தீத்திரள் ஆரமே -9

#1
தேவா :ஸ்ரீரங்கத்தில் கோயிலில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகவே படைக்கப்படுகிறது.
தன் தங்கை செய்த செயலால் பூரித்துப் போயிருந்தான் சாய்..

ஆரா வந்ததும் சக்தியுடன் சண்டைப் போடுவாள் என்று தான் சாய் நினைத்தான்,
ஆனால் ஆரா வந்த வேகத்தில் சக்தியின் கன்னத்தில் விட்ட அடியில் சாயிக்கே காது கணீர் என்றது.

சக்தியின் உயரம் என்ன என்று தெரியாமல் தங்கை செய்த காரியத்தின் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எல்லாம் யோசிக்கவில்லை சாய்.

அவனைப் பொறுத்தவரையில் தன் தங்கை தனக்காக எதையும் செய்வாள் என்ற எண்ணம் மட்டும் தான் இப்போது அவன் மனதில் இருந்தது.

"அம்மு அவங்க யார்னு தெரியாம அடிச்சிட்டியே இதனால் பிரச்சனை வராதா?" என்றான் மெதுவாக.

"யாரா இருந்தா எனக்கு என்னடா..? என் அண்ணன் மேல கை வைக்க அவன் யாரு. என்ன பிரச்சனைனு ஒன்னு உன்கிட்ட பேசித் தீர்த்திருக்கனும்,இல்லையா பெரியவங்களை வரச் சொல்லி அவங்கிட்ட பேசியிருக்கனும், அதை விட்டுட்டு மேல கை வைக்க அவன் யாரு?,போற வரவன் எல்லாம் அடிக்கவா நம்ப அம்மா, அப்பா உன்னைய பெத்துப் போட்டுருக்காங்க" என்றாள்.

"மத்தது எல்லாம் ஓகே தான் லாஸ்ட்டா சொன்னதை மட்டும் கொஞ்சம் அவாய்ட் பண்ணிருக்கலாம்" என்றான் சோகமாக..

"நீ திருந்தவே மாட்டடா.. அவன் உன்னைய இன்னும் நாலு அடி சேர்த்துப் போட்டுருக்கணும், ஒரு அடியோட விட்டுட்டான்"என்றாள்.

"அப்படி அவனை அடிக்க விட்டுருவியா?" என்று கேட்டவனுக்கோ பெருமை தாங்கவில்லை..

காதலிப்பவள் கூட தான் அடிவாங்கும் போது அழுதபடி வேடிக்கை தான் பார்த்தாள்,ஆனால் தங்கையோ எதைப் பற்றியும் யோசிக்காமல் தன்னை அடித்தவனையே அடித்துவிட்டாள்.

இதைவிட ஒரு அண்ணனுக்கு வேற என்ன வேண்டும்...இதுநாள் வரையிலும் அண்ணன் என்பவன் தங்கையை பாதுகாக்கவே பிறப்பெடுத்து வந்தான் என்பது போல் இருக்கும் உலக நியதியை, முதன்முறையாக ஆரா உடைத்து தங்கையும் அண்ணனை பாதுகாக்கலாம் என்று நிரூபித்துவிட்டாள்.

வீட்டிற்கு சென்றதும் அனைவரிடமும் ஆரா செய்ததை சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தான் சாய் .

ஆனால் அதன்பின் எழும் கேள்விகளுக்கு தன்னால் பதில் சொல்ல முடியுமா என்று யோசித்துப் பார்க்க, முடியாது என்று தோன்றவும் சாய் தன் வாயை இறுக்கி மூடிக் கொண்டான்.

அடுத்து அடுத்து வந்த நாட்களிலும் ஆரா வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே தான் இருந்தாள்.

சாயுடன் கல்லூரி செய்பவள்,வழியில் அவன் கேக்கும் கேள்விகளுக்கு ம்ம் என்று மட்டும் பதில் கொடுப்பாள், அதற்குமேல் எவ்வளவு தான் உருண்டு பிரண்டாலும் அவளிடம் இருந்து வார்த்தைகளை வாங்க முடியவில்லை,

வகுப்பிலும் விதுர்ணாவிடம் எதுவும் பேசவில்லை,அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு விதுர்ணாவும் ஆராவிடம் பேசுவதை தவிர்த்தாள்.அது ஆராவிற்கு புரிந்தாலும் பெரியாத எதையும் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை.

ஆராவை சசியும் எவ்வளவோ சமாதானம் செய்துவிட்டான். ஆனால் ஆரா சமாதனம் அடைய வில்லை,

"ஏன் அம்மு இப்படி அமைதியா இருக்க..நீ பேசாம உம்முனு இருக்கவும் வீடே ஏதோ மாதிரி இருக்கு,பாரு பேசும்மா" என்றான் கெஞ்சலாக.

"எனக்கு உங்க யார் மேலையும் கோவம் இல்லை, வருத்தம் தான் . நீங்க கீழே விழுந்தது வீட்டுல இருக்கற எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு ஆனா எனக்கு தெரியல , கேட்டா சின்ன பொண்ணு அழுது கஷ்டபடுவ, எக்ஸாம் இருந்தது அதனால அதுல நீ கான்சென்ட்ரேட் பண்ண மாட்டன்னு, ஆள் ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்றிங்க,எனக்கு மட்டும் அண்ணாவுக்கு இப்படி ஆய்டுச்சேனு கவலை இருக்காதா?, ஏன் என்னைய மட்டும் பிரிச்சிப் பார்க்கறீங்க?" என்றாள் கம்மிய குரலில்..

"நாங்க உன்னைய பிரிச்சிப் பார்த்தா எங்களைய நாங்களே பிரிச்சிப் பார்க்க மாதிரி அம்மு, நீ கவலைப்படற அளவுக்கு இது பெரிய அடி இல்லைனு தான், யாரையும் உனக்கிட்ட சொல்ல வேண்டாம்னு நான் தான் சொன்னேன்" என்ற சசி..

"நீதான் இந்த வீட்டோட மகாலட்சுமிம்மா உன் கண்ணுல தண்ணி வந்தா அது இன்னும் எங்களைய அதிகமா தானே கஷ்டபடுத்தும் புரிஞ்சிக்கோ அம்மு" என்றான் சசி பொறுமையாக.

"என்ன இருந்தாலும் என்கிட்ட நீங்க சொல்லிருக்கனும்.. ஒன்னுதுக்கும் உதவாத இந்த எருமைக்கிட்டையே சொல்லிருக்கீங்க, நான் அவனை விட எந்த விதத்துல குறைஞ்சி போய்ட்டேன் சொல்லுங்க" என்று போறப் போக்கில் நான் சமாதானம் ஆகிவிட்டேன் என்று வார்த்தைகளால் தெரிவிக்காமல் உடல் மொழியால் தெரிவித்து விட்டாள் ஆரா.

"அடியே சைடு கேப்புல என்னைய இழுத்து ஒன்னுத்துக்கு உதவாதவன்னு சொல்லிட்டேல, என்னடி நான் உதவல சொல்லுடி இம்சை பிடிச்சவளே? சொல்லுடி என்றான் சாய் கோவமாக

"யாருடா இம்சை நீதான் இந்த வீட்டுக்கு இம்சை பிடிச்சவன்..ஏம்மா , பரணி அண்ணனுக்கு அப்புறம் ஸ்ட்ரைட்டா என்னையே பெத்துருக்கலாம்ல, இவனை இடையில பெத்துட்டு பெருசா அண்ணான்னு சொல்லிட்டு திரியரான் எருமை" என்றாள்.

"ஏதோ போனா போகுதுனு தான் உன்னையே பெத்துகிட்டாங்க இதுல வாயைப் பாரு, இந்த வாயை ஒருவாரம் பூட்டி வெச்ச மாதிரி இன்னும் கொஞ்ச நாளைக்கு பூட்டி வெச்சின்னா, அதுக்குள்ள உன்னைய எவன் தலையிலையோ கட்டி வெச்சிடுவாங்க அதுக்கு அப்பறம் அவன்கிட்ட உன்னோட இம்சையை வெச்சிக்கோ, நாங்க எஸ்கேப் ஆகிடுவோம்" என்றான்.

"எனக்கு மூணு அண்ணன்ங்க இருக்கும் போது,எவனோ ஒருவனை நான் எதுக்கு இம்சை பண்ணனும்?" என்றவள், "கவலைபடாதே பக்தா, சீக்கிரம் என்னால் நீ வாழ்க்கையை வெறுத்து சன்னியாசம் வாங்கிக் கொண்டு இமயமலைக்கு செல்வாய்" என்று அருள் வழங்குவது போல் ஆரா சொல்லவும்,

"அடிங்க" என்று அவளை அடிக்கத் துரத்தினான், ஆராவும் சாயிற்கு பழிப்பு காட்டியாவாறு ஓட்டினாள்.

ஒருவாரத்திற்கு பின் இப்போது தான் வீடு பழையபடி கலகலவென்று இருக்கிறது என்று நினைத்தனர்.

ஆரா சக்தியை அடித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும் அவன் மனதில் ஆராவின் மீது உண்டான வன்மம் மட்டும் குறையவில்லை.

தன்னைக் கண்டால் பழகியவர்களே நாலு அடி தள்ளி நிற்கும் போது, ஒரு சிறுப்பெண் தன்னை அடித்துவிட்டாளே என்ற கோவம் நீர் பூத்த நெருப்பாக சக்தியின் மனதில் எரிந்து கொண்டே இருந்தது.

"நாளைக்கு காலையில ஆபிஸ் வருவள,அப்போ இருக்குடி உனக்கு, எவ்வளவு தைரியம் இருந்தா என்மேலையே கையை வெச்சிருப்பா" என்று நினைத்தவன் அவள் அடித்த கன்னத்தைத் தொட்டுப் பார்த்தான்.

அடுத்த நாள் காலையில் இன்டென்ஷிப் செய்வதற்கு Msv கம்பெனிக்கு மஞ்சள் காட்டு மைனாவாக குதுகலமாக கிளம்பினாள் ஆரா.

'இன்னிக்கு நான்தான் உன்னைய ட்ராப் பண்ணுவேன் அம்மு" என்றான் பரணி.

"நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் இனி உங்களோட தான் நான் கம்பெனிக்கு போவேன் அண்ணா, எனக்கு என்ன சந்தேகம்னா நீங்க ஒரு வாரம் தாக்குப் பிடிப்பிங்களானு தான் சந்தேகம்" என்றாள்.

ஆராவின் கூற்றைக் கேட்டு என்ன சொல்றா இவ என்றவாறு பரணிப் பார்க்க

இவர்களின் உரையாடலைக் கேட்டவாறு வந்த சாய்.
"ஏன் இவ்வளவு நாள் நான் உனக்கு டிரைவரா இருந்தது பத்தலையா? , இப்போ பரணியையும் டிரைவர் ஆக்கற.."என்றான்.

"உன்னோட வண்டியில வரதுக்கு உன்னோட கால்ல விழாத குறையா கெஞ்சிட்டு இருக்கணும், ஆனா அண்ணாவே வந்து என்னைய கூட்டிட்டு போறேன்னு சொல்லும்போது இனி நீ எனக்கு தேவையே இல்ல போடா, அண்ணாவோட தான் கம்பெனிக்கு போவேன்" என்றவள், சாய்க்கு பழிப்பு காட்டிவிட்டு பரணியுடன் கம்பெனி கிளம்பிவிட்டாள்..

போகும் வழியெங்கும் வாய் ஓயாமல் தங்கை பேசிக் கொண்டு வர, அண்ணன் அதை ரசித்துக் கொண்டே வந்தான்.

பரணியின் வண்டி சிக்னலில் நிற்கும் போது, ஆரா ஏதோ சொல்ல வாய்விட்டே சிரித்து விட்டான் பரணி..

இவர்களின் சிரிப்பை அவர்களின் அருகில் ரோய்ஸ் ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் காரில் இருந்த சக்தியும் பார்த்து விட்டான்..

அவர்களின் சிரிப்பு சத்தம் கேக்கவில்லை என்றாலும் உடல் மொழி வாயிலாக அவர்கள் சிரித்து சந்தோசமாக இருக்கிறார்கள் என்று புரிந்தது சக்திக்கு.

"ஓ இவன்தான் இவளோட லவரா! " என்று நினைத்தவன் சிக்னல் விழும்வரைக்கும் அவனின் பார்வை அவர்கள் இருவரையும் விட்டு நகரவில்லை..

பரணியுடன் பேசியபடியே திரும்பிய ஆரா அந்த காரை கவனித்து விட்டாள். இது அந்த கார் தானே, ச்சை சரியா தெரியலையே, அண்ணா இல்லைனா அந்த காரா இல்லையானு பார்த்துருக்கலாம்" என்று நினைத்துக் கொண்டிருக்க, அவள் மனமோ, "ஆமா உனக்கு ஊருல இருக்கிற கார் எல்லாம் அவன் கார் தான், வாயை மூடிட்டு வேலையை பாரு" என்று சத்தம் போட்டது.

சிக்னல் விழவும். "அண்ணா மெதுவா போ, எனக்கு இன்னும் டைம் இருக்கு" என்றாள் , எப்படியாவது வண்டியின் நம்பரை பார்த்துவிட வேண்டும் என்று..

அதை காருக்கு முன்னால் சென்று கூட திரும்பி பார்க்கலாம் என்று அப்போதைக்கு ஆராவிற்கு தோன்றவில்லை.

சக்தி யாரு?, இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட மாட்டான், பரணியின் வண்டி மெதுவாக போக அவர்கள் இருவரையும் கண்காணிப்பதற்காகவே பரணியை விட மெதுவாக காரை ஓட்டினான் சக்தி.

உனக்கு நானா? எனக்கு நீயா? என்று பார்த்துவிடலாம் என்று இருவர் வண்டியும் முன்னாலும் செல்லாமல், பின்னாலும் செல்லாமல் மெதுவாக சென்றது, இதனால் Msv கம்பெனியும் வந்துவிட்டது

கார், கம்பெனிக்கு தான் வந்துருக்கிறது என்று சந்தோசப்பட்டவள் அதன் எண்ணைப் பார்த்து உறுதிச் செய்துகொண்டாள்.

"சரி அம்மு, நான் கிளம்பறேன், ஈவினிங் வந்து பிக்அப் பண்ணிக்கறேன்" என்றான் பரணி.

"சரிண்ணா பை" என்று கையசைத்து பரணிக்கு விடைக் கொடுத்தவள்.. அவன் சென்றதும், அங்கு நின்ற ரோல்ஸ் காரின் அருகில் ஓடினாள்.
பரணி சென்றதும் காரின் அருகே வேகமாக ஓடினாள்,
இன்றாவது அந்த நெடியவனின் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில்.

பிறந்தநாள் விழாவில் நடந்த சம்பவத்தில் கொஞ்ச நாட்கள் வரையிலும் அந்த அரக்கனின் முகத்தைக் காண வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தாள் ஆரா,

ஆனால் இப்போதெல்லாம் அந்த நெடிய உருவம் கனவில் வந்து தொந்தரவு செய்யவும் ஏதோ மனதில் இனம் புரியா ஓர் உணர்வில் அரக்கன் ஆசை அரக்கனாக மாறியிருக்க, அவன் முகத்தைக் காணவேண்டும் என்று ஆவலில் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், அதில் கோவமும் வெறுப்பும் இருந்தது..

ஆனால் இதில் ஆசையும் ஆவலும் தான் இருக்கிறது.. அதனால் தான் அரக்கன் கூட ஆசை அரக்கனாக மாறியிருந்தான்.

வேகமாக வந்தவளை கார் கண்ணாடி வழியாகப் பார்த்த சக்தி , என்ன செய்கிறாள் இவள்? என்று அவளையேப் பார்த்தவன், எப்போதும் போல இன்றும் காரில் இருந்து இறங்காமல் இருந்தான்.

ஆரா கார் கதவை தட்டி பார்த்துவிட்டாள், உடைக்கப் போகிறேன் என்று மிரட்டிக் கூடப் பார்த்துவிட்டாள், ஆனால் சக்தி எப்போதும் போல கார் கதவை திறக்காமல் தான் இருந்தான்..

இவன் இப்போதைக்கு திறக்க மாட்டான் போலையே, என்று கார் கண்ணாடியில் தன் முகத்தை வைத்து உள்ளே இருக்கும் நபரை ஆரா பார்க்க முயல ,அவனோ அந்தச் சமயம் பார்த்து ஒரு பைல் கீழே விழுந்ததை குனிந்து எடுத்துக் கொண்டிருக்கவும் அவன் காணாமல் ஆராவிற்கு தான் ஏமாற்றமாக போனது..

அதற்குள் காவலாளி, காரின் அருகில் நின்று காருக்குள் எதையோ உற்றுப் பார்க்கும் ஆராவை சந்தேகமாக பார்த்தவர்,

"ஏம்மா, கார்கிட்ட நின்னு என்னமா பண்ணிட்டு இருக்க, அங்கலாம் நிக்கக் கூடாது போம்மா போ" என்று துரத்தினார்.

"அது, அது ஒன்னும் பண்ணலியே"

"என்ன வேலைக்கு வந்தியோ அதைப் பாரும்மா" என்றார் .

மற்றொரு முறை காருக்குள் பார்க்க வேண்டும் என்றவளின் எதிர்பார்ப்பில் லாரி மண்ணை அள்ளிக் கொட்டிய காவலாளியை முறைத்தவள். ச்சை என்று காலை தரையின் உதைத்துவிட்டு ஏமாற்றமாக அங்கிருந்து சென்றாள்.

"என்ன இந்த பொண்ணு ஒரு மார்க்கமா இருக்கு, பெரிய ஐயாகிட்ட கூட சமாளிச்சிக்கலாம், ஆனா இனி சின்னய்யா தான் வருவார்னு சொல்லிட்டாங்க, இந்தப் பொண்ணு சின்னய்யா கிட்டத் தாக்குப் பிடிக்குமானு தெரியலையே" என்று தனக்கு தானே பேசிக் கொண்டிருக்க அவன் பேசிவதை பின்னால் இருந்து கேட்ட சக்தி

"கண்டிப்பா தாக்குப் பிடிக்க மாட்டா அது தான் எனக்கும் வேணும் " என்று நினைத்துக் கொண்டு அவனது அறைக்குச் சென்றான்.

உள்ளே சென்ற ஆராவின் நினைவு முழுவதும் அந்த காரின் மீதே இருந்தது..

"அன்னிக்கு விது பர்த்டேக்கு போறப்ப தான் இந்த காரைப் பார்த்தேன், இப்போ இதே காரு கம்பெனியில எப்படி? என்று யோசித்தவளுக்கு மூளை வேலை செய்ய ஆரம்பித்தது...

அன்பரசுவின் அலுவலகம் இருந்த இரண்டாவது தளத்திற்கு சென்றாள்.

அங்கிருந்து வரவேற்பு பெண்ணிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவள், "சாரைப் பார்க்கணும்" என்றாள்.

"வெயிட் பண்ணுங்க மேடம்", என்று அங்கிருந்த சோபாவை காட்டியவள், "நான் சார்க்கு இன்பார்ம் பண்ணிடறேன், சார் வர சொல்லும் போது போலாம்" என்றாள்.

"ஓகே தேங்க்யூ" என்று அவள் காட்டிய சோபாவில் அமர்ந்தாள் ஆரா..

அவளைச் சுற்றி வேலையாட்கள் வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை ஒருமுறை வேடிக்கைப் பார்த்தவளின் மனம் மீண்டும் அந்த காரிடமும் நெடிய உருவத்திடமும் சென்றது.

பிறந்தநாள் விழாவிற்கு பின் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் காரை எங்குப் பார்த்தேன் என்று ஆரா யோசிக்க, அவள் பார்த்த இடமெல்லாம் விதுர்ணாவிற்கு சொந்தமான இடமாக இருந்தது.

"அப்போ இந்தக் கார் ஒன்னு விதுவோட முதல் அண்ணன் முகிலனுதா இருக்கனும், இல்லையா, இரண்டாவது அண்ணன் சக்தியோடதா இருக்கனும், ரைட்,"என்று சொன்னவள்..

முகிலன் உயரத்தையும், அந்த நெடிய உருவத்தின் உயரத்தையும்,ஒப்பிட்டுப் பார்க்க முயன்றாள்.

"ச்சை முகிலனோட ஹைட் நியாபகத்துக்கு வரமாட்டிங்குதே! ஒருவேளை ஒரு தடவப் பார்த்ததால நியாபகம் வரலையா?, அப்போ அந்த வளர்ந்து கெட்டவன் என்கிட்ட அடிவாங்குனானே அவனை கம்பேர் பண்ணி பார்க்கலாமா?" என்று நினைத்தவள், நினைத்த அடுத்த நொடி அதை செய்தும் பார்த்துவிட்டாள். அவனையும் ஒருதடவை தான் பார்த்திருக்கிறாள் என்பதை மறந்து போனாள், ஆனால் சக்தியோ அவள் மனதில் ஆழ பதிந்துவிட்டான்.

"ஹேய் மேச் ஆகுது, அப்போ அவன் தான் இவன்" என்று துள்ளிக் குதித்தவளை அங்கிருந்து எல்லோரும் பைத்தியத்தைப் பார்ப்பது போல் பார்த்தனர்.

அவர்களின் பார்வையை உணர்ந்த ஆரா , "ஹீஹீ" என்று சிரித்து அசடு வழிந்தாள்..

"இங்க ஆரானு யாராவது வந்துருக்காங்களா? " என்று சக்தியின் பிஏ ஷீலா கேட்கவும்..

"நான்தான் மேடம்" என்று எழுந்து நின்றாள் ஆரா..

"சார் உங்களை வர சொல்றாங்க" என்று ஆராவை மேலிருந்து கீழ் வரை பார்வையால் துளைத்தாள் ஆரா.

மஞ்சள் நிறத்தில் டாப்பும், வெள்ளை நிறத்தில் பேண்டும், அதே நிறத்தில் துப்பட்டாவும் அணிந்திருந்தாள் ஆரா, தலைமுடியை வாரிப் பின்னலிட்டு அதில் மல்லிகை பூவையும் சூடியிருந்தாள்.

ஏதோ கோவிலுக்கு செல்வது போல் கிளம்பி வந்திருந்தவளைப் ஏளனமாக பார்த்தவாறு நின்றாள் அந்த நவநாகரிக மங்கை ஷீலா .

தெரியாத இடம், தெரியாத நபர்கள் என்று ஒரு புறம் , ஷீலாவின் பார்வை ஒருபுறம் என்று அனைத்தும் சேர்ந்து ஆராவிற்கு ஒருவித சங்கடத்தைக் கொடுத்தாலும், இதுவரை எதற்காகவும் துவண்டு நிற்காதவள், இனியும் நிற்கக்கூடாது என்பதை வீட்டில் இருந்து கிளம்பும் போதே உறுதி எடுத்துக் கொண்டு தான் வந்திருந்தாள்.

ஷீலாவின் பார்வையை பொருட்படுத்தாமல் சக்தியின் அறையை நோக்கி சென்றாள். அவளைப் பொறுத்தவரைக்கும் அன்பரசு தான் அங்கு இருப்பார் அவர்தான் தன்னை அழைத்திருப்பார் என்று நினைத்தாள், ஆனால் அங்கு சக்தி இருக்கிறான் என்று ஆராவிற்கு தெரியவில்லை

"மே ஐ கமின் சார்." என்று கதவை தட்டவும்,

"ம்ம் கமின்" என்ற வார்த்தை மட்டும் சத்தமாக உள்ளே இருந்து வந்தது.

கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற ஆரா, அங்கு கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு இவளின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த சக்தியைக் கண்டதும் அதிர்ச்சியாகி அப்படியே நின்றுவிட்டாள்.

"வெல்கம் டூ மை ஆபீஸ்" என்றான் சக்தி இதழ் ஓரம் புன்னகையை சிந்தியவாறு..

ஆரா எதுவும் பேசாமல் சக்தியை முறைத்த வண்ணம் இருந்தவள் இப்படியே திரும்பி ஓடிவிடலாமா என்று நினைத்துக் கொண்டிருக்க, அவளைத் தொடர்ந்து வந்த ஷீலா , ஆராவை பார்த்துக்கொண்டே சக்தியை நெருங்கி, "சார் இன்னைக்கு சிமெண்ட் லோட் வரது , இந்த ப்ராஜெக்ட்க்கு எவ்வளவு தேவைனு சொன்னீங்கனா அதை ஆடர் பண்ணிடலாம்" என்றாள்.

"ம்ம்" என்று யோசித்தவன், "நான் என்ன பண்றதுனு அப்புறம் சொல்றேன், அதுவரைக்கும் நீங்க என்ன பண்றீங்கனா?" என்று இழுத்தவனை,

'என்ன பண்ணனும்' என்பது போல் பார்த்தாள் ஷீலா.

"கொஞ்ச நேரத்துக்கு யாரும் என்னைய டிஸ்டர்ப் பண்ணாத அளவுக்கு வெளிய நின்னுப் பார்த்துக்கோங்க" என்றான் சாதாரணமாக.

சக்தி சொன்னதைப் புரிந்துகொள்ள ஷீலாவிற்கு ஒரு நிமிடம் ஆனது.. "இவன் என்ன, என்னைய மாமா வேலைப் பார்க்க சொல்றானா?" என்று நினைத்து அவனைப் பார்க்க.

அவன் பார்வையும், "ஆமா நான் அதை தான் சொன்னேன்" என்றது..

"இதற்கு எல்லாம் காரணம் இவ தான், வந்த அன்னைக்கே என்னைய வெளிய போக வெச்சிட்டா" என்று ஷீலாவின் வன்மம் ஆராவின் மீது திரும்பியது.. ஆராவை முறைத்துக் கொண்டே வெளியே போனாள் ஷீலா.

அவள் போனதும், "நீ இங்க எப்படி வந்த?" என்றாள் ஆரா.

"என்னோட கம்பெனிக்கு வந்து என்னைய எப்படி வந்தனு கேக்குறப் பார்த்தியா, அங்க நிற்கர நீ" என்றவன். "அது என்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாம வா போனு பேசற" என்றான் , அவன் கண்கள் கோவத்தில் சிவந்து இருந்தது.

சக்தியின் குரலில் இருந்த கம்பீரம், ஆராவை ஏதோ செய்ய, அவள் தன் வசம் இழப்பது போல் தோன்றவும்
தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டவள், "நான் அந்த மீனிங்ல சொல்லல, ஒரு ரவுடிக்கு கன்ஸ்டரக்க்ஷன் கம்பெனியில என்ன வேலையினு பார்த்தேன், அதுமில்லாம ஒரு ரவுடிக்கு என்ன மரியாதை கேக்குது " என்றாள் அவனுக்கு சிறிதும் சலிக்காமல் பதில் குடுத்தவாறு.

"ஓ" என்றவன், ஆரா நெருங்கி நின்று அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தான்.

மை பூசாமல் இயற்கையாக இமைகள் கருமையாக இருக்க, காந்தம் போல் அவனை அவள் பக்கம் ஈர்த்தது.

அந்த ஈர்ப்பில் இருந்து மீளாமலே, "அப்போ நான் தான்னு தெரிஞ்சும் என்மேல கை வெச்சிருக்க, உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்?" என்று கோவமாக கேட்க வேண்டிய கேள்வியை, அவள் கன்னதில் உரசிக் கொண்டிருந்த முடியை ஒரு விரலால் விலக்கி விட்டப்படி குழைவாக் கேட்டான்.

சக்தி நெருக்கம் ஆராவின் வயிற்றில் ஒரு உணர்வை உருவாக்கியது.. அந்த உணர்வு எப்படி இருந்தது என்றால் ராட்டினத்தின் உச்சில் இருந்து வேகமாக கீழே வரும் போது அடிவயிற்றில் ஒரு உணர்வு தோன்றுமே அதுப்போல் இருந்தது.

அதை சமாளித்துக் கொண்டு
"இப்போ ஜஸ்ட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் டவுட்ல தான் இருந்தேன், இப்போ கன்பார்ம் பண்ணிட்டேன் அது நீதான்னு,"என்று நெருக்கம் தந்த மயக்கத்தில் திக்கி திணறி சொல்லிவிட்டாள்.

"ஆமா நான்தான், அதுக்கு இப்போ என்ன..?" என்றவன் அவளை விட்டு நான்கு அடி தள்ளிச் சென்றான்.

சக்தி விலகிப் போனதும் தைரியம் பெற்றவளாக "நான் உன்னைய கண்டுபிடிச்சிட கூடாதுனு தானே, எனக்கு பயந்து ஒவ்வொரு தடவையும் காரை விட்டு இறங்காம இருந்த.."

"ஓ அம்மிணிக்கு அந்த நெனைப்பு வேற இருக்கா" என்று நக்கல் செய்தவன், "உனக்கு பயந்து நான் வெளிய வரல.. என் ஸ்டேட்டஸ்க்கு எல்லாம் உங்கிட்ட இறங்கி சண்டைப் போடணுமானு நினைச்சிதான் இறங்கி வரல , என்னோட காரைப் பார்த்தில அதுக்கு பக்கதுல நிற்கக்கூட உனக்கு தகுதி இல்லைங்கறப்ப ,அதை வெச்சிருக்க என்கிட்ட பேச ஒரு தகுதி வேணும்ல" என்றான்.

சக்தி சொன்னதைக் கேட்டதும் வேற ஒரு பொண்ணாக இருந்திருந்தால் அந்த இடத்திலையே அழுதிருப்பாள், இன்டென்ஷிபும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று அங்கிருந்து ஓடியிருப்பாள். ஆனால் ஆரா அப்படி எதுவும் செய்யாமல் சக்தியைப் பார்த்து நக்கலாக சிரித்தப்படி நின்றிருக்க .

"ஏய் எதுக்குடி இப்போ சிரிக்கர?" என்றான் கடுப்பாக

"அவசியமா சொல்லியே ஆகணுமா..?" என்று கேட்டவள் , கைகள் இரண்டையும் வயிற்றுக்கு குறுக்காகக் கட்டிக் கொண்டாள்.

அவள் கண்களில் திமிர் தாண்டவம் ஆடியது.
 
#2
N

Nirmala vandhachu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement