'நெஞ்சமெல்லாம் அலரே !!' அத்தியாயம் - 28

#1
nea281.jpg

தன் கரங்களில் முகம் பொத்தி அலர் கதற தொடங்கையிலே உள்ளுக்குள் நொறுங்கி போன அகனெழிலன் அவளின் இறுதி வாக்கியத்தில் முற்றிலுமாக உருக்குலைந்து போனான்,

அச்சத்தில் வெளிறிய முகத்துடன் 'அமுலு' என்று பதறி அவளை பார்த்தவன் சுதாரிப்பதற்குள் அலர் அவன் பாதங்களில் மயங்கி சரிய அதேநேரம் நாதன் மகளை தன் கரங்களில் தாங்கி இருந்தார்.

அவரோ ருத்ரமூர்த்தியாக விழிகளாலே எழிலை எரித்து கொண்டிருந்தார். பின்னே பேரனை பார்பதற்காக அவர்களறையினுள் நுழைந்த நாதனுக்கு மகளின் அழுகுரலும் மயங்கிய நிலையும் காணும் போது அதற்க்கு காரணமானவன் மீது கோபம் வருவது தானே முறை..!!

செய்வதறியாமல் எழில் ஸ்தம்பித்து நிற்க இங்கு நாதன் தான் மகளின் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சித்து கொண்டிருந்தார். தண்ணீர் தெளித்த பின்பும் அவர் முயற்சிகள் பயனற்று போக உடனே வெளியே சென்றவர் மருத்துவருடன் திரும்பி இருந்தார்.

நாதன், வளர்மதி, நீலா என்று அனைவரும் கண்விழித்தவளிடம் விசாரித்து விட்டு கிளம்ப வெளியில் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்த எழில் உள்ளே செல்ல அவனை பார்த்தவாறு எழுந்து சென்று கதவை அடைத்தவள் அதன் மீதே சாய்ந்து நின்று கைகளை கோர்த்துக்கொண்டு அவனை கூர்மையாக பார்க்க,

மருத்துவரின் அறிவுரைகளே அவன் செவியில் ரீங்காரமிட இப்போது அவளின் நலன் மட்டுமே பிரதானமாகி போயிருக்க நகர மறுத்த கால்களை பிரம்மப்ராயத்தனம் செய்து இழுத்து சென்று அவளை அடைந்தவன் தன் மனதின் நடுக்கத்தை மறைத்தவாறு அவளை அணைக்க அலரும் பாந்தமாக அவன் அணைப்பில் அடங்கியவள் சில நொடிகளுக்கு பின் நிமிர்ந்து மெளனமாக அவன் முகம் பார்க்க,

மனதினுள் ஆர்பரிக்கும் உணர்வுகளை கட்டுபடுத்தியவாறு அவளுச்சியில் இதழ் பதித்தவன் மெல்லிய குரலில், "இனிமேல் உனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன் போதுமா..!!" என்று உறுதி அளித்தவனுக்கு நன்கு தெரியும் இனி நிச்சயம் அவளுக்கு பிடித்ததையும் தன்னால் செய்ய முடியாது என்று...!! எழில் கூறவும் முகம் பிரகாசிக்க அவனை இன்னும் இறுக கட்டிகொண்டவள் அவன் நெஞ்சில் முத்தமிட்டு "லவ் யூ மாமா" என்றிட எழிலோ புன்னகைக்கவும் மறந்தவனாக உயிர்பற்ற விழிகளுடன் அவளை பார்த்திருந்தான்.

அதன் பின் குழந்தையின் பெயர் சூட்டு விழா முடித்து சென்ற அலர் மீண்டும் சென்னை வந்து சேர பகலில் உறங்கி இரவில் விழித்திருக்கும் குழந்தையை சுற்றியே அவர்களின் உலகம் இயங்க தொடங்க அதன் அங்கமாக சுடரும் அவர் பிள்ளைகளும் வந்து சேர அலருக்கும் குழந்தை வளர்ப்பு, இறுதி வருட படிப்பு, பரீட்சை என்று நாட்கள் வேகமாக நகர அவிரனுக்காக சுடர் அலருடன் அவளறையில் தங்க, தமக்கை பிள்ளைகளுடன் உறங்கும் எழிலின் விலகல் பெரிதாக யார் கருத்தையும் கவராது போனது.

சுமார் ஒன்றரை வருடத்திற்கு பின்...

"அமுலு இறங்கு" என்று எழில் கூறவும் பதிலளிக்காமல் அழுத்தமாய் அவனையே பார்த்துகொண்டிருந்தாள் அலர்விழி.

அவனோ வாகனத்தை நிறுத்திவிட்டு அவள் புறம் வந்து அவள் மடியில் இருந்த அவிரனை தூக்கி கொண்டு, "அமுலு உன்னை தான் சொல்றேன் இறங்கு" என்று மீண்டும் கூற..,

அவளோ துளிக்கூட அசையாமல் கூர்மையாக அவன் விழிகளில் ஊடுருவியவாறே, "இங்க எதுக்கு மாமா வந்திருக்கோம்" என்று எதிரில் தெரிந்த அநாதை ஆசிரமத்தை விழிகளால் சுட்டி காட்டி அலர் கேட்க..,

சில நொடிகள் கனத்த மௌனம் எழிலிடம்.., தன்னுனர்வுகளுடன் அவன் போராடிக்கொண்டிருப்பது அவளுக்கும் புரிபட படபடத்த நெஞ்சுடன் அவன் முகத்திலேயே விழிகளை நிலைக்க விட்டு அவன் பதிலுக்காக காத்திருக்க தொடங்கினாள்.

நொடிகள் பல நிமிடங்களை விழுங்கியும் அவிரனை தட்டி கொடுத்தவாறே அங்கிருந்த பலகையை வெறித்திருந்தான் அகனெழிலன்.

அவன் பார்வை மாற்றம் பெறாது வாய் திறவாது இருப்பதை கண்டவள்.., "சொல்லு மாமா எனக்கு பதில் வேணும் எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க" என்று இம்முறை வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி அலர் கேட்கவும்..,

பதிலின்றி அவள் இறங்க மாட்டாள் என்பது புரிபட தூங்கி கொண்டிருந்த அவிரனை பின்புறம் படுக்க வைத்தவன் அவன் பாதுகாப்பை உறுதி படுத்திவிட்டு மீண்டும் முன்புறம் வந்து அமர்ந்தான்.

அலரின் பார்வை இன்னும் அவன் மீதே படிந்திருக்க, அவள் முகம் பார்க்காது பின்புறம் படுத்திருந்த அவிரனை பார்த்தவாறு குரலை செருமியவன் "அவிரனுக்கு ஒரு துணை வேணும்ன்னு கேட்டியே அதுக்கு தான்" என்று கனத்த மனதோடு சில வார்த்தைகளையே கூற முடியாமல் அவன் முடிக்கும் முன் தன் கரத்தை அவன் கன்னத்தில் இடியாக இறக்கி இருந்தாள் அலர்விழி.

இதை எதிர்பார்த்தவனாக அவன் உயிர்பற்ற விழிகளுடன் அவளை பார்க்க,

அலர்விழியோ தீப்பிழம்பாக தகித்த விழிகளோடு "யாரை கேட்டு முடிவு பண்ணின.." என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க..,

எழிலிடமோ மீண்டும் கனத்த மௌனம்..!! ஆனால் உயிர்பற்ற விழிகளில் வலியுடன் பெரும் போராட்டம் அவனுக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்டவளின் மனம் நொறுங்கி போக.., தலையை பிடித்து கொண்டு அமர்ந்தவள் தன் அவசர செயலுக்காக தன்னையே நிந்தித்து கொண்டு நிமிர்ந்தவள் கலங்கிய விழிகளுடன் "சாரி மாமா" என்று கன்னத்தை வருட, அசைவில்லை அவனிடம்.

அவன் முகத்தை இருகரங்களாலும் பற்றிக்கொண்டு நெஞ்சம் கனக்க சில நிமிடங்கள் அவனை பார்த்திருந்தவள் மெல்லிய குரலில்.., "நான் யாருன்னு உனக்கு நியாபகம் இருக்கா மாமா..??" என்று விழிகளில் வலியுடன் தழுதழுத்த குரலில் அலர் கேட்க..,

அலர் கேட்க தொடங்கியதும் அவளிடம் இருந்து தலையை திருப்பி நேரே தெரிந்த பலகையை வெறிக்க தொடங்கியவனின் கரம் கார் ஸ்டேரிங்கை பலமாக பற்றியிருந்தாலும் அதில் நடுக்கம் அப்பட்டமாக வழிய கரங்களுக்கு அழுத்தம் கொடுத்து உணர்வுகளை கட்டுபடுத்தியவாறே, 'ஆம்' என்று தலை அசைக்க..,

அவன் கூறி முடிக்கும் முன்னமே "இல்லை நீ பொய் சொல்ற..." என்று ஆக்ரோஷமாக இறைந்தவள், அவன் சட்டையை பிடித்து, "உனக்கு நான் யாருன்னு தெரிஞ்சிருந்தா..? என்றவள் பொங்கிய அழுகையை இதழ் மடித்து உள்ளிழுத்தவாறே "என்.. என்னை இத்..தனை நாள்.." என்றவளுக்கு குரல் உடைபட பெருகிய கண்ணீரை துடைத்து கொண்டே.., "நாள் இல்லை வருஷ கணக்காச்சு மாமா..", என்றவள் ஆவேசத்தோடு அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தகொண்டே..,

"இல்லை, நீ என்னோட மாமாவே இல்லை உனக்கு நான் முக்கியம் இல்லை எனக்கு தெரியும், அப்படி இருந்திருந்தா எப்படி உன்னால இத்தனை நாள் இப்படி இருக்க முடியுது" என்றவள் முற்றிலுமாக உடைந்து போயிருக்க, "எப்பவும் எனக்கு என்ன வேணும்ன்னு நான் கேட்காமையே செய்ய தெரிஞ்ச உனக்கு இப்போ நான் வாய் விட்டு கேட்டும் அதை செய்ய மனசில்லாம என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்க.."என்று கண்ணீர் பெருக்கெடுக்க இருகரங்களாலும் அவன் நெஞ்சில் அறைந்தவளின் அழுகை ஒரு கட்டத்தில் கதறலாக வெடிக்க அவன் நெஞ்சில் முகம் புதைத்து விம்மும் மனதோடு திக்கி திணறி,

"எப்படி, எப்படி உன்..னா..ல என்னை இத்தனை நாளா தள்ளி நிறுத்த முடிஞ்சது..??" என்று கேட்க அவள் தலையில் கரம் பதித்து வருடிய எழிலுக்குமே அவள் கண்ணீர் மனதை தைத்தாலும் இறுகிய முகத்தோடு கண்களில் தேங்கி நின்ற நீரோடு மெளனமாக அமர்ந்திருந்தான்.

தன் மீது பித்தாகி இருப்பவளை அவனும் எத்தனை நாளைக்கு தான் விலக்கி நிறுத்த முடியும்.., சொல்லபோனால் தன்னுயிரை பணயம் வைத்து மற்றொரு உயிரை படைத்த அவளை கடவளுக்கு நிகராக பார்ப்பவனுக்கு எவ்வாறு அவளை நெருங்க தோன்றும்...!!

"சரியா சொல்லனும்ன்னா ரெண்டு வருஷம் ஆச்சு மாமா..!! என்றவள் துடித்த இதழ்களை மடித்து தன்னை கட்டுபடுத்திக்கொண்டு "நீ என்னை பொண்டாட்டியா பார்த்து..!! அது உனக்கு நியாபகம் இருக்கா..???" என்று கதறிக்கொண்டே அவன் மடி சாய்ந்தவள்,

"உனக்கு குழந்தை தானே மாமா வேண்டாம்..!! நான் கூடவா வேண்டாம், ஏன் என்னை ஒதுக்குற உனக்கு என்னை பிடிக்கலையா" என்று அவனிடம் கேட்டு மீண்டும் தன் அறிவீனத்தை நிருபித்திருந்தாள் அலர்விழி.

வலிமிகுந்த விழிகளுடன் அவளை பார்த்தவன் நீண்ட மூச்சை எடுத்து விட்டு அவளை தன் மீதிருந்து விலக்கி அமர்த்திவிட்டு இறுகிய முகத்துடன் வாகனத்தை எடுத்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் சென்று நிறுத்தியது நகரில் பிரசித்தி பெற்ற மனநல மருத்துவமனையின் முன்பு.

*************************************************************

சென்று சேர்ந்த இடத்தை கண்டவள் 'மாமா' என்று அதிர்வுடன் அவனை பார்க்க,

எழிலோ வாகனத்தில் இருந்து இறங்கியவன் அவளிடமிருந்து அவிரனை வாங்கி கொண்டு முன்னே நடக்க அலரோ எதற்காக தன்னை இங்கு அழைத்து வந்துள்ளான் என்று புரியாமல் விழித்தவள் தன் முன்னே வேகமாக சென்றவனின் கரத்தை பிடித்து நிறுத்தி,

"எதுக்கு மாமா இங்க வந்திருக்கோம், உனக்கு தெரிஞ்சவங்க யாரையாவது பார்க்க போறோமா..??" என்று கேட்க அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன் தன் தோளில் சினுங்கிய அவிரனை தட்டி கொடுத்து கொண்டே "சொல்றேன் வா" என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் கூற,

அலரோ சற்றும் ஒட்டாத அச்சூழலை உள்வாங்கியவளின் மனதில் ஏனோ சட்டென சஞ்சலம் குடிகொள்ள எழில் மீதே பார்வை பதித்தவண்ணம் அவனுடன் இணைந்து நடந்தாள்.

அனுமதி பெற்றுக்கொண்டு மருத்துவரின் அறையினுள் நுழைந்த எழில் "குட் மார்னிங் டாக்டர்" என்றிட அவனை புன்னகை முகமாய் ஏறிட்ட மருத்துவரும்,

"வாங்க மிஸ்டர் எழிலன்" என்று வரவேற்று "ஹவ் ஆர் யூ..??" என்றவர் அப்போதுதான் அவன் கையில் குழந்தையையும் அவன் பின்னே வந்து நின்ற அலரையும் கண்டவர் அர்த்தத்துடன் அவனை பார்க்க எழிலும் அவர் கேள்விக்கான பதிலை சிறு தலையசைப்பின் மூலம் உணர்த்தினான்.

இங்கு அலர் தான் மருத்துவர் கூறியதன் சாராம்சம் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்துகொண்டிருந்தவளுக்கு மனதை ஏனோ நெருட, கலக்கத்துடன் எழில் புறம் திரும்பியவள், "யார் மாமா இவங்க..?? இவங்களை உனக்கு முன்னமே தெரியுமா...?? நான் உன்கிட்ட என்ன கேட்டேன் நீ சம்பந்தமே இல்லாம எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்த..? என்று அவன் செயலில் முகிழ்த்த கோபத்தை கட்டுபடுத்தி கொண்டு அவள் கேட்க,

"அதுபத்தி நான் உங்களுக்கு டீடைல்ட்டா சொல்றேன் மிசர்ஸ் எழிலன், ப்ளீஸ் பீ சீட்டட்" என்று அப்பெண் மனநல மருத்துவர் கூற,

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒரு கணம் திகைத்தவள் மறுகணமே எழிலிடம், "டேய் நம்ம பர்சனல் பத்தி அவங்க என்னடா சொல்றது என்று கேட்டவளின் இதயத்துடிப்பு இரட்டிப்பாகி இருக்க விழிகளோ அவளனுமதியின்றி கண்ணீரை சுரக்க தொடங்கிட, கண்ணீரினூடே, "மாமா ப்ளீஸ் என்னாச்சு..?? எதுக்கு சை.. சை.. சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு வந்திருக்க, அவங்களுக்கு என்கிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு" என்று படபடத்த நெஞ்சை ஒரு கரம் கொண்டு அழுத்தி பிடித்து கொண்டு இதழ்கள் துடிக்க கேட்க,

எழிலோ மருத்துவர் புறம் திரும்பி 'ஒன் செக் டாக்டர்' என்று அவரனுமதி வேண்ட,

"ஐ அண்டர்ஸ்டாண்ட்" என்று தலையசைத்தவர் 'பேசிட்டு அவங்களை உள்ள அனுப்புங்க நான் வைட் பண்றேன்' என்று எழுந்து உள்ளறைக்குள் நுழைந்தார்.

அவர் செல்லவும் கண்களை இறுக மூடி திறந்தவன் தன்னை சமன்படுத்த ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன் அருகே இருந்த நாற்காலியில் மகனை அமர்த்திவிட்டு அவள் சிகையை ஆதூரமாக வருடி கொடுக்க, இங்கு அலருக்கு தான் புதிதான அவனின் செயல்களில் அச்சம் பன்மடங்காக பெருக இமை சிமிட்டாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்..., தன்னவளின் விழிகளில் மிளிர்ந்த அச்சத்தை கண்டு கொண்டவன் நொடியும் தாமதிக்காமல் அலரை இழுத்தணைத்து அவள் உச்சியில் இதழ் பதிக்க அலரோ அதற்க்கு நேர்மாறாக 'விடுடா' என்று உரத்த குரலில் அவனை நெட்டி தள்ளி விலக்கி நிறுத்தி இருந்தாள்.

அவள் செயலை எதிர்பாராதவன் கால்களை தரையில் அழுத்தி ஊன்றி அவளை பார்க்க, "டேய் எதுக்குடா இப்படி வித்தியாசமா பீகேவ் பண்ற..?? நான் என்ன பைத்தியமா..!!! " என்று நுனிநாசி சிவந்தவள், "உங்கிட்ட குழந்தை வேணும்னு தானேடா கேட்டேன் அதுக்கு எதுக்குடா என்னையே சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு வந்து பலி கொடுக்க போற ஆட்டுக்கு மஞ்ச தண்ணி தெளிச்சி மாலை போடுற மாதிரி கட்டி பிடிச்சி முத்தம் குடுத்து வழி அனுப்ப பார்க்கிற, என்னை என்னன்னு நெனச்சிட்டு இருக்க நீ..?" என்று விழிகள் சிவக்க கட்டுக்கடங்கா சினத்துடன் முடித்தவளின் விழிகள் கலங்கியிருந்தது.

இங்கு எழிலோ அவள் உவமானத்தில் அதுவரை கொண்டிருந்த வேதனையை மறந்து சட்டென சிரித்தவன் மீண்டும் அவள் கரத்தை பிடிக்க,

அவன் கரத்தை உதறியவள் "டேய் தொட்ட கையை ஒடிச்சிடுவேன்" என்றவாறே ஓரடி பின்னே நகர்ந்தவள் "உன்னோட பார்வை, பேச்சு, நடவடிக்கை எதுவுமே சரி இல்ல, எதுவா இருந்தாலும் அங்கேயே நின்னு சொல்லு.. என்னை ரொம்ப பயமுறுத்துறடா நீ.!!" என்றிட,

'சரி ஓகே' என்று தன் கரத்தை பின்னே இழுத்து மார்பின் குறுக்கே கட்டிகொண்ட எழிலும் புன்னகை முகமாக அவளை பார்த்தவன், "நீ கேட்டதுக்கு நானே பதில் சொல்லுவேன் ஆனா நீ எந்த அளவுக்கு புரிஞ்சிப்பன்னு தெரியலை, திரும்ப ஒரு ஆர்க்யுமென்ட்க்கு நான்..." என்று அன்றைய நாளை எண்ணியவன் அவளிடம், "என்னை விட டாக்டர் உன்கிட்ட பேசுறது கரெக்ட்ன்னு பட்டது அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்... நீ போயிட்டு வா நான் அப்புவை பார்த்துக்குறேன்" என்று தீர்க்கமான குரலில் கட்டளையிட்டவனின் குரலுக்கு அடிபணிந்தவள் அடுத்த இரண்டாவது நிமிடம் அலர் மருத்துவரின் அறைக்கதவை திறந்து கொண்டு அலர் நுழைந்தாள்.
 
#2
'கம்மின் மிசர்ஸ் எழிலன்" என்று புன்னகைத்தவர் அவள் அமர்ந்ததும் 'யுவர் குட் நேம்..???' என்று கேட்க,

'அலர்விழி'

'ரொம்ப அழகான பெயர் உங்களை மாதிரியே' என்றிட,

அலரோ இருகரங்களையும் மேஜையின் மீது கோர்த்தவள், "என்கிட்டே ஏதோ சொல்லனும்ன்னு சொன்னீங்களே டாக்டர்" என்று எடுத்து கொடுக்க,

நேரடியாக விஷயத்திற்கு வருபவளின் அறிவை மெச்சும் விதமாக புருவங்களை ஏறி இறக்கியவர் 'எஸ்' என்றவாறு பக்கவாட்டு மேஜையில் இருந்து நீல நிற கோப்பை எடுத்து அவள் முன் நீட்டிய மருத்துவர், "இது உங்க கணவரோட கேஸ் ஹிஸ்டரி கடந்த ஒருவருஷத்துக்கும் மேலா மிஸ்டர் எழிலன் என்கிட்டே ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்காரு" என்று கூற

"வாட்" என்று அதிர்ச்சியுடன் அவரை கேட்டவளின் பார்வை கோப்பின் மீது படிய, "எதுக்கு ட்ரீட்மென்ட்" என்று நெற்றியை நீவிக்கொண்டு கோப்பை பார்வையிட,

"டோக்கோபோபியா" (Tokophobia)

'போபியா' என்று தனக்குள் உச்சரித்து பார்த்தவள் "டாக்டர் யு மீன் பியர் ஆப்..... " என்று மருத்துவரை பார்க்க,

"பியர் ஆப் சைல்ட் பர்த்" (fear of child birth) என்று மருத்துவர் கண்மூடி திறக்கவும் கோப்பை நழுவ விட்டவளாக விழிகளில் படர்ந்த அச்சத்துடன் மருத்துவரை பார்க்க,

"எஸ்..!! வீ கால் இட் ஆஸ் "டோக்கோபோபியா" (Tokophobia) இன் மெடிக்கல் டெர்ம்ஸ்" என்றவர் அலரின் பார்வையை உணர்ந்தவராக, "லுக் மிசர்ஸ் எழிலன் ஜெனெரலா இது முதல் பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வரகூடிய ஒரு வகையான 'போபியா' பெண்களை ஒப்பிடும் போது இதனால பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை குறைவு தான், பட் unfortunetly உங்க ஹஸ்பண்டும் இதனால பாதிக்கபட்டிருக்காரு" என்று கூற,

சட்டென நாற்காலியில் இருந்து எழுந்தவள், "என்ன பேசுறீங்க டாக்டர்..!! இப்போ என் பையனுக்கே ஒன்றரை வயசுக்கு மேல ஆச்சு, அவரும் நார்மலா இருக்காரு எதுக்கு தேவை இல்லாம அவரை நீ.. நீங்க.." என்றவளின் மனம் தன்னவன் ஒரு வருடத்திற்கும் மேலாக மனநல மருத்துவரின் உதவியை நாடியுள்ளான் என்ற நிஜத்தை ஏற்க முடியாமல் துடிக்க, அதற்க்கு மேல் தொடர முடியாமல் இதழ்களை கடித்து கொண்டு மேஜையை அழுந்த பற்றி அலர் அவரை பார்க்க,

"கண்ட்ரோல் யுவர்செலப் அலர்விழி அண்ட் அக்செப்ட் தி ட்ரூத், நீங்க சொல்ற மாதிரி "ஹீ இஸ் பிசிக்கலி வெல் அண்ட் குட் ஆனா சைக்காலாஜிக்கலா ஒரு சின்ன காம்ப்ளிகேஷன் இருக்கிறதால அவரோட மெண்டல் ஸ்டேடஸ் இஸ் லிட்டில் பேட்" என்று கூறவும் அலரின் விழிகள் அவளனுமதி இன்றி கண்ணீரை சொரிய தொடங்கிட அதை கண்ட மருத்துவர்,

"லிசன் அலர் இட் இஸ் அ கைண்ட் ஆப் போபியா(phobia) இடையில வந்தது அண்ட் கியுரபில், நீங்க எமோட் ஆகுற அளவு பெரிய விஷயம் இல்லை" என்றவாறு கையில் இருந்த பேனாவை உருட்டியவர், "ஒரு விஷயம் புரிஞ்சிக்கோங்க நொவ் ஹி இஸ் ஆல்ரைட்..!! அவர் உங்களோட டெலிவரி சம்பந்தப்பட்ட நாளில் இருந்து வெளியில வந்து நார்மலா இருக்காரு பட்... பட்"

"எது டாக்டர் பெரிய விஷயம் இல்லை ஒரு வருஷத்துக்கும் மேல மாமா.." என்று எச்சில் கூட்டி விழுங்கியவள் "அப்போ நா.. நான் தான் பெரிய தப்பு பண்ணிட்டேன்" என்று துடிக்கும் இதழ்களை பற்களை கொண்டு கட்டுபடுத்தி தோய்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தவள், "நான் அவரை என்கூட கூட்டிட்டு போகாம இருந்திருந்தா இன்னைக்கு அவ... அவரு இப்.. இப்படி..." என்று விம்மும் மனதை கட்டுபடுத்த முடியாமல் அலர் கலங்கிய விழிகளுடன் அவரை பார்க்க,

"நோ நோ.... இட்ஸ் நாட் யுவர் பால்ட்... ப்ளீஸ் காம் டவுன்" என்று குற்றஉணர்வில் உழன்று கொண்டிருப்பவளை நன்கு புரிந்தவராக அவள் புறம் தண்ணீரை நீட்ட,

அலரோ அதை மறுத்து, "நோ டாக்டர் யு ஆர் ராங், பால்ட் இஸ் மைன்..!!!" என்று கண்களை துடைத்து கொண்டு திடமாக அவரை பார்த்தவள் "எஸ் பால்ட் இஸ் ட்ரூலி மைன்..!!! நல்லா இருந்தவரை லேபர் வார்ட் கூட்டிட்டு போய் நானே இப்படி மாத்திட்டேன், தப்பு எல்லாம் என்னோடது தான்.. அப்போவே பெரியவங்க எல்லாம் சொன்னாங்க கூட்டிட்டு போக வேண்டாம்ன்னு ஆனா... ஆனா நான், எப்பவும் அவர் என்கூடவே இருக்கணும்ன்னு நெனச்சேனே தவிர அவர் மனசை புரிஞ்சிக்கலை... என்னோட சின்ன வலியை கூட தாங்காதவரால் எப்படி என்கூட அங்க இருக்க முடியும்ன்னு நான் யோசிச்சிருக்கணும்..., "ஐ ஆம் அ பூல்..!!!" என்றவள் இருகரங்களால் தன்னையே அறைந்து கொள்ள அவள் உணர்வுகளை அவதானித்து கொண்டிருந்த மருத்துவரோ உடனே எழுந்து சென்று அவள் கரங்களை பிடித்து தடுக்க,

"நோ டாக்டர் லீவ் மீ ஐ டிசர்வ் திஸ்..!! எப்பவும் என்னால அவருக்கு கஷ்டம் மட்டும் தான்" என்றவளின் குரல் உடைந்து கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் போக அவர் கரங்களில் முகம் பொத்தி அலர்விழி கதற தொடங்க தன் பெண்ணை ஒத்த வயதில் இருப்பவளை அவள் படும் பாட்டை ஒரு பெண்ணாக, தாயாக சக மனுஷியாக உணர்ந்த மருத்துவர் அவள் முகம் நிமிர்த்தி முகத்தை துடைத்தவர், "இல்லைம்மா நீ காரணம் இல்லை புரிஞ்சிக்கோ" என்று தன்மையாக எடுத்து கூற,

அழுது சிவந்த முகத்துடன் தலையை இருமருங்கிலும் ஆட்டியவள், "இல்லை டாக்டர் உங்களுக்கு தெரியாது எப்பவும் என்.. என்னை... என்கூட... மாமா எ..ப்..படி, இப்போ, எனக்கு தெரியலை என்றவளின் அழுகை அதிகரிக்க, எஸ் டாக்டர் குழந்தைக்கு உடம்பு முடியாம போனது, அப்.. அப்போ அண்ணி வந்தது எனக்கு எக்ஸாம் நான் படிச்சிட்டு இருந்தேன்..., எனக்கு தெரியலை நான் எத.. எதையுமே கவனிக்கலை" என்று திக்கி தினறியவள் இதழ்களை அழுந்த மடித்து பக்கவாட்டில் திரும்பி சில நொடிகள் கண்மூடி ஒருவாறு தன்னை திடப்படுத்தி கொண்டு திரும்பியவள் மருத்துவரிடம், "ஆனா இப்.. இப்போ, அவரு அவ..ரை அவரோட உணர்வை நானே கொன்னுட்டேன் என்னை... என்னால் எவ்..ளோ கஷ்டம்" என்று கிட்டத்தட்ட இருவருடங்களாக தன் உணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டு தனக்காகவே தன்னிடம் இருந்து முற்றிலும் விலகி நிற்பவனை எண்ணி விழிநீர் சிந்த,

அவளை இழுத்து தன்னோடு அணைத்து கொண்ட மருத்துவர் "கண்ட்ரோல் யுவர்செல்ப் அலர்விழி.., இது உங்களோட தப்பு இல்லைமா முதல்ல அதை புரிஞ்சிக்கோங்க, இந்த கில்ட் உங்களுக்கு வேண்டாம்" என்று அவள் அழுகையில் குலுங்கும் அவள் முதுகை ஆதூரமாக வருடி கொடுக்க,

அழுது சிவந்த விழிகளுடன் அலர் அவரை பார்க்க,

"எஸ், இது லேபர் ரூம்ல நீங்க பட்ட கஷ்டத்தை பார்த்ததால மட்டும் இந்நிலை அவருக்கு ஏற்பட்டது இல்லை" என்று கூற,

அலரோ திகைத்த விழிகளுடன் அவரை பார்க்க,

"ஆமா அலர் அது மட்டுமே காரணமா இருந்தா இந்நேரம் அவரை அதுல இருந்து மீட்டு எடுக்குறதோ அடுத்த குழந்தைக்கு மனதளவுல தயார் படுத்துறதோ ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. ஏன்னா இப்போ எல்லாம் டெலிவரி அப்போ கணவர்களும் பிரசவ அறையில அனுமதிக்க படுறாங்க அதனால சமீபகாலமா மனைவியோட வலியை அருகே இருந்த பார்க்கிற ஆண்களில் சிலருக்கு பாதிப்பு ஏற்படுது... நானே நிறைய பேரை ட்ரீட் பண்ணி ரெகவர் பண்ணி இருக்கேன் அவங்கல்ல பல பேர் இப்போ ரெண்டு, மூணு குழந்தைன்னு நிறைவான வாழ்க்கை வாழுறாங்க" என்று கூற அலரின் முகத்தில் சிறு நம்பிக்கை கீற்று உருவானது.

"ஆனா மிஸ்டர் எழிலன் கேஸ்ல உங்க டெலிவரிக்கு அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து அவரோட மனநிலையை ரொம்ப மோசமா பாதிச்சிடுச்சி..., அதுலயும், அதுலயும் என்று நெற்றியை நீவியவர், ஐ டோன்ட் ரிமம்பர் தி நேம் பட் உங்களோடவே டெலிவரி ஆன ஒரு பிரெண்ட் வைப் 'மடேர்னல் டெத்' ஆனது, அதை தொடர்ந்து உங்களுக்கு தையல் சரியா போடாம ஹெவி பிளட் லாஸ் ஆனது, உங்களை சில நொடிகளுக்கு உணர்வற்று மயங்கிய நிலையில் பார்த்தது பிள்ளைபேருக்கு பிறகும் தையல் போட்டதால இயற்க்கை உபாதைகளுக்காக நீங்க பட்ட கஷ்டமும் அடுத்து உங்களோட காயத்துக்கு மருந்து போடும் போது தன்னால தானே உங்களுக்கு இந்த நிலைன்னு அவருக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சி எல்லாமே சேர்ந்து அவரை அதீத மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கிடுச்சி , எங்கே இன்னொரு குழந்தைன்னு போனா திரும்ப அந்த கஷ்டத்தை அனுபவிக்கிறதோட எங்கே அது உங்களோட உயிரை பரிச்சிடுமோ..!! தானும் அந்த பிரெண்ட் மாதிரி ஆகிடுவோமொன்னு அவரோட அதீத பயம், ஐ மீன் ஆங்சைட்டி, ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் அவரை இயல்பா இருக்கவிடாம ஒருவித ரெஸ்ட்லெஸ்னெஸ்ல கொண்டு விட்டுடுச்சி.

"இதனால சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாம பார்க்கிற வேலையிலும் செய்யற செயலையும் கவனம் பதிக்க முடியாம போனவர் இரண்டு முறை விபத்துல சிக்கி மயிரிழையில தப்பிச்சி இருந்தாரு அப்போதான் தனக்கு ஏதோ பெரிய பிரச்சனைன்னு உணர்ந்து என்கிட்டே வந்தாரு. அடுத்தடுத்த செஷன்ல டீப்பா பேச தொடங்கினவரோட நிலைமை கொஞ்சம் மோசமாத்தான் இருந்தது....

பொதுவாவே சொல்லுவாங்க சூடுகண்ட பூனை அடுப்பாங்கரை அண்டாதுன்னு கிட்டத்தட்ட மிஸ்டர் எழிலனுடையதும் அதே நிலை தான்...!! உங்களுக்கு எதுவும் ஆகிட கூடாது என்கிற நினைப்பே அவரை வேற எதை பத்தியும் யோசிக்க விடலை... மொத்த வாழ்க்கைக்குமே நீங்க அவர் எதிர்ல நடமாடிட்டு இருக்க நிஜம் போதும் இருக்காரு. ரொம்ப நாள் எடுத்தது அவரை குணபடுத்த என்னோட சைட்ல இருந்து நானும் அவருக்கு கவுன்சலிங் கொடுத்து CBT அப்புறம் நிறைய AV ரெபரன்ஸ் கொடுத்து ,யோகா, மெடிடேஷன் ப்ராக்டிஸ் பண்ண வச்சி மனசை ஒருமுகபடுத்தி பிரசவம் பற்றின புரிதலை கொண்டு வந்துட்டேன். இப்போ அன்றைய நாளில் இருந்து வெளியில வந்துட்டாரு முன்ன மாதிரி அவருக்கு பயமோ, அழுத்தமோ எதுவும் இல்லை ஆனா இன்னும் மனசளவுல அடுத்த குழந்தைக்கு மட்டுமில்லை தம்பத்தியத்திற்க்கும் அவர் தயாரா இல்லை" என்று கூற,

அதுநேரம் வரை கண்ணீர் கரைந்தோடிய விழிகளுடன் தன்னவனின் நிலையை கேட்டுகொண்டிருந்த அலரோ அவரின் இறுதி வாக்கியத்தில் அதற்க்கு மேலும் முடியாது என்பது போல தலையை இருகரங்களாலும் பிடித்து கொண்டு மேஜையில் கவிழ்ந்து விட்டாள், மெளனமாக அவள் உடல் குலுங்குவதை கண்ட மருத்துவரும் வேதனையுடன் அவளை பார்க்க,

சில நிமிடங்களுக்கு பின் தலையை உயர்த்தியவளின் பார்வை "ஏன்..?? இப்படி..??" என்பதாக அவர் மீது படிய அதை புரிந்து கொண்டவரும்,

"உங்களோட உயிரை பணயம் வச்சி ஒரு புது உயிரை நீங்க பிரசவிச்சதை கண்முன்ன பார்த்தவர் மனசுல நீங்க.. நீங்க.." என்றவர் அவள் சிகையை ஆதூரமாக வருடி "அலர் பொதுவா சொல்லுவாங்களேமா அம்மா தான் முதல் தெய்வம்ன்னு, இங்க உங்க கணவர் மனசுலயும் நீங்க அப்படி தான் பதிஞ்சிருகீங்க, நீங்க மட்டுமில்ல எல்லா பெண்களுமே என்று சத்தமே இல்லாமல் இடியை அவள் தலையில் இறக்க ஸ்தம்பித்து போனாள் அலர்விழி.

திகைத்த அவள் முகத்தை கண்டவரின் முகத்திலும் வேதனையின் சாயல் படர ஒரு பெருமூச்செறிந்து தன் இடத்தில் சென்று அமர்ந்தவர் அவள் கொண்டிருக்கும் அதிர்ச்சியை ஏற்று இயல்பிற்கு திரும்பவதற்காக காத்திருக்க தொடங்கினார்.

நீண்ட நிமிடங்களுக்கு பின் இறுகிய முகத்துடன் மௌனமாக அலர் அவரை பார்க்க, "ஹோப் யு அண்டரஸ்டான்ட் என்று மேஜையில் முழங்கையை ஊன்றி அவளை பார்த்தவர் "இது முழுக்க முழுக்க மனசு சம்பந்தப்பட்டது அலர், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி என்னோட சைட்ல இருந்து மெடிக்கலா என்னால முடிஞ்சதை செய்து அவரை மீட்டு கொடுத்துட்டேன் இனிமேல் இதை தக்க வச்சி அவரோட மனசை மாத்தி இயல்பான வாழ்க்கைக்கு திருப்புறதும் உங்களை மனைவியா பார்க்க வைக்கிறதும் உங்க கையில இருக்கு" என்று கூற அவருக்கு மறுமொழியும் கூற இயலாதவளாக விழிகளில் வலியுடன் அலர் அவரை பார்க்க.

"எஸ் யு கேன்..!! பட் கீப் ஒன்திங் இன் மைன்ட் அலர் , மறந்தும் குழந்தை பத்தின பேச்சு மட்டும் எடுக்காதீங்க அது அவரை பழைய நிலைக்கு கொண்டு போகவும் வாய்ப்பு இருக்கு..."

அப்போ இதற்க்கு தீர்வு தான் என்ன என்று அவளின் மனக்குரலை குமுறலை உணர்ந்தவராக, "நீங்க பொருமைசாலியான்னு எனக்கு தெரியாது ஆனா இனி வரகூடியது நீங்க ரொம்பவே பொறுமையா இருக்க வேண்டிய காலகட்டம், கண்டிப்பா உங்களுக்கும் அடுத்த குழந்தைக்கான வாய்ப்பு இருக்கு ஆனா 'ஹீ நீட்ஸ் டைம்..', இப்போதான் பழைய நினைவுகளை மறந்து இருக்கிறவர் இனி உங்ககூட இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினும் அப்படி நடந்தா அதுவே குட் சைன் தான் அப்போ கண்டிப்பா அவர் மனசு குழந்தையை ஏத்துக்கவும் தயார் ஆகும் ஆனா அதுக்கு வருஷ கணக்கு கூட ஆகலாம் அதனால பொறுமையா ஹாண்டில் பண்ணுங்க" என்றவர்

எழுந்து வந்து அலரின் கரத்தை பிடித்து வருடி, "இட்ஸ் அ சேலஞ் பார் யு அலர்..!! கிட்டத்தட்ட மிஸ்டர் எழிலன் இப்போ உங்க கையில இருக்க கண்ணாடி பாத்திரம் மாதிரி ஒன்ஸ் நழுவ விட்டீங்க திரும்ப ரொம்ப கஷ்டம்" என்றிட அவளும் புரிந்தது என்பதாக தலையாட்டி விடைபெற்றாள்.

'மிஸ்டர் நாதன் அட்டெண்டர் யாரு..??' என்று செவிலியர் கேட்கவும் தன்னவன் தோளில் சாய்ந்து பழைய நினைவுகளில் சிக்கி இருந்த அலர் நினைவிற்கு திரும்பி, வரேன் சிஸ்டர் என்று அவருடன் சென்றாள்.

ஹாய் செல்லகுட்டீஸ்...

இதோ 'நெஞ்சமெல்லாம் அலரே !!' இருபத்தி எட்டாம் அத்தியாயம் பதித்துவிட்டேன். படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துகளை சொல்லுங்க... எல்லாரோட எமோஷனும் சரியா கன்வே பண்ண நினைச்சதால இந்த பதிவும் இதுக்கு முந்தைய பதிவும் கொஞ்சம் பெருசா இருக்கும் அட்ஜஸ்ட் கரோ யார்..!! இத்தோட பிளாஷ்பேக் இனிதே நிறைவடைந்தது.

நடுவுல எக்கச்சக்க ப்ரேக் எடுத்தாலும் ஒவ்வொருமுறையும் இந்த பச்ச புள்ளையை உங்க வீட்டு பிள்ளையா நினச்சி மன்னிச்சி ரொம்ப பொறுமையா படிச்சிட்டு கருத்து சொல்ற எல்லா செல்லகுட்டிகளுக்கும் என்னோட மனமார்ந்த நன்றி அதை விட முக்கியமா படிச்சிட்டு லைக் கூட போட மாட்டேன்னு கொள்கையோட இருக்க சைலென்ட் ஏஞ்சல்ஸ் எல்லாருக்கும் இருமடங்கு நன்றிகள்... அடுத்து 'உயிரில் உறைந்த உறவே' எழுதணும் சோ பதிவு வர கண்டிப்பா வெள்ளிக்கிழமை ஆகிடும் நினைக்கிறேன் அதுவரை காத்திருங்கள் டார்லிங்ஸ்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement