தீராத தேடல்... அத்தியாயம் 16

Bharathi Nandhu

Writers Team
Tamil Novel Writer
#1
தீராத தேடல்

அத்தியாயம் 16

துருவ், தாராவின் நிலையை கண்டு துவண்டு போனான்.. கண்களை மூடி தன்னை நிதானித்துக் கொண்டு பேசத் கண்களில் இறைஞ்சி கேட்டான்..

" நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க..நாங்க அத பண்ணலைனு நிறைய டைம் சொல்லிட்டோம் "

" டேய் நிறுத்துடா‌‌..எனக்குனு இருந்த ஒரே பொண்ணையும் கொன்னுட்டு நீ உன்னோட குழந்தையோட இருக்க நான் விட மாட்டேன்.."

அவன் பேசியதில் தாரா மிரண்டு வயிற்றில் கை வைத்து கண்ணீர் கரைய நின்றாள்..

" என் குழந்தைக்கு மட்டும் ஏதாவது ஆச்சு..உன்ன " என்று குரல்கள் சினத்தில் ஓங்க, அதை கேட்டவர்,

" இப்போ 5 வது மாசம் தானே..பொண்ணா பையனா னு இப்பவே பார்க்கலாம்..டேய் குழந்தையை முதல்ல கொல்லுங்க " என உத்தரவு பிறப்பித்து கால் கட் செய்து விட்டார்..

தாராவின் கால்கள் பின்னோக்கி நகர, அவள் தப்பாமல் இருக்க ஒருவன் பிடித்து நிறுத்த, வாய் விட்டே கதற ஆரம்பித்தாள்..

" துருவ் ப்ளீஸ் வேணாம்னு சொல்லுங்க "

அவனோ தடுமாறாமல் தாராவை முன்னோக்கி சென்றவனின் தலையை , பூச்சாடி கொண்டு பதம் பார்க்க, அதில் சரிந்து வீழ்ந்தான்.. அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் துருவ் வாங்கிக்கொண்டு,
தாராவை போகச் சொல்லி சைகை செய்ய, அவளோ துருவ்வை விட்டு போகவும் முடியாமல், குழந்தையை பாதுகாக்கவும் முடியாமல் சிக்கி தவித்தாள்...

துருவ் மற்றவர்களோடு சண்டையிட்டுக் கொண்டு, அவளை போகச் சொல்லியும் பசை போல் அவ்விடத்தை விட்டு நகராமல் நின்ற நேரம் தாராவை நோக்கி ஒருவன் வர, அதனைக் காணாது துருவ்வின் நிலை அறிவதிலேயே குறியாக இருந்தவளை துருவ்வின் சத்தம் எதிரொலிக்க, அவளை நோக்கி வருவனைக் கண்டு ஓட முயல, அச்சமயம் துருவ்வும் அவளை காப்பாற்ற ஓடி வந்தான்..

தாராவுக்கு மூச்சு வாங்க ஓடி களைத்தவள், சுவரோடு நின்றவளைக் கண்டு கத்தியுடன் வேகமாக வந்தவன் அவளை குத்தும் நேரத்தில், அவ்விடமே அதிர கத்தியவள், அவளது கைகளைக் கொண்டு வயிற்றை பிடித்தவள், ஏதும் செய்யவில்லை என்ற தெளிவுடன் நிமிர்ந்தவளின் கண்கள் மிரட்சியில் விழித்தது.. ஏனெனில் அவளைக் கொல்ல வந்தவனின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்து அவன் அப்படியே சரிந்தான்..

அவர்கள் சுதாரிக்கும் நேரத்தில் அவர்களை விட அதிகமாக நபர்கள் வந்து ஆக்கிரமித்து அவ்விடத்தை போர்களமாக மாற்றினர்..துருவ்வையும் தாராவையும் பத்திரமாக அனுப்பி வைத்து மீண்டும் தொடர்ந்தனர்..
பின்பு போலிஸ் வந்து அனைவரையும் கைது செய்து கூட்டிச் சென்றனர்..

தாரா பயத்தில் மீளாமல் சற்று முன்பு நடந்ததை யோசித்துக் கொண்டிருந்த நேரம், துருவ்வின் அப்பாவும் அம்மாவும் அங்கு வந்தனர்..துருவ் அம்மா தாரா அருகில் உட்கார அடுத்த நொடியே அவர்களை அணைத்து அழுக ஆரம்பித்தாள்..தாராவை சமாதானம் செய்ய அவளருகில் வந்தவனை தாராவோ பார்க்கவில்லை..

" அத்த..அவங்க...கு..ழ..ந்..த " பயத்தில் வார்த்தையில்லாமல் அழுக, அனைவரும் அவளை பரிதாபமாக பார்த்தனர்..

" சார் நாங்க கெளம்பறோம் " என துருவ்வை காப்பாற்றிய கூட்டத்தில் ஒருவர் கூற, தலை அசைத்து அவர்களை போக வைத்தார்..

" அப்பா.. உங்களுக்கு எப்படி "

" அதான் நான் உனக்கு அப்பா..நீ சொல்லமயே உன்ன பத்தி தெரியும் பா.." என சற்று முன்பு நடந்ததை விளக்கினார்..

துருவ் அவர்களை போகச் சொன்னதும் அவனின் அச்சம் நிரைந்த முகத்தை கண்டு துருவ் அப்பா களக்கம் அடைந்தார்..கார் போகும் வரை வாசலில் நின்றவனைக் கண்டு,

" துருவ்..என்ன பிரச்சினை வந்தாலும் உன்ன கண்டிப்பா அதில் இருந்து காப்பாற்றுவேன் ‌" என்று தன்னுடைய கார்ட்ஸ்க்கு போன் செய்து வீட்டை சுற்றி நிற்க வைத்து, அவர்களின் வீட்டை விட்டு பல அடி தூரத்தில் காரை நிறுத்தி வீட்டுக்குள் நடப்பதை கவனிக்க சொன்னார்.. தாராவின் அலறள் கேட்டதும் துருவ் அப்பாவிடம் கூற, அவர் நினைத்தது போலவே பிரச்சினையில் சிக்கியவர்களை காப்பாற்ற அவர்களை உள்ளே அனுப்பி வைத்தார்...

அனைத்தையும் கூறி முடித்ததும் துருவ் அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்..

தாரா " உங்களுக்கு என்னோட நன்றிக்கடன் அதிகமாகிட்டு இருக்கு மாமா "

துருவ் அப்பா, " என்னமா பேசற..நம்ம வீட்டு குழந்தையை காப்பாற்ற நன்றியா..??? " கேள்வியாக வினாவ பதில் ஏதும் சொல்லாமல் அறைக்குச் சென்றாள்..

துருவ், அவள் பின்னே சென்று அவளைப் பார்க்க களைத்த தேகத்துடன் அமர்ந்து இருந்தாள்.. அவளருகில் சென்று அவளின் கேசத்தை கோத, அவனை பார்ப்பதை தவிர்த்தாள்..அவளின் கோபம் அறிந்து,

" என்னோட பாஸ்ட் நம்ம லைஃப்ல பிரச்சினை வரும்னு தெரியாது டி "

" உங்களுக்கு கடந்த கால காதல் இருக்கிறதே இப்போ தான் எனக்கு தெரியும் "

" ஆமா..காதல் தான் " என்று கூறியவனை நீர் சுரந்த விழிகளோடு நோக்கியது..

தன்னவனின் காதல் முன்பே ஒருத்தர்க்கு தரப்பட்டது மட்டும் இல்லாமல் அதனை மறைத்தவனின் மீதும் சினம் அதிகமானது.. ஆனால் மனதின் ஓரத்தில் அவர்கள் கூறியது பொய் என்று அவன் சொல்லுவான் என்ற நப்பாசையில் இருந்தவளை அவனின் வார்த்தைகள் கூறாக அவளின் எண்ணத்தை கிழித்தது..

" தாரா " என்ற அழைப்பில் தன்னிலை அடைந்தவள்,

" அவளோட காதல் மட்டும் தான்..நான் அவள லவ் பண்ணல டி.."

கடந்த கால காதல் பெரும்பாலும் அனைவருக்கும் தோன்றிய அரும்பு போன்றது.. எல்லாருக்கும் வாழ்நாள் முழுவதும் வராமல் இருப்பதால் தான் அதன் வலி அதிகமாக இருக்கும்..துருவ் கூறியதற்கும் அவனை மிரட்டியவன் கூறியதற்கும் சம்பந்தம் புரியாமல் அவனையே கேட்க ஆரம்பித்தாள் விழி வழியாக..

" அவ பேரு மகதி..நம்மள அழிக்க ஆள் அனுப்புனது அவளோட அப்பா.. இப்போ மகதி உயிரோட இல்ல‌.. அதுக்கு நான் தான் காரணம்னு என்னை டார்கெட் பண்ணாரு.."

" மகதி எப்படி இறந்தாங்க..?? "

" ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டா.."

" அப்பறம் ஏன் நம்மள டார்கெட் பண்றாங்க..ப்ளீஸ் என்கிட்ட மறைக்கமாக சொல்லுங்க "

" அவளோட லவ் அக்சப்ட் பண்ணலைனு கோபத்தில் என்னை ஒருநாள் முழுவதும் ரூம்ல அடைத்து வைத்து விட்டாள்..அந்த கோபத்துல அப்பா அவளோட அப்பா கிட்ட சண்டை போட்டு அவ மேல கேஷ் பைல் பண்ணிட்டாங்க..பட் அதுல இருந்து அவ எஸ்கேப் ஆகிட்டா.. எனக்கும் தெரியல டி..அவ இறந்துட்டானு நியூஸ் வந்ததும் நானும் அதிர்ச்சி ஆகிட்டேன்.."

ஏக்கத்துடன் அவள் கேட்ட கேள்விக்கு பதில் அவன் தர, சற்று அவளை சாந்தப்படுத்தினாள்..

" அவ இறந்த அப்போ நிறைய மிரட்டல் வரும்..அதுக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் இல்லைனு நினைச்சேன்‌..பட் இந்த அளவுக்கு இறங்குவாங்கனு நானும் எதிர்பார்க்கல டி "

மௌனமாக இருக்க, அவளை தேற்றும் பொருட்டில்,

" சாரி டி..உன்கிட்ட மறைக்கனும் இல்ல டி..அதற்கான சந்தர்ப்பம் சரியா அமையல "

" உங்களால் எப்படி அவ கிட்ட மாட்டிக்கிட்டு தப்பிக்க முடிஞ்சது..?? "

" அவ‌ எனக்கு ட்ரக்ஸ் போட்டுவிட்டு அந்த ரூம்ல அடைத்துவிட்டு, அவளுக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவாறு அவள் போய்விட்டாள்.. சுயநினைவு வந்தததும் என்னோட சுற்று புறத்தை உணர்ந்து அங்க இருந்து தப்பி வந்தேன்‌‌ " என்று சொன்னவனை கட்டியணைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்..

அது நடந்து சில வருடம் ஆனாலும் அவன் சொன்னதும் மனம் பதறி அணைத்துக் கொண்டாள்..

" நான் ஓகே டி " என அவளை சமாதானப்படுத்தினான்..

பிரச்சினை முடிந்தும் அதில் இருந்து மீள முடியாமல் தவித்தளைக் கண்டு துருவ் கலங்கிப் போனான்..துருவ் அம்மா அவளை சாப்பிட அழைத்துக்கொண்டு வர, அவளோ மனதில் நிம்மதி இல்லாமல் அமர்ந்தாள்..துருவ் அவளுக்கு ஊட்ட, அதனை கூட உணரமால் உணவருந்திக் கொண்டிருந்தாள்..

உணவு முடித்ததும் அறைக்குச் சென்று படுத்தவளைக் கண்டு, வாஞ்சையுடன் அவளருகில் அமர்ந்தான்..

" என்ன நம்பலையா டி ..?? " சொன்னவனின் சட்டையை கொத்தாக பிடித்து கனல் பார்வையை வீசி,

" உன்ன நம்பாம யார நம்ப போறேன்..எனக்குனு யார் இருக்க ..??? " என்று சொன்ன மறுகணம்,

" தாரா " அறை அதிர கத்தியவன்,

" உனக்காக நாங்க இருக்கோம்..ஆனா நீ ஈசியா யாரும் இல்லைனு சொல்ற.. இப்போ புரியுது டி எங்க மேல எவ்ளோ நம்பிக்கைனு " அவள் முகத்தை கூட பார்க்காமல் அனைத்தும் சொல்லிட்டு சோஃபாவில் படுத்துக் கொண்டான்..

அவன் கூறிய பின்பு தான் அவள் பேசிய வார்த்தைகளை கவனித்து தன்னையே நொந்து கொண்டாள்..மேலும் அவளும் அவனை நோகடிக்கும் அளவில் வார்த்தைகள் வீச வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கூறி விட்டாள்.. நெடுநேரம் தூங்காமல் விழித்தவள்,

" துருவ் " என அழைத்தும் அவன் அமைதியாக இருக்க, படுக்கையில் இருந்து எழுந்தவள்,

" சோஃபாவா நான் பார்க்கற சைடுல போடுங்க "

" ஏன்..?? " விழியில் கேட்க,

" பக்கத்துல தான் தூங்கல..எதிர்லயாவது தூங்கலாம்ல " சாந்தமான குரலில் கூற, அதில் அவனும் புன்னகைத்தான்..

" சாரி..எனக்கு உங்கள தவிர வேற யாரும் இல்லை..யாரும் வேணாம் அத தான் சொல்ல வந்தேன்.." என்று கூறியதும் அவளருகில் கைகளை கோர்த்துக் கொண்டு படுத்துக்கொண்டான்..

" நான் " ஆரம்பித்தவனை அவளின் விரல் வைத்து வாயை மூடினாள்..

" என்ன விட உங்கள தான் அதிகமாக நம்பறேன்..பட் எனக்கு கொஞ்சம் கோவம் இருக்கு..இத எல்லாம் முன்னாடியே ஏன் சொல்லைனு..?? "

" இல்லடி ..நான் "

" ஷ்ஷ்ஷ்.. எனக்கு ஆகா மட்டும் தான்னு தெரியும்..பட் எனக்கு கோவம் இருக்கு " என்று முகம் சுழித்தவளை கண்டு அவனால் சிரிக்க மட்டும் தான் முடிந்தது..

தன்னவளுக்காக தான் அவனின் கடந்த காலத்தை மறைத்தான் என்பதை புரிந்து கொண்டும் கோபம் கொள்ளும் அவளை எண்ணி சிரிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்...

அடுத்த நாள் அவளின் கோபத்தை காட்டுகிறேன் என்ற பெயரில் அவள் செய்த சேட்டைகளை கண்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான்..
ஏனெனில் வேண்டும் என்றே அவனை புறக்கணிப்பது போல் நடந்து கொண்டாலும், மீண்டும் ஏதேனும் காரணம் கொண்டு அவன் செய்வதை கவனித்தாள்..

காலையில் காபி வைத்து விட்டு சென்றவள், மீண்டும் வந்து அவன் பருகி விட்டான் என்பதை உறுதி செய்து விட்டு சென்றாள்..அவன் குளிக்க செல்லும் முன்பே குளியலறைக்குள் புகுந்தவள் சில நொடிகளில் வர , துருவ் தான் அவனின் சிரிப்பை அடக்க பெரும்பாடும்பட்டான்..உணவை பரிமாறி விட்டு அனைத்தும் உண்டு முடிக்கும் வரை சமையலறைக்கு உள்ளே இருந்து கவனித்தவள், அவன் உணவு காலியானதும் மீண்டும் வந்து விடுவாள்..

துருவ் மட்டும் அல்ல, அவனின் அம்மாவும் அப்பாவும் இவர்களுக்கு நடப்பதை புரியாமல் தவிக்க, துருவ் அதற்கான தெளிவை எடுத்துக் கூறினான்..இருந்தும் தாரா கோபம் என்ற பெயரில் பண்ணும் சேட்டைகளை அவர்களாலும் இரசிக்க முடிந்தது..

ஒரு வாரமாக அவள் செய்வதை பொறுத்துக் கொண்டவன், இதற்கு மேல் முடியாமல் அவளிடம் மன்றாடினான்..

" பொண்டாட்டி சாரி டி செல்லம்‌..அமுல் பேபி.. டார்லிங்.." என்று மாற்றி மாற்றி கொஞ்ச அதில் உருகி விட்டாள்..

" சரி சரி பரவால்ல..இவ்ளோ கொஞ்சற நானால உங்கள மன்னித்து விடறேன்..எனக்கு இப்போ கோபம் குறைஞ்சிடுச்சு "

" நீ எப்போ டி கோப பட்ட..?? " உற்சாக குரலில் கூற, அவளோ அவனை முறைக்க மீண்டும் மன்றாடினான்..

" வர வர உங்க அப்பாவுக்கு திமிரு அதிகம் ஆகாது டா..அதான் இப்போ எல்லாம் ரொம்ப பேசறாறு‌.. நீங்க வந்ததும் நாம கவனிக்கலாம் " என்று வயிற்றை தடவிக்கொண்டே குழந்தையிடம் முறையிட அதைக் கண்டு விழிகளில் இரசித்தான்..

மீண்டும் விட்ட இடத்திலிருந்து அவர்களது பயணம் அமர்க்களமாக ஆரம்பிக்க, அதில் மகிழ்ந்தவளுக்கு இனிமேல் தான் அவள் முகத்தில் சிறிய புன்னகை கூட தோன்றாது என்பதை உணர்ந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை அவளின் மகிழ்ச்சியே காட்டியது..

வாழ்க்கை எந்நேரமும் இன்ப கடலில் மூழ்கடிப்பதில்லை.. இவ்வுலகை படைத்த கடவுள் அதற்கு எதிராகவும் படைத்துள்ளார்.. ஏனென்றால் வாழ்வில் ஒன்று மட்டுமே நிரந்தரம் என்றால் இங்கே ஒருவரின் வாழ்க்கையை காப்பாற்ற மற்றொருவரின் வாழ்க்கை வீணடிக்கப்படும் என்பதை உணர்ந்து எதுகை மோனையாக இப்பூமியில் வாழும் உயிர்களை படைத்துள்ளார்..இன்பம் இருந்தால் துன்பமும் ஒட்டிக்கொள்ளும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தாராவின் வாழ்வும் விளங்கப் போகிறது..

நிறை மாதமான ஏழாவது மாதத்தின் இறுதியில் வளைகாப்பு என்று உறுதியானது.. சமையலறையில் தாராவுக்கு பிடித்ததை சமைக்க, தாரா ஆர்வத்துடன் அதனை கவனித்துக் கொண்டிருந்தாள்..

" அத்த..துருவ் சின்ன வயது போட்டோ இருக்கா..?? "

" இருக்கு டா..ஸ்டோர் ரூம்ல இருக்கும்..நான் எடுத்து தரேன் "

" இல்ல அத்த..நானே‌ போய்ட்டு எடுத்துக்குரேன்.." என்று அவர்கள் சொல்வதை கேட்காமல் மாடிப்படி ஏறினாள்..ஸ்டோர் ரூம்மின்‌ மூலையில் இருந்த அலமாரியில் தேடி ஒருவழியாக கண்டுபிடித்து விட்டாள்.. மீண்டும் கீழ் இறங்கி வந்து சோஃபாவில் அவனின் புகைப்படங்களை இரசித்துக் கொண்டிருந்தாள்..

துருவ் அம்மாவும் அவளோடு அமர்ந்து கொண்டு அவன் செய்த குறும்புகளை வரிசைப்படுத்த, அதில் இருவரும் மாறி மாறி சிரித்தார்கள்..பின்பு அவரிடம் போராடி புகைப்படங்களை ரூம்மில் வைக்க போவதாக சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றாள்..

அவள் அறையில் வைத்து விட்டு மீண்டும் ஏதாவது போட்டோ இருக்க..?? என்பதை தெரிந்துக் கொள்ள மீண்டும் அவ்வறைக்குச் சென்றாள்..விதி யாரை விட்டது..அவளது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஆறாத காயத்தையும் ஏற்படுத்திய தருணம் ஆக மாறும் நேரம் வந்துவிட்டது.

அலமாரியில் அவள் தேட, அவள் நினைத்ததை விட வேறு முக்கியமான ஃபைல்கள் அவளது கைகளில் சிக்க, அதனை படிக்க படிக்க நடுக்கம் கலந்த அச்சத்துடன் இருந்தாள்.. அதில் இருந்த ஒரு பேப்பர் கீழே விழ, அதை எடுத்து பதட்டத்துடன் மீண்டும் அதனுள் வைத்தவளை, யாரோ நெடுநேரம் பார்ப்பதாக தோன்றியதால் அத்திசையில் பார்த்தவளின் முகத்தில் வேர்வை படிந்து பெரும் தயக்கத்தை கொடுத்தது..

" து...ரு..." வார்த்தைகள் குழறி வந்தது..

தாரா அறைக்கு சென்றதும் வந்தவன், நெடுநேரம் கழித்தும் வராமல் இருந்தவளை தேடி வந்தான், அவனை பார்த்ததும் அவள் முழிப்பதை அறிந்து அவளருகில் சென்றான்..அவளோ பின்னோக்கி நகர, வராத தைரியத்தை வரவழைத்து ,

" மகதி எப்படி இறந்தா..?? "

தீடிரென கேட்ட கேள்வியில் விழித்தவன், அவள் பயந்து கொண்டு பேசுவதையும் புரிந்து,

" என்னடி பேசற..நான் தான் எல்லாம் சொல்லிட்டேன்..அவ எப்படி இறந்தானு எனக்கு தெரியாது "

" இல்ல..பொய் சொல்றீங்க " என்று கதறி அவன் மீது சில பேப்பர்களை வீசினாள்..அதை எடுத்து பார்த்து விட்டு மீண்டும்,

" தாரா நான் சொல்றத கேளு "

" என்கிட்ட வராதீங்க..பயமா இருக்கு "

" தாரா " கோபத்தின் உச்சியில் மிரட்டும் விதத்தில் கூற,

" உங்களுக்கு என்ன பிரச்சினை..." முழுவதும் சொல்லி முடிப்பதற்குள் அவளது பின் தலையை யாரோ அடிக்க, அதில் நேராக விழுந்தவளின் அடிவயிற்றில் அடிபட, வலியில் அலறி துடித்தாள்...

யார் அவளை அடித்தது..??? என்ன பிரச்சினை என்பதை அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்...அதை எடுத்து பார்த்து விட்டு மீண்டும்,

" தாரா நான் சொல்றத கேளு "

" என்கிட்ட வராதீங்க..பயமா இருக்கு "

" தாரா " கோபத்தின் உச்சியில் மிரட்டும் விதத்தில் கூற,

" உங்களுக்கு என்ன பிரச்சினை..." முழுவதும் சொல்லி முடிப்பதற்குள் அவளது பின் தலையை யாரோ அடிக்க, அதில் நேராக விழுந்தவளின் அடிவயிற்றில் அடிபட, வலியில் அலறி துடித்தாள்...

யார் அவளை அடித்தது..??? என்ன பிரச்சினை என்பதை அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்...
 
#5
என்னம்மா பாரதி புள்ளைத்தாய்ச்சியை சும்மா சும்மா பதற வைக்கிறீங்க
போதாதற்கு மண்டையில வேற யாரோ அடிச்சுட்டாங்க
அது யாரு என்னன்னு கேப் விடாம சீக்கிரமா வந்து சொல்லுங்கப்பா