நான் இனி நீ எபிலாக் - Sahi

Advertisement

Sahi

Well-Known Member
ஐந்து வருடம் கழித்து "ராகா.. ராகா.. ஏய் டைட்டன் என்ன பண்ற இன்னும் எல்லோரும் ரெடி" னு தீபன் கத்த.

அதற்கு அவனின் ராகா முறைத்தபடியே "ஏன் இப்படி கத்துறீங்க நேரம் ஆகுதுன்னா எதாவது உதவி செய்யனும் ஆனா நீங்க"

அங்கு வந்த அவர்களின் இளவரசி "அம்மா, அப்பா உங்கள பெரியப்பா வர சொன்னாங்க" னு சொல்லி அவங்க செல்ல சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

தன் மகள் தீபஸிகாவை தூக்கிப் போட்டு பிடித்த தீபன் மனைவியுடன் கீழே செல்ல அங்கே சக்ரவர்த்தி, உஷாவுடன் மிதுனும் தயாராகி அன்று நடக்கும் அமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க எதுவாக கம்பீரமாக நின்றான்.

ஆம் சக்ரவர்த்தியின் அரசியல் வாரிசாக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டான் மிதுன். அதுவே அவன் ஆசையும் கூட.

ஆனால் அந்த பதவி மோகத்தால் தான் செய்த துரோகத்திற்கு தண்டனையாக திருமணமும் அதனால் தனக்கென அமையும் ஒரு குடும்பத்திற்கும் தான் தகுதியானவனில்லை என்ற முடிவை எடுத்தது உஷாவினை துன்பத்தில் தள்ளியது.

"இவ்வளவு மாறியவன் இந்த எண்ணத்தில் இருந்தும் மாறுவான்மா, காலம்தான் அதை செய்யும் " என்று மனைவிக்கு ஆறுதல் அளித்தார் சக்ரவர்த்தி.

மிதுனின் மாற்றத்திற்கான அன்றைய நாளின் நெகிழ்வில் இருந்தார் உஷா.

ஒரு வெள்ளிக்கிழமை வீட்டில் அரைகுறை நினைவும், மயக்கமுமாய் மிதுனும், நிறைமாத கர்ப்பிணியாய் ராகாவும், உஷாவும் மட்டுமே.

சக்ரவர்த்தி பணிநிமித்தம் டெல்லியிலும், தீபன் டீ-வில்லேஜிலும்.

மிதுனுக்கு உணவு எடுத்து போகும்போது கால் தடுக்கி, நிலை தடுமாறி ராகா விழ, அதைப் பார்த்து உஷாவும் மயங்க யாருமில்லா நேரத்தில் இவர்களின் அலறலில் மிதுன் சுயம் பெற்றான்.

வீட்டின் நிலையை தன் கையில் எடுத்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து அவர்கள் நிலை சீரடையும் வரை அவன் உயிர் அவனிடமில்லை.

இன்னும் அதற்கு முத்தாய்ப்பாய் இரண்டு மணி நேரம் தன் தாயைப் படுத்தி அவர்கள் வீட்டு இளவரசி ஜனித்தாள்.

இத்த்னை சுமைகளையும் தனியொருவனாய் சுமந்த பிறகு தான் மிதுனுக்கு அவன் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் கேவலம் ஒரு பதவிக்காக செய்த கீழ்த்தரமான வேலை எல்லாம் நினைவுக்கு வர மன்னிப்பு வேண்டி தலை குனிந்தான்.

அவர்களை பொறுத்தவரை மிதுனின் மனமாற்றத்திற்கு காரணமான அவர்கள் செல்ல வாரிசே அவனின் வாழ்வையும் மாற்றுவாள் என்று நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் விழாவிற்கு கிளம்பினர்.

நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.
 
banumathi jayaraman

Well-Known Member
அருமை சூப்பர் சூப்பர்
ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு,
சாஹித்யா ராஜ் டியர்

புதிதாக உருவாகியிருக்கும் ஒரு
புதிய எழுத்தாளருக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சாஹித்யா ராஜ் டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

சூப்பர்.......
அதுவும் அந்த முதல் லைன் :D
 
Chandhini

Well-Known Member
ஐந்து வருடம் கழித்து "ராகா.. ராகா.. ஏய் டைட்டன் என்ன பண்ற இன்னும் எல்லோரும் ரெடி" னு தீபன் கத்த.

அதற்கு அவனின் ராகா முறைத்தபடியே "ஏன் இப்படி கத்துறீங்க நேரம் ஆகுதுன்னா எதாவது உதவி செய்யனும் ஆனா நீங்க"

அங்கு வந்த அவர்களின் இளவரசி "அம்மா, அப்பா உங்கள பெரியப்பா வர சொன்னாங்க" னு சொல்லி அவங்க செல்ல சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

தன் மகள் தீபஸிகாவை தூக்கிப் போட்டு பிடித்த தீபன் மனைவியுடன் கீழே செல்ல அங்கே சக்ரவர்த்தி, உஷாவுடன் மிதுனும் தயாராகி அன்று நடக்கும் அமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க எதுவாக கம்பீரமாக நின்றான்.

ஆம் சக்ரவர்த்தியின் அரசியல் வாரிசாக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டான் மிதுன். அதுவே அவன் ஆசையும் கூட.

ஆனால் அந்த பதவி மோகத்தால் தான் செய்த துரோகத்திற்கு தண்டனையாக திருமணமும் அதனால் தனக்கென அமையும் ஒரு குடும்பத்திற்கும் தான் தகுதியானவனில்லை என்ற முடிவை எடுத்தது உஷாவினை துன்பத்தில் தள்ளியது.

"இவ்வளவு மாறியவன் இந்த எண்ணத்தில் இருந்தும் மாறுவான்மா, காலம்தான் அதை செய்யும் " என்று மனைவிக்கு ஆறுதல் அளித்தார் சக்ரவர்த்தி.

மிதுனின் மாற்றத்திற்கான அன்றைய நாளின் நெகிழ்வில் இருந்தார் உஷா.

ஒரு வெள்ளிக்கிழமை வீட்டில் அரைகுறை நினைவும், மயக்கமுமாய் மிதுனும், நிறைமாத கர்ப்பிணியாய் ராகாவும், உஷாவும் மட்டுமே.

சக்ரவர்த்தி பணிநிமித்தம் டெல்லியிலும், தீபன் டீ-வில்லேஜிலும்.

மிதுனுக்கு உணவு எடுத்து போகும்போது கால் தடுக்கி, நிலை தடுமாறி ராகா விழ, அதைப் பார்த்து உஷாவும் மயங்க யாருமில்லா நேரத்தில் இவர்களின் அலறலில் மிதுன் சுயம் பெற்றான்.

வீட்டின் நிலையை தன் கையில் எடுத்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து அவர்கள் நிலை சீரடையும் வரை அவன் உயிர் அவனிடமில்லை.

இன்னும் அதற்கு முத்தாய்ப்பாய் இரண்டு மணி நேரம் தன் தாயைப் படுத்தி அவர்கள் வீட்டு இளவரசி ஜனித்தாள்.

இத்த்னை சுமைகளையும் தனியொருவனாய் சுமந்த பிறகு தான் மிதுனுக்கு அவன் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் கேவலம் ஒரு பதவிக்காக செய்த கீழ்த்தரமான வேலை எல்லாம் நினைவுக்கு வர மன்னிப்பு வேண்டி தலை குனிந்தான்.

அவர்களை பொறுத்தவரை மிதுனின் மனமாற்றத்திற்கு காரணமான அவர்கள் செல்ல வாரிசே அவனின் வாழ்வையும் மாற்றுவாள் என்று நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் விழாவிற்கு கிளம்பினர்.

நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.
மற்றுமொரு கோணம். ஆஹா இங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைய எழுத்தாளர் சிங்கங்களைத் தட்டி எழுப்பிய பெருமை நம் சரயுவையும் மல்லிகா மேடத்தையுமே சாரும்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top