தீத்திரள் ஆரமே -14

#1
தேவா:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனுகந்தநாதருக்கு, தினமும் தேனடையிலிருந்து தேன் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறெங்கும் இதுபோன்று பூஜை முறைகள் நடைபெறுவதில்லை.

ஆரா கம்பெனியில் இருந்து கிளம்பியதும் தன் தலைமுடியை அழுந்த கோதிய சக்தி,நாற்காலியில் தலையை சாய்த்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.

பரணியுடன் வண்டியில் சென்றுக் கொண்டிருந்த ஆராவிற்கோ சக்தியின் மீது கோவம் கோவமாக வந்தது., "இவன் பண்ற பொறுக்கித் தனத்தை என்கிட்டயும் காட்ட நினைக்கறான் போல, அப்போ அவன் மனசுல அவனோட பழகற பொண்ணுங்க மாதிரி தானே என்னையும் நினைச்சிருப்பான்"என்று நினைத்தவள் அதே கோபத்துடன் வீட்டிற்கு கிளம்பினாள்.

வீட்டிற்கு போனதும் திலகா "நாளைக்கு நல்லநாளா இருக்குனு நாளைக்கே பொண்ணுப் பார்க்க வரச் சொல்லிட்டாங்க" என்றார் இருவரிடமும் .

"அதுக்குள்ளவாம்மா நேத்து தானே இதைப் பத்தி சசிக்கிட்ட பேசுனோம், இன்னும் அவங்க குடும்பத்தைப் பத்திக் கூட விசாரிக்கவே இல்லையே" என்றான் பரணி.

"அவங்க குடும்பத்தைப் பத்தி சாயை விசாரிக்க சொல்லிட்டேன், நேத்து சசி சரினு சொன்னதும் இன்னிக்கு அவங்ககிட்ட சம்மதம்னு சொன்னோம், அவங்கதான் அவங்க பையனுக்கு பொண்ணுப் பார்த்துட்டு இருக்காங்களா அதுக்குள்ள பொண்ணுக்கு ரெடியானா சீக்கிரம் ரெண்டு கல்யாணத்தையும் வெச்சிக்கலாம்னு சொல்லி நாளைக்கே வரச் சொன்னாங்க" என்றார் அவர் மனதில் சந்தோசம் அலைமோதியது..

"இதுக்கு சசி என்ன சொல்லுவானு தெரியலையேம்மா, அவனே வேண்டா வெறுப்பாதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்"என்ற பரணியிடம்.

"அதுலாம் அவன்கிட்ட சொல்லி பெர்மிஸ்ஸினும் வாங்கிட்டோம், அவன் சரினு சொல்லிட்டான்"என்றார்

"பாவி நேத்து என்னமோ இப்போ எதுக்கு கல்யாணம்னு கேட்டான் இன்னிக்கு என்னனா எனக்கே தெரியாம சம்மதம் சொல்லிருக்கான், அவனை என்ன பண்றது?" என்றான்.

"விடுங்க அண்ணா அண்ணியை பார்த்ததும் பிளாட் ஆகிருப்பாரோ என்னவோ" என்ற ஆரா சஷ்டிக்காவின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"உனக்கு பொண்ணை பிடிச்சிருக்கா அம்மு"

"ம்ம் அண்ணியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குண்ணா" என்றாள்.

அன்று இரவு நாளை கம்பெனிக்கு போகக்கூடாது என்று ஆரா நினைத்திருக்க,
அவளின் நினைவின் நாயகனோ சிவராமனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"நான் சொன்ன வேலை முடிஞ்சிதாண்ணா?"

"கிட்ட தட்ட முடிஞ்ச மாதிரி தான் ஈஸ்வர்"

"முடிஞ்ச மாதிரினு இழுக்கதீங்க எனக்கு முடிஞ்சிருக்கணும்,சீக்கிரம் தேடுங்க அதுக்கு தான் இவ்வளவு நாளும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீங்க இன்னும் லேட் பண்ணுனா என்ன அர்த்தம்".என்றான் குரலை உயர்த்தி.

"இல்ல முடிக்கக் கூடாதுனு இல்ல ஈஸ்வர்,எங்களால முடிஞ்சளவுக்கு நாங்களும் தேடிட்டு தான் இருக்கோம்",

"சீக்கிரம் வேணும்" என்றவன், "அந்த சிங்காரம் எப்படி இருக்கார்?"

"இன்னும் சாகல..."

"சாகக்கூடாது அவன் எங்களுக்கு பண்ணுன துரோகத்துக்கு அணு அணுவா நரக வேதனையை அனுபவிக்கனும், ஒவ்வொரு நாளும் எதுக்குடா இதைப் பண்ணுனோம்னு துடியா துடிக்கணும்" என்றான் கண்களில் ரௌத்திரம் வழிய

"கண்டிப்பா ஈஸ்வர், நீ சொல்லி ஒரு விசியத்தை செய்யாம இருப்போமா, ஆனா ரொம்ப நாளைக்கு அவன் உயிரோட இருக்க மாட்டான்."என்றார்.

"ஆமா இப்படிதான் சொல்லுவீங்க ஆனா நான் கண்டுபிடிக்கச் சொன்னதை மட்டும் சீக்கிரம் செய்ய மாட்டீங்க என்று முதல் பாதிக்கு பதில் சொன்னவன் இரண்டாம் பாதியை காற்றோடு விட்டுவிட்டான்.

"எங்களோட நோக்கம் எல்லாம் அதைக் கண்டுபிடிக்கிறதுல தான் இருக்கு, ஆனா உன்னோட கவனம் இதுல இல்ல, எங்கயோ கவனம் சிதற மாதிரி தெரியுதே" என்றார்.

"எனக்கு புரியல, என்னோட கவனம் சிதறுதா?"

"ஆமா"
என்றவர் "அதுக்கு காரணம் ஆரா...."

அந்தப் பெயரைக் கேட்டதும் இவ்வளவு நேரம் கோவத்தில் இருந்த சக்தியின் முகம் இளகி புன்னகை அரும்பியது..

"பார்த்தியா நான் சொல்றது உண்மை தானே, உன்னோட முகத்துல முன்னாடி எல்லாம் சிரிப்பைப் பார்க்கறதே கஷ்டம்,ஆனா இப்போல்லாம் சிரிச்ச மாதிரி இருக்க,அதுக்கு காரணம் அந்தப் பொண்ணு தானே"

"அவ குழந்தை அண்ணா"

"குழந்தையை இந்த மலை விரும்புது போலையே"

"அப்படிலாம் இல்ல, நீங்களா ஏதாவது நினைச்சிக்காதீங்க, அவ என்னைய எதிர்த்து பேசுவா அது எனக்கு பிடிச்சிருக்கு அவ்வளவு தானே தவிர லவ் பண்ற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்லை"என்றான்

"அந்தப் பொண்ணு உன் மேல கையை வெச்சிருக்கு, இதை நீ என்கிட்ட இருந்து மறைச்சிருக்க அதனால தான் ஒருவேள காதலா இருக்குமோனு நினைச்சேன்"என்று அவர் கருத்திலையே உறுதியாக நின்றார்.

"நான் காட்டாறு மாதிரி ஒரு இடத்துல நிற்க மாட்டேன், ஆனா அவ அப்படி இல்லை, காட்டாறை தூர இருந்து தான் ரசிக்க முடியும் பக்கதுல போக முடியாது அதுமாதிரி தான் நானும், எனக்கும் அவளுக்கும் என்னைக்கும் ஒத்து வராது"என்றவன்,"என்னைய ஆராய்ச்சி பண்ணாம நான் சொன்ன வேலையை சீக்கிரம் முடிக்கற வழியைப் பாருங்க" என்று சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பிவிட்டான்.

சிவராமனின் கேள்விகள் சக்தியின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.

நேராக வீட்டிற்குச் சென்றவன், பாட்டியின் அறைக்கு சென்று அவரைப் பார்த்தான்

"என்னாச்சி வீரா?"

"நம்ப தேடறது இன்னும் கிடைக்கல பாட்டி"'என்றவன் அவரது மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்

"சீக்கிரம் கிடைச்சிடும் வீரா கவலைப்படாத"என்றவர், அவனது தலை முடியை தன் விரல்களால் கோதிக் கொடுத்தார்.

"இன்னும் எவ்வளவு நாள் தான் வெயிட் பண்றது பாட்டி, இப்போவே மூணு வருஷம் ஆயிடுச்சு நானும் தேடாத இடமில்ல,இப்படியே போனா அவரோட ஆசையை என்னால நிறைவேத்த முடியாதோனு பயமா இருக்கு" என்றான்.

"நீ அவங்க ஆசையை நிறைவேத்தவே பிறந்தவன் வீரா,உன்னால முடியாதுன்னு எதுவும் இல்லை,முடியும் கவலைபடாம இரு..சிங்காரம் எப்படி இருக்கான்?"

"ஆல் மோஸ்ட் ஓவர் பாட்டி, இன்னும் ஒருவாரம் தாக்கு பிடிக்கறதே கஷ்டம் தான்னு நினைக்கறேன்" என்றான்.

"வீரா யாரையும் நம்பக்கூடாதுனு நம்பக்கு வாழ்க்கைப் பாடம் கத்துக் குடுத்துருக்கு,நீ யாரையும் நம்ப மாட்டேன்னு எனக்கு தெரியும் இருந்தாலும் கவனமா இரு"

"சரி பாட்டி, நான் பார்த்துக்கறேன், அந்த சிங்காரம் டிக்கெட் வாங்குனதும் உங்ககிட்ட வந்து சொல்றேன்"

"இது உன்னோட அம்மாவுக்கு தெரியுமா?, தெரிஞ்சா ரொம்ப கவலைப்படுவா வீரா".

"தெரியற மாதிரி விடமாட்டேன் பாட்டி".

"தட் மை பாய்" என்றவர், "தூங்கு நான் தட்டிக் கொடுக்கறேன்" என்றார்.

"இல்லை பாட்டி நீங்க தூங்குங்க, நான் ரூமுக்கு போறேன்" என்றவனை, "கிருத்திகா விஷயமும் முடிச்சிட்ட போல, அன்னிக்கே கேக்கணும்னு நினைச்சேன் வயசாகுதுல அதனால மறந்துட்டேன்" என்றார்.

"அண்ணி விசியம் என்ன? அதுலாம் ஒன்னுமில்லயே"

"டேய் வீரா உன்னைய பெத்த மட்டும் தான் உங்கம்மா, உனக்கு மத்தது எல்லாம் நான்தான்னு நியாபகம் வெச்சிக்கோ, நீ எப்ப எதை பண்ணுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும்".என்றார்.

"அப்போ நான் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கேனு சொல்லுங்க பார்க்கலாம்".

"சொல்லட்டுமா?"

"ம்ம் சொல்லுங்க"..

'என்னோட வீரா லவ்ல விழுந்துட்டான் அதுல இருந்து எழுந்திருக்க முயற்சிப் பண்றான். ஆனா அது புதைக்குழி மாதிரி உன்னைய உள்ளே இழுக்குது, சரியா?"

"அப்படிலாம் ஒன்னுமில்ல வயசான காலத்தில கண்டதையும் பேசிட்டு இருக்காதீங்க, நான் ரூமுக்குப் போறேன்"என்று அவனது அறைக்கு சென்றுவிட்டான்.

அதிகாலை நிலவு மறைவதற்கு முன் எழுந்தாள் ஆரா, இதுநாள் வரைக்கும் இவ்வளவு அதிகாலையில் எழுந்ததில்லை என்பதால் பால்கனிக்கு சென்று அதன் அழகை ரசித்தவள் மனம் 'இவ்வளவு நாள் இந்த அழகை நீ தவிர விட்டுவிட்டாய்'என்றது.

அதிகாலை தென்றல் காற்று முகத்தில் மோதவும் உடல் சிலிர்க்க நின்றவள், "உண்மைதான் இந்த பரவசத்தை நான் இவ்வளவு நாள் இழந்துவிட்டேன்"என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அதன்பின் 6மணிக்கு அவசர அவசரமாக கிளம்பி பரணியின் அறையின் முன் நின்று கதவை தட்டினாள் ஆரா.

கதவை திறந்த சாய், "உனக்கு என்னடி பிரச்சனை எதுக்கு இவ்வளவு காலையில கிளம்பி வந்து உயிரை வாங்குற?" என்றான்.

"உன்னைய யாரு கூப்பிட்டது, நான் பரணி அண்ணாவை பார்க்க வந்தேன் நகரு" என்றவள், "அண்ணா என்னைய கொண்டுப் போய் கம்பெனியில விட்டுட்டு வாங்க ப்ளீஸ்" என்றாள்.

"ஒரு ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணு அம்மு கிளம்பி வந்துடறேன்" என்று வேகமாக பாத்ரூமிற்கு ஓடினான் பரணி .

"இந்நேரத்துக்கு நீ எதுக்கு அங்கப் போகணும்?" என்ற சாயிடம் நேற்று நடந்ததை சொன்னவள், "அந்த தடிமாடு என்னைய டார்ச்சர் பண்றான் சாய்" என்றாள்.

"இன்னிக்கு மட்டும் போ அம்மு,அதுக்குள்ள ஏதாவது ஐடியா பண்றேன்" என்றவன் கண் முன் விதுர்ணா வந்து சென்றாள்.

அன்று ஆரா சக்தியை அடித்ததில் இருந்து சாயிடம் கூட விதுர்ணா பேசவில்லை. 'அவளுக்கே அவ்வளவு இருக்கும் போது தான் மட்டும் எதுக்கு பேச வேண்டும்' என்று சாயும் அவளுடன் பேசவில்லை, இதுவே இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரவும் மனம் சோர்ந்தவன்,இதைக் காரணம் காட்டி அவளுடன் பேசிவிடலாம் என்று நினைத்தான்.

பரணி கிளம்பி வரவும் ஆரா அவனுடன் கம்பெனிக்கு கிளம்பி விட்டாள்.

இருவரும் சேர்ந்து கம்பெனிக்கு செல்ல அங்கு இரவு காவலாளியை தவிர வேற யாரும் இல்லை.

ஆராவைப் பார்த்தவர் "என்னமா இந்நேரத்துக்கு வந்துருக்கீங்க?" என்றான்.

"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அண்ணா,அதான் நேரமா வந்துட்டேன் உள்ளே போகலாமா?" என்றாள்.

"சார்கிட்ட சொல்லிடறேன்ம்மா அவர் கம்பெனி திறந்து விட சொன்னா நான் திறந்து விடறேன்" என்றவன், ஆரா வேண்டாம் என்று சொல்ல சொல்ல சக்திக்கு அழைத்து விட்டான்.

"சொல்லு"

"சார், ஆரா பொண்ணு வேலை செய்யணும்னு வந்துருக்கு" என்றான்.

"சரி வெயிட் பண்ண சொல்லு நான் பக்கதுல தான் இருக்கேன் வந்தரேன்" என்றான்.

"சார் வந்துடராரா, உங்களை வெயிட் பண்ண சொன்னார்"என்றான்.

"சரி" என்றவள், "அண்ணா நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கரேன்"என்றாள்.

"இல்லை அம்மு அவங்க வர வரைக்கும் நான் கூட இருக்கேன்"

"வேண்டாண்ணா, நீங்க கிளம்புங்க உங்களுக்கு காலேஜ்க்கு நேரமாகிடும்" என்று ஆரா வற்புறுத்தவும் பரணி கிளம்பிவிட்டான்.

பரணி சென்று பத்து நிமிடம் கழித்து வந்தான் சக்தி.

ஜாக்கிங் சென்றவன் போன் வந்ததும் அங்கிருந்து அப்படியே வந்துவிட்டான்.

டிராக் பேண்ட் டீ ஷர்ட்டில் இருந்தவனைப் பார்க்கும் போது மனதில் ஒரு இனம் புரியா உணர்வு தோன்றியது ஆராவிற்கு,அந்த உணர்வின் மீது கொதிக்கும் நீரை ஊற்றி மனதை அடக்க முயன்றாள்.

"சொன்ன மாதிரியே வந்துட்டப் போல. குட் கேர்ள்" என்றவன்,கதவை திறந்து "வா" என்றான்.

அவனிடம் எதுவும் பேசாமல் ஆரா தனது இடத்திற்கு சென்று விட்ட வேலையை தொடர்ந்தாள்.

அவள் வேலையைப் பார்க்க சக்தியோ அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்று காலையில் ஆராவிற்காக உணவை ஆடர் செய்து வரவழைத்தவன் அதை அவளின் மேஜையின் மீது வைத்துவிட்டு "சாப்பிட்டு வேலையைப் பாரு" என்றான்.

"எனக்கு பசிக்கல, இதுலாம் வேண்டாம்" என்றாள்.

"பசிக்கும் போது சாப்பிடு"

"எனக்கு காலையில் பசிக்காது".

"ஏன் அது வயிறு இல்லையா பசிக்காம போகறதுக்கு".

"அது உங்களுக்கு தேவையில்லாதது"

"அப்போ நான் வாங்கி கொடுத்த சாப்பாட்டை நீ சாப்பிட விரும்பலைன்னு சொல்லு."என்று கேட்டு அடிக்கண்ணால் பார்த்தான்.

"யார் எது வாங்கி கொடுத்தாலும் வாங்கிரப் பொண்ணு நான் கிடையாது".

"இப்ப நான் என்ன சொன்னேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க, பிடிச்சா சாப்பிடு பிடிக்கலையா வெச்சிட்டு வேலைய பாரு" என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்
 
#2

Nirmala vandhachu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement