நினைவெல்லாம் நீ(யே)யா_17

Advertisement

விஷ்ணு கல்லூரியில் இருப்பதாக செய்தி கேட்டவுடன் அனைவரும் கோபமாகவே வாசலையே பார்த்துக்கொண்டிருந்தனர் அவன் வருகைக்காக.

வீட்டிற்கு வந்த விஷ்ணு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, அவனை கண்ட விஷ்ணு தந்தையான அருண்குமார் அவன் கன்னத்தில் இரண்டு அரை விட, துருவன் விட்ட அரையுடன் இவையும் சேர்ந்து வலிக்க கண்களை மூடி நின்றான்.

வீட்டினர் அனைவரும் அமைதியாக இருக்க. மீனாட்சியோ விடுடா அவன என்றபடி விஷ்ணுவின் அருகே வந்தார்.

அம்மா இவ பண்ண வேலைக்கு... இதுவே கம்மி என கூற. மீனாட்சியோ விஷ்ணுவை பார்த்து ஏன்டா இப்படி பண்ண தேனு நிலைமையை போய் பாரு என அவனை உள்ளே அழைத்து செல்ல.

கட்டிலில் பாவை போல் அமர்ந்திருந்த தேனை பார்த்தவுடன் அதிர்ந்த விஷ்ணு.தரையில் மண்டியிட்டு மொழி மொழி என அழைக்க, அவளோ உணர்வின்றி இருந்தாள்.

மீனாட்சியோ அவளின் தோள் மீது கை வைத்து ஆட்டி பேசுமா என்னனாலும் சொல்லு இப்படியே இருக்காத என அவர் பயந்தே கூற.அப்பொழுதும் அவள் அப்படியே இருக்க, பயந்த விஷ்ணு மொழி..மொழி.. என கன்னம் தட்ட.

கைய எடு என கத்தினாள் தேன்மொழி,
அவள் பேசியதில் சற்று தெளிந்த குடும்பத்தினர், அனைவரும் அறையின் வாசலில் நிற்க.


அவளோ, தாத்தா எதுக்கு இவ எனக்கு தாலி கட்டினா, கட்டினவ ஒரு நிமிஷம் கூட அங்க இருக்காம எங்க போனா என அவள் கத்த. எவ்வளவு கோபத்திலும் மென்மையாக பேசும் சுபாவம் உடையவள் இன்று கத்துவதை பார்த்தவர்கள் மிரண்டு நிற்றனர்.

விருதாசலமோ, எதுக்குடா இப்படி பண்ண என விஷ்ணுவை பார்த்து கேட்க.

தாத்தாஅவ என்ன பாத்து பொம்பள பொறுக்கினு கேட்டா அப்ப அத்தை தவிர எல்லாரும் அமைதியாதானே இருந்திங்க.
ஏன் யாருமே விஷ்ணு அப்படிபட்டவ இல்லனு சொல்லல. அப்ப எல்லாரும் அவ சொன்னத உண்மைனு நம்பிட்டிங்கதானே.


நீங்க அப்படிதா என்ன வளத்திங்களா உங்க வளப்ப நீங்களே அமோதிச்சா மாதிரி ஏன் தாத்தா அமைதியா இருந்திங்க.நீங்க எல்லாரும் அமைதியா இருந்தது தா எனக்கு கோபம் அதானால அவள பழி வாங்க கல்யாணம் பண்ண என ஆதங்கமாக விஷ்ணு கூற.

மீனாட்சியோ, விஷ்ணு நாங்க அமைதியா இருந்துக்கு காரணம் குடும்பத்தில பிரச்சன வரகூடாதுனுபா. உன் மேல சந்தேகபட்டு இல்ல.

அப்ப அவள அந்த வார்த்த கேட்கும் போது விஷ்ணுவ பத்தி எங்களுக்கு தெரியும்னு ஏன் நீங்க சொல்லல? என மீனாட்சியை பார்த்து கேட்க.

அவன் கேட்பது சரி என்று பட மீனாட்சியோ, அவ ஏதோ விளையாட்டா பேசுறானு நெனச்சி அமைதியாய இருந்திட்டன்டா. என வருத்தமாக கூற.

எது பாட்டி விளையிட்டு, விளையாட்டா பேசுற வார்த்தையா அது. என தேனை பார்த்தபடி கூற.

வீட்டினர் அனைவரும் தங்கள் தவறை உணர்ந்து அமைதியாக நிற்க. தேன்மொழி விருவிருவென அறையிலிருந்து வெளியேறினாள்.

அவள் வெளியேறியதும் அவள் பின்னே கவிதா செல்ல. தேன் மொழி தன் வீட்டில் உள்ள முன் தோட்டத்தில் உள்ள பென்சில் அமர. அவளை கண்ட கவிதா.

தேனு, அவன் ஏதோ முட்டாள் தனமா பண்ணிட்டாமா அவனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். என கூற.

கவிதா கூறியதை கேட்டு அதிர்ந்த தேன் அத்த, அவ பண்ணிணதுக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்கனும். அவன் தா கேட்கனும் நா கேட்க வைப்பேன் என கூற.

தேன் பேசியதை கேட்ட கவிதா, இவ்வளவு நேரமும் பாவை போல் இருந்தவளா இவள். என்று எண்ணிக்கொண்டார்.

சரிமா, அவன மன்னிப்பு கேட்க வைக்கிறேன். நீ வா முதல்ல சாப்பிடு என கையை பிடித்து அழைக்க.

வேணா அத்த, என்ன கொஞ்சம் தனியா விடுங்க நா சரி ஆகிடுவேன் என வேடிக்கை பார்த்தபடி கூற. அதுவே சரி என பட்டது கவிதாவிற்கும்.

கூட்டு குடும்பம் என்றாலே தங்கள் குழந்தையை யாரேரும் தவறாக ஒரு வார்த்தை கூறினாலும் அவரின் தாய்க்கு முன் முதலில் கேட்பது அவரின் பெரியம்மா சித்தி தாத்தா பாட்டி தந்தையர்களே. அதையே தான் இங்கு விஷ்ணுவும் எதிர்பார்க்க ஆனால் அவனின் அத்தையை தவிர யாரும் தேன் பேசியதை எதிர்த்து கேட்காததே அவனுக்குள் ஏதோ வலி தோன்ற அதுவே அவனை யாரையிடம் கேட்காமல் பெரிய தவறை செய்ய வைத்தது.

உமையாளோ விஷ்ணுவிடம் சென்று. அவ சொன்னானு நீ தப்பு பண்ணிட்டேயேபா, எங்க பிள்ளைய பத்தி எங்களுக்கு தெரியாதா. அவ சொன்னா அத அப்படி நம்புற அளவுக்கு நாங்க என்ன முட்டாளா என கேட்க.

விஷ்ணு, உமையாளை ஒரு அடிப்பட்ட பார்வை பார்க்க. அவன் பார்வை ஏதோ செய்ய அவர் அங்கிருந்து சென்றார்.

வேலுவும் சாந்தியும் விருதாசலத்திடம் சென்று. அப்பா நாங்க வீட்டுக்கு கிளம்புறேம் என கூற.

ஏன்பா ஒருவாரம் இருந்திட்ட போலாமே என விருதாசலம் கூற.

இல்ல பா வேலை எல்லாம் பாதியிலே நிக்குது நாங்க போனாதா மேல பாக்கமுடியும்.

சரிபா போய்டுவாங்க என கூற.

சாந்தியோ மாமா, இப்ப பொழுது போயிடுச்சி நாங்க ஒரு நல்ல நாளா பாத்து ருத்ராவ வீட்டுக்கு அழைச்சிட்டு போறோம் என கூற.

அதுவே அனைவருக்கும் சரி என பட அனைவரும் அதையே ஆமோதித்தனர்.

சாந்தி ருத்ராவிடம் புறப்படும் விஷயத்தை கூற. அவளும் சரி என்று அவர்களை வழியனுப்ப வெளியே வந்தாள்.

அனைவரிடம் சொல்லிவிட்டு ஆதவ் குடும்பத்தினர் செல்ல. ஆதவின் பார்வை ருத்ராவிடமே இருக்க. சிவாவோ ரொம்ப வழியிது என கூற. அவனை பார்த்து சிரித்தபடி அனைவரிடமும் ஒரு தலையசைப்புடனே புறப்பட்டான்.

கார்திகேயனை பார்த்து மீனாட்சி, மாப்பிளை நாங்க நாள் பாத்து தேன்மொழிய எங்க வீட்டுக்கு அழைச்சிக்கிறோம். அப்பவே ஹரிணிய அழைச்சிட்டு போங்க என கூற. அவரும் சரின ஆமோதித்தார்.

இரவு உணவை அனைவரும் கடமையே என்று உண்ண. எவ்வளவு சொல்லும் உண்ணாவிரதம் இருந்தனர் தேன்மொழியும்_ விஷ்ணுவும்.

யாருக்கும் காத்திருக்காமல் சூரியன் கிழக்கில் உதிக்க அனைவரும் தங்கள் வேலை நோக்கி பயணிக்க தொடங்கினர்.

மலேஷியா செல்வதால் சிவாவும் ருத்ராவும் காலையிலே மால் கட்டும் நிலத்தின் அளவை கணக்கிட சென்றுவிட்டனர்.

விஷ்ணுவும் விரைவாகவே கல்லூரிக்கு சென்றுவிட. ஹரிணி மருத்துவமனை செல்வதற்காக தயாராகி வெளியே வந்தாள்.

அம்மா அக்கா எங்க? என கேட்டபடி உள்ளே சமையல் அறையினுள் செல்ல. கவிதாவோ அவள் காலையிலே மால் வேலையா கிளம்பிட்டா என சொல்ல.

சரி விஷ்ணு எங்க என கேட்க?

அவ என கவிதா யோசிக்க. உள்ளே வந்த கயல், இப்பதா வெளிய போனா என வரும் பொழுது தான் கண்டதை கூறினார்.

அம்மா இன்னைக்கு காலையில வர டாக்டர் வரல, நா சீக்கிறம் போகனும் இப்ப எப்படி என சோகமாக கேட்க.

சரிடி கவலப்படாத நம்ப வேலு கார்ல கூட்டிபோக சொல்லுற என கூற. அய்யோ அம்மா அவர் இப்பதா தாத்தா ஏதோ வேலை சொல்ல கிளம்பினார். அப்பா மில்லுக்கு போயிட்டார் என மொழிய.

நா துருவ அழைச்சிட்டு போக சொல்லவா என கயல் கேட்க.

இல்ல அத்த வேணா நா ஆட்டோல போறேன்.

ஏய் எதுக்கு ஆட்டோல போற துருவ் கூட போ உங்க அப்பாவுக்கு தெரிஞ்சிது நா அவ்வளவு தா என கவிதா குறைபட.

இரு நா துருவ அனுப்பிவிடுறேன் என கயல் வீட்டை நோக்கி சென்றார்.

அப்பொழுதுதான் உடற்பயிற்சி முடித்து தன்னை சுத்தபடித்திக்கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் அருகே வந்த கயல்.

துருவ், ஹரிணி இன்னைக்கு சீக்கிறமா ஹாஸ்பெட்டல் போகனும்மா வீட்ல யாரும் இல்ல. நீ கொஞ்சம் அவளை விட்டுறியா என கேட்க.

துருவோ. கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல், சரி மா போகலாம் என பைக் கீயுடன் வெளியே சென்றான்.

கயல் ஹரிணியிடம் வாமா துருவ் வந்திட்டான் என அழைக்க, தயங்கிய ஹரிணியை பார்த்த கவிதா போடி டைம் ஆகுது என கூற வேறு வழியின்றி வெளியே வந்தாள்.

அங்கு வாசலில் தன் ராயல் புல்லட்டில் துருவ் காத்துக்கொண்டிருக்க. அவனை பார்த்து முரைத்தபடி வண்டியின் அருகே செல்ல. துருவ் தா என்றபடி கையை நீட்டினான். என்ன என்பது போல் அவள் பார்க்க, அவன் கண்களால் பையை சுட்டி காட்டினான்.

இல்ல நானே வச்சிகிறேன் என்றபடி வண்டியில் ஏறினாள். அவனும் வண்டியை கிளப்ப அமைதியாகவே சென்றனர் இருவரும். அவர்களின் அமைதியை களைக்கும் வண்ணம் ஹரிணியின் மொபைல் ஒலிக்க. அவளோ இதோ இன்னும் டென்மினிட்ஸ்ல அங்க இருப்ப என கூறி கால் கட் செய்ய.

துருவ் சாப்பிட்டியா? என கேட்டான்.

அவள் அமைதியாகவே இருக்க. உன்னதா சாப்பிட்டியா என மீண்டும் கேட்க. அப்பொழுதும் அவள் அமைதியாகவே இருக்க. இருடி உன்ன என்ன பண்ணுறனு பாரு என்றபடி வண்டியை நிறுத்தினான்.

அவளோ எதுக்கு நிறுத்துறாங்க டைம் ஆச்சி என்றபடி ஏன் நிறுத்தினிங்க என கேட்க.

அப்பாடி பேசிட்டியா என எண்ணியவன் அமைதியாக இருக்க. கீழே இறங்கிய ஹரிணி டைம் ஆச்சி போலாமா என கேட்க. அவனோ சாப்பிட்டியா என்றான் மீண்டும்.

விடமாட்டாங்க போல என எண்ணியபடி சாப்பிட்டேன் என்றாள் எங்கோ பார்த்தபடி. அவள் கூறியதே அவனுக்கு சந்தோஷம் அளிக்க வண்டியை செலுத்தினான்.

ஹாஸ்பெட்டலில் இறங்கிய ஹரிணி அவனை பார்த்து தேங்ஸ் என கூற. அவனோ ஒற்றை கண்ணை அடித்து சிரித்தான்.

அவளோ அவன் சிரித்ததை பார்த்து அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.



நீ(யே)யா.....?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top