நினைவெல்லாம் நீ(யே)யா_12

Advertisement

கல்யாண வேலையாக ஒவ்வோருவரும் ஒவ்வொருபக்கம் சென்றுவிட, இரவு தாமதமாகவே வீடு திரும்பினர். இரவு உணவை முடித்துவிட்டு வீட்டின் முன் தோட்டத்தில் அனைவரும் அமர்ந்து நாளைக்கான நிகழ்வுகளை பேசிக்கொண்டிருந்தனர்.

கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்த விஷ்ணுவும், தேன்மொழியும் விஷயம் கேள்வியுற்று சற்று ஆடிதான் போயினர்.

மீனாட்சி கயலை நோக்கி, கயலு நாளைக்கு வீட்டோட இரண்டு போருக்கும் நலங்கு வச்சிடலாம். அப்படியே வெற்றிலைபாக்கு மாத்திகலாம் என்க. கயலும் சரி என ஆமோதித்தனர்.

துருவனுக்கு முடிஞ்சதும் அடுத்து நம்ப தேனுக்குதா கல்யாணம் முடிக்கனும் என கவிதா கூற. தேனு எங்களுக்கு மறுமகளா வந்தா நாங்க ரொம்ப சநாதோஷ படுவோம். சின்ன வயசிலேயே பேசினதுதான் ஆனா இப்ப புள்ள மனசுல என்ன இருக்குனு தெரியலயே என்று உமையாள் கூற. அதுக்கென்ன மதனி, நம்ப புள்ள நம்ப சொல்லுறத கேக்கும். அவ எப்பவுமே உங்க வீட்டு மறுமகதா அடுத்ததா நம்ப தேனுக்கும்_ விஷ்ணுக்குமே முடிச்சிடலாம் என கயல் கூறி முடிக்க.

அம்மா, என்னால பொம்பள பின்னாடி சுத்தறவன எல்லா கல்யாணம் பண்ணிக்க முடியாது. என கோபமாக கூற அங்கு அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்.

கயல் , தேனு என்ன பேசுற யார பாத்து பொம்பள பின்னாடி சுத்துறவனு சொல்லுற உனக்கு வாய் ரொம்ப கூடி போச்சு என்க.

அவ பண்ணாததையா சொன்ன, எதுக்கு இப்ப கத்துறிங்க அம்மா என தேன் கேட்க.

தேனு அவன கல்யாணம் பண்ண இஷ்டமில்லனு சொல்லு. அதவிட்டுட்டு தர தாழ்த்தி பேசாத என கோபமாக உமையாள் கூற.

ஐயோ,அத்த நா தரம் தாழ்த்தி பேசல பார்த்தததா பேசுற. எப்பவுமே அவ பொண்ணுங்க பின்னாடிதா சுத்துவா.
அததா சொன்ன, என குரலை தாழ்த்திகூற. தேனின் பேச்சால் விஷ்ணுவின் மூன்று அன்னையினரும் சங்கடத்தில் இருக்க.


இதற்கு மேல் விட்டால் பெரிய பிரச்சணை ஆகும் என எண்ணிய மீனாட்சி, என்ன தேவையில்லாம பேசிகிட்டு கல்யாணவேல தலைக்குமேலகிடக்கு போய் தூங்குங்க காலையில சீக்கிறம் எழனும் என்க. அனைவரையும் உள்ளே சென்றனர்.

அனைவரும் சென்றவுடன் விஷ்ணு தேன்மோழியின் கையை பிடித்து தோட்டத்தின் உள்பக்கம் இழுத்து சென்றான்.

ஏய் விடுடா என்ன. என்றபடி கைகளை உருவ முயன்றுக்கொண்டிருந்தாள் தேன்.

உள்ளே சென்று கையை விட்ட விஷ்ணு. தேனை நோக்கி, அறிவிருக்கா உனக்கு நா எத்தன பொண்ணுங்க பின்னாடி சுத்தி நீ பாத்த. உன்ன இதுநாள் வரைக்கும் மரியாதஇல்லாம ஒரு வார்த்த பேசியிருப்பேனா. ஆனா நீ என்ன என் குடும்பத்து முன்னாடி எவ்வளவு கேவலபடுத்தனுமோ அவ்வளவு கேவலபடுத்திட்ட. இதுக்கெல்லா சேர்த்து நீ அனுபவிப்ப என கோபமாக குரலில் அழுத்தத்துடன் கூற.

எத்த பொண்ணுங்கபின்னாடி சுத்தனனு கேட்டல, என் பின்னாடியே பல முறை சுத்திருக்க. நீ ஒன்னும் நல்லவ இல்லையே கேவலமானவன கேவலமானவனு சொல்லாம ராமருனா சொல்ல முடியும். போடா, என அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் செல்வதை பார்த்த விஷ்ணு. கண்கள் சிவக்க கோபமாக தரையை காலால் ஓங்கி உதைத்தான்.

கிழக்கில் சூரியன் உதயமாகி இருளை துரத்த பட்சிகளும் மகிழ்வுடன் ஓசை எழுப்பியது.


காப்புகட்டிய மறுநாள் ஊரில் உள்ள பெண்கள் தங்கள் மாமன்மார்களின் மேல் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா ஓவ்வொரு தெருவிலும் தொடங்க, வீதியே மஞ்சளில் குளித்து போல் இருந்தது.

ஹரிணி சொம்புடன் கார்திகேயனின் அருகில் சென்று அவர் மேல் நீரை ஊற்ற அது அவர் வெள்ளை சட்டையை மஞ்சளாக்கியது. சிரித்தபடி ஹரிணி ஓட அவளை பிடிக்க சென்ற கார்திகேயன் அறையிலிருந்துவந்த கயலை கவனிக்காது அவர் மீது மோத கயல் கையிலிருந்த ஆலத்தி அவர் சட்டையிலே கொட்டியது. அவரை பார்த்துஅனைவரும் சிரித்தபடி இருக்க. வீட்டில் உள்ள அனைவர் மீதும் அபிஷேகத்தை தொடங்கினாள் ஹரிணி.

மஞ்சள் திருவிழாவில் வீடே மகிழ்ச்சியில் இருக்க. விஷ்ணு தேன்மோழி மீதிருந்த கோபத்தால் விடிந்தவுடன் மில்லுக்கு சென்று ருத்ராவிட்ட கணக்கை பார்த்துவிட்டு அப்படியே கல்லூரிக்கு சென்றுவிட்டான்.

துருவன் , ஆதவ், சிவா மூவரும் காலையிலேயே தமது திட்டத்தை செயல்படுத்தும் வேலையை தொடங்கினர்.

நீ(யே)யா......?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top