தேவ மஞ்சரி –13

Advertisement

Gangashok

Member
வணக்கம் நட்புக்களே , ஒருவழியா கதயோட இடைவேளை பகுதிக்கு வந்துட்டோம் படுச்சுப்பாத்துட்டு உங்க விருப்பு வெறுப்புகள சொல்லுங்க.
mani and veth.PNGdevraj.PNGring.PNGruthra and manjari.PNG
ருத்ராவில் இணைந்த மஞ்சரி முழு நீல கண்ணாடியின் முன் நின்றாள் தன் முகத்தை வெறித்தாள் ருத்ராவின் முகத்தின் மேல் நிழல் தெரியும் தன் முகத்தை பார்த்தவள் தன்னை உணர்ந்துகொள்ள முயன்றாள் முடியல்லிலை அழுகை வரும் போல் இருந்தது கண்களில் நீர் வரவில்லை தன் துயரில் இருந்து முயன்று வெளிவந்தவள் ருத்ராவிற்காக தன்னை (ருத்ராவை)திருத்தினாள் முகத்தை சீராக்கினாள் அன்னநடை பின்னலிடை அசைந்தாட வேதாந்த்தின் வீடு நோக்கி நடந்தாள்.
வேதாந்த்தின் வீட்டில் தேவராஜ் அளவிட முடியாத கோவத்தில் வெந்துகொண்டிருந்தான் "எத்தனை முறை அயோ எத்தனை முறை இந்த ருத்ரா விஷயத்தில தோத்துகிட்டே இருக்குறது, எவ்வளவு கவனமா போயும் எஸ்கேஎப் ஆகிட்டாளே, பத்தாகுறைக்கி கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல, கிடைக்கிறாப்ல கிடைச்சு அந்த ஆத்மாவும் தொலைஞ்சு போச்சு" தன் தோல்வியை தாங்கமுடியாது அறையின் நீல அகலத்தை வேக வேகவேகமாக அளந்துகொண்டிருந்தான்.
ஆம் அன்று ருத்ராவை தொடர்ந்து சென்ற தேவராஜ் முடியாது திரும்பும் பொழுது மீண்டும் மோதிரத்தின் ஒளியை உணர்ந்தான், மூச்சிரைக்க அங்கும் இங்கும் ஓடியவன் மோதிரத்தின் ஒளி பெருகும் திசையை கண்டுகொண்டு அதை நோக்கி ஓடினான், சிறிது சிறிதாய் ஒளி பெருகி தான் தன் இலக்கை அடைந்து கொண்டிருக்கிரோம் என்று மகிழ்ந்திருந்த வேளையில் மோதிரத்தின் ஒளி மங்கி பின் காணாமல் போனது. தேவராஜ் ருத்ராவின் வீட்டை அடையும் முன், ருத்ராவில் இணைந்த மஞ்சரி வேதாந்த்தின் வீடு நோக்கி நகர தொடங்கி இருந்தாள்.
ஏமாற்றம் அதனால் வந்த கோவம் மோதிரத்தையே வெறித்தவன் அதை கழட்டி அந்த அறையின் மூலையில் விட்டெறிந்தான் அது அங்கு இருந்த ஒரு மேசையின் அடியில் சென்று விழுந்தது.
என்னதான் உருவம் ஒன்றாக இருந்தாலும் தன் பாவனைகள், மொழி, வழக்கு என்று அனைத்தும் மாறுபடும் அவளின் மூளையின் பதிவை அறிந்து கொள்ள முடிந்தாலும் மனதின் உணர்ச்சிகள்! அவை உணர்ந்துகொள்ள முடியாதே, ருத்ராவுக்கு உதவுவதற்காக அவளில் இணைந்தாலும் அவளின் காதல் உணர்வை எவ்வாறு வெளிப்படுத்துவது நாம் சொல்வதெல்லாம் மனம் கேட்பதிலேயே அது ஒரு குழந்தையின் குணம் கொண்டது அல்லவா தனக்கு பிடித்ததையே செய்யும். உள்ளூர ஓடும் நடுக்கத்துடன் மஞ்சரி வேதாந்த்தின் வீட்டில் அடி பதித்தாள், யாகம் யாவும் முடிவு பெற்ற நிலையில் வீடு அமைதியாய் இருந்தது. மேலிருந்து யாரோ இறங்கிவருவது தெரிந்தது.
இங்கு தேவராஜின் இருளில் மூழ்கியிருந்த அறையில் மோதிரம் ஒளிர்விட தொடங்கியது, அடித்து பிடித்து மேசையை கவிழ்த்து மோதிரத்தை கைப்பற்றியவன் வீட்டின் பின்புறம் இருந்த அவன் அறையிலிருந்து ஓடி வர தொடங்கினான்.
வீட்டின் மாடியில் இருந்து கைபேசியில் உரையாடியபடி வந்த வேதாந்த்தின் பார்வை ருத்ராவின் மேல் நிலைத்தது, தங்க சிலை போல் மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றிருந்த ருத்ராவின் மேல் நிலைத்த பார்வையை அவனால் திருப்ப முடியவில்லை இது எவ்வகையான உணர்வு எவ்வகையான ஈர்ப்பு அவனால் முழுதாக அறுதியிட்டு அறிந்துகொள்ள முடியவில்லை.
வேதாந்த்தை கண்ட மஞ்சரியோ தன் சுயத்தை இழந்தாள், அவள் காதல் கொண்ட பொழுதுகள், மணிமாறனுடன் கைபிடித்து கதைபடித்து உறவாடிய நினைவுகள், அவர்களின் செல்ல சண்டைகள், ஊடல்கள்,தந்தையின் கோவம் தன் காதல்மேல் அவர் காட்டிய விரோதம், விருபாக்ஸன் செய்த கொடூரம், வேதாளத்தின் சிவப்பேறிய கண்கள்,தன்னை காக்க உயிர் பிரிந்து உடல் சரிந்த மணிமாறனின் தோற்றம்,ஆத்மாவாக அடிமையாகாமல் தப்பிய நினைவு, இறுதியில் ஓவியத்தில் இணைந்தது அனைத்தும் அவள் கடந்த காலம் முழுவதும் அவள் கண்களின் முன் விரைந்தோடியது. ஆம் வேதாந்த் பார்ப்பதற்கு மணிமாறனின் மறு பிம்பமாகவே நின்றான். இதனை நாள் அவள் உணராத கண்ணீர் அவள் விழிகளில் வழிந்தது. அவன் திருவுருவை பார்வைகளில் வருடியவாறு அசையாது உறைந்து பொய் நின்றாள்.
உள்ளிருந்து வந்த தேவராஜ் ருத்ராவை நோக்கி ஒளி பாய்வதையும் அந்த ஒளியில் மஞ்சரியின் ஆத்மா வெளிப்படுவதையும் கண்டான். காதல் நிறைந்த கண்களில் நீர் ததும்ப வேதாந்த்தை பார்த்தபடி அவள் நின்றிருந்த கோலம், ருத்ராவையே வெறித்தபடி நின்றிருந்த வேதாந்த்தின் நிலை என்று எதுவும் தேவராஜின் கண்களில் இருந்து தப்பவில்லை. அவன் கண்களில் பேராசையும், பெரும்கோவமும் கொழுந்துவிட்டு எரிந்தன இதழ்களில் விகார புன்னகை ஒன்று தவழ்ந்தது தன் இரையை சரித்து ருசித்து வேட்டையாட காத்திருக்கும் புலியின் கொடூரம் அவன் விழிகளில். அவன் பழிவாங்க துடித்திடும் வேதாந்த், ருத்ரா, தன்னை வளமான வாழ்வுக்கு அழைத்து செல்ல போகும் ஆத்மா அனைவரும் ஒரு நேர்கோட்டில் அவன் கண்களுக்கு முன்னாள்.
விதி அனைவரையும் ஒரு புள்ளியில் சேர்த்து விட்டது இதில் வாழ்வோர் யார் வீழ்வோர் யார் ஆண்டவன் கணக்கு அவனே அறிவான்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top