நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 58

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
மறுநாள் காலை எட்டுமணியளவில் ஶ்ரீயை அழைத்து செல்ல வந்த டாக்டர் ரேகா காமாட்சியம்மாவிடம் சொல்லிக்கொண்டு ஶ்ரீயை அழைத்து சென்றார்.... ஶ்ரீ கிளம்புவதற்கு முன் அவளை சுவாமியறைக்கு அழைத்து சென்ற காமாட்சி அம்மா அவளது நெற்றியில் திருநீறு பூசிவிட்டவர் அவளை அணைத்து ஆசிர்வதித்தார்...
பின் ஶ்ரீயிடம் “தான்யாமா..... எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்... நீங்க பயப்படாமல் போயிட்டு வாங்க... திரும்பி வரும்போது நீங்களும் பாப்பாவும் நல்லபடியாக திரும்பி வருவீங்க..” என்று கூற அவரை இறுக கட்டிக்கொண்ட ஶ்ரீயின் விழிகளில் கண்ணீர் வெள்ளம்... சொற்ப நாட்களே என்ற போதிலும் அவளை தன்பிள்ளை போல் சீராட்டியவர் காமாட்சி.. அவருக்கும் கூட கண்கள் கலங்கியது..
பின் டாக்டருடன் வண்டியில் ஏறியவளுக்கு ரிஷியின் நினைவு ஆட்டிப்படைத்தது.... இந்த நொடி அவனது அருகாமைக்காக அவள் மனம் ஏங்கி தவித்தது... அவன் முகம் பார்க்கும் சந்தர்ப்பமாவது கிட்டிவிடாதா என்று வழி நெடுகிலும் அவள் கண்கள் அவனை தேடியது....
இவ்வாறு ஶ்ரீ ஆஸ்பிடல் வந்து சேர்ந்ததும் அவளை அங்கு அட்மிட் செய்வதற்கான வேலைகளில் டாக்டர் இறங்கிவிட அவளோ டாக்டரின் அறையில் அமர்ந்திருந்தாள்.... அப்போது டாக்டரின் லாப்டொப் திறந்தபடியிருக்க அதன் ஸ்கிரீன் சேவரில் அவரது திருமணப்படம்..... அந்த படத்தில் மணமகனின் புறம் ரிஷி நின்றிருந்தான்.... முதலில் வேறு யாரோ என்று நினைத்தவள் சற்று ஊன்றி கவனிக்க அது ரிஷி என்று புரிந்தது... அந்த ஸ்கிரீனில் ரிஷியை தடவியவளுக்கு கண்கள் கரித்தது...
அப்போது டாக்டர் உள்ளே வர அவரிடம் ரிஷியின் படத்தை யாரென்று விசாரிக்க அவரோ
“அது ரிஷி அண்ணா....என்னோட ஹஸ்பண்டோட காலேஜ் மேட்... அவரை உனக்கு தெரியுமா தான்யா??????” என்று கேட்க இல்லை என்று கூறி ஏதேதோ காரணம் கூறி டாக்டரை சமாளித்தாள்...
பின் அவளை பரிசோதனைக்கு அழைத்து சென்ற டாக்டர் சில பரிசோதனைகளை மேற் கொண்ட பின்
“தான்யா இன்னைக்கே சீசர் பண்ணு பேபியை எடுக்குறது நல்லதுனு உன்னோட ரிப்போர்ட்ஸ் சொல்லுது... ஈவினிங் நான்கு மணிக்கு உனக்கு ஆப்ரேஷன் பிக்ஸ் பண்ணுறேன்... நீ அது வரைக்கும் நல்லா ரெஸ்ட் எடு... நர்ஸ் வந்து உனக்கு தேவையானதை கவனிப்பாங்க.... என்று கூறியவர் பின் நியபகம் வந்தவராக
“தான்யா... டென்ஷன் ஆகாமல் இரு...நீ ரெஸ்ட்லஸ்ஸா இருந்து பிரஷர் அதிகமாகிடும்.. அதனால நல்ல ரெஸ்ட் எடு...”என்று அறிவுறுத்தியவர் தனது அறைக்கு சென்றார்....
ஶ்ரீயோ அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் கட்டிலில் அமர்ந்திருந்தவள் தன் குழந்தையோடு பேசத்தொடங்கினாள்...
“பேபி அம்மா பேசுறேன்டா... நீங்க இன்னைக்கு ஈவினிங் டாமிக்குள்ள இருந்து வெளியில வந்திடுவீங்க.. அப்பா, சித்தப்பா, சித்தி, தாத்தா , பாட்டினு எல்லாரையும் பார்க்கப்போறீங்க.... என்னடா அம்மா பெயரை சொல்லலைனு பார்க்கிறீங்களா?? அம்மா இருப்பேனா இல்லையானு அந்த கடவுளுக்கு தான் தெரியும்... அம்மா இருந்தாலும் இல்லாம போனாலும் அம்மாவுக்கு உங்க நினைவாக தான் இருக்கும்...நீங்க தான் அப்பாவை பத்திரமாக பார்த்துக்கனும்...அம்மா இல்லைனு அப்பா கவலைபடுவாங்க... நீங்க தான் அவருக்கு ஆறுதலாக இருக்கனும்...அப்பாவை தொல்லை பண்ணமாக சமத்து பாப்பாவா அப்பாகிட்ட இருக்கனும்... ஏற்கனவே அம்மா அப்பாக்கு நிறைய தொந்தரவு கொடுத்துட்டேன்...நீங்க தான் அப்பாவை பத்திரமாக பார்த்துக்கனும்...அம்மா சொன்னதை மறந்திடாதீங்க பேபி..... அப்பா ரொம்ப பாவம் பேபி....” என்றவளுக்கு கண்கள் கலங்கியது....
அந்த நொடியில் ஶ்ரீயிற்கு ரிஷியிற்கு தான் தவறு இழைத்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சியே மேலோங்கியிருந்தது...... தன்னால் இப்போது அவனது வாழ்வும் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற பயம் மேலோங்கியிருந்தது...
இவ்வாறு தனக்குள் உழன்றபடியிருந்தவள் தன்னையறியாமலே கண்ணயர்ந்துவிட மதியம் அவளுக்கு உணவு எடுத்து வந்த நர்ஸ் அவளுக்கு உணவை உண்ணச்சொல்லிவிட்டு ஓய்வு எடுக்குமாறு கூறினார்....
மாலை மூன்றரை மணிக்கு ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்டாள் ஶ்ரீதான்யா...... அந்த அறைக்குள் நுழைந்ததுமே இதுவரை நேரம் அடங்கியிருந்த மனம் மீண்டும் பயத்தால் பேயாட்டம் ஆடத்தொடங்க அதை அடக்கும் வழிதெரியாது போராடியவளின் கண்கள் நீரை சுரக்க மறுபுறமோ அவளது குருதியழுத்தம் எகிறிக்கொண்டிருந்தது... அவளை பரிசோதித்துக்கொண்டிருந்த மருத்துவர் அவளது இந்த திடீர் மாற்றத்தில் பயந்தவர் அவளிடம் ஆதூரமாக பேசத்தொடங்கினார்..
“இங்க பாருங்க தான்யா... இது ஜஸ்ட் நார்மல் சீசர் ஆப்பரேஷன் தான்... இதுக்கு நீங்க இப்படி பயப்படனும்னு அவசியமில்லை... இப்படி நீங்க பயந்தா உங்களோட பீபி இன்க்கிரீஸ் ஆகிடும்... அது இந்த ஆப்பரேஷனை காம்ப்ளிகேட்டட் ஆக்கிடும்... அதனால நீங்க மனசுல எந்த கவலையும் இல்லாமல் பிறக்கப்போற உங்க குழந்தையை மட்டும் நினைச்சிட்டு மனசை சந்தோஷமாக வச்சிக்கோங்க.. புரியிதா???” என்று கேட்க அந்த நொடி ஏதோ முடிவெடுத்தவளாய் டாக்டரின் கையை பிடித்தபடி
“எனக்கு கடைசியாக ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுறீங்களா???”
“சொல்லுங்க தான்யா....”
“எனக்கு என்னோட ஹஸ்பண்டை ஆப்பரேஷனுக்கு முதல்ல கடைசியாக ஒருமுறை மட்டும் பார்க்கனும். அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுறீங்களா???” என்று கேட்க அதை ஆமோதித்தவர் ஶ்ரீ ஏதும் கூறும் முன்னே அந்த ஆபரேஷன் அறையிலிருந்து வெளியேறியவர் சில நிமிடங்களில் உள் நுழைந்தார்.... அவரோடு இன்னொரு நபர் நீலநிற ஆப்பரேஷன் கிட் அணிந்தபடி உள்ளே நுழைய அவரை பார்த்திருந்த ஶ்ரீயின் அதரங்கள்
“அத்தான்” என்றுரைக்க கண்களோ இனியில்லையென்று கண்ணீரை கொட்டியது...
மெதுவாக அவளருகே வந்த ரிஷி அவள் கையினை பிடிக்க அத்தனை நேரம் திடமின்றி இருந்தவளது மனம் இப்போது யானை பலம் பெற்றது...
இருவருக்குமே இந்த சந்தர்ப்பத்தில் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் அவர்களது பார்வைகளோ வார்த்தைகளால் சொல்லமுடியாதவற்றை பரிமாறிக்கொண்டிருந்தது...
ஆப்ரேஷனுக்கு தேவையான முன்னேற்பாடு அனைத்தும் முடிவடைய ரிஷியை டாக்டர் வெளியேறச்சொல்ல அவனோ தானும் இருப்பதாய் கூற டாக்டரோ
“இல்லை ரிஷி அண்ணா... இது யூசுவல் சீசேரியன் ஆப்பரேஷன்னா நாங்க ஹஸ்பண்ட் உள்ளே இருக்க அலவ் பண்ணுவோம்... ஆனா தான்யாவோடது கொஞ்சம் காம்ப்ளிகேஷன் இருக்கு... நீங்க பக்கத்துல இருந்து ஏதாவது டென்ஷன் ஆகிட்டீங்கனா எங்களால எங்களோட வேலையை சரியாக செய்யமுடியாது... சோ ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்கனா....” என்று கூற ரிஷியிற்கு ஶ்ரீயை விட்டு செல்வதில் விருப்பமில்லாத போதிலும் வேறு வழியில்லாத பட்சத்தில்
“அம்லு.... அத்தான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.... நீ கட்டாயம் நல்லபடியாத திரும்பி வருவேன்னு அத்தானுக்கு பிராமிஸ் பண்ணிக்கொடு...” என்று கையை நீட்ட அவளது கரம் அவள் உணரமாலே அவனுக்கு சத்தியம் செய்து கொடுத்தது.. . ஆனால் அந்த சத்தியத்தை காக்க தான் ப்ரம்மப்ரயத்தனப்படவேண்டிய நிலை உண்டாகுமென்று அவள் நன்கு அறிந்திருந்தாள்...
அவள் சத்தியம் செய்ததும் அவள் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு விலகிச்செல்ல முயன்றவனை கரம்பிடித்து தடுத்தவள்
“லவ் யூ சோ மச் அத்தான்.....” என்று குரலில் அத்தனை தாபம் வேதனை அழுகையுடன் கூறியவளை அணைத்தவன் அவளிடம்
“இந்த அத்தான் இருக்கும் வரைக்கும் உனக்கு ஒன்றும் ஆகாது அம்லு...” என்று கூற ஶ்ரீயோ
“சாரி அத்தான்... உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..... இனி உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது....” என்று கண்களில் நீருடன் கூறியவளின் வாயினை தன் கைகயால் மூடியவன் அவன் காதருகே குனிந்து
“அம்லு நீ இல்லைனு ஆகிட்டா அடுத்தநொடி இந்த அத்தானும் இருக்கமாட்டேன்... அப்படீங்கிறதை நியாபகத்துலய வச்சிக்கோ... “ என்றவன் மீண்டும் அவள் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்... வெளியே ரித்வி, அனு, சுபா, மூர்த்தி, ராதா, ராஜேஷ், ஹேமாவின் தந்தை என்று அனைவரும் வெளியே நின்றிருந்தனர்...
வெளியே வந்த ரிஷி யார் முகத்தையும் பார்க்காது அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட அவனருகே வந்த சுபா
“கண்ணா” என்று அழைக்க அந்த அழைப்பில் முழுதாய் உடைந்தவன் தன் அன்னையை கட்டிக்கொண்டு தன் உள்ள வலி தீரும் மட்டும் அழுது தீர்த்துவிட்டான்... அவனது வேதனை புரிந்த சுபா எதுவும் கூறாது அவனது தலையை மட்டும் தடவியபடியிருக்க அது தந்த ஆறுதலில் சற்று தெளிந்தவன் தன் அன்னையிடமிருந்து விலகியவனிடம்
“கண்ணா பயப்படாத.... எல்லாம் நல்லபடியாக நடக்கும்... என் மருமகளும் பேரப்பிள்ளையும் நல்லபடியாக திரும்பி வருவாங்க....” என்று கூறியவரின் வார்த்தைகளிலிருந்த நம்பிக்கை இப்போது ரிஷியின் முகத்தில் வர சற்று தெளிந்து அமர்ந்தவன் நடக்கப்போகும் நிகழ்வினை திடத்துடன் எதிர்கொள்ளவேண்டுமென முடிவு செய்து மனதில் பிரார்த்தனையுடன் ஶ்ரீயை மட்டுமே மனதில் எண்ணியபடி அங்கேயே அமர்ந்திருந்தான்....
ராதா ஒருபுறம் பயத்தில் தன் கணவரை நாடி அழுதபடியிருக்க அனுவோ அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள்...
ரித்வியும் ஹேமாவின் தந்தையும் மூர்த்தியோடு அவருக்கு துணையாய் மறுபுறம் அமர்ந்திருந்தனர்...
ஒரு மணிநேரம் என்று கூறப்பட்ட அறுவை சிகிச்சை இருமணிநேரமாகிவிட அப்போதா ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த டாக்டரை நோக்கி ஓடிய ரிஷி
“ரேகா ஶ்ரீ... ஶ்ரீ.... எப்படியிருக்கா???”
“குழந்தையை நல்லபடியாக வெளியே எடுத்துட்டோம்... பெண்குழந்தை...இப்போ இன்குவேட்டர் பாக்சிஸ் குழந்தை வைத்திருக்கோம்.... நீங்க அங்க போயிட்டு பார்க்கலாம்...”
“ஶ்ரீ எப்படியிருக்கானு செல்லு ரேகா...” ஈன்று ரிஷி கேட்க
“தான்யாவுக்கு தான்...”என்று இழுக்க
“ப்ளீஸ் ரேகா.. எதுனாலும் சொல்லிடு... ரொம்ப பயமா இருக்கு...”
“தான்யாவுக்கு ஆப்பரேஷன் நேரத்துல பிரஷர் கூடிடுச்சு... அவ உடம்பும் ரொம்ப வீக்கா இருந்ததாலும் குழந்தையை எடுத்ததும் அவ உடம்பு ஜன்னி கண்டு அன்கான்சியசுக்கு போயிட்டா... இப்போ உள்ளே ட்ரீட்மண்ட் போயிட்டு இருக்கு... அவ கண்ணு முழிக்கிற வரைக்கும் என்னால எதுவும் சரியாக சொல்லமுடியாது... சில வேளைகளில் கோமாவுக்கு போகக்கூட வாய்ப்பிருக்கு...” என்று கூற ரிஷியோ அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டான்..
“அப்போ... என்னோட அம்லு.. என்கிட்ட திரும்ப வரமாட்டாளா??” என்றபடி மடங்கி சரிந்தவன் முகத்தை மூடிக்கொண்டு அழ அதை பார்த்திருந்த அனைவருக்கும் அவனை எவ்வாறு தேற்றுவதென்று தெரியவில்லை.. நிலைமையை கையில் எடுத்துக்கொண்ட ரித்வி
“ அண்ணா இங்க பாருங்க... என்னை பாருங்க... டாக்டர் சொன்னதை நீங்க சரியாக கவனிக்கலை... ஶ்ரீ இன்னும் கண்ணு முழிக்கலைனு தான் சொன்னாங்களே தவிர எப்பவும் முழிக்கமாட்டானு சொல்லலை அண்ணா... நம்ம ஶ்ரீ பழையமடி கண்ணு முழிச்சி எழும்மி வந்து சண்டை போடுவா அண்ணா.. நீங்க இப்படி உடைஞ்சி போற அளவுக்கு எதுவும் நடக்கல அண்ணா.. உங்க தைரியம் தான் அண்ணா அவளோட பலம்.. உங்க காதல் தான்னா அவளோட உயிர்... உங்களுக்காகவாவது அவ சீக்கிரம் கண்ணு முழிப்பான்னா.. நீங்க தைரியமாக இருங்க..” என்று ஒருவாறு ரிஷியை தேற்றியவன் அவனை எழுப்பி அமரச்செய்துவிட்டு வீட்டாரையும் ஒருமாதிரி சமாதானப்படுத்தினான்...
வீட்டினர் அனைவரும் குழந்தையை பார்த்துவிட்டு வர ரிஷியோ மறுத்துவிட்டான்...
இவ்வாறு இரு நாட்கள் அவனை கலங்கடித்துவிட்டு மூன்றாம் நாள் கண்விழித்தாள் ஶ்ரீ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top