தூரம் போகாதே என் மழை மேகமே!! - 9

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 9
main-qimg-624c51f7bbaee0b441e15b97c59d36e9-c.jpeg

அவனது இந்தச் செயலால் அதிர்ந்த ஆதிரை அவனையே விதிர்விதிர்த்து நோக்கினாள்.

பின் ஒருவாறு சமாளித்து , “ இல்லை சார். நீங்க உங்க கிராமத்திற்கு யாரும் வர முடியாது சொன்னீங்களா. என்ன கோட்டையா கட்டி வைத்திருக்கீறிங்க என்று எண்ணினேன். அது.. அதுதான் சிரிப்பு வந்துவிட்டது. Sorry சார்” என்றாள் ஆதிரை.

“இப்படிச் சிரித்து ஆண்களை இந்தப் பெண்கள் ஏமாற்றுகிறார்கள். அதற்கு நான் ஆளில்லை” என்று ஏளனமான புன்னகையுடன் தோளைக் குலுக்கினான் அர்ஜூன்.

அவனது வார்த்தைகளின் உள்ளர்த்தம் உணர்ந்த ஆதிரை ,” என்ன… என்ன சொன்னீங்க..” என்று அவனை எரித்துவிடுபவள் போல் பார்த்துக் கொண்டு தன் இருக்கையிலிருந்து எழுந்தாள்.

“நீ என்ன நினைத்தாயோ அதைத்தான் சொன்னேன். இல்லாமல் பின் இப்படி மயக்கிதானே MS படிப்பையும் முடிக்காமல் அவசரம் அவசரமாக ஒரு பிள்ளையையும் பெற்றிருக்கிறாய்” என்று அவளது கழுத்தையும் நெற்றியையும் பார்த்துவிட்டு, “பார்த்தால் திருமணம் ஆனது போல கூடத் தெரியவில்லையே. பிள்ளை மட்டும் எப்படி வந்தது” என்று ஏளனமாகக் கேட்டு சிரித்தான் அர்ஜூன்.

“என்னைப் பற்றியும், என் ராஜாவின் பிறப்பை பற்றியும்தான் உங்களுக்கென்ன சார் தெரியும். உங்கள் கிராமத்தில் வேலை செய்ய வருவதால் நீங்க பேசுரதெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருக்கனும்னு அவசியமில்ல. நீங்களும் வேணாம் உங்க வேலையும் வேணாம் என்றுவிட்டுப் போக எனக்கு எவ்வளவு நேரமாகும். ஏதோ சேகர் அங்கிள் சொன்னாருனுதான் உங்கட்ட பேச வந்ததே.” 'என் ராஜாவை பிரிந்திருக்கும் நிலை ஏற்பட்டு விடப் போகிறதோ என்று எண்ணியும்தான்' என மனதுள் எண்ணிக்கொண்டு தொடர்ந்தாள் ஆதிரை. "அரசு மருத்துவத்தில நல்ல விதமா பணி செஞ்சி தேவை படுறவங்களுக்கு உதவனும்னு தான் நான் அரசு மருத்துவ துறையிலே இருக்க ஆசை பட்டேன். ஆனால் இப்படி நீங்க பேசரதெல்லாம் நான் கேட்டுக் கொண்டு இருப்பதற்கு, இந்த வேலையை ராஜினாமா செய்துட்டு, ஏதாவது தனியார் மருத்துவ மனையில வேலைக்கு சேர்ந்துகலாம். “ என்று மூச்சு கூட விடாமல் பொரிந்து தள்ளிவிட்டு கோபத்தினால் உண்டான கண்ணீர் வெளிவருவதற்குள் , அவனது பதிலுக்கும் காத்திராமல், அவளுக்கென்று கொடுத்திருந்த அறையை நோக்கி விரைந்து நடந்தால் ஆதிரை.

‘எப்படியெல்லாம் பேசிவிட்டான். அவள் பணிபுரியும் கிராமப்புற மக்களோ அவர்களுக்குள்தான் அவளைப் பற்றி ஏதேதோ கதை பேசிக் கொண்டனர். அவர்களும் இப்போது அவளை எவ்வளவு மரியாதையாகப் பேசுகிறார்கள். ஆனால் இவனோ என் முகம் பார்த்தே என்னவெல்லாம் பேசிவிட்டான். ஒரு வேளை அவன் கிராமத்திற்கு போனால், என் ராஜாவிடமும் இது பற்றி ஏதேதோ சொல்ல மாட்டான் என்று என்ன நிச்சயம். கேட்பவர் மனம் புண்படும் என்ற எண்ணமே துளி கூட இல்லாமல் என்னவெல்லாம் பேசிவிட்டான். அவன் கடுவன் பூனையில்லை. ராட்ச்சஸன்.’ என அவளால் ஆனமட்டும் பொறுமிக் கொண்டே அந்த அறையிலிருந்த படுக்கையில் குப்புற படுத்து தலையணையை கோபத்தினால் உண்டான கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தாள் ஆதிரை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளது அண்ணன் நினைவு இப்போது அவளுக்கு வந்தது. ‘என் அண்ணன் என்னுடன் இருந்திருந்தால் இப்படிக் கண்டவனும் என்னைக் கேள்வி கேட்டிருப்பானா? ராஜாவும்தான் எங்கள் வீட்டு இளவரசனாக வளம் வந்திருப்பானே. அன்று அண்ணன் அண்ணியுடன் லண்டன் போகாமலிருந்திருந்தால் எனக்கு இந்த நிலை வருமா?’ என அவள் கோபத்துடன் , இழப்பின் நினைவும் ஒன்று சேர அவளால் பொறுக்க முடியாமல் தேம்ப ஆரம்பித்தாள் ஆதிரை.

மூன்று வருடத்திற்கு முன்னால் , சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வாரம் தவறாமல் அண்ணனோடு துள்ளி குதித்துக் கொண்டு சென்று வந்ததும் ஆதிரைக்கு நினைவு வந்தது. ‘அப்படிப் போன ஒரு நாள் சிலையோடு சிலையாக நின்றுக் கொண்டிருந்த அண்ணியை அண்ணன் பார்க்காமல் இருந்திருக்கக் கூடாதா? லண்டனிலிருந்து வந்திருந்த அந்தக் கோவிலுக்கு புதிதாக வந்திருந்த அண்ணியும் அண்ணனை நோக்கி வந்து அவரிடமே அந்தத் தல வரலாற்றைக் கேட்காமல் இருந்திருக்கக் கூடாதா? அதன் பின் இருவரும் காதலிக்காமல் இருந்திருக்கக் கூடாதா? அந்தத் திருமணம்.. அண்ணியின் குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு அவர்களுக்குத் திருமணம் நடக்காமல் இருந்திருக்கக் கூடாதா? எனக்கும் அண்ணியை மிகவும் பிடிக்காமல் இருந்திருக்கக் கூடாதா? அண்ணியின் வீட்டில் அந்த நேரத்தில் ஒருவர் இறக்காமல் இருந்திருக்கக் கூடாதா? எத்தனை கூடாதாக்கள் ஆனால் எல்லாம் எந்தவித தடங்களும் இல்லாமல்தான் நடந்துமுடிந்துவிட்டதே! இனி என் விதியை என்ன சொல்ல’ என்று எண்ணி கசப்பான புன்னகை புரிந்தாள் ஆதிரை.

(முன்று ஆண்டுகளுக்கு முன்பு…)

குழந்தையாக இருக்கும் போதே சுனாமியால் அவர்களது தாய் தந்தையரை இழந்ததாக அவளது அண்ணன் அரவிந்த கூறி ஆதிரை அறிந்திருந்தாள்.தெரிந்த உறவினர்கள் என்று யாரும் அவர்கள் அறியாமலே இல்லாமல் போனர். அவர்கள் பெற்றோர்களோடு கடலூரிலிருந்த அவர்கள் அந்த சுனாமிக்கு பின், உதவி புரியும் ஒரு ஆசிரமம் ஒன்றின் உதவியால் படித்து முன்னேறினர். ஆதிரை நினைவு தெரிந்ததில் இருந்து அவளது உலகில் உறவென்று இருந்தது அவளது அண்ணன் அரவிந்த் மட்டுமே!! ஆதிரையின் MBBS படிப்பு மதுரையில் இருக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்ததால் அரவிந்த் ஆதிரைக்காக மதுரையிலே பணி வேண்டுமென்று வேலை முயன்று வாங்கினான். அவனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப அகழ்வாராய்ச்சிக்கென்று மதுரையில் ஒரு பிரிவு இருந்ததால் அவர்களுக்கு வசதியாகப் போனது. ஆதிரையை விட ஆறு வயது மூத்தவனாக இருந்த அரவிந்த் , ஆதிரையைச் சிறு குழந்தையைப் போல எண்ணியே வளர்த்து வந்தான். அறியா பிள்ளையாகவே வளர்ந்த ஆதிரையும் , அண்ணனின் குடையில் அடைகாக்கப்பட்ட முயல்குட்டியை போல அரவிந்தையை சுற்றி சுற்றி வருபவளாக இருந்தாள்.

இவ்வாறாக ஆதிரையின் MBBS படிப்பு முடிந்து MS படிக்க வேண்டுமென்று அரவிந்திடம் ஆதிரை கேட்டிருந்தாள். ஆதிரைக்குச் சிதம்பரத்திலே MS படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆதிரையின் முதலாம் ஆண்டு MS படிப்பிற்காக அவளைச் சேர்த்துவிட்டு , ஆதிரைக்காகவே அரவிந்த அவளின் அண்ணன் மதுரை அகழ்வாராய்ச்சியிலிருந்து குறுகிய கால இடமாற்றால் வாங்கிக் கொண்டு ஆதிரையுடன் வந்திருந்தான். சிதம்பரம் நடராஜர் கோவிலின் மிக அருகில் இருந்தது அவனது ஆராய்ச்சிக் கூடம். அதனால் இருவருக்கும் வசதியாக இருந்த இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து இருவரும் தங்கிக் கொண்டு அரவிந்த் அவனது அகழ்வாராய்ச்சி நிலையத்துக்கும் , ஆதிரை அவளது மருத்துவக் கல்லூரிக்கும் சென்றனர். ஆதிரை home surgeon ஆக பணிபுரிந்து கொண்டே MS மகப்பேறு பிரிவில் படித்துக் கொண்டிருந்தாள்.
வாரம் தவறாமல் சனிக் கிழமையன்று சிதம்பரர் நடராஜர் ஆலயத்திற்குச் செல்லும் ஆதிரையும் அரவிந்தும் அன்றும் அவ்வாறே சென்றிருந்தனர். அப்போது ரிதிகா என்ற பெண் அங்கிருக்கும் ஒவ்வொரு சிலைகளையும் , தூண்களையும் கண அக்கறையுடன் வருடி கவனித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஆதிரைக்கு அவள்தான் தன் அண்ணனை மணக்கப் போகும் பெண் என்று தெரிந்திருக்கவில்லை. ரிதிகாவின் மென்மையான அழகில் ஆதிரை அவளையும் அறியாமல், எதையோ தேடுபவள் போல இருந்த ரிதிகாவிடம் சென்றாள். அவளை தொடர்ந்து அரவிந்தும் உடன் சென்றான்.

ரிதிகா பார்க்க மட்டும் அழகல்ல. அன்புடன் பழகுவதிலும் அழகு. அந்த அழகினால் , அவளுடன் பேசுபவர்களுக்கெல்லாம் அவளைப் பிடிக்காமல் இருக்காது. ஆதிரை மட்டுமென்ன விதிவிலக்கா என்ன? அவளுக்கும் ரிதிகாவை மிகவும் பிடித்தது.

சிதம்பரம் வரும்போதெல்லாம் ரிதிகாவும் ஆதிரையின் வீட்டுக்கு வராமல் போகவில்லை. ஆனால் ஆதிரையைப் போல ரிதிகாவை அரவிந்திற்கும் பிடித்திருந்தது , வெகுளியாக இருந்த ஆதிரைக்குப் பார்வைக்கு புரிந்திருக்கவில்லை. அரவிந்தும் ரிதிகாவும் வெளிப்படையாக ஆதிரையின் முன்பு பேசிக் கொள்ளவில்லையென்றாலும், அவர்களின் ஒவ்வொருமுறை சந்திக்கும்போது கண்கள் பேசிக் கொண்டன. இவ்வாறாக அரவிந்த்-ரிதிகாவின் காதல் வளர்ந்து கொண்டிருக்க ஆதிரையிடம் இனி மறைப்பது சரியாகாது என எண்ணி அரவிந்த் உண்மையைச் சொல்லி ரிதிகாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணினான்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ அப்போ குழந்தை ராஜா அரவிந்தனின் குழந்தையா?
அண்ணி ரிதிகா அர்ஜுனின் அக்காவா?
அப்போ ராஜா தன் அக்கா மகன்னு தெரிஞ்சுதான் ஆதிரைக்கு அர்ஜுன் வேலை கொடுக்கிறானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top