தீராத் தீஞ்சுவையே...31

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____31

மிதரனின் 14 மிஸ்டு கால்களைக் கண்டவுடன் என்ன அவசரமோ என்ற பதைப்போடு நேத்ரா கால் செய்தாள்...

அவனுடையக் குரலில் காலை எடுக்காத கோவமும வீட்டில் நடந்து கலவரமும் சேர்ந்தே இழையோடியது....
ஃபோன் பன்னா உடனே எடுக்க மாட்டியா டி...

சாரிங்க .. நான் ஹிந்தி டியூஷன் வந்தேன் . அதான் ஃபோனை சைலன்ட் மோட் ல போட்டு வைச்சேன்.
என்ன ஆச்சு...ஏன் இத்தனை டைம் கால் பன்னியிருக்கீங்க.. .

எல்லாம் வீட்ல நடந்த கலவரத்துல வந்த டென்ஷன் தா அம்மு.. பேசாம நாம ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிக்கலாமா...

ஏன்
இரு..இரு.. நான் பேசிடுறேன்... அப்றமா நீ சண்டை போடு.
சொல்லுங்க...
இன்னைக்கு என் பாட்டிக்கு திடீர்னு பேச்சு வரல டி... ஒரு காலும் ஒரு கையும் வேர அசைக்க முடியாம இருக்கு..
அச்சோ .. ஹாஸ்பிடல் போனீங்களா.. என்னவாமா ..
பாட்டிக்கு வயசு 94 டி... அவங்களுக்கு இது வரைக்கும் பி.பி... சுகர் னு எந்த பிரச்சனையும் இருந்தது இல்ல..
அவங்க வயசுக்கு இந்த மாதிரி இவ்ளோ லேட்டா வந்ததே பெரிய விஷயம் தான்...
சரி... வீட்ல என்ன பிரச்சினை...
பாட்டிய பாக்க அக்கா வந்திருந்தா..
ம்ம்ம்..
மாமாக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையாம்..
ஏன்..
அவங்க ரிலேடிவ் ல பார்த்த பொண்ண கட்டிக்காம ...நம்ம ஜாதியில இருக்க பொண்ண விட்டுட்டு வேற பொண்ண மேரேஜ் பன்றது அவருக்கு பிடிக்கலையாம்...
அப்படி பன்னா... அவரு கல்யாணத்துக்கு வர மாட்டாராம்....
ஓ..ஹோ...
இதான் சாக்குனு அக்கா வேற நிறைய வார்த்தைய விடாடுட்டா... எனக்கு கோவம் வந்துது பேச முடியல... உனக்காக அம்மா சப்போர்ட் பன்னதும் அக்காவுக்கு கோவம் வந்துடுச்சி....
என்ன நடந்துதுனு புரியிரமாதிரி சொல்லுங்க...சுத்தி வலைக்க வேண்டாம் . .. நான் தப்பா நினைக்கவோ... கோவப்படவோ ஒனனும் இல்லங்க...
அது ..உன்னோட ராசி சரியில்லையாம்...அதான் பாட்டிக்கு இப்படி திடீர்னு முடியாம போச்சாம்.
அத கேட்டதும் அம்மாவும் உனக்காக தான் பேசுனாங்க...ஆனா அக்கா...
பார்த்தீங்களா நல்லா இருந்த நீங்களே பெத்த பொண்ண விட்டுட்டுஅவள தானே சப்போர்ட் பன்னறீங்க...என்ன விட உங்களுக்கு உங்க அரும மறுமக தானே முக்கியமா போய்ட்டா...அப்படி என்னதான் வசியம் பன்னிட்டா....
அம்மா .. புள்ள எல்லாம் அவ பக்கம் பேசுரீங்க... வீட்ல காலெடுத்து வைக்கிறதுக்கு முன்னாடியே என்ன உங்க கிட்ட இருந்து பிரிச்சிட்டா... இனி இங்க வாழ வந்தா என்னெல்லாம் நடக்குமோ...
என் புருஷன் வராத எடத்துல இனி எனக்கு மட்டும் என்ன வேல... ஒரு நாளைக்கு என்கிட்டயே வந்து நின்னு பொலம்புவீங்க இருங்கனு .....அழதுகிட்டே போயிட்டா...
அவ பேசினத கேட்டு அம்மா ரொம்ப யோசனையா இருக்காங்க டி..திரும்ப என்ன பூகம்பம் கிளம்புமோனு எனக்கு பயமா இருக்கு…
இதையெல்லாம் கேட்டு நேத்ராவின் கண்களில் தண்ணீர் துளித்துளியாய் கொட்டத்துவங்கியது..

ஆனாலும் மித்ரனிடம் அவளுடையக் கண்ணீரை அவள் காட்டிக் கொள்ளவில்லை...

அப்பா வராரு மித்ரன் ந.. நான் வீட்டுக்கு போய்ட்டு கால் பன்றேன்...

மித்ரனின் வார்த்தைகளை விட அதில் பொதிந்திருக்கும் பொருள் அவளை மிகவும் காயப்படுத்தியது..
முன் பின் முகமறியா என் மீது விரோதம் பாராட்ட இவர்களுக்கு ஏன் மனம் வருகிறது.. என்னை சாடிய வார்த்தைகளை அவர்கள் மீது வேறு யாரோ பிரயோகிக்கையில் அவர்கள் மனம் எத்தனை காயமுறும் ....எனக் கலங்கிய விழிகளோடு நடந்து வீட்டை அடைந்தாள்.
வீட்டிலோ அப்பா நல்ல குடிமகனாக டைட்டானிக்கோடு நிதானமாக இவளை ஏதிர்பார்த்து காத்திருந்தார்...
இந்த நிலையில் பேசுவது தனக்கு எதிர்மறை பலனை விளைவிக்கும் என்பதை உணர்ந்து நேத்ரா அமைதியாக உள்ளே செல்ல...
மூர்த்தியோ கோவமாக நேத்ரா..... என்றழைத்தார்...
நேத்ராவின் படபடப்பு கூடி... இதயம் மாரத்தான் பயிற்சி எடுத்தது... வியர்வை வரிவரியாக நடத்த கலைப்பை கோடு போட்டு காட்டியது. .
என்னப்பா...
இங்க வாம்மா...
சொல்லுங்கப்பா...
அப்பா மேல உனக்கு அப்படி என்னம்ம்மா கோவம்...
எனக்கா. எனக்கு என்னப்பா கோவம்...
அப்பா உன்கிட்ட எத்தனை முறை கேட்டேன் .. யாரையாவது விரும்புரியானு
ஆ... ஆமாப்பா...
உன்கிட்ட நான் சராசரி அப்பாவா மட்டுமா இருக்கேன்....எவ்ளோ நல்ல ஃபிரண்ட் ஆ பிஹேவ் பன்னேன்... நீ என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டல...
அப்பா....ந.... நா மறைக்கல ப்பா... சொல்றதுக்கு சரியான நேரம் அமையட்டும் னு காத்துட்டு இருந்தேன் ப்பா.
ம்ம்ம்... நீ...என்னதா சமாதானம் சொன்னாலும்... என்ன விட்டுட்டு நீ உங்க அம்மா கிட்ட மட்டும் சொல்லிட்டல...
ப்பா... பிளீஸ்... இது தப்புனா சாரி... அதுக்காக நீங்க சங்கடப்படாதீங்க...நான் உங்க கிட்ட சொன்னா ஏத்துக்க மாட்டீங்களோனு பயந்துட்டேன் ப்பா...
ரவால்ல விடும்மா... அப்பா அத மன்னிச்சிட்டேன் .. சரி அத விடு உங்க அம்மா எல்லா விஷயத்தையும் சொன்னா .
எனக்கும் ஒரு வீடு வாசல் சொந்தமா இல்லையேனு ஒரு கொர மட்டும் தான்... இருந்தாலும் பரவாயில்லை .. உனக்கு புடிச்சிருக்கு ல... அது போதும் ஆனா அப்பாக்கு சில டவுட் இருக்கே..
கேளுங்க பா....
பையன் பேர் என்ன...
மித்ரன்...
என்ன பன்றாப்ல...
ஒரு பிரைவேட் கம்பெனி ல எச்.வி.ஏ.சி... ஃபீல்ட் ல வொர்க் பன்றாங்க…
எந்த ஊரு..
ஆவடி. .
நாம இருக்குறது திருவொற்றியூர் ல... இங்கே இருந்து ஆவடிக்கு.... எப்படி ..
.........
உனக்கு எப்படி தெரியும்... பழக்கமா .. கூட படிச்சிருக்க வாய்ப்பே இல்ல ..
ப்பா...
ம்ம்ம்...
அது இப்போ இல்ல எப்பையுமே நீங்க கேக்க கூடாது ... நானும் சொல்ல மாட்டேன்... அது இரகசியம் ப்பா..
ஓஓஓ... அப்பாக்கு தெரியக்கூடாதா ..
அப்படி இல்ல... அது ரொம்ப சீக்ரெட் .. அதான்...

சரிம்மா... நீ இதவரைக்கும் அவன் குடுத்ததா ஏதாவது கிஃப்ட் ..

இல்லப்பா ..அவருக்கு நானோ .. எனக்கு அவரோ அப்படி எதையும் குடுக்குல... நாங்க ரெண்டு பேருமே வேலைக்கு போறதால மத்தவங்க மாதிரி வெளிய லா எங்கையும் ஊர் சுத்தினதும் இல்ல... எனக்கு அவர புடிக்கும்... அவர கல்யாணம் பன்னிகிட்டா நல்லா இருப்பேனு நம்பிக்கை இருக்கு... மத்தபடி கிஃப்ட்... அவுட்டிங்.... மீட்டிங் லா எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி விருப்பம் இல்லப்பா... நான் உங்க வளரப்பு ப்பா... உங்களுக்கு பிடிக்காத எதையும் செய்யவும் மாட்டேன்... எனக்கு பிடிச்சத... உங்க சம்மதத்தோட... அடையாம ஓயவும் மாட்டேன்....

நேத்ரா அப்பா காதலுக்கு எதிரிலா இல்லம்மா... நீ சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கும் அம்மாக்கும் போதும்...

அதோட உன்மேல அப்பாக்கு நிறையவே நம்பிக்கை இருக்கும்மா... உனக்கு இதே லவ் டீன் ஏஜ் ல வந்திருந்தா அப்பா கண்டிப்பா சினிமா வில்லன் மாதிரி மாறி இருப்பேன்...

ஆனா உனக்கு 23 வயசு ஆச்சு... நீ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல... படிப்பு ... வேலைனு இன்னைக்கு வரைக்கும் உன்னோட கோல் ல கரெக்ட் ஆ இருக்க... சோ... உன்னோட முடிவு சரியா இருக்கும்னு அப்பா நம்புறேன்...

நீங்க எங்க ஓ.கே சொல்ல மாட்டீங்களோனு நான் ரொம்ப பயந்துட்டேன் ப்பா ..

அப்பாக்கு உன் சந்தோஷம் தான்மா முக்கியம்... இப்போ சொல்றேன்...அவன் யாரா இருந்தாலும்... என்ன பிரச்சினை வந்தாலும் உங்க கல்யாணம் நல்லபடியா நடக்கும்... அப்பா நடத்தி வைப்பேன்... சரியா.... சந்தோஷமா...
தேங்ஸ் ப்பா...
நீ இப்போ நிம்மதியா தூங்கு மா...காலைல மாப்ள நம்பரோ... இல்ல அவங்க வீட்டு பெரியவங்க நம்பரோ குடு...

நான் பேசி கூடிய சீக்கிரமே உங்க கல்யாணத்த முடிக்கிறேன்... இது அப்பா உனக்கு பன்ற ப்ராமிஸ்... ஓ.கே வா... பயப்படாம மனசுக்குள்ள எந்த கவலையும் இல்லாம நீ சந்தோஷமா தூங்கு போ...
சரிப்பா....
நேத்ராவின் சந்தோஷம் பன்மடங்கு பெருகி அவளை சந்தோஷ வானில் மிதக்க வைத்தது..
உச்சகட்ட சந்தோஷத்தில் அவளுக்கு தூக்கமே வரவில்லை...எப்போது விடியும் என காத்திருக்க அவளுக்கு பொருமையும் இல்லை...
அவசரப்பட்டு கால் செய்தாலும் மித்ரன் எடுக்கப்போவதில்லை.. மித்ரன் தூங்கினால் கடவுளே வந்தாலும் இடையே எழுப்ப முடியாது... நேத்ரா மட்டும் எம்மாத்திரம்....
எப்போது தான் விடியல் வரும் என ஆவலாக விழித்தகருந்தவள் காலை வேக வேகமாக பள்ளிக்கு கிளம்பினாள்.. இரயில் நிலையம் வந்து மித்ரனுக்கு அழைத்தாள் எந்த உபயமும் இல்லை..

மாமியாருக்கே நேரடியாக கால் செய்து வீட்டில் நடந்தவற்றை சுருங்க கூறி தந்தையின் தொலைபேசி எண்ணை கொடுத்து பேசுமாறு சொல்லிவிட்டு மீண்டும் மித்ரனுக்கு அழைத்தாள்..

அரைமணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மித்ரன் எழுந்து ஒரு வழியாக ஃபோனை எடுத்தான்..
நேத்ரா கூறிய நற்செய்தியில் மித்ரனுக்கு
விழியோரம் வழிந்த தூக்கமெல்லாம் தூர தேசத்திற்கு டூருக்கே போய்விட்டது..

கொண்டாட்டமோ... கொண்டாட்டமாக.. இருவருக்கும் கால்கள் தரையில் பதிய முடியாத அளவிற்கு கொண்டாடாடமாக...விடிந்தது...

கல்யாண கனவு நிரம்பி வழிந்தது... மித்ரனின் அம்மு இப்போது உரிமையாக பொண்டாட்டியாக மாறியது…
இந்த உற்சாகத்தை பயன்படுத்தி மித்ரனின் குறுக்கு புத்தி ஒரு காதல் கணக்கு போட்டது....
மித்ரன் போட்ட கணக்கு படி... அவனுடைய காதல் கதையின் இந்த பகுதியில் ஒரு குட்டி ரொமான்டிக் சீனுக்கு ஆசைப்பட்டு அவனுக்கு அவனே பெரிய ஆப்பாக சீவியது அப்போது அவனே அறியவில்லை... என்பதே... பரிதாபம்..

பயபுள்ளைக்கு கூழுக்கும்ஆசை... மீசைக்கும் ஆசை.... அப்போ அனுபவைக்கனும் ல....

இவன் கூட சேர்ந்து நேத்ராவும் வசமாக மாட்டியது தான் ஹைலைட்...

என்ன செய்வது மித்ரனுக்கு சொந்த செலவுல சூனியம் வைச்சிக்கனும்னு கட்டத்துல இருக்கு... போல....டிசைன் அப்படி நாம என்ன பன்ன முடியும் ...

. ___தொடரும்…
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top