தீத்திரள் ஆரமே 26

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலில் ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிவபெருமான் பனிலிங்க வடிவில் தரிசனம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த மாதங்களில் குறிப்பிட்ட 48 நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் வருடந்தோறும் இக்கோயில் பனியால் மூடப்பட்டே இருக்கிறது. அதனால், பனி இல்லாத இந்த குறிப்பிட்ட கால இடைவேளையில் 48 நாட்கள் மட்டுமே, பக்தர்கள் இக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

சக்தி இவ்வளவு நேரம் இதற்கு தான் காத்திருந்தது போல ஆராவை சுற்றி கையைப் போட்டு இறுக்கமாக அணைத்தான்.

அவ்வளவு குளிரிலும் சக்தியின் உடல் வெப்பமாக இருந்தது தன்னவளை அருகில் வைத்துக்கொண்டு உடல் வெப்பமாக இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

சக்தியின் உடல் வெப்பம் ஆராவிற்கு இதமாக இருக்கவும் அவனுள் புதைய ஆரம்பித்தாள்.

தன்னவளின் மல்லிகை மனமும் தன்மேல் பூக்குவியலாக உறங்கும் தன்னவளையும் பார்க்கும் போது சக்திக்கும் உணர்ச்சிகள் தறிக் கெட்டு ஓட ஆரம்பித்தது.

"உன்னோட கூந்தல தாண்டி நான் பூவோட வாசத்தையே தெரிஞ்சிகிட்டேன்" என்றான் தனக்குள்..

'இதை நீ அவளிடம் சொன்னால் என்ன சொல்லுவாள்' என்று மனம் கேள்வி கேக்க...

"உங்கிட்ட வந்த பொண்ணுங்க எல்லாம் பூ வெச்சிருக்க மாட்டாங்கனு சொல்லுவா" என்று மனதுக்குள் சொல்லி புன்னகைத்துக் கொண்டான்.

படம் பார்க்கிறாள் என்று நினைத்து தலையை தடவிக் கொடுத்தவனின் கை கீழே இறங்க அடம்பிடித்தது.

"சக்தி கல்யாணத்துக்கு அப்புறம் தான் இதல்லாம்" என்று தன்னை அடக்க முயன்றாலும் தன்னவளை இவ்வளவு நெருக்கத்தில் வைத்துக்கொண்டு அவனால் கைகளை அடக்க முடியவில்லை.

மெல்ல ஆராவின் இடையில் தன் தந்த விரல்களால் ஊர்வலம் நடத்த முயற்சிக்க, சிவ பூஜையில் கரடிப் போல் அப்போது பார்த்து ஆராவின் போன் ஒலித்தது,

முதலில் படம் ஓடும் சத்ததில் போன் சத்தம் கேக்கவில்லை..சக்திக்கு மீண்டும் போன் ஒலிக்கவும் ஆராவைப் பார்க்க அவளோ தூங்கியிருந்தாள்...

"தூங்குற பிள்ளைகிட்டையா சில்மிஷம் பண்ண நினைச்சோம்" என்று தன்னை நொந்துக் கொண்டவன்

அவளை தொந்தரவு செய்யாமல் மெதுவாக போனை எடுத்துப் பார்க்க அதில் பாலா என்றிருந்தது.

"ஓ இவன் கூட இன்னும் பேசிட்டு தான் இருக்காளா?" என்று நினைத்த நொடி முகமும் உடலும் இறுகிப் போனது சக்திக்கு.

பாலாவை சக்திக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் ஆரா தான்.

இவ்வளவு நேரம் பஞ்சின் மீது படுத்திருப்பது போல் இருக்கவும் அந்த சுகத்தில் தான் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் ஆரா, இப்போதோ அன்று போல் கல்லின் மீது படுத்து உறங்குவது போல் கடினமாக இருக்கவும் மெதுவாக கண் விழித்துப் பார்த்தவளை."போலாமா" என்றான்.

அப்போதுதான் சக்தியின் மார்பின் மீது படுத்து உறங்கியதை உணர்ந்தவள் வேகமாக விலகினாள்.

அவளின் விலகளில் மேலும் எரிச்சலானவன் "என்ன?" என்றான்.

"படம் முடிஞ்சிதா?"

"ம்ம்"

"சரி" என்று சொல்ல இருவரும் வெளியே வந்து காரில் ஏறினர்.

வண்டி ஹோட்டலை நோக்கி செல்ல காருக்குள் பெருத்த அமைதி நிலவியது.

சக்தியின் முகம் இறுக்கமாக இருப்பதைப் பார்த்தவளுக்கு "வரும் போது ரோமியோ மாதிரி சிரிச்ச முகமா தானே வந்தான், தியேட்டர்க்கு உள்ளேக் கூட அப்டிதானே இருந்தான், இப்போ என்ன ரோபோ மாதிரி விரைப்பா முகத்தை வெச்சிட்டு வரான் இவனை புரிஞ்சிக்கவே முடியலையே"என்று யோசித்தவள்

"இப்போ எங்க போறோம்" என்றாள்.

"போனதும் தெரியதானே போகுது" என்று முகத்தில் அடித்தது போல் சொல்லவும்

மீண்டும் " வரும் போது நல்லா தானே இருந்தான், இப்போ என்னாச்சி? " என்று அவன் முகம் பார்ப்பதும் கண்ணாடி வழியாக வெளியே வேடிக்கைப் பார்ப்பதுமாக வந்தாள்

திடிரென்று "பாலாகிட்ட இன்னும் நீ பேசரியா?"என்றான்.

"இது என்ன கேள்வி?"

"கேட்டதுக்கு பதில்"

"உன்னோட கேள்வியே ஸ்டுபிட்டா இருக்கு, அதுக்குலாம் என்னால பதில் சொல்ல முடியாது" என்றவள் , "ஆமா இப்போ எதுக்கு இந்த கேள்வி வந்தது.?" என்றாள்.

சக்தியிடம் இருந்து பதில் வரவில்லை. தான் பதில் சொல்லாமல் அவன் வாயை திறக்கமாட்டான் என்று உணர்ந்துக் கொண்டவள்.

"என்னவா இருக்கும்?"என்று யோசித்து போனை எடுத்துப் பார்த்தாள்.

அதில் பாலாவிடம் இருந்து இரண்டு அழைப்புகள் வந்திருந்தது.

"ஓ சார் இதைப் பார்த்துட்டு தான் அப்படிக் கேட்டாரோ மவனே இருக்குடி உனக்கு." என்று தனக்குள் சிரித்தவள்... சக்தி பார்க்கவே பாலாவின் எண்ணிற்கு அழைத்தாள்.

"எனக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சும் வேணும்னே அவனுக்கு கூப்பிடரா... உடம்பு முழுக்க திமிரு" என்று கோவத்தில் கொதித்தவன் காரை வேகமாக ஓட்டினான்.

இதுநாள் வரையிலும் சக்தியால் தான் அனைவருக்கும் ரத்த அழுத்தம் எகிறும் ஆனால் முதல் முறையாக இன்று ஆராவால் சக்திக்கு ரத்த அழுத்தம் எகிறியது.

அந்தப் பக்கம் .பாலா போனை எடுத்துவிட..சக்தியை கடுப்பேத்துவதற்காகவே "சொல்லு பேபி" என்றாள்.

"என்னது பேபியா!!!! இவளுக்கு என்னாச்சி" என்று நினைத்தவன், என்ன ஆரா வேற மாதிரி பேசற, புதுசா பேபின்னு எல்லாம் சொல்ற" என்றான்.

பாலா பேசுவதை சக்தி கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே வலது காதில் இருந்த போனை இடது காதிற்கு மாற்றியவள் சத்தத்தையும் குறைத்து வைத்துக் கொண்டு

"நானும் வீராவும் படத்துக்கு வந்தோம் பேபி,அதான் போன் எடுக்கல, ஏதாவது இம்போர்ட்டண்ட்டா சொல்லனுமா?" என்றாள்

ஆராப் பேசியதைக் கேட்டும் ஒன்றும் புரியாமல் முழித்தான் பாலா.

இந்த ஒருவாரத்தில் குறைந்தது இரண்டு நேரமாவது இருவரும் பேசிவிடுவர்.

அதற்கு காரணமும் சக்தி தான்.பாலா ஆராவை டைல்ஸ் கம்பெனிக்கு அழைத்துச் சென்றதால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்று நினைத்தவன் ,அந்த ஒரேக் காரணத்திற்காக பாலாவை இடம் மாற்றம் செய்திருந்தான்.

சக்தியைப் பொறுத்த வரைக்கும் பாலாவை வேலையை விட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான், ஆனால் ஆராவிற்கு விசயம் சென்றால் மேலும் அவளது வெறுப்பிற்கு ஆளாக வேண்டுமே என்று தான் இடம் மாற்றம் மட்டும் செய்தான்.

அதை அன்றே பாலாவிடம் கேட்டு தெரிந்துக் கொண்ட ஆரா.. "நான் அவன்கிட்ட பேசக்கூடாது, நான் இருக்கற கம்பெனியில அவன் இருக்கக்கூடாதுனு தானே டிரான்ஸ்பர் பண்ணுன. இப்போ அவன்கிட்ட தினமும் இரண்டு நேரமாவது பேசுவேன் என்ன பண்ணுவ" என்ற ரீதியில் ஆரம்பித்த நட்பு.இப்போது விருட்சமாக வளர்ந்து நின்றது.

ஆராவின் குணம் அறிந்த சக்தி, பாலாவை மாற்றாமல் அவன் போக்கில் விட்டிருந்தாலே ஆரா அமைதியாக இருந்திருப்பாள்.. சும்மா இருந்த ஓணானை வேட்டியில் எடுத்து விட்டுக் கொண்டு இப்போது குத்துதே குடையுதே என்றால் எப்படி..

"அடியே பாதகி அவரோடையா இருக்க, அவர் கூட இருந்துட்டு எனக்கு எதுக்கு போன் பண்ணுன நான் இருக்கறது உனக்கு பிடிக்கலையா?" என்று அலறியவன், "நான் அப்புறம் பேசறேன்" என்று போனை வைக்கப் போனான்.

"டேய் டேய் வைக்காத... எதுக்கு போன் பண்ணுன அதை சொல்லு பேபி" என்று சக்தியைப் பார்த்துக்கொண்டே பேபி என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்துச் சொன்னாள்.

அதில் சக்திக்கு ரத்த அழுத்தம் எகிறியது.

"ஆரா நீ விளையாட்டா பேசறது பின்னாடி பெரிய ப்ரோப்லேம் ஆக போகுது.. அவர் என்னைய உயிரோடவே விடமாட்டார்."

"அதான் நான் இருக்கேன்ல பேபி நீ ஏன் கவலைப்படற?"

"நீ இருப்பம்மா,நான் இருக்கணுமே உன் ஆள் என்னைய மொத்தமா உலகத்தை விட்டு அனுப்புற வரைக்கும் நீயும் ஓய மாட்ட போல" என்று அந்த பக்கம் பாலா பயப்படவும்.

"பயப்படாத பேபி... என்னைய மீறி உன்னைய யாருனு எதுவும் பண்ணமுடியாது" என்று சொல்ல... சக்தியின் ரோல்ஸ் ராயல்ஸ் கார் அதிகவேக சத்தத்துடன் நின்றது.

இதுக்குமேல கடுப்பேத்துனா எங்கு அடித்து விடுவானோ என்று பயந்தவள்,"சரி பேபி எதுவா இருந்தாலும் நைட் போன் பண்ணுவேன்ல அப்போ சொல்லு,இப்போ வைக்கிறேன்" என்று போனை வைத்துவிட்டு நல்ல பிள்ளைப் போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.

ஆராவின் மீது கோவத்தில் இருந்தவன் ... கார் கதவை அறைந்து மூடினான். அதன் சத்தத்திலையே அவன் எவ்வளவு கோவமாக இருக்கிறான் என்று புரிந்தது ஆராவிற்கு.

"இதை தான் எதிர்பார்த்தேன், ஒவ்வொரு நாளும் எதுக்குடா அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னோம்னு நீயே வருத்தப்பட்டு, இந்த கல்யாணமே வேண்டாம்னு நிறுத்தனும்"என்று சொல்லிக்கொண்டாள்.

இதுலாம் சும்மா வாய்வார்த்தை தான்,நீ எப்போவோ அவன் பக்கம் சாஞ்சிட்ட என்று மனது போராட்டம் பண்ண உன்னோட சேட்டை எல்லாம் வீட்டுல போய் வெச்சிக்கோ இப்போ வாயைமூடிட்டு வா அவன் பாரு எப்படி வேகமா போறான் என்று சொல்லிக்கொண்டே காரைவிட்டு இறங்கினாள்.

சக்தி வேகமாக ஹோட்டலின் உள்ளே செல்ல,அவனை பின் தொடர்ந்து ஓடிய ஆராவிற்கு மூச்சு வாங்கியது.

"எப்படி நடக்கறான் பாரு , கடவுளே இவன் நடக்கற நடைக்கு ஆர்மில சேர்த்து விட்டு இந்த நாட்டைக் காப்பாத்த சொல்ல வேண்டியது தானே, எதுக்கு இங்க விட்டு என்னோட உயிரை வாங்கர பிள்ளையாரப்பா.... இவன் நடைக்கும் நான் ரன்னிங் தான் போகணும் போல" என்று புலம்பியவாறே அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.

அன்று வந்த ஹோட்டல்போல் அல்லாமல், பார்க்க சாதாரணமாக இருந்தாலும் அழகாக இருந்தது இந்த ஹோட்டல்.

மீன் தொட்டியும் அதை சுற்றி அருவில் போல் இருந்த அமைப்பும் ஆராவை வெகுவாக ஈர்க்க...

"வீரா செமையா இருக்கு" என்று ஆசையாக அதன் அருகில் செல்லப் போனவளை கையை பிடித்து இழுத்து அமர வைத்தவன்.

"வேடிக்கைப் பார்க்க வரல, எனக்கு வேலை இருக்கு சீக்கிரம் என்ன சாப்பிடறனு சொல்லு" என்றான் கோவமாக

வேடிக்கைப் பார்த்துக் கொண்டே "எனக்கா ...." என்று யோசித்தவள், "ஒரு பிளாக் கரண்ட் ஐஸ்கிரீம் போதும்" என்றாள்.

"இது லஞ்ச் டைம்"

"எனக்கு பசிக்கல"

"அதானே எப்படி பசிக்கும், என்று எதையோ நினைத்து குத்தலாக பேசியவன்...பேரர் வரவும்... "ஒரு மீல்ஸ்" என்றான்.

"மேடம்க்கு சார்.."

"அதை அவங்ககிட்ட கேட்டுக்கோங்க" என்றவன்... "ப்ளாக் கரண்ட் கொண்டு வாங்க" என்றான் .

அவனை முறைத்தவள், "என்கிட்ட கேட்டுக்கனு சொல்றது, அப்புறம் என்னைய பேசவிடாம அவனே பதில் சொல்றது,இவன் எந்த மாதிரி டிசைனோ" என்று முனவ...

"என்ன முனவல்? , இங்க பாருடி"

"எங்கப் பார்க்கணும்?"

"ம்ம் என் மூஞ்சியைப் பாரு"

"பார்க்கற மாதிரி இருந்தா பார்க்க மாட்டாம பாஸ்..."என்றாள் நக்கலாக.

"உனக்கு வாய்கொழுப்பு அதிகம்டி.."

"நீ தானே இவ்வளவு வருஷம் பொங்கிக்போட்ட அதுல ஏறிருக்கும்" என்றாள் அசால்ட்டாக..

"சீக்கிரம் குறைக்கறேன்டி, அப்புறம் இருக்கு உனக்கு" என்று பல்லைக் கடித்தவன், "அவனை எதுக்குடி பேபினு கொஞ்சற?" என்றான்,கோவமாக.

"எனக்கு பிடிச்சிருக்கு நான் கொஞ்சறேன் உனக்கு என்ன பிரச்சனை?"

"எனக்கு எல்லாமே பிரச்சனை தான்..."

"அதுக்கு நீ ஏதாவது டாக்டரை தான் போய் பார்க்கணும்.."

"ஏய்....!!!"""" என்று சக்தி உறும்ப.

"உன்னோட உறும்பல் எல்லாம் வேற எங்கையாது வெச்சிக்கோ... என்கிட்ட வேண்டாம். நீ பேசாதன்னு சொன்னவுடனே பேசாம இருக்க நான் ஒன்னும் உன் வீட்டு வேலைக்காரி இல்ல"

"என்னோட வீட்டுக்காரியும் நான் சொல்றதை கேட்டுதான் ஆகணும் "

"அது வீட்டுக்காரியானா பார்த்துக்கலாம்" என்றாள் திமிராக..

"ஒருநாள் அவனைப் பத்தி தெரியும் போது புரியும்டி.நான் எதுக்கு சொல்றேன்":என்றவன் மீல்ஸ் வரவும் "சாப்பிடு" என்றான்.

"எனக்கு வேண்டாம்" என்று கோவமாக சொன்னவள், "அவனைப் பத்தி பேச உனக்கு தகுதி இல்லை,அவன் ஒன்னும் உன்னைய மாதிரி காரியத்துக்காக எதையும் பண்றவன் கிடையாது...நட்புக்காக பண்றவன்.." என்றாள் அழுத்தமாக

"நான் என்னடி காரியத்துக்கு பண்ணேன்..."

"என்ன பண்ணல... நேத்து நைட் என்னோட ரூமுக்கு வந்தது, இன்னிக்கு பூ வாங்கிக் கொடுத்தது.. எனக்கு ஏசி ஒத்துக்காதுன்னு தெரிஞ்சும் ஏசி தியேட்டர் புக் பண்ண வரைக்கும் என்கிட்ட ஏதோ தேவைப்பட போய் தானே இதை எல்லாம் பண்ணிருக்க" என்றவள் , "காரியம் இல்லாம உன்னோட சுண்டு விரலைக் கூட நீ அசைக்க மாட்டேன்னு எனக்கு தெரியும், உன்னைய மாதிரியே எல்லோரும் இருக்க மாட்டாங்க" என்றாள்.

"ஓ" என்று அழுத்தமாக சொன்னவன்... "தியேட்டர்ல என்மேல நீ சாஞ்சதுக்கூட என்னோட பிளான் தான்"

"எக்ஸாக்ட்லி ....கூலிங் அதிகமா இருந்தா எனக்கு ஒதுக்காது எப்படியும் நான் உன் பக்கதுல வரேன்னு தான் பக்காவா பிளான் பண்ணி பால்கனி முழுக்க நீ புக் பண்ணிருக்க... ஸ்டார்டிங்ல நார்மல் கூலிங்ல இருந்த தியேட்டர் போக போக எப்படி அவ்வளவு கூலிங் ஆச்சி நீதான் ஏதோ பண்ணிருக்க" என்றாள்.

"இன்னாப்" என்று கைக் காட்டி நிறுத்தியவன்,"வெல்....இதுக்கு மேல நீ எதுவும் பேச வேண்டாம்": என்றவன் சாப்பிடாமலையே எழுந்து சென்றான்.

"போனா போ எனக்கு என்ன வந்தது" என்று அங்கிருந்து மீன் தொட்டியை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தவளுக்கு ஐஸ்கிரீம் வரவும் அதை ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top