தீத்திரள் ஆரமே-31

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:அரகண்டநல்லூர்க் குடைவரை என்பது, விழுப்புரம் மாவட்டத்தின் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயில் ஆகும். இங்குள்ள பெரிய பாறை ஒன்றின் கீழ்ப்பகுதியில் இக்கோயில் குடையப்பட்டு உள்ளது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பட்ட இக்குடைவரைப் பணி முற்றுப்பெறாமல் இடையிலேயே கைவிடப்பட்டுள்ளது. கைவிடப்பட்டதற்கான காரணங்கள் அறியப்படவில்லை. இந்தக் குடைவரைக்கு முன்புறம் “ஆய்குளம்” என அழைக்கப்படும் குளம் ஒன்றும் காணப்படுகிறது.

இங்குள்ள மண்டபத்தில் இரண்டு வரிசைகளில் தூண்கள் அமைந்துள்ளன, ஒவ்வொரு வரிசையிலும் நான்கு பெரிய சதுர வடிவிலான முழுத்தூண்களும், பக்கச் சுவர்களை அண்டி வரிசைக்கு இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. தூண்களில் சதுரம், எண்கோணப்பட்டை போன்ற வழமையான கூறுகள் உருவாக்கப்படவில்லை. பின்புறச் சுவரில் உள்ள அடையாளங்களைக் கொண்டு ஐந்து கருவறைகளை அமைப்பதற்கான திட்டங்கள் இருந்ததையும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அறிய முடிகிறது. இக்குடைவரையின் முகப்பும், மேற்பகுதியும், தரையும் முழுமையாகச் செப்பம் செய்யப்படாத நிலையிலேயே உள்ளன.

தற்போது இக்குடைவரையை அண்டிப் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட கோயில்கள் காணப்படுகின்றன.

சக்தி ஆரா வீட்டில் தான் இருப்பாள் என்ற நம்பிக்கையில் தான் போன் செய்த கிஷோரிடம் ஒருவன் போதும் என்று சொன்னான்.

நாம் நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் கடவுளை வணங்குவதையே மறந்துவிடுவோம் என்று தானோ என்னவோ கடவுள் நாம் எதிர்பாராததை நடத்தி வைத்து வேடிக்கைப் பார்ப்பார்.

பாலாவிடம் எப்படியாவது பேசி நிச்சியத்திற்கு அழைக்க வேண்டும் என்று முயற்சி செய்ய...அவளுடைய புது போனில் பாலாவின் எண் மட்டும் இல்லாமல் இருந்தது.

"இந்த காட்டு எருமை அவனோட நம்பரை மட்டும் டெலீட் பண்ணிட்டு குடுத்துருக்கான் சரியான பைத்தியம்" என்று புலம்பியவள்... பாலாவை இடம் மாற்றம் செய்த கன்ஸ்ட்ரக்சன் குடோனிற்கு செல்லலாம் என்று முடிவு செய்து,திலகாவிடம் சென்று நின்றாள்.

ஆராவைப் பார்த்த திலகா "என்ன அம்மு ஏதாவது சாப்பிடரியா...?என்று கேட்டார்.

"அதுலாம் வேண்டாம்மா' என்றவள், "அம்மா" என்று ராகம் போட்டாள்.

"ம்ம் சொல்லு" என்றவர் சசிக்கு நலங்கு வைக்க தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

"நிச்சியத்துக்கு என்னோட பிரண்ட்சை இன்வைட் பண்ணிட்டு வந்தரேம்மா"

"போன் பண்ணி சொல்லு அம்மு வீட்டுல வேலை இருக்குல ... பசங்களும் அங்க இங்கனு அலைஞ்சிட்டு இருக்காங்க அவங்களையும் உனக்கு துணைக்கு அனுப்ப முடியாது, உன்னைய தனியா அனுப்ப முடியுமா? சொல்லு..."

"போன் நம்பர் எப்படியோ மிஸ் ஆயிடுச்சிம்மா...அதனால தான் நேர்ல போகணும்னு சொல்றேன் என்னோட செல்ல அம்மால ப்ளீஸ்ம்மா..." என்று கெஞ்ச...

"இல்ல அம்மு... தனியா அனுப்ப முடியாது... கல்யாணத்துக்கு கூப்பிட்டுகலாம் இப்போ போய் ரெடியாகி வா சசிக்கு நலுங்கு வைக்கணும்" என்று சொல்லவும்...

"சரி" என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தனது அறைக்குப் போனவள் கிளம்பி வீட்டின் பின் வழியாக வந்து நின்றாள்.

தன் கையில் போனையும் ஆட்டோவிற்கு பணத்தையும் எடுத்து வந்திருந்தவள்...ஆட்டோ பிடித்து குடோனுக்குப் போனாள்.

ஆரா வெளியே போனால் ஜிபிஎஸ் மூலம் ஆரா எங்கு செல்கிறாள் என்று சக்திக்கு காட்டிக் கொடுப்பது போல் அலாராம் வைத்திருந்தான்.

ஆராவின் ஜிபிஎஸ் நகரவும்... ரோஹனுக்கு தெரிந்துதான் போகிறாளோ என்று நினைத்தவன் ரோஷனுக்கு போன் செய்தான்.

"சொல்லுங்க சார்"

"எங்க இருக்கீங்க?"

"மேடம் வீட்டுக்கு முன்னாடி.."

"அவ எங்கையோ போய்ட்டு இருக்கா நீங்க அங்கையே நின்னுட்டு என்ன பண்றீங்க?"

"மேடம் வெளிய வரவே இல்ல சார், நான் அவங்க வீட்டுக்கு முன்னாடி இருக்க பங்க்ல தான் இருக்கேன்..."

"இவர் வெளிய வரலைனு சொல்றார் ஆனா ஜிபிஎஸ் நகருது ஒருவேளை போனை வேற கிட்டையாவது குடுத்துருப்பாளோ, எதுக்கு சந்தேகம் அவளுக்கே போன் பண்ணி கேட்டுட்டலாம்" என்று ஆராவிற்கு அழைத்தான்.

முதலில் சக்தியின் போனை பார்த்தாலும் எடுக்கவில்லை அவள், ஆனால் தொடர்ந்து அவனும் அழைக்க வேறு வழி இல்லாமல் சக்தியின் போனை எடுத்தாள்.

"எங்கடி இருக்க...?"

'இவனுக்கு தெரிஞ்சா வீட்டுல போட்டுக் கொடுத்துடுவான் வீட்டுல இருக்கோம்னே சொல்லுவோம்' என்று 'நான் வீட்டுல தான் இருக்கேன் ஏன் கேக்கற?'

"பொய் சொல்லாத தியா"

"நான் எதுக்கு பொய் சொல்லணும்"

"அப்போ நான் குடுத்த போன் எங்க?"

"நீ என்ன லூசா அதுல தானே பேசிட்டு இருக்கேன் அப்புறம் என்ன லூசு மாதிரி கேள்வி கேக்கற?"

"அப்புறம் எப்படி?" என்று அந்த பக்கம் சக்தி தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க..

"அம்மா நீங்க சொன்ன இடம் வந்துடுச்சி இறங்குங்க" என்றார் ஆட்டோ டிரைவர்...

"ஐயோ மொத்தத்தையும் கெடுத்துட்டியே அண்ணே' என்று தலையில் கை வைத்தவள், அவன் கேக்கவில்லையோ என்று "வீரா நான் அப்புறம் கூப்பிடவா?" என்றாள்.

"ம்ம்" என்றவன் டிரைவர் சொன்ன அனைத்தையும் பிசிரு தட்டாமல் கேட்டு விட்டான் என்று ஆராவிற்கு தெரியவில்லை.

ஆராவிடம் பேசுவதற்கு முன் வரை சக்தி அவனது வீட்டில் இருக்க... இப்போது ஆரா இருக்கும் இடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

ஆட்டோவில் இருந்து இறங்கியவள் குடோனுக்குள் சென்று பாலாவை தேடினாள்.

"ஏய் ஆரா இங்க என்ன பண்ற..?"

"நான் போன் பண்ணலைனா நீ பண்ண மாட்டியாடா...?"

"அப்படியே ஓடிரு, நானும் எவ்வளவு தடவை கூப்பிடறது நம்பர் பிஸி பிஸினு வருது என்ன பிளாக் பண்ணிட்டியா என்ன?" என்றான் பாலா கோவமாக.

"ஓ இதை வேற பண்ணிருக்கியாடா" என்று சக்தியை நினைத்து காண்டானவள்.. அதை பாலாவிடம் சொல்ல விரும்பாமல் ,"போன் ப்ரோப்லேம் பாலா யார் போன் பண்ணாலும் அப்படி தான் வருது, அதான் புதுசா போன் வாங்கிட்டேன்" என்று புது கைபேசியை காட்டினாள்.

"சக்தி சார்க்கு பொண்டாட்டியாக போறேங்கறது போன்லையே தெரியுது..."என்றவன் "என்ன இந்த ஏழையை தேடி வந்துருக்கீங்க..."?

"ரொம்ப பண்ணாதடா...நாளைக்கு மறுநாள் நிச்சியமும் அடுத்தநாள் சசி அண்ணாவோட கல்யாணமும் இருக்குல்ல நீ கண்டிப்பா வரணும் அதை சொல்லிட்டு, அப்படியே போன் நம்பர் வாங்கிட்டு போலாம்னு தான் வந்தேன்"

"பத்திரிக்கை எல்லாம் எப்போவோ வந்துடுச்சி நீ கவலைபடாம போ நான் நிச்சியத்துக்கு வந்துடுவேன்" என்றான்.

"ம்ம் சரி பாலா நான் கிளம்பறேன் வீட்டுல தேடுவாங்க"

"ம்ம் பார்த்து போ" என்றான்.

"சரி" என்று திரும்பி நடக்க அங்கு வாசலில் கைகள் கட்டியப்படி நின்றிருந்தான் சக்தி.

'இவன் எப்படி இங்க வந்தான்? " என்று யோசித்தாவாறே அவன் அருகில் சென்றாள்.

"இதுதான் நீ வீட்டுல இருக்கற லட்சணமா?என்று வார்த்தைகளை கடித்து துப்பியவன், "காருக்கு போ" என்றான் அழுத்தமாக... குரலில் சத்தம் இல்லை என்றாலும் அவன் உரைத்த வார்த்தையில் அதீத அழுத்தம் இருந்தது.

சக்தியிடம் வாதிட பிடிக்காமல் காருக்கு சென்றுவிட்டாள்.

காரை அதிவேகமாக எடுத்தவன்... ஒரு இடத்தில் நிறுத்தி அவளை பார்த்தவாறு திரும்பி அமர்ந்து "நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல?" என்றான்.

"நீ என்னைய பால்லோ பண்றியா?" என்றாள் ஆரா எதிர் கேள்வியுடன்.

"நான் என்ன கேக்கறேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க...?"

"நான் இங்க வந்தது வீட்டுல இருக்கற யாருக்கும் தெரியாது.. ஆட்டோகாரண்ணா சொன்னதை கேட்டிருந்தாலும் நான் வெளிய இருக்கேனு தெரிஞ்சிருக்குமே தவிர, எந்த இடத்துல இருக்கேனு தெரிய வாய்ப்பில்லை அப்புறம் எப்படி இங்க வந்த?" என்றாள் கோவமாக

"ஆமாண்டி நான் உன்னைய பால்லோ தான் பண்றேன் அதுக்கு என்ன?"

"இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்லையா?"

"எதுக்கு வெக்கப்படனும்" என்றான்.

"ச்சை" என்றவள் "எதுக்கு பாலா நம்பரை பிளாக் பண்ணி டெலீட் பண்ணிருக்க?" என்றாள்.

"நீ அவன்கிட்ட பேசறது எனக்கு பிடிக்கல"

"அதுக்கு"

"அப்படிதான் பண்ணுவேண்ணு அர்த்தம்" என்றான்.

சக்தியிடம் பேசமுடியாது என்று கோவத்தில் ஜன்னல் பக்கம் பார்க்க

" அப்படியே நான் கேட்டதுக்கு பதில் சொல்லல, விவரமானவதாண்டி நீ" என்றவன், "அவன்கிட்ட பேசரதை நிறுத்திக்கோ" என்றான்

"அதை நீ சொல்லாத எதை செய்யணும் எதை செய்யக்கூடாதுனு நான்தான் முடிவு பண்ணனும், நீ முடிவு பண்ணாத" என்றவள் வீடு வரவும் இறங்கி உள்ளே சென்றுவிட்டாள்.

சக்தியை மரியாதைக்கு கூட உள்ளே வா என்று அழைக்கவில்லை, அதை அவனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆரா உள்ளே நுழையும் போது சசிக்கு நலுங்கு வைத்துக் கொண்டிருந்தனர் சசியின் தாய்மாமன்கள்.

"ரூமில ஆளைக் காணலைன்னு தேடிட்டு வரேன் இவ வெளிய இருந்து வரா" என்ற திலகா "எங்கடி வெளிய இருந்து வர?" என்று அவளிடமே கேட்டார்.

"பக்கத்துவீட்டுக்கு போனேன்" என்று சொல்லிவிட்டு அங்கு நிற்காமல் தன்னுடைய அறையில் சென்று அடைந்துக் கொண்டாள்.

அவள் மனம் கொதிகலனாக கொதித்துக் கொண்டிருந்தது.

"என்னைய வேவுப் பார்க்கிறேன்னு என்கிட்டயே சொல்றான்,நான் யார்கிட்ட பேசணும் யார் கிட்ட பேசக்கூடாதுனு அவன் முடிவு பண்றான்.. என்ன நடக்குதுனே ஒன்னுமே புரியல..இவன் யாரு நான் என்ன பண்ணனும்னு முடிவு பண்றதுக்கு,இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா லைப் லாங் அவனுக்கு அடிமையா தான் இருக்கணுமா?" என்று கவலைப்பட்டாள்.

"இந்த கல்யாணம் வேண்டாம்னு எங்கையாவது ஓடிப் போ..." என்று புத்தி சொல்ல.மனமோ "நீ போய்ட்டா உன் குடும்பத்தை அவன் விட்டுருவானா.... அவங்களை தான் கஷ்டபடுத்துவான், இதுக்கு நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்"என்று எடுத்துரைக்கவும்..

இருவேறு மனநிலையில் அல்லாடினாள் ஆரா. இரவு முழுவதும் பல சிந்தனையில் இருந்தவளுக்கு கல்யாணம் செய்வதில் விருப்பமில்லாமல் ஏனோ தானோ என்று சுற்றிக் கொண்டிருந்தாள்.

அனைவரும் எதிர்பார்த்த அந்த நிச்சிய நாளும் வர...

அதிகாலை வேலை அகலவன் தன் கதிர்களை பரப்ப மாமரத்து குயில் அழகாக கூவியது.

என்ன ஒரு அழகான காலை இது என்று ஆராவின் மனம் சந்தோசம் அடைந்தாலும் சக்தியுடன் நடக்கும் நிச்சியத்தை ஏற்றுக்கொள்ள தான் மனம் வரவில்லை.

சம்மந்தி வீட்டுக்கு நிச்சியதார்த்த செய்தியை சொல்ல வேண்டும் என்று குழந்தைவேலுவும் திலகாவும் சஷ்டிகாவின் வீட்டிற்கு நேரில் சென்றியிருந்தனர்.

செய்தியைக் கேட்டதும் சஷ்டிகாவின் அம்மா, "என்னோட பையனுக்கு கேக்கும் போது சின்ன பொண்ணு இன்னும் படிக்கணும் அது இதுனு வேண்டாம்னு சொன்னீங்க, இப்போ பெரிய இடம் கிடைச்சதும் விழுந்துட்டிங்களோ, எல்லாம் கணக்கா தான் வேலைப் பார்க்கறீங்க" என்று நாக்கில் நரம்பு இல்லாமல் பேசவும் ஆராவின் பெற்றோர்களுக்கு சங்கடமாகிப் போனது

தங்களின் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்லவும் முடியவில்லை அவர்களால்.

'இல்ல சம்மந்தி உங்ககிட்ட சொன்னதை தான் அவங்ககிட்டயும் சொன்னோம் அவங்கதான் பிடிவாதமா இருந்துட்டாங்க, எங்களாலையும் எதுவும் பண்ண முடியல"என்று பொய்யும் இல்லாமல் உண்மையும் இல்லாமல் சொல்லி முடித்தனர்.

"எல்லாம் எங்களுக்கு தெரியும் சம்மந்தி,சும்மா பூசி மொழுகாதீங்க, என்னோட பையன் சம்பளத்துக்கு போறான் அந்த பையன் சம்பளம் குடுக்கற இடத்துல இருக்கான் அப்போ சம்மதம் சொல்லிதானே ஆகணும்" என்றவருக்கு உள்ளுக்குள் அத்தனை எரிச்சல்.

அவர்கள் கிளம்பி வீட்டுக்கு வந்ததும் சஷ்டிகாவிடம் இருந்து ஆராவிற்கு போன் வந்தது.

திருமணத்திற்கு இரண்டு நாளே இருப்பதால் சஷ்டிகாவை அண்ணி என்றே அழைக்க ஆரம்பித்திருந்தாள்.

" சொல்லுங்க அண்ணி..."

"ஆரா எப்படி இருக்கடா"

"நான் நல்லா இருக்கேன் அண்ணி.நீங்க'

"நான் எப்படிம்மா நல்லா இருக்க முடியும், என்னோட அண்ணன் உன்னையே நினைச்சி இங்க பீல் பண்ணிட்டு இருக்கான் அவனை நினைச்சி நான் பீல் பண்ணிட்டு இருக்கேன்" என்றாள்.

"என்னடா இது புது கதையா இருக்கு?, நான் எப்போ அவனை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன் அவன் பீல் பண்ண?"என்று ஆரா நினைக்க

"அன்னிக்கு நாங்க உன்னைய பொண்ணு கேட்டப்ப படிக்கணும்னு சொன்ன ,இப்போ அவங்க பொண்ணு கேட்டதும் சரினு சொல்லிட்ட சின்ன பொண்ணா இருந்தாலும் நல்லா கணக்கு போட்டுதான் வேலை செய்யற, யாருக்கு நோ சொல்லணும் யாருக்கு எஸ் சொல்லணும்னு உனக்கு தெரிஞ்சிருக்குள்ள, நல்லா பொழைச்சிப்ப" என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் ஏற்றினாள் சஷ்டிகா.

"இவங்க என்ன என்னைய தப்பா பேசறாங்க.. நானா அந்த சக்தியை வேணும்னு அடம்பிடிச்சி கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.அவனா தானே இதை எல்லாம் பண்ணுனான் இப்போ பேச்சு வாங்கறது நானா?" என்று நினைக்கும் போது

இதுபோல் ஆயிரம் பேச்சுகள் வரதான் செய்யும் ஊர் உலகத்திற்கு அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதுதான் ஒரே வேலை, கஷ்டபடும்போது கூட நிற்க கூட யாரும் வரமாட்டார்கள் என்ற எண்ணதை வலுகட்டாயமாக இழுத்து மனதிற்குள் நிறுத்தவும் சஷ்டிகா சொன்ன அடுத்த அடுத்த அடுத்த வார்த்தைகள் ஆராவை பெரிதாக பாதிக்கவில்லை.

இருந்தாலும் இப்படி எல்லோரும் பேச அந்த சக்தி மட்டும் தான் காரணம் என்று அவன் மீது சில நாளாக தோன்றிய நல்ல எண்ணங்களை குழி தோண்டி புதைத்து விட்டு பழைய பஞ்சாங்கமான... கொலைக்காரன், ரவுடி என்ற எண்ணதை மேல் எடுத்து வைத்தவள்.. இப்போது சஸ்டிகா சொன்னதையும் மனதில் நினைத்து அவன் மீது அதிக வெறுப்பை வளர்த்துக் கொண்டாள்.

நிச்சிய நாளன்று அவளுக்காக அலங்கார பெண் வந்து நிற்க.

"இது ஒன்னுதான் கேடு" என்று அவர்களை வேண்டாம் என்று அனுப்பி விட்டாள்.

அவர்கள் நேராக சக்திக்கு போன் செய்து சொல்லிவிட அவனிடம் இருந்து ஆராவிக்கு போன் வந்தது.

முதலில் போனை எடுக்காமல் போக்கு காட்டியவள் அவன் அழைக்கவும் வேறு வழிஇன்றி போனை எடுத்தது "சொல்லு" என்றாள்.

"எதுக்கு மேக்கப் போட்டுக்க மாட்டிங்கற?"

"உன்னோட மூச்சிக்கு இதுவே போதும்"

"ஓ இந்த கல்யாணம் நீ சம்மதம் சொல்லிதானே நடக்குது அப்புறம் எதுக்கு இந்த சீன்?"

"ஆமா, ஆனா எனக்கு உன்னைய கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை பேமிலிக்காக தான் ஓகே சொன்னேன்."

"எப்படியோ சம்மதம் சொல்லிட்டில, அப்புறம் எதுக்கு ஓவர் ரியாக்ட் பண்ற? , என்னமோ நாங்க உன்னைய கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணற மாதிரி" என்றவன் "அவங்களை அவங்க வேலையை செய்ய விடு" என்றான்.

"முடியாது" என்று பிடிவாதமாக சொன்னவள் போனை வைத்துவிட..அடுத்த அரைமணி அவளது அறைக்கு வந்தான் சக்தி.

"ஏய் உன்னைய யார் உள்ளே விட்டது?"

"யார் விடணும்" என்று அறைக் கதவை மூடியவன், "உனக்கு என்னடி பிரச்சனை?" என்றான்.

"நீதான் பிரச்சனை உன்னோட நடக்கற இந்த கல்யாணம் பிரச்சனை," என்றாள்.

"ஏன்? திடீர்னு என்னாச்சி?"

"எல்லோரும் என்னைய தான் தப்பா பேசறாங்க" என்று கண்ணீர் துளிர்க்க சொன்னவளை வெறிக்கப் பார்த்தவன் அவளை இழுத்து இதழ் கவ்வினான்.

அவனிடம் திமிரி போராடியவள் சோர்ந்து போனாள்.

5 நிமிடம் கழித்து விடுவித்தவனின் மார்பில் அடித்தவள் "எதுக்குடா இப்படி பண்ணுன உன்னைய தான் என்னைய தொடக் கூடாதுனு சொல்லிருக்கேன்ல" என்றாள் கோவமாக மூச்சிவாங்கியப்படியே

"இங்க பாருடி யாரோ சொல்றாங்கனு கவலைப்பட்டு நிற்காத, உன்னோட புருஷன் ஒன்னும் சாதாரண ஆள் இல்ல, நான் எல்லாதையும் பார்த்துக்கறேன், பீல் பண்ணாம ரெடியாகு" என்றான்.

"எதுக்கு அவங்களையும் கொலை பண்ணவா, ஒன்னும் தேவை இல்லை என்னோட கஷ்டத்தை என்னால தீர்த்துக்க முடியும்" என்றவள், "இனி என்னோட சம்மதம் இல்லாம என்னைய தொட்ட அப்புறம் அவ்வளவு தான்" என்று ஒற்றை விரல் காட்டி மிரட்டவும் சக்திக்கு கோவம் வருவதற்கு பதில் சிரிப்பு வந்தது.

புன்னகைத்தவன் "சீக்கிரம் மேக்கப் போட்டு ரெடியாகு இல்லையா மறுபடியும் இப்படி தான் பண்ணுவேன்" என்றான்.

சற்றென்று தன் உதட்டை மடித்துக் கடித்தவளை "அன்னிக்கே சொல்லிருக்கேன் இதுலாம் என்னோட ப்ராபர்ட்டி சேதாரம் பண்ணுனா அதுக்குனா கூலியை சேர்த்து வாங்கிப்பேன்" என்று அவள் கன்னத்தை தட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

"இவனோட ஒரே ரோதனையா போச்சி,ச்சை" என்றவள் "கணேசா உனக்கு என்ன குறை வெச்சேன் திருடி தின்னுனா எல்லாத்துலயும் உனக்கும் தானே பங்கு குடுத்தேன் அப்புறம் எதுக்கு எனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை குடுக்கற என்னையப் பார்த்தா உனக்கு பாவமா தெரியலையா?" என்று கத்திக் கொண்டிருந்தவளை அலங்கார பெண்கள் சேரில் அமர்த்தி அலங்காரத்தை ஆரம்பித்தனர்.

அன்றைய நிச்சியதார்த்தம் நல்லபடியாக முடித்தாலும் ஆராவின் மனம் சலனப்பட்டுக் கொண்டே தான் இருந்தது.

"தியா எதுக்கு இப்போ டல்லா இருக்க என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கறேன்னு சொல்றேன்ல"

'அதுதானே என்னோட பிரச்சனையே' என்று நினைத்தவள் பேச்சை மாற்ற எண்ணி "என்னோட பேர் ஆரா தானே" என்றாள் சோகமாக..

"என்னோட பேர் கூட சக்தி தான்"

"நான் இல்லைனு சொல்லலையே"

"அப்புறம் எதுக்கு வீரானு சொல்ற?'

"அது வாய் தவறி,.... ஹா.. பாட்டி சொல்ற மாதிரி சொல்லிருப்பேன்" என்றாள்

"ஓ அது மாதிரி தான் இதுவும் உன்னைய எல்லோரும் ஆரானு சொல்றாங்க, நானும் அப்படி சொல்ல விரும்பல சக்தினு சொன்னா கன்பியூஸ் ஆகிடும் அதான் சக்தில தியையும் ஆராண்யாவுல யாவும் எடுத்து தியானு சொன்னேன், இதுல உனக்கு ஏதாவது பிரச்சனையா?" என்றான்.

"அது... ஆமா நீ ஆரானே சொல்லு"

"அப்படிலாம் சொல்ல முடியாது நான் என்ன சொல்லணும் எப்படி கூப்பிடனும்னு நான்தான் முடிவு பண்ணனும்"என்றான்.

அனைவரும் நலுங்கு வைத்து முடித்ததும் மோதிரத்தை மாற்றிக் கொள்ள சொன்னார்கள்.

அப்போதுதான் நிச்சியம் மோதிரத்தைப் பார்த்தாள் ஆரா...

இரண்டு s எழுத்தும் பின்னி பிணைந்த வைர மோதிரமாக இருந்தது அது.

இவனோட பணக்கார மௌசைக் காட்ட வைரத்துல போடறான் ஆனா பார்க்கவீங்க இதுக்கு ஆசைப்பட்டு தான் நான் இவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன்னு பேசுவாங்க என்னோட நிலைமையை நான் யார்கிட்ட போய் சொல்றது என்று மனம் நொந்து போனவள்..

"உனக்கு இந்த தங்கம் வெள்ளி இதுலைலா மோதிரம் இருக்குனு தெரியுமா தெரியாதா?" என்றாள்.

"இதுக்கு என்ன நல்லா தானே இருக்கு" என்றவன், ஆராவின் விரல் பற்றி போட்டுவிட்டு தன்னுடைய கையை தன்னவளிடம் தந்துவிட்டு அவள் முகம் பார்த்து நின்றான்.

இப்போது எதுவும் பேசமுடியாது என்று மோதிரத்தைப் போட்டுவிட்டவள் முகம் வாடிப் போயிருந்தது.

ஆராவின் மனம் குழப்பத்தில் மிதந்துக் கொண்டிருந்தது... வாழ் முழுக்க பணத்துக்கு ஆசைப்பட்டு கல்யாணம் செய்து கொண்டாள் என்ற பழி சொல் இருந்துக் கொண்டே தானே இருக்கும் என்ற எண்ணம் அவளை அழைக்களித்துக் கொண்டிருந்தது.

சக்திக்கு அதைப் பற்றி எல்லாம் கவலையே இல்லை... அவனைப் பொறுத்தவரையில் அவன் நினைத்து நடக்க வேண்டும் அதற்கு தடையாக எதிருந்தாலும் அந்த தடையை உடைத்து முன்னேறுவானே தவிர... தடைகளை கண்டு அஞ்சவும் மாட்டான், ஒதுங்கிப் போகவும் மாட்டான்.

ஆராவின் முக மாற்றத்தை யார் கவனித்தார்களோ இல்லையோ சாய் கவனித்துக் கொண்டு தானிருந்தான்.

விதுர்ணாவோ யாருக்கு வந்த விருந்தோ என்ற மனநிலையில் ஒரு ஓரமாக அமர்ந்து நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"வா சாப்பிட போலாம்" என்றான் சக்தி .

"எனக்கு பசிக்கல"

"ஏன்"

"இந்த கேள்வியை வயிறுகிட்ட தான் கேக்கணும் என்கிட்ட கேட்டா... எனக்கு என்ன தெரியும் பசிக்கலைனா பசிக்கல"என்றாள் வீராப்பாக

"அதுலாம் பசிக்கும் வா" என்று அழைத்துச் சென்றான்.

அங்கு போயும் இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருக்க

புகைப்படம் எடுப்பவர் "சார் பொண்ணுக்கு ஊட்டி விடுங்க" என்றார்.

"இவன் ஒருத்தன் இதை எல்லாம் யாரு எடுக்க சொன்னது?" என்று மனதிற்குள் திட்டியவள் , "அதுலாம் ஒன்னும் வேண்டாம் நீங்க மத்தவீங்கள போட்டோ எடுங்க "என்றாள்.

ஆனால் சக்தி கிடைக்கும் வாய்ப்பை விடுவானா?அவள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ஆராவின் வாயில் இனிப்பை திணித்து விட்டான்.

"ஏய் என்ன பண்ற?" என்று திணறியவளை.."சாப்பிடு" என்றவன் அவள் கையால் சாதத்தையும் வாங்கிக் கொண்டான்.

அன்றைய நாள் நல்லபடியாக செல்ல அன்றிரவு சஷ்டிகாவிற்கு பெண் அழைப்பு வைத்திருந்தனர்.

சக்தியின் குடும்பமும் இந்த கல்யாணத்தில் கலந்துகொண்டனர்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top