நீ இருக்கும் நெஞ்சம் இது …9

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
யசோதா, மீனாட்சியிடம் கண்மணி எங்கே? என்று கேட்க. மாடியில் துணி காய வச்சிட்டுருக்கா ,சம்பந்தி. இதோ கண்மணி வந்தாச்சு” என்று மீனாட்சி சொல்ல, கண்மணி எல்லோரையும், வரவேற்கும் விதமாக புன்னகைத்தாள்.

யசோதா மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர் ,அவரைப் பார்த்தாலே ,அவரின் நடை, உடை, பாவனையில், தோற்றத்தில், ஒரு நிமிர்வு தெரியும். அவருக்கு ,இந்த குடும்பத்தை மிகவும் பிடித்தது.

சுருக்கமாக சொன்னால், “யசோதாவின் குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம்” என்றால் “மீனாட்சியின் குடும்பம் பாந்தமான குடும்பம்”.

“எதிர் துருவம் ஒன்றை ஒன்று ஈர்க்கும்” என்ற விதிக்கு ஏற்ப, இவர்கள் இருவரின் குடும்பமும், ஒன்றை, ஒன்று ஈர்த்தது.

யசோதா எப்பொழுதும் பணத்திற்கு முக்கியத்துவம் தரமாட்டார், குடும்ப கவுரவம், குணம், இவற்றிக்கு முக்கியத்துவம் தருவார். அவர் பிள்ளைகளையும், அப்படியே வளர்த்தார்.மிகவும் கலகலப்பானவர், கணவர் பிரபாகரனும் அப்படியே.

கண்மணி, வசுவின் கையில் இருக்கும், ஸ்ருதியை நோக்கி கையை நீட்டினாள். ஸ்ருதியும் அழகாக கண்மணியிடம் தாவிக் கொண்டது. வசுவிற்கு தான் இங்கு மனசு ஒட்டவில்லை. அவள் முக்கியத்துவம், இந்த கண்மணி வருகையால் குறைவதாக உணர்ந்தாள் . கண்மணி, கண்மணி என்று எல்லோரும் அவளை தாங்குவது ,வசுவிற்கு பிடிக்கவில்லை. அவள் அம்மா வீட்டிலும் சரி, அவள் புகுந்த வீட்டிலும் சரி, அவள் வைத்ததுதான் சட்டம். ஏனென்றால்,அவள் தாய் மாமன் , சந்தோஷ் திருமணம் செய்து கொண்டதால், எல்லாம் அவள் இஷ்டம் தான் .மேலும் அவளுடைய தாத்தா, பாட்டி வீடு, என்பதால் அவள் வைத்ததுதான் சட்டம்.

இப்படி, அவள் ஏதோ யோசித்துக் கொண்டிருக்க. மீனாட்சி, எல்லோரையும் சாப்பிட அழைக்க. யசோதாவும் எந்தவித பந்தாவும், இன்றி சந்தோஷமாக சரி என்றார். சந்தோஷம் இது என்ன அம்மா கேள்வி? போய்க் கொண்டு வாங்க, உங்கள நம்பி, சாப்பிடாம வந்துட்டோம், என்று சொன்னதற்கு, வசு அவனை கையில் இடித்தாள். அவன் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

மீனாட்சி”எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் அவர்கள் பழகும் விதம்” கண்டு மனதில் இருந்த சிறு நெருடலும், அவரைவிட்டு அகன்றது. அனைவரும், சாப்பிடாம அமர, வாழை இலை போட்டு, அதில், குலாப் ஜாமுன், முதலில் பரிமாறினார், பிறகு காஞ்சிபுரம் இட்லியை, சுட சுட பரிமாற, தொட்டுக்கொள்ள காரச் சட்னி ,சாம்பார் வடை, என்று பரிமாறப்பட்டது. அனைவரும், திருப்தியாக உண்ட பிறகு, பீட்ரூட் பாயசம் தந்தார். “இது கண்மணியின் ஸ்பெஷல்” என்று பெருமையாக மணிகண்டன் சொல்ல. அதைக்கேட்டு, வாசுகிக்கு இன்னும் எரிச்சல் ஆகியது.

யசோதா, கிருஷ்ணாவிடம் டேய் உனக்கும், இட்லிக்கும், பூர்வ ஜென்ம பந்தம் போல, நீ விட்டாலும், அது உன்னை விடாது என்று வெறுப்பேற்ற. அதற்கு கிருஷ்ணா, நீ செய்த இட்லியை விட, இது இன்னும் சூப்பரா இருக்குமா என்று இவன் வெறுப்பேற்ற. அதற்கு நான் உனக்கு அம்மாடா என்னை வெறுப்பு ஏத்துற. இரு இன்னும் ஆறு மாசத்துக்கு, கல்யாணத்தை தள்ளி வைக்க போறேன் என்று சொன்னதற்கு. வாயின் மேல் விரலை வைத்து அமர்ந்து கொண்டான்.

இதைப்பற்றி, எந்த கவலையும், இல்லாமல், கண்மணி ஸ்ருதியோடு அவள் ரூமில் விளையாடிக்கொண்டிருந்தாள். இடைவிடாமல் அவள் தம்பி கார்த்திக் அழைத்துக் கொண்டு இருந்தாள், சீக்கிரம் வர சொல்லி. உள்ளே வந்த மீனாட்சி, கண்மணி சீக்கிரம் ரெடி ஆகு, முகூர்த்த புடவை எடுக்கணும் இல்ல, சரி மா என்று சொல்லிவிட்டு, ஸ்ருதியை அவள் அம்மாவிடம், தந்துவிட்டு வந்தாள். கிருஷ்ணாவும், கண்மணியை விடாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அதை உணர்ந்தாலும், தலையை நிமிர வில்லை. எல்லார் முன்னாடியும், எப்படி பார்க்கிறார் பாரு, என்று முணுமுணுத்து கொண்டே உள்ளே சென்றாள்.

சரியாக 15 நிமிடத்தில்,அழகான‘ “பெங்கால் காட்டன் புடவை கட்டி,, காதில் அழகான கம்மல் ஜிமிக்கி, கழுத்தில் டாலர் செயின், ஒருகையில் பிரேஸ்லெட், ஒரு கையில் வாட்ச், என்று அழகாக தயாராகி வந்தாள்” அவளைப் பார்த்த அனைவரும் அசந்து விட்டனர்!

“சிம்பிள் அண்ட் எலிகபன்ட்” என்று சொல்லுவார்களே, அப்படி தயாராகி வந்தாள். பார்த்த கிருஷ்ணா வால் “கண்ணை அவள் மீது இருந்து எடுக்க முடியவில்லை” பக்கத்திலிருந்த சந்தோஷ், டேய் மாப்ள, பப்ளிக், பப்ளிக் என்று சொன்னான். பப்ளிக், இல்ல மாமா, {ஷி இஸ் மைன்} என்று சொன்னான். இதைக்கேட்ட சந்தோஷ், டேய் மாப்ள, உனக்கு. பித்து புடிச்சி போச்சு டா, என்று பாவனையாக சொன்னான். இல்ல மாமா, கண்மணியே பிடிச்சுப் போச்சு. இப்படியே விட்டா சரியா வராது,என்று முடிவு செய்த சந்தோஷ், நம்ம தான் ஆக்சன்ல இறங்கணும்.

அக்கா என்று யசோதா வை அழைத்து, டைமாச்சு கிளம்பலாமா, என்று எல்லோரையும் கிளப்பி காரில் ஏற்றினான்.

கிருஷ்ணாவும், சந்தோஷம், ஏற்கனவே பிளான் பண்ண படி, பெரியவர்களை ஒரு காரிலும்,. வசு, சந்தோஷ் விமல், கண்மணி, கிருஷ்ணா, இவர்கள் ஒரு காரிலும் செல்வது என்று முன்கூட்டியே கிருஷ்ணா திட்டமிட்டிருந்தான்.

சந்தோஷ் மனதில், இவன் பாட்டுக்கு சொல்லிட்டான், எல்லோரையும், சரிகட்டி காரில் ஏற்றுவதற்கு, மேல் மூச்சு, கீழ்மூச்சு, இவனுக்கு தான் வாங்கியது. அதிலும் குறிப்பாக, மணிகண்டனின், கண்டன பார்வைக்கு ஆளானான். அவனைக் கேள்வியா கேட்டு தள்ளிவிட்டார்.

அவரை சமாளிப்பதற்குள், இவனுக்கு முழி பிதுங்கியது. கண்மணி மடியில், ஸ்ருதி குட்டி அமர்ந்திருந்தது. கிருஷ்ணா மெதுவாக, கண்மணியின் பக்கத்தில், நகர்ந்து அமர்ந்த நேரம், வெளியே சென்றிருந்த கார்த்திக் சரியாக வந்தான். அதற்கு மணிகண்டன் மிருந்து திட்டு விழுந்தது.

இங்கு ஓரப் பார்வையால், கிருஷ்ணாவை பார்த்துக்கொண்டிருந்த, கண்மணி, கார்த்திக் வரவும், கார்த்திகை நோக்கி கையை ஆட்டினாள், கார்த்திக் விட்டால் போதும், என்று கண்மணியின் பக்கத்தில் அமர்ந்துகொண்டான். சரியாக சொல்வதென்றால், கிருஷ்ணா விற்கும் கண்மணி நடுவில்.

இங்கு முன் சீட்டில், அமர்ந்திருந்த “சந்தோஷ் கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டிருந்த சந்தோஷ் கிருஷ்ணாவை வட போச்சா” என்று அவன் கிருஷ்ணா பார்த்து வாய் அசைத்தான். அதற்கு சிரிப்பை பதிலாக தந்தான் கிருஷ்ணா.

சந்தோஷ மனதில் என்ன டென்ஷன் தானே ஆகணும்? சிரிக்கிறான், இவன் ஏதோ, பிளான் பண்ணிட்டான். கண்மணியை பார்த்து “அழகான ஒரு குறும்பான சிரிப்பு” ஒன்று கிருஷ்ணாவின் முகத்தில் வந்து அமர்ந்தது.

“தள்ளிப்போகாதே என்னையும் தள்ளிப் போக சொல்லாதே

இருவர் இதழும் இதழும் மலர் எனும் முள் தானே”….
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top