தீத்திரள் ஆரமே -8

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:குளித்தலை-மணப்பறை வழியில் உள்ள ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் தானாய் நடக்கிறது. முக்கியமாக, இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

“விது இப்போ எதுக்கு மூஞ்சை இப்படி வெச்சிருக்க?,” என்ற பார்கவி..

“ஏங்க அதுதான் விதுவுக்கு இந்த வருசத்தோட படிப்பு முடியுதுல, வரன் பார்க்க ஆரம்பிச்சடலாம்.. இப்போல இருந்து பார்த்தா தான் ஒரு வருசத்துக்குள்ள நல்ல வரனா அமையும்” என்றார்.

அதை கேட்டதும் விதுர்ணாவிற்கு புரையேறியது.. சாப்பிட்டுக் கொண்டியிருந்தவள் தண்ணீரை குடித்துவிட்டு..

“இப்போ எனக்கு என்ன கல்யாணத்துக்கு அவசரம், அம்மா நீங்க சும்மாவே இருக்க மாட்டிங்களா?, எனக்கு முன்னாடி சக்தி அண்ணா இருக்காங்கள, அவருக்கு பொண்ணு பாருங்க” என்று சக்தியை கோர்த்துவிட்டாள் விதுர்ணா..

“உன்னைய சொன்னா, அதுக்கு என்ன பதிலோ, அதை மட்டும் சொல்லு” என்றான்.

“இல்ல விது, முதல பொண்ணை கல்யாணம் பண்ணி குடுத்துட்டு தான், பையனுக்கு பண்ணனும்,நீ இன்னும் சின்ன பொண்ணு இல்லையே, 21 வயசு ஆகுதுல , அப்புறம் என்ன?”என்றார்

“21 வயசுலாம் ஒரு வயசாம்மா.. இன்னும் 5 வருஷம் சந்தோசமா இருந்துக்கறேனே, விட்டுருங்க ப்ளீஸ்” என்றாள்.

விதுவின் ஐந்து வருட கணக்கு எதற்கு என்றால் அப்போது தான் சாயின் இரு அண்ணன்களுக்கும் கல்யாணம் ஆகியிருக்கும், அதன்பின் தான் தங்களின் காதலைப் பற்றி வீட்டில் பேச முடியும் என்பதால் தான்.

“போதுமா ஐஞ்சு வருஷம், ரொம்ப கம்மியா இருக்கு விது பேசாம ஸ்ட்ரெய்ட்டா அறுவதாவது கல்யாணம் பண்ணிக்கோ, இல்லைனா அதைவிட சிம்பிள் ஔவையாரா போறது தான் எது பெட்டர்னு யோசிச்சி சொல்லு” என்றான் முகிலன்.

அதை கேட்டு எல்லோரும் சிரிக்க...

“அண்ணா திஸ் இஸ் டூ மச்..” என்று சிணுங்கினாள் விது.

“அப்போ நீ சொல்றது என்ன த்ரீ மச்சா?, நடக்க வேண்டியது எல்லாம் காலாக் காலத்துக்கு நடந்தடணும், அப்படி நடந்தும் மூணு வருஷம் ஆகி எனக்கு இன்னும் குழந்தை இல்லையே” என்று சந்தோசமாக ஆரம்பித்து ஏக்கத்தில் முடித்தாள் கிருத்திகா.

“அண்ணி... உங்களுக்கு நிறைய தடவை சொல்லிட்டோம்” என்று சக்தி அழுத்தமாக சொல்ல கண்களின் ஓரம் துளிர்த்திருந்த கண்ணீரை விரலால் சுண்டிவிட்டாள் கிருத்திகா.

“இந்த விசியத்தைப்,பற்றி இனி யாரும் பேசாதீங்க, முதல்ல விதுவுக்கு காலேஜ் முடியட்டும், அப்புறம் கல்யாணத்தை பத்தி பேசிக்கலாம்” என்றான் சக்தி.

அதன்பின் இதை பற்றி யாராவது பேசுவார்களா??எல்லோரும் அமைதியாக சாப்பிட்டு விட்டு அவரவர் அறைக்கு சென்றனர்.

சக்தி சாப்பிட்டு விட்டு பாட்டியை அழைத்துக் கொண்டு போய் அவரது அறையில் விட்டான்,

"பாட்டு ரெஸ்ட் எடுங்க நான் காலையில வந்து உங்களைப்போல் பார்க்கறேன்"

"வீரா" என்று சக்தியின் கையை பற்றினார்.

“சொல்லுங்க பாட்டி”

“உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கா வீரா?”

“எந்த பொண்ணை?, இப்படி மொட்டையா கேட்டா, நான் என்ன சொல்றது?” என்றான்..

“விதுவோட பிரண்ட்னு சொன்னாங்களே, அந்த பொண்ணு “

“அந்த பொண்ணுக்கு என்ன..?”

“அதைப்பத்தி பேசும் போது உன்னோட குரல எதுவோ இருந்த மாதிரி இருந்ததே” என்றார் சந்தேகமாக.

“அப்படிலாம் எதுவும் இல்ல.. நீங்க கண்டதையும் நினைக்காதீங்க, அமைதியா படுத்துத் தூங்குங்க.. எதுவா இருந்தாலும் உங்ககிட்ட தானே முதல சொல்லுவேன், அப்படி இருக்கும் போது இதை மட்டும் சொல்லாம விட்டுருவேனா?” என்றான்...

ஆமாம்.. சக்தி சொல்வது உண்மை தான், அவன் மனதில் எந்த விசியம் இருந்தாலும் அதை முதலில் அவன் பாட்டியிடம் தான் சொல்வான்.. அவனை அதிகம் வளர்த்தது பாட்டி தான் என்பதால் கூட அவர்களுக்கு இடையே பிணைப்பு இருந்திருக்கலாம், அனைவருக்கும் சக்தியாக இருப்பவன்,பாட்டிக்கு மட்டும் என்றும் வீராவாக இருப்பான்.

ஆனால் யாருக்கும் தெரியாமல் அவன் செய்யும் சில வேலையால் அவனை ஈஸ்வர் என்று அழைப்பார் சிவராமன்.

மொத்ததில் சக்தியின் முழு பெயர் சக்தி வீரேஷ்வர்... அவன் பெயரைப் போலவே குணத்திலும் அந்த ஈஸ்வரனை போன்று தான் இருப்பான்.

கடவுள் ஈஸ்வரனோ நெற்றிக் கண்ணை திறந்து எதிரில் இருப்பவரை பஸ்ப்பம் ஆக்குவார்,, ஆனால் இந்த ஈஸ்வரோ தவறு என்றால் கையில் வைத்திருக்கும் கன்னை வைத்து சுட்டு பஸ்பம் ஆக்கிவிடுவான்.

சக்தியின் இன்னொரு முகத்தை யாரும் அறிந்திருக்கவில்லை.

பாட்டி தூங்கும் வரை அவருடன் இருந்தவன்... அதன்பின் தான் அவனுடைய அறைக்குச் சென்றான்.

சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்ற விது சாய்க்கு போன் செய்தாள்..

அந்தநேரம் சாய் ஹாலில் இருந்ததால் விதுர்ணாவின் அழைப்பை அவன் ஏற்கவில்லை...

போனைத் தூக்கித் தூரப் போட்டவள்.. சாயுடன் உண்டான காதலை நினைத்துப் பார்த்தாள்.

பிறந்தநாள் விழாவிற்கு ஆராவுடன் வந்த சாய், ஆரா ஏற்படுத்திக் கொடுத்த தனிமையில் தன் காதலை விதுர்ணாவிடம் சொன்னான்..

இதை தான் விதுர்ணாவும் எதிர்ப்பார்த்தாள். இருவருக்கும் இருவரின் மீது எதனால் காதல் வந்தது என்று கேட்டால் இருவருக்குமே சொல்லத் தெரியாது..

சாய் காதலைச் சொன்னதும் விதுர்ணா சம்மதமும் சொல்லிவிட்டாள்.

அதன்பிறகு இருவரும் சேர்ந்து வெளியே சென்று தங்கள் காதல் என்னும் செடியை தண்ணீர் ஊற்றி வளர்த்தனர்..

அதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் விது, அப்போது சாயிக்கென்று வைத்திருக்கும் பிரத்யேக ரிங்க்டோன் ஒலிக்கவும் போனை கையில் எடுத்து அழைப்பை ஏற்றாள்.

“ம்ம், சொல்லுங்க”

“நான் கீழே இருந்தேன் பேபி, அதான் போனை எடுக்க முடியல ,சாரி” , என்றவன் “சொல்லு என்ன இந்த நேரத்துக்கு கூப்பிட்டுருக்க?, ஏதாவது விஷயமா?” என்றான்.

“ம்ம், வீட்டுல அதுக்குள்ள எனக்கு வரன் பார்க்கணும்னு சொல்றாங்க ,எனக்கு பயமா இருக்கு சாய்.”

“உனக்கு என்ன வயசாகுது மாப்பிள்ளை பார்க்க, அதுலாம் பண்ண மாட்டாங்க.. சும்மாதான் சொல்லிருப்பாங்க..” என்றவன் , “கொஞ்சம் நாள் வெயிட் பண்ணு பேபி, சசி அண்ணாவுக்கு கல்யாணம் ஆகி, பரணி அண்ணாவுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சதும், நம்ப லவ்வை வீட்டுல சொல்லிடறேன்” என்றான் கெஞ்சலாக..

“ஆராவும் இருக்காள.. அவளை விட்டுட்ட, உனக்கு முன்னாடி மூனு பேருக்கு கல்யாணம் ஆகணும், அவ்வளவு நாள் எல்லாம், எங்க வீட்டுல விட்டு வைப்பாங்களானு தெரியல சாய்.. அதை நினைச்சா தான் பயமா இருக்கு” என்றாள்.

“நான் என்ன பண்ணட்டும் சொல்லு.. அவங்களுக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணுனா, அவங்களுக்கு ஏதாவது குறை இருக்கு, அதான் சின்ன பையன் கல்யாணம் பண்ணிட்டான்னு சொல்லுவாங்க” என்றான்.

“இப்படியுமா பேசுவாங்க!!!” என்று அதிசயமாக கேட்டாள் விது .

“உங்க ஹைசொசைட்டில இதை எல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டாங்க, ஆனா எங்க மிடில் கிளாஸ் சொசைட்டில இது எல்லாம் பெருசு தான் விது”.

“சரி சாய் இப்போதைக்கு எதும் பண்ண மாட்டாங்க, அப்படி ஏதாவது பண்ணுனா, நான் பார்த்துக்கறேன்” என்றாள்.

அதன்பின் இருவரும் காதலர்களாக வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

ஆதவன் தன் செங்கதிரை பூமியில் தூவிக் கொண்டிருக்க, தூக்கம் வராமல் அலை மோதிக் கொண்டிருந்தாள் ஆரா..

தூங்கலாம் என்றால் விதுவின் பிறந்தநாள் விழாவில் கண்ட நிழல் போல் தெரிந்த நெடிய உருவம் கனவில் வந்து தொல்லை செய்தது.

சரி தூங்கினால் தானே பிரச்சனை என்று விழித்திருந்தால், சசிக்கு அடிப்பட்டதும், விது செய்ததும் நினைவில் வந்து இம்சை செய்தது. என்ன தான் செய்வது என்று நினைத்தவள், அடுத்த முறை அந்த காரைப் பார்க்கும் போது கார் கதவை தட்டியாவது, அந்த நெடிய உருவத்தை பார்த்து விட வேண்டும் என்று நினைத்தாள்.

‘நீ கார் கண்ணாடிக்கு கிஸ் பண்ணியே அவன் வெளிய வரல, நீ கார்கதவை தட்டினா மட்டும் வந்துடவா போறான்?’ என்ற மனதை அடக்கியவள் “அந்த வளர்ந்து கெட்டவனை வெளியக் கொண்டு வரேன்” என்று சவால் விட்டாள்.

அதன்பின் கீழே செல்லாமலே கல்லூரிக்கு கிளம்பியவள்..கீழேச் சென்று திலகாவிடம் பேசாமல் , தானே தட்டில் இட்லி வைத்து சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.

“ஏய் அம்மு எங்க தனியா கிளம்பிட்ட,? இரு சாய் வந்துடுவான்” என்றவர்.. “இது என்ன புது பழக்கம் தனியா போறது” என்று கேட்டார்.

“வேண்டாம் நான் பஸ்லையே போயிப்பேன், நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை” என்றவள், அடுத்து அவர் சொல்வதை கேட்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அதன்பின் சாய் கிளம்பி வந்தவன். “அம்மு, அடியே எனக்கு நேரம் ஆயிடுச்சி, கிளம்பிட்டியா?”என்று . கீழே ஹாலில் ஆரா இல்லை என்றதும் சத்தம் போட்டான்.

“அவ இருந்தா தானே வருவா, எதுக்கு இப்படி சத்தம் போடற?, சசி வலியில நைட் முழுக்க தூங்காம கஷ்டப்பட்டு, இப்போ தான் தூங்கறான், நீ போடுற சத்தத்துல எழுந்துடப் போறான் “ என்றார் திலகா..

“ஏம்மா, இன்னிக்கும் அம்முவை அப்பாவே கூட்டிட்டு போய்ட்டாரா..? வீடே ரொம்ப அமைதியா இருக்கு” என்றான்.

“நான் இங்க இருக்கேன்” என்று சட்டை கையை மடித்து விட்டப்படி வந்தார் வேலு..

“அப்போ, பரணியும் இன்னும் கிளம்பல , இவ யார் கூட போனா?” என்றான்.

நேற்று நடந்தைச் சொன்னவர்.. “காலையில எழுந்ததுல இருந்தே கீழே வரவே இல்ல, காலேஜ் போகும் போதுதான் கீழே வந்தவ, பஸ்ல போறேன்னு போய்ட்டா,நான் சொல்றதை காது குடுத்து கேக்கற அளவுக்கு பொறுமை எல்லாம் அவளுக்கு இல்ல” என்றவர். “மதியம் டப்பாவை மறந்துட்டா அதையாவது கொண்டு போய் குடு” என்றார்.

“நான் என்ன அவளுக்கு சர்வண்டா.. இவ்வளவு நாள் அவளுக்கு டிரைவர் வேலைப் பார்த்தது பத்தலை,இதுல சர்வண்ட் வேலையும் சேர்த்து பார்க்கணுமோ, அவளுக்கே அவ்வளவு திமிர் இருக்கும் போது எனக்கு இருக்காதா..? எனக்கு இட்லி போடுங்க” என்றான்...

“அவதான் கோவத்துல போறானா?, நீயும் ஏண்டா இப்படி பண்ற?”,

“சும்மா அவளுக்கே சப்போர்ட் பண்ணாதீங்கம்மா... எனக்கு கோவம் கோவமா வருது.. வீட்டோட நிலைமையை புரிஞ்சிக்காத பொண்ணு என்ன பொண்ணு.?” என்றவன், கோவத்தில் திலகா வைத்த இட்லியையும் சாப்பிடாமல் எழுந்தான்.

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு உனக்கு இவ்வளவு கோவம்...? சாப்பிட்டு போடா”என்று கத்தினார்.

“எனக்கு வேண்டா, இதையும் அவளுக்கு எடுத்து வெச்சி, அவ வந்ததும் கொட்டிக்க சொல்லுங்க” என்றவன், அங்கு தன் தந்தை அமர்ந்திருக்கிறார் என்பதை கூடப் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டான்.

கல்லூரி சென்ற ஆரா.. வகுப்பில் விதுர்ணாவிடம் பேசவே இல்ல..
விதுவே வந்து பேசியும் பேசாமல் அவளை தவிர்த்துக் கொண்டிருந்தாள் ஆரா.

தன் பக்க நியாயத்தை சொல்ல நேரம் கிடைக்காமல் போகவும், விதுவும் ஆராவை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தாள்.

மதியம் சாப்பிடும் போது எப்போதும் இருவரும் சேர்ந்து தான் சாப்பிடுவர்.. ஆனால் இன்றோ கிளாஸ் முடிந்த அடுத்த நொடி ஆரா எங்கு சென்றாள் என்று கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு காணாமல் போய்விட்டாள்.

விதுவோ ஆராவை தேடிவிட்டு அவள் இல்லை என்றதும் மனம் சோர்ந்தாள்.

காலையில் கோவத்தில் இருந்த சாய், மதியம் மனம் தாங்காமல் தங்கையைப் பார்க்க வந்தான்.. ஆனால் தங்கைக்கு பதில் காதலி மட்டும் தனியாக வகுப்பிற்கு வெளியே இருந்த மரத்தடி பெஞ்சில் உக்கார்ந்திருக்கவும்..

“என்ன பேபி தனியா இங்க உக்காந்திருக்க?, பிசாசு எங்க போய்ச்சி எப்போவும் உன்னோட தானே சுத்திட்டு இருக்கும் ” என்றான் சாதாரணமாக.

ஏற்கனவே ஆராவின் ஒதுக்கத்தால் மனம் வெதும்பிக் கொண்டிருந்த விது சாய் கேட்டதும் அழுதுவிட்டாள்.

“ஏய் இப்போ நான் என்ன கேட்டேன்னு அழுவற, அழாதடி யாராவதுப் பார்த்தா நான்தான் ஏதோ செஞ்சிட்டேன்னு நினைப்பாங்க, முதல கண்ணை துடை?” என்று சாய் அவள் கண்களை துடைத்து விட..

ஒரு மீட்டிங் சென்றதால் சக்திக்கு என்று வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட உணவு அப்படியே இருந்தது,
விதுர்ணாவையும் சாப்பிட அழைத்துச் சென்று இன்று அவளோடு சேர்ந்து சாப்பிடலாம் என்று அங்கு வந்த சக்தி, சாய் தன் தங்கையின் கன்னதை தடவுவதைப் பார்த்துவிட்டான்.

“ஏய்...” என்று ஒரே எட்டில் சக்தி,சாயின் சட்டையைப் பிடித்து விட

இதை உணவு வாங்குவதற்காக கேண்டீன் சென்று வந்த ஆரா பார்த்து விட்டாள்..

வேகமாக அவர்களை நோக்கி வருவதற்குள் சக்தி கோவத்தில் சாயை அறைந்து விட்டான். அதில் கோவம் கொண்ட ஆரா வந்த வேகத்தில் சாயை இழுத்து தள்ளி விட்டு சக்தியின் கன்னதில் அடித்துவிட்டாள்.

இதெல்லாம் என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள் நடந்து முடிந்திருந்தது..

“ஆரா என்ன காரியம் பண்ணுன..? இவர் யாரு தெரியுமா? எங்க அண்ணா..” என்றாள் விது கண்ணீருடன் கூடிய கோவத்தில்..

“யாரா இருந்தா எனக்கு என்ன,? என்னோட அண்ணா மேல கை வெச்சா நான் அடிப்பேன்..” என்றவள்.. “உனக்கு அறிவு இல்லையாடா?, இவன்கிட்டலாம் அடி வாங்கிட்டு நிற்கர?” என்று சாயையும் திட்டி விட்டு, “வா” என்று கை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஆரா உணர்ச்சி வேகத்தில் செய்த தவறு தான் என்றாலும் தவறு தவறு தானே,

ஏற்கனவே ஒரு அண்ணன் அடிப்பட்டு இருப்பதையே தாங்க முடியாமல் மனம் பொசுங்கி கொண்டிருந்தாள். இதில் இன்னொரு அண்ணனையும், எவனோ ஒருத்தன் அடிக்கிறான் என்றதும், பொறுக்க முடியாமல் வந்த வேகத்தில் சக்தியின் மீது கை வைத்து விட்டாள். தெரியாமல் செய்த தவறு தான் என்றாலும் இதனால பின்னால் வரும் பிரச்சனைகள் ஏராளம் என்று அந்த பேதைக்கு தெரியவில்லை.

“அண்ணா, சாரிண்ணா அவ பண்ணது பெரிய தப்பு, அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன், அண்ணா சாரிண்ணா, என்னால தான் எல்லாமே அவ பேசலைன்னு பீல் பண்ணிட்டு இருக்க போய் தான் இவ்வளவு பிரச்சனையும் ” என்றாள் அழுதபடியே.

அடித்தவள் அங்கிருந்து சென்ற பின்பும் சக்தி அப்படியே நின்றிருந்தான், ஆராவிடம் கோவப்படவும் இல்லை, எதிர்த்து பேசவும் இல்லை.

விது நடந்தை நினைத்து அழுது கொண்டிருக்க, “அவன் எதுக்கு உன் கன்னத்தை பிடிச்சிட்டு இருந்தான்” என்றான்.

இந்த கேள்வியை வந்ததும் கேட்டிருக்க வேண்டும், அவசரப் பட்டு கை வைக்கப் போய் தான் இப்போது பெரும் பிரச்சனையில் முடிந்திருந்தது.

“அது.. அவர் ஆராவோட அண்ணா.. அவளைக் கேட்டு வந்தாங்க, நான் ஆரா என்கிட்ட பேசலைன்னு அழுதுட்டு இருந்தேன், அதுக்கு ஏன் அழற?, அழாதன்னு கண்ணீரை துடைச்சி விட்டாங்க, அவ்வளவு தான் அண்ணா ” என்று அழுதபடியே சொன்னாள்.

“ஓ” என்றவன், எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

தனது அறைக்கு சென்று சுழல் நாற்காலியில் அமர்ந்தவன் கொஞ்சம் அங்கும் இங்கும் சுழன்று கொண்டே எதையோ தீவிரமாக யோசித்தான்.

பின்பு தன் தந்தை அன்பரசுவிற்கு போன் செய்தான்..

“சொல்லுப்பா சக்தி”.

“அப்பா நெக்ஸ்ட் வீக்ல இருந்து புது ப்ராஜெக்ட் ஒன்னும் வருது, அதனால நீங்க காலேஜை பார்த்துக்கோங்க, நான் கம்பெனியை பார்த்துக்கறேன்” என்றான்.

எப்போதும் சக்தி சொல்வது மறுவார்த்தை கூறாதவர் இன்றும் அதையே செய்தார்.

சக்தியின் மனதில் என்ன எண்ணம் இருந்ததோ ஆரா இன்டென்ஷிப் செய்யும் நாளில் இருந்து இவனும் கம்பெனிக்கு வருதாகச் சொல்லிருந்தான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top