நீ இருக்கும் நெஞ்சம் இது …8

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
மீனக்ஷி விடியற்காலை, நான்கு மணிக்கு கண்மணியை எழுப்பிக்கொண்டிருந்தார்,கண்மணியும் கூப்பிட்ட குரலுக்கு உடனே எழுந்துகொண்டாள். மீனக்ஷி, கண்மணியிடம் கண்மணி சீக்கிரம், சீக்கிரம் ,குளிச்சிட்டு போய் வாசல்ல கோலம் போடு கண்மணி, சம்பந்தி வீட்டிலிருந்து ,காலையில எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவாங்க.

அவளும், குளித்துவிட்டு வாசலில் கோலம் போட்டுவிட்டு வந்து, அவள் அம்மாவிற்கு சமையலில் உதவிக் கொண்டு இருந்தாள்.

அப்பொழுது, கார்த்திக் வந்து, “அம்மா ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா” அதெல்லாம், ஒன்னும் வேண்டாம் என்று கண்மணியிடம் இருந்து பதில் வந்தது.

உனக்கு “போர்டு எக்ஸாம் வருது” நீ, போய் படி என்று சொன்னவுடன், மறுபேச்சு பேசாமல் அமைதியாக சென்றுவிட்டான். அதை ஆச்சரியமாக பார்த்த மீனாக்ஷி, என்ன கண்மணி? இப்பவெல்லாம், நீ “என்ன சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் செய்யறான்” அதற்கு, கண்மணி எனக்கு கல்யாணம் முடிவானது இருந்து இப்படித்தான் மா, நான் என்ன சொன்னாலும், சரி சரின்னு செய்றான்.

மீனாட்சியும், சில நாட்களாக கவனித்து கொண்டுதான் இருக்கிறார். அக்கா, ,தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதும். ஒற்றுமையாக செல்வதும், அக்கா என்ன சொன்னாலும், தம்பி கேட்டுக்கொள்வது, தம்பி ஏதாவது கேட்டா, தட்டாமல் கண்மணி செய்து தருவதும். “வீட்டிற்கு வீடு வாசப்படி” இது எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான் அவரும் இதையெல்லாம் கடந்து வந்தவர் தானே, இருந்தாலும் தன்னுடைய மகள் என்று வரும்போது, ஒரு மகிழ்ச்சி கலந்த வருத்தம், ஒரு சுகமான வலி, இது இயல்புதான் என்று மனதை தேற்றிக் கொண்டார். “பெண்ணை பெற்ற அனைவரும், கடந்து வரும் ஒரு கனமான சூழல்”.

கடைவீதிக்குச் சென்றிருந்த, மணிகண்டன் பூ, பழம், வீட்டிற்கு தேவையான, சில பொருட்களுடன், பரபரப்பாக உள்ளே வந்தார். அவர் கையிலிருந்ததை, கண்மணி வாங்கிக்கொண்டு, பேனைப் போட்டுவிட்டு உள்ளே சென்று, அப்பாவிற்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள், மணிகண்டன் மனதில் “இதற்குத்தான் பெண்பிள்ளை வேண்டுமென்பது” என்று நினைத்துக் கொண்டார். எப்பொழுதுமே, தந்தைக்கு மகள் அருமை தானே.

இப்படியே, நேரம் கடக்க ஸ்ரீராமனின் மொத்த குடும்பமும் வந்து இறங்கியது. வாசலை பார்த்ததும், யசோதா இங்க பாரேன், வசு எவ்ளோ பெரிய கோலம்! இல்ல நம்ப சென்னையில யாரு இப்பல்லாம் இவ்வளவு பெரிய கோலம் போடுற? என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே. மீனாட்சி, மணிகண்டன் இருவரும் வந்து முறைப்படி வரவேற்றார்கள்.

யசோதா எப்பொழுதும், கலகலப்பான ஆள், எதார்த்தமாக மீனாட்சியிடம், யார்” இந்த பெரிய கோலம் போட்டா சம்பந்தி” என்று கேட்டார். அதற்கு மீனாட்சி பெருமையாக கண்மணி தான் என்று சொன்னார். எங்கள் வசு விற்கு கோலமே போட வராது.

“சிலர் செய்யும் தப்பை, யசோதாவும் செய்தார், மகளின் முன்னாள், மருமகளை விட்டு தருவது, மருமகள் முன்னாள், மகளை விட்டு தருவது” அவரையும் அறியாமல், அவரே, “தன் குடும்பத்தில் நடக்கப்போகும் சில பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்” அதற்கு, வசுவின் கணவன் சந்தோஷ் சும்மா இல்லாமல் அக்கா, அவளுக்கு சமையலே, சரியா வராது என்று சொல்லிவிட, அந்த நிமிடமே, “வசுவின் முகம் மாறியது இதை யாரும் கவனிக்கவில்லை” அவள் ஸ்ரீராமின் முகத்தை பார்த்தாள், தன் தம்பி, தனக்கு ஆதரவாக ஏதாவது சொல்லுவானா, என்று அவன் கண்கள் முழுவதும், கண்மணி எப்பொழுது வெளியே வருவாள் என்று அவள் ரூம்வாசலிலே இருந்தது...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அட கூமுட்டைகளா
அம்மா புருஷன் தம்பின்னு எல்லோரும் தப்பு பண்ணுறாங்களே
தேவையில்லாமல் வாசுகியை கண்மணிக்கு எதிரியாக்கிட்டாங்களே
ஆனால் வார்த்தைகள் முடியவில்லை
பாதியிலேயே incompleted நிற்கிறதே, கிருஷ்ணா டியர்
 

Pragathi Ganesh

Well-Known Member
அட கூமுட்டைகளா
அம்மா புருஷன் தம்பின்னு எல்லோரும் தப்பு பண்ணுறாங்களே
தேவையில்லாமல் வாசுகியை கண்மணிக்கு எதிரியாக்கிட்டாங்களே
ஆனால் வார்த்தைகள் முடியவில்லை
பாதியிலேயே incompleted நிற்கிறதே, கிருஷ்ணா டியர்
Now I will correct dear thanks Banu ma.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top