நம்ம சேலம்

Advertisement

ThangaMalar

Well-Known Member
therinja vishayathaiye sollirukeenga. matha vishayangalum sollunga @ThangaMalar
Just start பண்ணி விட்டேன் நீலா sis.. :D
எனக்கு தெரிஞ்சது அந்த மூணு விஷயம் தான் :love:
மத்தவங்க தொடருவாங்க னு நம்பிக்கை தான்.. ;)
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
OK pa
Just start பண்ணி விட்டேன் நீலா sis.. :D
எனக்கு தெரிஞ்சது அந்த மூணு விஷயம் தான் :love:
மத்தவங்க தொடருவாங்க னு நம்பிக்கை தான்.. ;)
.mambazham malli rendum namma Ellorukum therinja vishayam thane. :love:
 

banumathi jayaraman

Well-Known Member
புகழ் பெற்ற நரசுஸ் காபி இப்பவும்
சேலத்தில் இருக்கிறது

நிறைய திரைப்படங்களை உருவாக்கிய
புகழ் பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸ்
சேலத்தில்தான் இருந்தது
இப்பொழுது குடியிருப்புக்கள்
ஆகியிருப்பதாக கேள்விப்படுகிறேன்

இரும்புக்கும் கைத்தறி நெசவுக்கும்
புகழ் பெற்ற ஊர்

ஊட்டி, கொடைக்கானலை விட
பெருமை வாய்ந்த ஏற்காடு
சேலத்தில்தான் இருக்கு
அங்கு உள்ள கண்ணாடி மாளிகை
ரொம்பவும் பேமஸ்

தமிழ்நாட்டின் நான்காவது
பெருநகரம் சேலம்

இங்கேதான் மக்களின் நுகர்வு
பொருட்கள் விலை நிர்ணயம்
செய்யப்படுகிறது
''வாராய் நீ வாராய்'' பாடல்
எடுக்கப்பட்ட லேடீஸ் சீட்
ஏற்காட்டில்தான் இருக்கு
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
சேலத்து மாம்பழம்:)
தித்திக்கும் மாம்பழம்:p
அதைவிட தித்திக்கும் நம் மல்லி

குளுகுளு ஏற்காடு:)
அதனினும் குளுமை
மல்லியின் கதைகள்:giggle:
என்ன சிஸ்.... சேலத்தில் இன்னும் நிறைய இருக்கு சிஸ்...

சேலத்துல... மார்டன் தியட்டர் அப்படின்னு ஒன்னு இருந்தது... ஏற்காடு அடிவாரத்துலன்னு நினைக்கிறேன்... அதுலதான் நிறைய பழைய படங்கள் எடுத்தாங்க... (ரோஜா மலரே ராஜ குமாரி) பாடல் வருமே அதெல்லாம் அங்க எடுத்ததுதான்... முன்னாடி படம் எடுக்கன்னா... அங்கதான் வரணும்... முதல் ... தியேட்டர்...

அப்புறம் இளம்பிள்ளை சித்தர் கோவில்... எப்படிபட்ட தோல் வியாதிக்கும் இங்க வந்து இன்னமும் குளித்து செல்லும் வேண்டுதல் உண்டு. இளம்பிள்ளை பட்டு...
பேளூர் ஈஸ்வரன் கோவில்....
தாரமங்கலம் கோவில்... அங்க கல் சிங்கத்தின் வாயில்... கல் உருண்டை இருக்கும்... கை வைச்சு எடுக்க முடியாது... அது உள்ளையும் போகாது...

விநாயகா மிஷன் காலேஜ்.... சராதா காலேஜ்..... (ஒன்லி லேடிஸ்...)
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
புகழ் பெற்ற நரசுஸ் காபி இப்பவும்
சேலத்தில் இருக்கிறது

நிறைய திரைப்படங்களை உருவாக்கிய
புகழ் பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸ்
சேலத்தில்தான் இருந்தது
இப்பொழுது குடியிருப்புக்கள்
ஆகியிருப்பதாக கேள்விப்படுகிறேன்

இரும்புக்கும் கைத்தறி நெசவுக்கும்
புகழ் பெற்ற ஊர்

ஊட்டி, கொடைக்கானலை விட
பெருமை வாய்ந்த ஏற்காடு
சேலத்தில்தான் இருக்கு
அங்கு உள்ள கண்ணாடி மாளிகை
ரொம்பவும் பேமஸ்

தமிழ்நாட்டின் நான்காவது
பெருநகரம் சேலம்

இங்கேதான் மக்களின் நுகர்வு
பொருட்கள் விலை நிர்ணயம்
செய்யப்படுகிறது
''வாராய் நீ வாராய்'' பாடல்
எடுக்கப்பட்ட லேடீஸ் சீட்
ஏற்காட்டில்தான் இருக்கு
இப்போதான் நானும் இத சொன்னேன் சிஸ்... முக்கியமானது மாடன் தியட்டர். யாருமே சொல்லாயின்னு தோணுச்சி.... தேங்க்ஸ் சிஸ்...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
சொர்ணாம்பிகை சமேத.... சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது... இந்து சுகபிரம்ம ரிஷி அப்டிங்கறவர்.... அதாவது கிளி முகம் கொண்ட ரிஷி... இங்க பூஜை செய்ததா ஐதீகம்... இங்க அவரின் சிலை உண்டு....
வெண்பட்டு.... இங்க அதற்கான பூச்சு வரர்ப்பு... பட்டு நெய்யறது... விலை குறைவா கிடைக்கு,...
 

banumathi jayaraman

Well-Known Member
செவ்வாய்க்கிழமை தோறும் சேலம்
லீ பஜாரில் நடைபெறும் சந்தை
பிரசித்தி பெற்றது

இந்தியாவிலேயே நான்காவது பெரிய
பிளாட்பாரம் சேலம் ஜங்க்ஷன்தான்

ராஜாஜி, விஜயராகாவாச்சாரியார்
ராமசாமி உடையார் போன்ற
தலைவர்கள் பிறந்த பூமி
சேலம்தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top