நீ என் காதல் புன்னகை -12

Advertisement

அடேய் உதய் எரும மாடே நீ எல்லாம் மனுஷனே இல்ல சரியான சைக்கோ. ரேணு sis ஏன் இப்படி ஒரு ஹீரோவ வடிவமைச்சு வச்சு இருக்கீங்க. எவ்ளோ மோசமான character வாசிச்சாலும் நான் யாருக்காகவும் பொங்குனது இல்ல. ஆனா ஹீரோவோ ஹீரோயினோ சரி இல்லனா தாங்க முடியல.
இவனை எல்லாம் நம்பி எப்படி கடைசி வரைக்கும் வாழ முடியும். தனக்கு வேணுங்கிரத சாதிக்க என்ன வேணாலும் செய்வான். இவனோட எல்லாம் நிச்சயமாக சந்தோசமா அதை விடுங்க அது எல்லாம் ரொம்ப தூரம் அட நிம்மதியா கூட வாழ முடியாது.
எப்படியும் ரெண்டு பேரும் சேந்துருவாங்க. ஆனால் நிதர்சனம் சேர்ந்து நிம்மதியா வாழ முடியாது. நாளைக்கே எதற்சியா நடந்தாலும் அவளுக்கு அவன் மேல கண்டிப்பா சந்தேகம் வரும் முதல்ல அவனாலயே குறுக்கு வழில போகாம இருக்க முடியாது அப்படியே அவன் திருந்துனாலும் அவன் குடுத்த காயம் அவன நிச்சயமா நம்ப விடாது அவளை.
ஒருத்தனோட கண்ணே போய்டுச்சு இதுக்கு அவன் உயிர் போய்ருந்தா கூட அவன் கஷ்ட பட்டு இருக்க மாட்டான். ஆனா உடல் ஊனத்தோட வாழ்வது எவ்ளோ கஷ்டம். normal மனுசனுக்கே ஒவ்வொரு நாளும் போராட்டம் தான். அதுலயும் கண்ணு வேற. படத்துல பார்க்குற மாதிரி எல்லாம் steps count பண்ணி smell வச்சு sound வச்சு இப்படி எல்லாம் easy ஆ வாழ முடியாதுங்க. உதய்க்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லையேன்னு தான் ரொம்ப வேதனையா இருக்கு. ஒரு கண்ணு தான்னாலும் அதை வச்சு அவன் எத்தனை காலம் வாழ முடியும் வயசான பிறகு இருக்குற ஒரு கண்ணும் மங்கும் அப்ப அவனுக்கு துணைக்கு கூட யாரும் இருக்க மாட்டாங்க அப்ப அந்த தனிமை அந்த இயலாமை அது எல்லாம் அந்த மனுஷன எவ்வளவு காய படுத்தும். அவன் குடிகாரனாவே இருக்கட்டுமே அவனை திருந்த விடாம பண்ணி அவனுக்கு இவளோ பெரிய நரகத் தண்டனையை சித்திரவதை குடுத்து அது தப்பே இல்லன்னு அவனால எப்படி behave பண்ண முடியுது. இனிமேல் பூவை வராமல் இருந்தா அதுக்கும் அவள் கொழுப்பை கொரைக்கிரானாமாமே. இப்பயும் அவள வர வைக்க அவன் தப்பு செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம். அவன் செய்த தவறை மன்னிக்கவும் முடியாது இனிமேல் இது போன்ற தவறு அவன் செய்யாமலும் இருக்க போவதும் கிடையாது. ஆக மொத்தத்தில் அருள் அவர்கள் அருள் வாக்கு சொல்லி இருக்கிறார்கள். நிஜ வாழ்கையில இப்படி நடந்து இருந்துச்சுனா பூவை ஓட பாவம் பாவேந்தன தான் பிடிக்கும் அவனை பத்தி தெரிஞ்சும் ஏன் சம்மதம் சொன்னாரு.
என்னால இந்த கதையை ஏத்துக்கவே முடியல.

இதுக்கு முன்னாடி கடைசியாக ஆலோலம் பாடும் கிளிகள் க்கு தான் நான் உங்களுக்கு comment பண்ணி இருந்தேன். அதுலயும் suggestion தான் சொல்லி இருந்தேன். என்னையவே பொங்க வச்ச பெருமை உங்களுக்கு தான் சேரும் ரேணு sis.
நீங்க எப்பயுமே நல்லா தான் எழுதுவீங்க அதான் ஒவ்வொரு epiலயும் நான் ஒன்னும் சொல்றது இல்ல. அப்படி சொல்லனும்னா சூப்பர் fantastic nice ippadi ஏதாவது ஒரு வார்த்தைல தான் சொல்லணும் அது எல்லாம் நீங்க பார்பீங்களோ மாட்டீங்களோ அதான் சொல்றது இல்ல. அதுக்குன்னு உங்களுக்கு negative ஆகவும் சொன்னது இல்ல. இது தான் first time நான் பொங்குறேன் அதுவும் ஹீரோக்கு தான்.

endingல உதய் பூவை சேர்ந்து வாழ்றது எல்லாம் என்னால ஏத்துக்கவே முடியாது.
கெட்டவனா இருக்கலாம் அவன் திருந்துவான் ஆனா உதய் ஒரு சைக்கோ அவனை எல்லாம் கட்டி கிடந்து அழ முடியாது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top