தொலைக்காட்சி

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"தொலைக்காட்சியே
நீ
தொல்லைக்காட்சியாய்
மாறியது ஏனோ"


"ஒலியும்
ஒளியுமாய்
இருந்த உன்னைக்கண்டு
இன்று
ஒளியும் நிலை
வந்துவிட்டது
உன்னை
ஒழிக்கும் நிலையும்
வந்துவிட்டது"


"உன் தொடர்கதைகளில்
தொலைத்தனர்
பலர்
தங்கள் குடும்பத்தின்
மகிழ்வான பொழுதுகளை"


"உன்
விளம்பரங்களை விட்டு
விலகாமல்
இருக்கின்றனர்
விவரம் அறியா குழந்தைகள்"


"உன்
பாடல் கேட்டு
பரவசமும் அடைந்தேன்
உன்னில் வரும்
பாழாய் போன
தொடர்களால்
துயரும் அடைந்தேன்"


"பொழுதுபோக்கின்
அங்கமான நீ
பொழுதுகளையெல்லாம்
திருடிட தான்
இங்கு
திக்கறியாமல்
தவிக்கின்றனர்
பலர்"


"அறிவியல்
வளர்ச்சியில்
நீ
அபாரம்
உன்னால்
எங்கள்
வாழ்வில்
பாரம்"


"தொலைக்காட்சியே
என் தொல்லைக்காட்சியே
தூரதேசத்து நிலவாய்
தொலைவில்
சென்றுவிடு
நிம்மதி தந்து விடு"
 
Advertisement

New Episodes