நேசம் மறவா நெஞ்சம்-10 Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-10



சாவித்திரி தன் சம்மதத்தை தெரிவித்ததும் காந்திமதிக்கு மிகவும் சந்தோசமாகபோயிற்று. தங்கள் குலசாமி கொடுத்த உத்தரவுபலிக்க போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.மேலும் கண்ணன் குடும்பத்தை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.



சாவித்திரி காந்திமதியிடம்” ஆத்தா கண்ணனுக்கு பொண்ணு பிடிச்சுருச்சு.நீங்க உங்க பேத்திக்கிட்ட கேட்டு உங்க சம்மதத்த சொல்லுங்க......”



“என்னத்தா இப்படிச் சொல்லுற என்னோட பேத்திக எல்லாருமே நாங்க கிழிக்குற கோட்ட தாண்டமாட்டாளுக. எங்களுக்கு பிடிச்சிருந்தா போதும்.பெத்தவுக என்னைக்கும் பிள்ளைகளுக்கு நல்லதுதான் நடத்திவைப்பாங்கன்னு அவுகளுக்கு தெரியும்தா..........அதுனால எங்களுக்கு முழுச்சம்மதம்.”

“ அப்ப ரொம்ப சந்தோசம்..........”



அழகர் சாவித்தரியிடம்” தங்கச்சி கல்யாணத்த எப்ப வச்சுகலாம்ன்னு நினைக்கிறீங்க இப்ப வைகாசி முடியபோகுது. ஆனி ஆடி போக ஆவணில முடிவு செஞ்சுகலாமாத்தா.....”



“இல்லண்ணே தம்பிக்கு ஆனி 25ந்தேதி யோட 27 வயசு முடியுது அதுநாள அதுக்குள்ள தேதிய வச்சுக்கிலாம்னே..”



“என்னத்தா இடையில ஒரு மாசந்தான இருக்கு ..........”



“ஒரு மாசம் பத்தாதாண்ணே........எங்களுக்கு நகை நட்டெல்லாம் ஒன்னும்

தேவையில்லணே கட்டுனபுடவயோட அனுப்புனா கூட போதும்ண்ணே....”



காந்திமதி” சாவித்திரி என்ன அப்படி சொல்லிப்புட்ட........ நாங்க எங்க பேத்திய சும்மாவ அனுப்புவோம்.....சீரும் சிறப்புமா எல்லாச்சீரும் செஞ்சுதாத்தா அனுப்புவோம்....”



“உங்க பிள்ளைக்கு நீங்க போடுறீங்க அது உங்க பிரியம்தா........ அப்புறம் ஒரு சின்ன விசயம்ண்ணே எங்கவீட்டு பிள்ளைகளுக்கு எல்லாமே கோயில்ல வச்சு தானே கல்யாணம் நடத்துறது பழக்கம் நம்ம கண்ணனுக்கு குன்றக்குடி முருகன் கோவில்ல நடத்தலாம்னு பாக்குறேண்ணே...”



“அதுக்கென்னத்தா நடத்திரலாம்....”



“அப்பனா இன்னக்கே ஒப்புதாம்புலம் மாத்திகலாம்ணே .......”



“கலியாணத்தன்னக்கு காலையில வெள்ளன பேசிமுடிச்சு உடனே கல்யாணத்த வச்சுகலாம்தா அப்பதான் எதாவது ஒரு நல்லது கெட்டதுனா போக வர சரியாயிருக்கும்.” அங்கிருந்த காலண்டரில் முகூர்த்த நாள் பார்க்க

“ஆனி 23ம்தேதி நல்லாயிருக்குனே...அன்னைக்கே கல்யாணத்த வச்சுகலாம்.”

அங்க வந்திருந்த பெரியவர்களை வைத்து முகூர்த்த ஓலை எழுதப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.



பின் அனைவரையும் கோவிந்தனும் தாமரையும் சாப்பிட அழைத்துச்சென்றன.ராமனும் சாப்பிட்டு முடித்து கை கழுவசென்ற போது தண்ணீர் இல்லாததால் மல்லிகா தண்ணீர் குடத்தை தூக்கிக்கொண்டு வந்தாள்.



ராமர் மல்லிகாவிடம்” ஏய் இங்க வா..........”

இவரு மாப்ளேயோட தம்பிதானே அப்ப நம்மல பாத்து கண்ணு அடிச்சாரா இல்லையாண்ணே தெரியலயே இப்பஎதுக்கு கூப்புடுறாரு......

” நான் யாருன்னு தெரியுதுல்ல”



“ஆமா நீங்க சுதாக்கா மாப்ளயோட தம்பிதானே”

“ஆமா.. ஆமா..... நீ நான் சொல்லறபடி ஒழுங்கா நடக்கணும் என்ன புரியுதா...... உங்க அக்கா எங்க வீட்டுக்குத்தான் வாழ வரப்போறாங்க தெரியுமில்ல..........?அதுனால நான் என்ன சொன்னாலும் கேக்கணும் புரியுதா.............?”

“ஓ......அப்படியா”

“என்னங்க இப்படி நடந்தா போதுமா......”.என்றபடி நடந்துகாட்டியவள்.

” உங்க வீட்டுக்கு எங்க அக்கா வாழ வந்தா நீங்க ரொம்ப பேசுவீங்களோ. எங்க அக்காகிட்ட உங்க ஜம்பம் எல்லாம் பலிக்காது நான் வேணா நீங்க பாவம்னு சொல்லி போனா போதுன்னு நல்லா பாத்துக்கச் சொல்லுறேன் புரியுதா........."

.”அடிங்க எங்கிட்டயேவா இந்தா வாரேன்.....”.என்று அடிப்பது போல வர உதட்டை சுழித்துவிட்டு ஓடிவிட்டாள்................

பரவால்லயே இவ நம்மளவிட கேடியா....இருப்பா போலயே........

கயலின் தம்பி அருணும் கண்ணனின் தம்பி முத்துவும் நல்ல நண்பர்கள் போல பழக ஆரம்பித்தார்கள்.முத்துவும் கயலை ஏற்கனவே கோயிலில் பார்த்து இருந்ததால் அவர்களுடன் சந்தோசத்துடன் பேசிக்கொண்டிருந்தான்..

அன்று இரவு வாசு தன் வீட்டில் ரகளை செய்துகொண்டிருந்தான்.....

“ஏம்மா உனக்கு இந்த சுதால்லாம் பொண்னாத் தெரியலயா........இரண்டு வருசமா பொண்ணுதேடுறேன்னு பொண்ணுதேடுறேன்னு சொல்லுற ஒரு பொண்ணயும் கண்ணுல கூட காட்டல.....”

“டேய் இந்த சுதா 5 பொம்பள பிள்ளகளோட பிறந்தவடா சீரு, நகையெல்லாம் எவ்வளவு போட்டுற போறாங்க நான் உனக்கு ஒத்தபிள்ள உள்ள வீட்ல பொண்ணு தேடுறேன் ஆனா பாரு ஒன்னு பொண்ணு நல்லாயிருந்தா வசதியில்ல ,இல்ல வசதியிருக்கு பொண்ணு நல்லாயில்ல,இரண்டும் இருந்தா ஜாதகம் பொருத்தமில்ல என்னய என்னப்பண்ணச் சொல்லுற,”

“அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா எனக்கு சுதாவ புடிச்சிருக்கு......எப்படியாச்சும் பேசி எனக்கு கல்யாணம் பண்ணிவைங்க..............”.



“டேய் லூசுப்பயலே உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு.அந்த சுதாவுக்கு இன்னைக்குத்தானே பேசிமுடிச்சாங்க............”



“பேசிமுடிச்சா............அவன் என்ன தாலியா கட்டிட்டான்...........”

“டேய் நீ நிசமாவே சொல்லுறியாடா.............உங்க அப்பாவுக்கு தெரிஞ்சிச்சு..........உன்னைய விட்டுருவாருடா............என்னைய கொண்டுபோட்டுருவாருடா..............”

“அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா...............எனக்கு கொஞ்சம் காசு மட்டும் தம்பிகிட்ட வாங்கிகுடு........நான் என்னமாச்சும் பிளான் பண்ணுறேன்................”



“அவன் எனக்கே செலவுக்குக்கூட காசு குடுக்கல............நான் சொல்லுறத கேளு உனக்கு நல்லா பணக்காரப்பொண்ணா இவளவிட சூப்பரான பொண்ணா பாக்குறேன்............”

“ஒன்னும் தேவையில்ல..............”.என்றபடி கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான்.
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
காந்திமதி தன் பேரன் அருணிடம்” டேய் அருணு சுதாவோட கோயிலுக்கு துணைக்கு போயிட்டுவாடா...........”

“போ அப்பத்தா எனக்கு நாளைக்கு பரிச்சை இருக்கு நான் படிக்கணும்..........”

“இந்த மல்லிகாவும் அருணாவும் டிவிசனுக்காம்ல போயிட்டாலுக ஏய் கயலு நீ என்னடி பண்ணுற........”



“அப்பத்தா நான் அமுதா வீட்டுக்கு போறேன் அவகிட்ட நோட்டு ஒன்னு வாங்கப்போறேன்.......”.



“சரி போகும்போது சுதாவ கோயிலுள்ள விட்டுட்டு போ........கல்யாணத்துக்கு நாள் வச்சுட்டா ஒத்தையில போகக்கூடாது. கயல் இன்னைக்கு போறதோட சரி இனிமே அநாவசியமா வெளியில போற வேல வச்சக்காத..........காலேசுக்கு போனமா வந்தமான்னு இருக்கனும் என்ன சொல்றது காதுல கேக்குதா..........”



“ம்ம்ம்……….. கேக்குது கேக்குது”

“என்ன கேக்குது…………”

“அதான் சொன்னியே அப்பத்தா................இனிமே கடைக்கு எல்லாம் என்னைய மட்டும் போகச்சொன்னியே.................அதான்”



“உன்னய..............அடியே....எடு அந்த வெளக்கமாத்த...............”



கயல் விடு” ஜூட்ட்ட்ட்...........................”



சுதாவும் கயலும் கோயிலுக்குச் செல்ல தன் நண்பனோடு வண்டியில் வந்துகொண்டிருந்த வாசு பார்த்துவிட்டான். இன்று எப்படியாவது சுதாட்ட பேசனுமே..................

“டேய் கீழ இறங்கு எனக்கு கொஞ்சம் அவசரமா வீட்ல வேலயிருக்கு............”

“டேய் டேய் என்னடா இப்படி பாதியில விட்டுட்டு போற.....................”

சுதாவை கோயில் வாசலில் விட்ட கயல் அமுதா வீட்டைநோக்கிச்செல்ல வாசு அவசரமாக வண்டியை தன் வீட்டை நோக்கித் திருப்பினான்................

அமுதா வீட்டிற்குச் சென்று 1 மணி நேரம் கழித்து நேரத்தைப் பார்த்தவள் “போச்சு போச்சு..........என்னடி இவ்வளவு நேரமாச்சு இன்னைக்கு சுதாக்கா ருத்ரதாண்டவம் ஆடப்போறா...........”



“கோயிலுல ருத்ரதாண்டவம் ஆடுனா நல்லதுதானடி…………..’”

“என்ன நக்கலா.........ஒரு நாளைக்கு சுதாட்ட திட்டுவாங்கிப்பாரு அப்ப தெரியும்.............உங்கிட்ட பேசுனா இன்னும் நேரமாகும் நான் கிளம்புறேன்டி...................இல்ல இல்ல ஒடுறேன்டி.............”(..பிள்ளையாரப்பா இன்னைக்கு எனக்கு திட்டு வாங்கி குடுக்காம இருந்தீன்னா உனக்கு ஒரு தேங்கா உடைக்கிறேம்பா................)



கோயிலை அடைந்த கயல் கோயிலுக்குள் நுழைய எதிர்பக்கமிருந்து வந்த சுதாவை கண்டவள்...........”..சாரிக்கா கொஞ்சம் லேட்டாயிருச்சு..............படிச்சுகிட்டு இருந்தமா............அதான்......”(..பொய்தான)



“சரி சரி வா.............”

“கையில என்னக்கா பார்சல்..........”

“என்னோட பிரண்டு கொடுத்தா...........”.

“ப்ரண்டா ............உனக்குத்தான் ரொம்ப பிரண்டே இல்லயில்லக்கா............”



“உனக்கு தெரியாது என்னோட ஸ்கூல் ப்ரண்ட்.....அவ கல்யாணத்தப்ப ஊருக்கு போறாளாம் அது தான் இப்ப குடுத்தா.........”.



“அந்த பார்சல்ல என்னக்கா இருக்கு ஆமா நமக்கே கோயிலுக்கு போறது இப்பதான தெரியும்..............உன்னோட ப்ரண்டுக்கு எப்படி தெரியும்..................”..



“இந்த பார்சல்ல என்ன இருந்தா உனக்கென்ன.........இப்ப வாய மூடிக்கிட்டு என்னோட வர்றதன்னா வா................சும்மா சும்மா என்னோட விசயத்துல யாரும் தலையிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல..............இனிமே தேவையில்லாம என்கிட்ட பேசுற வேல வச்சுக்குறாத சொல்லிட்டேன்............”.



(ஆமா இவகிட்ட இப்ப என்னகேட்டுட்டேன்னு இவ இந்த குதிகுதி குதிக்குறா...............இவகுணம் தெருஞ்சும் கயலு உனக்கு இது தேவையா..............உன்னோட புத்திய வீட்ல இருக்குற பிஞ்ச செருப்பாலே அடிக்கனும்........)...அதோடு வாயை மூடியவள் வீடு வரும்வரை வாயே திறக்கவில்லை.................



அடுத்து வந்த நாட்களில் அருண் கோயில் வாசல் வரை வந்து விடுபவன் நன்றாக விளையாடிவிட்டு மீண்டும் வந்து அழைத்து வருவான்....................



இருநாட்கள் கழித்து மாணிக்கம் குடும்பத்தினர் மாப்பிள்ளை வீடு பார்க்க சென்று வந்தனர்................அன்று இரவு தன்தாய் வீட்டில் தங்கிய தாமரயிடம் சென்று சுதா" அக்கா உங்கிட்ட ஒன்னு கேக்கனும்..............”



“என்னடி சொல்லு.............”..

“ஏக்கா இன்னைக்கு போனீங்களே அவுக வீடு நல்ல பெரிய வீடாக்கா..........”.

“ஆமாடி பெரிய வீடுதான்..........நம்ம வீடு மாதிரி தாண்டி.............”.

“அப்ப என்ன ஓட்டு வீடா...............”



“ஏண்டி ஓட்டு வீட்டுக்கென்ன குறைச்சல்...................நீ இங்க எப்படி இருக்கியோ அப்படியே அங்கயும் இருக்கலாம்..............ஆனா உன்னோட மாமியார் நல்ல குணமா தெரியுறாங்கடி............உன்னோட கொழுந்தன்களும் கள்ளம் கபடம் இல்லாம பழகுறாங்கடி...............நீ கல்யாணம் பண்ணி போனாலும் அவங்ககிட்ட நல்லா பொண்ணா பொறுமையா இருக்கனும்டி... உன்னோட மாமியார நல்லா பாத்துக்கணும். உனக்கு வரப்போறவரு ரொம்ப அமைதியானவரா இருக்குறாரு. தம்பிங்க ரெண்டுபேரும் சின்னபிள்ளங்களா இருக்காங்கள்ள அதான் இவரும் உங்க மாமா மாதிரி ரொம்ப பொருப்பானவரா இருப்பாருன்னு நினைக்கிறேன் நீ எல்லாரயும் அனுசருச்சு போகனும்............என்னடி நான் இவ்வளவு பேசுறேன்.........நீ ஒன்னுமே பேசாம இருக்குற..........”

“ம்ம்ம்ம்..............”

“என்ன இவ இப்படி ஒரு வார்த்தையில சொல்லிட்டுப்ப்போறா...............”.

இரு வாரங்கள் கழித்து பட்டெடுக்கச் செல்ல

“வாங்க வாங்க” என்று சாவித்திரி அனைவரையும் வரவேற்றார்.

“ஆத்தா.......பொண்ண கூட்டிட்டு வரலயா..............”.



“எங்க பக்கட்டு பொண்ண கூட்டிகிட்டு வரமாட்டோம்தா..........”



“வாம்மா கயலு......தங்கச்சிங்க யாரும் வரலயா.............”



“இல்ல அத்த அவுக மூனுபேருக்கும் பள்ளிக்கூடம்.........”...(.என்னயவே ஆளுகணக்குக்குத்தான் கூட்டிட்டுவந்திருக்காங்க..........)....



“எங்கத்தா மாப்ளய காணோம்.........”..



“அவனுக்கு கொஞ்சம் அவசர ஜோலியாம் நம்மள பட்டு எடுக்கச்சொன்னான் அவன் வெரசா வந்திருவான்த்தா...........”.



அவர்கள் பட்டுச்சேலை பார்த்து கொண்டிருக்க சாவித்திரி” என்ன விலையில வேணும்னாலும் பாருங்க..............ஆனா கலரு மட்டும் மெருன் கலரா இருக்கட்டும்தா ஏன்னா எங்க வீடுகளுல இந்த கலருதான் எடுப்பாங்க.............”



அனைவரும் அதே கலரில் பட்டுச்சேலை ஒன்றை தேர்ந்தெடுக்க அந்த நேரம் அங்கு வந்த கண்ணன் அனைவரும் ஓரிடத்தில் இருக்க கயல் மட்டும் சற்று தள்ளி சற்று விலை குறைவான இடத்தில் நிற்பதைக்கண்டவன் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றான்.



அவள் அங்கிருந்த ஒரு சேலையை எடுத்து தோளில் வைத்து பார்ப்பதும் பின் கீழே வைப்பதுமாக இருந்தாள்.



“ஏன் இந்த சேலை பிடிச்சிருந்தா எடுத்துக்க வேண்டியதுதானே…………..”



தன் பின்னால் கேட்ட குரலைகேட்டு திரும்பியவள்..........(...இவனா.........ச்சு ச்சு இவரா பின்னால வந்து திடீருனு பேச வேண்டியது. அப்புறம் நமக்கு பயம் வந்து ஏதாவது நடந்தா குய்யோ முறையோன்னு கத்த வேண்டியது. இல்ல நான் பேசறப்போறேன்னு மைக்குலயா அலவுன்ஸ் பண்ணுவாங்க........இவர யாரு அன்னைக்கு நைட்டும் அப்புறம் கோயிலுலயும் குறுக்கால வரச்சொன்னது............)



“என்ன நான் கேக்குறேன் பதில் சொல்லாம இருக்க..........”



“ஹிஹிஹி................ஒன்னுமில்ல சும்மா அழகாயிருக்குன்னு வச்சுப்பாத்தேன்......”



“எங்க வை நான் அழகாயிருக்கான்னு பாக்குறேன்..........”(.டேய் லூசு பயலுகளா இன்னைக்கு பட்டெடுக்க வந்தது சுதாக்கு..............நீங்க ரெண்டுபேரும் ஜோடியா வச்சுப்பாத்துகிட்டு இருக்கீங்க.........)..

“எனக்கெல்லாம் சேல கட்டத்தெரியாது.........சும்மாதான் வச்சுப்பாத்தேன்.........”.



“இப்பவும் சும்மா .....வை நான் பாக்குறேன்............”

அப்போது காந்திமதி அவளை அழைக்க..................



அனைவரும் பட்டெடுத்து முடித்து வீட்டிற்கு வர..............காந்திமதி “இந்தா கயலு” என்று ஒரு பெட்டியை கொடுக்க........

“என்னப்பத்தா இது..........”.

“பாவம் சின்னபிள்ள கடைக்கு வந்தியேன்னு மாப்ள உனக்கும் ஒரு சேல எடுத்து குடுத்தாரு..............”.

அவள் அந்த சேலைபெட்டியை திறந்து பார்க்க...................அவள் கடையில் தன்மேல் வைத்துப்பார்த்த அந்த மெரூன் வண்ணப்பட்டு இவளை பார்த்து சிரித்தது.......................



அனைவரும் எடுத்தது ஒரு சேலை......................

கண்ணன் எடுத்தது ஒரு சேலை...................ஆனால் மணப்பெண் கட்டுவது..............



தொடரும்........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இதிலென்ன சந்தேகம், பிரியா டியர்?
கண்ணன் எடுத்துக் கொடுத்த மெரூன்
கலர் சேலையை மணப்பெண்ணாக
கயலுதான் கட்டப் போறாள்
சுதா, ஆல்ரெடி வாசுவிடம் ஏதோ
பரிசு வாங்கிட்டாள் போலவே?
அது என்ன பார்சல், பிரியா டியர்?

அப்போ கண்ணனோட கல்யாணத்துல
சுதா இருக்க மாட்டாள்
வாசுவுடன் ஓடிப்போகப் போகிறாள்
ஒரு ரணகளம் காத்துக்கிட்டிருக்கிறது
போலவே, பிரியா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top