தூங்காநகரம் – மதுரை

Advertisement

naveensri

Well-Known Member
முதன்முதல் மதுரைக்கு போன சமயம் ஒரு ஹோட்டல்ல சாயந்தரம் டிபன் சாப்பிட்டோம்.. :coffee:
அப்படியே சினிமா போறதா பிளான்..
சினிப்பிரியா மினிப்பிரியா தியேட்டர்:)
கூகுள் மேப் லாம் இல்ல அப்போ..
ஹோட்டல் வாசல்ல ஒரு ஆட்டோ ஏறினோம்..
சென்னை பழக்கத்துல பேரம்லாம் பேசி..:cool:. அவரும் அரைமனசா ஒத்துக்கிட்டு :giggle:தியேட்டர் கொண்டு வந்து விட்டார்..
படம் பார்த்து முடிச்சிட்டு பின்பக்கம் கேட் வழியா விட்டாங்க.. :oops:
அந்த ரோடு ஏற்கனவே பார்த்தா மாதிரி இருந்தது.. :unsure:
சுத்தி முத்தி பார்த்தா நாங்க டிபன் சாப்பிட்ட ஹோட்டல் .. :eek:

எதிர்க்க இருக்கற தியேட்டருக்கு அழகா எங்களை நாலு தெருவைச் சுத்தி காட்டிட்டு போயிருக்கார், அந்த நல்லவர்.. :cry:
So sad... Ippdi Oru experience ungalukku vanthurukka venam... I think antha autokkaran Vera oora irukkalam nu thonudhu
 
ThangaMalar

Well-Known Member
So sad... Ippdi Oru experience ungalukku vanthurukka venam... I think antha autokkaran Vera oora irukkalam nu thonudhu
இல்ல இல்ல
No sad feelings
Just enjoying தான்..
இல்லனா இதுவரை அந்த தியேட்டர், incident ஞாபகம் இருக்குமா..

இங்க எழுதும்போதே ஒரு புன்சிரிப்பு வருதே..

வேற ஊர்லாம் இல்ல..
மதுரை பாஷை பேசினார் தான்..
 
naveensri

Well-Known Member
இல்ல இல்ல
No sad feelings
Just enjoying தான்..
இல்லனா இதுவரை அந்த தியேட்டர், incident ஞாபகம் இருக்குமா..

இங்க எழுதும்போதே ஒரு புன்சிரிப்பு வருதே..

வேற ஊர்லாம் இல்ல..
மதுரை பாஷை பேசினார் தான்..
:LOL::censored:;):D:love:
 
ThangaMalar

Well-Known Member
:D:D
அவர் சென்னைகாரர் போல...;)
மதுரை காரங்க எல்லாரும் பாசக்காரங்க.
ஓய்..
சென்னை ஆட்டோக்காரங்க கிட்ட நீ நம்பி வழி கேக்கலாம்..
எந்த இண்டு, இடுக்குக்கு கூட கொண்டு விடுவாங்க..

ஏமாத்துக்காரங்க எல்லா ஊர்லயும் தான் இருப்பாங்க..
அதென்ன சென்னை...

நீ வா, சென்னை ஏர்போர்ட்க்கு..
அப்போ சொல்றேன்.. :sneaky:
 
pons

Active Member
மதுரை நான் கல்லூரி படிப்பு முடித்த இடம். நிறைய எனக்கு கற்று தந்த இடமும் கூட. என்னோட வெற்றி, தைரியத்திற்கு காரணம் என் டோக் பெருமாட்டிக் கல்லூரி தான்.
மிகவும் பாசமான , உதவும் குணங்கொண்ட மக்கள்...
அழகான அம்மன்... இன்றும் நான் போகும் போது வழி மேல் வந்து வரவேற்கும் அம்மைஅப்பன்...சொந்த தாய் வீடு போல உணர்வு தரும் இடம்.
பசுமையான காட்டு பாதையில் சென்று கண்ட அழகர்..என சிறந்த அனுபவங்கள் தந்த மதுரை.
மூன்று வருடம்...மகிழ்வை மட்டுமே நினைவாக தந்த இனிய நகரம்.
 
Hema27

Well-Known Member
முதன்முதல் மதுரைக்கு போன சமயம் ஒரு ஹோட்டல்ல சாயந்தரம் டிபன் சாப்பிட்டோம்.. :coffee:
அப்படியே சினிமா போறதா பிளான்..
சினிப்பிரியா மினிப்பிரியா தியேட்டர்:)
கூகுள் மேப் லாம் இல்ல அப்போ..
ஹோட்டல் வாசல்ல ஒரு ஆட்டோ ஏறினோம்..
சென்னை பழக்கத்துல பேரம்லாம் பேசி..:cool:. அவரும் அரைமனசா ஒத்துக்கிட்டு :giggle:தியேட்டர் கொண்டு வந்து விட்டார்..
படம் பார்த்து முடிச்சிட்டு பின்பக்கம் கேட் வழியா விட்டாங்க.. :oops:
அந்த ரோடு ஏற்கனவே பார்த்தா மாதிரி இருந்தது.. :unsure:
சுத்தி முத்தி பார்த்தா நாங்க டிபன் சாப்பிட்ட ஹோட்டல் .. :eek:

எதிர்க்க இருக்கற தியேட்டருக்கு அழகா எங்களை நாலு தெருவைச் சுத்தி காட்டிட்டு போயிருக்கார், அந்த நல்லவர்.. :cry:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
மதுரைகாரைங்க லந்து ல...
 
rajienia

Well-Known Member
"டிங் டிங் டிங்" பரோட்டா குத்துற சத்தம் கேட்டே நைட் முழுக்க தூங்காம இருக்கலாம்,ஜிகர்தண்டா , ரோஸெமில்க்:coffee::coffee:சித்திர திருவிழா அந்த மாசம் ஸ்கூல் எக்ஸாம் எப்போடா முடியும் னு இருக்க சிறுவர்களில் இருந்து வெளியூர் ல இருந்து வர பெரியர்வர்கள் வரை ஆர்வமா இருக்க மாசம்,கோடி ஏற்றம் பட்டாபிஷேகம் , திக்விஜயம் , மீனாட்சி கல்யாணம் தேர் திருவிழா காலைலயும் ராத்திரிரும் மதுரை ஜில்லால மீனாட்சி அம்மா கோவில் சுத்தி அவ்ளோ கூட்டம் இருக்கும்.சாமி வரதுக்கு முன்னாடி சாமி வேஷம் போட்டு வர சின்ன பிள்ளைங்க கொள்ளை அழகு.தேர் திருவிழா இளைஞர்கள் தேர் இழுத்துட்டு வரத பாக்க காலைல ஆறு மணிய பாக்காத இளைஞிகள் கூட ஆறுமணிக்கு சாமி பாக்க வர சாக்குல வந்து சைட் அடிக்கிறது ஒரு குஷி:love::love::love::love: "ஹாரா ஹாரா சங்கர மகாதேவ மீனாட்சி சுந்தர மகாதேவ" கோஷம் அடுத்த திருவிழா வரைக்கும் காதுல கேட்டுட்டே இருக்கும்.வைகை ஆத்துல அழகர் இறங்குறத பாக்கவே பக்கத்துல ஊருல இருந்து வருவாங்க அந்த கொளுத்தும் வெயில் ல சாமி பாக்குற அப்போ மழை பேயும் பாருங்க ;);)வயசானவங்க கூட சாமி பக்க சாமி பின்னாடி ஓடுவாங்க.
பிரசித்த பெற்ற கோவில்கள்: மீனாக்ஷ்மி அம்மன் கோவில், அழகர் கோவில்(ராக்காயி தீர்த்தம்), திருச்செந்தூர் முருகன் கோவில்,கூடலழகர் பெருமாள் கோவில்,தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்
மசூதியும் சர்ச்யும் கோவிலும் ஒரே தெருவில்...
அலங்காநல்லூர் , அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.
திருமலை நாயக்கர் மஹால் , சமணர் படுக்கை காந்தி மியூசியம் இன்னும் பல சுற்றுலா தலம் கொண்ட ஊரு எங்க ஊறு.பல அறிஞர்கள் பிறந்த ஊறு இன்னும் நிறைய இருக்கு மதுரை ஜில்லால welcome to Madurai guys:love:alagar.jpg

madurai-meenakshi-amman-sundareswarar.jpg
 
Last edited:

Aarudhrayazhini

Well-Known Member
மதுரை நான் கல்லூரி படிப்பு முடித்த இடம். நிறைய எனக்கு கற்று தந்த இடமும் கூட. என்னோட வெற்றி, தைரியத்திற்கு காரணம் என் டோக் பெருமாட்டிக் கல்லூரி தான்.
மிகவும் பாசமான , உதவும் குணங்கொண்ட மக்கள்...
அழகான அம்மன்... இன்றும் நான் போகும் போது வழி மேல் வந்து வரவேற்கும் அம்மைஅப்பன்...சொந்த தாய் வீடு போல உணர்வு தரும் இடம்.
பசுமையான காட்டு பாதையில் சென்று கண்ட அழகர்..என சிறந்த அனுபவங்கள் தந்த மதுரை.
மூன்று வருடம்...மகிழ்வை மட்டுமே நினைவாக தந்த இனிய நகரம்.
Me too doakian:love:
2008-2011 batch
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top