நான் இனி நீ _ரேவதி லோகநாதன்

Minimini

Well-Known Member
#25
7வருடங்கள் பின்

அந்த காலை வேளையில் சக்கரவர்த்தி இல்லத்தில் திருமண வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
வாசலில் பெண்கள் அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தார்கள்.
தீபனும் புனித்தும் ஏற்பாடுகளை சரிபார்த்து கொண்டிருந்தனர் . தேவ் அவன் குடும்பத்தோடு அப்பொழுதுதான் வந்திருந்தான் திருமணமாகி தற்போது வடநாட்டில் செட்டிலாகி இருந்தான். தீபன் அவனை வரவேற்க " எங்கடா அதிபன காணோம்?" எனக்கேட்க " ராகாவோட அம்மா அப்போ கூட இருக்கான்" என்றுமேடையைக் காட்ட " மச்சி உன் புள்ள இன்னைக்கு தான்டா நல்ல டிரஸ் ஓட கண்ணுக்கு தெரிகிறான். இல்லேன்னா எப்பவும் போல குற்றாலீஸ்வரன் உடையிலேயே பார்க்க முடியுது ".
பக்கத்தில் இருந்த புனித் "ஏன்டா அப்படி சொல்ற "
" பின்ன என்னடா இவர்கள் ஸ்விம்மிங் ஃபுல் பக்கமா ஹனிமூன் கொண்டாட பையன் நீச்சல் வீரன் ஆயிட்டான் எனக்கு இது நினைச்சு தான்டா ஆச்சரியமாக இருக்கும்".
,"இது அவங்க அம்மாகிட்ட சொல்லிறேன் உடனே ஒருவழி பண்ணி விடுவாள்" என்று சிரித்தாள் நீரஜா.
தீபனின் மகன் அதிபன்சக்கரவர்த்தி . தந்தைக்கு ஏற்ற தனையன். அப்பா சொல்லே வேதம். அதுமட்டுமல்ல அவன் ஒரு தேசிய அளவில் நீச்சல் போட்டியில் வீரனாய் இருந்தான் இந்த சிறு வயதிலேயே .ஆனால் அவனின் மகளோ அண்ணனுக்கு நேரெதிர் . அம்மு எங்க நீரஜா?என தீபன் கேட்க
பக்கத்திலிருந்து புனித் " யாரு உன் பொண்ணு தானே பத்து நிமிஷம் பொறு. எங்கேயாவது ஏதாவது பொருட்கள் உடைந்த சத்தம் கேட்டா அங்க தான் உன் பொண்ணு ரெடியா சண்டைக்குபோட நிக்கிறான்னு அர்த்தம் . அதுவும் என் பையனை கண்டா என்ன பண்ணுவான் தெரியாது பாவம்டா அவன் அலறியடித்து ஓடறான்" என்று சொல்லி சிரித்துக் கொண்டனர். "எப்படித்தான் சீராவையும் ஜீராவையும் சமாளிக்கிற ?"
"சீரானா?
"சீனியர் ராகா"
ஜீரானா?
" ஜூனியர்ராகா"
"போதும்டா உங்கள் ஆராய்ச்சி வந்தவங்களை பாருங்க" என்று சொன்னபிறகு வேலையை பார்க்க ஆரம்பித்தனர். அப்பொழுதுதான் ராகா அந்த ரோஜா பட்டு சேலையில் அழகு தேவதையாக காது மாட்டல்லை சரிசெய்தபடி வந்து கொண்டிருந்தாள். பாதி தூரத்தில் அவளை பிடித்தவன் "எப்படி இருக்கு தீபஸ்"
" ரொம்ப அழகா இருக்க டைட்டன். ராத்திரிதான் நீ எவ்வளவு அழகா இருக்கேன்னு சொல்லறேன்"
"ராஸ்கல் "அவன் சிரித்துக்கொண்டே "எஸ் உன்னோட ஸ்வீட் ராஸ்கல்"
அவள்"முதல்ல கல்யாணத்தைப் பார்ப்போம் அப்புறம் நம்மள பார்ப்போம்"என்று சொல்லி கொண்டிருக்கும்போது
நாகா "பாஸ் ஐயர் மாப்பிள்ளைய கூப்பிட்டுரார்" என்றான்.
" ம் சரி"
"ராகா நான் மாப்பிள்ளைய கூப்பிட்டு வரேன். நீ பொண்ணூக்கு கூட இரு. ஐயர் கூப்பிட்டுவுடன் கூப்பிட்டு வா"
புனித் நீயும் நீரஜாவும் வந்தவர்களை கவனிங்க"
"ஓகே டா"
"மிதுன் ரெடியா?"
"ரெடி பாஸ். தர்மா கூட இருக்கான்"
தீபன் மாப்பிள்ளையுடன் வரவும் ஐயர் மாப்பிள்ளைய பார்த்து "மாப்பிள்ளையை எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணுங்கள்" என்றார்
மாப்பிள்ளை அலங்காரத்தில் கம்பீரமாக இருந்த சக்கரவர்த்தி எல்லோருக்கும் வணக்கம் சொன்னார்.
ஆம். இன்று சக்கரவர்த்தி தம்பதிகளின் சஷ்டி திருமண விழா நடந்துகொண்டு இருகுகிறது.
"அண்ணா எங்கடா?" என்று சொல்லும் போது மிதுன் சக்கர நாற்காலியில் வரவும் அவனை மேடையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டான்.
ஆம், மிதுன் தான் அவன் கோமாவில் சென்ற பிறகு மருத்துவரை சந்தித்து தீபன் சக்கரவர்த்தி அவன் நிலையை கேட்டபொழுது" உங்க அண்ணனோட மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இருக்கு
அவருக்கு அடிபட்டது மட்டும் இல்லாம மனபிரச்சினைகள் இருக்கும் பொழுதும் இந்த மாதிரி கோமா வந்ததால இது நீடிக்க வாய்ப்பு ஏற்படும் .அவருடைய மன பிரச்சனையே மாற்றுவது ரொம்பவும் முக்கியமான விஷயம். தினமும் அவருக்கிட்ட தொடர்ந்து பேச்சுக்கள் மற்றும் அவருக்கு பிடித்த விஷயங்களை செய்யும் போதும் கூடவே அவருடைய நரம்புகளை பலப்படுத்தும் போதும் ரத்தம் ஓட்டங்களை பலப்படுத்தும் போதும் மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகள் மூலமாக ஏற்படக்கூடிய கட்டளைகளை துரிதப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரியாக முடியும் நீங்க அவரோட அதிகமா டைம் ஸ்பெண்ட்
பண்ணுங்க அவருக்கு சுற்றி இருக்கும் சூழ்நிலையை மாற்றுங்கள்" என அவர் கூறிய பொழுது தீபன் தினமும் அவனுடன் பேச ஆரம்பித்தான். உஷாவும் சக்கரவர்த்தியும் தினமும் அதிகமான நேரம் அவனுக்காக தனியாக செலவழித்தனர். இதனிடையில் ராகா கருவுற்ற பொழுது வேலைகள்அவனுக்கு அதிகமானது. இருந்தும் அண்ணனுக்கு செய்ய வேண்டிய உதவிகளையும் மனைவியையும் விட்டு கொடுக்கவும் இல்லை. தந்தையின் தொகுதி பொறுப்பு Dவில்லேஜ் சார்ந்த வேலைகள் என அவன் வேலைகள் அதிகமாக்கின. இப்போது அவன் சிறந்த குடும்பத்தலைவர் ஆகியிருந்தான்.
அதிபன் பிறந்தபோது உஷா விற்கு மிதுனை கவனிக்கும் பொறுப்புகள் அதிகம் இருந்ததால் அதிபன் பொறுப்புகளை தாரா சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் வீட்டின் முதல் ஆண் வாரிசு மட்டும் இல்லாமல் அதிபன் நிறைய அமைதியான குழந்தையாக இருந்ததால் அவருக்கு மிகவும் சந்தோஷமே அவனை கவனித்துக் கொள்வதில்.
லொகேஷ்ம் பேரன் வந்தவுடன் தனது முதல் கவனிப்பை வீட்டிற்கு செலுத்தினார் .
இதனிடையே மிதுனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கண் சிமிட்டுதல் மற்றும் நீர் வடிதல் மற்றும் லேசான அதிர்வுகளும் அவனுடன் ஏற்பட ஆரம்பித்தன தொடர்ந்து ஏற்பட்ட சிகிச்சையினால் அவன் முழுவதுமாக விழிப்பு வர நான்கரை வருடங்கள் ஆனது. இந்த வருடங்களில் ராகா மீண்டும் உண்டாகி இருந்தாள். ராகாஅவனிடம் மெல்ல குழந்தையை பற்றி பேச ஆரம்பித்ததும் தினம் செய்யும் குறும்புகள் பற்றி சிரித்தபடி கூறுவதும் என அவனின் உடல் தேற உதவியாய் இருந்தாள் .நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ராகாவின் பிரசவத்தின்போது அவனுக்குநன்றாக நினைவு வந்த சில நாட்களிலேயே பேச முயற்சி செய்தான். தொடர்ந்து ஏற்பட்ட சிகிச்சையினால் தற்பொழுது நடப்பது மட்டும் சிறிது சிரமம் ஏற்பட்டது மற்றபடி அவன் பூரண குணமடைந்து இருந்தான் .

அவன் குணமாக சில தினங்களிலேயே சக்கரவர்த்தி இருவரையும் அழைத்து "நீங்க ரெண்டு பேருமே எனக்கு முக்கியமானவங்கதான். ஆனா அரசியல் முடிவுகள் நா மட்டும் எடுக்க முடியாது. ஒரு தலைவன் உருவாகிறது கட்சி கிட்ட மட்டும் இல்ல மக்கள் கையில் இருக்கு அதனால உங்களுக்கு யாருக்கு விருப்பம் அவங்க கட்சிக்கு மக்கள் கிட்டயும் நல்ல பேரு வாங்குங்க அவங்களை பதவிக்கு அழைக்கிற மாதிரி நடந்துக்கோங்க. இதுதான் நீங்க என்னுடைய மகன்களாக இருந்து எனக்கு செய்யவேண்டிய உதவியா இருக்கும் .நான் எக்காரணத்தை கொண்டும் உங்க ரெண்டு பேருக்கும் பதவி கேட்டு பரிந்துரைக்க மாட்டேன் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்" என்று சொல்லிவிட்டார்.
இடையில் மிதுனும் நிறைய மாறி இருந்தான் பணம் இருக்கலாம் உதவி செய்ய ஆட்களை வேலைக்கு அமர்த்தலாம் ஆனால் தன்னால் எதுவுமே செய்ய இயலாது எழுதும்போது ஏற்படும் மன பாதிப்புகள் மிக அதிகமே. அதுவும் வருடக்கணக்கில் எனும் பொழுது அவன் மனதளவில் மாற நிறைய இந்த காலங்கள் உதவியது. தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் அவனுக்குள் ஏற்பட ஆரம்பித்து.

தீபனுடன் சரியா பேச முயன்றான் ஆனால் அவன் அதிகம் பேசியது என்னவோ அதுல்யாவிடம் தான் .
அது வேறு யாருமில்லை தீபன் இரண்டாவது குழந்தை . அவனை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அவனைப்பற்றி தெரியுமாதலால் அவனுக்கு புது நட்பாக கிடைத்தது அதுல்யா மட்டுமே
அதுமட்டுமின்றி அவள் பிறந்ததிலிருந்தே அதிக சேட்டையில் ஈடுபட்டதால் பெண் குழந்தைகளே வீட்டில் இல்லாததாலும் ஏனோ அவளை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமின்றி அவள் தமிழ் பேசும் போது அவளுக்கு க ச ர போன்ற எழுத்துக்கள் வராது அதற்கு பதிலாக எல்லாமே த வரிசையில் தான் வரும் அதனால் அவனிடம் புகார் சொல்ல வரும்போதெல்லாம் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே சிரித்துக் கொண்டு இருப்பான் .பெப்பா என்று அழைக்கும் போதெல்லாம் அவன் உள்ளம் தானாகவே உருகிவிடும் .

தந்தை சொன்னவுடன் தொகுதி வேலைகளை வீட்டிலிருந்தே அவனும் கவனத்திற்கு கொண்டு வர ஆரம்பித்தான். தொகுதிகளில் பல நலத்திட்டங்களையும் அறிமுகப்படுத்தினால்
தீபன் மிதுன் பெயரே வெளியே தெரியமாறு பாய்த்துக்கொண்டான். அவன் சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் எடுத்துக்கொண்டான் .இதனால் அடிக்கடி ஆஸ்திரேலியா சென்று வரும் பொழுது ஒரு விமானப் பயணத்தில் சந்தித்தவள்தான் லயா .ஒரு தொழில் அதிபரின் மகள் .அதுமட்டுமின்றி ஆராய்ச்சி மாணவியும் கூட
முதல் முறை அவளை பார்த்த பொழுது ஏதோ ஒன்று அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது . அவர்கள் சந்திப்பு தொடர்ந்தது அவனுக்கு காதலும் உண்டாகியிருந்தது. லயாவும் அவன்மேல் காதல் உண்டாக இரு வீட்டில் பச்சைக்கொடி காட்ட லயாவின் ரிசர்ச் வேலைகள் முடியும்வரை திருமணம் செய்ய முடியாது என கூறியிருந்ததால் திருமணத்தை இரண்டு வருடம் தள்ளி வைத்து இருந்தனர்.

சக்கரவர்த்தியின் அறுபது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவருக்கு சஷ்டி திருமணம் ஏற்பாடு செய்ய மகன்கள் இருவரும் முடிவு செய்தபோது சக்கரவர்த்தி அதை மறுத்தார் . மகனுக்கு இன்னும் திருமணம் செய்யாத போது தாங்கள் இரண்டாவது முறை திருமணம் செய்வது நல்லதாக இருக்காது என அவர் கூற மிதுனின் தீபனின் பிடிவாதத்தால் இந்த திருமணம் வீட்டோடு மிக எளிமையாக நடைபெற ஒத்துக்கொண்டார் .ஆனால் அவர் சிறு கண்டிஷன் வைத்திருந்தார் அது மாலையில் மிதுனின் நிச்சயதார்த்தம் செய்வது என மிதுனும் ஒத்துக்கொண்டான் .

மகன்கள், மருமகள், பேரன் ,பேத்தி, சம்பந்திகள் என அனைவரும் சக்கரவர்த்தி தம்பதிகளுக்கு பொன் சல்லடையில் பொன் நாணயங்கள் மற்றும் மலர்கள் தூவி இருந்தவற்றை கலச நீரை ஊற்ற பின் புதுப் பட்டு உடுத்தி மங்கள மேளம் முழங்க சக்கரவர்த்தி உஷாவின் கழுத்தில் மீண்டும் மாங்கல்யம் அணிவித்தார்.
காலையில் திருமணம் சிம்பிளாக இருக்க மாலையில் நிச்சயம் வெகு விமர்சையாக நடந்தது.

இரவில் முக்கியமானவர்கள் மட்டும் இருக்க பார்ட்டியில் அவரவர்க்கு என தனியாக பாட்டை போட்டு டான்ஸ் ஆடவைத்தனர் இளசுகள். முதலில் அதிபன் அதுல்யாவை
" எங்க அண்ணே எங்க அண்ணே" என்ற பாட்டுக்கு டான்ஸ் ஆட
அடுத்துவந்த ராகாவும் தீபனம் "மயிலாஞ்சி
மயிலாஞ்சி
மாமா உன் மயிலாஞ்சி"
பாட்டுக்கு நடனமாட
சக்கரவர்த்தி தம்பதியினரையும் மேடையில் ஏற்றி இருந்தனர். "உனக்காக பிறந்தேனே எனதழகா" என்ற பாட்டுக்கு ஆட அனைவரின் சந்தோச சிரிப்பினில் மூழ்கியிருந்தது.
சக்கரவர்த்தி குடும்பம்.

எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி

அ…….அ………ஆ…….

எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனா என்ன ?
போகாது உன்னோட பாசம் !

எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன் !
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன் !

உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்கள் போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம் !

எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன்

லைய் லாய் லாய் லல்லே
லல்லாய் லலலல்லாய்
லைய் லாய் லாய் லல்லே
லல்லாய் லலலல்லாய்

ஒதுங்காதே தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சில
பச்சைய குத்தி வச்சேன்

இதுதாண்டி ரதம்
இதலதான் நிதம்
உன்னத்தான் உட்காரவச்சி
நா ராசாத்தி ராசனா
ஊர்வலம் வந்திடுவேன்

உன்னோடு நான் சேர
மென்மேல வந்து ஒரு
நேந்து தான் சாமிக்கு
வப்பேனே வெள்ளாடு !

ஆத்தோரம்… காத்தாடும்…
காத்தோடு… நாத்தாடும்…

நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
உன்னால அழும் நாளும்

நீ மாலையிடும் வேளையில
கேட்குதா என் தோடு !
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா

(கோரஸ்)

உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம்
தன்னனனான தன்னனான
நன்னானானனான…

கடைசியாக வந்த பாடல்கள்வரிகளிள் அனைவரும் தன்னுடைய இனைகளை பார்த்திருக்க

அவள் நீ இனி நான்

அவன் நான் இனி நீ

காதல். ஐயோ குடும்பமேவா
விடுங்கடா சாமி
Very nicely written!
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes