நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 39

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சிறு துயருக்கே
துடித்துப்போகும்
என் உள்ளம்
உன் வலியையும்
வேதனையையும்
கேட்டு
அனுபவித்த பின்
செத்துப்பிழைக்கின்றது
பெண்ணே....

பார்க்கிற்கு வந்த ரித்வியும் ஹேமாவும் மெதுவாக நடை பயின்றபடி அளாவிக்கொண்டுவந்தனர்... கதிரவன் தன் கதிர்களின் உக்கிரத்தை குறைத்தபடி ஓய்வெடுக்க புறப்பட அவனது உக்கிரத்தை மேலும் குறைக்க தென்றலானது அடிக்கடி தன் வரவை ஊர்ஜிதப்படுத்தியபடியிருந்தது... உலகிற்கு ஒளிகொடுக்கும் ஆதவனே திரும்பியபிறகு தமக்கென்ன வேலையென்று எண்ணிய பறவைகளும் தம்மில்லம் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் ஒரு மலர் குடும்பம் தன் வாழ்நாளை முடித்துக்கொள்ள இன்னொரு மலர் குடும்பம் தம் நாளை தொடங்கி மகிழ்ச்சியில் மணம்பரப்பிக்கொண்டிருந்தது...
இயற்கை ஒருபுறமாய் இருக்க பார்க்கில் இருந்த மனிதர்கள் வெவ்வேறு உலகில் சஞ்சரித்தப்படியிருந்தனர்..
ஒரு சிலர் குழந்தைகளுடன் விளையாடியபடி அவர்களது உலகில் சஞ்சரித்தப்படியிருக்க இளம் காதல் ஜோடிகளோ பிறர் கண்களுக்கு காட்சிப்பொருளாகாத வண்ணம் தம் காதல் உலகில் சஞ்சரித்தப்படியிருந்தனர். இவர்களோடு போட்டியிடவென்று மறுபுறம் தம் துணைகளோட நேரத்தை செலவிட்டுக்கொண்டிருந்தனர் மூத்த காதல் ஜோடிகள்...
இவர்களை தவிர உடற்பயிற்சிக்கென்று வந்தவர்கள் தம் வேலையில் மும்முரமாயிருந்தனர்... இவையனைத்தயும் கவனித்தப்படியே ஹேமாவும் ரித்வியும் நடைபயின்றுக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் ஹேமா களைப்பாயிருப்பதாய் கூற ரித்வி அருகிலிருந்த மரத்தினடியே போடப்பட்டிருந்த பென்சினருகே அழைத்து சென்றவன் அவளை அமரச்செய்து கையில் வைத்திருந்த தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி பருகியவள்
“இப்போ எல்லாம் சீக்கிரம் டயர்டாகிர்றேன் ராஜ்....”
“இந்த டைமில் இப்படி தான் இருக்கும்னு டாக்டர் சொன்னாங்க தானே மிக்கி... கொஞ்ச நாளைக்கு அஜெஸ்ட் பண்ணிக்கோ...அப்புறம் நான் பார்த்துக்கிறேன்...”
“என்ன பார்த்துப்பீங்களாம்???”
“என்னோட குட்டிமாவை நான் பார்த்துப்பேன்... அவங்க அம்மாவை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு நான் அவங்களை பத்திரமா பார்த்துப்பேன்.... அவங்க டாமியிலிருந்து வெளிய வந்த அடுத்த செக்கண்டுல இருந்து அவங்க என்னோட பொறுப்பு...”
“ஹாஹா...சும்மா சொல்லாதீங்க ராஜ்... எப்படி முழு நேரமும் பார்த்துப்பீங்க?? வர்க் முடிந்து வந்து கொஞ்ச நேரம் பார்த்துப்பீங்க..மீதி நேரம் நான் தானே பார்த்துக்கனும்.. அப்புறம் அம்மாவும் அப்பாவும் பார்த்துப்பாங்க...”
“நீ ஓகே சொல்லு.. நான் மட்டும் என்னோட குட்டிமாவை பார்த்துக்கிறேன்...”
“பார்டா... ரொம்ப தான்...”
“மிக்கி நான் சீரியஸ்ஸா கேட்கிறேன்..”
“எனக்கு புரியல ரித்வி..”
“நீ என்கூட என்னோட வீட்டுக்கு வா.. உன்னையும் குட்டிமாவையும் நான் பத்திரமா பார்த்துக்கிறேன்..”
“ராஜ்.. போதும் விளையாட்டு..”
“மிக்கி என்னை பார்த்தா விளையாட்டுக்கு பேசுற மாதிரியா இருக்கா??”என்று ரித்வி கேட்க அப்பொழுது தான் அவனது கண்களை பார்த்தவளுக்கு அவனது பேச்சிலிருந்த தீவிரம் புரிந்தது..
“ராஜ்... நீங்க புரிஞ்சி தான் பேசுறீங்களா??”
“மிக்கி... எனக்கு இப்போ நீ பதில் சொல்லி தான் ஆகனும்.... நாம எப்போ மேரேஜ் பண்ணிக்கலாம்??”
“ராஜ் நான் ஏற்கனவே சொன்னது தான்.. எனக்கு விருப்பம் இல்லை..”
“உன்னோட விருப்பத்தை நான் கேட்கலை மிக்கி.. எப்போ மேரேஜ் பண்ணிக்கலாம்னு தான் கேட்டேன்...”
“ஸ்டாப் இட் ராஜ்... உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாத??”
“எது புரியாதானு கேட்கிற??? இன்னும் என்னை நீ லவ் பண்ணுறதயா??? இல்லை நான் வர கொஞ்சம் லேட்டானாலும் குட்டிமா கிட்ட இன்னும் உங்க அப்பாவை காணேம்னு நீ புலம்புறதையா??”
“அது.... அது.... உங்களுக்கு....”
“எனக்கு தெரியும் மிக்கி... எனக்கு எல்லாம் தெரியும்... நீ என்னோட அருகாமையை விரும்புறது எனக்கு தெரியும், எனக்கு ஒன்னுன்னா நீ துடிச்சி போறது எனக்கு தெரியும், ஒவ்வொரு நாளும் என்னோட டைம் ஸ்பெண்ட் பண்ண நீ காத்திருக்கது தெரியும், ஒவ்வொரு நாளும் காலையில என்னோட போன் காலுக்காக நீ வெயிட் பண்ணுறது எனக்கு தெரியும், தினமும் குட்டிமா கிட்ட என்னை பத்தி சொல்லுறது எனக்கு தெரியும், உன்னோட மன காயத்திற்கு மருந்தா என்னோட காதல் இருப்பதும் எனக்கு தெரியும், இது எல்லாத்துக்கும் மேல நான் மட்டும் தான் உன்னோட பாஸ், பிரசன்ட், பியூச்சர் அப்படீங்கிறதும் எனக்கு தெரியும்.... சோ சொல்லு மிக்கி.... எது உன்னை தடுக்குது??? எதுனால இத்தனை காதலையும் மறைக்க நினைக்கிற?? அன்னைக்கு ரெஸ்டோரண்டுல நீ சொன்ன விஷயம் எனக்கு இதுவரை புரிபடல... சொல்லு மிக்கி... உன்னோட மனசை அரிச்சிட்டு இருக்கிற விஷயம் என்ன?? சொல்லுமா ப்ளீஸ்...” என்ற ரித்வியின் கேள்விகளில் திகைத்து நின்றாள் ஹேமா..
காதலிருந்த போதும் அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தன்னை தள்ளிய விதியை எண்ணியவளுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை... சிறிது சிறிதாய் கட்டியெழுப்பிய காதல் மாளிகை எதிர்பாராத நேரத்தில் சிதைக்கப்பட அதை மீண்டும் கட்டியெழுப்பும் நிலை வந்த போதிலும் சிதைக்கப்பட்டதின் வடுக்களால் மீண்டும் கட்டியெழுப்ப மனம் முன்னவரவில்லை.... மாறாக மறுபடியும் சிதைக்கப்பட்டுவிடுமோ என்ற பயமே மேலோங்கியிருந்தது...
வடுக்கள் எதிர்காலத்தை பாதித்து விடுமோ என்று பயந்தே ரித்வியிடம் விருப்பமில்லாதது போல் நடந்து கொண்டாள்.. ஆனால் அந்நொடிகளில் அவளது காதல் மனம் துடித்த துடிப்பினை அவள் மட்டுமே அறிவாள்... வலியும் வேதனையும் இருந்தபோதிலும் அவளால் இன்னொரு வாழ்வு என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...
ரித்வியோ எப்படியாவது அவளிடமிருந்து உண்மையை அறிந்து கொள்ள முயன்றவனுக்கு அவளிடமிருந்து அமைதி மட்டுமே பதிலாய் கிடைக்க அதில் கடுப்பானவன்
“இப்போ நீ உன்னோட பிரச்சனையை சொல்லப்போறியா இல்லையா???” என்று தன் குரலை உயர்த்த அப்போதும் அவளிடமிருந்த எந்தவித பதிலும் இல்லை..
“ஓ... அப்போ நீ பதில் சொல்ல மாட்ட.... ஆனா ஒன்று சொல்லுறேன்... எனக்கு மேரேஜினு ஒன்னு நடந்தா அது உன்கூட மட்டும் தான்... இல்லைனா இப்படியே செத்து போயிர்றேன்....” என்று உச்சகட்டகோபத்தில் ரித்வி கூற அவன் எதிர்பாரா நேரத்தில் அவனது வாயினை தன் கைகளால் அரணிட்டவளின் கண்களில் நில்லாமல் நீர் வடிந்துகொண்டிருந்தது....
“வேணா ராஜ்.... வேணா.... அப்படி பேசாதீங்க... எனக்காக உங்க லைப்பை பாழடிச்சிராதீங்க... நீங்க வாழனும்.... சந்தோஷமா வாழனும்... என்னால உங்களுக்கு எந்த சந்தோஷத்தையும் தரமுடியாது... உங்க வாழ்க்கைக்கு நான் தான் தடையா இருக்கேன்னா.... இந்த உயிர் இந்த பூமிக்கும் உங்களுக்கும் பாரமா வேணாம்... நான் திரும்பி வரமுடியாத இடத்துக்கு போயிர்றேன்...” என்றதும் தான் தாமதம் ஹேமாவை அறைந்துவிட்டான் ரித்வி...
அறையின் வேகத்தில் கண்களில் பொறிபறக்க சில கணங்கள் தடுமாறியவள் சமநிலையடைந்ததும் எதிரே இருந்தவனை பார்க்க அவனோ மறுபுறம் திரும்பி நின்றுகொண்டிருந்தான்....
அவள் கூறிய வாரத்தைகளில் ஆத்திரமடைந்தவனுக்கு கோபம் கண்களை மறைக்க அதை கட்டுப்படுத்த முடியாதவன் தன்னை மீறி அவளை அடித்துவிட்டான்.. அப்போது தான் நடந்துகொண்ட விதம் தவறென்று புரிந்தபோதும் அவனது கோபத்தை கட்டுக்குள் கொண்டுவரமுடியாமல் மறுபுறம் திரும்பி நின்றுக்கொண்டான்...
அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவள் ராஜ் என்று அழைக்க
“வேணா ஹேமா... மறுபடியும் ஏதாவது சொல்லாத... ஐ காண்ட் கண்ட்ரோல் மை என்கர்... டோன்ட் மேக் மை செல்ப் டூ பீ அரெகன்ட்...லீவ் மீ அலோன் ப்ளீஸ்..”
“ராஜ்... நான் சொல்லுறத???”
“சொன்னா கேட்கமாட்டீயா நீ... உனக்கு மட்டும் தான் வலிக்குமா?? எங்களுக்கு எல்லாம் வலிக்காத?? நானும் உணர்ச்சிகள் உள்ள மனிதன் தானே... இப்படியே என்னை எத்தனை தடவை தான் கொல்ல போற??? திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து என்னை நடைபிணமாக்குன... பிறகு... அந்த ராட்சசன் கிட்ட சிக்கி சீரழிந்து குத்துயிரும் குலையுயிருமா வந்து நின்னு என்னை மொத்தமா கொன்னுட்ட .. இப்போ மறுபடியும் ... எதுக்கு ஹேமா இப்படி பண்ணுற?? உன்னோட பிரச்சனைதான் என்ன??? நீ ஒவ்வொரு தடவையும் அழும் போது உன்னை விட எனக்கு தான் வலிக்கிது... நீ நிம்மதியா இருக்கனும்னு தான அவனல போலிஸில் பிடித்து கொடுத்தேன்..உன்னோட அம்மா அப்பாவை தேடிகண்டுபிடித்து கொண்டு வந்தது நீ சந்தோஷமா இருக்கனும்னு தான்... இப்போ கூட நீ என்கூட இருந்தா சந்தோஷமா இருப்பனு தான் நாம மேரேஜ் பண்ணிக்கனும்னு நான் உறுதியா இருக்கேன்... என்னோட சந்தோஷம் எல்லாம் நீ சந்தோஷமா இருக்கது தான்... நீ கஷ்டப்படுற ஒவ்வொரு நிமிஷமும் என்னோட சந்தோஷம் தான் நிலை குழைந்து போகுது.. இது ஏன் உனக்கு புரியமாட்டேன்குது. இப்போவாவது சொல்லுமா... உன்னோட மனசை கஷ்டப்படுத்துற விஷயம் என்ன??”
“ உங்களை கஷ்டப்படுத்துறோமேங்கிற நினைப்பு தான் என்னை கஷ்டப்படுத்துற விஷயம்....”
“மிக்கி நீ சொல்லுறது புரியலை...”
“வேணாம் ராஜ்... நம்ம மேரேஜ் லைப் நல்லா இருக்காது.... அது உங்களுக்கு தான் நரக வேதனை ... வேணா ராஜ்... என்னை விட்டுடுங்க..நான் உங்களுக்கு வேணாம்...”
“ஏய் லூசாடி நீ...?? நீ இல்லாத லைப் தான்டி எனக்கு நரகம்.. அது உனக்கு புரியமாட்டேன்குதா?? உன்னை தவிர வேறு யார்கிட்டேயும் என்னால என்னோட காதலை குடுக்கமுடியாது.... அப்படி ஒரு நிலைமை வருதுனா நான் உயிரோடில்லைனு தான் அர்த்தம்..”
“ராஜ்....”
“இல்லை ஹேமா.. அதான் உண்மை... ஏற்கனவே சாகயிருந்தவன் தான் நான்...”
“ராஜ்....”
“நீ இல்லைனு தெரிய வந்ததும் ட்ரிங்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன்... என்னால நீ இல்லைங்கிறத ஏத்துக்கமுடியலை... அண்ணாவும் ஶ்ரீயும் எவ்வளவு சொன்னாங்க... ஆனா என்னால உன்னை மறந்துட்டு சவைவ் பண்ண முடியல.... ஒரு நாள் ட்ரிங்க் பண்ணிட்டு ட்ரைவ் பண்ணுட்டு வரும்போது ஆக்சிடன்ட் ஆகிரிச்சி... ரொம்ப சீரியஸா இருந்தேன்.... ரொம்ப கஷ்டப்பட்டு தான் காப்பாத்துனதா அண்ணா சொன்னாங்க..... ரொம்ப இன்ஜர்ட் ஆகிருச்சி.. அதோடு ஆக்சிடண்ட் ஆனதும் கார்ல பையர் ஸ்ப்ரெட் ஆக கை கால்ல நிறைய தீக்காயம்... அதுக்கு பிளாஸ்ரிக் சர்ஜரி பண்ணதான் ரஷ்யாவுக்கு போனேன்...”
“ஏன் ராஜ் இப்படி பண்ணீங்க.... ஏன் இப்படி பண்ணீங்க....உங்களுக்காக என்னால எதுவுமே பண்ணமுடியாதே...” என்று அவனை கட்டிக்கொண்டு அழுதவளை அணைத்து ஆறுதல் படுத்தியவன்
“மிக்கி... நீ இல்லாத லைப்பை என்னால நினைச்சி கூட பார்க்க முடியலை... எனக்கு நீ வேணும்... வாழ்வோ சாவே இரண்டுலயும் நீ வேணும்... ப்ளீஸ்மா.... புரிஞ்சிக்கோ..”
“ஐயோ ராஜ்...என்னால உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கமுடியாது....நாம வாழனும்னு ஆசைபட்ட வாழ்க்கையை நம்மால வாழமுடியாது ராஜ்.... அப்படி ஒரு நினைப்பு வந்தாலே எனக்கு அவனோட நியாபகங்கள் வந்து பயமுறுத்துது... அதை எப்படி உங்களுக்கு புரிய வைக்கிறதுனு எனக்கு புரியலை ராஜ்.... நீங்க.....நீங்க..... என்னை... தொடும் போது அவன் என்னை வெறியோடு வேட்டையாடி நாசம் பண்ணது நியாபகம் வந்து உங்களை கஷ்டப்படுத்திடுவேனோனு எனக்கு பயமா இருக்கு ராஜ்.... காதலோட என்னை நெருங்கும் போது அவனால வந்த காயங்களால உங்களை காயப்படுத்திடுவேனோனு பயமா இருக்கு ரித்வி..... அந்த காயங்களால் உங்க சந்தோஷத்தையும் வாழ்க்கையையும் சிதைச்சிருவேனோனு பயமா இருக்கு ரித்வி.... அவனை என்னோட வாழ்க்கையிலிருந்து விலக்கிட்டீங்க... ஆனா அவனால நான் அனுபவிச்ச சித்திரவதைகள் இன்னும் வடுக்களா இருக்கு... அது வாழ்க்கையோட இறுதிவரை இருந்தா என்னை திருமணம் செய்ய விரும்புற உங்க வாழ்க்கையையும் சூனியமாக்கிவிடும்..... எந்த தப்பும் செய்யாம எதுக்காக உங்களுக்கு இந்த தண்டனை??? வேணா ராஜ்.... உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமையும்... என்னை காதலிச்ச ஒரு காரணத்துக்காக தினம்தினம் நீங்க கஷ்டப்படுறதை நான் விரும்பலை.... ப்ளீஸ்.... என்னோட நிலைமையை புரிஞ்சிக்கோங்க... ப்ளீஸ்...” என்று கண்களில் நீருடன் கெஞ்சுபவளுக்கு என்ன சமாதானம் கூறுவதென்று ரித்விக்கு தெரியவில்லை....
அவளுக்கு வலியும் வேதனையும் உண்டு என்று அறிந்தவனுக்கு அது இத்தனை ஆழமானது என்று இன்று தான் தெரிந்தது.... திருமணத்தை குழந்தையை காரணம் காட்டி மறுப்பாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு இந்த மறுப்புக்கான காரணத்தை கேட்டதும் எவ்வாறு சரிசெய்வது என்று புரியவில்லை... ஆனால் இப்போது அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சற்று விலகியிருப்பதே சரியென முடிவு செய்தவன் அவளது கண்களில்வழிந்த நீரை துடைத்தபடி
“சாரி மிக்கி.... உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்... கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியாம உன்னை அடிச்சது தப்பு தான்.. சாரிமா...சாரி...”என்று கவலை தோய்ந்த குரலில் ரித்வி மன்னிப்பு வேண்ட
“பரவாயில்லை ராஜ்... லீவ் இட்.... வாங்க வீட்டுக்கு போகலாம்....” என்று அவனை வேறேதும் கூறவிடாது அவனுடன் அங்கிருந்து கிளம்பினாள்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top