தேவ மஞ்சரி –11 part 2

Advertisement

Gangashok

Member
சாரி சாரி சாரி என்னோட கம்ப்யூட்டர் சுத்தமா அவுட் சரிசெய்ய ரொம்ப நாள் ஆகிடுச்சு உங்களோட பகிரவும் தான் கொஞ்சம் பெரியமனசு பண்ணி மன்னிச்சு உங்க ஆதரவை தரணும்.
ruthra save vethant.PNG
தேவராஜுக்கு இன்னமும் ஒன்றும் பிடிபடவில்லை ஒரு சாதாரண வீட்டுவேலை செய்யும் பெண் இவ்வளவு பளு தூக்கியது எப்படி சாத்தியம் " யாரு என்னனு எப்படி தெருஞ்சுகிறது யாரையாவது கேக்கலாம்னா நாம மாட்டிக்குவோம் இந்த பிரச்னை ஒயரவர அமைதியா இருந்துதான் ஆகணும் ச்ச ஆயுசு கேட்டிடா வேதாந்த் உனக்கு ஆனாலும் பாக்கறேன் எவ்வளவு நாளுன்னு" பொறுமியபடியே அமைதியாகிப்போனான்.
தேவராஜை தவிர மற்ற அனைவருக்கும் வேதாந்தின் சுகமே பெரிதாக்கப்பட சிறு பாராட்டுடன் அந்த விஷயம் முடிந்துபோனது. தேவையில்லாது மகனின் மனதில் சிறு கீற்றாய் இருப்பதை ஊதி பெரிதாக்க விரும்பாததால் அந்த நிகழ்வை பற்றி பேச அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டது அரங்கநாயகியால் அதில் ருத்ராவும் அடக்கம்.
யாகம் தொடங்கியது ப்ரோகிதர்கள் படை சூழ யாகத் தீ கொழுந்துவிட்டது மந்திர உச்சாடனை எங்கும் எதிரொலித்தது ஐந்து நாட்கள் இரவு பகல் எந்நேரமும் புரோகிதர்கள் ருத்ராவையும் நண்பர்களையும் விரட்டிக்கொண்டே இருந்தனர், ருத்ராவின் பொறுமையும் காற்றோடு மெதுவாய் கரைந்து கொண்டே இருந்தது.
இதில் இடையில் ஒரு நாள் வேதாந்த் தன் தாயிடம் "யாருமா அந்த பொண்ணு எவ்வளவு அடக்கமா அழகா இருக்காரா இந்தமாதிரி ஒரு பொண்ணு வாழ்க்கையில வந்தா நல்லா இருக்குமில்ல" எதோ கனவில் பேசுவது போல் வேதாந்த் பேசிக்கொண்டே செல்ல அரங்கநாயகியின் முழு உடம்பும் பற்றி எரிவது போல் இருந்தது "மூடுடா வாய, யார் யார் வீட்டுக்கோ பொய் வேல செஞ்சி வயதை கழுவுரவ அவங்க குடுத்த நல்ல துணிமணி போட்டுக்கிட்டு மினிக்கிகிட்டு அலையறா, சுருக்கமா சொல்லனும்னா கொஞ்சம் கவுரவமான பிச்சைக்காரி அவ்வளவு தான் அவ தகுதி அத மறந்துட்டு ஏதாவது பேசிகிட்டு அலைஞ்ச உனக்கு அம்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்" சீறிவிட்டு சென்ற தாயை எப்பொழுதும் போல் இன்றும் வெறுமையாய் பார்த்துவிட்டு அமைதியாய் சென்றான்.
ஆனால் இந்த உரையாடலை தற்செயலாய் கேட்ட ருத்ராவுக்கு வேதாந்தின் பேச்சில் முதலில் மகிழ்ச்சியும் அதைதொடர்ந்த அரங்கநாயகியின் பேச்சில் கோவமும் எல்லையை கடந்தது. தன் கோவத்திற்கு எப்பொழுதும் போல் வடிகாலாய் நண்பர்களை தேட எவரும் கண்ணில் படவில்லை,(ருத்ரா மூஞ்சிய பாத்தே எல்லா பக்கியும் எஸ்கேப்).
தன் கோவத்தை தணிக்க தோட்டம் நோக்கி சென்ற ருத்ராவின் நல்லநேரமோ அரங்கநாயகியின் கெட்ட நேரமோ தனியாக மாட்டினார் ருத்ராவிடம் தோட்டத்தில். மாலைகள் மலர்கள் என்று யாகத்திற்காய் வாங்கி குவிக்கப்பட்டிருந்த பைகளில் ஒன்று ருத்ராவின் கைகளில் குடியேறியது இதழ்களிலோ ஒரு குறும்பு புன்னகை.ஒரே எட்டில் அரங்கநாயகியை அடைந்தவள் பையை கொண்டு அரங்கநாயகியின் முகத்தை மூடினாள் அடுத்த சில நிமிடங்கள் அரங்கநாயகியின் முதுகு உடைந்து போகாமல் இருந்தது ஆச்சர்யமே சிரமபட்டு கண்விழித்து பார்க்க ஒரு தாவணியின் ஓரம் மட்டுமே கண்ணில் பட்டு மறைந்தது.
அரங்கநாயகியின் மனதிலும் சந்தேகத்தின் வித்து விழுந்தது.
அதன் பிறகு ருத்ராவையும் அவள் குடும்பத்தையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்க்காதது தான் குறை, அதில் அவளும் அவள் குடும்பமும் செய்யும் கோமாளித்தனங்கள் அவரின் சந்தேகத்தை வளர்ந்துகொண்டே போனது.
ஒரு முறை ருத்ராவை அழைத்து திருவாசகத்தை பூஜை அறையில் பாட சொல்ல ருத்ரா வாய் திறக்கும் முன் சுருட்டையின் இருமல் சத்தத்தம் விடாமல் ஒலிக்க சட்டென சுதாரித்துக்கொண்டவள் "அசோ தாத்தாவுக்கு இருமல் மருந்து தர மறந்துட்டேன் பாத்தேளா இதோ வந்துடறேன்"ஓடியவள் அதன்பின் அரங்கநாயகியின் கண்களில் விழவில்லை.அரங்கநாயகியின் சந்தேகம் மேலும் வலுப்பெற்றது.
அன்று மாலை மொட்டை மாடியின் கண்ணாடி சுவற்றின் மீது சாய்ந்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்தான் வேதாந்த். அழகிய மஞ்சள் தாவணி பாவாடையில் மாலை வெயிலில் பொற்சிற்பம் போல் கையில் காபியுடன் நடந்து வந்தவளை கண்கள் கனிய பார்த்திருந்தவன் அவன் சாய்ந்து இருந்த கண்ணாடி தடுப்பு நெகிழ்திருந்ததை கவனிக்கவில்லை ருத்ரா அருகில் வரவும் அந்த கண்ணாடி சரியாவும் சரியாய் இருந்தது.
வேதாந்த் தடுமாறி விழ அவன் கைகளை அவள் கைகள் அழுத்தமாய் பற்றியது "அதே உணர்வு, அதே அழுத்தம்,என்றும் உன்னை விழ விடமாட்டேன் என்னும் அந்த கைகளின் இறுக்கம், அன்று உணர்ந்த அதே இறுக்கம் அதே உணர்வு"வேதாந்த் தப்பிவிட்டாலும் அவன் மனம் குழம்பிப்போனது.
யோசனையுடன் படுக்கையில் விழுந்தவனின் நினைவுகள் பின்னோக்கி பயணம் செய்தன, அன்று சூட்டிங்கில் ஒரு மாடியில் இருந்து மறு மாடிக்கு தாவ வேண்டும் கயறு கடித்தான். அவன் தாண்டும் வரை சீராக இயங்கிக்கொண்டிருந்த உருளை அவனை தாங்கியதும் பாதியில் சிக்கிக்கொண்டது அவன் உயிர் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்த நேரம், இரண்டு உயரமான கட்டிடங்களின் இடையில் மாட்டிக்கொண்டவனை எப்படி மீட்பது என்று மற்றவர்கள் ஆலோசித்து கொண்டிருக்கும் போதே மின்தூக்கியிலிருந்து தன் பைக்கில் புயலை போல் வெளிப்பட்டவள் எதையும் யோசிக்கவில்லை கிடந்த கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு உபரி உருளையை மாடியவள் வேதாந்த்தை நோக்கி பாய்ந்தாள் வந்த வேகத்தில் தன் கால்களை கொண்டு வேதத்தின் இடையை வளைத்தவள் மறுமுனையை அடைத்தேவிட்டாள்.போட்டிருந்த ஹெல்மெட் அவள் யார் என்று அறியவிடாமலேயே செய்துவிட்டது மின்னலை போல் வந்தவள் அதே வேகத்தில் மறைந்தும் போனாள்.
இன்றும் நினைக்கையில் மலைப்பாய் இருந்தது "அந்த பிடியில் இருந்த உறுதி கீழே விழுந்த என்ன அவ தூக்கிவிட புடுச்சப்ப அவ கை நடுங்குச்சு ஆனா பிடி தளரவே இல்ல,அந்த கைய புடுச்சப்ப வந்த உணர்வு உறவு , பாதுகாப்பு நடிப்புக்குனாலும் எத்தனையோ பொண்ணுக கைய புடுச்சருக்கேன் யாருகிட்டயும் அந்த உணர்வு வரலையே? இப்ப மறுபடியும் இப்ப இந்த பொண்ணு கைய புடுச்சப்ப வருதே ஒரே உணர்வு எப்படி ரெண்டுபேருகிட்ட வர முடியும்? ஐயோ ... " தலையணையில் தன் முகத்தை புதைத்து கொண்டான். இருந்த குழப்பத்தில் எப்பொழுது தூங்கினானோ அவனுக்கே தெரியவில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top