தூரம் போகாதே என் மழை மேகமே!! -14

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 14

அர்ஜூனுடன் நடந்தபடி ஆதிரை, “சார் எவ்வளவு தூரத்தில் அங்கிளு,ம் ராஜாவும் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?” என்று அவனிடம் கேட்டாள்.

“ம்ம்...” என்றவன், “ இங்கிருந்து பைக்கில் சென்றால் ஒரு 20 நிமிடத்தில் சென்றுவிடலாம். ECR சாலையில்தான். ஏன் கேட்கிறாய்?” என்றான் அர்ஜூன்.

‘என்ன பைக்கிலா!?’ என யோசித்தவள், சிறிது தயங்கி நிற்க அர்ஜூனின் phone அடித்தது. Phone -ஐ எடுத்தவன், “ம்ம் சொலுங்க அங்கிள். நாங்க கிளம்பிட்டோம்?! இன்னும் 20 நிமிசத்துல அங்க இருப்போம். ஓ அப்படியா.. சரி சரி நாங்க சீக்கிரமாக வருகிறோம்.” என்றுவிட்டு வைத்துவிட்டான். அடுத்தமுனையில் என்ன பேசினார்கள் என்று புரியாமல் இல்லை.

அவனது முகபாவனையும் பேச்சில் காட்டிய அவசரம் ஆதிரைக்கு உருத்த , “ என்ன?.. என்னாச்சு?” என ஆர்வமும் , சிறிது அச்சமுமாகக் கேட்டாள்.

“ ஒன்னுமில்ல. ஏனோ அங்கிள் சீக்கிரமாக வரமுடியுமா? என்று கேட்டார். அவர்களாக வர 1 மணி நேரத்திற்கும் மேலாகக் கூடும். அதனால் நாங்களே சீக்கிரம் வருகிறோம் என்று வைத்துவிட்டேன்.” என்றான் அர்ஜூன்.

“ஓ " என்றவள் "சீக்கிரமாகப் போக முடியுமா?” என்று தாயின் பரிதவிப்பு முகத்தில் தெரிய கேட்டாள்.

“கவலை வேண்டாம். உட்கார் போகலாம். பேசிக்கொண்டிருக்க நேரமில்லை" என பைக்கை start செய்து கொண்டே கேட்டான் அர்ஜூன்.

“ம்ம்" என்றவள் அவனிடம் மேலும் பேசாமல் பைக்கில் அமர்ந்தாள். ‘3 வருடங்களுக்கு முன் அவள் அண்ணன் அவளைக் கல்லூரியில் தினமும் இப்படி பைக்கில் அழைத்துச் செல்வான்' என நினைத்தாள். அவள் கண்கள் லேசாக ஈரமாவதை உணர்ந்த ஆதிரை. ‘என்ன இது இன்று இத்தனை முறை அண்ணின் நினைவு வருகிறது. ஏன் என் மனம் இழந்த ஒன்றை எண்ணி இப்படித் தவிக்கிறது. இந்த தவிப்பில் ராஜாவையும் மறந்தோமே! காலை ஒரு டம்ளர் பால் மட்டுமே குடித்திருந்தான் ராஜா.. பசித்தாங்க மாட்டானே. இந்த அங்கிளும் என்னிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல் எவ்வளவு தொலைவு அழைத்துச் சென்றிருக்கிறார். ஏதாவது சாப்பிட்டானோ! இல்லையோ! இந்தக் கடுவன் பூனை கூட ஏதோ theme park என்றதே! பசியோடு அங்கே விளையாடி இன்னும் சோர்ந்திருப்பானே என் ராஜா!’ என மனம் அலைகழிந்தவளாக சிந்தனையிலே பைக்கில் அமர்ந்திருந்தாள். அவளையும் அறியாமல் அவள் அண்ணனின் தோளில் கை வைத்துப் போவது போல அர்ஜூனின் தோளில் எப்போது அவள் கை வைத்தாள் என்று அவளுக்குமே தெரியவில்லை.

அவள் எண்ண அலைகளை “இதோ வந்துவிட்டோம்!” என்ற அர்ஜூனின் குரலில் உடைத்தது. சுய நினைவுக்கு வந்தவள், சட்டென அர்ஜூனின் மீதிருந்த தன் கையை எடுத்தவள் ‘அச்சோ இவன் மீதா கை வைத்து வந்தோம். எதுவும் என்னைப் பற்றி தெரியாமலே வாய்க்கு வந்தவையெல்லாம் பேசியவன், இது பற்றி என்னவெல்லாம் பேச போகிறானோ!’ என அஞ்சினாள் . இருந்தும் ராஜாவின் நிலை எண்ணி கவலை மேலிட வேறேந்த எண்ணத்தையும் வளரவிடாமல் “ வந்துவிட்டோமா! எங்கே ? எங்கே என் ராஜா ?” எனத் தவிப்புடன் கண்களால் சுற்றி சுற்றி அலை பாய்ந்தாள்.

“உள்ளே இருப்பாங்க. என்னுடன் வா. ticket வாங்கிக் கொண்டு போக வேண்டும். ஏதோ Robo car section -ல இருக்கிறதா அங்கிள் சொன்னார்.” என்றபடி , அவளது கைகளை பற்றி வேகமாக அழைத்துச் சென்றான் அர்ஜூன்.

“ஓ"… என்றவள். அவனது கைகளிலிருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டவள் அவன் ஏதாவது கேட்பதற்குமுன், “ time என்னாகிறது?” என்றவாறு தன் கைக்கடிகாரத்தை பார்ப்பவள் போல் சைகை செய்தாள். அந்தச் சமயத்தில் சமாளித்த போதும் , ‘ என்ன திமிர் இவனுக்கு..!! இவனுடன் வருகிறேன் என்றால் இவனுக்குச் சொந்தமென்று அர்த்தமா? எவ்வளவு உரிமையா என் கையை பிடித்து அழைத்துச் செல்கிறான்' என மனதுள் கறுவினாள். ‘இங்கே உரிமை மீறல் நடக்கிறது , இவன் இருக்குமிடம் சென்றால் இன்னும் என்ன என்ன நடக்குமோ. இது சரியாகாது. அந்த வேலை வேண்டாமென்று அங்கிளிடம் சொல்லிவிட வேண்டும்' எனத் தீரமாக முடிவெடுத்துவிட்டாள் ஆதிரை.
டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றதும் , சில நிமிடங்கள் நடந்தனர். ஆதிரைக்கு ராஜாவின் முகத்தியே எந்தக் குழந்தையை பார்த்தாலும் தோன்றியது. “ அதோ இருக்கிறார்கள்" என்று அர்ஜூன் சொன்ன நிமிடம் ஆதிரை ஓட்டமும் நடையுமாக ராஜாவை நோக்கி நடந்தாள். அதுவரை தன் அழுகையை அடக்கி வைத்திருந்த ராஜா , அவள் ஆசை அம்மாவைக் கண்டதும் தேம்பிக் கொண்டே , "அம்மா" என்று சேகர் அங்கிளின் கையிலிருந்து நழுவிக்கொண்டு ஆதிரையை நோக்கி ஓடினான்.

அவனைத் தூக்கி அணைத்துக் கொண்ட ஆதிரை, அவள் கவலையை மறைத்து, “என்ன கண்ணா? என்ன ஆச்சு. ஏன் அழுகிறீங்க. அம்மா வந்துட்டேனுள்ள. அழுக கூடாது. பாரு அழுகிற ராஜாவ எல்லாரும் பாக்கிறாங்க. நீங்க சமத்துதானே அழுக கூடாது. அம்மா வந்துட்டேனுல்ல. அழுக கூடாது கண்ணா!” என்று ராஜாவின் முகத்தைத் துடைத்த வண்ணம் பேசினாள்.

“அம்மா.. அம்மா...” என தேம்பிக் கொண்டிருந்த ராஜா, ஆதிரையின் அரவணைப்பில் கொஞ்சம் சாந்தம் அடைந்தான். பின், “அம்மா பூ...வா...” எனப் பசிக்கிறது என்பது போல வாயைத் திறந்து சைகை செய்தான்.

பசித்த குழந்தையை கண்டதும் ஆதிரைக்கு சேகர் அங்கிளின் மீதே கோபம் வந்தது.தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இவ்வளவு தூரம் எதற்காக அழைத்து வந்தார்' என் கேட்டுவிட துடித்தாள். ஆனால் பசியில் இருக்கும் ராஜாவைக் கவனிக்க வேண்டுமென்று அருகிலிருந்த புல்வெளியில் தன்னோடு கொண்டு வந்திருந்த கைப்பையிலிருந்து ஒரு துண்டு துணியை விரித்து அதில் அமர்ந்தாள். ராஜாவை அதில் அமரச் செய்து , எடுத்து வந்திருந்த பால் கலந்த சாதத்தினை எடுத்து ராஜாவிடம் தந்தாள். பசியோடு இருந்த ராஜா, அம்மா காணாமல் மிகவும் தவித்திருந்தான். வழக்கமாகத் தானே சாப்பிடுபவன், “ அம்மா, ஆ… ஆ…" என தன் பிஞ்சு வாயைத் திறந்து ஊட்டி விடும்படி கேட்டான். ராஜா தான் இல்லாமல் மிகவும் கவலையுற்றிருப்பதை உணர்ந்த ஆதிரையின் , கண்கள் ஈரம் பணித்தது. “ அம்மா ஊட்டி விடுரன் கண்ணா. நீங்க சமர்த்தா சாப்பிடனும் " என்றவாறே ராஜாவிற்கு உணவினை ஊட்டிவிட்டாள் ஆதிரை.

பசியாறிய ராஜா , சில நிமிடங்கள் அவன் இந்த theme park -ல் கண்டவற்றைப் பற்றியும் அவன் விளையாடியவற்றைப் பற்றியும் பேசிக் கொண்டே சிறிது நேரத்தில் ஆதிரையின் மடியிலே உறங்கியும்விட்டான். 3 மணி நேரப் பிரிவையே என்னால் தாங்க முடியவில்லையே. 2 வருடத்திற்கு முன் இவனைத் துறக்க இருந்த தன் மடத்தனத்தை என்னவென்று சொல்வது! ஒருவேளை அவன், அவளது இந்த நிலைக்குச் சொந்த காரன், அன்று என்னிடம் phone – ல் 'எனக்கும் அந்தக் குழந்தைக்கும் சமந்தமில்லை. குழந்தை அது இதென்று எனக்கு இனி phone செய்தால் மரியாதை இருக்காது' என்று சொல்லாமல், ‘ குழந்தையை என்னிடமே ஒப்படைத்துவிடு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தால் என்னவாகிருக்கும். யாருமற்ற அனாதை போல் இன்று இறந்திருப்பேனோ! என் கண்ணா! என் அண்ணனுக்கும் மேலான துணை நீதானடா!’ என்று தாய்மையின் தாபத்தில் , தன் மீது உறங்கி கொண்டிருந்த குழந்தை ராஜாவின் தலை முடியை லேசாகக் கோதியபடி பல நிமிடங்கள் அமர்ந்திருந்தாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
என்னதான் ராஜா அவங்க வீட்டுக்கு
வாரிசு கஜேந்திரனின் பேரன்
என்றாலும் சேகர் செய்தது தப்பு
சின்னக் குழந்தைக்கு பசிக்காதா?

ஆதிரையிடமிருந்து ராஜாவைப் பிரிக்கணும்ங்கிறதுக்காக குழந்தையைப் பசியோடு இருக்க விடலாமா?

ஆதிரை பாவம் ரொம்பவே குழப்பத்தில் இருக்கிறாள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top