நீயின்றி நானில்லை 2

Advertisement

Akila

Well-Known Member
அத்தியாயம் 2


ஹர்ஷாவின் கார் அந்த பத்து மாடி கட்டிடத்தினுள் நுழைந்தது. அந்த கட்டிடத்தின் வாயிலில் 'வர்தன் குரூப்ஸ்' என்று நேர்த்தியாக பொறிக்க பட்டிருந்தது.
ஹர்ஷாவும் அபியும் காரிலிருந்து இறங்கி வர எப்போதும் போல் அங்கிருந்த பெண்கள் அவர்களை வைத்த கண்வாங்காமல் பார்க்க அவர்களோ அது எதையும் சட்டை செய்யாது தத்தம் அறைகளில் சென்று வேலையில் இறங்கினர்.


ஹர்ஷாவின் தந்தை விமல் வர்தன் தொடங்கியது தான் வர்தன் குரூப்ஸ் இந்தியா முழுவதும் பல்வேறு துறையில் கால் பதித்து வெற்றி கண்டவர்.வர்தன் குரூப்ஸ் என்றால் தெரியாத ஆளில்லை. படிப்பு முடித்துவிட்டு ஹர்ஷாவும் அபியும் அந்த கம்பெனிகளுக்கு பொறுப்பேற்று கொண்டனர். ஹர்ஷா IT துறையிலும் அபி chemical துறையிலும் தங்கள் கல்வியை மேற்கொண்டனர்.

ஹர்ஷா அபி இருவரும் நான் ஐடென்டிகள் ட்வின்ஸ் ( non- identical twins) ஆனால் இவர்களின் உடலமைப்பு ஒரே மாதிரி தான் இருக்கும். ஹர்ஷா பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் ஹாஸ்டலில் படிக்க முடிவெடுக்க அபியும் அவனுடன் வருவதாக அடம் பிடித்தான் அப்போது ஹர்ஷா அவனிடம் "அபி எந்த ஒரு எக்ஸ்டரா சலுகைகளும் இல்லாம நார்மல் மிடில் கிளாஸ் ஸ்டூடெண்ட் மாதிரி படிக்கிறதா இருந்தா என்கூட வா" என்று கரராக கூறி தான் அழைத்து சென்றான்.

இருவரும் பார்ன் வித் சில்வர் ஸ்பூன் அதுவும் அபிக்கு ஏ.சி. இல்லாமல் தூக்கம் கூட வராது ஆனால் ஹர்ஷாவிற்காக ஏ. சி. இல்லாமல் தூங்கவும் பழகிக்கொண்டான். ஹர்ஷா அவன் படும் அவஸ்த்தைகளை பொருக்காது அவனை அங்கிருந்த போக சொல்ல அவன் "இல்ல ஹர்ஷா நான் போக மாட்டேன்" என்று அவனுடனே தங்கிக்கொண்டான். ஹர்ஷாவுடன் படித்தவள் தான் கீர்த்தி.

அவர்கள் துறையிலே ஹர்ஷாவிற்கென்று தனி பெண் ரசிகைகள் உண்டு அதுபோல் அவன் அழகிற்காக அவனை காதலித்தவள் தான் கீர்த்தி. கல்லூரி இரண்டாம் ஆண்டில் கீர்த்தி ஹர்ஷாவிற்கு ப்ரொபோஸ் செய்ய கீர்த்தியின் நல் குணத்திற்காக அவளின் காதலை ஏற்றுக்கொண்டான். ஹர்ஷா அவளிடம் தன் குடும்பத்தை பற்றி மறைத்து வைத்திருந்தான் அதற்கான காரணம் அவள் அவனை அவனுக்காக காதலிக்க வேண்டுமென்று நினைத்தான். அபிக்கு கீர்த்தியை பிடிக்காது ஆனால் ஹர்ஷாவிற்காக அவளுக்கு மரியாதை கொடுத்தான்.

இவர்கள் கல்லூரி நாட்களும் அழகாக முடிந்தது. இளங்கலை முடித்துவிட்டு அபி கம்பெனியில் வேலைகள் கற்றுக்கொள்ள ஹர்ஷா முதுகலை படிப்பிற்காக லண்டன் சென்றான். இரண்டு ஆண்டுகள் முடித்துவிட்டு அவனும் அவர்கள் கம்பனியில் வேலைகள் கற்றுக்கொண்டான். அப்போது கீர்த்தியிடன் தன்னை பற்றி கூறவேண்டும் என்று அவன் நினைத்துக்கொண்டு செல்ல அவளோ அவனிடம் "சீக்கிரம் ஒரு நல்ல வேலைக்குப் போய் செட்டில் ஆகுங்க அதுக்கு அப்புறம் எங்க வீட்ல பேசுங்க" என்று கூறிவிட்டு சென்றாள். அவளின் இந்த பேச்சு அவனுக்கு வித்தியாசமாகவே பட்டது இருப்பினும் வேலை கற்றுக்கொள்வதில் முழு கவனம் செலுத்தினான்.

இப்படியே ஒரு வருடம் கழிய ஹர்ஷா அவர்களின் கம்பனியை பொறுபெற்றுக்கொண்டான். அவன் பொறுப்பேற்ற நேரத்தில் சில முக்கியமான ப்ரொஜெக்ட்கள் வர அதை முடிப்பதற்குள் ஆறு மாதம் ஓடிவிட்டது. ப்ரொஜெக்ட்களை முடித்துவிட்டு கீர்த்தியிடன் பேச சென்றான். அப்போது தான் அவள் "இங்க பாருங்க ஹர்ஷா உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது எங்க வீட்ல எனக்கு வேற மாப்பிள்ளை பார்திருக்காங்க அவர் பெயர் தர்ஷன் வர்தன் குரூப்ஸ்ல வேலை செய்றாறு"
"கீர்த்தி நானும் அந்த கம்" என்று முடிப்பதற்குள் அவள்
"நீங்க வர்தன் குரூப்ஸ்ல ஜஸ்ட் ஒரு ஸ்டாப் ஆனா அவர் சீனியர் மேனேஜர். உங்களுக்கு வர சம்பளத்தில கும்பம் நடத்துறது ரொம்ப கஷ்டம் புரிஞ்சிக்கோங்க"
"அப்போ நீ என்னை லவ் பண்ணலையா"
"புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க ஹர்ஷா. காசு பணம் இல்லாம லவ் மட்டும் வச்சு வாழ்க்கை நடத்த முடியாது.. காலேஜ்ல நீங்க அழகா இருந்தீங்க அதான் உங்களை லோவ்ப் பண்ணேன்.. அது வயசு கோளாறு இப்போ யோசிக்கும் போது அது தப்புன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன் நீங்களும் புரிஞ்சிக்குவீங்க" என்று அவள் எழுந்து சென்றாள் ஆனால் ஹர்ஷாவின் மனம் தான் உலைகலம் போல் கொதித்துக்கொண்டு இருந்தது.


வாழ்க்கையில் முதல் முறையாக ஒருவரை தவறாக இடைபோட்டுவிட்டதற்காக அவனுக்கு அவன் மேலே கோபம் வந்தது அதுவும் நான்கு வருடங்களாக இப்படி ஒருவளை காதலித்ததற்கு அவனை அவனால் மன்னிக்கவே முடியவில்லை அதன் தாக்கம் தான் அவன் ரோட்டில் சீரிப்பாய்ந்தது.

ஹர்ஷா வேலைகளில் ஈடுபட்டாலும் அவனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நான்கு வருடங்களாக முட்டாள் போல் ஒருத்தியை காதலித்ததை நினைக்க நினைக்க கோபத்தின் உச்சியிற்கு சென்றான். கையில் வைத்திருந்த fileகளை கோபத்தில் தூக்கி எறிய அது ஏதோ கேட்க வந்த அபியின் மீது மழைப்போல் விழுந்தது.

அபி "இன்னும் கோபமா இருக்கீயா. யாரோ ஒருதிக்காக நீ இப்படி இருக்குறது நல்லா இல்ல ஹர்ஷா" என்று அவன் அந்த காகிதங்களை அடுகியப்படி அவனுக்கு அறிவுரை கூற தனது அடர்ந்த கேசத்தை கொதிக்கொண்டு தன்னை சமன் படுத்தினான்.
அபி "ஹர்ஷா உணக்குனு ஒருத்தி வருவா.. கீர்த்தி உனக்கானவ கிடையாது டா.. சில் பண்ணு" என்று அவனை தோளோடு அணைத்துக்கொண்டு கூறினான்.
ஹர்ஷா "ம்ம்.. சரி என்ன விஷயம் திடீர்னு வந்திருக்க"
"ஹான் சொல்ல மறந்துட்டேன் அப்பா உனக்கு கால் பண்ணறாம் நீ எடுக்கலன்னு எனக்கு பண்ணாரு.. மறக்காம அவருக்கு கால் பண்ணிடு" என்றுவிட்டு தன்னறைக்கு சென்றான்.


மதுரையில்..

சாஹித்யா கிளாஸ்ஸினுள் நுழைய அவளின் batchmates அவளை சூழ்ந்துக் கொண்டனர். அவர்களை ஒரு மாதிரி பார்த்தவள் மனதினுள் "இன்னிக்கி என்ன பிளான் போட்டிருக்காங்கனு தெரியலையே.. சாஹி உஷாரா இரு" என்று தனக்கு தானே எச்சரிக்கை விடுத்துக்கொண்டாள்.


சத்யா "சாஹிக்கு குட்டி"
"என்ன விஷயம்"
"எப்படி டி"
"நீ இப்படி கொஞ்சும் போதே தெரியும் டா சொல்லு"
"சாஹி சென்னைலயே பெரிய கம்பனி வர்தன் குரூப்ஸ் அவங்ககிட்ட ப்ரொஜெக்ட்க்காக கேட்கணும் டி.. நீ தான் தைரியமா பேசுவல.. பேசி பாரு டி"
"அடேய் நீ தான் டா ஆம்பள புள்ள நீ தான் பேசணும்"
"அதெல்லாம் இல்ல நீ தான் பேசணும் பேசு.. ஹே மாயா சொல்லு டி"
மாயா "ஆமா சாஹி.. நீயே பேசு அவன் பேசுனா சோதப்பிடுவான்" என்று அவனை வார சாஹியும் சிரித்துக்கொண்டே அவன் கொடுத்த எண்ணை வாங்கிக்கொண்டாள்.

11 மணியளவில் சாஹி அந்த எண்ணிற்கு அழைப்பு விடுக்க ஹர்ஷா அழைப்பை ஏற்றான்.
சாஹி "ஹலோ"
"எஸ்"
"சார் ஐ அம் சாஹித்யா பிரம் மதுரை. ஐ அம் pursuing மை B.Tech இன் IT. வி ஹாவ் அன் ஐடியா அபௌட் டூயிங் அவர் பைனல் இயர் ப்ரொஜெக்ட் ஒன் சைபர் செக்கியுரிட்டி சோ கேன் வி கெட் அன் அப்போய்ண்ட்மெண்ட் டூ மீட் யூ"
"ஹ்ம்ம்.. வாட் அபௌட் காமிங் saturday ஈவினிங் 5 பி. எம்."
"யா சார்.. தங்க் யூ"

அபி "யாரு ஹர்ஷா"
"ப்ரொஜெக்ட் பத்தி பேச ஸ்டூடெண்ட் கால் பண்ணிருந்தாங்க.. சரி அதை விடுங்க எந்த காலேஜ்க்கு கம்ப்பஸ் போலாம்னு டிசைட் பண்ணிருக்க"
"சென்னைல காமன்னா ஒரு இன்டர்வியூ பண்ணலாம்னு இருக்கேன் டா"
என்று பேசிவிட்டு அவரவர் வேலைகளில் மூழ்கினர்.

இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு சென்றனர். வீட்டினுள் நுழைந்தவுடன் விமல் அவர்களை பிடித்துக்கொண்டார்.
"ஹர்ஷா நான் உனக்கு ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன். நீ எதிர்பார்த்த மாதிரி சிம்பிளான பொண்ணு தான் மதுரைல இருக்காளாம்"
"அப்பா இப்போ என்ன அவசரம் கல்யாணத்துக்கு"
"இப்போத்துல இருந்து பார்த்தா தான் நீ கேட்குற பொண்ணை கண்டு பிடிக்க முடியும்"
"அப்பா" என்று அவன் பல்லை கடிக்க அபி வாயை பொத்திக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தான்.


அங்கு சாஹித்யா சென்னை செல்வதற்காக தன் தாயின் பின் சுற்றிக்கொண்டிருந்தாள்.
சாஹி "அம்மா ப்ளீஸ்மா அது பெரிய கம்பனி மா"
"அப்போ நான் காட்டுற பையனுக்கு ஒகே சொல்லு"
"எம்மா என்ன இப்படி பண்ற நீ"
"அப்போ நீ எங்கயும் போக தேவையில்லை"
"அம்மா ப்ளீஸ்.. அப்பா நீங்களாவது சொல்லுங்களேன்"
"விடு ரேணு ஏதோ முக்கியமான ப்ரொஜெக்ட்னு சொல்றல"
"அதெல்லாம் முடியாதுங்க. சும்மா அவளுக்கு சப்போர்ட் பண்றதை நிறுத்துங்க"
"இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம் ரேணு அவ காலேஜ் கூட முடிக்கில"
"நான் என்ன இப்பயே கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்னா. பையன் நல்ல பையன்னு அண்ணா சொன்னாரு சென்னைல இவ சொன்ன கம்பனில தான் அந்த பையனும் வேலை செய்றாராம்"
"அதுக்கு" என்று வெறுப்பாக சாஹி கேட்க "குட்டிம்மா போறது தான் போற அந்த பையனை பார்த்துட்டு வந்திடு மா"
"அப்பா நீங்களுமா.. அவ்ளோ நல்ல பையனா இருந்தா ஜானுக்கு கட்டி வைக்க வேண்டியது தான"
"சாஹி என்ன பேச்சு அது.. அண்ணா உன் நல்லதுக்கு தான சொல்வாரு"
"ஏதோ பண்ணுங்க ஆனா நான் தனியா போய் பார்க்க மாட்டேன் ஜானுவை கூட்டிட்டு போவேன்"
"சரி.. நீ அந்த பையனை பாரு அது போதும்" என்றிட சாஹி தோளை உலுக்கிக்கொண்டு அவள் அறைக்கு சென்றாள். பாவம் அவள் அறியவில்லை அவனால் தன் வாழ்வே மாறப்போவதென்று

ரேணு தன் அண்ணனுக்கு அழைப்பு விடுத்தார் "ஹலோ பிரேம், அவ அந்த பையனை பார்க்க ஒத்துகிட்டா"
"சரிம்மா. என்னிக்கி சென்னை வரா அவ"
"சனிக்கிழமை காலைல வந்திடுவா"
"சரி அப்போ நான் பார்த்துக்குறேன்" என்று அழைப்பை துண்டித்தார்.
Hi
Interesting update.
Sahithay pairing with Harsha???
Eagerly waiting for further interesting EPIs
 

Nilaajothi

Well-Known Member
அருமை சஹி வாழ்க்கை சென்னையில் மாற்றம் வர போகுதோ :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top