நான் இனி நீ எபிலாக் - Chitradevi

#1
ஐந்து வருடங்களுக்கு பிறகு உஷாவின் குரல் கம்பீரமாக அவ்வீட்டில் ஒலித்து கொண்டிருந்து. சீக்கிரம் எல்லாம் விருந்தினர் வருவதற்குள் தயாராகி இருக்கனும் என்று வேலையாட்களை ஏவிக் கொண்டிருந்தாள். உஷா எதுக்கு டென்ஷனாகுற எல்லாம் அனு பார்த்துப்பா நீ வந்து உட்கார் என சக்கரவர்த்தி கூறினார். உங்க மகன் இங்க இருக்கும் போது அவங்க இரண்டு பேருக்கும் சண்டைபோடவும் சமாதனம் ஆகவும் தான் நேரம் சரியா இருக்கும். என் பேரன்கள் தயாரானு தெரியல என கூறும் போதே பாட்டி என கூறிகொண்டே இரு அழகிய செல்வங்கள் மாடியிலிருந்து துள்ளிகுதித்து வந்தார்கள். தாத்தா பாட்டி டிரஸ் நல்லா இருக்கா என மழலையில் கொஞ்சினர் இரட்டையரான அதீரூப சக்கரவர்த்தியும் அதீராகவ சக்கரவர்த்தியும். ஆம் அவர்கள் தான் இன்றைய கதாநாயகர் அவர்களின் நான்காவது பிறந்த நாள் விழா அதற்குதான் இந்த தடபுடல். பார்த்திய என் மகனும் மருமகளும் குழந்தைகளை அழகாக ரெடி பன்னிட்டாங்க என்ற சக்கரவர்த்தியை முறைத்த உஷா .சோபாவில் தாத்தாவோடு உட்கார்ந்து கொண்டிருந்த பேரன்களை நோக்கி ரூபன் கண்ணா ராகவ் கண்ணா உங்களுக்கு யார் ட்ரஸ் பன்னது அம்மாவா அப்பாவா. இருவரும் ஒன்றாக நான் தான் ட்ரஸ் போடுவேன் என்று அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டார்களா நாங்கள் நிருமாவிடம் போட்டுக்கிட்டோம் என்று கூறி கிளுக்கி சிரித்தனர்.அங்கு வந்த அனு ஏய் என்னை பார்தது சிரிக்கிறிங்களா இதோ உங்களை என்ன பன்னுறேன் பார் என்று துரத்த அப்பா காப்பாத்து என தீபன் பின்னே குழந்தைகள் மறைந்து கொள்ள அங்கு ஒரே கோலகாலம். அங்கு வந்த நீரஜா அத்தை விருந்தனர் எல்லாம் வரத்தொடங்கிவிட்டார்கள் விழா நடக்கும் இடத்திற்கு போகலாமா என கேட்க வாம்மா போகலாம் எங்க மிதுன் நான் பார்க்கவே இல்லையே என்றார் தன் மூத்த மருமகளிடம். ஆம் அனுவின் தோழி நீரஜா தான் சக்கரவர்த்தி வீட்டின் மூத்த மருமகள் .கோமாவில் இருந்த பெரிய மகனை அவன் செய்த தவறுகளையெல்லாம் மன்னித்து அனுவும் தீபனும் தினமும் அவனுடன் நேரம் செலவழித்து அன்புடன் அவனிடம் உரையாடி கொண்டே இருப்பார்கள் . மிதுன் கோமாவில் இருந்து மீண்ட போது அவர்களின் அன்புக் குரல் காதில் ஒலித்துகொண்டே இருந்தது .மிதுன் இருவரிடமும் மன்னிப்பு கேட்டாலும் குற்றவுணர்வுடன் இருந்தவனிடம் இரு குழந்தைகளையும் தூக்கி கொடுத்து அவனை இயல்புக்கு கொண்டுவந்த சின்ன மருமகளை நினைக்கும் போதே கண்கள் பனிந்தது உஷாவிற்கு . தன் தோழியை மைத்துனுக்கு திருமணம் செய்து வைக்க அவள் பட்ட பாடு ஒரு வருடமாக இருவரிடமும் போராடி இதோ திருமணம் முடிந்து ஆறுமாதம். நீருவுக்கோ இது ஐந்தாம் மாதம். விழா நடக்கும் இடத்தில் மேற்பார்வை பார்த்துகொண்டிருந்த மிதுன் எல்லோரையும் கண்டு அங்குசென்றவன் நீருவை எதுக்கு நடந்துகிட்டே இருக்க ஒரே இடமாக உட்காரு இரு குடிக்க ஜுஸ் கொடண்டுவரேன் என கவனிக்கவும்.அனுவும் தீபனும் ஓ என கூச்சலிட்டனர் . நீரு வெட்கத்தனுடன் மிதுன் மேல் முகத்தை புதைத்து கொண்டாள். விழா இனிதே நிறைவுற்றது விருந்தினர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றனர் .அங்கு வந்த சாரவும் லோகேஸ்வரனும் வருகிறோம் சம்பந்தி என்று கூற உஷாவும் சக்கரவர்த்தியும் இரவு தங்கி விட்டு காலையில் செல்லாமே என கூற அனுவும் ஆமாம் டேட் மாம் இங்கே தங்குங்கள் என்று செல்லம் கொஞ்சினாள்.அவரும் தன் தவறை உணர்ந்து மகளிடம் தன் பாசத்தை வெளிபடுத்த தொடங்கினார் இங்கு தங்குவதும் வழமை தான் தன் பேரன்களை பார்பதற்காக வருவதும் தங்குவதும் பின் அழைதது செல்வதும் உண்டு. உஷா எல்லோரைம் உட்கார சொல்லி திருஷ்டி சுத்தி போட்டார். அன்று இரவு ராகாஅறைக்குள் நுழையும் போதே அவளை தூக்கி சுற்றிய தீபன் ராகா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.இதுக்கு காரணம் நீதான் .யுவர் மை ராட்சஷி என்று கூறிகோண்டே தன் வேம்பயர் முத்தத்தை பதித்தான் .ராஸ்கல் என்று கூறிகொண்டே அனுவும் திருப்பி கொடுத்தாள்.இவர்கள் எப்பவும் இப்படித்தான் என்று நிலவும் மேகத்தில் மறைந்து.நாமும் விடை பெறுவோம்.
 
Advertisement

New Episodes