தூரம் போகாதே என் மழை மேகமே!! - 10

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 10

இவ்வாறாக அரவிந்த்-ரிதிகாவின் காதல் வளர்ந்து கொண்டிருக்க ஆதிரையிடம் இனி மறைப்பது சரியாகாது என எண்ணி அரவிந்த் உண்மையைச் சொல்லி ரிதிகாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணினான்.

அப்போது அரவிந்த ஆதிரையிடம் ஒரு கடலின் நீலநிறத்தில் கல் பதித்த கழுத்தாரத்தை அவளிடம் காண்பித்து , “இதனை நம் அம்மா உன்னிடம் கொடுக்க சொன்னார்கள் ஆதி " என்றான்.

“என்ன அண்ணா. ரொம்ப அழகாக இருக்கு. இவ்வளவு நாள் என்னிடம் நீ ஏன் இதனைச் சொல்லவே இல்லை. “ என்று தன் கழுத்தில் வைத்து அவள் ஆசை அண்ணனிடம் , “எப்படி இருக்கு அண்ணா” என்றாள் ஆதிரை.

“அழகாக இருக்கு ஆதி. உன் பால் வண்ண மேனிக்கு அருமையாக பொருந்தி உனக்கு மேலும் அழகு சேர்க்கிறது” என்றான் அரவிந்த்.

“ஏன்னண்ணா, என்னிடம் இதனைப் பற்றி சொல்லவில்லை” எனச் செல்லம் கொஞ்சும் மொழியில் கேட்டாள் ஆதிரை.

“அது அம்மாவின் கட்டளை. எனக்குத் திருமணத்திற்கு நாள் குறிக்கும் போது இதை உன்னிடம் தர வேண்டுமென்று இந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள்.” என்றான் அண்ணன்.

“என்ன கடிதமா!. “நம் அம்மாவின் கையெழுத்து இப்படிதான் இருக்குமா அண்ணா? ” அவனிடமிருந்து கடிதத்தை வாங்கி ஆதிரையும் ஒருமுறை படித்தாள்.

ஆதிரை கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் போதே"இது அபூர்வமான necklace ஆதிமா. என்னோட அகழ்வாராய்ச்சியின் போது இந்த nceklace -யும் வேடிக்கை போல ஆராய்ந்து பார்த்தேன். நான் கொஞ்சம் அதிர்ந்தே போனேன். இதுபோல இந்தக் கால நகை செய்பவர்களால் செய்யமுடியாதது. என்னுடை ஆராய்ச்சிபடி இது கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இது எப்படி அம்மாவின் கைக்குள் வந்தது என்று எனக்குப் புரியவில்லை. இருந்தும் அவர்கள் இது உன்னுடையது என்றும் இதனை நீ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் சொன்னார்கள். இதன் அழகு உன் கழுத்தில் அணியும்போது மட்டுமே தெரியும் என்றும் மற்ற எந்தப் பெண்ணுக்கும் இந்த நகை பிடிக்காது என்றும் புதிர் போலச் சொன்னார்கள். வேடிக்கையாக இல்லை. நகையை விரும்பாத பெண்கள் இருக்கமுடியுமா!?” எனச் சிரித்தான் அரவிந்த்.

“அட போ அண்ணா" என்றவள் சட்டன நிறுத்தி, “உன்னோட திருமணத்தின் போதோ! இல்லை என்னுடைய திருமணத்தின் போதோ என்னிடம் தர வேண்டுமென்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் இப்போது இதற்கென்ன அவசியம் ஏற்பட்டது அண்ணா.எனக்கு என் படிப்பு முடிந்ததும்தான் திருமணமென்று நான் முன்பே சொல்லிவிட்டேன். அப்படியென்றாள்!!” என ஆச்சரித்துடன் கேட்டாள் ஆதிரை.

“ஆமாம் ஆதிமா. நீ நினைப்பது சரிதான். எனக்கு நம் வீட்டுக்கு இந்த ஒரு மாதமா அடிக்கடி வரும் அந்த பொண்ணு ரிதிகாவ ரிதிகாவ புடிச்சிருக்கு. உன்னிடம் எப்படிச் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நம் அம்மா சொன்னது எனக்கு நினைவு வந்தது. அம்மா சொன்னதையும் சொல்லிவிட்டேன். ரிதிகாவை திருமணம் செய்யலாம் என நினைத்திருப்பதியும் உன்னிடம் சொல்லிவிட்டேன்” என ஒருசேரச் சொல்லி முடித்துவிட்டு ஆதிரையின் மனநிலை அறிய அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.

“சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்ற ஆதிரை, அண்ணா அந்த லண்டனிலிருந்து வந்ததா சொன்னாங்களே , நம்ம வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போனாங்களே அவங்களா ணா?!” என ஆச்சரியமாகக் கேட்டாள் ஆதிரை.

“ஆமாம். அவளேதான். அவளது ஒருசில செயல்களால் பெற்றோரில்லாத உன்னையும் அவள் நன்றாகப் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையே அவள் மீது என்னுடைய ஈர்ப்பு அதிகமாகிவிட்ட்தம்மா. உன்னோடு இருப்பதும் அவளுக்கு மிகவும் பிடிக்கிறது. அதனால்…” என இழுத்தான் அண்ணங்காரன்.

இமைகள் படபடக்க அரவிந்தின் இந்த புதுவித முகத்தைப் பார்த்தாள் ஆதிரை. உடனே, “ அண்ணா, அண்ணி எப்போ நம்ம வீட்டுக்கு அண்ணியா வர போராங்க” எனக் குறும்பு சிரிப்புடன் கேட்டாள் ஆதிரை.

ஆதிரையின் பதிலுக்கா காத்திருந்த அரவிந்த் அவசரமாக “ நீ பார்த்த பார்வையில் உனக்கு ரித்திய பிடிக்கலயோனு ஒருநொடி கலங்கிட்டேனம்மா” என்றான்.

உடனே சிரித்த ஆதிரை, “ அது எப்படிண்ணா உனக்கு பிடிச்சவங்க எனக்கு பிடிக்காமல் போக முடியும். அதோட ரிதிகா.. sorry sorry அண்ணியோட மென்மையான் அழகும் , அடக்கமும் , அன்பும் நிறைந்த குணமும் , நம்ம ஊர்லே வளர்ந்த சில பெண்கள்ட்ட கூடப் பாக்க முடியாது அண்ணா. பழகிய பிறகும் அண்ணிய பிடிக்கலனு யாரவது சொன்னா, அவங்க கண்டிப்பா நல்ல குணம் இருக்கிறவங்களா இருக்க முடியாது. என் அண்ணி சொக்க தங்கமாக்கும் ” எனப் பெருமையாக சொன்னாள்.

“ஹப்பா , இப்போதான் நிம்மதியா இருக்கு ஆதிமா. இத ரிதிகாட்ட இப்பவே சொல்லனும். “ என சொல்லிக் கொண்டே phone – ஐ எடுத்துக் கொண்டு எழுந்து சென்றான் அரவிந்த்.

அரவிந்த் திரும்பி வரும் போது ஆதிரை அந்த நீலக்கல் பதித்த நகையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் வந்ததும் , “ அண்ணா . இந்த நகையை எனக்கு தரனும்னு இல்லனா. அண்ணிக்கே கொடுக்கலாம். இவ்வளவு நாள் இது இருப்பது கூட எனக்குத் தெரியாதுதானே. இப்போதேன்” எனக் கேள்வி கேட்டாள் ஆதிரை.

“ஆதிமா. அப்படிச் சொல்லாதே. நம் அம்மா இதை உன்னைத் தவிர வேறு யாருக்கும் தரக் கூடாது என்றார்கள். மற்றவர்களுக்கு இந்த நகையின் மதிப்பு தெரியாது என்றும், இதனை யாரும் விரும்ப மாட்டார்கள் என்றும் கூறினார்கள். உன்னிடம் சொல்ல என்ன!! உன்னுடைய MS இந்த வருடப் படிப்பிற்கு கொஞ்சம் பணம் குறைவாக இருந்தது. அதனால் இந்த நகையை அடகு வைக்க எடுத்துச் சென்றேன். அவன் இந்த நகையைப் பார்த்துவிட்டு இது தகரம் போலப் பார்க்க தெரிகிறது என்றுவிட்டான். அதனோட இது ரொம்ப துருப்பிடித்தது போல இருக்கு என்றான். நீயே சொல்லு ஆதி , இந்த necklace – ஐ பார்த்தாள் துருப்பிடித்ததுப் போலவே இருக்கிறது.”

அரவிந்த் சொல்வதையே பார்த்திருந்த ஆதிரை, “ இது எப்படி அண்ணா துருபிடித்ததாக இருக்க கூடும். பாருங்க எவ்வளவு அழகாக மின்னுகிறது" என அவளது கழுத்தில் வைத்து காட்டினாள்.

“ம்ம்.. எனக்கும் அழகாகத் தெரிகிறது. ஆனால் அடகு கடையில் சொன்னது நேருக்கு மாறாக இருந்தது. அதனாலே இதனை ஆராயும் ஆர்வம் எனக்கு வந்தது. அதனால்தான் சொல்கிறேன். இது அபூர்வமான நகை. உன் கழுத்திலிருக்கும் போது இது இன்னும் ஒளி பெருவதை என்னால் உணர முடியுது" என்றான் அரவிந்த்

“எனக்கு ஒன்றுமே புரியவில்லை அண்ணா. ஏன்னண்ணா இதெல்லாம்” என்று சிணுங்கினாள் தங்கை.

“ அது…!” என யோசித்தவன் " எதையோ மறைப்பவன் போல பின் ,” எனக்கும் தெரியல மா. இது ஒரு பொக்கிஷம் போல நீ பாதுகாக்க வேண்டும். இது உன்னிடம்தான் இருக்க வேண்டுமென்பது அம்மாவின் ஆசை. அந்தக் கடவுளின் ஆசை” என்றான் அரவிந்த்.

“ஓ.. சரி அண்ணா” என்று அந்தக் கடிதத்தை மீண்டும் பார்த்தவள், அவள் ‘அம்மாவின் கையெழுத்து எவ்வளவு அழகாக இருக்கிறது?’ என அவளது கைகளால் வருடினாள் ஆதிரை. பின் “எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அண்ணன் சொல்வதை கேட்கிறேன்” எனக் கண்கள் சிமிட்டிவிட்டு அவளது கொஞ்சும் புன்னகையால் கூறினாள் ஆதிரை.

அதன்பிறகு ரிதிகாவும் ஆதிரையிடம் நேரிடையாக வந்து பேசி திருமண நாளும் குறித்தது, இன்று நடந்தது போல ஆதிரையின் மனக் கண்ணில் தெரிந்தது.

(இப்போது…)

இவ்வாறாக இருந்த ஆதிரையின் எண்ணப் போக்கை உடைக்கும் விதமாக , அவளது அறைக் கதவு பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. மனச்சோர்வால் எழ மனமற்று கிடந்தவள் , மெதுவாக எழுந்து கதவை நோக்கித் தள்ளாடி நடந்து சென்றாள். அப்போது அந்த அறையின் கதவை வெளிப்புறமாக யாரோ சாவிப் போட்டு திறக்கும் விதமாகச் சப்தம் கேட்டு கொஞ்சம் திகைத்தாள்.
 
Last edited:

Saroja

Well-Known Member
ஆராய்ச்சி செய்து இருக்கிறான்
நெக்லஸ் பத்தி
வேற தகவல்கள் இருக்கிறதா
மறைக்கிறானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top