தூரம் போகாதே என் மழை மேகமே!! - 69

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



நடு இரவில் கண் விழித்த ஆதிரை, அர்ஜூனின் மார்பில் ஒட்டியப்படியே உறங்கிப் போயிருந்ததை உணர்ந்து இரவு எண்ண நடந்தது என்று நினைவுக்கு கொணர்ந்தாள். இனம்புரியாத அமைதி ஆதிரையின் உள்ளத்தில் நிறைந்திருந்தது. இப்படி அர்ஜூனின் கைகளுக்குள் இருக்கும் போதே உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை என்பது போன்ற ஒரு பிரம்மை ஏற்பட்டது. இருந்தும் இப்படியே அவன் கைகளுக்குள் இருக்கவும் நிலை உணர்ந்த பெண்மையின் நாணம் குறுகுறுத்தது. முகத்தை நிமிர்த்தி அர்ஜூனை பார்த்தாள். அர்ஜூனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது. அவனை விழிப்படைய செய்யாத வண்ணம் அவன் கைகளிலிருந்து மெதுவாக அவளை விடுவித்துக் கொண்டாள். அவளது அசையில் வெகு நேரம் திரும்பியே படுத்திருந்த அர்ஜூனும் அனிச்சை செயலாக கூரையை நோக்கி நிமிர்ந்து படுத்துக் கொண்டான்.


அவனையே அந்த விளக்கின் வெளிச்சத்தில் பார்த்திருந்தாள் ஆதிரை. நேரம் போவதே தெரியாமல் இருந்த ஆதிரை அவளையும் அறியாமல் அவனருகில் சென்று கண்களை மூடிக்கொண்டு அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள். பூனைப் போல அவள் செய்கையிருந்தப் போதும் , என்ன செய்ய அவளது தொடுகையில் அர்ஜூன் விழித்திட்டான். ஆதிரையின் விழிகளை மிக அருகில் நேருக்கு நேர் சந்தித்தான். எப்போதும் திருட்டுதனம் செய்யும் அர்ஜூனுக்கு போட்டியாக இன்று ஆதிரை போட்டியிட்டு திருட்டுதனம் செய்து அர்ஜூனிடம் மாட்டிக் கொண்டாள்.


அவளது செயலுக்கு விளக்கம் தருவதற்காக , “அ.. அர்ஜுன். அ..அது வ..ந்து" என்று அவன் விழியிலிருந்து தன் விழியை தாழ்த்தி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆதிரையின் இதழ்களை அர்ஜூனின் இதழ்கள் மூடியிருந்தது. இரண்டாமுறையாக ஆதிரை அர்ஜூனாள் ஆட்கொள்ளப்பட்டாள். மிரட்சியாக ஆதிரையின் விழிகள் அர்ஜூனின் விழிகளை சந்தித்தது. அவளை அப்படியே அள்ளி அவன் மீது போட்டுக் கொண்ட அர்ஜூனின் வெற்றுடலும் ஆதிரையின் அங்கங்களும் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டிக் கொண்டது. அர்ஜூனின் கைவிரல்கள் பெண்மையின் மென்மையை எழுப்பும் விதமாக ஆதிரையின் உடலெங்கும் தீண்டி ஆதிரையின் உடலில் தீ பரப்பியது. இவை அனைத்தும் இமைக்கும் நொடியில் நடந்திருந்தது. எதிர்க்கும் சக்தியற்று ஆதிரையும் அர்ஜூனின் செயலால் தன் வசமிழந்து அவன் கைகளில் நெகிழ ஆரம்பித்தாள். அந்த மின்னல் சில நிமிடங்களே என்பதுப் போல் அர்ஜூனின் கைகள் அசைவற்று ஆதிரையிலிருந்து விலகியது. மீண்டும் உறங்குவதுப் போல அர்ஜூன் பாசாங்கு செய்ய ஆரம்பித்தான் என்றுதான் சொல்ல வேண்டும்


ஆனால் இவை எதுவும் சட்டென உணர முடியாமல் அர்ஜூனால் ஆதிரை முழுதும் தன்வசமிழந்திருந்தாள். அவனிடம் தன்னை கண்ணாடியைப் போல காண்பித்தப்பின் அவனை எதிர்க்கும் எண்ணமற்று இருந்தவளின் மனதில் எண்ணற்ற கனவுகள் உருவெடுக்க ஆரம்பித்திருந்தது. அதனால் அர்ஜூன் விடுவித்த சில நிமிடங்கள் கழித்தே அர்ஜூனில் எந்த அசைவும் இல்லாததை உணர்ந்தாள். கண்களை விழித்து பார்த்தவளுக்கு ஆச்சரியமாகி போனது. அர்ஜூனின் மீது தான் படுத்திருந்தப் போதும் அர்ஜூன் உறங்கிக் கொண்டுதான் இருந்தது ஆதிரைக்கு எல்லாம் குழப்பமாகிப்போனது. அர்ஜூனின் தீண்டலால் உண்டான அதிர்வுகள் இன்னும் ஆதிரையின் உடலில் இருந்தது. ஆனால் அர்ஜூன் உறங்கி இருப்பதை பார்த்ததும் இதுவும் கனவா? என்று தவித்தாள். அவசரமாக அர்ஜூனிலிருந்து விலகி சுவரினை ஒட்டிய வண்ணம் நடுங்கியவிதமாக படுத்திருந்தாள். இது கனவல்ல என்பது ஆதிரைக்கு மீண்டும் மீண்டும் ஒலித்தது. தன்னை அர்ஜூன் எதனாலோ விலக்குகிறானோ என்று சந்தேகம் ஆதிரைக்கு வந்தது. என்னை முழுதும் ஏற்க முயன்றும் ஏற்க முடியாமலும் தவிக்கிறானோ என்று வெகு நாளாக மனதின் ஓரத்தில் இருந்த சந்தேகம் இந்த நிகழ்வுக்குப்பின் விஷ்வரூபம் எடுத்தது.


அப்படி அர்ஜூன் இருக்க கூடுமென்று நினைக்கும் போதே ஆதிரைக்கு வேதனையாகிப் போனது. அவளையும் அறியாமல் ஆதிரையின் விழிகள் ஈரமாகியிருந்தது. பின் சிந்தித்து அர்ஜூனுடன் இருக்க கூடிய தனிமையான் சூழ்னிலையை முடிந்த அளவு தவிர்த்து அவன் மனபோராட்டத்தை குறைத்திட வேண்டுமென்று தன் பருவ உணர்வுகளுக்கு கடினப்பட்டு தடைப் போட்டாள் ஆதிரை. அர்ஜூனிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கும் ஒரு பெரிய கண்ணீர் துளியை சிந்தி கண்களை மூடி தூங்க முயன்றாள்.


காலையில் அர்ஜூனே முதலில் விழித்திருந்தான். ஆதிரை எழுமுன்னரே bike எடுத்துக் கொண்டு கந்தனும் வந்திருந்தான்.


“என்ன மாமா, அக்கா இன்னமும் தூங்கிக் கொண்டிருக்காங்க.. “ என்றான் கந்தன்.


“இரவில் ஒழுங்காக தூங்கினாளோ தெரியவில்லைடா கந்தா.. எழுப்பிக் கொண்டு கிளம்பலாம். சென்னை வேறு போக வேண்டும். ஏற்கனவே தாமதமாகி போனது.” என்றான் அர்ஜூன்.


சொன்னதுப் போலவே ஆதிரையை கந்தன் எழுப்ப, கண் விழித்தவள் அர்ஜூனை நிமிர்ந்து பார்த்தவள் சட்டென முகம் தாழ்த்திக் கொண்டாள். பின் “தம்பி எப்போ வந்த?” என்று கேட்டுவிட்டு கட்டிலைவிட்டு இறங்கினாள்.


“இப்போதான் அக்கா.. இந்தாங்க இது லாவண்யா அக்கா கொடுத்தாங்க. காலில் இதனை இழுத்து கட்டிக் கொண்டாள் வலிக் கொஞ்சம் குறையுமாம். bike எடுத்து வந்துவிட்டேன். நாம் கிளம்பலாம்.” என்றான்.


“சரிடா தம்பி.. ஒரு நிமிடம்.” என்று சொல்லி அந்த bandage -ஐ பிரித்து காலில் கட்டிக் கொண்டு, வலி இருந்தும் அர்ஜூன் தூக்கிக் கொள்கிறேன் என்று சொன்னதை தவிர்த்து முகத்தில் முடிந்த அளவு வலியினை காட்டாமல் நடந்தே சென்றாள்.


அர்ஜூன் bike -ஐ ஓட்டிக் கொள்ள அவன் பின் கந்தன் அமர்ந்துக் கொள்ள ஆதிரை கடைசியாக அமர்ந்துக் கொண்டு மூவரும் வீடு வந்து சேர்ந்தனர். அதன் பிறகு அதிக நேரம் இருக்காமல் குளித்து முடித்துவிட்டு காலை உணவை முடித்துக் கொண்டு லாவண்யாவிடம் விடைப் பெற்றுக் கொண்டு சேகர், கந்தன் ஆதிரை மற்றும் அர்ஜுன் நால்வரும் வீட்டிலிருந்து கிளம்பினர். கிளம்பும் வரை அனைவரும் நேரமில்லாமல் வேலையாக இருந்ததால் ஆதிரையின் மாற்றம் அர்ஜூனை அந்த அளவு ஈர்க்கவில்லை.


கந்தனை அவன் பள்ளியின் விடுதியில் இறக்கியதும், “அங்கிள், கைகள் மிகவும் வலிக்கிறது. கொஞ்சம் ஓய்வெடுத்தால் பரவாயில்லைப் போல தோன்றுகிறது. நீங்க கார் ஓட்டிக்கிறீங்காளா?” என்று கேட்டான் அர்ஜூன். தன்னை அவ்வளவு தொலைவில் தூக்கி வந்ததால்தான் அவனுக்கு அந்த வலி என்பது ஆதிரைக்கு மன வருத்தமாக் இருந்தது. யாராக இருந்தாலும் வலிக்கதானே செய்யும். அர்ஜூன் மட்டும் இரும்பால் ஆன உடலா என்ன். என்று எண்ணினாள். இருந்தும் எதுவும் பேசினாள் இல்லை.


“ம்ம்.. சரி அர்ஜூன்… உறங்க வேண்டுமா ? அப்படி யென்றால் பின் இருக்கையில் அமர்ந்துக் கொள்" என்றார் சேகர்.


“ லேசாக களைப்பாக இருப்பதாக தோன்றுகிறது அங்கிள். நான் பின் இருக்கையில் அமர்ந்துக் கொள்கிறேன்.” என்று பின்னோடு இருக்கும் ஆதிரையை பார்த்து புன்னகித்தான். அவளுக்கு அவன் சொல்வது கேட்காததுப் போல் அவன்புரம் திரும்பாமல் ஜன்னலில் வேடிக்கைப் போல பார்த்திருந்தாள்.


“சரிப்பா.. “ என்று காரை ஓரமாக நிறுத்தி அர்ஜூன் பின் இருக்கைக்கு வரவும் ஆதிரையும் காரிலிருந்து இறங்கி, “அங்கிள் அப்போ நான் முன் இருக்கையில் வருகிறேன். முன்னிருந்து வேடிக்கைப் பார்க்க நல்லாயிருக்கும் போல தோன்றுகிறது" என்றாள். இதனை அர்ஜூன் எதிர் பார்க்கவில்லை போலும் ஆதிரையை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அவன் பார்வை ஆதிரையை தொடர்வதை உணர்ந்தப் போதும் அவனை பார்க்க ஆதிரைக்கு துணிவில்லை. ஆதிரையை மறுத்து பேசவும் யாருக்கும் தோன்றவில்லை.


“சரி ஆதிமா.. முன்னோடு உட்கார்ந்துக் கொள். அர்ஜூன் படுத்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்" என்றார் சேகர். அதற்கு பதிலாக புன்னகித்த ஆதிரை முன் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள பின் இருக்கையில் அமர்ந்த அர்ஜூன் சிரிது நேரத்தில் உண்மையில் உறங்கிதான் போனான் போலும் அசைவும் இல்லாமல் ஆழ்ந்த மூச்சின் சப்தம் கேட்டது.


“நல்லா களைப்பாகி இருப்பான் போல இருக்கு. நேற்று குடிலில் பாதுகாப்புகாக உறங்காமல் இருக்க வேண்டுமென்று சொன்னான். அதன் விளைவுதான் போலும்" என்று வெகுளியாக சொன்னார் சேகர்.


அவரது வார்த்தைகளின் பொருள் உணர்ந்த ஆதிரை, ‘ஆக நல்லிரவு நடந்தது வெறும் கனவல்ல. அர்ஜூன் உறங்கவே இல்லையென்றால் உண்மையாகதானே இருக்கும். ஆக அர்ஜூன் ஆதிரையை எதனாலோ முழுதும் ஏற்க முடியவில்லை. அது முன் ஜன்மத்தில் அவனை விட்டு சென்றதாக சொன்னானே அதனாலா? ‘ தனக்குள்ளே பல கேள்விகள் கேட்டு சிந்தனையில் ஆழ்ந்தாள் ஆதிரை.


அமைதியாக இருந்த ஆதிரையின் முகத்தை பார்த்து எதையோ உணர்ந்த சேகர், “என்ன ஆதிமா. ஏதோ பெரிய சிந்தனைப் போல தெரிகிறது. எதுவும் பேசாமல் எங்கோ பார்த்த வண்ணம் வருகிறாய்?” என்று கேட்டார் .


அவரது குரலில் நினைவுக்கு வந்த ஆதிரை, சிந்தனையையும் பேச்சையும் மாற்றி, “அது அங்கிள் ஒன்னுமில்ல . சிவராமன் தாத்தாவை பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தேன்.” என்றாள் ஆதிரை.


“அவரை பற்றி என்னமா. ?” என்று கேட்ட வண்ணம் வழி மீதே விழி வைத்து கேட்டார் சேகர்.


“அவரை பற்றிய உண்மை ஏற்கனவே அர்ஜூனின் அம்மாவுக்கு தெரியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.” என்றாள் ஆதிரை.


“என்ன உண்மை.. அவரைப் பற்றி அர்ஜூனின் அம்மா ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும்" என்று புதிராக உணர்ந்து கேட்டார்.


“அவர்தான் அங்கிள் அர்ஜூனின் அம்மாவின் அப்பா.. எதனாலோ அத்தையிடம் இந்த உண்மையை சொல்ல தயக்க படுகிறார். அதனோடு..” என்று பேச்சை பாதிலே நிறுத்தினாள் ஆதிரை.


“அப்படியா.. இது பற்றி எனக்கே தெரியாதேமா. அவர் சிவசக்தி அம்மாவின் அண்ணன் என்பதை தவிர அந்த ஐயாவைப் பற்றி பெரிதாக தெரியவில்லை. ஏன் சுமித்ராவிற்கு அவரை தெரியவில்லை. என்ன காரணமாக இருக்கும்? அதனோடு என்ன?” என்று ஆச்சரியம் குரலில் தெரிய கேட்டார்.


“ஆமாம் அங்கிள். அதனோடு என் அப்பாவின் அப்பாவும் அவர்தான். எனக்கு அர்ஜூன் அத்தை மகன். எங்கள் இருவருக்கும் பொதுவான தாத்தா அவர். என்ன காரணமாக இருக்குமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். எதுவாக இருந்தாலும் அவர் தயக்கம் அகன்று என் அத்தையிடம் உண்மையை சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றாலும் நான் அதற்காக சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.” என்று ஏற்கனவே யோசித்த ஒன்றை இப்போது சொன்னாள் ஆதிரை.


“ம்ம் அதுவும் அப்படியா.. கஜேந்திரனின் வாழ்விலும் குடும்பத்திலும்தான் எத்தனை புதிர்கள். எப்படியோ எல்லோரும் ஒன்றாக இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு. நல்ல வேளை உன்னை என்மகனுக்கு திருமணம் பற்றி நான் யோசித்தது நடக்காமலே போனது. அவனும் லண்டன்ல ஒரு பொண்ணை லவ் பண்ணி திருமணமும் பன்னிக்கிட்டான். அதனால்தான் யாரை பற்றியும் கவலையில்லாமல் கஜேந்திரனுடன் சுற்றிக் கொண்டு இருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக முடியும் ஆதிமா. எல்லாம் உன் கையிலே இருக்கு" என்று பொடி வைத்து சொல்வதுப் போல சொன்னார் சேகர்.


“ஒ உங்களுக்கு அப்படியொரு எண்ணமிருந்ததா? " என்று புன்னகித்து. "பார்ப்போம் அங்கிள். நீங்களும் இந்திரபிரதேஷுக்கு எங்களோடு வரீங்களா அங்கிள். என்னதான் சிவராமன் தாத்தா செய்கிறார் என்று" என்று பேச்சுனூடே கேட்டாள்.


“ஆமாம்மா. நாளையிலே சிம்லாவுக்கு direct flight இருக்கு. மூவரும் சிம்லா போனதும் , சனரி கிராமத்துக்கு ஊர் கட்டுப்பாட்டிலிருக்கும் குதிரை லாயத்துல குதிரையை எடுத்துக் கொண்டு போக வேண்டும். நாளை இரவுக்குள் வரச் சொல்லி சக்தியம்மா ஏற்கனவே சொல்லி அனுப்பினாங்க. இன்று நன்றாக ஓய்வெடுத்துக் கொள் ஆதிமா.. நாளை இரவுதான் அம்மாவாசை நாள். நீ விழித்திருந்து சந்திரகுளிர் குகை கோவிலுக்கு போக வேண்டும். இந்த முறை ஊர் மக்கள் அனைவரும் உன்னோடு வருவார்கள் என்று சக்தியம்மா சொன்னாங்க. அந்நியனாக நான் மட்டும்தான் உங்களோடு வர போகிறேன்.” என்று புன்னகித்தார் சேகர்.


“நாளையே வா அங்கிள். “ என்று ஆச்சரியம் காட்டி கேட்டாள் ஆதிரை.


“ஆமாம்மா. அந்த ஊர் முறைப்படி மீண்டும் ஒருமுறை உனக்கும் அர்ஜூனுக்கும் திருமணம் நிகழுமென்பது என்னுடைய யூகம். அதனால்தான் அங்கு எல்லோருக்கும் அவ்வளவு வேலை. உன்னை பார்க்க கூட வராமல் அவர்கள் வேலையாக இருக்கிறார்கள்" என்று தன்னிலை விளக்கம் போல அவர்களின் நிலைக்கான காரணம் சொன்னார்.


“புரிகிறது அங்கிள். “ என்று சொல்லியவளுள் மனம் லேசாகி வேறுபுரம் எண்ணத்தை திருப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் ஆதிரை.


சென்னையும் வந்தது. ஆதிரை அர்ஜூனை விழி நிமிர்த்து பார்க்காமல் தவிர்ப்பது தெளிவாகவே அர்ஜூனால் இப்போது உணர முடிந்தது. அர்ஜூன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் பாதத்திலே கண்ணாயிருந்த ஆதிரை இரண்டடி பின்னோக்கி நகர்ந்தாள். என்ன ஏது என்று கேட்டும் ஆதிரை ஒன்றுமில்லை. லேசாக களைப்பாக இருக்கிறது என்று வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு தள்ளியே நில் என்பதுப் போல் அவளது செய்கைகள் இருந்தது. அவளை உணர்ந்த அர்ஜூன் அவளுக்கு சங்கடம் உருவாகும்விதமாக எதையும் ஏற்படுத்தாமல் தள்ளியே நின்று பேசினான்.


சேகர் சொன்னதுப்படி அடுத்த நாள் காலையிலே விமான நிலைத்துக்கு போன ஆதிரைக்கு அவளை யாரோ பின் தொடர்வதுப் போன்ற உணர்வு ஏற்ப்பட்டது. அது குறித்து அர்ஜூனிடம் சொல்ல எண்ணி தயக்கம் கொண்டு அமைதியாகிப் போனாள்.


flight -ல் அருகருகே அர்ஜூனின் அருகில் அமர்ந்திருந்தப் போதும் வேண்டுமென்றே அர்ஜூன் இருக்கும் புரம் திரும்பாமலும், கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்தை பிரித்து ஆர்வமாக படிப்பதுப் போல் அதில் ஆழ்ந்தாள். அர்ஜூனும் அவசயமானவற்றிற்கு தவிர அவளிடம் எதுவும் பேசவில்லை. ஆதிரையின் ஒதுக்கத்தை முழுதும் உணர்ந்த அர்ஜூன் , அவளாக பேச தயக்கம் விலக நேரம் கொடுக்க எண்ணினான். சிம்லாவிலிருந்து குதிரைலாயத்திற்கு போக ஒரு கார் வந்திருந்தது. அதிலே போய் சேர்ந்த மூவரும் குதிரையில் கிளம்ப ஆயுத்தமாகினர்.


பலக்கமற்ற சேகரின் பின்னோடு ஒருவர் அமர்ந்துக் கொண்டு ஏற்கனவே அவர்களது குதிரை இந்திரபிரதேஷ் பள்ளத்தாக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தது. ஆதிரையினுள் இனம் புரியாத ஆர்வமும் பரவசமும் கூடியது. இந்திரபிர்தேஷ் எப்படி இருக்குமென்று கற்பனையில் பலவற்றை உருவாக்கியிருந்த ஆதிரை அதனை இன்று நேரில் காண போகிறோமென்று உற்சாகம் பிறந்திருந்தது.


தலையில் ஒரு தொப்பியை போட்டுக் கொண்டு ஆதிரையின் தலையின் மற்றொரு தொப்பியை போட்டுவிட்டு ஆதிரையை அர்ஜூன் குதிரை மீது ஏற்றிவிட்டான். குதிரையில் ஏறி பலக்கமில்லாததால் ஆதிரையினுள் அதற்கும் சேர்த்து புதுவித உற்சாகம் உதித்தது. ஆனால் அவள் பின்னோடு அர்ஜூன் அதே குதிரையில் ஏறுவதை உணர்ந்து பதற்றமுடன், “ நீங்களும் இதே குதிரையிலா?” என்று ஆச்சரியமுடன் கேட்டாள்.


“ஆமாம்.. ஏன் என்னோடு ஒன்றாக குதிரையில் வர தயக்கமா?” என்று கேட்ட வண்ணம் ஏறி அமர்ந்து ஆதிரையின் இடையினை தழுவி குதிரையின் மூக்கினாங்கயிற்றை இருப்புரமும் ஒரு சேர தன் இரு கைகளில் பிடித்துக் கொண்டு குதிரைக்கு புரியும் விதமாக குரல் கொடுத்தான்.


“அதற்கில்லை. தனியாக வரலாமென்று நினைத்தேன்.” என்று தயக்கமாக பதில் சொன்னாள். அவனை ஒருமாதிரியாக பார்த்த அர்ஜூன்.


“குதிரை ஓட்ட தெரியுமா?” என்றான் அர்ஜூன்.


“இல்லை. நீங்க முன்னால் போனால் இந்த குதிரை உங்க குதிரையை பார்த்து வந்துவிடாதா? “ என்று முட்டாள்தனம் என்று தோன்றிய போதும் கேட்டாள்.


அதற்கு பலமாக சிரித்த அர்ஜூன், “ வரும் வரும் நன்றாக வரும். நாளை இரவுதான் நீ இந்திரபிரதேஷ் வருவாய். இல்லையென்றால் காட்டிலே காணாமல் போவாய். “ என்று உரக்க சொன்ன அர்ஜூன் , பின் குரல் தணிந்து அவள் காதினருகில் வந்து , “என்னோடு வர விருப்பமில்லையென்றால், இதோ இவர் என்னைப் போல உன்னை பிடித்துக் கொண்டு இந்திரபிரதேஷ் வந்துவிடுவார். சரியென்றால் சொல் , உன்னை அவருடன் வர சொல்லிவிட்டு நான் கிளம்புகிறேன். ஆனால் தனியாக உன்னை அனுப்புவதில் எனக்கு உடன் பாடில்லை"யென்றான் அர்ஜூன்.


அர்ஜூன் சொல்லியதில் , அங்கு குதிரையை பிடித்துக் கொண்டு நின்றிருந்த பெரியவரை பார்த்தாள் ஆதிரை. எனக்காக அவர் வேறு கஷ்டபடவேண்டுமா. அர்ஜூந்தான் ஏற்கனவே இந்திரபிரதேஷ் போகிறானே. பேசாமல் அவனுடன் போவதே மேல். தேவையில்லாத சிரமத்தை தவிர்க்ககூடியதாக இருக்கும். என்று மனதுள் பலதும் எண்ணி, “இல்லை பரவாயில்லை. உங்களுடனே வருகிறேன். எவ்வளவு நேரம் ஆகும்.” என்று கேட்டாள் ஆதிரை.


“வேகமாக சென்றால் 30லிருந்து 40 நிமிடத்தில் போய்விடலாம். மெதுவாக என்றால் ஒரு மணி நேரமாவது ஆகும். உனக்கு வேகமாக போவதில் கஷ்டமில்லையே" என்று பதிலும் கேள்வியுமாக சொன்னான் அர்ஜூன்.


மனதிலே கணக்குப் போட்ட ஆதிரை, “வேகமாகவே போகலாம்" என்று சொல்லிவிட்டு குதிரையின் திமிலை முன்னோக்கி பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.


அவள் அமர்ந்திருப்பதை பார்த்து அங்கிருந்த பெரியவர் சிரித்து, “அம்மா.. திகேந்திர தம்பியின் மீது சாய்ந்துக் கொண்டு அமருங்கள். குதிரை கீழ் நோக்கி போகும் போது அதற்கு எதிர்புறமாக நிமிர்ந்துக் கொள்ள வேண்டும். மேட்டில் ஏறும் போதும் முன்புறம் குனிந்தும் அமர்ந்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குதிரை நடுனிலை தவறி கீழே விழுந்துவிடுவீர்கள்" என்று குதிரையை மலை சரிவுகளில் பயன்படுத்தும் முறைக்கான அடிப்படையை சொன்னார்.


“ச.. சரிங்க தாத்தா.” என்றவள் அர்ஜூனின் மீது சாய்ந்துக் கொண்டாள். அர்ஜூன் அவள் வயிற்றில் கையை வைத்து அவள் வசதியாக அமர உதவி செய்தான்.


ஆதிரை வேகமென்று சொன்னாள்தான். ஆனால் இவ்வளவு வேகமென்று உணரவில்லை. குதிரையின் வேகத்தில் விழுந்துவிடாமல் அர்ஜூனின் phant – ஐ இருப்புரம் பிடித்துக் கொண்டாள். குதிரை விரைந்து சென்றது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top