நினைவினில் நிறைந்தவளே 22

Advertisement

Niashini

Writers Team
Tamil Novel Writer
நினைவினில் நிறைந்தவளே

அத்தியாயம் 22

நால்வரும் ஆஃபிஸ்க்கு வந்து சேர்ந்தனர் ஆர்ப்பாட்டத்துடன் .

அங்குள்ள யாருக்கும் இவர்களது திருமண நிகழ்வு தெரியாது என்பதால் அவர்களும் இதை அங்குள்ள யாரிடமும் சொல்ல வில்லை.

இவர்கள் வருவதை கண்ட அபி ..,,அவர்களை நோக்கி சென்று

" என்னப்பா இவ்வளோ சீக்கிரமா ஆஃபிஸ் பக்கம் வந்துட்டீங்க .நீங்க வர எப்படியும் ஒரு மாசம் ஆகும்ன்னு நினைச்சேன் " என்று அவர்களை கிண்டல் அடிக்க

" எதுக்கு அபி நாங்க ஆஃபிஸ்க்கு வர ஒரு மாசம் ஆகும்ன்னு சொல்றீங்க..???" பவி கேள்வி கேட்க

" அதானே " என்றாள் மீனு பவிக்கு சப்போர்ட் செய்த படி

" இதுங்க புரிஞ்சு பேசுதுங்களா இல்ல புரியாம பேசுதுங்களானே தெரியலையே " என்று செல்வா மற்றும் கதிர் மனதில் நினைத்துக்கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள

அபிக்கு அவர்களை பார்க்க ,சிரிப்பாக இருந்தது.‌ அதை கட்டுப்படுத்த முயன்று தோற்றுப் போக வாய் விட்டே சிரிக்க தொடங்கினான்.

" இப்போ எதுக்கு டா இப்படி சிரிக்கிற‌...??" என்று கோபமாக மீனு கேட்க

" நாங்க என்ன தப்பா கேட்டுட்டுடோம் " என்று பவி எகிற

அபியை முறைத்துக் கொண்டே செல்வா மீனுவையும் கதிர் பவியையும் இழுத்துச் சென்றார்கள்.

" ஏன் டி உனக்கு அவன் என்ன சொல்ல வரான்னு உண்மையாவே புரியலையா " என்றான் செல்வா அவளை உற்று நோக்கிய படியே

" அ..அது... அது வந்து" என்று திக்கி திணற

இதனை கண்ட செல்வாவிற்கு மீனுவை இன்னும் சீண்ட வேண்டும் என்று தோன்ற

அவளின் இடையினை பிடித்து இழுக்க ..,,மீனு அவன் மேலே மோதி நின்றாள்.

இருவரது முகமும் பக்கத்து பக்கத்தில் இருக்க .,,"இப்போ சொல்லு என்ன வந்து போய்ன்னுட்டு இழுத்திட்டு இருக்க " என்க

மீனுவிற்கு வார்த்தைகள் வர மறுத்தது. அப்படி வந்தாலும் அது காற்றோடு காற்றாய் கலந்துவிட்டது.

" என்ன அமைதியாவே இருக்க..?? இப்போ பேசு பாப்போம் " என்றான்.

மீனு செல்வாவை தள்ளிவிட்டுட்டு ஓடி விட்டாள்.

இங்கே இவர்கள் இப்படி ரொமன்ஸ் செய்ய அங்க கதிர் என்ன பண்றான்னு பாப்போம்.

" அத்தான் எதுக்கு என்ன வேகமாக இழுத்து வந்த..,, நான் தான் அபிகிட்ட பேசிட்டு இருந்தேன்ல " என்று கோபமாக மூக்கு விரைக்க கேட்க

" அடியே உன் மண்டைல மூலைன்னு ஒன்னு இருக்கா இல்லையா..,, உன்னலாம் எப்படி தான் இரண்டு வருஷம் வெளிநாட்டுல வேலை பாக்க விட்டாங்களோ தெரியல " என்று புலம்பினான்.

" எனக்கு மூல இல்லன்னு என் மண்டைய ஒடச்சி பாத்திங்களா அத்தான் " என்று கோபமாக கேட்க

இவளுக்கு என்ன ஆச்சி என்று நினைத்துக் கொண்டு " மன்னிச்சிடு மா . நான் தான் தப்பா சொல்லிட்டேன் . உனக்கு உடம்பெல்லாம் மூலை தான் போதுமா " என்றான் கதிர்.

அவனை பார்த்து முறைத்து விட்டு " எனக்கு வேலை இருக்கு கிளம்புறேன் " என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

கதிர் அவன் தலையில் அடித்துக்கொண்டு சென்றான்.

சிறிது நேரம் அவர் அவர்களது வேலையை பார்க்க ,, செல்வாவின் கண்கள் அப்ப அப்ப மீனுவின் மீது பட்டு தெரித்தது.

மீனுவிற்கு தன்னை யாரோ உற்று நோக்குவது போல் உணர்வு ஏற்பட ,, அவள் திரும்பி திரும்பி பார்க்கும் போது எல்லாம் யாரும் அவள் கண்களுக்கு தெரியவில்லை.

அவனுக்கு அவளது செயல்கள் எல்லாம் சிரிப்பை ஏற்படுத்தியது.

அதன் பின் செல்வா வேலையை கவனித்தான்.

அந்த மாலையே அபி அனைவரையும் கான்ஃபெரண்ஸ் அறைக்கு வருமாறு மெயில் அனுப்பி இருக்க ,, அனைவரும் கான்பெரன்ஸ் அறைக்கு வந்தனர்.

" ஹலோ எவ்ரிபடி .இந்த பிராஜெக்ட் எவ்வளோ முக்கியம்ன்னு உங்களுக்கு முன்னாடியே செல்வா சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன். இந்த பிராஜெக்ட்ட நானும் பவியும் பாத்தோம் எங்களுக்கு பிடிச்சிருந்தது. அதுனால எங்களோட ஹெட் கிட்ட பேசினோம். அவுங்க இந்த பிரன்டேஷன்ன பாக்க ஆச படுறாங்க. சோ இந்த டிம்ல இருந்து ரெண்டு பேர் வரனும் என்கூட " என்று முடித்தவன்

" செல்வாவையும் கதிரையும் தான் இதற்கு நாங்க செலக்ட் பண்ணிருக்கோம் " என்றான்.

அவனது பதிலை கேட்டு சிலர் புகைத்தாலும் கை தட்டினர்.

" இன்னும் பத்து நாள்ல போகனும் . ரெண்டு பேரும் ரெடியா இருங்க " என்றான்.

அவர்கள் இருவரும் " சரி" என்று கூற அவர்களையே பார்த்து கொண்டு இருந்தனர் மீனுவும் பவியும்.

அதன் பிறகு மீட்டிங் முடியவும் ..,, அனைவரும் கிளம்பி சென்றனர்.

வீட்டிற்கு வந்த மீனு மற்றும் செல்வா அமைதியாக அறைக்கு சென்றனர். அந்த மீட்டிங்கப்பறம் இருவரும் சரியாக பேசிக்கொள்ளவே இல்லை . வேலையில் மூழ்கி இருந்தனர். இப்படியே இரண்டு நாட்கள் சென்றது.

அன்று தனக்கு வேலை இருப்பதாக கூறி செல்வா மீனுவை கதிர் மற்றும் பவியுடன் அனுப்பி வைத்தான். அவர்களும் அவளை இறக்கி விட்டு சென்றனர்.

மீனு தன்னை ரெஃபிரஷ் செய்து விட்டு கீழே செல்ல எத்தனிக்க ,,அஞ்சலி அழுது கொண்டு இருப்பது தெரிய வந்தது.

உடனே அஞ்சலியின் அறைக்கு சென்ற மீனு ..,,அவள் ஒர் மூலையில் உட்கார்ந்து அழுவதை பார்த்து பதறி அவளை நோக்கி சென்றாள்.

" ஹே அஞ்சலி..!!! எதுக்கு இப்போ அழுகிற..???" என்று கேட்க

அஞ்சலி அவள் மடியில் படுத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

மீனு வீட்டிற்கு வந்த இந்த பத்து நாட்களில் அஞ்சலிக்கு ஒரு நல்ல தோழியாக மாறி இருந்தாள்.

" ஹே என்ன ஆச்சி அஞ்சலி..??? என்கிட்ட சொன்னா தான தெரியும்" என்றாள்.

"என்னால எப்படி சொல்ல முடியும் மீனு " என்று பொடி வைத்து பேச‌...

" என்ன சொல்ற அஞ்சலி நீ...???" என்கிட்ட சொல்றதுக்கு என்ன உனக்கு..???" சிறிது கோபத்துடனே பேச

" நான் சொன்னா நீ அத்தானை தப்பா நினச்சிப்பியே " என்றாள் அழுதுகொண்டே

" நான் எதுக்கு செல்வாவ தப்பா நினைக்க போறேன்.எனக்கு செல்வா புருஷன் ஆகுறதுக்கு முன்னாடியே எனக்கு அவன் ஃபிரண்ட் சரியா..?? எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லு " என்று ஊக்கப்படுத்தினாள்.

" சரி நான் சொல்றேன் " என்றாள் அழுதுகொண்டே அதற்கு மீனு " ம்ம் சொல்லு " என்றாள்.

இது தான் சரியான நேரம் என்று நினைத்துக்கொண்டு நடக்காத ஒன்றை நடந்தது போல் கூற தொடங்கினாள்.

" மீனு நானும் அத்தானும் ஐஞ்சு வருஷமா லவ் பன்னோம் " என்று நிறுத்தி அவள் முகத்தை பார்க்க

மீனு பேய் அடைந்தது போல் அமர்ந்திருந்தாள்.இதுநாள் வரை தோன்றாத உணர்வெல்லாம் தோன்றியது அவளுக்கு. ஏதோ இதயத்தில் ஊசி குத்தியது போல் இருந்தது.

இதனை கண்ட அஞ்சலி நாம போட்ட பால் கர்க்டா ரீச் ஆகுது என்று மனதினிலே சந்தோஷ பட்டுவிட்டு ,, வெளியில் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூற தொடங்கினாள்.

" எங்களுக்கு சின்ன வயசுலருந்து தெரிஞ்சாலும் ..,, எங்களுக்கு காதல் வந்தது காலேஜ் டைம்ல தான். என் மேல உயிரையே வச்சிருந்தாரு . என்ன அத்தான் அஞ்சுன்னு செல்லமா கூப்பிடுவாறு .வேற யாரையும் அந்த பேரு சொல்லி கூப்பிட விட மாட்டார். எங்களோட காதல் நல்லா தான் போச்சி. அந்த சமையத்துல யார் கண்ணு பட்டுச்சோ தெரியல .,,எங்களுக்குள்ள நிறைய சண்ட வந்தது.அந்த சண்டையினால எங்கே எங்களோட குடும்ப பிரிஞ்சிரும்மோன்னு பயந்து போய் ..,,,நாங்களே விலகிட்டோம் . ஆனாலும் எங்க ரெண்டு பேரால எங்களோட காதலை மறக்க முடியல...சரி அண்ணா சுபா கல்யாணம் முடிஞ்சதும் நானே போய் பேசலாம்ன்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள அவரை கம்பல் பண்ணி உன்கூட கல்யாணம் பண்ணி வச்சிடாங்க " என்றாள் பொய்யை உண்மையாக சித்தரித்த மாதிரி.

இவளது பொய்யை உண்மையென நம்பி என்ன செய்வது ஏது செய்வது என்று உள்ளுக்குள்ளே தவித்தாள்.

" உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு தான் நினைச்சேன்.ஆனா மனசு கேக்கல மீனு .அதுனால தான் உன்கிட்ட சொல்லிட்டேன். மாமாவ நல்ல படியா பாத்துக்கோ டா ...அதுவே எனக்கு போதும் " என்றாள்.

எதுவும் பேசாமல் எழுந்து அவளது அறைக்கு சென்றாள்.

" மீனு...மீனு ..எங்க போற " என்று சத்தமாக ஆரம்பித்து மௌனத்தில் முடித்தாள்.

தனது அறைக்கு வந்தவளுக்கு தலையே சுற்றுவது போல் தோன்றியது .

தான் தான் எல்லாத்துக்கும் காரணம். தன்னால் தான் செல்வாவின் காதலை அவனிடமிருந்து இருந்து பறித்து விட்டேன்னோ என்று எண்ணி அழத் தொடங்கினாள்.

ஆறுதல் கூற கூட ஆள் இல்லாமல் போக ,, தனக்குத் தானே புலம்பிக் கொண்டு இருந்தாள்.

" என்னால தான் இப்போ அஞ்சலி இவ்வளவு கஷ்ட படுறா .அவளோட காதல் அவளுக்கு கொடுக்க வேண்டும் .அதை கேட்பதில் அவளுக்கு உரிமை இருக்கு " என்று மனதிற்குள் புலம்பி தீர்த்தாள்.

அஞ்சலி அவளது அறையில் சந்தோஷமாக நடனம் ஆடிக் கொண்டு இருந்தாள்.

" ஹே அறிவுக்கெட்டவுளே நீ ரொம்ப நல்லவ தான் டி... நான் சொல்ற எல்லாத்தையும் நம்புற " என்று கூறி சத்தமாக சிரித்தாள்.

" பரவால அஞ்சலி மா.. நீயும் நல்லா தான் பேர்ஃபான் பண்ற "என்று தனக்குத் தானே புகழ்ந்து கொண்டாள்.

இவளது சகுனி ஆட்டம் தெரியாத மீனு ,, அவள் வலையில் அவளே விழுந்து கொண்டாள்.

"சுபா எல்லாத்தையும் சாப்பிட அழைச்சிட்டு வா " என்றார் லதா.

" சரிங்க மா " என்று சொல்லிவிட்டு அனைவரையும் சாப்பிட அழைத்து வந்தாள்.

" அம்மா அண்ணி அண்ணா வந்தோன்ன சாப்பிட்டுகிறேன்னு சொல்லிட்டாங்க . அப்பறம் அஞ்சலிக்கு பசிக்கலன்னு சொல்லிட்டா " என்றாள் டைனிங் டேபிளில் அமர்ந்த படியே

" சரி டி ...அப்பாக்கும் அர்ஜுன்க்கும் தோசையை எடுத்து வச்சிட்டு சாப்பிட்டு " என்று லதா சமையலறையில் இருந்து கத்த

" சரி மா " என்று கூறி தோசையை தட்டில் வைத்தாள் இரண்டு பேருக்கும்...

அர்ஜுனின் தட்டில் தோசையை வைக்கும் போது கண்ணடிக்க ,,அவனை முறைத்து விட்டு சாப்பிட அமர்ந்தாள்.

இதனை கண்டும் காணாதவாரு தோசையை சாப்பிட்டார் இந்திரன்.

எல்லாரும் சாப்பிட்டு விட்டு படுக்க சென்றுவிட்டனர்...

வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்த செல்வா கதவை தட்ட ,,அஞ்சலி வேகமாக அறையிலிருந்து வெளியே வந்து கீழே சென்று கதவை திறந்தாள்.

மீனு வந்த திறந்து விடுவாள் என்று எதிர் பார்த்தவனுக்கு புஸ் என்று இருந்தது.

இதனை அனைத்தையும் மேலிருந்து கண்டவள் ,,அவளே ஒரு காரணத்தை சித்தரித்துக் விட்டு அழுதுகொண்டே அறைக்குள் சென்றுவிட்டாள்.

" அத்தான் சாப்டீங்களா..??" என்று அக்கறையுடன் வினவ

" ம்ம்ம்" என்ற பதிலை அளித்து விட்டு அறைக்குள் சென்று விட்டான்.

இந்த அத்தானுக்கு " சாப்பிட்டேன்னு வாய திறந்து கூட சொல்ல முடியாதோ ... இருக்கட்டும் இருக்கட்டும் இதுக்கெல்லாம் சேத்து வச்சி வட்டியும் முதலுமா வாங்கிக்கிறேன் " என்று செல்வா சென்ற பாதையை பார்த்து பேசிக்கொண்டு இருந்தாள்.

அறைக்குள் வந்த செல்வா முதலில் கண்டது மீனு கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்திருந்தது தான்.

பதரிய செல்வா " ஹே மீனு உனக்கு என்ன ஆச்சி...??? எதாச்சும் பிரச்சனையா...???" என்று அக்கறையுடன் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு கேட்டான்.

" அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல...எனக்கு அப்பா அம்மா ஞாபகம் வந்துடுச்சி " என்றாள் கண்களை கசக்கிய படியே

" நான் இருக்கிற வரைக்கும் நீ அழக்கூடாது சரியா " என்று கூறி கண்களில் வரும் கண்ணீரை துடைத்து விட்டு நெற்றியில் இதழ் பதித்தான்.

அந்த முத்தத்தில் சிறிது தெம்பு பெற்றவள்,, அவனிடம் " சாப்பிட்டிங்களா..???" என்று கேட்க

அவன் " இல்லை நான் போய் ரெஃபிரஷ் ஆகிட்டு வரேன் ....நீ சாப்பாடு எடுத்து வை...நீ சாப்பிட்டியா...?? " என்று எதிர் கேள்வி கேட்க

அவள் " சாப்பிட்டேன்" என்றாள்.

இவள் பொய் சொல்கிறாள் என்று தெரிந்தும் எதையும் கண்டுகொள்ளாமல் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

மீனு தோசையை எடுத்து வைக்கவும் செல்வா கீழே வரவும் சரியாக இருந்தது.

" நீயும் உக்காரு " என்று உக்கார வைத்து ஊட்டி விட கையில் தோசையை எடுத்து அவள் வாய் வரைக்கும் கொண்டு வந்தவன்..,,மறுத்தவளை ஒரு முறை முறைத்து வைத்து ஊட்டி விட்டான். பின்னர் மீனுவும் செல்வாவிற்கு ஊட்டி விட்டாள்.

இருவரும் மாறி மாறி ஊட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

இதனை கண்ட அஞ்சலிக்கு வயிறு எரிந்தது.

பின்னர் இருவரும் அவர்களது அறைக்கு சென்றனர்.

அறைக்கு வந்த செல்வாவிடம் " நான் சில கேள்வி கேக்கலாமா "என்று கேள்வியாய் அவனை ஏறிட

" இது என்ன ஆஃபிஸா பர்மிஷன்லாம் கேட்டுட்டு இருக்க...நீ எவ்வளோ கேள்வி வேணாம் கேக்கலாம் டா " என்றான்.

" நீங்க யாரையாவது காதலிக்சீருங்களா...??? "என்று கேள்வி எழுப்ப

செல்வா இந்த கேள்வியில் அதிர்ந்து போய் நின்றான்.

சொல்லுங்க செல்வா எதுக்கு அமைதியா இருக்கீங்க...??? என்றாள்.

" அய்யோ இவ வேற நேரம் காலம் தெரியாம இப்படி ஒரு கேள்விய கேக்குறாளே.... நான் எப்படி சொல்லுவேன் என்னோட மக்கு பொண்டாட்டிய தான் லவ் பண்றேன்னு" மனதில் புலம்பிய படியே நிற்க

மீனு தன் பதிலை கேட்க ஆர்வமாக இருப்பதை தெரிந்து கொண்ட செல்வா " ஆமாம்" என்று ஒற்றை வரியில் பதில் அளித்தான்.

அந்த பதிலை கேட்டு நடுக்கம் தானாக வந்தது.. அதிர்ச்சியும் அடைந்தாள் மீனு.

அந்த அதிர்ச்சியுலும் தன்னை சமன் படுத்திக்கொண்டு வந்த அழுகையை கட்டு படுத்திய படியே " அவுங்க பேர தெரிஞ்சுக்கலாமா...???" என்று கேள்வி எழுப்ப

அதற்கு செல்வா சொன்ன பதிலை கேட்டு அவளது உயிரே பிரிந்து விடும் போல் இருந்தது.


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top