நினைவெல்லாம் நீ(யே)யா_8

Advertisement

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
நாங்க எண்ணிவந்த வரங்களை நீ தாருமம்மா......

என எல்லாரீஸ்வரி குரலில் ஸ்பீக்கர் அலர, தெருவெல்லாம் மாவிலை தோரணங்களும், கலர் கோலங்களும்,
சிறுவர்கள் கூட்டமாக ஓடி விளையாட,
இளைஞர் பட்டாளம் மைக்செட்டிற்க்கு அருகில் அமர்ந்து அடுத்து நடக்கும் நிகழ்வுகளை பட்டியல் போட்டுக்கொண்டிருந்தனர். பெண்கள் வீட்டுவேலையில் ஈடுப்பட. ஆண்கள் கூட்டமாக அமர்ந்து முடிந்த திருவிழாவின் நிகழ்வுகளை மீட்டுக்கொண்டிருந்தனர்.

ருத்ராவின் வீட்டில், மீனாட்சி ருத்ராவிடமும், ஹரிணியிடமும் சேலைகட்ட சொல்லி போராடிக்கொண்டிருந்தார்.அப்பொழுது அங்கு வந்த விஷ்ணு பாட்டி பூசணிகாய்கு எதுக்கு புடவ அது எத போட்டிலும் கேவலமாதா இருக்கபோகுது என்றான் ஹரிணியை பார்த்த படி.

ஏய் பனமரம் நா ஒண்ணு பூசணிகாய் இல்ல, நீதான்டா வெள்ளபன்னி, நெடுமரம், மைதாமாவு எல்லா. என்றாள் ஹரிணி இடுப்பில் கைவைத்து தலையை ஒருபுறம் சாய்த்தபடி.

ஏய், யாரபாத்து வெள்ளபன்னினு சொன்ன, உன்ன என ஹரிணியை துரத்த அவனால் பிடிக்கமுடியாதபடி ஓடி கொண்டிருந்தாள். அப்போது உள்ளே நுழைந்த துருவனை, கவனிக்காத ஹரிணி அவன் மீது மோதி விழப்போக
உடனே இடையில் கைக்கொண்டு அவளை, தன்னை நோக்கிஇழுத்தான். அவன் இழுத்ததில் அதிர்ந்த ஹரிணி தன் கைக்கொண்டு துருவனை தோள் மீது கைவைத்து தள்ளிநிறுத்தினாள்.

அங்கு வந்த விஷ்ணு, மச்சா அவள அப்படியே பிடி என்க.

அதற்குள் உள்ளே நுழைந்த கயல்விழியை பார்த்த ஹரிணி அவர் பின் ஓடி ஒளிந்துக்கொண்டாள்.

இதைக்கண்ட விஷ்ணு துருவனிடம், சும்மாவே ஓட்டுவா அத்த வேற வந்துட்டாங்க இனி சொல்லவா வேணும் நோ கமெண்ஸ் என தன்கையை துருவனின் தோள்மேல் போட்டுக்கொண்டு வெளியே சென்றான்.

என்ன மருமகளே இன்னக்கும் இந்த சுடிதாரே போட்டுஇருக்க. போ போய் நல்ல புடவைய கட்டு என்றார் கயல்.

அதயேதா நானும் சொல்லுற கயலு எங்க அக்காளும் தங்கச்சியும் கேட்டாதானே.என்றபடி வந்தார் மீனாட்சி.

கயல் , ருத்ரா ஹரிணியின் கன்னத்தில் கைவைத்தபடி, அத்தைக்காக கட்டமாட்டிங்களா என கொஞ்ச, உடனே
ருத்ராவும் ஹரிணியும் உங்களுக்காக கட்டுறோம் என ஒண்றாக கூறினர்.

பூசாரி, விருதாசலத்திடம். ஐயா காலையில பத்துமணிக்கு காப்பு கட்டிடலாம் நேரம் நல்லாஇருக்கு அதவிட்டா ஆறு மணிக்குதா, பொழுதுபோயிடுது அப்பறம் காப்பு கட்ட முடியாது. என்றார்.

சரி பூசாரி காலையிலயே வச்சிக்கலாம், நா குடும்பத்த அழைச்சிட்டு வந்திடுறேன் என விடைபெற்றார்.


துருவனை அழைத்துக்கொண்டு வெளியே சென்ற விஷ்ணு, என்ன மச்சா உன் ஆளுகிட்ட லவ் சொல்லிட்டியா என்றான்.

இன்னும் இல்ல மச்சா? நா இருந்தா அந்த பக்கமே வரமாட்டிங்கறா அப்பறம் எப்படி சொல்லுறது.

நீ DSP ஆனதாவது தெரியுமா? என்றான் நக்கலுடன்.

அதெல்லா தெரியும், ஆனா என்கிட்ட பேசவே மாட்டங்கிறா? என்ன பண்ணலாம் ஏதாவது ஐடியா கொடு.

முதல்ல உன் ஆளு யாருனு சொல்லு ஐடியா அப்பறம் கொடுக்குறேன்.

சொன்னா அடிக்ககூடாது. சரினா சொல்லுறேன்.என்றான் பொடிவைத்து

விஷ்ணு தலையை இடபக்கம் சாய்த்து துருவனின் முகத்தை பார்தபடி, அப்படி எந்த பொண்ணடா லவ் பண்ணுற நா அடிக்கற அளவுக்கு.

உன் தங்கச்சிய தா என்றான் பட்டென்று.

அதிர்ந்த விஷ்வா, என்னது பூசணியவா? என சத்தமாக கூறினான்.

விஷ்ணுவின் வாயை தன் கைகளால் மூடிய துருவன், கத்தாதடா யாருக்காவது கேட்டக போகுது,

என்னடா இப்படி ஒரு குண்டதூக்கிபோட்டுட்ட உஸ்ஸ், சரி பல வருஷமா லவ் பண்ணுற நான் என்ன பண்ணமுடியும். முதல்ல அந்த அடங்காபிடாரிக்கிட்ட உன் லவ்வ சொல்லு அவ என்ன சொல்லுறானு பாரு என்றான் முகத்தை தொங்கபோட்டபடி.

நான் பக்கத்துல போனாலே ஓடிப்போயிடுறா அப்பறம் எங்கிருந்து பேச என நொடிந்துக்கொண்டான்.

என்ன பண்ண சொல்லுற, பூனைக்கு மணிகட்டனும்னா பின்னாடி ஓடிதா ஆகணும். ஓடு போலிஸ் ஓடு, என கிண்டல் அடித்துக்கொண்டிருக்க. அங்கு வந்த வேலு, தம்பிங்களா ஐயா உங்கள வர சொன்னாரு என கூறிவிட்டு சென்றார்.

ஆதவின் வீட்டில் வேலாயுதம் தன் மனைவி சாந்தியிடம். இன்னக்கு காலையில காப்பு கட்டிடுவாங்க நாம ஒரு ஓண்பது மணிக்கா பரஞ்சோதிவீட்டுக்கு போயிட்டு அப்படியே சாமி கும்பிட்டு வந்திடுவோம் என சாந்தியிடமும் ஆதவிடமும் கூறிக்கொண்டு புறப்பட தயார் ஆகினர்.

இனி நடக்கும் நிகழ்வுகளை நாளைதிருவிழா கலாட்டாவில் தொடங்கலாம்...

நீ(யே)யா......?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top