தேய்வது நிலவல்ல - 1

Advertisement

hi friends and sisters,

first epi pottuten, unga comments share panuga pa, thanku

தேய்வது நிலவல்ல​
அத்தியாயம் -1
காலை நேர குளிரை அனுபவித்தப்படி இன்னும் போர்வைக்குள் இருந்து எழுந்திருக்க மணம் இல்லாமல், அருகில் படுத்திற்கும் முகிலனின் தலையை கோதிய வண்ணம் படுத்திருந்தாள் ஆதிரை. இன்று ஞாயிற்றுக்கிழமை மற்ற நாட்களை போல இன்று காலை நேர பரபரப்பு இல்லாமல் காலை நேர அமைதியை ஆழ்ந்து அனுபவித்து இருந்தாள். குளிர்ருக்கு இனனும் கதகதப்பாய் ஆதிரையை நெருங்கி அவள் கழுத்தில் முகத்தை புதைத்த படி படுத்துக்கொன்டு துக்கத்தை தெடர்ந்து இருந்தான் முகிலன். அவன் செயலில் ஆதிரையின் முகத்தில் இளநகை.

நன்றாக அவனை இன்னும் அனைத்து படுத்துக்கொன்டாள். இந்த ஊர்ருக்கு வந்து 5 வருடம் கடந்து விட்டபோதும், இன்னும் இந்த ஊரின் சீதோசன நிலை கனிக்க முடியாத ஒன்று தான் இவளுக்கு, எப்போதும் குளிர்ச்சியும், வருடத்தில் கோடைகாலத்தில் மட்டும் மிதமான வெயில் கொன்டது. ஊட்டியில் மார்ச் முதல் ஜூன் வரை மிதமான வெப்பநிலையும், சிலசமயம் சாரலூம் இருக்கும், ஜூலை முதல் அக்டோபர் வரை மிதமான பனியும், சாரல் மழையும் இருக்கும். நவம்பர் ஆரம்பித்து பிப்பரவரி வரை கடும் குளிர் இருக்கும். ஆனால் இந்த நிலை மெல்ல மாறி வருகிறது, பருவநிலைகளில் நிறைய மாற்றம். எது எப்படி இருந்தாலூம் இந்த ஊரினை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எங்கும் இயற்கையின் பரிபூரன ஆசி இந்த மலைகளில் நிறைந்து உள்ளது.
இங்கு உள்ள கேதியில் உள்ள st. Joseph’s Higher sec., school இல், ஆதிரை அறிவியல் டீச்சர்ராக பணியாற்றுகிறாள். இங்கு வந்த போது இந்த அமைதியும், குளூமையும் அவள் உனராத தாய்மடியை போன்ற நிறைவை அவளூக்கு கொடுத்து. அவளின் மனகாயங்களை ஆற்றவும், அடுத்து என்ன என்று தன்னை தயார்படுத்தவும், அவளூக்கு உதவியது.
சோம்பலாய் ழுழித்தவளின் பார்வையில், சுவற்றில் மாட்டபட்ட திருமணபுகை படத்தில் நின்றது. அதில் ஆதியும், இளமாறனும் மாலையும் கழுத்துமாய் புன்னையுடன் இருந்தனர், அவர்களின் திருமணம் முடிந்தவுடன் எடுக்கப்பட்டது. திருமணத்தின் பூரிப்பும், மகிழ்சியும் இருவர் முகத்திலும். வாழ்கை இன்பமாய் போனது அதுவும் முகில்லின் வருகைக்கு பின், அவன் ஒரு மாத குழந்தையாக இருந்த போது அந்த விபத்து நடக்காமல் இருந்து இருந்தால், இந்த அழகிய கூடு சிதையாமல் இருந்து இருக்கும். எல்லாவற்றையும் நினைக்கும் போது மனதில் ஒரு விரத்தி புன்னகை உருவாகியது. ஆனால் அடுத்த கனம் முகில் முகம் பார்க்கும் போது அனைத்தும் மறந்து, அவன் முகம் மட்டுமே நினைவில். குளிருக்கு இதமாய் இன்னும் தன்னை நெருங்கி உறங்கும் முகம் பார்த்தபடி படுத்திருந்தாள். அப்படியே அப்படியே அவன் முகம் பார்த்தபடி மீண்டும் உறங்கிபோனால். தீடீர் என்று கேட்ட காலிங் பெல் சத்தம் யார் இந்த நேரத்தில் என்ற எண்ணத்துடன், தன் மேல் இருந்த முகிலின் கையை விலக்கிவிட்டு, அவனூக்கு அனைவாக தலையனை வைத்தவள், அவசரமாக வெளியே வந்தவள் சைடு டோர் வழியாக யார் என்று பார்த்தாள், அவளூடன் வேளை செய்யும் சுதாகர், இவர் ஏன்? என்ற மனதின் கேள்வியுடன் கதவை திறந்தவள், என்ன என பார்வையால் புருவம் நெரித்தபடி அவரை நேக்கினாள். இருவரும் ஒரே துரையில் இருந்தாலும் தேவைக்கு அதிகமாக பேசியது இல்லை. இந்த காலை வேளையில் சுதாகரை எதிர்பார்வில்லை. இது இங்கு வேளை செய்பவர்கான குவாடர்சஸ் இரு வீடுகள் சேர்ந்து போல் இருக்கும், சிறிய சமையல் அறை, படுக்கை அறை, ஹால் மற்றும் குளியல் அறை, கழிவறை வசதி கொன்டது. சுதாகர் இருவீடு தள்ளி தன் மனைவியுடன் இருக்கிறான்.

என்ன விஷயம் ஸார் ?
மேடம் எனக்கு ஒரு help plz முடியாதுனு சொல்லாதீங்க ப்ளிஸ் என்றான் கெஞ்சும் குரலில். என்ன சுதாகர் மீனாக்கு ஏதும் problem ma என்றாள் அவனின் மனைவி 7 மாத கர்பமாக இருப்பதனால், அவன் கண்ணில் அரை வினாடிக்கும் குறைவான நேரத்தில் வந்து போன செய்தியை உனரும்முன், அவன் ஆமாம் என்றதில் பதட்டம் அடைந்தவள்,
அது இன்னிக்கு காலை பாத்ரும்ல ஸ்லிப் ஆகி வயித்துல இடிச்சுகிட்டா, நம்ப கேம்பஸ் டாக்டர் ஸ்கேன் பன்ன சொல்லார், அதனால அவளை கோவை கூட்டிட்டு போகனும் அப்படியே அவ அம்மா வீட்டுல வீட்டுவரலாம்?? இன்னிக்குதான் state level science exhibition காக நம்ம ஸ்கூல்ல இருந்து பிள்ளைகள கூட்டிகிட்டு போகனும். என்னால இப்போது முடியாது, நான் பிரின்சபல் கிட்ட போசினே அவர் எனக்கு பதில் யாரயாவது அரேஞ் பன்னிட்டு லிவ் எடுத்துக சொல்ரா், ப்ளிஸ் மேம் இப்பே என்னால யாரையும் கேட்க முடியாது. அதுவும் இல்லாம நாம இரண்டு பேருதான் டாப்பிக் செலக்ட் செஞ்சி பசங்கள தயார் பன்னோம், இப்பொ புதுச ஒருத்தர் வந்த கஷ்டம் அதனால தான் கேக்கறேன், பஸ் இன்னிக்கு இவினிங் கிளம்புது, நீங்க பசங்களோட முன்னாடி போங்க நான் டுடேஸ் கழிச்சி வந்து ஜாயின் பன்னிகிறேன்.

சங்கடமாக அவன் முகம் பார்த்தவள், வேற வழியில்லையா சுதாகர் என்றாள்? இல்லை ஆதி மேம் உங்க கூட பத்மினி மேம் வருவாங்க எல்லா ஏற்பாடும் பன்னியாச்சு என்றான். சிறிது யோசித்தவள் ஒரு பெருமூச்சை விட்டு சரி என்றவள் பிற விவரங்களை பேசிவிட்டு கிளம்ப தயார் ஆனாள். ஆனாலூம் மனதின் சத்தம் ஏதோ பிசைவது போல் இருந்து, இந்த பயனம் தனக்கு என்ன வைத்து இருக்கிறது என்று தொரிந்து இருந்தால் இதை தவீர்த்து இருப்பாள்.

ஆதிரையின் வீட்டில் இருந்து கிளம்பியவன் தன் மொபைலில் plan success she will come, என்று செய்தி அனூப்பியவன் தன் வீட்டின் படுக்கை அறையில் மனைவியை பார்த்துவிட்டு. இந்த முறை ஆதி கன்னிப்பா தப்பிக்க முடியாது என்று ஒரு புன்னகையுடன் என்னிக்கொன்டான். பின் தன் வேளையை செயல்படுத்த தொடங்கினான்......
 

Geetha sen

Well-Known Member
அருமையான ஆரம்பம். ஆதிரையின் வாழ்க்கையில் என்ன நடந்தது. சுதாகர் ஏன் இப்படி பண்றான். Nice start sis:love::love::love:
 

MEGALAVEERA

Well-Known Member
Nice start
ஆரம்பத்திலேயே இந்த சுதாகர் இப்படி பிளான் பன்றான் இன்னும் என்ன செய்ய போறானோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top