தீத்திரள் ஆரமே -30

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா :மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த கோயில் சிவனுக்காகக் கட்டப்பட்டது. இந்த கோயில் அம்பரீஸ்வரர் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது கி.பி 1060 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனை ஷிலஹாரா மன்னர் சித்தராஜா அவர்களால் கட்டப்பட்டது என்றும் அவருடைய மகன் மும்முனி அவர்களால் புதுப்பிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால் புராணக்கதைகளோ இதனைப் பாண்டவர்கள் ஒரே கல்லில் கட்டியதாய் கூறுகிறது.

ஆராவின் அறையில் இருந்து இறங்கும் போது கால் இடரி கீழே விழுந்த சக்திக்கு காலில் அடிபட்டுவிட வலி எடுத்தது. அதனுடனே தத்தி தத்தி நடந்தவாரே தன் காரிற்கு சென்றான்.

வலி குறையாமல் இருக்கவும் மூவ் ஸ்பிரேவை ஸ்பிரே செய்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

சக்தி செய்த அனைத்துமே ஆராவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

"அவன் பாட்டுக்கு வந்தான் , முத்தம் குடுத்தான், மொபைலை குடுத்தான், கிளம்பிட்டான்...எனக்குதான் யாராவது பார்த்துட்டா பிரச்சனையாகிடுமோனு பயமா இருந்தது ஆனால் அந்த பயமெல்லாம் அவனுக்கு சுத்தமா இல்லயே.. யார் ரூமுக்கு யார் வந்துருக்கறதுனுனே தெரியல" என்று நினைத்தவளுக்கு... அவன் கொடுத்த முத்தம் இப்போது தான் சிலிர்ப்பை ஏற்படுத்தியது...

"இவனை அந்நியன்னு நினைச்சா, ரெமோ மாதிரி ரொமான்ஸ் பண்ணிட்டு சுத்துறான்...எந்த கேட்டக்கரில சேர்த்தரதுனே தெரியல" என்றவளுக்கு தெரியவில்லை ரெமோவும் அந்நியனும் ஒருவன் தான் என்று...

சக்தி கொடுத்த போனை கையில் எடுத்துப் பார்த்தவள் "இவன் பெரிய பணக்காரனு என்கிட்ட காட்டிக்கணும் அதுக்கு தானே இந்த மொபைல் வாங்கி குடுத்துருக்கான்.."என்று அதை தூக்கி படுக்கையில் விசிறியவள்...அதன் அருகில் படுத்துக் கொண்டாள்.

சாய் ஆராவை வீட்டில் இறக்கிவிட்டு தனிமையை தேடி வந்தவன்... அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

"ஏதாவது பண்ணி கல்யாணத்தை நிறுத்தணும் அந்த சக்திக்கு எப்படியாவது புத்தி புகட்டனும்" என்று நினைத்தவனின் மனதில் விதுர்ணா வந்து போனாள்.

இப்போது எல்லாம் அவளிடம் இருந்து எந்த ஒரு மெசேஜூம், போன் கால்லும் வருவதில்லை. இவனே செய்தால் கூட அதற்கும் அவள் பதில் சொல்வதில்லை, இவளை வைத்து ஏதாவது செய்யமுடியுமா? என்று தீவிரமாக யோசித்தவனுக்கு ஒரு வழி கிடைக்கவும்.. சந்தோசமாக வீட்டிற்கு கிளம்பினான்.

அடுத்த நாள் காலை எழுந்ததும் தன் அறையில் இருந்து வேகமாக கீழே இறங்கி வந்த ஆரா..

"அண்ணா அண்ணா" என்று கத்தினாள்.

அவள் கத்திய கத்தலில் பக்கத்து வீட்டு அண்ணன் கூட எட்டிப் பார்த்து விடுவான் போல இந்த வீட்டு அண்ணன்கள் எட்டிப் பார்க்க மாட்டார்களா என்ன...?

"என்ன அம்மு, காலையிலையே இந்த கத்து கத்தற...." என்று மூவரும் ஆஜராக.

"எனக்கு உடனடியா ராஜபாளையம் நாய் ஒன்னு வேணும்" என்றாள் பிடிவாதமாக...

"எதுக்கு..?"

"வேணும்னா வேணும் வாங்கி குடுங்க,"

"அதுதான் எதுக்குனு கேக்கறாங்க.. எதுக்குனு சொல்லு, நாங்க நாய் வளர்க்கலாம்னு சொல்லும் போதுலாம் அதுக்கு பயந்துட்டு வேணாம்னு சொல்லிட்டு இப்போ நாய் வளர்க்கப் போறாளா?" என்று திலகா திட்டவும்.

"வேணும்னா வேணும், வாங்கிக் குடுங்க,திடீர்னு எனக்கு நாய் வளர்க்கனும்னு ஆசை வந்துடுச்சி வாங்கிக் குடுங்கனா குடுங்க" என்று காலை தரையில் உதைத்து அடம்பிடித்தாள்.

"நீ நினைச்சதும் குதிரை ஏற முடியாது.யோசிக்கலாம்" என்று திலகா சொல்லவும்..

"ஈவினிங் வாங்கிட்டு வந்தரேன் அம்மு" என்றான் சாய்.

எப்போதும் ஆரா எதுக் கேட்டாலும் முதலில் மறுத்து பேசுபவன் சாய்தான், ஆனால் இன்றோ அவனே முன் வந்து முதலில் வாங்கி தரேன் என்று சொல்லவும் மற்ற மூவரும் வாயை பிளந்தனர்.

"என்னடா அண்ணணும் தங்கச்சியின் ராசியாகி பாச பயிரை வளர்ப்பீங்க போலையே... கொஞ்சம் பார்த்து வளருங்கடா.. பார்க்கற எனக்கே மயக்கம் வரமாதிரி இருக்கு" என்று அங்கிருந்து சென்றுவிட்டார் திலகா.

பரணியும் சசியும் ஆராவைப் பார்க்க..

"அம்மு வேற ஏதாவது வேணுமா?" என்றான் சாய்

"வேறனா என்ன..?"என்றாள் சாய் கேட்பதன் அர்த்தம் புரியாமல்.

"பெப்பர் ஸ்பிரே, கோன்னு ஊசி, பாக்கெட் கத்தி இதுமாதிரி ஏதாவது" என்றவனை

"ஏய் சாய் அவ என்ன கொலை பண்ணவா போறா இந்த மாதிரி ஐட்டம்ஸ் எல்லாம் வேணுமான்னு கேக்கற... உங்க ரெண்டுப்பேரையும் பார்க்கும் போது எதோ டவுட்டாவே இருக்கே" என்றான் பரணி.

"எல்லாம் ஒரு சேப்பிடிக்கு தான் பரணி... பொம்பள பிள்ளை தனியா வெளிய போகும்போது பாதுகாப்புக்கு இதுலாம் நம்ப எப்போவோ வாங்கிக் குடுத்துருக்கனும்.. எந்நேரம் நம்ப மூனு பேரும் அவளோடவே இருக்க முடியுமா? சொல்லு,அதான் கேட்டேன் மத்தபடி வேற எதுக்கும் இல்லை" என்றான்.

"இல்ல இல்ல சாய் இப்போதைக்கு நாய் மட்டும் போதும் கொஞ்சம் சீக்கிரம் வாங்கிக் குடுங்க" என்றாள் அவசரமாக.

"சரி ஈவினிங் வாங்கிக்கலாம்" என்று சசியும் பரணியும் சென்றுவிட..

ஆராவையேப் பார்த்திருந்த சாய் "என்ன அம்மு நேத்தும் அவன் உன்னோட ரூமுக்கு வந்தானா?" என்று கேட்டான்.

"இல்லயே ஏன் கேக்கற..?" என்றவள் "ஐயோ ஏதாவது சொல்லி உளறி வைக்கப் போறேன், அப்புறம் மறுபடியும் பிரச்சனை தான் வரும்" என்று உள்ளுக்குள் பதறினாள்.

"அப்புறம் எதுக்கு திடீர்னு நாய் கேட்ட..?"

"இப்போவே சுவரு ஏறி வரான் இன்னும் நிச்சியம் வேற பண்ணிட்டா, சொல்லவா வேணும் அதான் முன்னெச்சரிக்கையா கேட்டேன்" என்றவள், " சாய் எனக்கு பசிக்குது நான் போய் பிரஷ் பண்ணிட்டு வந்தரேன்" என்றாள்.

"ம்ம் சரி" என்றவனுக்கு இன்னும் சந்தேகம் விட்டப்பாடியில்லை.

விட்டால் போதும் என்று ஓடிவிட்டாள்.

காலையில் ஜாக்கிங் சென்று வந்த சக்தி பேப்பருடன் சோபாவில் உக்கார அவன் அருகில் வந்து அமர்ந்தனர் அன்பரசுவும், முகிலனும்.

பேப்பரை விலக்காமலே "சொல்லுங்க என்ன பேசணும்?" என்றான்.

மகனின் ஆளுமையில் அன்பரசுக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு...தாங்கள் ஏதோ பேசதான் வந்திருக்கிறோம் என்பதை சொல்லாமலையே கண்டுபிடித்த மகனை ஆசையாகப் பார்த்தவர்.

"ஒன்னுமில்ல சக்தி இந்த மண்டப வேலை எல்லாம் முகி பார்த்துட்டான்..."

"சரிப்பா"

"பொண்ணுக்கு புடவை எடுக்கணுமே அதைப் பத்தி நீயும் எதும் பேசல அவங்களும் எதும் கேக்கலையே நாளும் நெருங்குது இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு அதான் என்ன பண்ணலாம்னு கேக்க வந்தோம்"

"நான் ஆல்ரெடி ஆடர் பண்ணிட்டேப்பா இன்னிக்கு வந்துடும்... அண்ணிகிட்ட குடுத்து பிளவுஸ் மட்டும் ஸ்டிச் பண்ண சொல்லுங்க, நமக்கும் ட்ரெஸ் எல்லாம் எடுத்தாச்சி" என்றான்.

"ஏண்டா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா? உனக்கு புடவை எடுக்கறதை பத்தி என்னடா தெரியும் என்று பார்வதி கேட்டவாறே காபியை கொண்டு தன் கணவனுக்கும் மகன்களுக்கும் கொடுக்க...

"சொல்லாம என்னம்மா ...எனக்கு பிடிச்சதை எடுத்துருக்கேன் உங்களுக்கு பிடிச்சதை நீங்களும் எடுங்க, இன்னிக்கு வேணா டெக்ஸ்டைல்ல இருந்து ஆள் வர சொல்லட்டுமா?' என்று கேட்டான்.

"இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு இப்போ எடுத்து என்ன பண்ண...?"

"அதுக்குலாம் ஆள் இருக்கு நீங்க நாளைக்கு எடுத்தாலும் தைச்சி வாங்கிக்கலாம், இல்லையா ரெடிமேட் கூட எடுத்துக்கலாம்" என்றான்.

"ரெடிமேட்லாம் வேணாம் தைச்சியே வாங்கிக்கலாம், வர சொல்லு" என்றார்.

இதில் எதிலையும் கலந்துகொள்ளாமல் அமைதியாக இருந்தது விதுர்ணா மட்டும் தான்.

அவளுக்கும் ஆராவிற்கும் தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை... தன் தந்தையே பேச தயங்கும் அண்ணனிடம் ஆரா கை நீட்டியது தான் அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

தன் காதலனை அதே அண்ணன் தான் அடித்தான் என்பதையும் ஆராவின் அண்ணனையும் அடித்திருக்கிறோம் என்பதையும் மறந்துபோனாள்.ஆராவால் மட்டும் தன் அண்ணன் அடிவாங்கிவதை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்.

ஏற்கனவே ஆராவின் மீது கோவத்தில் இருக்கும் விதுர்ணா, ஆரா முழுவதுமாக பழிவாங்குவது போல் செய்யப் போகிறான் சாய்.

ஆராவின் நிச்சிய புடவை சக்தி ஆடர் கொடுத்து கடையில் இருந்து வந்துவிட... அதைப் பார்த்த பெண்கள் மூவரும் வாயைப் பிளந்தனர்.

அரக்கு வண்ணதில் தங்கநிறத்தில் கொடிகள் இழையோட அழகிய அஜந்தா ஓவியங்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது.

"சக்தி உங்களுக்கு ரசனை இருக்குனு தெரியும் ஆனால் இந்த அளவுக்கு இருக்கும்னு நான் எதிர்ப்பார்க்கல... பொண்ணுங்க கூட இப்படி புடவையை செலக்ட் பண்ண மாட்டாங்க... உங்க அண்ணனுக்கும் கொஞ்சம் சொல்லி தரது" என்று சிரித்தவாரே சொன்னாள் கிருத்திகா..

"அதானே இத்தனை வருசத்துல உன்னோட அம்மாவான எனக்கு கூட இப்படி ஒரு புடவையை எடுத்துக் குடுத்தது இல்லையேடா..அந்த புள்ள இன்னும் வீட்டுக்கே வரல அதுக்குள்ள நீயே ஆடர் குடுத்து செய்ய சொல்லி வாங்கிருக்க... என்றவர்.. எனக்கும் தான் புருஷனு ஒரு மனுஷன் இருக்காரே இதுவரைக்கும் ஒரு ஜாக்கெட் பிட்டுக் கூட வாங்கி தரலை" என்றார் .

அவரின் கூற்றில் அன்பரசனும் முகிலனும் அடியே கிராதகா என்பது போல் சக்தியைப் பார்த்தனர்.

அவர்கள் சொன்னதுக்கு சக்தி சிரிப்பை மட்டும் பதிலாக கொடுக்க..

"கொழுந்தனாரே நிச்சியதுக்கே புடவை அல்லுதே, கல்யாணத்துக்கு எப்படி தங்க சரிகைல தான் புடவையை நெய்ய சொல்லுவீங்களோ" என்று சொல்லவும்

விதுர்ணா பல்லைக் கடித்தபடியே "அண்ணி" என்றாள்.

"என்னடி?"

"அவருக்கு ஐடியா இல்லைனாலும் நீங்களே ஐடியா குடுத்துருவீங்க போலையே" என்றாள் கோவமாக.

"குட் ஐடியா அண்ணி நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடலாம்" என்றான்.

கிருத்திகா பாவமாக விதுர்ணாவைப் பார்க்க அவளோ கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.

"ஐயோ சாமி இந்த விளையாட்டுக்கு நான் வரலை" என்று உதட்டசைவில் சொல்ல...

"போய்டுங்க" என்று கிருத்திகாவிடம் முறைத்துவிட்டு அங்கிருந்து அவளுடைய அறைக்கு சென்று விட்டாள்.

போகும் அவளை யாரும் ஏன் என்றுக் கூட கேக்கவில்லை...

பார்த்து பார்த்து ஆடர் கொடுத்த சேலையை தடவிப் பார்த்தவனுக்கு மனம் முழுவதும் தன்னவளை அந்த புடவையில் நினைத்து பூரித்துப் போனது...

"உனக்காக தான் இதை எல்லாம் செய்யறேன், நீதான்டி என்னைய புரிஞ்சிக்கவே மாட்டிங்கிற" என்று மனதுக்குள் பேசிக்கொண்டவன் தன்னவளை நினைத்ததும் அவளைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது

சக்தி ஆராவிடம் செய்யும் வேலைகளை மற்றவர்களிடம் சொன்னால் சத்தியமாக யாரும் நம்ப மாட்டார்கள்... ஆராவிடம் மட்டும் தான் அவனுடைய விளையாட்டையும் சில்மிஷத்தையும் செய்துகொண்டிருந்தான்.

பகல் முழுவதும் கம்பெனி, வேலை.காலேஜ் என்று அலைபவன்.. இரவானதும் உடல்நிலை சரியில்லாத அந்த நபரை சென்றுப் பார்த்துவிட்டு வருவான். அவரைப் பார்த்ததும் இந்த ஒருவாரமாக ஆராவைப் பார்க்க வேண்டும் என்று தோன்ற உடனே கிளம்பி சென்று அவளைப் பார்த்துவிடுவான்.

இதை எல்லாம் நினைத்தவன் நிச்சியம் முடிந்ததும் சீக்கிரம் கல்யாணத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க யாரிடம் இருந்தோ சக்திக்கு போன் வந்தது.

"ம்ம் சொல்லுங்க..."

"சார் அம்மாவுக்கு உடம்பு முடியில அதனால நான் இன்னிக்கு லீவ் போட்டுக்கறேன் சார்"

"ஓ அப்போ ரோஷன்"

"அவர் தனியா இருப்பார், சமாளிச்சிடுவாரானு தான் தெரியல சார்..'

"ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல கிஷோர் அவ இன்னிக்கு எங்கயும் வெளிய போக மாட்டா... அதனால ரோஷன் மட்டும் போதும்" என்றவன் "நீங்க லீவ் எடுத்துக்கோங்க.." என்றான்.

"சரிங்க சார்" என்றவன்.. "மேடம் ரொம்ப லக்கி சார்" என்றான்.

அதற்கு மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுத்த சக்தி.. "சரி பாருங்க" என்று போனை வைத்தான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top