நீ இருக்கும் நெஞ்சம் இது …13

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஐயர் வரவும் சடங்குகள் ஆரம்பித்தன. யசோதா பையன் விட்டு சார்பாக,”21 தட்டு வரிசை வைத்து அசத்திவிட்டார்” இன்னும் கேக், பெண்ணுக்கு மேக்கப் செட், என்று என்னென்ன தேவையோ அனைத்தையும் வைத்து அசத்திவிட்டார்.

ஐயர் “லக்ன பத்திரிக்கை வாசிக்க” பெண் வீட்டு சார்பாக, கண்மணியின் பெரியப்பாவும், பையன் வீட்டு சார்பாக, கிருஷ்ணாவின் தாத்தாவும் தட்டு மாற்றிக்கொள்ள, நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது.

ஐயர் சென்றவுடன் பெண்ணையும், மாப்பிள்ளையையும் அருகில் அமர்த்தி நலுங்கு வைத்தனர். அப்பொழுது கிருஷ்ணா, கண்மணி யிடம் பேசிக்கொண்டிருக்….

மாலை சரி செய்யும் சாக்கில், சந்தோஷ், கிருஷ்ணாவிடம் மாப்பிள எல்லாரும் உங்களையே பாக்குறாங்க. கொஞ்சம் அடக்கி வாசி, அது மட்டுமல்ல “மண்டபம் இல்ல மொத்தமே ஒரு முப்பது பேர் தான் இருக்கோம்”.. அதனால, எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க, என்று சொன்னவுடன்.

கிருஷ்ணா எல்லோரையும் பார்க்க அப்பொழுதுதான் அனைவரும் தங்களையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது .நலங்கு வைக்கும் சடங்கு முடியும் நேரம், கிருஷ்ணா, சந்தோஷ் இடம் மாமா கேக் வெட்டணும் என்று சொன்னவுடன்,

இவன் “நம்மள வெட்டாமல் விடமாட்டான் போல இருக்கு” என்று முணுமுணுத்துக் கொண்டே தன் அம்மாவாகிய அகிலாண்டேஸ்வரி இடம் சென்று கிருஷ்ணா கூறியதை சொன்னவுடன், பாட்டி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, மீனாட்சியிடம் சென்று பசங்க, கேக் வெட்டனும் ஆசைப்படுகிறான் என்று சொன்னவுடன் அவர் மணிகண்டனை கேட்டு சரி என்று ஒத்துக் கொண்டனர்.

அனைவரும் சூழ்ந்து நின்று கொள்ள, கிருஷ்ணாவும், கண்மணி இருவரும் சேர்ந்து கேக்கை வெட்டினார்கள். கிருஷ்ணா முதல் துண்டை எடுத்து கண்மணிக்கு ஊட்டும் சாக்கில் “கண்மணியின் உதட்டை பிடித்து லேசாக இழுத்துவிட்டான்”. கண்மணி பயந்து ஒரு அடி பின்வாங்க, பின்னாடி நின்றுகொண்டிருந்த சுபா என்ன ஆச்சுடி? என்று கேட்கவும் ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள்.

இப்ப நீ தாண்டி கொடுக்கனும், என்று சொன்னவுடன், கண்மணி கேக்கை எடுத்து கிருஷ்ணாவின் வாயில் வைக்கும்போது, கிருஷ்ணா இந்த முறை விரலை லேசாக கடித்து வைத்துவிட்டான், பின்னாடி நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த, சுபா கண்மணி இடம் ஏய் அண்ணா “ரொம்ப முரட்டு பீஸ் போல இருக்குடி” எதுக்கும் நீ கொஞ்சம், நல்லா சாப்பிட்டு, உடம்ப தேத்திக்கோ என்று சொல்லவும் எதுக்குடி? என்று கண்மணி கேட்டு வைக்க…

இன்னைக்கு நைட்டு, அண்ணா போன் பண்ணும் போது இந்த “டவுட் கேட்டு” கிளியர் பண்ணிக்கோ. அவர்தான் “லெக்சரர் இல்ல சும்மா உனக்கு டீடெயில் கிளாஸ் எடுப்பாரு” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது இங்கு சந்தோஷ்…

சந்தோஷ் என்ன ஒரு பாட்டு ல்ல? எதுவுமே இல்லை? இருங்க நான் பாட்டு போட்டு விடுறேன் என்று சொல்லவும். அதற்கு, சுபா எங்க கண்மணி நல்லா பாடுவாள் என்று சத்தமாக சொன்னவுடன்

கண்மணி, சுபாவை பார்வையால் பஸ்பம் ஆக்கினாள். இதை பார்த்த பாட்டி, ஏன் கண்ணு? பாட்டி உன் பாட்டை கேட்கக் கூடாதா என்று சொன்னவுடன், அவசரமாக பதிலளித்த கண்மணி, இத்தனை பேர் முன்னாடி பாட வெட்கமா இருக்கு பாட்டி என்று சொன்னவுடன்…

இரு நான் முதல்ல பாடுறேன், என்று சத்தமாகச் சொல்லவும். இதைக்கேட்டு “நெஞ்சில் கைவைத்த சந்தோஷ் பேசாம நாம வாய மூடிட்டு இருந்திருக்கலாம்” என்று காலம் கடந்து யோசித்தான். அதற்குள் பாட்டு பாட ஆரம்பித்து விட்டார்

“டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதே

பட்டப்படிப்பு படித்து வந்தாலும் வந்தாலும் பாட்டி சொல்லை தட்டாதே”

என்று பாடவும், “தண்ணீரை குடித்துக்கொண்டிருந்த கிருஷ்ணாவிற்கு புரை ஏறியது”… கிருஷ்ணா, சந்தோஷ் இடம், மாமா உங்க அம்மாவை, வாய மூடு சொல்லு. இல்லன்னா வீட்டுக்கு போகும்போது பாதிவழியில் இறக்கி விட்டுடுவேன் என் இமேஜை ரொம்ப டேமேஜ் பண்ணுது…

என்று இவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது இங்கு கண்மணி பாட ஆரம்பித்தாள்

“பெண்ணே நீதான் என்ன ஆனாய் என்று:

இதயம் கேள்வி கேட்க:

ஊஞ்சல் போலே மனமும் ஆட:

அங்கே நீதான் ஆடல்:

உள்ளம் கொள்ளை போகுதடா:

உன் அருகில் உன் சிரிப்பில்:

என்னை மறந்தேன் நானடா:

என்று இனிய குரலில் கிருஷ்ணாவை பார்த்து பாடி முடிக்கவும்.

அனைவரின் கைதட்டும் வீட்டை அதிரவைத்தது. வாசுகி கூட ஒரு நிமிடம், அவள் குரலில் மயங்கி விட்டாள் கண்மணியின் குரல் வள
ம் அப்படி.
 
laksh14

அனைவரின் கைதட்டும் வீட்டை அதிரவைத்தது. வாசுகி கூட ஒரு நிமிடம், அவள் குரலில் மயங்கி விட்டாள் கண்மணியின் குரல் வளம் அப்படி.
super nyc epi
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top