... என்ன அடி...........ஒவ்வொரு அடியும் எப்புடி சுளீர் சுளீர்னு விழுகுது............யுவர் ஆனர்……… இனிமே அடிக்கறாதா இருந்தா கை, சின்ன கம்பு, விளக்கமாறு இத மூனுமட்டும் தான் வச்சு அடிக்கனும்னு இவுக ரெண்டு பேருகிட்டயும் ஆர்டர் போடனும்......... இந்த பெல்ட்ட ரிஜெக்ட் ஆக்கனும் ஆனரே.......... என்று கேட்டு வாங்கனும்........ இல்ல அப்புடித்தான் அடிவாங்கனும்னா.........வடிவேல் மாதிரி கூடைய கட்டிக்கணும்பா...................டேய் என்னைய அடிச்சுட்டீல.........உன்னைய பழிவாங்காம விடமாட்டேன்..........இவனை என்ன பண்ணலாம்..........



கண்ணன்....”.உங்கிட்ட கொஞ்சம்.........பேசனும்............”



இவரு யாருகிட்ட பேசுறாரு..........இவள் ஏதும் பேசாமல் இருக்க............



இவள் ஏதும் பேசாமல் வரவும் வண்டியை ஒரு ஓரமாக மரநிழலில் நிப்பாட்டியவன் அவள் புறம் திரும்ப.........அவள் வண்டியிலிருந்து இறங்கி அவனுக்கு முதுகை காட்டி நின்றாள்..........

“உன்கிட்டதான்........பேசனும்.......”..



டேய் போடா உனக்கு என்னோட பேரு தெரியாதா.............



“உங்கிட்டதான் பேசனும்.......... இங்கபாரு......இங்கபாருன்னு சொல்லுறேன்ல.......”என்றபடி அவள் முன்னே வர............

அவள் மீண்டும் திரும்பப் போக கண்ணன் அவன் கையைபிடித்து திரும்பவிடாமல் நிறுத்தியிருந்தான்.........



“இங்கபாரு நீ அன்னைக்கு குறுக்க வந்ததுதப்புதானே.........?.”..



அடப்பாவி இவரு அடிச்சது தப்புல்லயாம்.........நான் குறுக்கால வந்ததுதான் தப்பாம்........டேய் நீ நல்லா வருவடா..........



“அன்னைக்கு நீ குறுக்க வருவேன்னு நான் நினைக்கவேயில்ல.........”



அவ்வளவுதான் கயலுக்கு பொறுக்கமுடியவில்லை........”.குறுக்கவராட்டா.......அந்த அடியும் சேத்துதானே முத்துவுக்கு விழுந்திருக்கும்.....அவன் பாவம்தானே....ஏன் வாயால சொன்னா கேட்டுக்கமாட்டானா.....இப்புடி போட்டு மாட்டடி மலையடியா அடிக்குறீங்க...... அவனுக்கு அப்பா இல்லனுதானே......போட்டு அடிக்குறீங்க........... இனிமே எங்கிட்ட பேசாதீங்க..................”



“அப்ப அவன் பண்ணுனது தப்புல்லயா...........”



“தப்புதான்..........”



“சரி விடு இனிமே .......அடிக்கமாட்டேன்......”



..மேலும் கண்ணன் அன்று அவன் அம்மாயிடமும் தம்பியிடமும் பேசியதையும் இவள் அறைத்தூக்கத்தில் கேட்டு இருந்தாள்........அதனால் அவனை பெரிய மனது பண்ணி மன்னித்திருந்தாள்.......



ஆனா இவனுக்கு தண்டனை கொடுக்கனுமே............” சரி வாங்க போகலாம்.......”



அப்ப இவ இனிமே எங்கிட்ட பேசுவாலா....... ஒன்னுமே சொல்லாம கிளம்பச்சொல்லுறா..........



“அப்ப என்கிட்ட நீ பேசுவியா...........”



“நான் சொல்லுறத மட்டும் கேளுங்க.......இப்ப வண்டிய எடுங்க........”.



என்னடா இவ நமக்கே ஆர்டர் போடுறா............ நம்மகிட்ட பேசுவாளா......மாட்டாளா....... என்று மனதிற்குள் நினைத்தபடி............ வண்டியை கிளப்பினான்............சிறிது தூரம் சென்றவுடன்.............



“நிப்பாட்டுங்க......... நிப்பாட்டுங்க...........”. என்றவள் ஒரு ஐஸ்கிரீம் கடையில் நிப்பாட்டச் சொல்ல..................



“என்ன ஒனக்கு ஐஸ்கிரீம் வேணுமா............”



“ஆமா.......”.



“எத்தனை வாங்கித் தர..............ஒன்னா ரெண்டா............”.



தன் ஐந்து விரலை கைகாட்டினாள்..........



“என்ன அஞ்சு வேணுமா............ உடம்புக்கு ஆகுமா................”டேய் அவ இப்பதான் பேச ஆரம்பிக்குறா......... எப்புடியாச்சும்.....பேச்ச வளத்துரு.......

“இல்ல எனக்கு அஞ்சு பெரிய பேமிலி பேக் வேணும்...............”



“ஏய் ஒன்னொன்னும் 500 .......1000........இருக்குமே........?.”.



“எனக்கு வேணும் ………..”என்று அடம்பிடிக்க..............இவ அடங்கமாட்டா போலயிருக்கே...... என்று நினைத்து வாங்கிக் கொடுத்து..................

“சரி சாப்புடு............”

“இல்ல இல்ல........... வீட்டுக்கு போயிறளாம்......”

“சரி வா “என்று வண்டியில் ஏறிக் கிளம்ப..........

எப்புடி கஞ்சபிசுனாரிய............காசு செலவழிக்க வச்சுட்டனா............. என்று மனதிற்குள் குதூகலித்தபடி வண்டியில் ஏறி உட்கார்ந்தவள்.................... இப்போது இரு கையிலும் ஐஸ்கிரீம் இருந்ததால் காலை இருபுறமும் போட்டு உட்கார்ந்திருந்தாள்........



வண்டி சிறிது தூரம் சென்றதும்...............மெதுவாக அந்த ஐஸ்கிரீம் பாக்சை எடுத்து அவன் முதுகில் வைக்க............

“ஸ்ஸ்ஸ்......ஏஏஏஏ...... என்ன பண்ணுற............குளுறுது...........”



“குளுறுதா..........நல்லா....குளுறட்டும்...........உங்களுக்கு நல்லா வேணும் “என்று சிரித்தவள்.............. கொஞ்ச தூரம் சென்றதும்............மெல்ல ....ரெண்டு ஐஸ்கிரீம் பாக்சை அவன் முன் தொடையில் அவன் வேட்டியின் மீது வைக்க............



“ஏய்............”.என்று வண்டியை நிப்பாட்டியவன்........... அவளை திரும்பிபார்க்க...........”. ஏய் என்ன பண்ணுற...........”



“எப்புடி......... என்னோட........தண்டனை..........”என்று சிரிக்க..............



பெல்டால் அடித்த தனக்கு........... இப்புடி ஒரு தண்டனையா................இவளின் இந்த சிறுபிள்ளைத்தனத்தில் கண்ணனின் கண்ணும் மனமும் நிறைந்தது................அவன் உள்ளார்ந்த சிரிப்போடு அவள் முன் நெற்றியில் முட்டி சிரிக்க...........



“ஸ்ஸ்ஸ்..........” என்று அவள் முன் நெற்றியை தேய்த்துவிட்டு சிரிக்க...................



இவர்களின் சிரிப்பு..................நிலைக்குமா....................?

தொடரும்...................

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top