தேய்வது நிலவல்ல - 2

Advertisement

வணக்கம் தோழிகளே,

இது என் முதல் நாவல் சென்ற பதிவிற்க்கு ஊக்கம் அளித்து, கருத்துகளை பகிர்ந்து கொன்ட அனைவருக்கும் நன்றிகள்.

இதே அடுத்த பதிவு தங்கள் கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுகள் தோழமைகளே

நன்றி.

அத்தியாயம் – 2

அது சென்னையின் மிகவும் வளமானவர் வாழும் பகுதிகளில் ஒன்று. இங்கு எல்லா வீடுகளிலும் பனத்தின் செழுமையை பறைசாற்றும். ஆனால் இங்கு மனிதர்கள் வசீக்கிறார்கள் என்ற சந்தேகத்தை இந்த இடத்தின் அமைதி ஏற்படுத்தினாலும், அவ்வபோது கேட்கும் பார்டிகளின் ஒசையும், சில வீடுகளின் காலை நேர பூஜை சத்தமும் இன்னும் இங்கு மனிதர்கள் உள்ளார்கள் என்பதை ஏற்க்கொள்வேண்டியுள்ளது. இந்த வீடுகளின் எல்லா நிலைமைகளை அறிந்தவர் உண்டு என்றால் இந்த வீடுகளில் வேலை செய்பவர்கள் தான்.

காலை 6.30 மணியில், இன்னும் சூரியன் விழிக்காத நிலையில் கொட்டும் மார்கழி பணியில் வீட்டின் தோட்டத்தில் சுற்றி ஜாகீங் செய்து கொன்டு இருந்தாள் நேத்தரா, (நன்பர் வட்டாரத்தில் தாரா, நிது) பெயருக்கு ஏற்ப்ப நேர்த்தியான தோற்றமும், செய்கையும் கொன்டவள். இரவு எவ்வளவு நேரம் சென்று உறங்கினாலும் காலையில் இந்த ஜாகீங் உடன் தான் தொடங்கும் இவள் நாள்.

நேர்கொன்ட பார்வையும், பொய்மையும் புரட்டும் இவளுக்கு எட்டி காய் அதனால் இவளின் நன்பர்(பி)கள் வட்டமும் சிறியது, எப்போதும் எளிமை விரும்பி, நகரின் பெரும் செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியில் +2 படிப்பவள், மருத்துவம் சேர்வதே இவளின் லட்சியம், அதுவும் யார் தயவும் இல்லாமல் மெரிட்டில் சிட் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவள், அந்தஸதிற்காக இவளின் வீட்டினரின் எவ்வளவு கொடுத்தும் இவளுக்கு சீட் வாங்கி கொடுப்பார்கள்தான் ஆனால், அதன் அதனை நினைக்கவே அவளுக்கு விருப்பம் இல்லை.

காலை உடற்பயிற்சி முடித்து, அன்றைய தினசரியை பார்க்க தெடங்கினால், இவள் வருகை உணர்ந்து வேளையாள் சத்துமாவு கஞ்சியை அவள் அருகில் வைத்து சென்றார். அன்றைய செய்தியை படித்தபடி இருந்தவள், இவள் அருகில் வந்த வள்ளியை என்ன என்பது போல் பார்த்தால், அது பாப்ப... என்று ஆரம்பித்தவள் இவளின் முறைப்பில் இல்ல நேத்ரா மா நேத்தி நான்..... என ஆரம்பித்தவளை, மேலும் பேசவிடாது போதும் என்பது போல் பார்த்தவள், நம் குழந்தைகளின் முதல் தவறு நம்மை பார்த்துதான் ஆரம்பிக்கிறது. நேற்று நீங்க செஞ்சது என்னால மண்ணிக்க முடியாது இனிமே இந்த விஷயமா என்கிட்ட வராதிங்க என்றவள் பேச்சு முடிந்தது என்பது போல் குளிக்கச் சென்றுவிட்டாள்.

செல்லும் அவளை மனதில் திட்டியபடி பார்த்தவள் அந்த வீட்டின் சமையல் அறை புகுந்தாள். இந்த வள்ளி சமீபமாக இங்கு வேளையில் சேர்ந்தவள், நேத்ரா முடிந்த படிப்புக்கு தேவையான உதவிகளை தன் வீட்டில் வேளை செய்பவர்களின் பிள்ளைகளுக்கு செய்வாள். இரு தினத்திற்க்கு முன்னால் வள்ளியின் 9வது படிக்கும் மகன் பள்ளியில் ரெக்காட் நோட் வாங்க வேண்டும் என்று இவளிடம் 500 ரூபாய் வாங்கி இருந்தான், ஆனால் உண்மையில் வள்ளிதான் அவனிடம் அப்படி சொல்லி பணம் கேட்க சொன்னால், அப்படி வாங்கி தந்தாள் அவனுக்கு 100 ரூபாய் தருவதாக கூறினால் அது அவள் பக்கத்து வீட்டுகாரி போல் புடவை வாங்க, ஆனால் நேற்று இவர்கள் சென்ற கடையில் புடவையின் விலை 450 ஆக இருக்க, சொன்னபடி அவனின் 100 கொடுக்கவில்லை அவள், அதனால் நேற்று கடையில் இருவரும் சன்டையிட்ட போது நேத்திரா பார்த்துவிட்டாள். அதனால் தான் இன்று இப்படி சும்மா வா படிப்பின் காரனமாக எப்போது பணம் கேட்டாலும் பணம் கொடுப்பவள். இனி இல்லை என்ற ஏமாற்றம் அப்போதும் செய்த செயலுக்கு அவளுக்கு வருத்தம் இல்லை சொல்ல போனால் அவளை பொருத்தவரை அது தவறே இல்லை.

தன் காலை வேளைகளை முடித்தவள் பள்ளி கிளம்ப ஆயத்தம் ஆகி சாப்பிட அமர்ந்தாள், அப்போது தான் அந்த வீட்டின் தலைவி ரேகா துயில் கலைந்து கீழே வந்தாள். நேற்று இரவு (அதிகாலை) ஒரு பார்ட்டி முடிந்து அவள் வீடு வந்த நேரம் 3 அதனால் அவள்கண்களில் தூக்கத்தின் மிச்சம் இன்னும் இருந்தது. வந்தவள் நேத்திராவை ஒரு பார்வை பார்த்தாள்.

நேற்று நீ ஏன் பார்ட்டிக்கு வரல எல்லாரும் கேட்கர கேள்விக்கு பதில் சொல்ல முடியல என்னால, தலையை நிமிந்தவள் நேத்து ஸ்பெசல் கிளாஸ் என்றவள் அதற்க்கு மேல் சாப்பிட பிடிக்காமல் இரண்டு இட்லியுடன் எழுந்துவிட்டாள். அவள் போவதை சமையல் அறையில் இருந்து பார்த்த சீதாமா க்குதான் மனது வாடிபோனது.

அவர் இந்த வீட்டிற்க்கு வேலைக்கு வரும் போது நேத்திரா விற்க்கு 5 வயது. அழகிய பிங்க் நிறத்தில் கண்ணில் குழந்தைக்கு உன்டான துறு துறு குழந்தை அவள். ஆனால் அந்த வீட்டின் சூழல் அவளை ஏதும் இல்லாதவள் ஆக்கிவிட்டது, அதில் அவள் குழந்தைதனம் மறைந்து அந்த வீட்டில் எப்போதும் இறுக்கமாகவே இருப்பாள், அந்த வீட்டில் அவள் சற்று சகஜமாக போசும் நபர் சீதாமா மட்டுமே, எப்போதான் இந்த குழந்தைக்கு இந்த வீட்டுல இருந்து விடிவு வரும்மே ....

என்றவரின் காதில் காபிகா கத்திக்கொன்டு இருந்த ரேகாவின் குரல் அவரை அடுப்படி பக்கம் திருப்பியது.
ரேகா அவளின் கணவன் தயாளன், நேத்திரா 3 உறுப்பினர்கள் கொன்ட சிறிய குடும்பம், குடும்பம் மட்டும் அல்ல அவர்களின் மணமும் சிறியதுதான். எப்போதும் பிஸ்னஸ் மட்டும் மே அவர் குறிக்கோள் அவர் யாரிடம்மாவது அமர்ந்து போசினால் கன்டிப்பாக அதில் லாபம் இருக்கும், மனைவி மேல் தட்டு வர்கத்தின் பிரதிநிதி, ஒரே வரியில் சொல்வது என்றால் நேத்திரா இவகளின் ஸ்டேடஸ் ஸ்சிம்பில்.

ஆனால் நேத்திராவின் குனத்துடன் இவர்களுக்கு ஒத்துபோகாது சிறு வயது முதலே சீதாமாவால் வளர்க்க படுபவள், நேரம் தவறாமை, வாக்கு தவறாமை கொள்கை உடையவள். இதனால் எப்போதும் 3வருக்குள்ளும் வத்து போகாது, நேத்திரா எப்போதும் ஒதுங்கி விடுவாள், இவளின் இந்த குணங்களே பின்னாளில் இவள் சந்திக்க போகும் பிரச்சனைகளுக்கு காரனமாகும் என்பதை அறிந்தால் ..............

காலை நேர பரபரப்பில் இருந்து அதியனின் வீடு, அவன் அப்பா சிவநேசன் ஓய்வை எதிர் நேக்கிகாத்திருக்கும் பள்ளி ஆசிரியர், அம்மா குடும்பத்தைவி இவரின் ஆசைகள் எல்லாம் பலாக்காய் அளவு பெரியவை, ஆனால் 3 குழந்தைகளின் படிப்பு, குடும்ப செலவுகளுக்கு, முன்னால் இவர் கணவர் வருமானம் கலாகாய் அளவுதான்.


அதில் எப்போதும் ஆசைகள் மற்றும் கனவுகளுடன் வலம் வருபவர், சாதாரன விவசாய குடும்பத்தில் அண்ணன், அழகான தங்கையாக பிறந்தவர், சிறு வயதில் இருந்தே பகட்டான வாழ்கைக்கு ஏங்குபவர், கல்யாண வாழ்கையை அதற்க்கு தீர்வாக நினைத்தவர், மாப்பிள்ளை அரசு வேலை, எந்த கெட்ட பழக்க வழக்கங்ளும் இல்லை, சொந்தம் பந்தம் யாரும் இல்லை என பெண் கேட்ட போது தன் கணவுகள் நினவானதாக மகிழ்ந்து போனவள், கணவனின் கடமை நேர்மையில் வெறுத்தால். இத்தனைக்கும் அவர் சம்பளம் ஒன்றும் குறைவானது அல்ல ஆனால் அதனால் ஆனந்தி நினைத்த ஆடம்பரம் செய்யமுடியவில்லை, அது எப்போதும் கணவர் மீது அதிருப்தியாக வெளிபடும், மொத்ததில் அவர் வரை கணவர் பிழைக்க தெரியாதவர்.

மூத்த மகன் வளவன் டிகிரி முடித்து சென்னையில் பிரபலமான இடத்தில் அவன் நன்பர்கள் (?) ரவி மற்றும் ராகவ் உடன் இனைந்து V.V.R study centre நடத்திவருகிறான். இரன்டாவது மகன் அதியன் இன்று வேலைகான நேர்முக தேர்விற்க்கு கிளம்பி கொன்டு இருக்கிறான். மூன்றாவது மகள் வானதி பொரியல் கல்லூரியில் கடைசி வருடம். வளவன் அமைதியானவன் வீட்டில் எதிலும் தலையிடமாட்டான், பணம் தேவையா வாங்கி கொள் என் விஷயத்திலும் தலையிடாதே, அதியன் அப்பாவின் மறுபதிப்பு, மகள் அம்மாவை போல் தன்நலம் பெரிது என நினைபவள் ஆனால் அதை வெளிபடையாக காட்டிக்கொள்ளாமல் தன் காரியத்தை சாதிக்கும் சாமர்த்தியசாலி.
*****************************
தன் காலை நேர உடற்பயிற்சி முடிந்து தன் அலுவளகம் கிளம்பிக்கொன்டு இருக்கும் வெற்றிமாறன் மாறன் குரூப்ஸ் கம்பெனிக்கு செந்தகாரன். எப்போதும் முகத்தில் இருக்கும் இறுக்கம் கடந்த சில வருடங்களில் சந்தித்த இழப்பகளால் இன்னும் இறுகி கிடந்தது, இவன் முத்தை வைத்து இவன் என்ன செய்வான் என கனிக்க முடியாது. சாப்பிட அமர்தவனை நேக்கிய அவன் தாய் ஏதே கேட்க நினைப்பதும் தயங்குவதுமாக இருந்தார். எதும் போசாமல் சாப்பிட்டு முடித்தவன் அன்னையிடம் முகில் சீக்கரம் நம் கிட்ட வந்துடுவான் மா கவலபடாதீங்க என்றவன் தன் ஆடியில் கிளம்பிவிட்டான். கவனம் சாலையில் இருந்தாலும் என்னம் அவளிடமே இருந்து......

********************
இரவு முழுவதும் பொரும்பாலான பணக்கார்களின் வாரிசை போல் கேளிக்கையில் முடிந்து தூங்கிக்கொன்டு இருந்த ராகவ் வின் கைபேசியை காதில் வைத்தவன் சொல்லபட்ட செய்தியில் தூக்கம் தொலைத்தவன் தன் தந்தைக்கு அழைத்து அடுத்து செய்யவேயவைகளை விவாதித்தான்.
******************
காலையில் பேருந்து காஞ்சிபுரத்தை அடைந்து, தனி அருகில் இருபுறமும் தோள் சாய்ந்து உறங்கும் முகில்லையும், நந்தினியையும் பார்த்தாள். நந்தினி அவர்களின் வீட்டின் அருகில் வசிக்கும் தோட்டம் பராமரிப்பவர். முகில் உடன் இந்த ஊருக்கு வந்த புதிது அவர்தான் அவளையும் குழந்தையும் பார்த்துக்கொன்டார். அவரின் மகள் தான் நந்தினி. நந்தினி குழந்தையாக இருக்கும் போது இங்கு ஏற்பட்ட நிலசரிவில் அவளின் அப்பா இறந்து போனார். அதன் பிறகு இங்குதான் வாழ்க்கை. நந்தினி இதுவரை எங்கும் போனது இல்லை அதனால் அவளையும் ஆதிரை அழைத்து வந்து இருந்தாள். பஸ் நின்றதும் பிள்ளைகளை எழுப்பி கிழே இறங்கினால்................
இவள் வரவை எதிர் பார்த்தவர்கள்


**************

போன முறை உன்ன இழந்துட்டு நின்னமாதிரி இந்த முறை நடக்காது ஆதிமா, இந்த வாட்டி நீ எனக்கு சொந்தமானவள என் மனைவியாதான் இங்க இருந்து போக முடியும் என்று அவளை பார்த்த படி கூறினான் – அதியன்.

இந்த முறை முகில் என் கிட்ட வராம நீ போக முடியாது ஆதிரை, எங்க அண்ணை தான் கடைசியா பாக்க முடியாம போச்சு ஆனா அதை என் அண்ணன் மகன் விஷயத்தில் நடக்காது என்று அவளை கண்கானிக்கும் கண்ணன் அனுப்பிய புகைபடத்திடம் கூறிக்கொன்டு இருந்தான் – வெற்றிமாறன்.



போன முறை எப்படியோ தப்பிச்ச இந்த முறை நீ உயிரோட போகமாட்ட டீ. எனக்கு மரன பயத்த காமிச்ச உன்னோட சாவு என் கைலதான் – ராகவ்

நிலவு தேயும்..........
 

Geetha sen

Well-Known Member
ஆதியை நிறைய பேர் வேறு வேறு காரணத்திற்காக எதிர்பார்க்கிறாங்களே:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top