தீத்திரள் ஆரமே -27

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் இருக்கும் சிவபெருமான் கோயிலில் உள்ள அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்தில் இருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்தில் இருந்து ஆறு மாதங்கள் கறுப்பு நிறமாகவும் மாறி விடுகிறார். இந்தச் சிலை சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.

சக்தி சென்றதும் வேடிக்கைப் பார்த்தவாரே ஐஸ்கிரீம் முழுவதையும் உண்டவள், பேரர் பில்லைக் கொண்டுவந்து தரவும் தான் தன்னுடைய கைப்பையை காரிலையே விட்டுவிட்டு வந்தது நியாபகம் வந்தது ஆராவிற்கு..

ஆராவின் போனும் காரிலையே இருக்க, "ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க வெளிய கார்ல பேக் இருக்கு எடுத்து வந்தரேன்" என்றாள்.

"சரிங்க மேடம்" என்றவன்... அவனுடைய வேலையைப் பார்க்கவும்..

வெளியே வந்த ஆரா சக்தியின் கார் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியானாள்.

"டேய் வளர்ந்து கெட்டவனே எங்கடா போன... ஐயோ நேரம் பார்த்து பழிவாங்கிட்டானே கையில ஒத்த ரூபாய் பணம் இல்லையே கடவுளே" என்று தலையில் கைவைத்தவள் மீண்டும் ஹோட்டலுக்குள்ளையே சென்றாள்.

அவளைப் பார்த்ததும் பேரர் அருகில் வந்து நிற்க... "சார் உங்க மொபைல் தரீங்களா? ஒரு கால் பண்ணிக்கறேன்" என்று தயங்கி தயங்கி கேட்டவளுக்கு பெருத்த அவமானமாக இருந்தது...

"உனக்கு அறிவு எங்க புளியங்கா பறிக்க போய்டுச்சா... பேக் எடுத்துட்டு வர தெரிஞ்சவளுக்கு அதை கையில் வெச்சிருக்க தெரியாதா..?" என்று மனது சண்டையிட...

"அவன் இருக்கானேன்னு நம்பி உள்ளே வந்தேன் இப்படி பண்ணுவான்னு நினைக்கல, இப்போவும் கூட அவனா விட்டுட்டு போன்னானு நம்ப முடியல":என்று வெளியே வர இருந்த கண்ணீரை உள்ளே இழுக்க சிரமப்பட்டவள் அதை பேரர் பார்த்து விடக்கூடாதே என்று அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

"ஒரு நிமிடம் மேடம் போன் உள்ளே இருக்கு, எடுத்து வரேன்" என்று அவன் உள்ளே போன நேரம் கண்ணீரை அழுந்த துடைத்துக்கொண்டவள் சாயின் எண்ணை நினைவுக்கு கொண்டுவர முயற்சி செய்தாள்.

எப்படி முயற்சி செய்தாலும் முதல் மூன்றும் கடைசி மூன்றும் தான் நினைவுக்கு வந்ததே தவிர இடையில் இருந்த நான்கு எண் நினைவுக்கு வரவே இல்லை.

"இதுக்குதான் போன் மெமரியை விட ஹியூமன் மெமரி ரொம்ப முக்கியம்னு சொல்றது...பத்து நம்பரை நியாபகம் வெச்சிகாததாலே எவ்வளவு பிரச்சனை,இப்ப என்ன பண்ணி தொலையறதுனு தெரியலையே" என்று புலம்ப...

"அதான் அம்மா நம்பர் தெரியும்ல, அவங்களுக்கு கூப்பிடு"

"அவங்களுக்கு போன் பண்ணுனா உடனே என்னவோ ஏதோனு பதறுவாங்க,அப்பா நம்பருக்கும் வேண்டாம் , சசி அண்ணாவுக்கு பண்ணலாம் ஆனா நம்பர் நியாபகம் இல்லயே ... நெட்ல தேடுவோம்" என்று நினைத்துக் கொண்டிருக்க,பேரர் போனோடு வந்தான்.

"மேடம் இந்தாங்க" என்றதும்

"நெட் இருக்கா சார்" என்றாள் அவசரமாக.

"ம்ம் இருக்கு மேடம்"

Msv டைல்ஸ் கம்பெனி என்று கூகுள் ஆண்டவரை தொல்லை செய்ய அவரோ மேனேஜர் நம்பரை வாரி வழங்கினார்.

"தேங்க்ஸ் டூ கூகுள்...." என்றவள் அதில் இருந்த சசிதரன் எண்ணிற்கு அழைத்தாள்.

முழு அழைப்பும் முடிவதற்கு முன் சசி போனை எடுத்துவிட.."அண்ணா நான் ஆரா பேசறேன்" என்றாள்

"என்ன அம்மு கம்பெனி நம்பர்க்கு ஏதோ நம்பர்ல இருந்து கூப்பிடற..உன்னோட போன் என்னாச்சி எதுக்கு இந்த நம்பருக்கு கூப்பிடற?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டான்.

"நான் கொஞ்சம் வெளிய வந்தேண்ணா, என்னோட போன்ல சார்ஜ் இல்ல அதான் பக்கத்துல ஒருத்தர்கிட்ட போன் வாங்கி கூப்பிட்டேன்" என்றவள் "அண்ணா எனக்கு சாய் நம்பர் வேணும்" என்றாள்.

"ஏன் அம்மு ஏதாவது பிரச்சனையா? எங்க இருக்கனு சொல்லு நான் வரேன்" என்றான்.

"இல்லை அண்ணா... சாய் பக்கத்துல தான் இருப்பான் எனக்கு ஒரு புக் வாங்கி தரேன்னு சொல்லிருந்தான்.
அதான் இன்னிக்கு வெளியே வந்துருக்கேன்ல அவனும் வந்தா அப்படியே வாங்கிட்டு போகலாம்னு தான் கேட்டேன் அவன் நம்பர் குடுங்கண்ணா" என்றாள்.

"சரி மெசேஜ்ல அனுப்பி வைக்கிறேன்" என்றவன் "எதும் பிரச்சனை இல்லைதானே" என்று நூறு முறை கேட்டு விட்டு தான் போனை வைத்தான்.

உடனே நம்பர் வந்துவிட..

"சார் இன்னொரு போன் பண்ணிக்கிட்டா? " என்றாள் கெஞ்சலாக

"பண்ணிக்கோங்க மேம்.."

"ஐயோ மேடம்லா வேண்டாம் என்னோட பேர் ஆரா, நீங்க பேர் சொல்லியே கூப்பிடலாம்" என்றவளுக்கு முதலில் இருந்த தயக்கம் இப்போது முற்றிலும் விலகி இருந்தது.

"நீங்க பேசிட்டு போனை வெச்சிருங்க, நான் டேபிளை கவனிக்க போறேன்" என்று அங்கிருந்து சென்றுவிட

சாயின் எண்ணிற்கு அழைத்தாள்.

"ஹெலோ"

"டேய் தடிமாடு எங்கடா இருக்க..?"

"இது யார் போன்னுடி எரும... கண்ட நம்பர்ல இருந்து கூப்பிடற.. உன்னோட போன் என்னாச்சி?" என்று கேட்கவும்

சசியிடம் பேசும்போது வராத கண்ணீர் சாயிடம் பேசும் போது வந்தது..."சாய்" என்று அழைத்தவளின் குரல் கலங்கி இருக்கவும், அதை உணர்ந்து அந்த பக்கம் அண்ணன் பதறினான்.

"என்ன அம்மு என்னாச்சி...?"

"நீ உடனே இந்த ஹோட்டலுக்கு வாடா"என்று ஒரு ஹோட்டலின் பெயரை சொன்னாள்.

"அங்கவர ஒருமணி நேரம் ஆகுமேடி... அங்க எதுக்கு போன...?"

"இது வேற ஒருத்தரோட போன்.. அவங்களுக்கு பில் ஆகும்ல அதனால நேரல வா சொல்றேன் வரும் போது பணத்தோட வா..."

"எவ்வளவு?"

"இரண்டாயிரம்" என்றவள் "இருக்காடா உன்கிட்ட...?"

" என்கிட்ட இருக்கு, பத்தலைனா பிரண்ட்ஸ்கிட்ட வாங்கிட்டு வரேன்டி..நீ பயப்படாத"

"பணம் கிடைக்கலைனா இந்த நம்பர்க்கு கூப்பிடுடா வேற ஏதாவது ஏற்பாடு பண்ணலாம்"

"அதலாம் கிடைக்கும் என்கிட்ட ஒரு ஆயிரம் இருக்கு..."

"அப்போ அது போதும் வா"

"என்னடி செலவு பண்ணுன?"

"ஒரு மீல்ஸ் ஒரு ஐஸ்கிரீம் மட்டும் தான்"

"அதுக்கு எதுக்குடி இரண்டாயிரம்" என்றதும்

"சும்மா சேப்ட்டிக்கு தான்.."

"சரி வை வரேன், ஏதாவது எமர்ஜன்சினா உடனே கால் பண்ணு.."

"ம்ம் சரிடா.. எனக்காக வேகமா வராத... பார்த்து பொறுமையா வா... மறக்காம ஹெல்மெட் போட்டுக்கோடா"

"போதும் தாயே நிறுத்து, நான் பொறுமையா தான் வருவேன் என்னைய நினைச்சி கவலைப்படாம சேப்டியா இரு" என்று போனை வைத்துவிட்டான்.

இவ்வளவு நேரம் கவலையில் இருந்தவளுக்கு இப்போது தான் மனதில் நிம்மதி வந்தது போல் இருந்தது. அவளுடைய மேஜையில் போனை வைத்தவள். பேரர் வந்ததும்..

"அவசரத்துக்கு உதவி பண்ணிங்க சார் ரொம்ப நன்றி.." என்றாள் மனதார..

"பரவால்ல ஆரா" என்றவன் "உங்களோட ஒருத்தர் வந்தாரே அவர்....."என்று இழுத்தான்.

"அவருக்கு ஏதோ அவசர வேலைனு கிளம்பிட்டார் பேக் கார்ல இருந்ததை மறந்துட்டேன், அதான் இவ்வளவு பிரச்சனையும்"என்றவளுக்கு யாரிடமும் சக்தியை குறை சொல்ல மனம் வரவில்லை.

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணிறிங்களா..." என்றாள் மீண்டும்.

"ம்ம் சொல்லுங்க ஆரா."

"இந்த சாப்பாட்டை மட்டும் மூடி வெச்சிடுங்க,அண்ணா வந்துட்டு இருக்கான் அதுக்குள்ள சாதத்துல மேல் காஞ்சிடும்" என்றாள்.

"நான் வேணா வேற சாப்பாடு எடுத்துட்டு வரவா"

"அதுலாம் வேண்டாம் ஒர் பிளேட் குடுத்தா போதும் " என்றாள்.

'சரி ' என்று தட்டோடு வந்தவன் அதை மூடி வைத்தான்.

சக்தி இப்படி பாதியில் விட்டு செல்வான் என்று ஆரா சற்றும் எதிர்பார்க்கவில்லை.எவ்வளவு கோவம் இருந்தாலும் இப்படியா தன்னை நம்பி வந்த பெண்ணை விட்டு செல்வது என்று நினைக்க

வீரா இதை நான் உங்கிட்ட எதிர்பார்க்கல... என்றாள்

எதிர்பார்க்காதது உன்னோட தப்பு... கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம கொலைப் பண்றவனுக்கு இதுலாம் சாதாரணம்னு எதிர்ப்பார்த்திருக்கனும்,என்ற மனதை..

எதுக்கு இப்போ கொலை பண்ணதை எல்லாம் பேசற ..

இங்கப் பாரு ஆரா... நீ கொஞ்சம் கொஞ்சமா என்னைய அவன் பக்கமா சாயிக்க பார்க்கற... அதுக்காக தான் சொல்றேன். அவன் ஒரு கொலைக்காரன்ங்கறதை மறக்க அடிச்சி நீ அவனை லவ் பண்ண வைக்கறதுதான் அவனோட பிளான்.

இதனால அவனுக்கு என்ன லாபம்...

என்ன லாபமா ...லூசா நீ காதலிக்கறவனுக்கு எதிரா சாட்சி சொல்லுவியா அதுக்கு தான்.

அதுக்கு காதலிங்கர வார்த்தையை யூஸ் பண்ணனும்னு அவனுக்கு அவசியமே இல்லையே அவன்கிட்ட இல்லாத பணமா வீசி எரிஞ்சா அவனுக்கு பதில் ஆஜர் ஆகவே ஆள் இருக்காங்க...அப்படி இல்லையா பெரிய வக்கீலா வெச்சி கேஸை ஒன்னும் இல்லாம உடைக்கவும் அவனால முடியும்.

அப்போ நான் சொல்றது இல்லைனு சொல்றியா

நான் அப்படி சொல்லல... ஆனா இதை எல்லாம் தாண்டி அவனுக்கு என்கிட்ட ஏதோ தேவை அது உடம்பும் இல்லை... கேசும் இல்ல... கூடிய சீக்கிரம் கண்டுப்பிடிக்கறேன் என்று சொல்லிக் கொண்டாள்.

ஆராவிடம் கோவித்துக்கு கொண்டு வெளியே வந்த சக்திக்கு சிவராமனிடம் இருந்து போன் வரவும் காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றவன் பாதி வழி வந்ததும் தான் ஆராவின் நினைவு வந்தது.. காரை ஓரமாக நிறுத்தியவன் சிட் என்று ஸ்டியரிங்கில் குத்தியவன் காரை திருப்ப போக.. அதற்குள் சிவராமன் இரு முறை அழைத்துவிட்டான்.

சரி போன் செய்து வீட்டிற்கு செல்ல சொல்லிவிடலாம் என்று காரைச் சிவராமன் சொன்ன இடதிற்கு செலுத்தியவாரே ஆராவிற்கு அழைத்தான்.

போன் அடிக்கும் சத்தம் காரினுள் கேட்கவும்... காரை ஓட்டியபடியே சத்தம் வரும் திசையை பார்க்க அங்கு ஆராவின் பேக்கும் போனும் இருந்தது.

லூசு போன் எடுக்காம போயிருக்காளே அங்க என்ன பண்றாளோ என்று பதறியவன் சிறிதும் யோசிக்காமல் காரை ஹோட்டலை நோக்கி திருப்பிவிட்டான்.

சிவராமனுக்கு அழைத்தவன் அங்கிள் நீங்களே அங்க இருந்துப் பார்த்துக்கோங்க, இப்போ என்னால வரமுடியாது என்றான்

ஈஸ்வர் நீ இல்லாம எப்படி... சீக்கிரம் வா...

வர ஒருமணி நேரம் ஆகிடும் அங்கிள் அதுவரைக்கும் எப்படியாவது சமாளிங்க என்று போனை வைத்தவன் கையில் கார் புயல் வேகத்தில் பறந்தது.

எவ்வளவு வேகமாக வந்தாலும் ட்ராபிக்கில் சிக்கியதால் சாய்க்கு முன் சக்தியால் வர முடியவில்லை.

சாய் ஆரா சொன்ன ஹோட்டலுக்கு வந்தவன், ஏய் அம்மு என்னடி தனியா இருக்க..நான் கூட நீ பிரண்ட்ஸ்கூட வெளிய வந்துருக்கேனு நினைச்சேன் என்றவன் ஆராவிற்கு எதிரில் அமர்ந்தான்.

சாய் நீ முதல சாப்பிடு என்று தட்டில் மூடிவைத்த உணவை அவன் முன் நகர்த்தினாள்

நான் என்ன கேக்கறேன் நீ என்ன சொல்ற

பதில் சொல்றேன் முதல சாப்பிடு..என்றாள்

நான் வரும் போது சாப்பிட்டு தாண்டி வந்தேன்

பரவால்ல இதையும் சாப்பிடு வேஸ்ட் பண்ணக்கூடாதுல

நீ சாப்பிட்டியா அம்மு

இல்லடா இனிதான்

சரி வா நம்ப ரெண்டுபேரும் சேர்ந்தே சாப்பிடலாம் என்றான்.

சாய் எனக்கு பசிக்கலடா

அதுலாம் பசிக்கும் ஒழுங்கா தின்னு என்றவன் அவளின் அருகில் அமர்ந்தவன் ஊட்டிவிட்டான்.

சாய் இது வீடு இல்ல

என்னோட தங்கச்சி நீதான் என்றவன் யார் என்ன நினைச்சா நமக்கு என்ன என்றவன்

இப்போவாது உண்மையை சொல்றியா என்றான் .

சாய்

யாரும் காப்பாத்த நினைக்காம உண்மையை மட்டும் சொல்லு என்றான் மீண்டும் அழுத்தமாக.

நேற்று இரவில் இருந்து தற்போது வரை நடந்த அனைத்தையும் சொல்லியவள் சக்தி முத்தமிட்டதை மட்டும் சொல்லவில்லை, காதல் வந்தால் கள்ளமும் சேர்ந்தே வந்துவிடும் ஆராவும் அப்படி தான் இருந்தாள்.

சொல்லி முடித்தவளின் கண்களில் கண்ணீர் திரையிட்டது.

எவ்வளவு தைரியம் இருந்தா யாருக்கும் தெரியாம வீட்டுக்கு வந்துருப்பான்.வந்ததும் இல்லாம உன்னைய மிரட்ட வேற செஞ்சிருக்கான் என்று சாய் கெட்ட வார்த்தையில் சக்தியை திட்ட அதை தாங்க முடியாமல்..

சாய் என்ன பழக்கம் இது வார்த்தை பேசிட்டு...இது மாதிரி இனி ஒருமுறை யாரையும் பேசாத...

அப்போ அவன் பண்ணது மட்டும் சரியா.. நம்பி வந்த பொண்ணை நட்டு ஆத்துல விட்டுட்டு போன மாதிரி போய்ட்டான். போன் மட்டும் கிடைக்கலைன்னா என்ன ஆகியிருக்கும், காலம் கெட்டு கெடக்குது.. எந்த நேரத்துல யாருக்கு என்ன ஆபத்து வரும்னு சொல்ல முடியாது, அது தெரிஞ்சும் விட்டுட்டு போயிருக்கான் உனக்கு ஏதாவதுனா நாங்க எல்லோரும் உயிரோட இருப்போமா என்றான்.

எனக்கு புரியுது சாய் அவன் பண்ணது தப்பு தான் ஆனால் அதுக்காக வார்த்தை பேசாத ... நேரா சண்டை போடு எதுக்கு என் தங்கச்சியை விட்டுட்டு போனனு அவனோட சட்டைப் பிடிச்சி சண்டை போடு ஆனா இப்படி வார்த்தை பேசாத என்றாள்

அவன் வீட்டு பொண்ணை இப்படி பண்ணுனா இந்நேரம் அவங்களை கொலை பண்ணிருப்பான் ரவுடி என்று தட்டில் இருந்த சாதம் அனைத்தையும் ஊட்டிவிட்டவன்...கை கழுவிட்டு வரேன் என்று உள்ளேப் போனான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top