தூத்துக்குடிக்காரன் காதல் கவிதை

Advertisement

நெல்லைத் தமிழ் எனக்கு
ரொம்பவும் பிடிக்கும்,
ராஜேஷ் சார்வாள்
அங்குட்டு நம்ம மக்கா
பேசுற பேச்சு வழக்கு-ல
கோட்டிக்காரிக்கணக்கா
எனக்கு கொஞ்சம் கெறக்கம்ல
அண்ணாச்சி
(நான் சொன்னது
தப்பாகயிருந்தால் சாரி சார்)
Enga irunthalum namma slang than nama kku rumba pidikkum mam
 

shiyamala sothy

Well-Known Member
கவிதை அருமை சகோதரரே. பேச்சுத் தமிழில் கதையோ கவிதையோ வாசிப்பது மனதுக்கு சந்தோசத்தைத் தரும். நன்றி. நன்றி. நன்றி.
 

Rajesh Lingadurai

Active Member
நெல்லைத் தமிழ் எனக்கு
ரொம்பவும் பிடிக்கும்,
ராஜேஷ் சார்வாள்
அங்குட்டு நம்ம மக்கா
பேசுற பேச்சு வழக்கு-ல
கோட்டிக்காரிக்கணக்கா
எனக்கு கொஞ்சம் கெறக்கம்ல
அண்ணாச்சி
(நான் சொன்னது
தப்பாகயிருந்தால் சாரி சார்)

ஹா ஹா ஹா. அருமையா இருக்குங்க. இதுக்கு ஏன் சாரி எல்லாம் சொல்றீங்க. நீங்க சொன்ன கோட்டிக்காரி, கோட்டிக்காரன் போல மேலும் சில வார்த்தைகளை சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பாம்படம் என்ற சொல் அங்கு வழக்கில் உண்டு. பாட்டிமார்கள் அணியும் கம்மல் போன்றது, ஆனால் கம்மலை விட மிகவும் பெரியதாக இருக்கும். அதை அணிந்து காதே ஊஞ்சல் போல நீளமாக தொங்கும். இது போல இன்னும் பல வார்த்தைகள் உண்டு. பாம்படம் என்ற சொல்லை மறந்தது சற்று வருத்தமளிக்கிறது. உங்கள் பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.
 
Last edited:

Rajesh Lingadurai

Active Member
சொந்த ஊர் தமிழ் கேட்டாலே ஒரு பரவசம் இருக்கத்தான் செய்யுது. நைஸ்

அப்படிங்கியலோ (அப்படி சொல்கிறீர்களா என்ற வார்த்தையின் தூத்துக்குடி சொல்). மிக்க நன்றி
 

Rajesh Lingadurai

Active Member
வீட்டின் முதல் அறைக்கு ஊரில் தார்சா என்று பெயர். சென்னி என்பது சுத்தமான தமிழ்ச்சொல். சிலப்பதிகாரத்தில் சென்னி என்ற சொல் பய்னபடுத்தப்பட்டிருக்கிறது. சென்னி என்றால் உச்சந்தலை என்று பொருள். சென்னியைப் பெயர்த்து எடுத்து விடுவேன் என்று திட்டுவது வழக்கம். இன்று அந்த சொல் வழக்கில் இல்லை. அதுபோல பாட்டிமார் அணியும் பாம்படம் என்ற சொல்லும் புழக்கத்தில் இல்லை. செடிசேத்தை என்றால், பாம்பிரணை போன்ற பூச்சிகளைக் குறிக்கும் சொல். ஊரில் பாம்பிரணையை, சாம்பிராணி என்றுதான் சொல்வார்கள். கோடி என்றால் புத்தாடை என்று பொருள். கோடி என்ற சொல்லும் புத்தாடை என்ற பொருளில் சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டிருக்கிறது. ஈரக்கொலை என்றால் நெஞ்சு என்று அர்த்தம். ஒடங்காடு என்றால் கருவேலங்காடு. மூதேவி என்ற சொல்தான் சுருங்கி மூதி என்றாகி விட்டது. கறுக்குமட்டை என்றால் பனைமட்டை.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top