தீத்திரள் ஆரமே -25

Priyamehan

Active Member
தேவா:திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயம், தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் கோபுரங்களும் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். இக்கோயில் கி.பி. 700 ம் ஆண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காரில் அமைதியாக வரும் ஆராவைப் பார்த்தான் சக்தி . சிவப்பு நிறத்தில் வெள்ளைப் பூக்கள் வரைந்த டாப்பும் வெள்ளை நிற பேண்ட்டும் அதே நிறத்தில் துப்பட்டாவையும் அணிந்து தலைமுடியை தளர பின்னியிருந்தாள்,

ஆராவிடம் எப்போதும் இருக்கும் ஏதோ ஒன்று இன்று விடுபடுவது போல் தோன்றியது ,

"என்னவா இருக்கும்" என்று யோசித்தான்.

"எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பெண்ணு" என்று திடீரெண்டு கூறினாள்.

"அதுக்கு என்ன?"

"என்னையப் பார்க்காம ரோட்டைப் பார்த்து ஓட்டு... இல்லனா நம்ப ரெண்டு பேரையும் அள்ளிட்டு ஹாஸ்பிடல் தான் போகனும்" என்றதும்..

சக்தியின் இதழில் புன்னகை வந்ததே தவிர... பதில் எதுவும் சொல்லவில்லை.

அவன் யோசனை முழுவதும் என்ன மிஸ்ஸாகுது என்பதிலையே இருந்தது.

ஆராவின் தலையில் எப்போதும் வைக்கும் மல்லிகைப் பூ இன்று இல்லாமல் போனதைக் கண்டுக் கொண்டவன் பூக்கடைப் பார்த்து வண்டியை நிறுத்தினான்.

'இங்க எதுக்கு நிறுத்துறான் ஒருவேளை இங்க கூட்டிட்டு வராதான் அந்த அர்த்த ராத்திரில நம்ம உயிரை வாங்கிருப்பானோ' என்று நினைத்தவள் வண்டியைவிட்டு கீழே இறங்கினாள்.

சக்தி வயதான பாட்டி வைத்திருந்த பூக்கடைக்கு சென்றவன் "மல்லிகைப் பூ வேணும் பாட்டி" என்றான்.

"எதுக்கு இப்போ பூ வாங்கரான் ஒருவேளை அதுவா இருக்குமோ... ஐயோ கடவுளே... அம்மாகிட்ட கூட எங்கப் போறேன்னு சொல்லலையே, இவன் என்னைய ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது?" என்று உள்ளுக்குள் பதறவும்

"அப்போ உனக்கு தெரியுமா எங்க போறிங்கனு" என்றது மனது.

"அந்த கருமத்தை தான் அவன் சொல்லி தொலைக்க மாட்டிங்கறானே" என்று கவலைப்பட்டவளை

"அவன் பூ வாங்கரதைப் பார்த்தா எங்கயாவது ரூம் போட்டு மேட்டர் முடிக்கப் போறான்னு நினைக்கிறேன், ஒழுங்கா இப்போவே ஓடிப் போய்டு" என்று எச்சரித்தது.

"ச்ச ச்ச அப்படிலாம் பண்ண மாட்டான்" என்று சக்திக்கு ஆரா வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்க

அவனோ "பூ எவ்வளவு பாட்டி" என்றான்.

"முழம் 200 ரூபாய் தம்பி"

"என்னது மல்லிகைபூ 200 ரூபாயா?' என்று பதறியவள் இதுதான் வாய்ப்பு என்று "வீரா எனக்கு பூ வேண்டாம் வா போகலாம்" என்றாள்.

"பூ உனக்குன்னு யார் சொன்னா?" என்றவன். "இரண்டு முழம் குடுங்க பாட்டி" என்று வாங்கிகொண்டான்.

"400 ரூபாய் போட்டு பூவா...!!!தலையில வெச்சி தூக்கிப் போடறதுக்கு 400 ரூபாய் செலவு பண்ணனுமா, நம்பவீட்டுல செடி இருக்கறது நல்லாதா போயிடுச்சி இல்லனா இந்தமாதிரி சமயம் பூவை பத்தி யோசிக்கக் கூட முடியாது" என்று நினைத்துக் கொண்டிருக்க..

"போலாமா?" என்றான்.

"ஹா" என்று காரில் ஏறவும்

வாங்கிய பூவை நான்காக மடித்தவன் ஆராவை "திரும்பு" என்றான்

"எதுக்கு?" என்றவள் சக்தியின் முறைப்பில் வேகமாக திரும்பிக் கொண்டாள்.

பூக்கார பாட்டியிடம் வாங்கிய பின்னை வைத்து ஆராவின் தலையில் பூவை வைத்துவிட்டான்.

சக்தி இதுப்போல் எல்லாம் செய்வான் என்று ஆரா நினைத்துக் கூடப் பார்க்கவில்லை... முரடனாக இருப்பவனுக்குள் தான் குழந்தை மனம் இருக்கும் என்று ஒரு மனம் எண்ண..

அது எப்படி சரியா மடிச்சு பின் பண்ணி வச்சிவிடறான்..பூ வைக்கறதைப் பார்த்தா இது முதல் முறை மாதிரி தெரியலையே,இதுமாதிரி எத்தனை பேருக்கு வெச்சிவிட்டானோ... அதுல நான் எத்தனையாவது ஆளோ யாருக்கு தெரியும்" என்று இன்னொரு மனம் சாத்தானாக வேதம் ஓதவும் நல்லது அனைத்தும் பின்னால் சென்று அவன் செய்த கெட்டது மட்டும் முன்னால் வந்து நின்றது.

மனிதர்களின் குணமே அதுதானே ஒருவர் எவ்வளவு நல்லது செய்தாலும், அவர் செய்த நல்லதைவிட அவர் செய்த தவறுகள் தான் கண் முன் வரும் அதை வைத்து அவர்களை புறம் பேசுவது தானே மனித குணம் அதில் ஆரா மட்டும் விதிவிலக்கா என்ன..

சக்தி மற்றவர்களிடம் காட்டும் கடுமையான முகத்திற்கும் தன்னிடம் காட்டும் புன்னகை முகத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திருந்தாலே சக்தியின் குணத்தையும் உணர்ந்திருப்பாள்.

ஆராவிற்கு அதற்கு எல்லாம் எங்கு நேரம்.. சக்தி செய்த கொலையும், விடுதியில் நடந்த நிகழவையும் வைத்தே அவனைக் குதறிக் கொண்டிருக்கிறாள். முதல் கோணல் முற்றிலும் கோணல் கதைதான் தற்போது ஆராவின் கதையும்.

தலையை தடவிப் பார்த்தவள் "நான் கேட்டதுக்கு பூ எனக்கு இல்லைனு சொன்ன?" என்றாள் மெதுவாக..

அதற்கும் அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

"இவன் கிட்ட பேசி ஒரு பதிலை வாங்கறதுக்குள்ள பாதி உசுரு மேல வரைக்கும் போய்ட்டு வருது... ச்சை, வாயை மூடிட்டு அமைதியா இருக்கவும் முடியல" என்று நொந்துக் கொண்டவள் "இனி அவனா பேசாம நானும் பேச மாட்டேன்" என்று முடிவை எடுத்துவிட்டு அமைதியாக ஜன்னல் பக்கம் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

ஆராவின் மல்லிகை வாசம் தான் அந்த கார் முழுவதும் பரவி இருந்தது..

விலையுயர்ந்த வாசனை திரவியத்தை வாங்கி தெளித்தால் கூட இந்த அளவுக்கு மயக்கத்தை தராது. சக்திக்கும் வாசனை திரவியத்தை விட இதுதான் பிடித்திருந்தது. ஆராவிடம் இருந்து வரும் மஞ்சள் வாசனையும் , மல்லிகை வாசனையும் அவனை எங்கோ இழுத்துச் செல்லும்..

தன் வீட்டில் பெண்கள் இருந்தாலும் அவர்கள் அருகில் செல்லும் போது சென்ட் வாசனையும் தான் உணர்ந்திருக்கிறான்.

மூச்சுக் காற்றை ஆழ்ந்து சுவாசித்தவன் தன்னவளின் அமைதி பிடிக்காமல் அவளிடம் வம்பிழுக்க ஆரம்பித்தான்

"என்ன மேடம் அமைதியா வரீங்க...?"

"ம்ம் வேண்டுதல்" என்றவள்" "எங்க போறோம் முதல அதைச் சொல்லு" என்றாள்.எப்போதுடா பேசுவான் இந்த கேள்வியை கேக்கலாம் என்று காத்திருந்தவள் போல....

"தியேட்டர்க்கு"

"எதுக்கு...?"

'சமைச்சி சாப்பிட..."

"விளையாடதா"

"அங்க எதுக்குப் போவாங்க படம் பார்க்கதான்"

"எனக்கு படம் பார்க்கெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல..."

"எனக்கு இருக்கு"

"அதுக்கு எதுக்கு என்னயும் கூட்டிட்டு போற?,நீ மட்டும் போக வேண்டியது தானே நீ என்ன லூசா...?"

அதற்கு மேல் சக்தியிடம் இருந்து ஒரு வார்த்தைக் கூட வாங்க முடியவில்லை ஆராவால்.

கார் தியேட்டரில் நின்றதும்... "நான் வரல. நீ போய் பார்த்துட்டு வா நான் கார்லையே இருக்கேன்" என்றாள் வீம்பாக.

"சரி இரு உங்கம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிடறேன் கூட்டிட்டு வந்துட்டு மூனு மணி நேரம் தனியா விட்டுட்டு போக முடியாதுல...":என்று நக்கலாக சொன்னவன் திலகாவின் எண்ணிற்கு அழைக்கப் போனான்.

"என்ன மிரட்டுறியா....? நீ என்ன சொன்னாலும் நான் வர மாட்டேன்.."

"ஏன்?"

"எனக்கு தான் ஏசி ஒத்துக்காதுல அப்புறம் எப்படி என்னால அங்க வர முடியும்.."

"இனி ஏசில இருந்து பழகிக்கோ என்னோட ரூம், வீடு, கார், ஆபீஸ்னு எல்லா இடத்துலயும் ஏசி தான் .... உனக்காக என்னால அதை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாது" என்றான் பட்டென்று.

சக்தி முகத்தில் அடித்ததுப் போல் கூறியது ஆராவை பாதிக்கவும்

"ஓ" என்று சுருதி இறங்க சொன்னவள், "அம்மாக்கு போன் எல்லாம் பண்ண வேண்டாம் நான் வரேன்" என்றாள் அமைதியாக ஆனால் அந்த அமைதிக்கு பின்னால் அடிக்கும் புயல் பத்தி சக்திக்கு தெரியவில்லை.
தியேட்டரின் உள்ளே சென்றதும் கடைசி பால்கனி சோபாவில் அமர்ந்தான சக்தி.

"எங்க யாரையும் காணா" என்றப்படி பற்கள் நடுங்க கேட்டாள்..

அவளை தன் அருகில் அமர சொன்னவன், "இந்த பால்கனி முழுக்க நான் வாங்கிட்டேன் நம்ப மட்டும்தான் இங்க, கீழே மட்டும் தான் ஆளுங்க வருவாங்க" என்றான்.

"அப்போ நான் தனி சோபாவுல உக்கார்ந்துக்கறேன்" என்று சக்தி சோபாவில் உக்காராமல் பக்கத்து சோபாவில் அமர்ந்தாள்.

"இவளுக்கு கொழுப்பு அதிகம் சேர்ந்து படம் பார்க்கலாம்னு கூட்டிட்டு வந்தா இப்படி பண்ரா.. இதுக்கு வீட்டுலயே இருந்துருக்கலாம்" என்று நினைத்தவன் யாருக்கோ போன் செய்து பேசினான்.

ஐந்து நிமிடத்தில் படம் தொடங்கவும் விளக்குகளை அணைத்து கதவை மூடினர்.

அதுவரை அமைதியாக இருந்த ஆரா... லேசாக குளிரவும் மெதுவாக சக்தி இருந்த சோபாவின் கார்னருக்கு சென்றாள்.

படம் தலைப்பைப் போட்டதும்

"வீரா...." என்றாள்

"ம்ம்"

"இது ஹாரர் மூவியா...?"

"ம்ம்"

"ஏன் என்கிட்ட நீங்க சொல்லவே இல்லை...?"

"எங்க நீ சொல்லவிட்ட.. வெளிய போஸ்டர் கட்டஅவுட் எல்லாம் பார்க்கலையா? "

'ஆமா அதை நான் கவனிக்கல"என்றவள் , "வீரா" என்றாள் மெதுவாக

"ம்ம்"

"எனக்கு பேய்னா பயம் வா போய்டலாம்" என்றாள் தயங்கியவரே....

"இவ்வளவு செலவு பண்ணி வந்து படம் பார்க்காம போறதா?"

"அப்போ நான் கிளம்பட்டும்மா?"

"உன் இஷ்டம்" என்று அமைதியாகிவிட்டான்

"ஐயோ குளிர வேற செய்யுதே ,என்ன பண்றது?' என்று முனவியவள் சுடிதாரின் ஷால்வையை கழட்டி உடல் முழுவதும் போர்த்தினாள்.

லேசாக இருக்கும் சால்வையால் ஆராவின் குளிரைப் போக்க முடியவில்லை.படம் ஓட ஆரம்பித்து பத்து நிமிடம் கூட இருக்காது பேய் வரவும் கத்தியவள் தானாகவே எழுந்து போய் சக்தியின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

ஓ அம்மிணிக்கு பேய்னா இவ்வளவு பயமா இருக்குடி இன்னைக்கு என்று நமட்டு சிரிப்பு சிரித்தவன்...மெதுவாக விரலையை நகர்த்திக் கொண்டுப் போய் ஆராவின் விரலை லேசாக தடவினான்.

இருக்கும் குளிரில் அவன் தொட்டதே தெரியவில்லை ஆராவிற்கு.

குளிர் அதிகமாக அதிகமாக சக்தியை நெருங்கி அமர்ந்தாள்.

அவள் நெருங்குவதை பார்த்து அவனுக்குள் சிரித்துக்கொண்டான்.

இருவருக்குள்ளையும் ஏதோ ஒரு உணர்வு தோன்ற இருவருக்குமே மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.

ஆராவின் இதயம் தாறுமாராக துடிக்க ஏற்கனவே குளிரில் நடுங்க இப்போது சக்தியின் நெருக்கத்தில் மேலும் நடுங்கியது.

அதை உணர்ந்தவன் போல் சக்தி கையை ஆராவை சுற்றிப் போடுவது போல் சோபாவின் மீதுப் போட்டான்.

அது கோழி தன் குஞ்சை அடைக்காப்பது போல் இருக்க அந்த வளையத்தில் அழகாக பொருந்தி போனாள் ஆரா.

"வீரா.."

"ம்ம்"

"எனக்கு குளுருது... வீட்டுக்கு போலாமே"

"படம் இன்ட்ரெஸ்ட்டா போகுது டிஸ்டர்ப் பண்ணாத" என்றான் ( டேய் வீரா உண்மையாவே நீ படம் தான் பார்க்கரியா)

சக்தியை இன்னும் நெருங்கியவள் குளிர் தாங்காமல் அவன் தோளில் தலை சாய்த்தாள்.

இவ்வளவு நேரம் இதற்கு தான் காத்திருந்தது போல் ஆராவை சுற்றிக் கையைப் போட்டு அவளை தன் மார்போடு அணைத்தான்.
 
Nirmala senthilkumar

Well-Known Member

Nirmala vandhachu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement