நம்ம சேலம்

Advertisement

ThangaMalar

Well-Known Member
என்ன சிஸ்.... சேலத்தில் இன்னும் நிறைய இருக்கு சிஸ்...

சேலத்துல... மார்டன் தியட்டர் அப்படின்னு ஒன்னு இருந்தது... ஏற்காடு அடிவாரத்துலன்னு நினைக்கிறேன்... அதுலதான் நிறைய பழைய படங்கள் எடுத்தாங்க... (ரோஜா மலரே ராஜ குமாரி) பாடல் வருமே அதெல்லாம் அங்க எடுத்ததுதான்... முன்னாடி படம் எடுக்கன்னா... அங்கதான் வரணும்... முதல் ... தியேட்டர்...

அப்புறம் இளம்பிள்ளை சித்தர் கோவில்... எப்படிபட்ட தோல் வியாதிக்கும் இங்க வந்து இன்னமும் குளித்து செல்லும் வேண்டுதல் உண்டு. இளம்பிள்ளை பட்டு...
பேளூர் ஈஸ்வரன் கோவில்....
தாரமங்கலம் கோவில்... அங்க கல் சிங்கத்தின் வாயில்... கல் உருண்டை இருக்கும்... கை வைச்சு எடுக்க முடியாது... அது உள்ளையும் போகாது...

விநாயகா மிஷன் காலேஜ்.... சராதா காலேஜ்..... (ஒன்லி லேடிஸ்...)
நன்றி கவி சிஸ்.. :)
 

banumathi jayaraman

Well-Known Member
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில்
டூப்ளிகேட் பட்டுப்புடவைகள்
விலை குறைவாக கிடைக்கும்

இந்தப் புடவைகளுடன் ஒப்பிடும்
பொழுது ஒரிஜினல் பட்டு
அந்தப் பக்கம் தள்ளி நிற்கணும்

சேலத்திலுள்ள கந்தாசிரமம்
தாரமங்கலம் குகைக்கோயில்
கைலாச நாதர் திருக்கோயில்
நங்கவள்ளி லக்ஷ்மி நரசிம்மர்
பெருமாள் திருக்கோயில்
மிகவும் புகழ் பெற்றவை

புகழ் பெற்ற மேட்டூர் அணை
சேலம் மாவட்டத்தில்தான்
இருக்கு

கந்தர் சஷ்டிக்கவசத்தை
கந்தாசிரமத்தில்தான் பாலன்
தேவராயன் அரங்கேற்றினார்

புகழ்பெற்ற ராஜகணபதி திருக்கோயில்
சேலம் கடைவீதியில் இருக்கு
 
Last edited:

Joher

Well-Known Member
இந்த மாவட்டத்துக்குள் train ல ஒரு முறை கிராஸ் பண்ணியிருக்கிறேன்........
அவ்ளோ தான்........
மீதியெல்லாம் எங்கெங்கோ படித்தது தான்.......
 

pons

Active Member
மல்லியால் போக ஆசைப்படும் ஊர்...என்று வாய்க்குமோ...:love:
சேலத்து மாம்பழம்:)
தித்திக்கும் மாம்பழம்:p
அதைவிட தித்திக்கும் நம் மல்லி

குளுகுளு ஏற்காடு:)
அதனினும் குளுமை
மல்லியின் கதைகள்:giggle:
 

Chitrasaraswathi

Well-Known Member
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்திற்கு தண்ணீர் சேகரித்து வைக்கும் மேட்டூர் அணை. அணைக்கட்டு முனியப்பன். கொளத்தூர் மிளகாய். கர்நாடகாவை ஆட்டி வைத்த சந்தனக் கடத்தல் வீரப்பன் சமாதி. சேலத்து மணம்மிகு, ருசியான மாம்பழம். வனவாசி பட்டுப்புடவை.
 

Chitrasaraswathi

Well-Known Member
நீர்மின் நிலையம், அனல்மின் நிலையம் இரண்டும் ஒரே இடத்தில் உள்ள மேட்டூர் அணை. சேலம், தர்மபுரி மாவட்டத்தை இணைக்கும் பண்ணவாடி பரிசல்துறை. பூலாம்பட்டி பரிசல்துறை.
 

Sasikala srinivasan

Well-Known Member
என் தாத்தாவின்(அம்மாவின் அப்பா) சேலம் அம்மாபேட்டை அவர் சின்ன வயசுலயே ஈரோடு வந்துட்டார் ஆனால் ஊருக்கு போகும்போது மாம்பழம் வாங்கிட்டு வருவார் எங்க பங்காளிகள் நிறைய பேர் அங்க இருங்காங்க அதனால் வருடத்தில் மூன்று நான்கு முறை சேலம் வருவேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top