நேசம் மறவா நெஞ்சம்-11 Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியையம்-11


“ஏய்கயலு.......ஏய் கயலு.......”


“இதோ வர்றேன்டி.......”


“ஏய் காலேஜ்க்கு நேரமாச்சு பஸ்போயிரும்னு கத்திக்கிட்டு இருக்கேன்....... நீயேன்டி இப்படி ஆடி அசைஞ்சு வர்ற......?”

காந்திமதி” ஏய் கயலு நானும் துணைக்கு வரவா.....?”

“எதுக்கு இத்தனநாளா நீயா துணைக்கு வந்த...? அது தான் அமுதாவ இன்னைக்கு வீட்டுக்கு வரச்சொல்லிட்டேன்ல அப்புறம் எதுக்கு நீயும் வர்ற....?”


“சரி சரி பேச்சை குறைச்சுக்கிட்டு ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வாங்க.....”


“ஏய் வாடி நேரமாச்சு நீ அப்புறம் உங்க அப்பத்தாவ கொஞ்சிகிட்டு இரு..........”


“நீ வேற ஏண்டி கடுப்பேத்துர வரவர எங்க அப்பத்தா ரொம்ப பண்ணுதுடி”


“ஏன் என்னாச்சு உங்க அப்பத்தாவ தான் உனக்கு ரொம்ப புடிக்குமேடி...?”


“இப்பவும் புடிக்கும்தான் ஆனா அது பண்ணுற எல்லாத்தையும் பொருத்துக்க முடியலடி......”


“இப்ப ஒரு பத்துநாளா ரொம்பண்ணுதுடி அங்க போகாத பேசாத ஓடாதன்னு ஒரே தொல்ல..........”.


“நான் எங்க போறேன் காலேஜ்…………………. அத விட்டா வீடு……………. வேற எந்த எடத்துக்கும் போறதில்ல..மத்தநேரத்துல வாசபக்கம் கூட விடமாட்டேங்குதுடி.....நேத்து அயன் பண்ணுற அண்ணன் வந்து டிரஸ் குடுக்குராரு இதுவும் என்னோட முதுகுக்கு பின்னாடி வந்து எட்டி எட்டி பாத்துக்கிட்டு இருக்குடி வயசான மூளையும் கொஞ்சம் குழம்பிபோயிருமோ.............”.


“நேத்து போன்ல உங்கிட்ட தாண்டி பேசிகிட்டு இருக்கேன் கதவுக்குகிட்ட வந்து காத வச்சு ஒட்டுகேட்டுகிட்டு இருக்கு .......இதோட டார்ச்சர் ஒரு எல்லையில்லாம போயிட்டுயிருக்குடி..............”


“ஏன் உங்க அம்மா அப்பா எங்கடி.........? உங்க அம்மாட்ட சொல்ல வேண்டியது தான....?”



“கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாளு தான இருக்கு அம்மாவும் அப்பாவும் காலையில கிளம்பி பத்திரிக்கை குடுக்க,சாமான் வாங்கன்னு அலைஞ்கிட்டு சாயங்காலம் தான் வர்றாங்க .......”


“ஆமா சுதாக்கா ........?”



”அவளுக்குதான் என்ன ஆச்சுன்னே தெரியல ........முன்னாடியெல்லாம் டிவி முன்னாடியே கதியா கிடப்பா.......


“அப்படி என்னடி பாப்பா......? படமா......?இல்ல உங்க அப்பாத்தா மாதிரி சீரியலா.....?”


“ச்சீ ச்சீ.அதெல்லாம் அவளுக்கு பிடிக்காது....அவளுக்கு பிடிச்சதெல்லாம் இந்த அலங்காரம் பண்ணுறது மாடல் மாடலா தலை சீவி விடுவாங்கள்ல அதுதான் பாப்பா.........ஆனா இப்ப ரூமுள்ள என்ன பண்ணுறான்னே தெரியலயே....”


“ஒருவேள அவளுக்கு பாத்துருக்குற மாப்ள கூட போன்ல பேசுவாளோ.......”


“யாரு எங்க அப்பத்தா இருக்குற வீட்லவேற யாரோடயும் போன்ல பேச முடியுமா......அது மட்டும் தாண்டி போன்ல பேசும்........அடுத்தவங்க பேசுறது கேக்குமோ கேக்காதோ........இது பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கும்.......கல்யாணத்துக்கு அப்புறம் தாண்டி பொண்ணும் மாப்ளையும் பேசணும்னு அதுக்கு முன்னாடி பேசக்கூடாதுன்னு எங்க வீட்ல தாமர அக்கா கல்யாணத்திலயே ஸ்டிக்ட் ஆர்டர்டி.........”


“ஒரு வேள பயப்படுறாளோ எப்படி வேற வீட்ல போய் இருக்குறதுன்னு.....”


“ஒன்னுமே புரியலடி நாளைக்கு தாமர அக்கா வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்கு.... அது வந்தா தாண்டி அது புள்ளைகளோட நல்லா ஜாலியா இருக்கும்....நமக்கும் இன்னும் ரெண்டு பரிச்சை தானே இருக்குஅப்புறம் ஒன்றரை மாசம் லீவு. இந்த லீவ நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணனும்டி............. கல்யாணத்துக்கு போடுறதுக்குன்னு டிசைன் டிசைன்னா தோடு கண்ணாடி வளையல்ன்னு தாவனிக்கு மேட்சா நம்ம ஊரு திருவிழா கடையில வாங்கிவச்சுறுக்கேன். இந்த அப்பத்தா என்னன்னா சேலைதான் கட்டணும்னு சொல்லுதுடி.........”


“அடிப்பாவி சேலைவேற புதுசா வாங்கியிருக்கியா...............நான் உங்கிட்ட ஒரு கிளிப் வாங்கினாக்கூட சொல்லிட்டுதானடி வாங்குறேன்......நீ எப்படிடி சொல்லாம வாஙகுன..........?.”.


“ஏய் ஏய் கொஞ்சம் நான் சொல்லுறத கேளுடி............அன்னைக்கு பட்டெடுக்க போகும்போது ஆளுக கணக்குக்கு என்னையும் கூட்டிக்கிட்டு போனாங்கள்ல அப்ப ஒரு சேலை நல்லாயிருக்குனு வச்சுபாத்துகிட்டு இருந்தனா அதபாத்துட்டு அந்த ஐயனாரு வாங்கிகுடுத்துருக்காருடி………..”


“யாரு சுதாக்கா மாப்ளயா............அவரு உனக்கு மாமாவாக போறவருடி ஆனா அவர பாத்தா ஒரு பொம்பளபிள்ளைக்கு போயி சேலை எடுத்து குடுக்கிறவர் மாதிரி தெரியலயே.................”.


“எனக்கும் அதே டவுட்டுதான்டி.........எப்பபாத்தாலும் உர்ருன்னு இருக்காரு. அப்புறம் அன்னைக்கு அவரு தம்பிக்கிட்ட பேசிகிட்டு இருந்தேன்ல அவனுக இவரு ஒரு ஸ்டிக்ட் ஆபிசர் அனாவசியமா ஒரு பத்து காசு கூட செலவு செய்யமாட்டாருன்னு சொன்னாங்க பின்ன இவரு எப்படி எனக்கு சேலை எடுத்து குடுத்தாரு.............ஒரு வேளை இப்படி இருக்குமோ............”


“எப்படி...........?.”


“அதாண்டி இப்ப டிவில எல்லாம் விளம்பரபடுத்துறாங்கள்ல ஒரு சேலை வாங்கினா ஒரு சேலை ப்ரின்னு அது மாதிரி அந்த சேலை வாங்குனதுக்கு இந்த சேலை ப்ரியாயிருக்குமோ.................”


“அதயேன்டி உனக்கு குடுக்கணும்..........அவரு அம்மா இருக்காங்கள்ல......”


“இந்த சேலை கல்லு வச்சுயிருக்குடி...........ஒரு வேளை ரெண்டுதரமும் திட்டுனதுனால போனாபோகுதுன்னு எனக்கு குடுத்திருப்பாரோ...........”.(.ஒரு சேலை கொடுத்ததுக்கு இந்தபாடா ஸ்ஸ்ஸ் அப்பா முடியல.............)


“சரி சரி தொலஞ்சுபோ............. அப்புறம் பரீச்சையின்னுசொல்லவும் தான்டி ஞாபகம் வருது...........நாளகளச்சு எனக்கு பஸ்ட்இயர் பிசிக்ஸ் அரியர் எக்ஸாம் வருது.............இந்த வருசம் நடத்துனதே ஞாபகம் வரல இதுல போன வருசம் நடத்துனது எப்படிடி ஞாபகம் வரும்........”
.

”கஷ்டமாயிருந்தா வீட்டுக்குவாடி..............நான் சொல்லிதாரேன்............”


“வரலாம் ஆனா நீ எனக்கு சொல்லித்தாரேன்னு நீயும் படிச்சிருவியே.........”.


“அடிப்பாவி...........எனக்குதான் அரியரே இல்லயில்லடி.........”


“இல்ல இல்ல இந்த வருசம் பிசிக்ஸ் பரிச்சைக்கு அதுல இருந்து ஏதாவது ஒரு கேள்வி கேட்டு நீ ஒழுங்கா எழுதி பாஸ்பண்ணீட்டன்னா.............”


“உன்னய இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்டி................”.என்றபடி அவள விரட்டிக்கொண்டு ஒட.............
.மறு நாள் தாமரை வந்ததிலிருந்து வீடு கல்யாணக்களை கட்டியது .கயலும் பரிட்சை முடிந்தவுடன் தாமரைக்கு உதவியாக வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.காந்திமதியும் இப்போது முழுநேரமாக கயலை கவனிப்பதயே ஒரு வேலையாக வைத்திருந்தார்.


திருமணம் நான்கு நாட்கள் இருக்கையில் சொந்த பந்தங்கள் அனைவரும் வர வீடு ஜேஜே என்று இருந்தது மல்லிகா கயலிடம் வந்து.


“அக்கா உங்கிட்ட எத்தன நாளா இந்த ரெக்கார்டு நோட்ல படம் வரஞ்சுதான்னு சொல்லுறேன்.நீயும் நாளைக்கு நாளைக்குன்னு நாள கடத்துற.......சுதாக்கா கல்யாணம் முடிஞ்ச மறுநாள் நோட்ட சமீட் பண்ணனும் நானே கல்யாணம்ன்னு சொன்னதுனால அந்த science teacher ரெண்டு நாள் டயம் குடுத்தாங்க please கா வரைஞ்சு குடு..........”


“இருடி நாளைக்கு கண்டிப்பா வரஞ்சு தாரேன்........”


“நேத்தும் இப்படிதான சொன்ன…………?”


“ நானெல்லாம் ஒரே பேச்சு ஒரே சொல்லு உள்ளவடி மாத்தி மாத்திலாம் பேச மாட்டேன் .நாளைக்கு கேளு அப்பவும் இப்படித்தான் சொல்லுவேன்............”


“அக்கா.............”..என்று சிறுபிள்ளை போல அழ ஆரம்பிக்க


“ஏய் ஏய் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி..........please please மன்னிச்சுக்கடி. அக்கா உனக்கு கண்டிப்பா வரஞ்சு தருவேன்டி........எங்க சிரி சிரி பாப்போம்” என்று கிச்சுகிச்சு முட்ட மல்லிகா சிரித்தபடி அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தாள்............

 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மறுநாள் கல்யாணம் .....


அன்று சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டார் வர அவர்களை வரவேற்று வீட்டிற்கு அருகில் உள்ள அந்த பெரிய சமுதாயகூடத்தில் தங்க வைத்தனர் ....(அங்கெல்லாம் மண்டபங்கள் இருக்காது) .


“ஆத்தா சகுந்தலா நாளைக்கு கோயிலுக்கு போறதுக்கு எல்லாம் பொருளையும் எடுத்து வச்சிறு இப்பவே மணி ஏழாச்சு காலையில 5 மணிக்கு வேன்னுல ஏறுனாதான் 6 மணிக்கு கெல்லாம் கோயில்ல இருக்கலாம்.7 ½ மணிக்கு முகூர்த்தம் அதுக்குள்ள எல்லா வேலையும் முடிச்சிரணும்...”



“ஆமா மாணிக்கம் எங்க ........”



“அவுக தாமர மாப்ளயோட போயி மாப்பிள்ளை வீட்டாருக்கு பந்தி பார்க்க போயிருக்காங்க……………( பந்தி பார்ப்பது என்பது மாப்பிள்ளை வீட்டார் சாப்பிடும்போது பந்தி பரிமாறுபவர்களோடு சேர்ந்து தனிதனியாக உபசரிப்பது இதை தான் மாப்பிள்ளை வீட்டார் கௌரவமாக கருதுவார்கள்.)



“சரித்தா சரித்தா அங்க மாப்பிள்ளையோட ஒன்னுவிட்ட சித்தப்பா பொண்ணுதான் நாத்துனா முறைக்கு அந்த மூணாவது முடுச்சு போடுதுன்னு சம்பந்தி அம்மா சொன்னாங்க. அந்த பொண்ணுக்கு குடுக்க பலகாரசட்டியும் சேலையும் எடுத்து வச்சுட்டியாத்தா.........”.


“பத்திகளாத்த மறந்தே போயிட்டேன்……………. நல்ல வேளை ஞாபகபடுத்தினீக பலகாரசட்டிய எடுத்துவச்சுட்டேன்.சேலைய தான் சுதாகிட்ட குடுத்தேன். இருங்கத்தே நாபோயி வாங்கிட்டு வாரேன்.”



“இருத்தா இருத்தா…………. நீயும் எம்புட்டு வேலையதான் பாப்ப.....நீ இங்க இருக்க வேலைய பாரு நாபோயி வாங்கியாரேன்........”..என்றபடி சுதாவின் அறைக்குச் செல்ல அங்கு சுதா அறையில் இல்லை. அருண் தன் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருக்க



“டேய் அருணு .........டேய் அருணு.......”.




“என்னப்பத்தா.......?.”



“எங்கடா சுதாக்கா......?..ரூமுகுள்ள காணோம்.........?”


“அவ யாருகிட்டயோ போன்ல பேசிகிட்டு கொல்லபுறத்துல இருக்குற அந்த பலா மரத்துகிட்ட நின்னுகிட்டு இருக்காப்பத்தா.............”



“அங்க ஏன்டா அவ போனா அங்க ரொம்ப இருட்டாவுல இருக்கும்..............?”என்றபடி அங்கிருந்த அவள் பீரோவை திறக்க...............அங்கு நிறைய கிப்டு பார்சல்கள் பாதி பிரித்தும் பிரிக்கபடாமலும் இருந்தது. மேலும் நிறைய வண்ண வண்ண பட்டுச்சேலைகள், வாட்ச். கைப்பைகள், வகைவகையான விலை உயர்ந்த கிளிப்புகள். மேலும் ஒரு பெட்டியில் விலை உயர்ந்த போன்..........இன்னும் நிறைய கிப்ட்கள் இருந்தது. இதெல்லாம் ஏது...................சகுந்தலா இதெல்லாம் வாங்குனமாதிரி தெரியலயே................வாங்குன எல்லா பொருளயும் நம்மகிட்ட காமிச்சுட்டுதான வச்சா..............இதுல இருக்கிற எந்த பொருளயும் பாத்த ஞாபகம் இல்லயே...........



அப்பத்தா கையில் கிப்ட் பாக்சை வைத்து பார்த்து கொண்டிருப்பதை கண்ட அருண்



“என்னப்பத்தா இந்த கிப்ட்டையே பாத்துகிட்டு இருக்கீங்க........?.”.



“இதெல்லாம் ஏதுடா...........எப்படி சுதாவோட பீரோவுக்குள்ள வந்துச்சு............?.”



“இது உங்களுக்கு தெரியாதா..........அக்கா கோயிலுக்கு போயிட்டு வருவாள்ல அப்ப கொண்டு வருவா........”


“யாருடா குடுத்தா.....?”



“எனக்கு எப்படி தெரியும்……….”



“நீதானடா துணைக்கு போன.....?.”.


“நான் கோயில் வாசல்வரைக்கும் தான் துணைக்கு போவேன், அப்புறம் என் பிரண்ட்ஸோட விளையாட போயிருவேன். அப்புறம் வந்து கூட்டிகிட்டு வருவேன்……….”.
காந்திமதிக்கு மனதிற்குள் ஏதோ பிசைய தொடங்கியது. ஏதும் தவறாக நடக்கிறதோ...............



.”.கடவுளே அந்த பூசாரி சொன்னது நடந்துருமோ....................நான் கயலயில்ல சந்தேகப்பட்டுகிட்டு இவளயில்ல கவனிக்காம விட்டுட்டேன்........ இத்தன சாமானுகளை பீரோவுல வச்சுருக்கா எப்படி கவனிக்காம இருந்தேன்.......மருமக வீட்டுல இல்லாம கல்யாணவேலையா அலைஞ்சது இவளுக்கு தோதாப்போச்சோ.............?
இவ என்ன பண்ணிவச்சுருக்கான்னு தெரியலயே.......காளி.......கருப்பா...........நீதாம்பா என்னோட குடும்ப மானத்த காப்பத்தனும்..............எம்மவன் ஒன்னுந்தெரியாத அப்புரானி,வெளுத்ததெல்லாம் பாலு கருத்ததெல்லாம் கம்பளின்னு இருப்பானே.........இன்னும் மூனு பொம்பளபிள்ளங்க வேற இருக்கே.................எம்பிள்ள மனசு உடையாம காப்பாத்திக்குடுடா.............”. என்றபடி கையில் ஒரு சிறிய கிப்டை எடுத்துக்கொண்டு சுதாவைத்தேடி கொல்லைப்புறத்திற்கு செல்ல................




அந்த பெரிய கொல்லைப்புறத்தில் இருந்த அந்த பெரிய பலாமரத்தின் அருகில் யாரோ போன் பேசிக்கொண்டிருப்பதை கண்டு காந்திமதி அருகில் வரவர.............சுதா சத்தம் குறைவாக யாருடனோ போன் போசிக்கொண்டிருந்தாள்..................அந்த பக்கம் என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை..........இந்தபக்கம் இவள்................



“ம்ம்ம்.........சொல்லுங்க.....”..



“அதுதான் சொல்லிட்டேன்ல.........”..



“ஒரு தரம் சொன்னாலும் அதுதான் ஓயாம சொன்னாலும் அதுதான்...............என்னால வீட்டவிட்டு ஓடிவந்தெல்லாம் கல்யாணம் பண்ணிக்கமுடியாது..........திருட்டு கல்யாணமெல்லாம் பிடிக்காது..........நல்லா சீரும் சிறப்புமா நகைநட்டோட சும்மா கெத்தா கல்யாணம் பண்ணனும் நீங்க ஒரு ஆம்பளதானே................ நான் சொன்னமாதிரி கல்யாணம் நடக்க என்ன வழியோ அதன்படி யோசியுங்க.......”



“ஆமா........”



“சரி செய்யுறேன்...........”


“அதுமட்டும் தான் செய்யுவேன்............”



“சரி சரி................”


“இங்க யாருக்கும் எம்மேல சந்தேகம் வரல..........நான் நாளைக்கு கல்யாணம் முடிச்சாலும் இங்க எங்க வீட்டுக்கு எப்பவும் வந்து போறதுமாதிரி இருக்கனும். எங்க அக்கா இங்க வந்துட்டு போறமாதிரி நானும் இங்க வந்து நாலுநாளைக்கு சட்டமா இருந்துட்டு போகனும்.................”


“ம்ம்ம்ம்...............”


“சரி சரி..........”


“நான் சொல்லுறத மட்டும் கேளுங்க........... எனக்கு இந்த ஆர்டர் போடுற வேலையெல்லாம் பிடிக்காது...................”


“சரி சரி ரொம்ப கெஞ்சாதீங்க.......விடுங்க.......”


“அந்த மாப்ளயா..........ம்ம்ம் வந்துட்டாராம்.............”.


“அதபத்தி எனக்கு தேவையில்ல......”


“அவரபத்தி எனக்கு என்ன கவலை...........இனிமே ரொம்ப நேரம் போன்ல
பேசமுடியாது...........காலையில பாப்போம்............ம்ம்ம்………….” என்று போனில் பேசியபடி சுதா மரத்தின் அந்தபுறம் சுற்றிக்கொண்டு செல்ல............

அவள் பேசியதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கீழே மயங்கி விழப்போன காந்தமதியை இருபுறமும் தாங்கிப்பிடித்தன இரு உருவங்கள்.................................

யார்............?

தொடரும்...................​
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பிராணி கயலுப் புள்ள
மேல மட்டும் உன்னோட
நொள்ளக் கண்ண வைச்சு
காவக் காத்துட்டு இப்போ
இப்படி சுதாவ கோட்டை
வுட்டுட்டியே காந்திமதி
அப்பத்தா?

காந்திமதி அப்பத்தாவைத்
தாங்கிப் பிடித்தது யாரு,
பிரியா டியர்?
கயலும், தாமரையுமாப்பா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top