நினைவெல்லாம் நீ(யே)யா_10

Advertisement

கோவிலிலிருந்து அருள்வாக்கு முடிய வீட்டிற்கு வந்த அனைவரும் கூடத்தில் அமர்ந்திருக்க ஹரிணியும் ருத்ராவும் தங்கள் அறைக்குள் நுழைந்தனர்.

பார்வதியும், கவிதாவும் அனைவருக்கும் காபியும் இளநீரும் கொடுக்க அதைக்குடித்தபடி பரஞ்ஜோதி இரண்டுநாள்ள எப்படி அப்பா கல்யாணம் பண்ணுறது என விருதாசலத்தை பார்த்தபடி கேட்க.

மீனாட்சி , இப்ப கல்யாணம் பண்ணா, சிவாவுக்குதா பண்ணணும் அவன்தா வீட்டுக்கு பெரியவ ஆனா இரண்டு நாள்ள பெண்ணு எப்படி கிடைக்கும்.

விருதாசலமோ அதேதா, மீனாட்சி நானும் யோசிச்சிட்டு இருக்க.

தாத்தா எனக்கு இப்ப கல்யாணம் வேணாம், முதல்ல ருத்ராவுக்கும் ஹரிணிக்கும் முடிங்க அப்பறம் நா பண்ணிக்கிறேன்.

என்னடா பேசுற வீட்டு பெரியவனுக்கு பண்ணாம , எப்படி சின்னவங்களுக்கு பண்ணுறது என கோபமாக கூறினார் பரஞ்ஜோதி.
அப்பா, தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு அண்ண கல்யாணம் பண்ணுறது ஒன்னும் இந்த ஊர்ல புதுசில்லையே. அதுவும் இல்லாம நா அடுத்தவாரம் மலேஷியா போனா இரண்டு வருஷம் கழிச்சிதா திரும்பி வருவேன். இந்த நிலைமையில கல்யாணம் பண்ணா வர போகுற பொண்ணோட நிலைமை என்ன? அதனால ருத்ராவுக்கு பாருங்க என்றான் ஆதவை பார்த்தபடி.


அவ சொல்லுறது சரிதானுங்க. அவ மலேஷியாவுல இருந்து திரும்பிவந்ததும் அவனுக்கு கல்யாணம் பண்ணலாம். அதுகுள்ள ருத்ராவுக்கும், ஹரிணிக்கும் முடிச்சிடலாம் என மீனாட்சி கூற.

அதுவும், சரிதா மீனாட்சி போனவாரம் மேலத்தெருவுல இருக்குற சக்கரமில்லுகாரரு நம்ம ருத்ராவ அவர் மகனுக்கு பொண்ணு கேட்டாரு அவர்கிட்ட பேசி பைய ஜாதகத்த வாங்கிடுறேன்.நம்ப ஜோசியர்கிட்ட காமிச்சி எப்படி இருக்குனு கேட்டிடுவோம் என விருதாசலம் கூற அதையே அனைவரும் ஆமோதித்தனர்.

வேலையாள் வேலுவை ஜாதகம் வாங்கிவர அனுப்பிவிட்டு, ஜோசியருக்கு போன் செய்தார் விருதாசலம்.

மீனாட்சி நம்ப ருத்ரா ஜாதகத்தையும் ஹரிணி ஜாதகத்தையும் எடுத்துட்டு வந்திடு இரண்டையுமே ஜோசியர்கிட்ட காமிப்போம்.

ஜாதகத்துடன் வேலுவும், சிறிது நேரத்தில் ஜோசியரும் வந்து சேர அவருடைய கையில் ருத்ராவின் ஜாதகமும், அந்த பையன் ஜாதகமும் கொடுத்தார் விருதாசலம்.

ஜோசியர் விரல்களை எண்ணியபடி, சிறிது நேரத்தில் ஜாதகத்தை மூடிவைத்தார்.

ஐயா, நா இருக்குறத சொல்லுறேன். இந்த ஜாதகம் வேண்டா ஐயா, பையனுக்கு தொழில்ஸ்தானம் சரியில்ல குடும்ப ஸ்தினத்தில சனி இருக்கு , பொருத்தமும் சரிவரல அப்படி மீறி நம்ப கல்யாணம் முடிச்சாலும் நல்லா வாழமாட்டாங்க என ஜோசியர் கூற.

ஜோசியரே, உங்களுக்கு விஷயம் தெரிஞ்சிதா இல்லையானு தெரியல அம்மன் அருள்வாக்கால இன்னும் இரண்டு நாளைக்குள்ள கல்யாணம் முடிக்கனும் அதா ஒரே யோசனையாவே இருக்கு என விருதாசலம் கைகளை பிசைந்தபடி கூற.

ஐயா, நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே.
என்ன ஜோசியரே சொல்லுங்க.
இல்ல ஐயா உங்க வீட்டிலே பையன வச்சிகிட்டு வெளிய எதுக்கு அலையுரிங்க.


நம்ப வீட்ல யாரு ஜோசியரே?

அதா நம்ப துருவ் தம்பி இருக்கே, அவர் ஜாதகத்த கொடுங்க பொருத்தம் பாத்திடலாம்.
அதுவும் சரிதா, கயலு கார்திகேயா நீங்க என்ன சொல்லுறிங்க.


மாமா, நாங்க என்ன சொல்லுறது ருத்ரா எங்க வீட்டு மருமகளா வந்தா எங்களுக்கு சந்தோஷம் தா அப்படிதானே கயலு என கார்த்திகேயன் கயலை பார்க்க. அவரும் ஆமோதிப்பதாக தலையசைக்க.

அப்ப எதுக்கு நேரம் தாழ்த்திகிட்டு போய் பைய ஜாதகத்த கொண்டு வாங்க என ஜோசியர் கூற.

இதோ வர அப்பா என, கயல் சிரித்தபடி தன் வீட்டை நோக்கி ஓடினார்.

பக்கத்திலயே வீடு இருக்கறது சில சமயம் ரொம்ப வசதியா போயிடுது ஐயா என ஜோசியர் கூற.

அவ பக்கத்து வீட்ல இருக்கறதால தா நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம் இல்லனா நானும் மீனாட்சியும் அவகூடவே போகவேண்டியறதுதா. தவமிருந்து பிறந்தவ அவ ஆசைபடியே கல்யாணம்பண்ணேம் இப்ப அவளும் நல்லா இருக்கா, பக்கதிலே இருக்கறதால நாங்களும் சந்தோஷமா இருக்கோம். என கயலை பற்றி விருதாசலம் கூறிமுடிக்க சரியாக உள்ளே நுழைந்தார் கயல்.

ஜோசியர் துருவனின் ஜாதகத்தையும் ருத்ராவின் ஜாதகத்தையும் பார்த்து அதிர்ந்து விருதாசலத்தை பார்த்தார்.

கதைகளில் ஏதேனும் குறையிருப்பின் தெரிவிக்கவும்...

நீ(யே)யா......?
 
Last edited:
நல்ல எபி அன்பே.
ருத்ரா VW வேரா ஒருத்தன் அல்லா பார்த்துட்டு இருக்கான், அதுபோல் துருவ ஆளும் வேரா தானே?

ஆம் சகோதரி,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top